Friday, February 25, 2011

காதல் நடந்தது என்ன? - அதற்கு பிறகு...


முன்கதை சுருக்கம்
கதையே இல்லை, இதுல எங்கிருந்து முன்கதை சுருக்கம் வேற சொல்றது, சரி இருந்தாலும் சொல்றேன், அதாவது நடந்தது என்னன்னா நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒரு பத்து பதினஞ்சு பிகருகள சைட்டடிச்சிட்டு ஜாலியா திரிஞ்சுகிட்டு இருந்தேன், அப்ப என்னோட நண்பன் ஒருத்தன் ஒரு ஐயரு பொண்ணு என்ன லுக்கு விடுதுன்னு ஏத்தி விட்டுட்டான், நானும் அத நம்பி இருக்குற பொண்ணுங்க எல்லாத்தையும் டீல்ல உட்டுட்டு அந்த ஒரு பொண்ணு பின்னாடி மட்டும் லவ் பண்ணலாம்னு சுத்திகிட்டு இருந்தேன், சும்மா சுத்திகிட்டே இருந்தா எப்படி சரி ஐ லவ் யூ சொல்லி அடுத்த கட்டத்துக்கு போலாம்னு நினைச்சு பேச போனா தம்பின்னு சொல்லிட்டா, இதுதான் முன்கதை சுருக்கம், இந்த பாழா போன கதைய டீடெய்லா படிக்கனும்னா கீழ இருக்குற அஞ்சு லிங்கயும் படிச்சிட்டு வந்துடுங்க


படிக்க விரும்பாதவங்க அப்படியே கண்டினியூ பண்ணுங்க


அவ என்னை பயங்கரமா திட்டிட்டு போயிட்டா
எனக்கு பயங்கர கோவம் வந்தது, இருக்குற கோபமெல்லாம் தலைக்கேறி தலை பயங்கர சூடாகிருச்சு, சரி நம்ம பசங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்னு திரும்பி பார்த்தா இரண்டு பேரையும் காணோம், அவ திட்டுன திட்டுல இரண்டு பேரும் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிட்டானுக,
என்னோட குளோஸ் பிரண்டு ஒருத்தன் மட்டும் ஒரு அரை கிலோ மீட்டருக்கு அந்தப்புறம் நின்னுகிட்டு சிரிச்சுகிட்டு இருந்தான்,
மொட்டையன கண்ணுக்கு எட்டின தூரம் மட்டும் காணல, எனக்கு பயங்கர கோவமா வந்திருச்சி, சும்மா விளையாண்டுகிட்டு இருந்தவன கூப்பிட்டுட்டு வந்து திட்டு வாங்கி வச்சிட்டானுங்க, நான் பாட்டுக்கு பேசாம போய்ட்டு இருந்தேன்,
என் பிரண்டு ஓடி வந்தான், நில்லுடா நில்லு நானும் வரேன்,
நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம், நாந்தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னனல்லடா, தேவையில்லாம கூட்டிட்டு வந்து திட்டு வாங்கி வச்சிட்டீங்களேடா, அதுவுமிலலாம அவ திட்டுனதும் ஓடி வேற போயிட்டீங்க
அது இல்லடா எனக்கு என்ன தெரியும் அவ திட்டுவான்னு, அவ திட்ட ஆரம்பிச்சதும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு, அதான் ஓடிட்டேன்னு சொல்லி மறுபடியும் சிரிச்சான்
மரியாதையா போயிடு, அவன் எங்க போனாண்டா மொட்டையன்?
அவன் நீ திட்டு வாங்க ஆரம்பிச்சதுமே சைக்கிள எடுத்துட்டு ஓடியே போயிட்டாண்டா
அவன் மட்டும் என் கண்ணுல சிக்குனான் செத்தாண்டா நாயி
அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் மொட்டையன நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் பிரண்டு மட்டும் ஒரு தடவை அவன பார்த்தா சொன்னான்
சே இப்படி ஆயிருச்சே, அவ இப்படி சொல்லுவான்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல, மனசு பூராவும் ஒரு ஆற்றாமை புயலா ஓடிட்டு இருந்தது, தனியா புலம்பிட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்
என் பிரண்டு என்னை பார்த்து சிரிச்சுகிட்டே இருந்தான்
டேய் மூடிட்டு வாடா, இன்னொரு தடவை சிரிச்சே, காதோட அப்பிருவேன்
கிழிப்ப, பேச தெரியாம பேசி திட்டு வாங்கிட்டு என்னை சொல்றியா?
நானா போய் பேசறேன்னு சொன்னேன், நீங்க ரெண்டு பேருதாண்டா என்னை கூட்டிட்டு போய் சிக்க வச்சிட்டீங்க
ஆமா எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு, நீதாண்டா அவ கூட பேசினேன், சிரிச்சேன்னு பீலா உட்டுகிட்டு இருந்தே
நான் எதுக்குடா பொய் சொல்லனும் உண்மையிலேயே அவகூட இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை பேசி இருக்கேன், நல்லாத்தான் பேசினா
அப்ப எதுக்கு இப்ப திட்டிட்டு போனா?
தெரியலியேடா, சே எப்படி எல்லாம் லவ் பண்ணேன் அவள, இப்படி சொல்லிட்டாளே
சரி விடுடா, இந்த பொண்ணுங்களே இப்படித்தான், சரக்கு அடிச்சா சரியாகிரும், வா போய் சரக்கு அடிக்கலாம்னான்
எனக்கு வேணாம்டா, நாந்தான் சரக்கு அடிக்க மாட்டேனுல்ல
சரி விடு அப்ப புண்பட்ட மனதை புகைய விட்டு ஆத்தலாம், தம்மடிக்கலாமா
அப்ப எனக்கும் நிறைய சினிமா பார்த்து தம்மடிக்கனும்னு ஒரு ஆசை இருந்தது, ஆனாலும் வீட்டுக்கு தெரிஞ்சுருமோன்னு பயந்துட்டு வேணாம்னு இருந்தேன், ஆனா அப்ப ஏதாவது பண்ணனும் போல இருந்தது, அதனால சரின்னு சொன்னேன்

