Thursday, March 31, 2011

போடுங்கம்மா வோட்டு..!




கட் கட் கம்மர் கட் கருணாநிதியை ஒழிச்சு கட்

போடுங்கம்மா ஓட்டு ரெட்டலைய பார்த்து

இந்த மாதிரி நிறைய பாட்டுக, டயலாக்குக எல்லாத்தையும் சின்ன வயசா இருக்கும் போது நிறைய கேட்டுருக்கேன்

அப்பயெல்லாம் அரசியலும் தெரியாது, தலைவருங்களும் தெரியாது, எனக்கு நினைவு தெரிஞ்சு அரசியல்வாதிகள்னு நான் முதமுதலா பார்த்த்து ஜெயலலிதா அம்மையாரத்தான், நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போது ஒருநாள் ஜெயலலிதா எங்க ஊரு வழியா போறாங்கன்னு கட்சி ஆளுங்க எல்லாம் எங்கள ரோட்டுல இரண்டு சைடும் கட்சி கொடியோட நிக்க வச்சிட்டானுங்க

நானும் எப்படியோ டீச்சர் பாடம் நடத்துர கொடுமையில இருந்து தப்பிச்சிரலாம்னு போய் நின்னுட்டேன், இதோ இப்ப வந்துட்டாரு, ஒருநிமிசத்துல வந்துருவாரு, இரண்டு நிமிசத்துல வந்திருவாருன்னு ஒரு அல்லக்கை மைக்ல கூவிட்டே இருந்த்து, காலையில பன்னண்டு மணிக்கு வந்துருவாங்கன்னு சொன்ன மேடம் எப்படியோ ஒருவழியா நாலுமணிக்கு வந்தாங்க

வந்தாங்கன்னா, வந்தாங்கன்னு அர்த்தம் இல்ல, போனாங்க, சும்மா சர்ரு சர்ருன்னு ஒரு நாப்பது காரு அட்டெண்ட் டைம்ல பறக்குது, அதுல ஒரு காருல இருந்து அம்மையார் சிரிச்சிட்டே இரண்டு விரல காட்டிட்டு போனாங்க, அத என்னால சரியா பார்க்க கூட முடியல, சரியான பசி, மயக்கமா வேற இருந்த்து, காலையில இருந்து நின்னதுல கால் வேற பயங்கரமா வலிச்சது, இந்த கொடுமைக்கு பேசாம பாடத்தயே கவனிச்சிருக்கலாம்

அதுக்கப்புறம் அரசியலும் சரி அரசியல்வாதிகளும் சரி அவங்க சங்காத்தமே வேணாம்னு இருந்தேன், அதுக்கப்புறம் ஒரு அஞ்சாறு வருசத்துக்கு ஒன்னும் பிரச்சனை இல்லாம நல்லாத்தான் இருந்த்து, கொஞ்சம் கொஞ்சமா அரசியல் பிடிபட ஆரம்பிச்ச போது என்னடா அரசியலு இப்படி இருக்குது, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேவலமா இருந்த்து

அப்ப ஒரு எலக்சன் வந்த நேரம், ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, போட்டோ டிவின்னு அந்த ஊழல், இந்த ஊழல், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துட்டாங்கன்னு ஒரே நியூசு, போட்டோவுல வேற அம்மாவும் தோழியும் ஓய்வுக்கு முதுமலை போன யானைக்குட்டியாட்டம் உடம்பு புல்லா நகைய போட்டுட்டு நிக்குறாங்க, அட இவங்களுக்கா நாள் முழுக்க கால் வலியோட காத்துகிட்டு இருந்தேன்னு ஒரே ஷேமா போயிருச்சு, அப்பவே முடிவு பண்ணேன், நாம ஓட்டு போடும் போது மொத ஓட்டு திமுகவுக்குதான்னு

நான் நினைச்சது மாதிரியே ஒரு பஞ்சாயத்து எலக்சனும் வந்த்து, ஆளாளுக்கு ஓட்டு போடறது எப்படின்னு பாடம் எடுத்தானுங்க, முத்திரை குத்தணும்கறாங்க, சீட்ட மடிக்கனும்கறாங்க, மை வப்பாங்கங்கராங்க, எனக்கு என்னன்னு சரியா புரியலன்னாலும் ஏனோ ஒரு மாதிரி எக்சைட்டிங்கா இருந்த்து, ஆகா மொத மொதலா ஓட்டு போட போறோம்னு சந்தோசத்துல முந்துன நாள் சரியா தூங்கவே இல்லை,

அதனால காலையில பத்து மணிக்குதான் எந்திரிச்சேன், அவசர அவசரா கிளம்பி பூத்துக்கு போனா அந்த ஏரியாவோ சும்மா ஜே ஜேன்னு கிடக்கு, நம்ம ஊரு பாசக்கார பயலுக எல்லாம் மறக்காம எங்களுக்கு போட்டுடு, எங்களுக்கு போட்டுடுங்கறாங்க, நானும் சரி சரின்னு தலையாட்டிட்டே நடந்தேன், ஸ்கூல் வரைக்கும் போய் என்ன பண்ரதுன்னு தெரியல, ஏதோ ஸ்லிப் வாங்கணும்னு சொன்னாங்க, சரி திமுக காரங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபுடிச்சு ஸ்லிப் வாங்கலாம்னு கிளம்புனேன்

நான் திமுக பூத்காரங்கள கண்டுபுடிக்கரதுக்குள்ள, அதிமுக குரூப்புல இருந்து நம்ம பிரண்டு ஒருத்தர், டேய் இங்க வாடான்னு கூப்பிட்டாரு, என்ன பண்றதுன்னு தெரியாம போய் நின்னேன், ஏண்டா உனக்கு ஓட்டு இருக்குதா? போட்டுட்டியான்னு கேட்டாரு, இல்லைண்ணே எனக்கு ஓட்டு இருக்குதுன்னு சொன்னாங்க, இப்பத்தான் பர்ஸ்ட் டைம் ஓட்டு போட போறேன், என்ன பண்றதுன்னு தெரியல

அப்படியா இரு நான் ஸ்லிப் எழுதி கொடுக்குறேன்னு டெலிபோன் டைரக்டரி மாதிரி ஒரு புக்க வச்சிட்டு தேட ஆரம்பிச்சிட்டாரு, சரி எப்படியோ ஸ்லிப் வாங்கிட்டு போய் ஓட்டு போட்டுட வேண்டியதுதான்னு நினைச்சிட்டிருந்தேன், அவரும் தேடி தேடி பார்த்தாரு, கடைசியா என் மூஞ்சிய பார்த்து உன்னோட ஓட்டு போட்டாச்சு தம்பின்னாரு, நான் அப்படியே ஷாக்காயிட்டேன்

