Monday, November 29, 2010

இவனுங்க தொல்லை தாங்க முடியல



எனக்கும் பஸ்சுக்கும் ஏழரை பொறுத்தம் போல இருக்கு, எப்பப் பார்த்தாலும் நான் பஸ்ஸில போகும் போதெல்லாம் ஒரு பிரச்சனைய சந்திக்க வேண்டி இருக்குது, 
பஸ் ரூட்டுக்கு எல்லாம் யாருங்க டைமிங் ஒதுக்கறது, அந்தாளு சரியா தான் ஒவ்வொரு பஸ்சுக்கும் டைமிங் கொடுக்கராரா? ஒன்னுமே புரிய மாட்டேங்குது, இப்படித்தான் நேத்தைக்கு அவசரா கோயம்புத்தூர் போகணும்னு திருப்பூர் பஸ் ஸ்டாண்டுல பஸ் ஏறுனா அந்த பஸ்சுக்கு முன்னாடி வந்து இன்னொரு பஸ்ஸ குறுக்க நிறுத்தி எடுக்க மாட்டேங்குராறு இன்னொரு பஸ் டிரைவர், இவனுங்க பிரச்சனையில வேற எந்த பஸ்சுமே பஸ் ஸ்டாண்ட விட்டு வெளியே போக முடியல, பயங்கரமான டிராபிக் ஜாம், 




இதுல அதிகமா இந்த பிரச்ச்னை பண்ணுரவங்க தனியார் பஸ்சுக்காரங்கதான், எங்க ஊருல ஒரு தனியார் பஸ்சு கம்பெனி இருக்கு, திருப்பூருல இருந்து சுத்தி இருக்குர அத்தனை ஊருக்கும் இவங்க பஸ் ரூட்டு வாங்கி வச்சிருக்காங்க, அரை மணி நேரத்திக்கு ஒரு பஸ்சு இங்கிருந்து கிளம்பும் அதே சமயம் அடுத்த் ஊருல இருந்து இங்க ஒரு பஸ்சு கிளம்பும் அந்தளவுக்கு நிறைய பஸ்சு வச்சிருக்காங்க, அந்த பஸ்சு கம்பெனிக்காரங்க பண்ணுரதுதான் இந்த டைமிங் பிரச்சனை, அவனுங்க யாரோட டைமிங்ல வேணாலும் பஸ்சு ஓட்டுவாங்க, ஆனா அவங்க டைமிங்ல யாராவது ஒரு நிமிஷம் குறுக்க வந்தாலும் அடிக்க போயிடுவானுங்க, அந்தளவு அடாவடித்தனம் பண்ணுராங்க, இவனுங்க பஸ்சு ஓட்டுரதும் சாதாரணமா கிடையாது ஒண்ணரை மணி நேரம் போக வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரத்தில போயிடுவானுங்க, சும்மா பேய் வேகத்துல ஓட்டுவாங்க, குறுக்க யாராவது வந்த அடுத்த அஞ்சு நிமிசத்துல அவங்களும் பேயாகிர வேண்டியதுதான், எங்க ஊருல யாராவது வண்டி ஒட்டினா சைடு மிரருல இவங்க வண்டிய பார்த்தா அவ்வளவுதான் இந்த வண்டியான்னு ரோட்ட விட்டே ஒதுங்கிறுவாங்க, அந்தளவு பயம், அது எனக்கு மட்டுமில்ல மத்த பஸ்சுகாரங்களுக்கும் இருக்குங்கறது நேத்துதான் உரைச்சது,




 மத்த பஸ்சு கம்பெனி முதலாளிகெல்லாம் டிரைவரு வேலைக்கு ஆள் எடுக்கும் போது அனுவம், திறமை, விபத்து எதுவும் நடக்காத டிரைவரா வேலைக்கு எடுப்பாங்க, ஆனா இவங்க கம்பெனில இதுக்கு முன்னாடி எத்தனை பேர கொன்னிருக்க, எத்தனை ஆக்சிடென்ட் பண்ணி இருக்கன்னு கேட்டுதான் ஆள் எடுப்பாங்கன்னு எனக்கு தெரிஞ்ச டிரைவர் ஒருத்தர் சொல்லி இருக்காரு, அது ஓரளவுக்கு உண்மைதான் எனக்கு தெரிஞ்ச வரையில் இதுவரைக்கும் ஒரு அஞ்சாறு தடவை அந்த பஸ்சு போலீஸ் ஸ்டேசன்ல நின்னு பாத்து இருக்கேன், போன நியூ இயர் அன்னைக்கு நான் திருப்பூர் போயிட்டு திரும்பி வீட்டுக்கு போயிட்டு இருந்தேன், அப்ப 15 வயசு இருக்கற டூ வீலர்ல போயிட்டு இருந்த இரண்டு பசங்கள இந்த பஸ்சு அடிச்சி தூக்கிருச்சு, அவங்க உயிரோட இருப்பாங்கன்னு யாரும் நினைக்கவும் இல்லை, ஆம்புலன்சுக்கு கூப்பிடவும் இல்லை, ஏன்னா இந்த பஸ்சு அடிச்சிருச்சா சத்தியமா சாவுதாண்டான்னு எல்லாருக்கும் தெரியும்,



ரொம்ப நாள் முன்னாடி தினமலர்ல ஒரு போட்டோ பார்த்தேன், முன்னாடி எல்லாம் கோவையில இரண்டடி இருக்கர மாதிரி டிவைடர் வச்சிருப்பாங்க, இந்த பஸ்சுக்காரன் சிக்னல்ல நிக்க பொறுமை இல்லாம அந்த டிவைடர் மேலயே பஸ்ஸ ஓட்டி ராங் ரூட்டில பஸ் ஓட்டிட்டு போரான், இவங்கள என்னதான் சொல்ரது? இத்தனைக்கும் இந்த பஸ்சு கம்பெனி முதலாளி ஒரு பொம்பளைங்க, ஒரு தடவை நான் இந்த பஸ்சுல போகும் போது இப்படித்தான் டைமிங் பிரச்சனை, வேற ஒரு தனியார் பஸ்ஸோட டைமிங்ல இவரு ஒட்டிட்டு வந்துட்டாரு, அந்த டிரைவர் வயசானவரு அவரும் கஷ்ட்டப்பட்டு ஓவர்டேக் எடுத்து நம்மாள குறுக்க நிறுத்தி ஏய்யா இப்படி என்னோட டைமிங்ல பஸ்ஸ ஓட்டரேன்னு கேட்டதுக்கு இவரு பேசுன வார்த்தை இருக்கே, முன்னாடி உக்காந்து இருந்த பொண்ணுங்க எல்லாம் பின்னாடி ஓடிப்போயிட்டாங்க, அந்தளவு நாராசமா பேசிட்டாரு, அந்த வயசான் டிரைவரும் இந்த பஸ்சில போகுர யாரும் உயிரோட போய் சேரமாட்டீங்கடான்னு சாபம் விட்டாரு, எனக்கு மனசு கஷ்ட்டமா போயிருச்சு,

ஏன் நாம எல்லாரும் இவ்வளவு சுயநலமா இருக்கோம்? தப்புன்னு எல்லாருக்கும் தெரியுது, ஆனா யாருக்கும் தட்டி கேட்க பயமா இருக்கு, நாலு பேரு ஒன்னா சேர்ந்த தைரியமா கேட்கலான்னா அந்த நாலு பேரு யாருன்னு எப்படி கண்டு பிடிக்கரது? எனக்கும் அந்த தைரியம் வரமாட்டேங்குது, இந்த பிரச்ச்னை மட்டும் இல்ல, பஸ்சுல டிக்கட்ட அதிக விலைக்கு விக்கிறது, பாக்கி சில்லறை கொடுக்காம ஏமாத்தறது, அதிக தூரம் உள்ள இடங்களுக்கு போறவங்கள மட்டும் உக்கார சொல்றது, அவங்க மட்டுமா காசு தராங்க?மத்தவங்க எல்லாம் ஓசியிலயா பஸ்சுல வராங்க? இப்படி பல யோசனைகள் வருது,   எனக்கு என்ன, எனக்கு என்னன்னு போயிட்டே இருந்தா இதுக்கு எப்பத்தான் தீர்வு கிடைக்கும்?  சரி அவங்க அவங்களுக்கு வர்ர வரைக்கும் எல்லாமே வேடிக்கைதான் இந்த உலகத்துல, ஏதோ எழுதணும்னு தோணுச்சு அதான் எழுதிட்டேன்.