அவனும் நம்ம அண்ணாச்சி கடைக்கு போனான், அண்ணாச்சி கடை கல்லா பெட்டி மேல சிகரட் பாக்கெட்டெல்லாம் அடுக்கி வச்சிருப்பாரு, கையில காசு இல்லாததால, ஒரு ரூபாய்க்கு ஏதோ வாங்கிட்டு, ஒரு பாக்கெட் வில்ஸ்ஸ சுட்டுட்டு வந்துட்டான்
அந்த சிகரட்ட அடிக்கறதுக்காக, எங்க ஊரு இரங்காட்டுக்குள்ள போய் யாருமே இல்லாத இடமா பார்த்து உட்கார்ந்தோம்

அந்த பாக்கட்டுல ஒன்பது சிகரெட் இருந்தது, ஒன்ன அண்ணாச்சி வித்துட்டாரு, முத முதலா சிகரெட் பத்த வச்சு கொடுத்தான் என் நண்பன், அத வாங்கி குடிக்க தெரியாம குடிச்சு ஒரே இருமலா வந்தது
எனக்கு வேணாம்டா, என்னால முடியல, தொண்டை எல்லாம் எரியுது
டேய் முதல்ல அப்படித்தான் இருக்கும், உன்னை திட்டுனாலுல்ல அவள பழி வாங்கனும், அவள நினைச்சுட்டு இழுடா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்னு சொன்னான்
நானும் அவள நினைச்சுகிட்டே ஆட்டோகிராப் சேரன் மாதிரி நினைவுகள் நெஞ்சினில் ரேஞ்சுக்கு பாட்டு பாடாம தம்மடிக்க ஆரம்பிச்சேன், அப்படியே லைனா நான் நாலு, அவன் அஞ்சுன்னு மொத்த சிகரெட்டயும் குடிச்சு முடிச்சோம்
சரி கிளம்பலாம்னு நினைச்சு கிளம்பும் போதுதான் ஞாபகம் வந்தது, ஆகா இவன் சாயங்காலம் நம்ம ஊர் பசங்களோட சேர்ந்து தண்ணியடிப்பானே, அவங்ககிட்ட சொன்னா போச்சே, நம்மள கிண்டல் பண்ணி ஒருவழி பண்ணிடுவானுங்களேன்னு
டேய் நடந்த விசயம் யாருக்கும் தெரிய கூடாது, முக்கியமா நம்ம பசங்க யார்கிட்டயும் சொல்லிடாத, மானத்தை கெடுத்துடுவானுங்க, அதுவுமில்லாம பிரச்சனை பண்ணிடுவானுங்க
டேய் நான் எதுக்குடா சொல்ல போறேன், சத்தியமா யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னான்
நானும் நம்பிட்டேன்

ஆனா அவன் எப்ப நான் சொன்னத கேட்டுருக்கான்? அப்ப எனக்கு தெரியாது அடுத்து என்ன நடக்க போகுதுங்கறது,
அப்படி என்ன நடந்ததுன்னா? ....

