Friday, July 8, 2011

ஷகிலாவின் பிட்டுபடம்..!

மாலை 6 மணி

ஊரின் ஒதுக்குபுறத்தில் அமைந்துள்ள டாஸ்மார்க் பாரில் அமர்ந்து மஜீத் குடித்துக் கொண்டிருந்தான்
காலையில் அவனுடைய அப்பா அவனை திட்டியது காதில் ஒலித்தது

’’நீயெல்லாம் ஒரு பையனாடா? ஊரில அவனவனும்தான் பையனா பெத்து வச்சிருக்காங்க அவங்கள்ளாம் உன்னை மாதிரியா இருக்காங்க, ஒழுங்கா படிக்கவும் இல்லை, உருப்படியா ஒரு வேலைக்கும் போறதில்ல, கஷ்டப்பட்டு ஒரு வேலைய வாங்கிக் கொடுத்தா ரெண்டே நாள்ல வேலைய விட்டுட்டு வந்து நிக்குறியே? நீயெல்லாம் ஒரு மனுசனாடா? தண்டச்சோறு என் மூஞ்சிலயே முழிக்காதடா’’

சே ரொம்ப கேவலா போச்சே, அந்தாளு தனியா இருக்கும் போது திட்டி இருந்தாலும் பரவாயில்ல, அந்த கவிதா பொண்ணு டிவி பார்க்க வரும் போது பார்த்து கரக்டா திட்டிட்டான், இப்பத்தான் கொஞ்சநாளா லுக்கு விட ஆரம்பிச்சா அதுக்குள்ள கெடுத்துட்டான், என் மானமே போச்சு, ஒருநாள் இல்லைன்னாலும் ஒருநாள் அந்தாளு தூங்கும் போது தலையில கல்ல தூக்கி போட்டுட வேண்டியதுதான்

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நினைவுக்கு வந்தது டாஸ்மாக் பாருக்கு முன்னால் ஒட்டியிருந்த ஷகிலாவின் கனவுக்கன்னி பட போஸ்டர்

அடடா ஷகிலா படம் வேற ஜிபில போட்டிருக்காங்களே அப்பன பத்தி யோசிச்சிதுல முக்கியமான விசயத்தை மறந்துட்டனே, நாறப்பய எல்லா விசயத்துலயும் கெடுக்கறதுக்கே முன்னாடி இருக்கான், மணி வேற 6.30 ஆச்சு இன்னேரம் டிக்கெட்டு குடுத்துட்டு இருப்பான், நாம போய் சேரதுக்குள்ள எல்லாரும் உள்ள போய் இருப்பாங்க, உடனே கிளம்ப வேண்டியதுதான், மீதி இருந்த கட்டிங்கையும் ஒரே கல்ப்பில் அடித்து விட்டு கிளம்பினான்

தியேட்டரை நோக்கி போய் கொண்டிருக்கும் போதே தோணியது, பிட்டு படம் போட்டாங்கன்னா முதல் நாள் மட்டும்தான் பிட்டு போடுவான் அந்த ஜிபிகாரன், அடுத்த நாளெல்லாம் போனா வேஸ்டுதான், ரொம்ப நாள் கழிச்சு வேற படம் போட்டு இருக்கான் எப்படியும் நாலைஞ்சு பிட்டாவது கண்டிப்பா இருக்கும், இன்னைக்கு மிஸ் பண்ணக்கூடாது, நடையில் வேகத்தை கூட்டினான்

தியேட்டருக்கு போகும் வழியில் திரும்பிய போது, முன்னால் குண்டாக ஒரு உருவம் உருண்டு போய் கொண்டிருப்பது தெரிந்தது

யார்டா அவன் முன்னாடி போயிட்டு இருக்கான், எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே, கண்ணை கசக்கி கொண்டு தெளிவாக பார்த்த போது, அய்யோ நம்ம அண்ணன் இவன் எங்க இங்க வந்தான்? ஒருவேளை அவனும் படத்துக்குதான் போறானோ? நாறப்பய இவன போய் நல்லவன்னு நினைச்சமே, நம்ம வீட்டுலயே நம்ம பெரிய அண்ணன் மட்டும்தான் நல்லவன் போலருக்கு

