Monday, December 20, 2010

பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் - தொடர் பதிவு




முதன்முதலாக ஒரு தொடர் பதிவு எழுத போகிறேன், என்னை தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் அவர்களுக்கு நன்றி, பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் என்றதும், இது என்ன பெரிய விஷயம் பத்து பாடல்களை தேர்வு செய்ய முடியாதா என நினைத்தேன், பிறகு கூகிளில் தேடிய போதுதான் தெரிந்தது, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பாடல்கள் எனக்கு பிடித்த பாடலாக உள்ளது, இருந்தும் இதில் பத்து பாடல்கள் மனதிலேயே தேர்வு செய்யலாம் என பார்த்தால் அது அனைத்தும் இந்த வருடத்தில் வந்த பாடலாகவே உள்ளது, சரி இது எதுவும் வேலைக்காகாது, ஒவ்வொரு வருடமும் அந்தந்த கால கட்டங்களில் ஏதேனும் ஒரு பாடல் மிகவும் பிடித்திருக்கும், எனவே அந்த பாடல்களை மட்டும் எடுத்து போட்டிருக்கிறேன், பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

முதல்ல வர பாட்டு 2001 ஆம் வருஷத்துல வந்த துள்ளுவதோ இளமை படத்துல வர ’’இது காதலா முதல் காதலா பாட்டு’’, இது நம்ம தனுஷ் அறிமுகமான படம், இந்த படம் எவ்வளவு டெரரான படம்னு உங்க எல்லாருக்கும் தெரியும், அப்ப நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தேன், பசங்க எல்லாரும் காலேஜ் கட் அடிச்சிட்டு போய் பார்த்த படம், அது என்னவோ தெரியல இந்த பாட்டு ரொம்ப புடிச்சி போச்சு, மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், தனுஷ் நல்லா டான்ஸ் ஆடிருப்பாரு, இது போக இந்த படத்துல வர்ர மத்த எல்லா பாட்டுமே பிடிக்கும்


அடுத்த பாட்டு 2002 ஆம் வருஷத்துல வந்த ஏப்ரல் மாதத்தில் படத்துல வர ’’பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, சொன்னால் பொய் பொய்தானே’’, இந்த பாட்டும் நான் முதல்ல சொன்னமாதிரியே லவ் பீலிங் பாட்டு, லவ் பண்ணிட்டு புரோபோஸ் பண்ணாதவங்க பீலிங் பாட்டு, யுவன் சங்கர் ராஜாவும் ரொம்ப பீல் பண்ணி பாடி இருப்பாரு, வித்தியாசமான மெலடி சாங்



அடுத்த பாட்டு 2003 ஆம் வருஷத்துல வந்த காக்க காக்க படத்துல வர ’’ஒன்றா இரண்டா ஆசைகள்’’ இந்த பாட்ட பத்தி சொல்லனும்னா பக்கா ரொமான்ஸ் சாங், ஆனா அவ்வளவு இதமா எடுத்திருப்பாங்க, பொதுவாவே கவுதம் மேனன் படத்துல ரொமான்ஸ் பாட்டு எல்லாம் சூப்பரா ரசிக்கிற மாதிரி பண்ணுவாரு, அதுவும் இந்த படத்துல நிஜ கணவன் மனைவி சொல்லவா வேணும், பின்னி இருப்பாங்க, பாடல் வரிகளும் ரொம்ப நல்லா இருக்கும், மியூசிக் மெல்லமா மனதை வருடிட்டு போகும், பாட்டு முடியும் போது அந்த இசை ஸ்லோவா பின்னாடி போகும் போது அப்படியே கேமராவும் ரூமை விட்டு வெளியே போற மாதிரி எடுத்திருப்பாங்க, உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்





அடுத்த பாட்டு 2004 ஆம் வருஷத்து பாட்டு, விருமாண்டி படத்துல வர ’’உன்னை விட இந்த உலகத்தில ஒசந்தது ஒண்ணுமில்லை’’ இந்த பாட்டு இன்னொரு வகையான ரொமான்ச் பாட்டு முன்னது நகரம்னா இது கிராமத்து ரொமான்ஸ், அதுவும் கமல் வேற சொல்லவா வேணும், அபிராமி ஒரு வழி ஆகி இருப்பாங்க, ரொம்ப இதமான மெலடி இளையராஜா இசையில கமலோட குரல்ல மனசை என்னமோ பண்ணும், முழுசா பீல் பண்ணி கேட்டீங்கன்னா உங்க பொண்டாட்டிய கொஞ்சாம இருக்க முடியாது, பாட்டு வரிகளும் அற்புதமா இருக்கும், கண்டிப்பா கேளுங்க லவ் + ரொமான்ஸ் பாட்டு