தொடரும்...

Monday, February 21, 2011

கமர்சியல் பக்கங்கள் - 21/02/2011தமிழீல தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மாள் அவர்களின் மறைவிற்கும், 1000 பாடல்களுக்கும் மேல் பாடியும், சிறந்த குணசித்திர நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தும் மக்கள் மனதில் இடம் பிடித்த பிண்ணனி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகள், அன்னார்களது ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டிக் கொள்வோம்அரசியல்

திமுக அரசின் சாதனைகள் அனைத்திலும் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு - இளங்கோவன்

டவுட் : ஸ்பெக்ட்ரமிலுமா????

பெரிய டாக்டர் கருப்பு எம்ஜியார் விஜயகாந்த் (எம்ஜியார் எப்ப கருப்பா இருந்தாருன்னு கேட்காதீங்க)
சின்ன டாக்டர்

திருப்பூருல சில இடங்கள்ல பேனர் பார்த்தேன், டாக்டர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அலைகடலென திரண்டு வாருங்கள் அப்படின்னு, இது என்ன வழக்கமா எல்லா அரசியல்வியாதிகளும் அடிக்கற போஸ்டர்தானேன்னு சொல்றீங்களா? கரக்டுதான், ஆனா இப்ப போஸ்டர் அடிச்சிருக்கறது நம்ம இளையதளபதி விஜய், நாளைக்கு நாகப்பட்டிணத்துல மீனவர்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துறாராம்,
சும்மா சொல்லக்கூடாது ரெண்டு டாக்டர்களும் பண்ணுற கூத்து தாங்க முடியல, இவங்களுக்கு என்ன திடீர் மக்கள் அக்கறைன்னு பார்த்தா பெரிய  டாக்டரோட கல்யாணம் மண்டபத்த இடிச்சிட்டாங்களாம், சின்ன டாக்டருக்கு காவலன் படத்தை வெளியிட முடியாம கரச்சல் கொடுத்தாங்களாம், இதுதாங்க ரெண்டு டாக்டர்களும் அரசியல் பண்ணுறதுக்கு காரணம், என்ன கொடுமைடா இது, தங்களோட சொந்த விசயத்துக்காக மக்களை கொடுமைபடுத்துறது என்ன ஞாயம்னு தெரியல, உண்மையிலேயே மக்கள் மேல அக்கறை இருந்து அரசியலுக்கு வந்தா பரவாயில்லை, இப்படிப்பட்ட காரண காரியத்தோட அரசியல் பண்ணா என்ன நியாயம், இவங்க பின்னாடியும் போற மக்களை சொல்லனும்,
இதுக்கு எல்லா காரணம் என்னன்னு யோசிச்சு பார்த்தா இந்த ரெண்டு டாக்டர்களையும் உருவாக்கின எஸ் ஏ சந்திரசேகரதான் சொல்லனும், இப்படி சும்மா சுத்திகிட்டு இருந்தவங்கள நடிகன் ஆக்கி மக்களை கொலையா கொல்லுறவருக்கு சுறா படத்தயும், எங்கள் ஆசான் படத்துயும் நூறு தடவ போட்டு காட்டனும், அப்பத்தான் புத்தி வரும்.
இன்னும் எத்தனை பேரு மீனவர்கள வச்சி அரசியல் பண்ணுவாங்களோ தெரியல...


மீனவர்களுக்காக போராட்டம்?, கனிமொழி எம்பி திடீர் கைது

வடிவேல் : நல்லா பார்த்துக்கோங்க, நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடிதான்...

கவுண்டர் : யப்பா உலக நடிப்புடா சாமி !!!