சரி இப்ப என்ன பண்ணலாம், பார்த்தான்னா பிரச்ச்னை ஆகிருமே, பேசாம திரும்பி போயிரலாமே யோசித்துக் கொண்டே திரும்பியவன் கண் முன்னே கனவுக்கன்னி போஸ்டர் ஷகிலாவை போலவே பிரம்மாண்டமாக காட்சியளித்தது

அய்யோ கொல்ராளே, இன்னைக்கு விட்டா பிட்டு வேற போட மாட்டாங்க, என்ன ஆனாலும் சரி அண்ணன் டிக்கெட்டு வாங்கிட்டு போன உடனே நாமளும் டிக்கட்டு வாங்கிட்டு அவனுக்கு தெரியாம வேற எங்கயாவது உட்கார்ந்துர வேண்டியதுதான்

நினைப்பினை செயல்படுத்த மீண்டும் தியேட்டரை நோக்கி திரும்பினான் மஜீத், அண்ணன் உள்ளே போகும்வரை ஒளிந்திருந்துவிட்டு போய் டிக்கெட்டு வாங்கினான் மஜீத்

தியேட்டருக்குள்ள லெப்டு சைடுல லைட்டெல்லாம் போட்டு இருப்பான், மூஞ்சி தெரியும்னு நிறைய பேரு அங்க உட்கார மாட்டானுக, அதனால நம்ம அண்ணனும் அங்க இருக்க வாய்ப்பில்ல, பேசாம அங்கயோ போய் கமுக்கமா உட்கார்ந்துரலாம் என்று நினைத்துக் கொண்டே இடதுபுற வரிசையினை நோக்கி சென்று கடைசி சீட்டை நோக்கி போனான்

பாதி தூரம் சென்றதுமே அதிர்ச்சி காத்திருந்தது, அண்ணன் கடைசியில் அமர்ந்திருந்தான், தம்பி வருவதையும் பார்த்துவிட்டான், அண்ணனை பார்த்து தம்பி பதற, தம்பியை பார்த்து அண்ணன் அவசர அவசரமாக மூஞ்சியை திருப்ப, மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச வார்த்தையே வரவில்லையே

பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான் மஜீத்

அடச்சை அவன் கண்ணுல சிக்க கூடாதுன்னுண்டு போனா கரக்டா அவன்கிட்டயே போய் மாட்டிக்கிட்டமே, வீட்டுக்கு போனா அடிப்பானோ, க்க்கும் அவனே பிட்டு படத்துக்குதான வந்திருக்கான், மேல கைய வச்சானா அப்புறம் பார்த்துக்கலாம், சரி பார்த்தது பார்த்துட்டான் இனி என்ன பண்றது, பேசாம வலதுபக்கமா போய் உட்கார்ந்துரலாம் நல்ல இருட்டா இருக்கும்

வலதுபக்கம் போய் இருட்டில் தட்டு தடுமாறி ஷகிலாவின் ரசிகர்களிடம் எல்லாம் அர்ச்சனைகளை பெற்றுக் கொண்டு கடைசியாக ஒரு சீட்டில் போய் அமர்ந்தான், அப்பாடா என்று ரிலாக்ஸ் செய்து கொண்டு, பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் கேட்டான்

என்னங்க படம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சுங்…………..? கேள்வி பாதியிலேயே நின்றது, ஏனென்றால் கேட்டது அங்கே அமர்ந்திருந்த தன்னுடைய மூத்த அண்ணனிடம்

அண்ணனும் நோக்கினான் தம்பியும் நோக்கினான், ஒருநிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்த மஜீத் மீண்டும் எழுந்து அவசர அவசரமாக வெளியில் வந்துவிட்டான்


போச்சு போச்சு எல்லாம் போச்சு, உலகத்துலேயே அண்ணங்காரங்க கூட பிட்டு படம் பார்த்த ஒரே தம்பி நானாத்தான் இருப்பேன், உலகத்துலேயே நல்லவன்னு இவனத்தான நினைச்சோம், இவனும் நம்ம கோஷ்டிதானா? வெளங்கிரும் நம்ம குடும்பம், இனி வேற வழியே இல்லை நடுவுலதான் போய் உட்காரணும்

ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு தியேட்டரின் உள்ளே சென்றான் மஜீத், ஷகிலாவை போலவே ஷகிலாவின் ரசிகர்கள் நீக்கமற நிறைந்திருந்தனர் தியேட்டர் முழுவதும், யாரையும் கண்டு கொள்ளாமல் விடுவிடுவென நடந்து தியேட்டரின் நடுவில் போய் அமர்ந்து கொண்டான்

