Thursday, April 26, 2012

கமர்சியல் பக்கங்கள் - 26/04/2012ஏழைகள் தோழா வா வா !? எங்கள் தலைவா வா வா !? புரட்சிகலைஞரே வாவா !?
நாக்கை துருத்துனாறு, கண்ண உருட்டுனாரு, கையை மடக்குனாறு, கடிச்சு வைக்க வந்தாருன்னு ஏதோதோ காரணம் சொல்லி எங்க கருப்பு எம்ஜியார படக்குன்னு பத்து நாளு சஸ்பெண்ட் பண்ணிட்டீங்கள்ள?

அந்தம்மா சரியான சேலை கட்டுன வாஷிம்கானா இருந்திருந்தா நேருக்கு நேரா நீங்களும் நாக்கை துருத்திருக்கனும் அதவிட்டுட்டு அது என்னய்யா சஸ்பெண்டு பண்ணுறது? காரை புடுங்குறதுன்னு?

இதோ கிளம்பிட்டாரய்யா எங்க தவசி, நாங்க ஜெயிச்ச எல்லா தொகுதிக்குக்கும் கைக்காச போட்டு தண்ணி வாங்கி தராரய்யா

அப்பக்கூட தண்ணிதானா ஆ ஆ ஆ கேப்ப்டன்ன்ன்ன்ன்ன் யாருய்யா சைடுல சவுண்டு வுடுறது? இது ஒன்னும் ஆம்புளைக குடிக்கற சீமைத்தண்ணி இல்லை, பொம்பளைக புடிக்கற நல்ல தண்ணிதான்

நாங்க எப்பவுமே ஆரம்பிக்கறது தண்ணியிலதான் போகப்போக சைடுடிஷ்ஷெல்லாம் வரும், அதான்யா இந்த ரோட்டு பிரச்சனை, கக்கூசு பிரச்சனை, குப்ப வண்டி பிரச்சனை அதெல்லாம், போகப்போக பார்க்கதான போறீங்க

ஆதாரம்:-
எங்க எம்.எல்.ஏக என்ன காலேஜ் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ணா ஜாயின் பண்ண வந்தாங்களா? அது என்னய்யா ஆவூன்னா ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருக்கான்னு கேட்டு ராக்கிங் பண்ணுறீங்க?

இதோ இப்ப களத்துல இறங்கி ஆறு ஆதாரங்களை சேகரிச்சு வச்சிருக்காரய்யா எங்க கேப்டன், அது என்னய்யா அஞ்சு லிட்டர் மண்ணென்னய்க்கு காசு வாங்கிட்டு நாலு லிட்டர மட்டும் ஊத்துரது? கூட அஞ்சு ரூபாய் சேர்த்து குடுத்துட்டு வாங்கிட்டு போக அது என்ன டாஸ்மாக் சரக்கா?

இந்த ஆதாரத்துக்காண்டி நீங்க நடவடிக்கை எடுக்காம இருங்க? அப்புறம் என்ன நடக்க போகுதுங்கறது இப்போதைக்கு சஸ்பென்சுன்னு கேப்டன் சொல்லி இருக்காப்புல

அடே ரேசன் கடை அப்ரசிண்டுகளா, புயல் அடிச்சு பொழச்சவன் இருக்கான் பூபதி அடிச்சு பொழச்சவன் இருக்கானாடா? மவனே நீங்க செத்தீங்கடா, நாஸ்திதாண்டா, நீங்க பாஸ்கிதாண்டா

பொருளாதாரம்:-
அரசியல்னா அடுத்து பொருளாதாரம்தான? சரி பொருளாதாரத்த பத்தி என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, மாசக்கடைசியா கையில காசே இல்லை, அஞ்சு பத்துன்னு ஏதாச்சும் இருந்திருந்தா கூட ஒக, ஒக பார்த்துட்டு அட தப்பா நினைக்காதீங்க ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்துட்டு ஒரு விமர்சன பதிவாவது தேத்திருக்கலாம்

சரி கேள்விபட்ட வரைக்கும், ஒரே கதைய மட்டும் வேற வேற ஹீரோவ மாத்தி படம் எடுக்கலையாம் ராஜேசு, அந்த கூரியர் சர்வீஸ், கல்யாண மண்டபம், டாஸ்மாக்குன்னு ஒன்னக்கூட விடலயாம், எப்படியோ படம் நல்லாருக்குல்ல, அது போதும்.