என்னன்னே சொல்றீங்க, நான் இப்பத்தான வந்தேன், அதுக்குள்ள எப்படி ஓட்டு போட முடியும்னு கேட்டுட்டு இருந்தேன், அப்பத்தான் சொண்டி வந்தான், அவன் பேரு கார்த்தி, அவன சொண்டி சொண்டின்னுதான் கூப்பிடுவோம், என்ன விட அஞ்சு வயசு கம்மி, சாரின்னா நாந்தான் உங்க ஓட்ட போட்டுட்டேன்னான், அடப்பாவி மொதமொதலா ஓட்டு போடாலாம்னு வந்தா என்னோட ஒட்ட திருட்டுதனமா போட்டுட்டியே, நீ நல்லா இருப்பியாடா? உன்ன எப்படிடா நாந்தான்னு நம்புனாங்கன்னு கேட்டேன்

அதுக்கு அவன், நீங்க வேறன்னா நான் காலையில இருந்து எட்டு ஓட்டு போட்டுட்டேன், அதுல உங்களுதும் ஒன்னு, சரி சரி மன்னிச்சிக்கோங்க, தெரியாம போட்டுட்டேன் அடுத்த எலக்சன்ல பார்த்துக்கலாம்கறான், எனக்கு வந்த கோபத்துக்கு அவன நாலு சாத்து சாத்தனும்னு இருந்த்து, ரொம்ப தெரிஞ்ச பையன்னால விட்டுட்டேன்

அண்ணா நான் ஓட்டு போட்டதே இல்லைன்னா, நாளைக்கு பசங்க கூட போனா ஓட்டு போட்டியான்னு கைல மை இருக்குதான்னு பார்ப்பாங்க, இல்லைன்னா கேவலா இருக்கும்னான்னு புலம்புனேன், என்னோட பரிதாப நிலைய பார்த்த அந்த அண்ணன் சரிடா நீ வேண்ணா நாராயணசாமியோட ஓட்டு போடறியா, அவங்க ஊருல இல்லை, நான் ஸ்லிப் தர்றேன், நீ போய் ஓட்டு போட்டுட்டுன்னாரு

சரிண்ணான்னேன், சொண்டியே எட்டு ஓட்டு கள்ள ஓட்டு போட்டிருக்கான், நான் ஒன்னு போட முடியாதா? தைரியமா போய் ஓட்டு போட்டுடலாம், எப்படியோ திமுகவுக்கு போட்டா சரின்னு முடிவு பண்ணேன், அந்த அண்ணன் ஸ்லிப் எழுதி கொடுத்தாரு, டேய் தம்பி பேரு ஞாபகம் வச்சுக்கோ, உன் பேரு நாராயணசாமி, அப்பா பேரு வெங்கடேசப்பெருமாள், அங்க போனதும் ஸ்லிப் கொடுத்துரு, உன் பேரயும் அப்பா பேரயும் கேட்பாங்க கரக்டா சொல்லிரு, மாத்தி சொல்லிராதன்னாரு, நானும் சரின்னு தலையாட்டினேன்

தம்பி மறக்காம எலைக்கு போட்டுடுடான்னாரு, நானும் சரி சரின்னு தலையாட்டிகிட்டே கிளம்புனேன், மனசுக்குள்ள எலைக்காமுல்ல, ஆசைய பாரு, நான் சூரியனுக்குதான் ஓட்டு போடுவேன்னு நினைச்சுகிட்டேன், பேரு மறந்துட கூடாதுன்னு நாரயணசாமி, வெங்கடேச பெருமாள், நாரயணசாமி, வெங்கடேச பெருமாள்னு மனப்பாடம் பண்ணிகிட்டே நடந்தேன்

ஓட்டு போடற ஸ்கூலுக்குள்ள பார்த்தா எல்லாரும் லைனா நின்னுகிட்டு இருந்தாங்க, போலீஸ்கார் கைல லத்திய வச்சிகிட்டு வரிசைய ஒழுங்குபடித்திகிட்டு இருந்தாரு, நானும் போய் கியூவுல நின்னேன், ஒவ்வொருத்தரா உள்ள போய் வந்திட்டு இருந்தாங்க, சைடுல நின்னு ரவுசு பண்ணிட்டு இருந்த ஒருத்தர போலீஸ்கார் புடிச்சு சாத்து சாத்துன்னு சாத்துனாரு

அதுவரைக்கும் தைரியமா இருந்த எனக்கு அந்த நிமிசத்துல இருந்து பயமாயிருச்சு, இருந்தாலும் மனச தைரியமா வச்சுகிட்டு காத்திருந்தேன், ஒவ்வொருத்தரா உள்ள போய்கிட்டு இருந்தாங்க, என்னோட டர்னும் வந்தது, உள்ள போய் அங்க உட்கார்ந்திருந்த அம்மாகிட்ட என்னோட ஸ்லிப்ப கொடுத்தேன்

அவங்க அத வாங்கிட்டு ஒரு பெரிய புஸ்தகத்துல பேர தேட ஆரம்பிச்சாங்க, எனக்கு மனசுக்குள்ள ஒரு பயம் துடிச்சிட்டு இருந்த்து, அடுத்து இன்னொருத்தர் உட்கார்ந்திருந்தாரு,

உன்னோட பேர் என்ன?

நா நா நாராயணசாமிங்க

உன் அப்பா பேரு

அப்பா பேரு அப்பா பேரு அய்யோ மறந்து போச்சே, அது என்ன பெருமாளு யோசிட்டிருக்கும் போதே

உன் அப்பா பேரு என்ன தம்பி? மறுபடியும் கேட்டாரு

பெருமாளுங்க

வெங்கடேச பெருமாளா?

அட ஆமாம்ல, ஆமாங்க வெங்கடேச பெருமாள்தான்

அவரு சீட்ட எடுக்க ஆரம்பிச்சாரு, அப்ப பார்த்து பூத் ஏஜெண்டா இருந்தவரு என்ன குருகுருன்னு பார்த்தாரு, யாருன்னு பார்த்தா எங்க பக்கத்து வீட்டுக்காரரு, எனக்கு தெரிஞ்சவரு, அவரு டிஎம்கே பூத் ஏஜெண்டா அங்க இருந்தாரு

தம்பி உன் பேரு நாராயணசாமி இல்லையே, இதுதான்ன்னு என் பேரை சொன்னாரு, அடப்பாவி போட்டு கொடுத்துட்டானே, இல்லைங்க என் பேரு நாராயணசாமிதான்னு சொன்னேன், அப்படியா அப்ப உன் அப்பா பேரு என்னன்னு கேட்டாரு, என் அப்பாவ எல்லாருக்கும் தெரியும், பொய் சொன்னாலும் மாட்டிக்குவோம், உண்மைய சொன்னாலும் மாட்டிக்குவோம், என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்