வக்கீல் ஒரு கேஸ், என்ன கேஸ்? என்ன கேஸ்? படத்தில் ஷகிலா தென்னை மரத்தை கட்டிபிடித்துக் கொண்டு விரகதாபத்தில் பாடிக் கொண்டிருந்தார்

மஜீத்தின் மனம் அதில் எல்லாம் லயிக்கவில்லை, எப்படி அண்ணன்கள் கண்ணில்படாமால் வெளியே செல்வது என்று மட்டும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது, அரைமனதாக படம் பார்த்துக் கொண்டிருந்தான்

இடைவேளைளைளை

விடப்பட்டது, தியேட்டரின் லைட் போடப்பட்டதும் பாதி பேருக்கும் மேல் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டார்கள், பெரும்பாலும் யாரும்வெளியே செல்லவில்லை, பிட்டு முக்கியமல்லவா? அதற்குள் படம் போட்டு விட்டால் என்ன செய்வது? என்று யாரும் வெளியே செல்லவில்லை

மஜீத்தும் தலையை குனிந்து கொண்டான், அண்ணன்காரன்கள் எவனாவது வெளியே செல்கிறானா என பார்ப்பதற்காக எதேச்சையாக தலையை தூக்கியவனுக்கு, ஒரு பெரிய இடி தலையில் விழுந்தது போல் இருந்தது
ஆம் அங்கே முன்சீட்டில் அவனுடைய அப்பா அமர்ந்திருந்தார், ஆனால் அவர் திரும்பி பார்க்கவில்லை

அய்யய்யோ நம்ம அப்பனுமா? காலையில யார் மூஞ்சில முழிச்சேன்? காலையில இருந்து ஒரே கண்டமாவே இருக்கு, அட ஆமா இவன் மூஞ்சிலதான முழிச்சோம், பெரிய ஒழுக்க மயிராட்டாம் நம்மளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இந்தாளு வந்து பண்ணுற வேலைய பாரு, ஷகிலா படம் பார்க்க வேண்டிய வயசா இது? இவனெல்லாம் ஒரு அப்பனா? இந்த பொழப்போ வேணாம் சாமி, லைட்ட ஆப் பண்ணுன உடனே ஓடிர வேண்டியதுதான்

மஜீத் நினைத்துக் கொண்டிருக்கும் போதே லைட்டுகள் ஆஃப் செய்யப்பட்டு, பிட்டு ஓட ஆரம்பித்தது, தியேட்டரில் ஒரு தூசி விழுந்தால் கூட டமார் என கேட்குமளவு நிசப்தம் நிலவியது

அடபாவிகளா இன்னைக்குன்னு பார்த்து நல்ல நல்ல பிட்டா போடறானுங்களே, ஆனா இத பார்த்துட்டு இருந்தா அவ்வளவுதான், கிளம்பிர வேண்டியதுதான், நினைப்பை செயல்படுத்த சீட்டிலிருந்து எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தான்

பிட்டு முடிஞ்சா ஜனங்க எல்லோரும் கிளம்ப ஆரம்பிச்சிருவாங்க, சீக்கரமே போகனும், அவசர அவசரமாக நடக்க ஆரம்பித்தான், தியேட்டரை விட்டு வெளியேறியதும் முன்னால் பார்த்தால் பெரிய அண்ணன் போய் கொண்டிருந்தான், பின்னால் பார்த்தால் சின்ன அண்ணன் வந்து கொண்டிருந்தான்

மூன்று பேரும் ஒருவரையொருவர் முன்பின் தெரியாதவர்கள் போலவே நடந்து வந்து கொண்டிருந்தார்கள், இவ்வாறே மூன்று பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்

ஆசை ஆசையா ஷகிலா படம் பார்க்க போனா வேர்த்து விறுவிறுக்க நடக்க வச்சுட்டானுங்களே, அடிச்ச மப்பு வேற இறங்கி போச்சு, உடனே வீட்டுக்கு போனா அண்ணன்காரங்க மூஞ்சில வேற முழிக்க வேண்டி இருக்கும், நைட்டு எல்லாரும் தூங்குன பின்னாடி போயிக்கலாம் என நினைத்த மஜீத் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு 11.30 மணிக்கு வீட்டுக்கு சென்றான்