( பதிவுக்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படங்கள் உதவி - நன்றி Google )

Saturday, November 27, 2010

நந்தலாலா - தாயை தேடி



மனித மனங்களின் உணர்வுகளை தொடும் எந்த படமும் கண்டிப்பாக தோற்று போகாது, அன்பு பாசம் மட்டுமே நிரந்தரமானது, அது மனநோயாளிக்கும் இருக்கும், ரோட்டில் கடந்து செல்பவர்களுக்கும் இருக்கும், அதனை ஏற்று கொள்பவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள், கடந்து செல்பவர்கள் தவற விடுகிறார்கள்,  மனநோயாளியான மிஸ்கினும், ஸ்கூலில் படிக்கும் ஒரு சிறுவனும் தாயை தேடி செல்கிறார்கள், எதற்காக செல்கிரார்கள்? போகும் வழியில் நடைபெறும் விஷயங்கள் என்னென்ன? அதனை அவர்கள் எதிர் கொள்ளும் விதம், கற்றுக் கொள்ளும் விஷயங்கள் என்னென்ன என்பதுதான் திரைக்கதை,




அதனை மிஸ்கின் கொடுத்திருக்கும் விதம் தாய்மடியை போன்று சுகமானது, இது ஜப்பான் படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள், அதே ஜப்பான் படத்தை சப் டைட்டிலுடன் திரையிட்டால் எவ்வளவு பேர் சிலாகிக்க முடியும்? எத்தனை பேருக்கு புரியும்? எது எப்படி இருந்தாலும் மிஸ்கினின் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் திருக்குறளை போல, பல்வேறு விஷயங்களை புரிய வைக்கிறது, ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ஒரு நிமிடம் கேமரா அந்த இடத்தில் நின்றுவிட்டு செல்கிறது, அது வழியில் வருபவர்கள் அவர்கள் வழியில் சென்றுவிட்டாலும் இவர்கள் அங்கேயே அந்த நிலையிலேயே நிற்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது,


இந்த காட்சி ஒரு புதுக்கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை, மூன்றையும் சேர்த்தால் என்ன கிடைக்குமோ, அந்த் அனுபவத்தை தரும்


படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதை அதை வெளிப்படையாக சொன்னால் புதிதாக படம் பார்ப்பவர்கள் ரசிக்க முடியாது, இருந்தாலும் எனக்கு பிடித்த காட்சியாக, மிஸ்கினின் அறிமுகத்தில் சுவற்றில் கை விரலை தேய்த்து கொண்டு நடப்பவரை போல காட்சி வரும், அதே போல கடைசியில் அவரின் அம்மாவை எடுத்து கொண்டு செல்லும் போது, அம்மாவின் கால்கள் சுவற்றினை தேய்த்து கொண்டு செல்வது போல இருக்கும், அது ஒரு இதயத்தை வருட செய்யும் காட்சி, இது போல பல காட்சிகள், ஒவ்வொன்றையும் சிலாகித்து எழுத வேண்டும் போல உள்ளது, ஆனாலும் வேண்டாம், திரையில் பாருங்கள், ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் மிஸ்கினும் சிறுவனும் தலைகுமிந்து கொண்டே நிற்கிறார்கள், அது எதற்கு என்றுதான் தெரியவில்லை? மிஸ்கினின் முந்தைய படத்திலும் ஹீரோக்கள் தலையை குமிந்து கொண்டே இருப்பார்கள், அது எதற்கு என்றுதான் புரியவில்லை,



படத்தின் உயிர்நாடி ராகதேவன் இளையராஜா அவர்கள், அவரின் இசையை பற்றி என்ன சொல்ல? சூன்யத்தை போல அமானுஷ்யமான இசை இப்படத்தில், உடலில் புகுந்து, குருதியில் கலந்து, இதயத்தை தொடுகிறது,  அதிலும் தாலாட்டு கேட்க நானும் என்று இளையராஜா பாட ஆரம்பிக்கையில் யாராக இருந்தாலும் உடைந்து போய் அழாமல் இருக்க முடியாது, படத்தில் நடித்துள்ள மிஸ்கின், அந்த சிறுவன், ஸ்னிக்தா, இசைஞானி அனைவருக்குமே விருதுகள் நிச்சயம்.

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தளம் உண்டு, அது அந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிந்து விடும், எல்லா படத்திற்கும் கொண்டாட்ட மனநிலையுடன் செல்லக்கூடாது (உபயம்:சாரு நிவேதிதா), இந்த படத்திற்கு வந்து விசிலடித்து படம் பார்த்து கொண்டு இருப்பவர்களை தொந்தரவு செய்து கொண்டு இருந்த விசிலடிச்சான் குஞ்சுகளும் கடைசி காட்சியில் அமைதியாக சென்றது படத்தின் தாக்கத்தை உணர்த்தியது, கண்டிப்பாக தியேட்டரில் பார்த்தால் தான் படத்தின் தாக்கத்தை உணர முடியும், குறை சொல்வதற்காகவே பார்த்த திரைப்படங்கள் உண்டு, ஆனால் இதில் குறை சொல்ல மனது வரவில்லை, கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்க வேண்டிய படம்.

நந்தலாலா - தாய் வாசல்

Thursday, November 25, 2010

டூ இன் ஒன் - நகரம் மறுபக்கம், மந்திர ப் புன்னகை









நகரம் மறுபக்கம்

திருந்தி வாழ நினைக்கும் ரவுடி, திருந்தி வாழ விடாத போலீஸ் நண்பன், இடையிலே ஒரு காதல், காதலுக்கு நடுவே வடிவேலுவின் காமெடி கடைசியில் விசயகாந்து பாணியில் EYE TO EYE, TEETH TO TEETH துப்பாக்கி எடுத்தவன் கத்தியால் சாவான் இதுதான் நகரம் மறுபக்கம்.



நான் முன்னமே சொனனது போல நான் சுந்தர் சியின் தீவிர ரசிகன், அவரது மொக்கை படத்துக்கு தீவிர ரசிகன், நான் எல்லாம் ஷகிலா படத்திலேயே காமெடி சீன் எதிர்பார்ப்பவன், அதனால் சுந்தர் சி படம் என்றால் நல்ல மொக்கை படமா இருக்கும் என்று நம்பி சென்றால் ஏமாற்றி விட்டார், படம் நல்லாவே இருக்குங்க, அவரது வழக்கமான பாக்கு மண்டை தலை இதுல மிஸ்ஸிங், நல்லா 1/4 லிட்டர் வாஸ்மாயில் போட்டு கழுவின மாதிரி தலை நல்லா பளிச்சினு இருக்கு, அதிரடி சண்டை காட்சிகளும் மிஸ்ஸிங், படத்துல ஏகப்பட்ட டிவிஸ்ட், எல்லாமே நல்லா இருக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனா நல்லா ரசிக்கக் கூடிய வகையில எடுத்து இருக்காங்க, நம்ம தானைதலைவி குஷ்புவ காட்டுவாங்கன்னு கடைசி வரைக்கும் எதிர்பார்த்து ஏமாந்துட்டேன், அதனால என்ன பரவாயில்லை அனுயாவ நல்லாவே காட்டி இருக்காங்க, நான் அவங்களுக்கும் ரசிகந்தான் ( யாரத்தான் விட்டு வச்சிருக்கோம்) வடிவேலு காமெடி ஒன்னும் சொல்லிக்கர மாதிரி இல்லை, இன்னும் எத்த்னை நாளைக்குதான் திருடப்போர மாதிரி, டிரஸ் இல்லாம் நிக்கர மாதிரி, வாய்ஸ ஏத்தி இறக்கி பேசுர மாதிரி இப்படி ஜோக்கெல்லாம் பண்ணுவாங்களோ தெரியல, கடைசியா நான் பார்த்த பயங்கர மொக்கை படம் சுறாதான், அதுக்கப்புறம் வந்த எல்லா படங்களுமே ஓரளவுக்கு பரவாயில்லை, ஒருவேளை நான் திருந்திட்டனா இல்லை தமிழ்சினிமா திருந்திருச்சா? ஒரு எழவும் புரிய மாட்டேங்குது.