அடுத்து வர பாட்டு 20005 ஆம் வருசத்துல தலைவர் நடிச்ச சந்திரமுகி படத்துல வர ’’கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாட்டு’’, இது ரஜினி படம்கறதுக்காக சொல்லல, அருமையான மெலடி சாங், வித்தியாசாகர் இசையில சின்னதா ரஜினி ஸ்டைலோட அமைஞ்ச நல்ல பாடல், இதுக்கு மேல விரிவா சொல்ல முடியாது, பதிவோட நிபந்தனைய மனசில வச்சு இதோட நிறுத்திக்கிறேன், கடைசியா நயன்தாராவ நயன்தாரா மாதிரியே பார்த்த பாட்டு, அதாவது இளமையோட பார்த்த பாட்டு.



அடுத்து 2006 ஆம் வருஷம் வந்த சில்லுனு ஒரு காதல் படத்துல வர ’’முன்பே வா அன்பே வா’’ இந்த பாட்ட புடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது, ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேல சலிக்காம கேட்ட பாட்டு, இப்பவும் எப்ப டிவில இந்த பாட்ட போட்டாலும் நின்னு கேட்டுட்டுதான் போவேன், அப்ப நான் லவ் பண்ணிட்டு இருந்த நேரம் பீல் பண்ண வச்ச பாட்டு, இதுல சூரியாவும், பூமிகாவும் போட்டுட்டு வர ரோஸ் கலர் சுடிதாரும், பச்சை கலர் டி சர்ட்டும் போட்ட காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும், பாட்டு வரிகளும் அதவிட ரொம்ப சூப்பரா இருக்கும்



அடுத்து 2007 ஆம் வருஷத்துல வெளிவந்த சென்னை -28 படத்துல வர ’’யாரோ யாருக்குள் இங்கு யாரோ’’ பாட்டு பாடும் நிலா பாலு பாடுனதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடுகளில்ல இதுவும் ஒன்னு, பாட்டோட மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும், யுவன் பின்னி எடுத்து இருப்பாரு, சினிமா காதலர்கள் இல்லாம சாதாரணமா ந்டைமுறை வாழ்க்கையில காதலர்கள் என்ன பண்ணுவாங்கங்கறத பாட்டுல நல்லா காமிச்சிருப்பாங்க, பூ வாங்கி கொடுக்குறது, ஐஸ்கிரீம் சாப்பிடுரது, தலையில முக்காடு போட்டுட்டு வண்டில போகுறது, கிரீட்டிங் கார்டு கொடுக்கறது இப்படின்னு, ரொம்ப நல்லா இருக்கும் இந்த பாட்டு.



அடுத்து 2008 ஆம் வருஷத்துல வெளிவந்த நேபாளி படத்துல வந்த ’’கனவிலே கனவிலே’’ பாட்டு, பரத்தும் மீரா ஜாஸ்மினும் நடிச்சது, ஊட்டில இந்த பாட்ட எடுத்து இருப்பாங்க, எங்க ஊருல இருந்து ஊட்டி பக்கம்கறதால நாங்க பிரண்ட்ஸ்சோட பைக்ல போகும் போதொல்லாம், அந்த கிளைமேட்ல இந்த பாட்ட நினைக்கும் போதே லவ் பீலிங் வரும், கண்ண மூடிட்டு கேட்டா இதமான அனுபவத்தை கொடுக்கும், பொதுவா பார்த்தா அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணாது, கண்டிப்பா தனிமையில கேட்டு பாருங்க கண்டிப்பா ரசிப்பீங்க



அடுத்து 2009 ஆம் வருசத்துல வந்த குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்துல இருந்து ’’கடலோரம் ஒரு ஊரு’’, நம்ம ஊருல நிறைய நல்ல பாடல்கள படம் நல்லா இல்லைங்கற காரணத்தால கவனிக்காம விட்டுடுவாங்க, அப்படி விட்டு போன ஒரு பாட்டுதான் இது, சரண் அவங்க அப்பா மாதிரியே பாட முயற்சி பண்ணி இருப்பாரு, முன்பே வாவுக்கு அப்புறம் என்னோட ஆல்டைம் பேவரைட் இந்த பாட்டு அப்படியே மெதுவா கிளம்பி உள்ளுக்குள்ள வரைக்கும் போகும், அமைதியா இருக்குற இடத்துல இந்த பாட்ட போட்டு கவனிச்சி பாருங்க நான் சொன்னது புரியும், ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல அமைதியான மெலடி சாங், பாடல் வரிகளும் நல்லா இருக்கும்.