அதுக்குள்ள அவரே நீ ........ அவரு பையன்தானே கேட்டாரு, நான் பேய் முழி முழிச்சேன், உடம்பெல்லாம் வேர்த்து போச்சு, அடப்பாவி உன் கட்சிக்குதானே ஓட்டு போட வந்தேன், மாட்டி விட்டுட்டியேடா பாவின்னு மனசுக்குள்ள அந்தாள திட்டினேன்

எலக்சன் ஆபிசரு, தம்பி கள்ள ஓட்டு போட வந்தியா? உன்னயெல்லாம் ஜெயில்லதான் போடனும்னு சொல்லி போலீஸ் போலீஸ்னு கூப்பிட்டாரு
நான் ஆகா நல்லா மாட்டிகிட்டோம்டா சிக்குனா சங்குதான்னு மனசுக்குள்ள நினைக்கும் போதே ஒரு போலீஸ்கார்ர் வந்தார், இதுக்கு மேல இங்க நின்னா அவ்வளவுதான்னு புடிச்சேன் பாருங்க ஓட்டம்

அந்த போலீஸ்காரரும் டே நில்லுடா நில்லுடான்னு தொறத்திட்டு வந்தார், சிக்குனா தான, எங்க ஊரு பத்தி எனக்கு தெரியாதா? ஒரே ஓட்டமா ஓடி நான் எஸ்கேப் ஆகிட்டேன்

வீட்டுல போய் ரெஸ்ட் எடுத்துட்டு மத்தியானமா கிளம்பி வேடிக்கை பார்க்க போனேன், அந்த அதிமுக பூத் ஏஜெண்ட் அண்ணன் இருந்தாரு, ஏண்டா ஓட்டு போட்டியானு கேட்டாரு, அட நீங்க வேறண்ணே விட்டா ஜெயில்லயே போட்டிருப்பானுங்க, அந்த ...................... கெடுத்துட்டாருன்னே, மாட்டி விட்டுட்டாரு
அப்ப பார்த்து சொண்டி வந்தான், என்ன்ன்னே மாட்டிட்டீங்களாமா? போலீசெல்லாம் தொறத்துச்சுன்னு கேள்விபட்டேன்னு நக்கலா சிரிச்சேன், எனக்கு அவமானமா போச்சு, ஆமாண்டா அதுக்கென்ன இப்ப?

நீங்க போடப்போன ஓட்டயும் நானே போட்டுட்டேன்னான்

அடப்பாவிகளா ஒரு சின்ன பையன் வளைச்சி வளைச்சி எல்லார் ஓட்டயும் போட்டுட்டு இருக்கான், அவன புடிக்க துப்பில்ல, ஆசை ஆசையா மொத தடவை ஓட்டு போட போன என்ன புடிங்கடா வெண்ணெய்களான்னு மனசுல நினைச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தேன்

அடுத்த நாள் காலையில நான் நடந்து போகும் போது என்ன மாட்டிவிட்ட அந்த பூத் ஏஜெண்ட் அண்ணன் எதிர்ல வந்தாரு, டேய் நில்லுடா, இந்த வயசில கள்ள ஓட்டு போடறியா? என்ன தைரியம்டா உனக்குன்னு திட்ட ஆரம்பிச்சாரு
[அட கேணப்பயலே உன்னோட கட்சிக்குதானடா ஓட்டு போட வந்தேன், என்ன போய் புடிச்சு கொடுத்திட்டியேடா, அவனுங்க வளைச்சு வளைச்சு கள்ள ஓட்டு போட்டுட்டு இருந்தானுங்களே, அவங்கள எல்லாம் விட்டுட்டியேடான்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு இருந்தேன்]

என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், பேசாம அமைதியா இருக்க, ஒன்னு விட்டன்னா செவுனி கிழிஞ்சு போயிரும், உன்னயெல்லாம் போலீசுல புடிச்சு கொடுக்கனும், ஓடியா போயிட்ட, இரு இன்னைக்கு போலீசுல கம்ளைண்ட் பண்ணி புடிச்சு கொடுக்கறேன், எங்க உங்க அப்பா? பேசிக்கொண்டே போனார்

எனக்கு போபம் தலைக்கேறியது, வந்த கோபத்தில் ஒரு கத்து கத்தினேன்

சரிதான் போடா@#$%^&*(!@#$$ - என்று திட்டிவிட்டு ஒரே ஓட்டம்

எங்கள் ஊரில் இருந்தவர்களிலேயே அந்த அண்ணன் மிக நல்லவர், கூட்டுறவு வங்கியில் நல்ல வேலையில் இருந்தார், எந்த கெட்டபழக்கங்களும் இல்லாதவர், அனைவருடனும் அன்புடன் பேசுபவர், அவரும் அவருடைய குடும்பத்தார் மீதும் ஊரில் உள்ள அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர், அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்  என்னுடன் பேசவே இல்லை, நான் திட்டியதை என் வீட்டிலும் சொல்லி கொடுக்கவில்லை, எப்பொழுது நேரில் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் சென்று விடுவார், ஒவ்வொரு எலக்சன் வரும்போதும் அவர் நினைவு வரும், கண்டிப்பாக அவரை பூத்தில் பார்ப்பேன், தலைகுனிந்து கொள்வேன், அவரை கோபத்தில் திட்டிவிட்டேனே தவிர மனசுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த்து, ஆனால் கடைசிவரை அவரிடம் நான் மன்னிப்பு கேட்கவே இல்லை, ஆம் இப்பொழுது அவர் உயிரோடு இல்லை எட்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பில் காலமகிவிட்டார், இதோ எலக்சன் வர போகிறது, இந்த முறை அவர் வரப்போவதில்லை, இந்த பதிவில் மூலம் அவரிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், மன்னித்துவிடுங்கள் சார்.

முதல் காதலை போலவே, முதல் தேர்தலும் இனிமையானதுதான், சாகும்வரை மறக்காது..!  
     

Friday, March 25, 2011

அரசியல் கமர்சியல் பக்கங்கள் - 25/03/2011


எலக்சன் வரதுக்குள்ள வாக்காளர் பட்டியல்ல உங்க பேரு இருக்குதான்னு எல்லாரும் செக் பண்ணிக்கோங்க, நம்ம திரட்டியில ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை, கண்டிப்பா எலக்சன்ல ஓட்டு போட்டுட்டுங்க, ஏன்னா மறுபடியும் அஞ்சு வருசம் கழிச்சுதான் இந்த மாதிரி கூத்தெல்லாம் பார்க்க முடியும், அரசாங்கமும் உங்களோட ஜனநாயக கடமையை நீங்க தவறாம நிறைவேத்தனும்னுதான் லீவெல்லாம் கொடுக்கறாங்க, ஒரு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, ஒருநாள் லீவு கிடைக்குதேன்னு சரக்கடிக்கற பரவசத்துல ஓட்டு போடறதை மறந்துறாதீங்க, ஓட்டு போட்டுட்டு அப்புறம் போய் சரக்கடிங்க. 


