Friday, February 24, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - உயிர் வலிக்குது சாரு !!!டிரெய்லர பார்த்து படத்துக்கு போய் பல்ப் வாங்குனவங்கள்ல நானும் ஒருத்தன், டிரெய்லர் நல்லா இருந்தா படம் நல்லா இருக்காது, படம் நல்லா இருந்தா டிரெய்லர் நல்லா பண்ண மாட்டாங்க போல

காதல் படம்னாலே படம் பார்க்குறவங்களுக்கும் கொஞ்சமாவது லவ் பீலீங் வரணும், அப்படி கொஞ்சமே கொஞ்சம் வந்துட்டாலே படம் ஆவரேஜ் கேட்டகிரில பாஸ் ஆகிடும், கூடவே கொஞ்சம் பாட்டும் கேட்கர மாதிரி இருந்ததுன்னா அது போதும், உதாரணத்துக்கு காதலில் விழுந்தேன் மாதிரி

இந்த படத்துல கதையும் இல்ல, காதலும் இல்ல, லவ் படம், சைக்கோ திரில்லர் அப்படி இப்படின்னு வெறுமனே பில்ட் அப் விட்டா மட்டும் போதுமா பாஸ்? கொஞ்சமாவது படம் பார்க்குற மாதிரி எடுக்க வேணாமா? இப்ப வர சீரியல்கள்ளயே வருச கணக்கா இழுக்கற அளவுக்கு திறமைசாலியா டைரக்டர்கள் இருக்கற போது, இரண்டறை மணி நேர படத்த சுவாரஸ்சமா சொல்ல வேண்டாமா?


படத்தோட கதைய என்னன்னு சொல்ல? ஏதோ சாப்ட்டுவேர் கம்பனீங்கறாங்க, அங்க அதர்வா அப்பாடாக்கராம், அமலா பால் அவர விட பெரிய அப்பாடாக்கராம், இரண்டு பேரும் ஒருகாலத்துல லவ் பண்ண மாதிரி இருந்துச்சாம், அப்புறம் அமலா பால் மட்டும் எஸ்கேப்பாம், ஆனாலும் அதர்வா லவ் கண்டினீயூவாம், அதுக்கு என்ன காரணம், கருமம்னு ஒரு இரண்டறை மணி நேரம் அவங்கனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அடிச்சு காய போட்டுட்டாங்கப்பா

படத்துல ஆறுதலான ஒரே விஷயம், பிளாஸ்பேக் அம்மா செண்டிமெண்ட் காட்சிகள்தான், ஆனாலும் பிளாஸ்பேக் பாட்டே பதினைஞ்சு நிமிசம் தாண்டி ஓடுறது கொஞ்சம் ஓவர் பாஸ்.

இதுக்கு இடையில அதர்வா மூஞ்சில பெயிண்ட வேற அடிச்சு சும்மா அந்தபக்கம் இந்த பக்கம் பறக்க விடறாங்க, கேட்டா ஃபைட்டாம், ம்ஹூம், என்னத்த சொல்ல? அமலா பால கொன்னுருவேன்னு சொல்லிட்டு போற வில்லனுங்க அதர்வாவ பார்க்குறதே இல்ல, அப்புறம் என்னாத்துக்கு இந்த பெயிண்டிங், கியிண்டிங் எல்லாம்னு புரியல

அப்புறம் டிவில பேட்டிக்கு வந்த அதர்வா சொன்னாரு, படத்துல வர டயலாக்குக எல்லாம் மீனிங் புல் டயலாக்குகளாம், அத என்னான்னு நீங்களே கேளுங்க, மொட்ட காட்டுக்கு நடுவுல நின்னுகிட்டு கட்டிபிடிச்சிட்டு ”மரணமே இல்லாத இடத்துக்கு வந்துட்ட மாதிரி இருக்கு சாரு”ன்னு சொல்றதும், கல்யாணத்துக்கு எங்கப்பன கூட்டிட்டு வந்துடறேன், அதுவரைக்கும் இங்கயே வெயிட் பண்ணுன்னு அமலா பால் சொன்னதும், அதர்வா சொல்லுவாரு பாருங்க ஒரு டயலாக் “ உயிர் வலிக்குது சாரு” அடேய் இங்க எனக்கு உயிரே போற மாதிரி இருக்குடா கொய்யாலே, சாவடிக்கிறானேன்னு முன்னாடி இருந்தவங்க எல்லாம் கத்துறாங்கப்பா