கடைசியா 2010, இதுலதான் பெரிய குழப்பமா இருக்கு, நிறைய பாட்டு இந்த வருசத்துல நல்லா இருக்கு, எந்த பாட்ட சொல்றது, எத விடறதுன்னு பெரிய குழப்பாமாவே இருக்கு, இருந்தாலும் இது எல்லாத்துலயும் பெஸ்ட்டா எனக்கு தோனறது அங்காடி தெரு படத்துல வர இந்த பாடல்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம், உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதோ மழையாவேன்,
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்,
நீ இல்லை என்றால் என்னாவேன்,
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.
இந்த பாட்ட பத்தி நான் என்ன சொல்றது, அதான் பாடல் வரிகளே சொல்லுதே, நீங்களும் கேளுங்க. 


இந்த பதிவ தொடர நான் அழைப்பது உங்களைத்தான், அட பின்னாடி திரும்பி பார்க்காதீங்க சத்தியமா உங்களைத்தான், உங்களுக்கும் ஏதாச்சும் பத்து பாடல்கள் பிடிக்காம இருக்குமா என்ன, பிடிச்சத பகிர்ந்துக்கோங்க, இந்த தொடர் பதிவோட ரூல்ஸ் அண்டு ரெகுலேசனஸ் எல்லாம் நண்பர் எப்பூடி அவர்களோட இந்த பதிவில போய் பார்த்துக்கோங்க, எத்தனை பேரு பகிர்ந்துக்கறீங்களோ அந்தளவுக்கு நாம மறந்து போன பாடல்கள திரும்பி பார்க்க ஒரு சந்தர்ப்பமா அமையும், அது உங்களோட மறந்து போன பிளாஸ்பேக்க கிளறி விட கூட வாய்ப்பு இருக்கு, என்ன மாதிரி, என்னோட இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு ஒரு பின்னூட்டம் மூலம் தெரிவிச்சுட்டு போங்களேன், நன்றி - இரவுவானம்





35 comments:

  1. r.v.saravanan said...

    thanks saravanan sir

    ReplyDelete
  2. அனைத்துப்பாடல்களும் எனக்கு பிடித்தப்பாடல்கள்

    ReplyDelete
  3. உங்களுடன் முன்பே வா பாட்டுடன் மட்டுமே ஒத்துப்போகிறேன் :D

    ReplyDelete
  4. சூப்பர் தொகுப்புங்க.. பத்து வருசத்துல செலக்ட் பண்றது கஷ்டம்.. உங்கள் தொகுப்பு அருமை..

    ReplyDelete
  5. THOPPITHOPPI said...

    நன்றி சார்

    ReplyDelete
  6. கார்த்தி said...

    பரவாயில்லை விடுங்க கார்த்தி, ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங், நீங்க வந்ததே போதும்.

    ReplyDelete
  7. பதிவுலகில் பாபு said...

    ஆமாங்க பாபு, செலக்ட் பண்ரது ரொம்ப கஷ்டம், நீங்களும் எழுதினீங்கன்னா சந்தோசப்படுவேன்.

    ReplyDelete
  8. நல்ல தேர்வுகள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. Chitra said...

    நன்றி சித்ராக்கா, உங்களுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //’’உன்னை விட இந்த உலகத்தில சிறந்தது யாருமில்லை//

    ’’உன்னை விட இந்த உலகத்தில ஒசந்தது ஒண்ணுமில்ல தானே பாடலின் ஆரம்ப வரிகள்?

    ReplyDelete
  11. நல்ல தொகுத்து வழங்கியிருக்கீங்க... பெரும்பாலான பாடல்கள் அதிகம் ரசிக்கப்பட்டவைதான்.

    ReplyDelete
  12. யுவன் ரொம்ப பிடிக்குமா?
    உங்கள் வலைப்பூவில் ஒலிக்கும் மலையாள பாடல் அருமை...
    இதை கேட்கவே அடிக்கடி வரலாம்..

    ReplyDelete
  13. பாரத்... பாரதி... said...