பகிர வேண்டிய தளம் :-
ஐ.ஏ.எஸ் படிக்கறவங்க முக்கியமா தமிழ்ல ஐ.ஏ.எஸ் எழுத நினைக்கறவங்க பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய தளம் கீழ இருக்கற தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ்


CSAT எக்சாம் நடந்திட்டு இருக்கற இந்த நேரத்துல, அடுத்து பிரிலிமினரி, மெயின் எக்சாம்னு படிக்கறதுக்கு இந்த பிளாக் யூஸ்புல்லா இருக்கும், நிறைய மாடல் கொஸ்டீன் பேப்பர், மின் புத்தகங்கள்னு எல்லாமே இருக்கு, புக்மார்க் பண்ண வேண்டிய, நிறைய பேருக்கு பகிர வேண்டிய தளம் இது, இந்த தளத்த ஹரிக்குமார்னு ஒருத்தர் நடத்துறார், அவரும் ஐ.ஏ.எஸ்ஸா இருப்பார்னு நினைக்கிறேன், இங்கிலீஸ்லயும் பிளாக் இருக்கு.

எனவே உங்களுக்கு தெரிஞ்சவங்க, ஐ.ஏ.எஸ் படிக்கறவங்ககிட்ட ஷேர் பண்ணுங்க, நல்லா படிச்சு மாவேஸ்ட்டுக இல்லாத ஊரா பார்த்து போஸ்டிங் வாங்கட்டும்.

கேட்டதில் பிடித்த பஞ்ச் டயலாக்:-

ஹிண்டு பேப்பர முஸ்லீம் படிக்கறதில்லையா?
மொகல் பிரியாணிய இந்து சாப்பிடுரதில்லையா?
உங்க ஜிகாத்த விட எங்க ஜெய்ஹிந்த்தாண்டா பெருசு

# பயணங்கள் திரைப்படத்தில் ஷைனிங் ஸ்டார் பப்லு

கேட்டதில் பிடித்த தத்துவம்:-

வயசு பொண்ணயும் வாழைத்தாரையும் ரொம்ப நாள் ஆத்துல வச்சிண்டு இருக்கக்கூடாது

# படம் அதே பயணங்கள்

எதிர்பார்க்கும் மொக்கைப்படம் :-
கதையே இல்லாம படம் எடுக்க வேண்டியது, அப்புறம் படம் பார்த்து கதை சொல்லுன்னு நம்மகிட்டயே கேட்க வேண்டியது

கண்டுபிடிப்பு :-
கண்டுபுடிச்சிட்டாங்கையா உலக மகா புதிருக்கான விடைய, கன்னித்தீவு கதைக்கும் இந்த கோழி முட்டை கதையும் ஒன்னுதான், இப்போ ஒன்னு முடிஞ்சு போச்சு, இன்னொன்னு எப்பத்தான் முடியுமோ?


அடுத்தது என்ன நாய்வாலை நிமிர்த்த முடியுமான்னுதான? நிமித்தியாச்சு!வீடியோ :-


வானத்தில் பறக்க நினைக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே
தலைக்கனம் புடிச்சவங்களுக்காக தலைவர் பாடுன பாட்டு

சும்மா ஒரு வெளம்பரம் :-
கூடிய விரைவில் எதிர்பாருங்கள், வசீகரன் சினிமா ஹீரோவானது எப்படி?


கடைசியா எழுதி கிளிச்சது :-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~@@@@@@@~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


15 comments:

 1. மொக்கப்படங்களின் தீவிர ரசிகரே...உங்களை நம்பி எப்பேர்பட்ட படமும் எடுக்கலாம்!!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. கமர்சியல் நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
 4. அடங்கப்பா...எப்பிடியோ அந்தாள உசுப்பி விட்டுட்டாங்க..இனி பக்கத்துல போறவன்லாம் நாறியே செத்து போவான் ஹெஹெ!

  ReplyDelete
 5. பக்கா கமர்ஷியல் பக்கம். கேப்டன் பேசாம இருந்தா பேசலன்னு கலாய்க்கிறாங்க, பேசினா ஆதாரம் இல்லைன்னு கலாய்க்கிறாங்க, ஆதாரம் காட்டின அதுக்கும் கலாய்க்கிறாங்க என்ன உலகம்டா இது.