மந்திர ப் புன்னகை






அந்த ப் டைட்டில்லயே தனியா போடுராங்க, அதான், இது மனநிலை பாதிக்கப்பட்ட ஹீரோ, நம்ம இளைஞர்கள் வாழ நினைக்கிற ஆதர்ஷ வாழ்க்கை வாழ்ந்திட்டு சந்தோசமா இருக்காரு, வழக்கம் போல எல்லா தமிழ்பட ஹீரோக்களுக்கும் வரக்கூடிய காதல் வியாதி வருது, அப்பத்தான் ஒரு டிவிஸ்டு, அவருக்குல்ல இருக்கர அன்னியன் வெளில வந்துடுரான், அந்த அன்னியன அடக்கி ஒடுக்கி எப்படி காதல்ல ஜெயிக்கராருங்கறத ஒரு இருபது முப்பது பாக்கெட் சிகரட், ஏலெட்டு புல்லு, நாலஞ்சு பிகரோட சொல்லி முடிக்கராங்க, 



படத்தில நல்லா இருக்குர விஷயம் வசனமும், சந்தானம் காமெடியும் தான், சந்தானம் இல்லைன்னா படத்த பார்க்கவே முடியாது, அதுலயும் அந்த நாட்டாமை ஜோக் சூப்பரு, கண்டிப்பா பாருங்க, படம் முழுக்க ஸ்லோவாவே போகுது, அட குத்துப்பாட்டு ஒன்னு இருக்கு அது கூட ஸ்லோவாவே இருக்கு, மீனாட்சி பத்தி சொல்லனும்னா படத்துலதான் மீனாட்சி பாட்டு சீன்ல எல்லாம் ஷகிலா சேச்சி, நம்ம இசையருவி மகேஸ்வரி லிவ்விங் டூ கெதர் மாதிரி ஒரு ரோல்ல வராங்க, ( லிவ்விங் டூ கெதர்னா பிரச்சனை ஆயிடுமே?) சாரி ஒரு நல்ல(?) விபச்சாரியா வர்ராங்க, இருந்தாலும் போயிம் போயிம் இப்படி ஒரு ரோல்ல அறிமுகம் ஆகி இருக்க வேணாம், மீனாட்சிய விட மகேஸ்வரிதான் சூப்பரா இருக்காங்க, இப்படி ஒரு டம்மி பீஸ் கேரக்டர் கொடுத்து ஏமாத்திட்டாங்கன்னு நினைக்கும் போது மனசு கஷ்ட்டமா இருக்கு, சரி பரவாயில்லை விடுங்க, நாளைக்கு காலையில அன்பு வாழ்த்துக்கள் ஒரு மணி நேரம் பார்த்தா சரியாகிடும். இந்த படமும் பார்க்கலாம் நல்லாவே இருக்கு

டைட்டில் பஞ்ச்

நகரம் - சிகரம்

மந்திர ப் புன்னகை - தந்திர ப் புன்னகை

முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி படிச்சிட்டாவது போங்க, நன்றி

Wednesday, November 24, 2010

நண்பர் ரெஜின் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு

என்னுடைய முந்தைய பதிவான இந்தியர்கள் எல்லோரும் இந்துக்களா என்ற பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டங்களும் இட்டிருந்தீர்கள், அதற்கு என்னுடைய நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதில் உங்களால் சில கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன, அதற்கு என்னுடைய நிலைப்பாட்டினை பதிலாக தெரிவித்து இருந்தேன், பொதுவாக யாரும் யாருடைய மதத்தினை பற்றியும் முழுமையாக அறிந்து இருக்க முடியாது, அவரவர்கள் படித்து தெரிந்து கொண்ட கருத்தினையோ அல்லது அவர்கள் கேள்விப்பட்ட விஷயத்தினையோ கொண்டே தங்களுடைய நிலைப்பாட்டினையும் கருத்தினையும் வெளிப்படுத்துகிறார்கள், நானும் தங்களுடைய தளத்தினை பார்வையிட்டேன், தங்களுடைய மார்க்கத்தினை பற்றி விரிவாக எழுதி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

கடைசியாக நீங்கள் என்னுடைய தளத்தில் வெளியிட்ட பின்னூட்டம்

//சகோ.ஆரோக்கியமான பின்னூட்டவிவாதங்களை நான் அதிகம் விரும்புபவன்.என்றுமே உடன்பட்டவன்.


தங்களின் பேச்சை கொண்டு தாங்கள் நாத்தீகரா,அல்லது மத உடன்பாடுடையவரா என அறிய முடியவில்லை.

இஸ்லாமிய நண்பர்கள் சிலரின் போக்கு தங்களை அவ்வாறு இஸ்லாம் குறித்து எண்ணச்செய்தது குறித்து வருந்துகிறேன்.இஸ்லாத்தில் பிற மதங்களை பழிக்கவோ,இகழவோ,அனுமதி இல்லை.அவர்களை உதாரணமாக கொள்ளவேண்டாம்.

அவர்கள் அழைக்கும்,அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதீர்கள். - 6.108 அல் குர்ஆன்

காஃபா பற்றி:காஃபா என்பது நபி இபுராஹிம்(அலை) அவர்களால் இறைவனுக்காக உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம்.அது பின்னர் நபி முஹம்மது (ஸல்)அவர்களின் காலத்தில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு,உட்புறம் 6 தூண்களால் கட்டப்பட்ட கட்டிடம்.உட்புறம் ஒன்றூமே இல்லை.வெற்று இடமே.இஸ்லாமியர்கள் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் அதன் திசையை நோக்கி தொழுகிறோம்.மற்றபடி,அக்கட்டிடத்தை வணங்குவதில்லை.

நன்றி
அன்புடன்
ரஜின்

இந்த பின்னூட்டத்திற்கு, மற்றொரு பின்னூட்டம் பதிலாக அளித்து இருக்கலாம், எனினும் என் மனதின் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இது ஏதுவாக இருக்கும் என தோன்றியது, அதனால் இந்த பதிவு.