இந்த லிங்கிலயும் செக் பண்ணி பார்க்கலாம், என்ன பாண்ட் சேர்க்க வேண்டி வரும், போன எலக்சன்ல பணம் வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கன்னு சத்தியாகிரக அமைப்பினர் மக்களோட கால்ல விழுந்து கேட்டுட்டு இருந்தாங்க, இந்த வருசம் அவங்க சத்தியமா அத செய்யக்கூடாதுன்னு நான் விரும்பறேன், பாவம் மக்கள், இருக்கற பாவத்தோட இன்னொரு பாவத்த ஏன் சேர்க்கிறீங்க? உங்க நல்லெண்ணத்துக்கும், சேவைக்கும் என்னோட நன்றி கலந்த வணக்கங்கள்.


திமுக தேர்தல் அறிக்கையில மிக்சி அல்லது கிரைண்டர் எல்லாம் கொடுக்கறாங்களாம், இப்ப அதுக்கு போட்டியா அதிமுகாவும் மிக்சி, கிரைண்டர், பேன் எல்லாமும் கொடுக்கறாங்களாம், இப்படியே எல்லாத்தையும் கொடுத்தா அடுத்த எலக்சனுக்கு கொடுக்கறதுக்கு என்ன இருக்க போகுது, இன்னும் வாசிங் மெசினும், பிரிட்ஜும்தான் பாக்கி இருக்கு, எலக்சனுக்குள்ள அதையும் கொடுக்கறேன்னு சொல்லிட்டா புண்ணியமா போகும், அப்படியே செல்போனும் கூடவே இரண்டு சிம்கார்டும், இரண்டு நம்பருக்கு சியூஜி பண்ணி மெரினா பிச்சுல இருக்கற ஜோடிகளுக்கு எல்லாம் ஒன்னொன்னு கொடுத்தீங்கன்னா லவ்வர்ஸ் ஓட்டு உங்களுக்கு கன்பர்ம், லவ் பண்ணாத பொண்டு புள்ளக யாரு இருக்கா?

அதே மாதிரிதான் டாஸ்மாக்குல ரேசன் கார்டுக்கு மாசம் 30 பாட்டில் சரக்கு இலவசம்னு சொல்லிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா மெஜாரிட்டி கிடைச்சிரும், அரிசி மட்டும்தான் 15 கிலோ, 30 கிலோன்னு கொடுப்பீங்களா?

யாரு ஜெயிச்சா என்னங்க, மிக்சி, கிரைண்டரு கன்பர்ம், என்ன கிரைண்டர் ஆட்டும் போதும், மிக்சி ஆட்டும் போதும், இல்லைன்னா பேன் போடும் போதும், தமிழக அரசு சிம்பலோட சுத்தும், அதுதான் ஒருமாதிரியா இருக்கும், சரி என்ன பண்றது, ஓசின்னு வந்துட்டா இதயெல்லாம் பார்க்க முடியுமா?


திக வீரமணி சாரு வைகோவ இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிடறாராம்!
பாவம்க புரட்சிபுயல் வைகோ, அம்மா வச்ச ஆப்புல ஏற்கனவே அவரு நொந்து நூடுல்ஸ் ஆகி கிடக்காரு, மறுபடியும் மறுபடியும் போய் இங்க வாங்க, எங்களுக்கு ஆதரவு குடுங்க, இவங்களுக்கு ஆதரவு குடுங்கன்னு டார்ச்சர் பண்ணிகிட்டு, அதான் ரெண்டு கூட்டணிலயும் தொகுதி பங்கீடு முடிஞ்சிருச்சுல்ல, அப்புறம் எதுக்கு அறிக்கை விட்டு கூப்பிட்டுட்டு இருக்கீங்க, இதயத்துல இடம் கொடுக்கவா? கடுப்புகள கிளப்பிகிட்டு!


நம்ம உணவுத்துறை அமைச்சர் வேலுவோட சொத்து மதிப்பு போன எலக்சன்ல ஒரு லட்ச ரூவாயாம், ஆனா இப்ப மூணரை கோடி ரூபாக்கு பக்கமா இருக்குதாம்,கிட்டத்தட்ட 780 மடங்கு ஜாஸ்தியாகிருச்சாம், தலைவரு அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி பால் வியாபாரியா இருந்தவராம், அதனாலதான் என்னவோ பழக்கதோசத்துல மக்களோட பணத்தயும் கறந்துட்டாரு போல :-)

எலக்சன் வந்தாலும் வந்தது, எந்த டிவிய பார்த்தாலும், எந்த பேப்பர பார்த்தாலும், எந்த பிளாக்க பார்த்தாலும் ஒரே எலக்சன் நியூஸ்தான், அவங்கவங்க அவங்களோட கருத்துக்களை எல்லாம் பகிர்ந்துக்கறாங்க, எல்லார் மனசிலயும் ஒரு ஆதங்கம், இந்த தடவையாவது மாற்றம் வராதான்னு, நல்லது நடக்காதான்னு, இங்க நம்ம நாட்டோட இளைஞர்கள் அவங்க கருத்துக்கள சொல்றாங்க, என்னன்னு நீங்களும் கொஞ்சம் கேளுங்களேன்...மச்சி நீ கேளேன்.




சும்மா சட்டசபைய மட்டும் என் ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ் மாதிரி ஜிகுஜிகுன்னு கட்டி வச்சா மட்டும் போதுமா? உள்ள இருக்கறவங்க எல்லாம் கிழடுகட்டைகளா வயசானவங்களா இருந்தா எப்படி? இந்த மாதிரி பசங்க எல்லாம் அரசியலுக்கு வரணும் சார், எனக்கும் ஆசைதான், ஆனா முதல்வன் படத்துல வர மாதிரி ஓட விட்டு பெட்ரோல் ஊத்திடுவாங்களோன்னு பயமா இருக்குது:-)))

மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்றாங்க, பண பலம், படைபலம் இப்படி சகல சவுபாக்கியங்களோட இருக்குற இப்ப இருக்குற அரசியல்வியாதிகள எதிர்த்து என்ன சார் பண்ண முடியும், நடக்கும் ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் நல்லது நடக்கும், நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு வாழ வேண்டியதுதான் போல, ஒவ்வொரு மாற்றமும் மெதுவாவே நிகழுது..!