மக்கள் : இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு ...........@#%^&*<>


படித்ததில் பிடித்தது

தலைவன் இருக்கின்றான் நிறுத்தம்.... செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்?ஒரு சைகோவும் ஒரு கிறுக்கனும் சேர்ந்தா என்ன ஆகும்? குணா ரெண்டாம் பார்ட் வரும். இப்பவே தல சுத்துதே - தட்ஸ்தமிழ்

இது ஒரு வித்தியாசமான மேட்டர், இந்தக் காலத்துல காதல் எப்படி பண்ணுராங்க அப்படின்னு பாருங்க, சின்ன டாக்டரோட பிரியமானவளே படம் பார்த்திருக்கீங்களா, அக்ரிமெண்ட் அக்ரிமெண்டுன்னு சொல்லிட்டு திரிவாரு, அதே மாதிரிதான் இந்த பொன்ணும் அக்ரிமெண்ட் போடுது அது என்ன அக்ரிமெண்டுன்னு படிச்சி பாருங்க, இப்படி எல்லாம் நடக்குதான்னு ஆச்சரியப்படாம, இதுக்கு உங்களோட தீர்வு என்னன்னு கொஞ்சம் கருத்து சொல்லுங்க


படிச்சிட்டீங்களா, பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சதுன்னு சொல்லாம உண்மையான உங்க மனசுல என்ன தோணுதுங்கறத கொஞ்சம் சொல்லிட்டு போங்க..,

தத்துவம்

சிரிப்பவர்கள் எல்லாரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க கற்றவர்கள்

உனக்கு நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க யாருமே இல்லை

கவிதைகள்

உலகம் ஒரு சுற்றுலா தளம்
நாம் வந்துள்ளது சுற்றுலா பயணம்
திரும்பி செல்வது நிச்சயம்
தேதி மட்டும் ரகசியம்
- தமிழ்

தொட்டியில் மீன்
ரசிக்கத்தான் வருகிறார்கள்
எல்லோரும்
விடுவிக்கும் மனம் யாருக்குமில்லை
நான் நீரில் நீந்துகிறேன்
நீங்கள் அறியாமையில் நீந்துகிறீர்கள்
- சதீஷ் குமார்

நான் வில்பர் சற்குணராஜுக்கு தீவிர ரசிகன் ஆகிட்டேங்க, அவரோட பாட்டெல்லாம் சும்மா பட்டைய கிளப்புது, அருமையான பாடலாசிரியர் இவரை எப்படி கோடம்பாக்கத்துக்காரங்க மிஸ் பண்ணராங்கன்னே தெரியல, கீழ வர பாட்ட கேளுங்களே, அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குது,  அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குது,  சே என்ன ஒரு அருமையான வார்த்தை, அதுவும் அடியே கோரிப்பாளையத்துள ஒரு கடையில சிக்கன் 65 சூப்பரா இருக்குது அப்படிங்கும் போது அவரோட முக பாவனை, உடல் மொழி எல்லாமே சூப்பரா இருக்குது, மிஸ் பண்னிடாதீங்க கண்டிப்பா கேளுங்க, அப்புறம் பாருங்க நீங்களும் பாட ஆரம்பிச்சிடுவீங்க, அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குது,  அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குதுன்னு...நான் பதிவுலகில் வந்த போது ஒரு பத்து பாலோயராவது கிடைப்பாங்களான்னு சந்தேகமா இருந்தது, ஆனா நான் எழுதறதயும் படிச்சு என்னோட பதிவையும் மதிச்சு, எனக்கும் 100 பாலோயர்ஸ் கிடைச்சு இருக்காங்க, உங்க எல்லாருக்கும் குறிப்பா என்னோட 102 பாலோயர்ஸ்க்கும் என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள தெரிவிச்சுக்கிறேன்,
நன்றி, நன்றி, நன்றி 
அன்புடன்
இரவுவானம்

Friday, February 18, 2011

கொஞ்சம் பிளாஸ்பேக் - நடந்தது என்ன?திரும்பி பாருங்க ...