  ReplyDelete
 6. இதோ கிளம்பிட்டாரய்யா எங்க தவசி, நாங்க ஜெயிச்ச எல்லா தொகுதிக்குக்கும் கைக்காச போட்டு தண்ணி வாங்கி தராரய்யா

  அப்பக்கூட தண்ணிதானா ஆ ஆ ஆ கேப்ப்டன்ன்ன்ன்ன்ன் யாருய்யா சைடுல சவுண்டு வுடுறது? இது ஒன்னும் ஆம்புளைக குடிக்கற சீமைத்தண்ணி இல்லை, பொம்பளைக புடிக்கற நல்ல தண்ணிதான்

  ReplyDelete
 7. இதோ கிளம்பிட்டாரய்யா எங்க தவசி, நாங்க ஜெயிச்ச எல்லா தொகுதிக்குக்கும் கைக்காச போட்டு தண்ணி வாங்கி தராரய்யா

  அப்பக்கூட தண்ணிதானா ஆ ஆ ஆ கேப்ப்டன்ன்ன்ன்ன்ன் யாருய்யா சைடுல சவுண்டு வுடுறது? இது ஒன்னும் ஆம்புளைக குடிக்கற சீமைத்தண்ணி இல்லை, பொம்பளைக புடிக்கற நல்ல தண்ணிதான்

  ReplyDelete
 8. புரட்ட புரட்ட சலிக்காத பக்கங்கள்...

  ReplyDelete
 9. @ ! சிவகுமார் ! said...
  மொக்கப்படங்களின் தீவிர ரசிகரே...உங்களை நம்பி எப்பேர்பட்ட படமும் எடுக்கலாம்!!//

  sivஆ உங்கள விடவா நான் மொக்கை படம் பார்த்திட்டேன் :-)

  ReplyDelete
 10. //@ மனசாட்சி™ said...
  கமர்சியல் நல்லாத்தான் இருக்கு//

  நன்றிங்க சார்

  ReplyDelete
 11. @ விக்கியுலகம் said...
  அடங்கப்பா...எப்பிடியோ அந்தாள உசுப்பி விட்டுட்டாங்க..இனி பக்கத்துல போறவன்லாம் நாறியே செத்து போவான் ஹெஹெ!//

  மாம்ஸ் பாவம் மாம்ஸ் அவரு :-)

  ReplyDelete
 12. @ பாலா said...
  பக்கா கமர்ஷியல் பக்கம். கேப்டன் பேசாம இருந்தா பேசலன்னு கலாய்க்கிறாங்க, பேசினா ஆதாரம் இல்லைன்னு கலாய்க்கிறாங்க, ஆதாரம் காட்டின அதுக்கும் கலாய்க்கிறாங்க என்ன உலகம்டா இது.//

  அதான, இன்னேரம் ஏண்டா அரசியலுக்கு வந்தோமுன்னு இருக்கும்

  ReplyDelete
 13. @ பல்வேறு இணைய தளத்திலிருந்து செய்திகள் said...

  நீங்க என்னமோ சொல்ல வரீங்க, ஆனா என்னன்னுதான் புரியல

  ReplyDelete
 14. நண்பரே,

  உங்களது இந்த நல்ல பதிவை
  எங்களது செய்தி தாள் வடிவமைப்பில் ஆன தமிழ்.DailyLib இணைத்து உள்ளேன்

  பார்க்க
  தமிழ்.DailyLib

  Hope we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 15. //தமிழ் வழியில் IAS
  CSAT எக்சாம் நடந்திட்டு இருக்கற இந்த நேரத்துல, அடுத்து பிரிலிமினரி, மெயின் எக்சாம்னு படிக்கறதுக்கு இந்த பிளாக் யூஸ்புல்லா இருக்கும், நிறைய மாடல் கொஸ்டீன் பேப்பர், மின் புத்தகங்கள்னு எல்லாமே இருக்கு, புக்மார்க் பண்ண வேண்டிய, நிறைய பேருக்கு பகிர வேண்டிய தளம் இது, இந்த தளத்த ஹரிக்குமார்னு ஒருத்தர் நடத்துறார், அவரும் ஐ.ஏ.எஸ்ஸா இருப்பார்னு நினைக்கிறேன், இங்கிலீஸ்லயும் பிளாக் இருக்கு.//
  நல்ல தகவல்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!