சகோதரரே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு, நானும் தீவிரமான கடவுள் பக்தன் தான், ஆனால் எனக்கு கடவுள் மேல் மட்டும் நம்பிக்கை உள்ளதே தவிர மதத்தின் மேல் இல்லை, எந்த மதமாக இருந்தாலும் அதனை முழுமையாக கற்று படித்து உணர்ந்து வாழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது, அப்படி யாராவது இருந்தாலும் அது சொற்பமானவர்களாகத்தான் இருக்க முடியும், அப்படி யாராவது இருந்தால் அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படி அரைகுரையாக மத்ததை பற்றி தெரிந்து கொண்டு என்னுடைய மதம்தான் சிறந்தது, என்னுடைய மார்க்கம்தான் உண்மையானது என போலியாக விவாதிக்க நான் விரும்பவுமில்லை, தங்களுடைய தளத்தில் இந்து எனும் சொல் மதத்தினை குறிக்கின்ற சொல் இல்லை, அது இடத்தினை குறிக்கும் சொல் என குறிப்பிட்டு இருந்தீர்க, அது உங்களை பொறுத்த வரையில் அப்படியே இருக்கட்டும் ஆனால் இந்த நாட்டை பொறுத்த வரையில் அது ஒரு மதமாகும், பின்னர் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள்

//ஹிந்து வேதத்தை பின்பற்றாதவனுமான
ஹிந்து வேதங்களை அறியாதவனுமான,
ஹிந்து வேதத்தின் படி வாழாதவனுமான,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனுமான,

ஹிந்து வேதங்களை மறுப்பவனுமான,//

சரி ஹிந்து மதத்தில் இப்படி இருக்கிறது, ஒத்துக் கொள்கிறேன், அது போலவே

இஸ்லாம் வேதத்தை பின்பற்றாதவனுமான
இஸ்லாம் வேதங்களை அறிதாதவனுமான
இஸ்லாம் வேதத்தின்படி வாழாதவனுமான
இஸ்லாம் வேதத்தின்படி 5 நேரம் தொழுகை செய்யாதவனுமான
இஸ்லாம் வேதங்களை மறுப்பவனுமான

இஸ்லாமியனும் இருக்கிறான் அல்லவா? இல்லை என்று சொல்லாதீர்கள், எனக்கு தெரியும், மேற்கூறிய எதையும் பின்பற்றாமல், ஊதாரித்தனமாக, தங்கள் இஷ்ட்டப்படி திரியும் எத்த்னையோ முஸ்லீம்களை நானும் பார்த்துள்ளேன், ஏன் என்னுடைய நண்பர்களில் ஒருவனும் அப்படி பட்டவனே, உலக அளவில் பின்லேடன் என்று ஒருவர் இல்லையா? அவர்களை பற்றி கேட்டால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? அவன் இஸ்லாமியராக இருக்க தகுதி இல்லாதவன் என்று, அதயே எல்லா மதத்திற்கும் பொறுத்தி பாருங்கள் விடை எளிதாக கிட்டும், இந்து மதம் துவேசத்தையே போதிக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம், உங்கள் மார்க்கத்தில் இப்படி செய்பவர்களை சரி செய்ய என்ன வழி உள்ளது என்று கூறுங்கள்? அதை எந்தளவு நிரைவேற்றி உள்ளீர்கள் என கூற முடியுமா? விடை ஏமாற்றம்தான்.

அதனால்தான் கூறுகிறேன், எந்த ஒரு மதமும் மனிதனின் ஒழுக்க வாழ்விற்கே வகுக்கப்பட்டது, அதில் சில குறை, நிறைகள் எல்லா மதத்திலும் இருக்கலாம், அதை பெரிதுபடுத்தி பேசுகிறேன் என்று கிளம்பினால் அது பிரச்சனையிலேயே முடியும், இஸ்லாம் மதத்தினை போலவே இந்து மதத்தை சார்ந்தவர்களும் தீவிர மதப்பற்று என்று கிளம்பினால் இங்கு யாரும் நிம்மதியாக வாழ முடியாது, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாக வேண்டியதுதான், 
சிறுபான்மையினரோ பெரும்பான்மையினரோ எல்லாருக்கும் இந்த நாட்டில் பிரச்சனைகள் உள்ளது, சிறுபான்மை சமூகத்தவரை மட்டும் குறிவைத்து பிரச்சனைகள் தோன்றுகின்றன எனற கருத்தை ஏற்க முடியாது, அதற்கு நக்சல் தீவிரவாதம், மாவோயிஸ்டு பிரச்ச்னை போன்றவை உதாரணங்கள். தீவிரவாதம் என்றாலே பிரச்சனைதான், மதத்தீவிரவாதம் விதிவிலக்கல்ல.

கடைசியாக மதத்தை புரிய வைக்கிறேன், மார்க்கத்தை புரிய வைக்கிறேன் என்று நான் கிளம்பவில்லை, என்னுடைய மனதில் சாதாரணமாக தோன்றிய ஒரு சிறு சந்தேகமே என்னுடைய முந்தைய பதிவு, அதனை நீங்களும் எளிதாக புரிந்து கொண்டீர்கள், நன்றி, என்னை பொறுத்த் வரையில் இன்று நாம் வாழும் வாழ்க்கை எந்தளவு நிலையானது? யாரும் சொல்ல முடியாது? இன்றைக்கு இருப்பவன் நாளைக்கு இல்லாமலும் போகலாம். இதில் மதத்தினை பெரிதாக நினைத்து என்ன வரப் போகிறது? மதத்தால் ஒரு வேளை சோறு போட முடியுமா? ஒரு மயிரும் புடுங்க முடியாது. பின்னர் எதற்காக ஒரு மதத்தின் மேல் பற்று வைக்க வேண்டும்? கடவுள் ஒருவரே, அது எந்த இந்து கடவுளாகட்டும், கிறிஸ்தவ கடவுளாகட்டும், இஸ்லாமிய கடவுளாகட்டும் எனக்கு எல்லாமே ஒன்றுதான், நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளியிலேதான், நான் ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் மசூதிக்கு சென்று வணங்கி விட்டுதான் வருவேன், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எந்த மதமும் என்னை ஒன்றும் செய்யவில்லை, என் மனதில் கடவுள் மட்டுமே.
இந்த விசயத்தில் கமல் அவர்களின் கருத்தை சிறிது மாற்றி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடவுள் மட்டும் கண்டால் மதங்கள் தெரியாது
மதத்தை மட்டும் கண்டால் கடவுளே தெரியாது

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோயில்கள், சர்சுகள், மசூதிகள் கட்டபட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை, அதற்கு பதிலாக நான்கைந்து கழிப்பிடங்கள் கட்டி கொடுத்தால் மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
இப்படி மதம் மதம் என்று மதங்களை வளர்க்காமல் எத்தனையோ ஆண்டுகால பழமை வாய்ந்த தமிழ்மொழியை வளர்ப்போம். வருங்கால சந்ததியினருக்கு மதங்களை பற்றி சொல்லி கொடுக்காமல் இருந்தாலே, மனித நேயம் தானாக வளரும்.

இறுதியாக தந்தை பெரியார் சொன்னது ‘’ மதங்களை மற மனிதனை நினை’’

என்னுடைய இந்த பதில் முழுக்க முழுக்க உங்களுக்காக மட்டுமே, இதை எந்த திரட்டியுலும் நான் இணைக்க போவதில்லை, இதில் உங்களுக்கு மாற்று கருத்துகள் நிறைய இருக்கலாம், அதை பற்றி கவலை இல்லை, இது முழுக்க முழுக்க என்னுடைய நிலைப்பாடே, இதில் எந்த கருத்தாவது தங்களின் மனதினை புண்படுத்துமானால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.


ஜெய்ஹிந்த் - இங்க பாருடா இதுலயும் ஹிந்த்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


Monday, November 22, 2010

அப்பாடா இருபத்தி அஞ்சு





இது என்னோட இருபத்தி அஞ்சாவது பதிவு, இங்க ஒவ்வொருத்தரும் நூறு இருநூறுன்னு தாண்டி போயிட்டு இருக்காங்க, ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இந்த 25 வதே பெரிய விஷயம், பொதுவாவே நான் கொஞ்சம் இல்லை ரொம்பவே சோம்பேறிங்க, என்னோட இமெயில் ஐடி முதற்கொண்டு பேஸ்புக், டிவிட்டரு, ஆர்குட் இது மாதிரி எல்லா சமூக தளங்களும் விளையாட்டா ஆரம்பிச்சதுதான், அதே மாதிரி இந்த பதிவுலகத்துல கடந்த இரண்டு வருஷமா வெறும் பார்வையாளனா இருந்த நான் திடீர்னு ஒருநாள் சும்மா பிளாக் ஒன்னு ஆரம்பிச்சு பார்ப்பமேன்னு ஆரம்பிச்சதுதான் இந்த பிளாக், ஆனா இதுக்கு பேரு வெக்கறதுக்கு உள்ள நான் பட்டபாடு எனக்குதான் தெரியும், எனக்கு பிடிச்ச பேருல்ல எல்லாம் எல்லாரும் பிளாக் வச்சிருக்காங்க, அட சும்மா ஏதோவொரு வார்ததைய போட்டா அதகூட பஸ்ஸில சீட்டு புடிக்கற மாதிரி புடிச்சு வச்சிருக்காங்க, ஏதோ ஒருவழியா இரவுவானம்னு இந்த பிளாக்க ஆரம்பிச்சிட்டேன்.