அப்புறம் கிளைமேக்ஸ் இரண்டு வெள்ளக்காரனுங்க வந்து எங்க பிரண்ட எங்ககிட்ட இருந்து பிரிக்க பாக்கிறியான்னு அமலா பால கொல்ல வரானுங்க, அப்புறம் என்ன #%$த்துக்கு நிச்சயதார்த்தம் பண்ணுனாண்டா உங்க பிரண்டுன்னு நம்மாளுங்க தியேட்டருல உக்கார்ந்து கத்துதுங்க

அப்புறம் அமலா பால பத்தி சொல்லியே ஆகணும், மிச்சம் மீதி இருந்த சிந்து சமவெளி நாகரீகத்தயும் இந்த படத்துல காட்டிட்டாங்க, அதுலயும் ரொமான்ஸ் சீன்ல எல்லாம் சன்னி லியோன் மாதிரி ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்கறாங்க பாருங்க, சான்சே இல்லை, கொடுமைடா சாமி (இதுக்காக யாரும் படம் பார்க்க முயற்சி பண்ணுனா அப்புறம் கம்பனி பொறுப்பேத்துக்காது)


படத்தோட டைரக்டர் இத்தன நாளா புரொடியூசரா இருந்தவராம், நாமளும் படம் எடுத்து பழகலாம்னு நினைச்சு படம் எடுத்திருக்காரு, ஆனா அதுக்கு பலியாடா நம்மள ஆக்குணதுதான் தாங்க முடியல, படத்தோட சீன்கள தனித்தனியா பார்த்தா கூட தாங்க முடியாதுங்கன்னா

முப்பொழுதும் பேசப்பட வேண்டிய படமா வந்திருக்க வேண்டியதுதான், திரைக்கதைன்னா என்னன்னே டைரக்டருக்கு தெரியாததால எல்லாமே கற்பனையா போனது துரதிஷ்டம்தான்.   

Thursday, February 16, 2012

நண்பன், மெரினா, தோனி - சத்தியமா விமர்சனம் இல்லீங்கசமீப காலமா கல்விமுறை, பாடத்திட்டங்கள் மையமா வச்சு நண்பன், மெரினா, தோனின்னு வரிசையா படங்கள் வந்துகிட்டு இருக்குறது நல்லதொரு மாற்றமா தெரியுது, அரசாங்கத்தோட மாற்றமா இல்லாட்டியும் ஒஸ்தி, வெடி, வில்லுல இருந்து இறங்கி நண்பன், மெரினா தோனின்னு தமிழ்சினிமா கொஞ்சம் மாறி இருக்குறதுல சந்தோசம்.

சரி நாமளும்தான் டிகிரி வரைக்கும் படிச்சமே, நமக்கு என்ன ஞாபகம் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்தா ஒன்னுமே ஞாபகத்துல இல்லை, அட்லீஸ்ட் பிரகாஷ்ராஜ் 17*8 எவ்வளவுன்னு கேட்டாரேன்னு அதுவாவது தெரியுதான்னு அதையும் யோசிச்சு பார்த்தேன் அதுவும் தெரியல, அட்லீஸ்ட் நாலாவது வாய்ப்பாடாவது தப்பில்லாம சொல்லலாமான்னு டிரை பண்ணா ப்ச்ச்

என்னத்த சொல்ல???

நாம ஏன் இந்தளவுக்கு வீக்கா இருக்கோம், படிக்கும் போது நல்லாத்தானே படிச்சோம், கிளாஸ் பர்ஸ்ட் எல்லாம் எடுத்தோம் இப்ப எல்லாம் எங்க போச்சுன்னு யோசிச்சு பார்த்தா, படிக்கற காலத்துல என்னைக்கு எதையாவது புரிஞ்சு படிச்சிருக்கோம்? எல்லாமே மனப்பாடம்தான், தமிழ்ல செய்யுள்னாலே மனப்பாட செய்யுள்னுதான் பேரு

டிகிரி படிச்சவங்க, எஞ்சினியரிங் படிச்சவங்க, இன்னும் என்னென்னவெல்லாமோ படிச்சவங்க யாரா இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சு பாருங்க படிச்சது உங்களுக்கு எவ்வளவு ஞாபகம் இருக்குதுன்னு.