    பாடல் வரிகளை மாற்றி விட்டேன் நன்றி பாரதி, யுவனின் இசையும் அவரது குரலும் ரொம்ப பிடிக்கும், இந்த மலையாள பாடல் அனைவருக்கும் பிடித்து இருக்கிறது, தொப்பி தொப்பி கூட போன பதிவில் கேட்டார், பாடல் மட்டுமல்ல படமாக்கிய விதமும் நன்றாக இருக்கும், யூ டியிபில் பாருங்கள், தொடர்ந்த உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்

    ReplyDelete
  14. அனைத்து பாடல்களுமே அருமைங்கோ .நமக்கு பாட்டு கேக்குறதுக்கு டைம் கிடையாதுங்கோ . எப்பயாச்சு டிவீல பாக்குறதோட சரி

    ReplyDelete
  15. நா.மணிவண்ணன் said...

    அப்படி டிவியில பார்க்குற பாட்டுல உங்களுக்கு பிடிச்ச பாட்டயாவது பகிர்ந்துக்கங்க மணிவண்ணன் சார்

    ReplyDelete
  16. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  17. karthikkumar said...

    thanks karthick

    ReplyDelete
  18. நல்ல தேர்வுகள்.. அருமையான ரசனை... இதுல கொஞ்சும் புறாவும் படத்து பாட்டு மட்டும் நான் கேட்டதில்ல அதனால அது எப்படின்னு தெரியலை...

    ReplyDelete
  19. உன் பேரை சொல்லும்போது, உன்னைவிட இந்த உலகத்தில் , கொஞ்சநேரம் கொஞ்சநேரம், பொய் சொல்ல கூடாது; இவை எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள், பத்து பாடல்களை தெரிவதில் உள்ள சிரமம் புரிகிறது நண்பா :-)

    மிகுதி பாடல்களும் சிறந்த பாடல்களே.

    ReplyDelete
  20. இனிமேலாவது வானத்தில் நல்ல ஒளி பரவட்டும். முகத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    அப்புறம் தளத்தை திறந்தவுடன் ஒலித்த மலையாளப்பாடலை நீண்ட நேரம் கேட்டுக் கொண்டுருந்தேன். இதில் உள்ள பல பாடல்களை தனிப் பதிவே போடலாம்.

    ReplyDelete
  21. அருமையான செலக்சன், சில பாடல்கள் நான் கேட்டதில்லை, மற்ற அனைத்துமே...என் விருப்பத்தோடு வெகுவாக ஒத்துப் போகின்றன.
    குறிப்பாக,
    இது காதலா
    பொய்சொல்ல
    உன்ன விட
    முன்பே வா


    நன்றி!

    ReplyDelete
  22. என்ன எல்லாம் ரோமாண்டிக்காவே இருக்கு...

    ReplyDelete
  23. பிரியமுடன் ரமேஷ் said...

    நன்றி ரமேஷ் சார், கொஞ்சும் புறா படத்து பாடலையும் கேட்டு பாருங்க, அது மத்த பாடல்களை விட சிறப்பா இருக்கும்

    ReplyDelete
  24. எப்பூடி.. said...

    நன்றி சார், என்னை தொடர்பதிவுக்கு அழைத்ததுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி

    ReplyDelete
  25. அருமையான பாடல்களின் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  26. ஜோதிஜி said...

    நன்றி ஜோதிஜி சார், உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி, மீண்டும் உங்களுடன் பேச ஆவலாக உள்ளேன், ஓய்வாக உள்ளபோது கண்டிப்பாக அழைக்கவும்.

    ReplyDelete
  27. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பன்னிக்குட்டி சார் முதன்முதலாக என்னுடைய தளத்திற்கு வந்ததுக்கும், கருத்து சொன்னதுக்கும் மிகவும் நன்றி

    ReplyDelete
  28. philosophy prabhakaran said...

    வாங்க பிரபா, நானும் எழுதி முடித்ததுக்கு பிறகுதான் யோசித்தேன்,எல்லாமே ரொமாண்டிக்காக உள்ளது என்று, அடுத்து நானும் ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன், எனக்கு பிடித்த பத்து குத்து பாடல்கள் என்று, அப்பொழுது பார்க்கலாம் :-)

    ReplyDelete
  29. ரஹீம் கஸாலி said...

    நன்றி நண்பா உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  30. அனைத்துப் பாடல்களும் அருமை. தேர்வு செய்ய ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என நினக்கிறேன்.

    ReplyDelete
  31. அன்பு said...

    உண்மைதான் நண்பா, உங்களின் வருகைக்கு நன்றி, மீண்டும் வாங்க

    ReplyDelete
  32. all nice songs ilike it thanku dear.

    ReplyDelete
  33. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  34. @ mohi

    @ டிலீப்

    நண்பர்களே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  35. REALLY NICE COLLECTION

    FANTASTIC CHOICES

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!