இந்த வாரம் முழுக்க கொஞ்சம் வேலை பிசி, கோயம்புத்தூருக்கும், திருப்பூருக்கும் அலைஞ்சிட்டு இருக்கேன், அதனால நண்பர்கள் பிளாக்குக்கு வரமுடியல, முந்தாநாள் டிராப்ட்ல இருந்த பதிவு ஒன்ன போட்டு அதுக்கு வந்த கமெண்டுக்கு கூட ரிப்ளை பண்ண முடியல, மன்னிக்கவும்.
நாளைக்கு சென்னை போறேன், திரும்பிவர 4 நாள் ஆகும், அதனால மறுபடியும் 4 நாளைக்கு நம்ம கடை லீவு, மறுபடியும் மீண்டும் சந்திப்போம், நன்றி..!

அன்புடன்
இரவுவானம்



Wednesday, March 23, 2011

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி..!


நம்ம ஊருலங்க நிறைய புது போலீஸ்காரங்கள போட்டு இருக்காங்க, எல்லாரும் சின்ன சின்ன பசங்களா இருக்காங்க, டிஎஸ்பின்னு சொல்றாங்க அப்படின்னா தமிழ்நாடு ஸ்பெசல் போலீசாம், இவங்க அப்படி என்ன வேலை செய்றாங்கன்னா, ரோட்டுல காலையிலயும் சாயங்காலமும் அங்கங்க நின்னுகறாங்க, இல்லைன்னா எதாவது சிக்னல்ல நின்னு டிராபிக்க கிளியர் பண்ணுராங்க, அதுவும் இல்லைன்னா மொபைல காதுல வச்சு கடலை போட்டுட்டு இருக்காங்க, இப்ப அது இல்லைங்க மேட்டரு

இந்த ஸ்பெசல் போலீஸ்ல பொண்ணுங்களும் இருக்காங்க, பாதி பொண்ணுங்க ரொம்ப அழகாவே இருக்காங்க, இவங்களும் மத்த போலீசுக்காரங்க மாதிரியேதான் காலையில கொஞ்ச நேரம் மாலையில கொஞ்ச நேரம்முன்னு அங்கங்க பஸ் ஸ்டாப்புக்கு பஸ் ஸ்டாப்பு நின்னுகிட்டு போறாங்க, இவங்க எல்லாருக்கும் பர்டிகுலரா என்ன வேலைன்னு எனக்கு தெரியல, இந்த ரெண்டு போலீஸ்காரங்களும் மத்த நேரத்துல எங்க இருப்பாங்கன்னு எனக்கு தெரியாது

இப்ப என்ன பிரச்சனையின்னா இந்த லேடி போலீஸ்காரங்க இருக்காங்கள்ள பாவம்க சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்ட்டபடுவாங்க போலருக்கு, எலும்பு கூடு மாதிரி இருக்காங்க, சில பொண்ணுங்கள பார்த்தா எப்படித்தான் இவங்களை போலீஸ் வேலைக்கு செலக்ட் பண்ணாங்களோங்கற மாதிரி இருக்காங்க, இவங்க இப்படி ரொம்ப அப்பாவியா இருக்கறதால நம்ம ஆளுங்க இவங்கள போலீசாவே மதிக்க மாட்டேங்குறாங்க

அப்படித்தாங்க ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கார்காரன் பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி கார நிறுத்திட்டு டிராபிக் ஜாப் பண்ணிட்டிருந்தான், அங்க இருந்த ஒரே ஒரு பெண் போலீஸ் போய் அவன்கிட்ட இங்க வண்டிய நிறுத்தாதீங்க, எடுங்க டிராபிக் ஜாம் ஆகுதுல்லன்னு சொன்னாங்க, அவன் வண்டிய எடுக்கவே மாட்டேனுட்டான், அதுவுமில்லாம, வண்டிய எடுக்க முடியாது என்ன பண்ணுவ, பண்றத பண்ணிக்கோ அப்படின்னு சொல்றான், அந்த பெண் போலீசும் அவன எவ்வளவோ எச்சரிக்கை பண்ணி பேசினாலும் அவன் கடைசி வரைக்கும் மதிக்கவே இல்லை, நான் என் வேலை முடிஞ்சாதான் வண்டிய எடுப்பேன்னு சொல்லி அதே மாதிரி அவன் வேலை முடிஞ்சதுக்கப்புறம்தான் வண்டிய எடுத்தான்.

அதே மாதிரி சிக்னல்ல நிக்குற பெண் போலீஸ் பாடும் அதே மாதிரிதான் இருக்கு, அவங்க நிக்க சொன்னா பாதி பேரு நிக்கவே மாட்டேங்குறாங்க, இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க, அவங்க போக சொல்றதுக்கு முன்னாடியே கிளம்பற மாதிரி டுர்ரு டுர்ருன்னு கிளம்புறானுங்க, இதே ஆம்பிளை போலீசா இருந்தா பண்ண முடியுமா? ஒரு பயம் இருக்குமில்ல.

இன்னொரு ஸ்டாப்புல அழகான பெண் போலீஸ் ஒன்னு டிராபிக் கிளியர் பண்ணிட்டிருந்தது, பைக்ல வந்த பசங்க அந்த பெண் போலீச பார்த்து சைட்டடிச்சிட்டு இருந்தாங்க, அப்பப்ப கமெண்ட் வேற, கடைசியா அவங்கள கிளம்ப சொல்லி சிக்னல் கொடுத்தும் கிளம்பாம நின்னுகிட்டு இருக்கானுங்க, அவங்களும் வண்டிய எடுங்க போங்கன்னு சொன்னாங்க, இவனுங்க ஹி ஹி நாங்க அடுத்த சிக்னல் வரைக்கும் வெயிட் பண்ணிட்டு போறோம்னு சொல்ரானுங்க, இத வேடிக்கை பார்க்கிறவங்களுக்கு விளையாட்டா காமெடியா இருந்தாலும், அந்த பொண்ணோட நிலைமையை பார்த்தா  பரிதாபமா இருந்தது.