ஒன்னாங்கிளாஸ்ல இருந்து அஞ்சாங்கிளாஸ் படிக்கற வரைக்குமாவது அஞ்சு அஞ்சு எவ்வளடா? இந்த விரல்ல அஞ்சு விரல கூட்டிக்கோ அந்த விரல்ல அஞ்சு விரல கூட்டிக்கோ இப்ப எண்ணி சொல்லு எவ்வளவு வருதுன்னு வாத்தியார் சொன்னா, இரண்டு கையயும் கூட்டி பத்துன்னு சொல்ல தெரிஞ்சது.

அந்தளவுக்காவது புரிஞ்சு படிச்சிட்டு இருந்தோம், ஆறாம் கிளாஸ் வந்ததுக்கு அப்புறம் எல்லாமே மனப்பாடம்னு ஆகிப்போச்சு, புக்க எடுத்தியா கடகடன்னு மனப்பாடம் பண்ணுனியா, பரிட்சையில வாந்தி எடுத்தியா, மார்க்கு வாங்கினியா, பர்ஸ்ட் கிளாஸ்ல பாசானியா? இதுதான் படிப்பு, அவ்வளவுதான் படிப்பு.

நீ படிச்ச படிப்பு உனக்கு யூஸ் ஆகுதா? படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சுதா? நீ பில்கேட்ஸ் ஆகிட்டியா? தெருப்பொறுக்கிட்டு இருக்கியா? அதெல்லாம் யாருக்கு வேணும்? படிச்ச காலம் முதலா எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்கா வாங்கிட்டு சுமாரான சம்பளத்துல வேலை பார்க்குறவனும் இருக்கான், சரியா படிப்பு வரலைன்னாலும் பேச்சு திறமை மத்த திறமைன்னு வளர்த்துகிட்டு பெரியாளா ஆனவனும் இருக்கான்.

இங்க யார தப்பு சொல்ல முடியும்? ஆசிரியர்கள் கிடைக்குற பத்து மாசத்துல எல்லா பாடபுக்குகள்ல இருக்குற எல்லா பாடத்தயும் நடத்தணும், டெஸ்டு வைக்கனும், பரீட்சை வைக்கனும், பேப்பர் திருத்தனும், மாணவர்களுக்கும் அதே நிலைமைதான், ஒருத்தருக்கு ஒருத்தர் நீயா? நானா?ன்னு ரன்னிங் ரேஸ் ஓடாத குறைதான்.


நான் காலேஜ்ல படிக்கும் போது, என்னோட புரபசர் சங்கரன் மாஸ்டர் சொல்லுவாறு, டேய் நீங்க பஸ்சுல போகும் போது கூட உட்கார்ந்துகிட்டு வர ஆளுகிட்ட பேச்சு கொடுத்துகிட்டே போகனும்டா, இல்லைன்னா அவன் தூங்கி உன் தோளுல சாஞ்சு உன் சட்டையில சலவா தண்ணி ஊத்திருவான்னு.

அதே மாதிரிதான் படிக்கும்போதும், படிப்பும் முக்கியம்தான் அதேசமயம் உங்கள சுத்தி இருக்குற டிரண்டும் எப்படிபட்டதுன்னு பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி தகுதிய வளர்த்துகிட்டு நடந்துக்க தெரிஞ்சுக்கனும், பஸ்சுல போறதுதான் முக்கியம், பக்கத்துல உட்கார்ந்து இருக்குறவன பத்தி எனக்கென்ன கவலைன்னு நினைச்சா, அதுவே நாளைக்கு உங்களுக்கு ஆப்பா வந்து தண்ணி ஊத்தி விட்டுரும்,

சோ நல்லா படிங்க, மார்க்கு மட்டுமே முக்கியமில்ல, அட மார்க்கு கம்மியா இருந்தாத்தான் இப்ப என்ன? இதர திறமைகளையும் வளர்த்துக்குங்க, வாழ்க்கையில முன்னேறுங்க..!