அப்ப எங்க ஊருல ஸ்கூல் எல்லாம் கிடையாது, ஊருக்கு வெளியே ஒரு மாரியம்மன் கோவிலும், பிள்ளையார் கோவிலும் பக்கம் பக்கமா இருக்கும், கோவிலுக்கு பின்னாடி சைடுல ஒரு கிணரும், தொட்டியும் இருக்கும், கிணத்த தாண்டுனா ஓரே சவுக்கு தோப்பா இருக்கும், தொட்டிக்கு இந்தப்புறம் சோளக்காடும், அத தாண்டினா சுடுகாடும் இருந்தது,

பிள்ளைக படிக்கறதுக்கு ஸ்கூல் வேணும்னு மாரியாத்தா கோவிலையும், பிள்ளையார் கோவிலையும் ஸ்கூலா பயன்படுத்திகிட்டு இருந்தாங்க, மாரியாத்தா கோவில்ல ஒண்ணாவதும், பிள்ளையார் கோவில்ல இரண்டாம் வகுப்பும் நடந்துகிட்டு இருந்தது, மூனாம் வகுப்புன்னா பெரிய பசங்க ஆச்சே, அவங்ககளுக்கு மட்டும் கிளாஸ் சவுக்கு தோப்புல நடந்துகிட்டு இருந்தது, இப்ப எல்கேஜி, யூகேஜி, மாதிரி அப்ப அங்கன்வாடி வச்சுருந்தாங்க, சின்ன சின்ன குழந்தைகள எல்லாரும் அங்கன்வாடியில படிச்சிட்டு இருப்பாங்க, அங்கன்வாடில இருக்குற குழந்தைக எல்லாம் 3 வயசுல இருந்து 5 வயசுக்குள்ள இருக்குறதால அவங்களுக்கு மட்டும் ஒரு கட்டிடம் கட்டி வச்சிருந்தாங்க,

அப்ப எனக்கு ஒரு மூணரை வயசு இருக்கும், அப்ப நானும் அந்த அங்கன்வாடி ஸ்கூல்ல தான் படிச்சிட்டு இருந்தேன், படிக்கரதுன்னா இப்ப இருக்குற எல்கேஜி, யூகேஜி மாதிரி படிப்பெல்லாம் கிடையாதுங்க, காலையில அம்மா வீட்டுல எழுப்பி ஸ்கூலுக்கு போடான்னு சொல்லுவாங்க, மாட்டேன் நா போ மாட்டேன்னு அழுகணும், அவங்களும் நாலு சாத்து சாத்தி ரோட்டுல தரதரன்னு இழுத்துட்டு போவாங்க, ஸ்கூலு வரைக்கும் அழுதுகிட்டே போகனும், ஸ்கூலுகிட்ட போனதும், ஒரு தேன் மிட்டாயே, ரப்பர் மிட்டாயோ வாங்கி தருவாங்க, அப்புறம் அழுகைய நிப்பாட்டிக்கணும், அப்புறம் ஸ்கூல்ல விட்டுட்டு அம்மா கிளம்பிடுவாங்க

அப்புறம் ஸ்கூலுக்கு உள்ளே போனதும், நம்மள மாதிரியே நிறைய சில்வண்டு பசங்க, பொண்ணுக மூக்குல சளி வழிய அழுதுகிட்டு இருக்குங்க, அதுங்கள கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தா டைம் பாஸாகிடும், அப்புறம் யாராவது இளிச்சவாய குழந்தைகளா பார்த்து கிள்ளி வைக்கணும், இல்லைன்னா அடிக்கணும், அதுக கீகீகீன்னு அழுகும், அத கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தமுனா டைம் பாஸ் ஆகும், அதுக்குள்ள டீச்சர் வந்து நமக்கும் ரெண்டு அடி கொடுப்பாங்க, அப்புறம் நாமளும் கொஞ்ச நேரம் அழுகணும், அப்புறம் டீச்சருக்கு போரடிச்சா அ ஆ இ ஈ, இல்லைன்னா 1 2 3 4 ஏதாவது சொல்லி அறுப்பாங்க, நாமளும் திருப்பி சொல்லணும், அப்புறம் டீச்சருக்கு போரடிச்சிரும், அவங்களும் போயிருவாங்க

அதுக்குள்ள மத்தியானம் ஆயிரும், லஞ்ச் டைம்ல யானைக்கு உண்டகட்டி கொடுக்கற மாதிரி ஒரு பெரிய உருண்டயான சத்து மாவு கொடுப்பாங்க, அத எங்க ஆரம்பிச்சு எப்படி சாப்பிடுறதுன்னு ஒரு முடிவு பண்ணி கண்ணால, மூக்கால, வாயால, மூஞ்சியால எல்லாம் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆயிரும், அப்புறம் டீச்சர் ஆளுக்கொரு குட்டியூண்டு பாய் கொடுப்பாங்க, அத விரிச்சு படுத்தா சவுக்கு தோப்பு காத்து ஜன்னல் வழியா தாலாட்டும், அப்படியே தூக்கம் பட்டைய கிளப்பும், 3 மணி ஆனதும் டீச்சரு எல்லாரையும் எழுப்பி விட்டுடுவாங்க, 