சாதாரண மத்த வேலையை காட்டிலும் போலீஸ் வேலைக்கு வரவங்களுக்கு கண்டிப்பா மனதைரியம் அதிகம் இருக்கனும், பாதி பொண்ணுங்க, எவனாவது சத்தமா பேசுனா பயந்துடரமாதிரிதான் இருக்காங்க, குடும்ப கஷ்ட்டத்துக்காகவும், எப்படியோ இந்த அரசாங்க வேலையாவது கிடைச்சதேன்னும்தான் பாதி பேரு போலீஸ் வேலையில சேர்ந்திருப்பாங்க போல, மத்தவங்க கிண்டல் பண்ணினா போலீஸ் கிட்ட சொல்லலாம், இங்க போலீசயே கிண்டல் பண்றானுங்க, அவங்க யாருகிட்ட சொல்லறது,

இதுக்கு என்ன பண்ணலாம்னா, இந்த டிஎஸ்பி போலீஸ் காரங்களோட ரெண்டு மூனு சீனியர் போலீஸ்காரங்களையும், கூடவே சில ஜெண்ட்ஸ் போலீஸ்காரஙக்ளையும் சேர்த்து சிக்னல்லயும், டிராபிக்லயும் விட்டா இந்த மாதிரி போலீச மதிக்காதவங்களை புடிச்சு மிதிக்கலாம், ஏற்கனவே எங்க ஊருல ஒருத்தனை அப்படித்தான் மிதிச்சாங்க.
அப்படியே அழகான பெண் போலீச லுக்கு விடறவங்க, சைட்டடிக்கறவங்க எல்லாருக்கும் ஒருதடவை மண்டகப்படி நடத்துனா அடுத்ததடவை பசங்க கொஞ்சம் யோசிப்பாங்க.

அப்படியே டிரைனிங்ல என்னத்த சொல்லி கொடுக்கறாங்களோ இல்லையோ, கொஞ்சம் நல்ல சாப்பாடா போட்டு உடம்ப வளர்த்துவிட்டாங்கன்னா பாதிபிரச்சனைய அவங்களே பார்த்துக்குவாங்க, பாதி பொண்ணுங்க எலும்பும் தோலுமா இருக்குது.

நீதி : நம்ம ஊருல புதுசா போட்டு இருக்குற பெண் போலீஸ் எல்லாம் அழகா இருக்காங்க, தெரியாம சைட் அடிச்சு மாட்டிக்காதீங்க! 

பொதுநலன் கருதி வெளியிடுவது நானேதான்...!


Saturday, March 19, 2011

பவர் ஸ்டாரின் லத்திகா - ஒரு காவியம்!



முதலில் இந்த மாபெரும் கலைகாவியத்தை படைத்து சமர்பித்த எங்கள் அண்ணன் பவர் ஸ்டார் என்கிற யூத் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து தொடங்குகிறேன்.
அடுத்தபடியாக 6 மணிக்கு போட வேண்டிய திரைப்படத்தை 6.30 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால் தியேட்டரில் கூடி குழுமியிருந்த 6 பேருக்காக (அதில் நானும் ஒருவன்) திரையிட்ட நடராஜ் தியேட்டர் உரிமையாளருக்கு மிகவும் நன்றி, ஒருவேளை படம் போடாமல் அனுப்பிவிடுவார்களோ அண்ணனை தரிசிக்க முடியாதோ என்று நான் தவித்த தவிப்பு எனக்குதான் தெரியும், இருந்தாலும் முதல்வகுப்பில் நான் ஒருவன் மட்டும் தனியே உட்கார்ந்து இருக்க பயமாகத்தான் இருந்த்து, நல்லவேளை படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தியேட்டரில் டிக்கட் கிழிப்பவரும் வந்து அமர்ந்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே ஓடி விட்டார், மீண்டும் தனியனானேன், சரி படத்திற்கு போவோம்.

ஒருவழியாக 6 மணி படத்தை 6.30க்கு ஆரம்பித்தார்கள், முதலிம் கியூப் டிஜிட்டல் சினிமா – என்சாய் தி எக்ஸ்பீரியன்ஸ் சிலைடு போட்டார்கள், என்சாய் தி எக்ஸ்பீரியன்சா அந்த கருமத்துக்குதானே வந்திரிக்கிறோம், சீக்கிரம் படத்தை போடுங்கப்பா, முதலில் விடுதலை சிறுத்தைகள் தொல். திருமாவளவனுக்கு நன்றி என காட்டினார்கள், சரி தலைவரோட தலைவராச்சேன்னு நினைத்து கொண்டேன், அடுத்து அய்யன் திருவள்ளுவருக்கு நன்றின்னு போட்டாங்க, இது என்ன அதிசயம், திருவள்ளுவர் கூட நடிச்சிருக்காரா? மனதில் ஆச்சரியம் தொற்றிக் கொண்டது, இருக்காது ஒருவேளை அது நம்ம பவர் ஸ்டாரா இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

துப்பாகியிலிருந்து குண்டுகள் சிறீ பாய்ந்து லத்திகா என டைட்டில் கார்டு போட்டனர், அதே துப்பாக்கி குண்டுகளால் பவர் ஸ்டார் பெயரும் திரையிடபட்டது, பிறகு எழுத்து போட ஆரம்பித்தார்கள், கருப்பு டிரஸ் அணிந்த ஒர் உருவம் கட்டி கொண்டிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் படிகளில் ஏறி கொண்டிருப்பதை போல காண்பித்து எழுத்து போட்டு கொண்டிருந்தார்கள், பயங்கர திகில் இசையோடு அந்த உருவம் சுமார் 10 நிமிடம் ஏறி கொண்டிருந்தது,

எழுத்து போட்டு முடியும் போது மொட்டைமாடி வரை ஏறிவிட்டது, எழுத்து போட்டு முடிந்தவுடன் இறங்கிவிட்டது, அடுத்த சீன் அதே கருப்பு உடை அணிந்தவன் ஒரு காட்டுக்குள் நடந்து போய் கொண்டிருந்தான், அதே பயங்கர பேக்கிரவுண்ட் மியூசிக், மீண்டும் பத்து நிமிடம் நடந்து நடந்து..............................................நடந்து போய் கொண்டிருந்தான், பிறகு ஒருவழியாக ஒருவனிடம் துப்பாக்கி வாங்கி, அதே துப்பாக்கியால் அவனை சுட்டு கொல்கிறான்,

அடுத்த சீன் கதாநாயகி இரவில் படுத்து தூங்கி கொண்டிருக்கிறாள், நடுராத்திரி வீட்டு கதவு தட்டப்படுகிறது, இந்நேரத்தில் யார் கதவை தட்டுகிறார்கள், என்ற பயத்தோடு ஒவ்வொரு படியாக கீழே இறங்கி இறங்கி இறங்கி......................................................... இறங்கி ஒரு பத்து நிமிடம் இறங்கி வந்து மிகுந்த பயத்தோடு கதவை திறந்து பார்க்கிறாள், வெளியே யாருமில்லை, ஆனால் ஒரு உருவம் அவளுக்கு தெரியாமல் வீட்டுக்குள்ளே நுழைகிறது.