பிளாக் ஆரம்பிக்கரது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க, ஆனா இந்த பதிவு எழுதறது இருக்கே, நம்மள மாதிரி சரக்கு இல்லாதவங்க சரக்கு அடிச்சா கூட மேட்டரு தேத்த முடிய மாட்டேங்குது, நானும் முதல்ல பேஸ்புக்குல போயி கும்மி அடிக்கலாம்னுதான் பார்த்தேன், அந்த எழவுல யாரு எதுக்கு என்ன மேட்டருக்கு விஷ் பண்ணராங்க, கமெண்ட் போடராங்க, என்ன ஏதுன்னு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது, சரி அது வேண்டாம்னு டிவிட்டருல போய் டிவிட்டினா வெறும் காத்துதான் வருது, நான் போட்ட கமெண்ட் கிணத்துல போட்ட கல்லாட்டம் கிடக்குது, சரி ஆர்குட்டாவது நல்லா இருக்கும்னு நினைச்சா அது அதவிட, அதுல பொண்ணுங்க ஸ்கிராப் போட்டதான் மதிக்கறாங்க, பசங்க ஸ்கிராப் போட்டா ஒரு பயலும் மதிக்கரதில்லை, ஒரு பொண்ணு போன நியூ இயருக்கு ஹேப்பி நியூ இயர்னு ஸ்கிராப் போட்டா அதுக்கு இந்த நியூ இயர் வரைக்கும் பதில் ஸ்கிராப் போட்டுட்டு இருக்காங்க நம்ம பசங்க, இதில அவங்க கூட பிரண்டா இருக்குற எல்லாருக்கும் சிசி வருது, இந்த சிசியால என்னோட இன்பாக்ஸ்ஸே நிறைஞ்சி போச்சு, அந்த கருமத்த டெலிட் பண்ணி பண்ணி போதும் போதும்னு ஆகுது, இப்படி போயிட்டு இருக்கரப்பதான் இந்த பிளாக்க ஆரம்பிச்சேன், இதுல பரவாயில்லைங்க, நம்ம எழுதற ஆகாவளி மேட்டருக்கும் நம்மளையும் மதிச்சு கமெண்ட் போடராங்க, ஓட்டு போடராங்க, இப்பத்தான் சந்தோசமா இருக்கு.

இப்பத்தான் ஒரு நாலஞ்சு பேராவது வந்து போராங்க, ஆனா முதல்ல ஒரு பதிவு எழுதிட்டு விழிமேல் வழி வெச்சு சாரி பிளாக்கு மேல விழி வெச்சு காத்திட்டு இருப்பேன், ஒரு ரியாக்சனும் இருக்காது, இந்த நேரத்துல என்னை வரவேற்று முதல் கமெண்ட் போட்ட ஆகாய மனிதன் அவர்களுக்கு என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அதற்கப்புறம் கமெண்ட் அளித்து என்னை ஊக்கப்படுத்திய வினு, ஜெயதேவ், ரிஷிகேசவ், சுப்ரா, கந்தசாமி சார், ராபின், தமிழ்பறவை, ரம்மி, பயணமும் எண்ணமும், பிரியமுடன் பிரபு, ஈரோடு தங்கதுரை, டிங்டாங், புதிய மனிதா, ஜோதிஜி, நொந்தகுமாரன், பிலாசபி பிரபாகரன், சித்ரா மேடம், எப்பூடி, பர்ஹத், ராம்ஜி யாஹூ, பந்து, சேகர், தினேஷ்குமார், சக்தி, தொப்பிதொப்பி, சுனில் கிருஷ்ணன், சாய் கோகுலகிருஷ்ணன், சாதிகா, முத்துலெட்சுமி, நிலாமதி, ராதாகிருஷ்ணன், சொளந்தர், பதிவுலகில் பாபு, தயாநிதி ஸ்ரீராம், எஸ்.கே, அன்பரசன், பிரியா, இனியவன், வினோத், குணா, தமிழன், இன்னும் யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 போன்றவற்றில் ஓட்டளித்த அனைவர்களுக்கும், வந்து படித்து சென்ற அனைவர்களுக்கும் என்னுடைய நன்றி.

பிளாக் ஆரம்பித்த புதிதில் எப்படி செட்டிங்ஸ் செய்வது, எப்படி ஓட்டுபட்டையை நிறுவுவது என குழம்பி கொண்டிருந்த வேளையில், வந்தே மாதரம், மற்றும் பிளாக்கர் நண்பன் போன்றவர்களின் வலைத்தளத்தை பார்த்து பல விஷயங்கள் அறிந்து கொண்டேன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், பதிவுலகில் எனக்கு முதன் முதலாக அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கிய என்னுடைய அருமை நண்பர் பிலாசபி பிரபாகரன் அவர்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ் ( எப்படி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டேன் பார்த்தீங்களா), எது எழுதினாலும் ஒரு ஓட்டும், பின்னூட்டமும் இடும் வலையுலக வள்ளல் சித்ராக்கா அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அனைவரையும் விட கூட்டம் சேர்த்து வைத்துள்ள பிரபல பதிவர்களுக்கு மட்டுமில்லாமல், இப்படி யாருமே இல்லாத கடையில் டீ ஆத்தி கொண்டிருக்கும் எனக்கும் அருளும் கூகிளாண்டவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இப்படியே கடைசி வரை எந்தவொரு, பதிவரசியலிலும், பதிவுலக சண்டைகளிலும் சிக்காமல் இருக்க துணைபுரியுமாறு வேண்டிக் கொள்கிறேன்

மேலும் ஒரு 10 பாலோயர் கிடைச்சாலே பெரிய விஷயம்னு நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என்னையும் நம்பி பாலோயராக சேர்ந்த 25 அன்பு உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை ( என்னடா பாலோயர் 26 ன்னு காட்டுதேன்னு பார்க்குறீங்களா, கண்டுக்காதீங்க அதில ஒன்னு எப்படிடா இப்படி எல்லாம் எழுதறேன்னு என்னை பார்த்து நானே வியந்து போயி எனக்கு நானே பாலோயர் ஆகிட்டேன்), இதே போல இண்ட்லியிலும் எனக்கு பாலோயராக உள்ள 13 பேர்களுக்கும் மிகுந்த நன்றியினை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மன்னிப்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன் என்று கவுதமி நாயகன் சீச்சீ சாரி உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார், அது போல நான் இதுவரை எழுதிய பதிவுகளோ அல்லது வார்த்தைகளோ உங்களில் யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடைசியாக இது எல்லாம் ஒரு பதிவா என காறித்துப்புவதற்கு முன்னால் இந்த பதிவையும் நகைச்சுவை என்ற பிரிவில் இணைத்தால்தான் நிறைய பேர் படிக்க  வருவார்கள் என்பதால் அதில் இணைக்கப் போகிறேன் அதற்கும் மன்னித்து கொள்ளுங்கள், எனினும் கீழே இரண்டு SMS ஜோக் போட்டுள்ளேன், படித்து விட்டு சமாதானமாக போங்கள், நன்றி

HI I AM VIJAY THE ROBOT 

SPEED - 1 KB 
MEMORY - 2 KB 

இவனுக்கு எல்லா ஆந்திரா ஹீரோஸ்ஸோட ஹிட் படம் எல்லாத்தையும் ரீமேக் பண்ண புரோகிராம் செய்யப்பட்டு இருக்கு 

Special Skills 

Long Jump ( Kuruvi) 
Kabady Comedy (Gilli) 
Athlete (ATM) 

Records 38 Flop out of 50 

மனுசன் படச்சதுலேயே உருப்படியான ரெண்டு விஷயம், ஒன்னு நான் ஒன்னொன்னு என் படம் 

PROFESSOR BORA: 


WHAT IS YOUR BIGGEST FLOP SURA? OR VILLU? 