இவன் நினைத்தவாறே மற்றவர்களும் நினைத்திருந்தார்கள், இவன் போன ஐந்து நிமிட இடைவேளையில் மற்ற இருவரும் வந்தார்கள், மூன்று பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தார்கள், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும் இல்லை

அவர்களுடைய அம்மாதான் திட்டி கொண்டே இருந்தார்

எங்கடா போனீங்க மூணு பேரும், நேரங்காலத்துல வந்து சாப்பிட்டுட்டு படுக்க கூடாதா? பனி விழுகற நேரத்துல உங்கப்பா உங்கள தேடி போயிருக்கார், சாயங்காலம் ஆறு மணிக்கு போனவரு, இன்னும் வரலை, அவருக்கு உடம்பு வேற சரியில்ல காலையில இருந்து எங்க போனாறோ?
அம்மா புலம்பி கொண்டே இருந்தார்

மூன்று பேரும் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்

அப்பொழுது வெளியே அப்பா வரும் சத்தம் கேட்டது

எங்கடா போனீங்க மூணு பேரும்? தொரைக நேரத்துல வீட்டுக்கு வர மாட்டீங்களோ? உங்கள தேடி அலைய ஒருஆள் வேணுமாடா? காலையில இருந்து உடம்பு முடியாம படுத்துகிட்டு இருக்கேன், கால்வலி வேற இதோட சாயங்காலம் ஆறு மணியில இருந்து ஊரு முழுக்க உங்கள தேடி தேடி போதும் போதும்னு ஆயிருச்சிடா? இப்பத்தான் வீட்டுக்கு வரேன், இனிமேல் எவனாவது ராத்திரி ஊரு சுத்த போனீங்க தொலைச்சிருவேன் ஜாக்கிரதை

எங்களத்தான் சாயங்காலத்துல இருந்து தேடி அலையிறியா?

மூன்று பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..!

14 comments:

 1. ஷகிலா படம் னா யாருக்கும் ஆசை வரும்...நல்ல கதை ..

  ReplyDelete
 2. அந்த ஷகீலா குடும்ப படமா இருக்கும் அதான் குடும்பத்தோட போய் பாத்திருக்காங்க போல

  ReplyDelete
 3. avvvvvvvvvvvvvvvv

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. Nallathoru kudumbam,palkalai kalagam

  ReplyDelete
 5. யோவ் என்னய்யா ஆச்சு?..இப்படி ஷகீலா சரக்கை இறக்கிட்டீங்க? இந்த சமுதாய முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? நம் எழுத்து காலாகாலத்துக்கும் நிற்பது, அது இதுன்னு என்னென்னமோ சொல்வீங்களே..அதெல்லாம் என்ன ஆச்சு? ஒய்..ஒய்..ஒய்?

  ReplyDelete
 6. வர்ணனையைப் பார்த்தா ரொம்ப அனுபவம் போல இருக்கே..சூப்பரு.

  ReplyDelete
 7. மொத்தத்துல குடும்பத்தோட பாக்க வேண்டிய படம்னு சொல்லாம சொல்லிட்டீங்க... அதெல்லாம் இருக்கட்டும், அன்னிக்கு பிட்டு போட்டாய்ங்களா இல்லியா?

  ReplyDelete
 8. @ கோவை நேரம்

  நன்றிங்க கோவை நேரம்

  ReplyDelete
 9. @ நா.மணிவண்ணன்

  இப்படி ஒரு கருத்து சொன்னது உலகத்துலேயே நீங்களாத்தான் இருக்கும் மணி

  ReplyDelete
 10. @ சி.பி.செந்தில்குமார்

  அண்ணனுக்கு என்னமோ ஆகிப்போச்சு

  ReplyDelete
 11. @ FOOD

  இது வெறும் கதைதான் சார்

  ReplyDelete
 12. @ செங்கோவி

  உங்களோட நானா யோசிச்சேன் படிச்சு படிச்சு நானும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் நண்பா, அதான் இப்படி

  ReplyDelete
 13. @ பன்னிக்குட்டி ராம்சாமி

  தெரியலீங்களே சார் :-)

  ReplyDelete
 14. இன்றுகாலை இங்கே இருந்து தொடங்குகின்றது.

  நன்றி வணக்கம்.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!