யாருமே காணாத்தால் கதாநாயகி உள்ளே நுழைந்து கதவை தாளிட்டு விட்டு செல்கிறாள், பின்னால் இருந்து ஒரு கை அவளை திருப்பி சுழற்றி விடுகிறது, கதாநாயகி ஒரு பத்து நிமிடம் சுத்தி சுத்தி சுத்தி ........................ சுத்தி கீழே விழப்போகிறாள், அப்பொழுது ஒரு முரட்டுகரம் அவள் இடுப்பை சுற்றி வளைத்து கீழே விழாமல் தாங்கி பிடிக்கிறது, அது யாரென பார்த்தால் அகில உலக சூப்பர்ஸ்டார், வைஸ்கேப்டன், புதியதளபதி, பவர்ஸ்டார், யூத்ஸ்டார், டாக்டர், தலைவர் சீனிவாசன் அவர்கள், என்னப்பா சும்மா படிச்சிட்டு இருக்கீங்க, கை தட்டுங்கப்பா, டப் டப் டப் டப் விசில் சத்தம் காதை பிளக்கிறது (அப்படின்னு கற்பனை பண்ணிக்கோங்க)

தலைவர் சும்மா செமையா இருக்காருங்க, அதுக்கு அடுத்த சீன்ல நிறைய ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைக்கறாரு, பேக்கிரவுண்ட்ல, வள்ளல் தலைவருன்னு பிளக்ஸ் போட்டு வைச்சு, ஓப்பனிங் சாங் வேற, விசயகாந்துக்கு அப்புறம் அந்த ஓப்பனிங் சீன் சாங் நம்ம தலைவருக்கு மட்டும்தான் சூட் ஆகுது, எனக்கு விருதகிரி பார்த்த ஞாபகம், என்ன அவரு கருப்பா இருப்பாரு, இவரு செகப்பா இருக்காரு, அவ்வளவுதான் வித்தியாசம், பயபுள்ளக ரெண்டயும் பார்த்தா பயமாதான் இருக்கு.
   
இதுவரைக்கும் நான் சொன்னது மொத மூனு சீனு மட்டும்தான், இதுக்கு மேலயும் சொல்லனும்னா ஒரு பிளாக்கு போதாது, ஒவ்வொரு சீனயும் பத்து பத்து நிமிசம் போட்ட்டு காட்டி விளக்கு விளக்கு விளக்குன்னு விளக்கறாங்க, தலைவரு எம்ஜியார் ரசிகராம், வண்டில போகும் போது பாட்டு கேட்டுட்டு போவாரு, மத்த படத்துலன்னா ஒரு ரெண்டு வரி போட்டுட்டு கட் பண்ணிடுவாங்க, ஆனா இங்க முழு எம்ஜியார் பாட்டையும் போடறாங்கப்பா, அத கூட சகிச்சுக்கலாம், ஆனா அதுக்கு தலைவரு கொடுக்கற எக்ஸ்பிரசன் இருக்கே.. அத வார்த்தையால சொல்ல முடியாது, கரும்ம்டா சாமி..

சத்தியமா இந்த படத்த என்ன தவிர யாருமே பார்க்க மாட்டீங்க, அதனால கதைய சொல்ரேன் கேட்டுக்கோங்க, தலைவரு பில்டிங் கன்ஸ்ரக்சன் கம்பெனி வச்சிருக்காரு, அங்க வேல பார்க்குற மேஸ்திரி, தொழிலாளர்கள் எல்லாரும் புகழோ புகழோன்னு புகழ்றாங்க தலைவர, அன்பான அழகான(?) பொண்டாட்டி, ஒரு குழந்தையோட சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கராரு, ஒருநாள் அவரோட குழந்தை லத்திகாவ யாரோ கடத்திட்டு போயிடராங்க, கடத்திட்டு போனவன் குழந்தைய வச்சுகிட்டு பிளாக்மெயில் பண்றான்.

பயங்கரமா டார்சர் பண்றான், அங்க வா இங்க வான்னு அலைய விடறான், தலைவரும் குழந்தைய காப்பாத்தறதுக்காக ஓடு ஒடு ஒடுன்னு ஓடிக்கிட்டே இருக்கறாரு, கொன்னுட்டேனும் சொல்றான், யாரு குழந்தைய கடத்துனது, ஏன் கடத்துனான், குழந்தை கிடைச்சதா இல்லியா அப்படிங்கறத எல்லாம் தியேட்டருக்கு போய் பாருங்க தைரியம் இருந்தா.

ஒருத்தர் உண்மையிலேயே தைரியசாலியா பொறுமைசாலியான்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா தைரியமா லத்திகா படத்துக்கு கூட்டிட்டு போகலாம், படத்துலேயே உருப்படியான ஒரு விசயம்னா அது இசைதான், டப்பா படத்துக்கு இங்கிலீஸ் பட ரேஞ்சுக்கு மியூசிக் பண்ணியிருக்காரு, யாருன்னு கேட்குறீங்களா அவருதான் பட்த்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர், ரெண்டு மூணு பாட்டு கொஞ்சம் மெனக்கெட்டுருந்தா கண்டிப்பா ஹிட் ஆகி இருக்கும்(?), கொஞ்சம் மிஸ் ஆகிருச்சு

படத்துல காமெடி இல்லைங்கற குறை எல்லாம் நம்ம தலை சீனி பார்த்துக்கராரு, அதுக்கு பதிலா ரெண்டு மூணு பைட்டு இருக்கு, இவரு குளோஸ் அப்புல முகத்த காட்டி கத்துறப்பவெல்லாம் அடிவாங்குற  ஸ்டன்ட் நடிகர்கள் முகத்துல மரண பீதி தெரியுதுங்கறது, அவங்க பயந்து கத்துறதுலேயே தெரியுது, படத்தோட ஒரே குறை என்ன்ன்னா தலைவருக்கு டப்பிங் வாய்ஸ் போட்டதுதான், சே தலைவரோட ஒரிஜினல் குரலை கேட்க முடியலைன்னு ரொம்ப வருத்தம் எனக்கு, (சொந்த குரல்லயே டப்பிங் பண்ணியிருந்தா நல்லா சிரிச்சிருக்கலாம்)

படத்துல உருப்படியா இருக்கற இன்னொரு விசயம் ரெண்டு பாட்டு சீனுதான், மொக்கை பிகரா இருந்தாலும் காட்டு காட்டுன்னு காட்டுராங்கப்பா, ஆனா என்ன கூடவே தலைவரு சேர்ந்து டான்ஸ் ஆடுறதால, சிரிச்சி சிரிச்சி வகுறு நோகுதப்பா, ரெண்டு கதாநாயகில ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு குரூப் டான்சர் பொண்ணு மாதிரி இருக்கு, ஆனா அந்த குருப் டான்சர் பொண்ணுதான் கதாநாயகி, என்ன சீனி உங்க டேஸ்டு இப்படி ஆகிப்போச்சு?