VIJAY : HYPOTHETICAL QUESTION


அடுத்தது


சன் ஃபிக்ஸர்ஸ் புது படம்

ஹீரோ : அருள் நிதி
சைட் ஹீரோ : உதயநிதி
ஸ்டண்ட்: அழகிரி 

காஸ்ட்யும் : தயாநிதி  

லிரிக்ஸ் : கனிமொழி

மீடியா : கலாநிதி
டைரக்டர் : கருணாநிதி 

அஸி.டைரக்டர் : ஸ்டாலின் 

டைட்டில் : கொள்ளைக்கூட்டம்



ப்ரொடியுசர் : மக்கள் ‘’நிதி’’ 

முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி படிச்சிட்டு போங்க, நன்றி


Thursday, November 18, 2010

இந்தியர்கள் எல்லாருமே இந்துக்களா ???

முன்குறிப்பு : இந்த பதிவு யாருடைய மனதினையும் புண்படுத்துவதற்காக அல்ல, யாரையாவது பாதித்திருந்தால் மன்னிக்கவும்.



ஜாதி, மதம், இனம், மொழி போன்ற சென்சிடிவ் பிரச்சனைகளை பற்றி எழுதவே பயமாக உள்ளது, ஒரு வார்த்தை தவறினாலும் அது வேறு ஒரு அர்த்தத்தினை கொடுத்து பிரச்சனைக்கு வழிவகுத்து விடும், இருந்தாலும் என்னுடைய சந்தேகத்தினை இங்கு கொடுக்கிறேன், விடை தெரிந்தவர்கள் பின்னூட்டங்களின் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், ஏதேனும் தவறாக கருத்தில் பட்டாலே, மனதினை புண்படுத்தி இருந்தாலோ தெரிவிக்கவும், நீக்கி விடுகிறேன்.

என்னுடைய நண்பர்களில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் உண்டு, அனைவரும் பாரபட்சம் இல்லாமல் நட்பாக பழகக் கூடியவர்களே எனினும் சில சமயங்கள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது நீயா நானா விவாதத்தை போல கருத்து மோதல் நடைபெற்று அது வேறு தளத்தில் பயணித்து உன் மதமா என் மதமா என்பது போல ஆகி விடுகிறது. இது எப்பொழுதாவது நடைபெறும் ஒன்று என்றாலும், இதனால் இதுவரை பெரிதாக எந்தவொரு சண்டையும் நட்பினை கெடுத்துவிட வில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.



பெரும்பான்மையான கருத்து மோதல்களில் வெளிப்படுவது இவையே, இந்திய நாடு முழுவதும் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாக இருப்பினும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதால் அரசாங்கமும், தனிமனிதர்களும் இந்துக்களை கேவலமாக பேசுவதும், நினைப்பதும், புறக்கணிப்பதும் நடைபெறுகிறது, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகத்தவர்கள் சிறுபான்மை சமூகத்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கு அரசாங்கத்திலும், மற்றைய இதர துறைகளிலும் பலப்பல சலுகைகள் இருப்பினும் அவர்கள் மனதில் ஆழ ஊறி இருப்பது மதப்பற்று ஒன்றே, இந்திய மண்ணில் சகல உரிமையுடன் வாழும் அவர்கள் ஆதரிப்பது மட்டும் ஏன் பாகிஸ்தானாக இருக்கிறது, சொல்லப்போனால் பாகிஸ்தானை விட இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் நல்ல அமைதியான, சந்தோசமான, வாழ்வாதாரத்துடன் வாழும் போது கேவலம் மதத்திற்காக ஏன் தடம் மாறுகிறார்கள், இந்திய மண்ணின் காற்றை சுவாசித்து, இந்திய மண்ணின் உணவினை சாப்பிட்டு, இந்தியாவிலேயே வாழ்ந்தும்விட்டு ஏன் இந்த பாகிஸ்தான் ஆதரவு? அந்த அளவு மதம் பெரிதாக போய்விட்டதா?  ஏன் இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் இவ்வளவு ஆழமான மதப்பற்று காணப்படுகிறது? பெரும்பான்மை சமூக மக்கள் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்கும் போது, சிறுபான்மையினர் மட்டும் ஏன் தங்களுக்குள் கூட்டம் சேர்த்துக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்? எல்லாரையும் கூறவில்லை, விதிவிலக்கானவர்கள் நிறைய பேர்கள் இருக்கலாம், ஏன் இந்துக்கள் தவறே செய்வதில்லையா? வன்முறையில் ஈடுபடுவதில்லையா? என்று கேட்கலாம் ஆனாலும் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் அதிகம் நடக்கிறது? இன்னும் இந்துக்களின் கோவில் சொத்துக்களை மட்டும் அரசாங்கமானது இந்து சமய அறநிலைய துறை என்ற ஒன்றை கொண்டு கையாளும் போது, மற்ற மதத்தவரின் மசூதிகளையோ, சர்சுகளையோ ஏன் அவ்வாறு கையாளுவதில்லை? இப்படி போகிறது கருத்து வேறுபாடுகள்.



என்னுடைய சந்தேகம் என்னவென்றால், எனக்கு தெரிந்த வரையில் இஸ்லாம் மதமும், கிறிஸ்தவ மதமும் இந்தியாவில் தோன்றவில்லை, இஸ்லாமிய மதமானது கைபர் கணவாய் வழியே வந்த அக்பர் அவர்களால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டதோ அல்லது வேறு வகையிலா என்று எனக்கு தெரியவில்லை, அது போலவே கிறிஸ்தவ மதமும் எவ்வாறு இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் எனக்கு சரியாக தெரியவில்லை, இந்த இரண்டு மதமும் இந்தியாவில் பரவிய பின்னர் அதில் ஈடுபாடு கொண்டு மக்கள் இணைந்துள்ளனர், எனது கேள்வி எல்லாம், இன்று இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுடைய தந்தை அல்லது தாய் இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம், அந்த தந்தை அல்லது தாய்  அவர்களின் தந்தை அல்லது தாயும் (தாத்தா, பாட்டி) கிறிஸ்தவ, இசுலாம் மதத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம், ஏன் அவர்களின் கொள்ளு தாத்தா, பாட்டி கூட மேற்கண்ட மதத்தினை சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களுடைய தந்தை அல்லது தாய் (கொள்ளு தாத்தா, பாட்டியின் தந்தை அல்லது தாய்) முந்தைய மூன்றாம் தலைமுறை கண்டிப்பாக ஒரு இந்துவாக இந்து மதத்தை சார்ந்தவராகத்தானே இருக்க முடியும்? அது சரி என்றால், இப்பொழுது இந்தியாவில் உள்ள அனைவருடைய பரம்பரையும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே?

பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலமாக தெரிவிக்கவும், தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன், நன்றி.



Wednesday, November 17, 2010

மீண்டும் புதிய தளபதி டாக்டர் L. சீனிவாசன்




இன்னைக்கு காலையில தினத்தந்தி பேப்பர் பார்த்தப்ப ஒரு இன்ப அதிர்ச்சி என்னை தீண்டியது, அதுதான் நம்ம தலைவரோட ஆனந்த தொல்லை படத்தோட இசை வெளியீட்டு விழா விரைவில்னு போட்டிருந்தது, கேவலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் ஒரு நியூசா சார், இதுதான் சார் நியூசு, நம்ம தலைவரோட படத்தோட இசை வெளியீட்டு விழான்னதும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, நம்ம தலைவரோட படமே தொல்லைதான், ஐ மீன் ஆனந்த தொல்லைதான், இதுல இசை வெளியீடு வேறயான்னு டவுட் வேற ஆயிருச்சு, சரி அப்படியே பதிவுலகத்துக்கு நம்ம தலைவரோட அடுத்தடுத்த உலக படங்களை அறிமுகம் செய்யலாம்னு இந்த பதிவு.