அப்புறம் எழுந்திருச்சு கூட இருக்கற பசங்க பொண்ணுக கூட ஞாயம் பேசியோ, இல்லை மறுபடியும் கிள்ளி வச்சு சண்டையோ போட்டமுன்னா மறுபடியும் டைம் பாஸாகிரும், அப்புறம் அம்மா வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க, போகும் போது மறுபடியும் அஞ்சு காசு மிட்டாயோ, இல்லை ஜம்பரு மிட்டாய், எழந்த வடை ஏதாவது வாங்கி தருவாங்க, அப்படியே ஜாலியா வீட்டுக்கு போயிரலாம், அப்ப எங்க ஊருல எழவு நடந்தா பொணத்து மேல சில்லரை காசு வீசுவாங்க, நான் அத எல்லாம் பொறுக்கி எடுத்து கடையில கொடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன், 

இப்படியே ஜாலியா போயிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில ஒருநாள் அது நடந்தது, அன்னைக்கு காலையில நாங்க பிசியா சண்டை போட்டுட்டு இருந்த நேரத்துல டீச்சர் வந்தாங்க, எல்லாரும் எழுந்திருச்சி லைனா நில்லுங்க, மாரியாத்தா கோவிலுக்கு லைனா நடந்து போங்கன்னு சொன்னாங்க, எங்களுக்கு எதுவும் புரியலைன்னாலும், எழுந்து லைனா கோயிலுக்கு போக ஆரம்பிச்சோம், கோயிலுக்கு வெளிலயே ஓண்ணாவது, ரெண்டாவது, மூணாவது படிக்கற பசங்களும் லைனா நின்னுகிட்டு இருந்தாங்க, ஒவ்வொருத்தரா கோயிலுக்கு உள்ள போகறதும், வெளில வரும்போது ஆன்னு கத்திகிட்டே அழுதுகிட்டு வரதுமா இருந்துச்சு, எனக்கும் ஒரே பயமா இருந்தது,

இப்படியே மூணு வகுப்பு பசங்களும் உள்ள போய் வந்துட்டாங்க, அடுத்து எங்க வகுப்பு டர்ன், என்னோட நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருத்தரா உள்ள போக ஆரம்பிச்சாங்க, உள்ள போய் இவனுங்க கத்துன கத்துல உள்ள இருக்கற மாரியாத்தாவே பயந்திருப்பாங்க, அப்படி கத்துறானுக, எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல, பயந்துகிட்டே காத்திருந்தேன், அடுத்தது என்னோட டர்ன், உள்ள போனேன், ஒரு டாக்டரு உட்கார்திருந்தாரு, அப்பத்தான் எனக்கு புரிஞ்சது, நமக்கு ஊசி போட போறாங்கன்னு, அதனாலதான் எல்லாரும் கத்தியிருக்கானுங்க 

டாக்டரும் பல்லை காட்டு நாக்க காட்டு மூக்க காட்டுனு சொல்லிட்டே ஊசி எடுக்க போனாரு, சார் சார் வேணாம் சார் விட்டுறுங்க சார்,  எனக்கு ஊசின்னாலே பயம் சார், வலிக்கும் சார், விட்டுறுங்க சார்ன்னு கத்துனேன், கதறுனேன், கெஞ்சுனேன், பயபுள்ள எதுக்கும் மசியல, இதுக்குன்னே ரெண்டு பேர வச்சிருந்தாங்க, அவங்க என்ன அசயாம புடிச்சிகிட்டாங்க, நான் கதற கதற டாக்டர் “சதக்”ன்னு குத்திட்டாரு, அய்யோ, அம்மான்னு கத்திட்டேன், வலியில உயிரே போயிருச்சு, ஒரு அரைமணி நேரம் கேப்பு விடாம அழுதுகிட்டு இருந்தேன், அதுக்குள்ள மத்தியானம் ஆனதால, டாக்டரு சாப்பிட போயிட்டாரு, மீதி இருக்குற பசங்கள டீச்சரும் கிளாசுக்கு போக சொல்லிட்டாங்க, டாக்டரு சாப்பிட்டு வந்து ஊசி போடுவாருன்னு சொன்னாங்க,