இந்த படத்துக்காக தலைவருக்கு கண்டிப்பா தேசியவிருது கொடுக்கலாம், அதுலயும் ஒரு சீன்ல, என் பொண்டாட்டி புள்ளய கொடுத்துடுடா கொடுத்துடுடான்னு முகத்துல அடிச்சுகிட்டு அழறாரு பாருங்க, பார்க்கிற எனக்கே அழுகை வந்திருச்சு, இப்படி கொல்றியேடான்னு, நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, ஆனா ஒன்னு சொல்லிகறேன்க, தலைவரோட நடிப்பு ஆஸ்கார் நடிப்பு,
ஆஸ்கார் லட்சியம், இந்த வருட கலைமாமனி நிச்சயம்.
தலைவர சத்தியமா தப்பு சொல்ல முடியாதுங்க, உண்மையிலேயே நல்ல அருமையான கதை ஒன்னைதான் சொல்லனும்னு நினைச்சு படம் எடுத்திருக்காரு, புருசன் பொண்டாட்டிக்குள்ள சந்தேகம் வந்துட்டா அது அவங்களையும் பாதிச்சு மத்தவங்களையும் பாதிக்கும், கொலை பண்ற அளவுக்கு போயிரும்கற கருத்தைதான் இப்படி கொலையா கொன்னு படமா எடுத்து வச்சிருக்காரு.

பதிவுலகத்துல சிபி சாருக்கு முன்னமே படம் பார்த்த்தால எனக்கு யாராச்சும் சேவை செம்மல் பட்டம் குடுத்தா ஏத்துக்க நான் தயாரா இருக்கேன், அவரு சொல்ற மாதிரியே நானும் சொல்ரேன்,
குமுதம், ஆனந்த விகடன்ல விமர்சனம் போட மாட்டாங்க, மீறி போட்டா கர்ர்ர்ர்ர்ர்ர். த்த்தூதூதூ,
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  = 5 (ரெண்டு குத்து பாட்டுக்காக)
ஏ செண்டர்ல இரண்டு ஷோ ஓட்டுனாலே பெரிய விசயம்
பி மற்றும் சி செண்டர் ஆறு ஷோ ஓடும்
நானும் என்னடா படம் இப்படின்னு கிழிக்கலாம்னு நினைச்சுதான் எழுத ஆரம்பிச்சேன், ஆனா மனசு கேட்கலை, எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு தலைவரு மேல, கவலை படாத தலைவா, லூஸ்ல விடு தலைவா, அடுத்து ஆனந்த தொல்லை வருதல்ல, அப்ப பார்த்துக்கலாம்...!


Friday, March 18, 2011

பவர் ஸ்டார் டாக்டர் S. சீனிவாசனின் லத்திகா படம் (மீள்பதிவு)




இன்னைக்கு காலையில தினத்தந்தி பேப்பர் பார்த்தப்ப ஒரு இன்ப அதிர்ச்சி என்னை தீண்டியது, அதுதான் நம்ம தலைவரோட ஆனந்த தொல்லை படத்தோட இசை வெளியீட்டு விழா விரைவில்னு போட்டிருந்தது, கேவலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் ஒரு நியூசா சார், இதுதான் சார் நியூசு, நம்ம தலைவரோட படத்தோட இசை வெளியீட்டு விழான்னதும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, நம்ம தலைவரோட படமே தொல்லைதான், ஐ மீன் ஆனந்த தொல்லைதான், இதுல இசை வெளியீடு வேறயான்னு டவுட் வேற ஆயிருச்சு, சரி அப்படியே பதிவுலகத்துக்கு நம்ம தலைவரோட அடுத்தடுத்த உலக படங்களை அறிமுகம் செய்யலாம்னு இந்த பதிவு.

முதன் முதலா வரப் போறது லத்திகா படம் தான், அந்த படத்த பத்தி தெரிஞ்சுக்கனும்னா இங்க கிளிக்குங்க



                             அடுத்து வரப் போற படம்தான் ஆனந்த தொல்லை


                           விரைவில் இசை தொல்லை ஆரம்பிக்கப் போகுது


விசயகாந்துக்கு அப்புறம் போலீஸ் வேஷங் கட்டறதுக்கு நம்ம தல சீனிய வுட்டா ஆளில்லை


பார்த்தீங்களா போலீஸ்னா அது நம்ம சீனிதான், இந்த படத்த பார்க்கறதுக்கு ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் காரங்களே வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாம், அந்தளவுக்கு போலீஸ்காரங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க போற படம் இது, சூர்யா கூட அடுத்த படம் போலீசா நடிக்கப் போரதுக்கு முன்னாடி தலைவர் கிட்ட டிரைனிங் எடுக்கனும்னு நிமிசக்கணக்கா காத்துகிட்டு இருக்காராம்.



இந்த படத்துல நம்ம தலைவரு வில்லனா வரப்போராரு, படம் பார்த்துட்டு யாருக்கும் மூலம் வராம இருந்தா சரி


நம்ம தலைவரோட பாதையே தனிதான்




இதப்பத்தி சொல்ல ஒன்னும் இல்லை, அதுதான் படத்தோட தலைப்புலேயே இருக்கே


அப்புறம் நீங்க நம்ம தலைவரோட ஒரு முகத்த தான் பார்த்திருப்பிங்க, இன்னொரு முகத்த பார்த்திருக்க மாட்டீங்க, இதுக்கு மேல பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க, நொந்துருவீங்க......


































தலைவருகிட்ட எனக்கு புடிச்சதே அந்த சிரிப்புதான், அட அட அட கண்ண மூடிட்டு எப்படி சிரிக்கராறு பாருங்க, கண்ணுபட போகுதுங்க சார், வீட்டுல சொல்லி சுத்தி போடுங்க



சூட்டிங் ஸ்பாட்டுல ஒரு போஸ்



என்னா லுக்கு, என்னா ஸ்டைலு


இத நினைச்சாதான் பயமா இருக்கு, தலைவரு விடுதலை சிறுத்தையிலேயே பெரிய சிறுத்தையாம், கடிச்சிருவாரோ


ஒரு வேளை வெட்டிடுவாரோ




எப்பூடி, நாங்கெல்லாம் யாரு தெரியுமா? விசய் தம்பி நடிக்க வந்ததுக்கு அப்புறம் தான் டாக்டரு, நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே டாக்டரு



அப்ப எல்லாரும் மறக்காம படத்துக்கு வந்துருங்க

தலைவரோட லத்திகா படம் இன்னைக்கு ரிலீசாகிருச்சு, விசயத்த கேள்விபட்டதுல இருந்து கையும் ஓடல, காலும் ஓடல,  பதிவு எழுத நேரம் இல்லாததால இந்த மீள்பதிவு, இன்னைக்கு படம் பார்க்க போறேன், உயிரோட இருந்தேன்னா நாளைக்கு விமர்சன்ம் எழுதறேன், என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் நண்பர்களே, நன்றி, வணக்கம்..!