முதன் முதலா வரப் போறது லத்திகா படம் தான், அந்த படத்த பத்தி தெரிஞ்சுக்கனும்னா இங்க கிளிக்குங்க



                             அடுத்து வரப் போற படம்தான் ஆனந்த தொல்லை


                           விரைவில் இசை தொல்லை ஆரம்பிக்கப் போகுது


விசயகாந்துக்கு அப்புறம் போலீஸ் வேஷங் கட்டறதுக்கு நம்ம தல சீனிய வுட்டா ஆளில்லை


பார்த்தீங்களா போலீஸ்னா அது நம்ம சீனிதான், இந்த படத்த பார்க்கறதுக்கு ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் காரங்களே வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாம், அந்தளவுக்கு போலீஸ்காரங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க போற படம் இது, சூர்யா கூட அடுத்த படம் போலீசா நடிக்கப் போரதுக்கு முன்னாடி தலைவர் கிட்ட டிரைனிங் எடுக்கனும்னு நிமிசக்கணக்கா காத்துகிட்டு இருக்காராம்.



இந்த படத்துல நம்ம தலைவரு வில்லனா வரப்போராரு, படம் பார்த்துட்டு யாருக்கும் மூலம் வராம இருந்தா சரி


நம்ம தலைவரோட பாதையே தனிதான்




இதப்பத்தி சொல்ல ஒன்னும் இல்லை, அதுதான் படத்தோட தலைப்புலேயே இருக்கே


அப்புறம் நீங்க நம்ம தலைவரோட ஒரு முகத்த தான் பார்த்திருப்பிங்க, இன்னொரு முகத்த பார்த்திருக்க மாட்டீங்க, இதுக்கு மேல பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க, நொந்துருவீங்க......


































தலைவருகிட்ட எனக்கு புடிச்சதே அந்த சிரிப்புதான், அட அட அட கண்ண மூடிட்டு எப்படி சிரிக்கராறு பாருங்க, கண்ணுபட போகுதுங்க சார், வீட்டுல சொல்லி சுத்தி போடுங்க



சூட்டிங் ஸ்பாட்டுல ஒரு போஸ்



என்னா லுக்கு, என்னா ஸ்டைலு


இத நினைச்சாதான் பயமா இருக்கு, தலைவரு விடுதலை சிறுத்தையிலேயே பெரிய சிறுத்தையாம், கடிச்சிருவாரோ


ஒரு வேளை வெட்டிடுவாரோ




எப்பூடி, நாங்கெல்லாம் யாரு தெரியுமா? விசய் தம்பி நடிக்க வந்ததுக்கு அப்புறம் தான் டாக்டரு, நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே டாக்டரு



அப்ப எல்லாரும் மறக்காம படத்துக்கு வந்துருங்க




Monday, November 15, 2010

மைனாவ பத்தின என்னோட பார்வை



மைனா பத்தி சொல்லனும்னா சான்ஸ்ஸே இல்லைங்க, என்ன சொல்றதுன்னே தெரியல, படம் பார்த்து முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும் மைனா நெனப்பாவே இருக்குங்க, அந்தளவுக்கு சூப்பரா இருக்குங்க, என்ன நடிப்பு, என்ன பெர்பாமென்ஸ், சத்தியமா சொல்றேங்க, மைனா மாதிரி நடிக்கரதுக்கு இங்க வேற யாருமே இல்லைங்க, அந்த பொண்ணோட கண்ணு இருக்கே, யப்பா என்ன கண்ணுடா சாமி. நேர்ல நின்னு அந்த கண்ண பார்த்தா எவனா இருந்தாலும் கண்டிப்பா லவ் பண்ண ஆரம்பிச்சிருவான். ஆயிரம் டயலாக் பேச வேண்டிய இடத்துல அந்த பொண்ணோட கண்ணே பேசிருதுங்க, இந்த படத்த பத்தி நான் சொல்லனும்னு அவசியம் இல்லை, பதிவுலகில எல்லாரும் துவைச்சி காய போட்டு அயர்னும் பண்ணிட்டாங்க, படத்துல எல்லாரும் நல்லா நடிச்சி இருந்தாலும், எல்லார விடவும் இந்த பொண்ணுதான் ரொம்ப இயல்பா நடிச்சி இருந்த்து, மத்த எல்லாரும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான் பண்ணிட்டு இருந்தாங்க, டைரக்டர் சாலமன் சார், தீபாவளி அன்னிக்கு எல்லா டிவியிலயும் வந்து உட்காந்துட்டு ஓவரா சலம்பல் பண்ணிட்டு இருந்தாரு, அவரோட கஷ்டம் அவருக்கு.எண்ண பண்ரதுங்க ஒரே படத்த பத்தி ஒரே மாதிரி டயலாக்க எல்லா டிவிலயும் திரும்ப திரும்ப பார்த்தா போரடிக்கத்தான செய்யும்?



படத்துல எனக்கு புடிச்ச சீன் : சின்ன வயசில இருந்தே தினமும் பார்த்துட்டு இருக்கர மைனா வயசுக்கு வந்த்தும் 10 நாளைக்கு அவள பார்க்க கூடாதுன்னு சுருளி கிட்ட சொல்லிருவாங்க, அவரு டெய்லி வந்து வித விதமாய் டிரை பண்ணுவாரு பார்க்கரதுக்கு, ஆனா பார்க்க முடியாது, 10 நாள் முடிஞ்சதும் சடங்கு எல்லாம் முடிஞ்சு எல்லாரும் போனதும் சுருளிய பார்த்து சின்னதா கண் அடிச்சு ஒரு முத்தம் கொடுக்கும் பாருங்க, செமையான சீன் அது, அதுக்கு சுருளி கொடுக்குற ரியாக்‌ஷனும், அத தொடர்ந்து வர்ற மைனா, மைனா பாட்டும் செம பீலிங்கா இருக்கும்.



அதே மாதிரி, வீட்டுல சண்டை போட்டுட்டு, சுருளி ஜெயிலுக்கு போயிருவான்னு தெரிஞ்சும், அவன் ஜெயிலுக்கு திரும்பி போகும் போது, இரண்டு நாள்ல வெளில வந்துருவான், சேர்ந்து வாழலாம்னு நினைச்சு சந்தோசமா இருக்கும் போது, மூணாறுல சாப்பிட உட்காரும் போது, ஜெயில் அதிகாரியா வர்ரவரு, தலை தீபாவளிக்கு போக முடியாத கோபத்துல, உன்ன கஞ்சா கேசுல போட்டு வெளிய வரமுடியாம செஞ்சிருவேன், உன்ன நம்பி வந்த இவள் நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைக்கிறேன் பார்னு கத்தும் போது, நம்ம வாழ்க்கை முடிஞ்சு போச்சோன்னு இயலாமையில அழுகற நடிப்பு, ஒரு தேர்ந்த நடிகையாலதான் முடியும், புதுமுக நடிகை இந்தளவு நடிச்சிருக்காங்கண்ணா உண்மையிலேயே பாராட்டனுங்க, கிளைமேக்ஸ்ல வில்லனுங்க அடிச்சு கொல்லும் போது வலில கத்தக்கூட முடியாம வாயில எச்சில் தெரிக்க, கண்ணுல வலியோட, பேச முடியாம காலை புடிச்சு கெஞ்ச டிரை பண்ணி செத்து போவாங்க, அந்த சீன்ல யாரா இருந்தாலும் பீல் பண்ணாம இருக்க முடியாது.