அப்புறம் மறுபடியும் டீச்சர் வந்து மிச்சம் மீதி ஊசி போடாம இருந்தவங்கள கூட்டிட்டு போய் அவங்களுக்கும் ஏத்திட்டு வந்தாங்க, அன்னைக்கு புல்லா எங்க கிளாஸ் ரூம் பசங்க எல்லோரும் எழவு வீடு மாதிரி அழுதுகிட்டே இருந்தாங்க, நானும் தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேன், அப்ப என்னோட நண்பண் ஒருத்தன் பேரு மோகன் அவன் மட்டும் அழுகாம சிரிச்சுகிட்டு இருந்தான், ஏண்டா உனக்கு வலிக்கலையான்னு கேட்டேன், அவன் நான் ஊசி போட்டு இருந்தாதான வலிக்கறதுக்கு, நாந்தான் ஊசியே போடலியேன்னு சொன்னான், எப்படிடான்னு கேட்டேன், ஒன்னும் இல்லடா ஊசி போட்டதுக்கு அப்புறம் பஞ்சு கொடுக்கறாங்கல்ல, அது கீழ கிடந்தது, அத எடுத்து கைல வச்சிகிட்டு அழுத மாதிரி நடிச்சேன் விட்டுட்டாங்க அப்படின்னான், எனக்கு ஒரே ஆச்சரியாமா போச்சு, என்ன பண்ரது நம்ம விதி அப்படின்னு சோகமா இருந்தேன், 

சாயங்காலம் அம்மா கூட்டிட்டு போனாங்க, அம்மா நான் இனிமே ஸ்கூலுக்கு போக மாட்டேன், ஊசி போட்றாங்கன்னு சொன்னேன், அம்மா இனிமே போட மாட்டாங்க பயப்படாதன்னு சொன்னாங்க, நான் கேட்கலை, 3 நாளா ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்புடிச்சேன், அப்புறம் அம்மா செமயா மாத்து மாத்துன்னு மாத்தி ஸ்கூல்ல கொண்டு போய் விட்டாங்க, அப்புறம் ஊசி எல்லாம் போடல, மறுபடியும் ஒரு வருசம் ஹேப்பியா இருந்தேன்,

அடுத்த வருசம், மறுபடியும் ஒருநாள், வெள்ளை கோட்டோட டாக்டருங்க, இன்னும் இரண்டு மூணு பேரு எல்லாம் வந்தாங்க, அத நாங்க கிணத்து பக்கம் ஒன்னுக்கு போகும் போதே பார்த்துட்டேன், ஆஹா வந்துட்டாங்கையா, வந்துட்டாங்க, ஊசி போட வந்துட்டாங்கன்னு நம்ம பசங்ககிட்ட போய் சொன்னோம், அப்பவே எல்லாரும் பயந்து நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க, மறுபடியும் அதே மாதிரி டீச்சர் வந்து எல்லாரும் லைனா நில்லுங்க, கோயிலுக்கு கிளம்புங்கன்னாங்க, அப்பவே எல்லாரும் ஆளாளுக்கு, எனக்கு முந்தாநேத்துதான் ஊசி போட்டாங்க, காலையிலதான் ஊசி போட்டாங்க, விட்டுடுங்கன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க, டீச்சரும் இன்னைக்கு ஊசி எல்லாம் போட மாட்டாங்க வெறும் செக்கப்தான்னு கூட்டிட்டு போணாங்க,

தக்காளி போணப்புறம் தான் தெரிஞ்சது, டீச்சரு நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாங்கன்னு, மறுபடியும் அய்யோ அம்மான்னு அபலை குரல் கேட்க ஆரம்பிச்சிருச்சு, நான் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன், டக்குன்னு மோகனோட பழைய ஐடியா ஞாபகம் வந்தது, ஆஹா எவனாவது பஞ்ச கீழ போடுவானான்னு பார்த்துகிட்டே இருந்தேன், தெய்வாதீனமா ஒருத்தன் பஞ்ச கீழ போட்டுட்டு அழுதுகிட்டு இருந்தான், நானும் பாஞ்சு பஞ்ச புடிச்சு, கைல வச்சிகிட்டு எப்படா மத்தியானம் ஆகும்னு காத்துகிட்டு இருந்தேன், மத்தியானம் ஆனதும் மீதி பேரெல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் வாங்கன்னு சொல்லி அனுப்புனாங்க, நானும் சந்தோசமா கிளாசுக்கு திரும்பி வந்துட்டேன்,