என்னடா படத்த பத்தி ஒன்னும் சொல்லாம திரும்ப திரும்ப கதாநாயகி பத்தியே சொல்லிட்டு இருக்குறேன்னு நினைச்சீங்கண்ணா பதிவோட தலைப்ப திரும்ப ஒருதடவை படிச்சிருங்க, இருந்தாலும் இப்படி ஒரு உணர்வு பூர்வமான படத்த கொடுத்ததுக்கு பிரபு சாலமனுக்கு நன்றி, ஒவ்வொரு ப்ரேமும் காட்டுக்குள்ள நாமளே இருக்கர மாதிரி 3D எபக்ட்ல ஒளிப்பதிவு பிரமாதமா இருக்கு, வாடா படம் பார்த்துட்டு இமான நான் இசை எமன்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அவரோட திறமையை இந்த படத்துல காட்டிட்டாரு, கொஞ்ச நாள் கமர்ஷியல் டைரக்டருகிட்ட சிக்காம இருந்தார்னா பொழச்சிக்குவாரு.



இந்த அமலா பொண்ணுக்கு ஏதாவது ஒரு நல்ல விருதா பார்த்து கொடுத்தாங்கன்ணா நல்லா இருக்கும், அவங்களுக்கும் நல்லா நடிக்கணும்னு ஊக்குவிப்பா இருக்கும், அதுக்காக தேசிய விருது கொடுத்துட போராங்க, அப்புறம் பிரியாமணி மாதிரி ரூட்டு மாரிரும், இதே மாதிரிதான் கொஞ்ச நாள் முன்னாடி அங்காடித்தெரு படம் பார்த்துட்டு பீல் பண்ணி அஞ்சலி பொண்ணு என்னமா நடிச்சி இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன், நம்ம பிரண்டு ஒருத்தரு இதுக்கு மேலே போய் ஆர்குட்ல அஞ்சலி பேன்ஸ் கிளப் எல்லாம் ஆரம்பிச்சு இருக்காரு, கொஞ்ச நாள் முன்னாடி மகாராஜான்னு ஒரு படத்தோட ஸ்டில் பார்த்தா அஞ்சலி, சிங்கிள் (பீஸ்) எலியா நின்னுட்டு இருக்கு,

நாம இந்த படத்துல இப்படி நடிச்சிருக்கே, அடுத்த படத்துல எப்படி நடிச்சிருக்கும்னு நினைச்சா, இந்த டைரக்டருங்கோ, இந்த படத்துல இப்படி நடிச்சிருக்கே, அடுத்த படத்துல குட்டை பாவாடை போட்டா எப்படி இருக்குன்னு நினைக்கிராங்கோ, கேட்டா ரசிகர்கள் விரும்புராங்கன்னு டயலாக் வேற, ஒரு வேளை நல்லா நடிச்சா அடுத்த படத்துல சான்ஸ் தரமாட்டாங்களோ? மைனா அப்படின்னதும் எனக்கு வேற ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, அத பத்தி ஒரு தனி பதிவு போடலமான்னு ஒரு ஐடியா இருக்கு.

                    


மொத்தத்துல மைனா - மனதில் (எல்லாம் இந்த சன் டிவியால வந்தது)

Wednesday, November 10, 2010

வ - குவாட்டர்ஜி கட்டிங்ஜி




நீங்க தமிழ்படம் பார்த்தீங்களா, படம் புடிச்சி இருந்ததா? சிவா படம்னா காமடியா இருக்கும்னு நினைக்கிறீங்களா, ஓரம்போ படம் பார்த்திருக்கீங்களா, அந்த படம் டைரக்ட் பண்ண டைரக்டர் படம்னா எதாவது வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறீங்களா, அத விட முக்கியமா தியேட்டர்ல படம் ஓடிட்டு இருக்கும் போது தூங்கற பழக்கம் உங்களுக்கு இருக்கா, அப்படின்னா இதோ உங்களுக்கான படம் வ- குவாட்டர் கட்டிங்.


                     ( குவாட்டர் கிடைக்காம மண்டை காஞ்சி போற சீன் இது )

கட்டிங் அடிச்சிட்டு போய் படம் பார்த்தீங்கன்னா படம் பார்த்த மாதிரியே இருக்காது, குவாட்டர் அடிச்சிட்டு போய் பார்த்தீங்கன்னா நல்லா தூங்கலாம். படத்தோட திரைக்கதை என்னன்னா ( கதை எல்லாம் ஒன்னுமில்லை ) சிவா சவூதி போறதுக்காக பிளைட் புடிக்க சாயந்தரமா சென்னை வர்றாரு, அடுத்த நாள் காலையில 4 மணிக்கு பிளைட், அப்பத்தான் தெரியுது சவூதியில தண்ணி அடிக்க முடியாதுன்னு, அதனால கடைசியா ஒரு குவாட்டர் அடிக்கலாமுன்னு ஆசைபடுராரு, அவரோட ஆசை நிறைவேருச்சாங்கறதுதான் திரைக்கதை.


                               ( இது கொஞ்சம் காமெடியா இருக்கும் )

படத்தோட ஆரம்பத்துல ஒவ்வொரு கேரக்டரா காட்டும் போது கதை மாதிரி ஒன்னு சொல்வாங்க ரொம்ப நல்லா இருந்த்து, சரி படம் சரி காமெடியா இருக்கும் போலன்னு நினைச்சா அது ரொம்ப தப்பு, சிவாவும், சரணும் மலையாளப் படம் மாதிரி படம் பூரா பேசிக்கிட்டே இருக்காங்க, அவங்க காமெடியாதான் பேசறாங்க, நமக்குதான் ஒன்னும் புரிய மாட்டேங்குது, அந்தளவு ரொம்ப ஸ்பீடா பேசராங்க, ஒருவேளை இருக்குற திரைக்கதையாவது ஸ்பீடா இருக்கணும்னு நினைச்சி இருப்பாங்க போல.


                                     ( இவரு வர்ர சீன் எல்லாம் படு மொக்கை)


                                           ( இது அதவிட மொக்கை சீன் )

படம் பூரா ஓடிக்கிட்டே இருக்குராங்க, கண்டிப்பா சரண் ஒல்லியாகி இருப்பாரு, படத்தோட தூணே சரண் தான், எனக்கு ரொம்ப புடிச்ச சீன்னா சிவா, அரசியல்வாதிகிட்ட குவாட்டர் வாங்குறதுக்காக, கண்டிப்பா ஓட்டு போடுறேன்னு பைபிள், குரான், கீதை எல்லாத்துலயும் அவசர அவசரமா சத்தியம் பண்ணிட்டு உள்ளே போய் பார்த்தா செம கூட்டமா இருக்கும், கஷ்ட்டப்பட்டு, அத்த்னை பேரு மேலேயும் ஏறி நீச்சல் அடிச்சிட்டு போய் குவாட்டர் பாட்டிலை தொடும் போது போலீஸ் வந்து அடிச்சு தொரத்தி விட்டுருவாங்க.


                                   ( இந்த பாட்டு ஒன்னுதாங்க நல்லா இருக்குது )



                                             ( சிவா டான்ஸ் சூப்பருங்கோ )

ஷார்ப்பு ஷார்ப்புஜின்னு ஒரு பாட்டு சூப்பரா இருக்குங்க, சிவா வோட டான்ஸ் செம காமெடியா இருக்கும், இதுலயும் பர்ஸ்ட் பாட்டு ஒன்னுக்கு டான்ஸ் ஆடி இருக்காரு, நல்லா இருக்குது, கண்டிப்பா பாருங்க, படம் மொக்கை படமா இருந்தாலும், எனக்கு புடிச்சி இருந்தது, கண்டிப்பா கொஞ்ச பேருக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்.


                              
                                        ( கிளைமேக்ஸ் - சிங்கம் சீட்டாடற சீன் )

மொத்தத்துல வ - குவாட்டர் கட்டிங் - தண்ணி கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்திட்டாங்க.