மத்தியானமும் டீச்சர் வந்து புள்ள புடிக்கறவங்க மாதிரி புடிச்சிட்டு போய் ஊசி போட்டாங்க, நான் வெற்றிகரமா தப்பிச்சிட்டேன், கைல பஞ்ச வச்சிகிட்டு வராத கன்ணீர வரவழைச்சி அழுதுகிட்டு இருந்தேன், மோகனும் என் பக்கத்துல உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தான், சரி விடுடா டீச்சர்தான் போயிட்டாங்கள்ள, எதுக்கு அழுதுகிட்டு இருக்கற? அழுகைய நிறுத்துடான்னு சொன்னேன், அவன் முன்ன விட வேகமா அழறான், இல்லடா எனக்கு உண்மையிலேயே ஊசி போட்டுட்டாங்கடான்னு, எனக்கு ஆச்சரியா இருந்தாலும் சந்தோசமா இருந்தது, ஹே மாட்டிகிட்டயா நான் உன்னோட டெக்னிக்க யூஸ் பண்ணி தப்பிச்சிட்டேன், எனக்கு ஊசியே போடலியே, தப்பிச்சிட்டனேன்னு சொல்லி சிரிச்சிகிட்டு இருந்தேன்,

அவனுக்கு பயங்கர கோவம், அப்ப பார்த்து டீச்சரு வரவும், டீச்சர் இவன் ஊசியே போடல, பஞ்ச வச்சு ஏமாத்துறான்னு போட்டு கொடுத்துட்டான், எனக்கு அதிர்ச்சியாகிருச்சு, இல்லைங்க டீச்சர், இவன் பொய் சொல்றான், நான் ஊசி போட்டுட்டேன், கை எல்லாம் வீங்கி போச்சுன்னு சொன்னேன், டீச்சர் நம்பவே இல்லை, டேய் மரியாதையா வந்துரு, வந்து ஊசி போட்டுக்கோன்னு சொன்னாங்க, நான் கேட்கவே இல்லை, ஸ்கூலுக்கு உள்ள ஓட்டம் பிடிக்க ஆரம்பிச்சேன், டேய் அவன புடிங்கடான்னு பசங்கள ஏவி விட்டுட்டாங்க, அவனுக இதுதான் சான்சுன்னு என்னை தொறத்த ஆரம்பிச்சானுங்க, நானும் எப்படி எப்படி எல்லாமோ தப்பிக்க முயற்சி பண்னென், அப்பவும் முடியல,கடைசியில நாலஞ்சு பசங்க சேர்ந்து என்னை புடிச்சிட்டாங்க,

சினிமால ரவுடிய போலீசு புடிக்கற மாதிரி என்னை புடிச்சிட்டானுங்க, நானும் திமிறி திமிறி பார்த்தேன், தப்பிக்கவே முடியல, ஒரு நிமிசம் போன வருசம் ஊசி போட்டதை நினைச்சு பார்த்தேன், அப்புறம் என்னோட சக்தியெல்லாம் திரட்டி ஒரே தள்ளு, பசங்க எல்லோரும் சினிமால காட்டுற மாதிரி தெரிச்சி போய் விழுந்தாங்க, அங்கன்வாடி ஸ்கூல் கதவு டாக்டர் வந்ததால ஊசி போட திறந்து வச்சிருந்தாங்க, ஓரே ஓட்டம், ஸ்கூல விட்டு வெளிய வந்து வீட்டை பார்த்து ஓட ஆரம்பிச்சேன், டீச்சரும், மூணாவது பசங்கள விட்டு தொறத்தி பிடிக்க சொன்னாங்க, அவங்களுக்கு என்னோட வீடு தெரியாததால நான் எங்க போனேன்னு தெரியாம திரும்பி போயிட்டாங்க,

வீட்டுக்கு போனதும் எங்க அம்மா நல்லா பூஜை போட்டாங்க, செம அடி, எல்லா அடியும் வாங்கி அழுதனே தவிர மறுபடியும் அங்கன்வாடி பக்கம் தலை வச்சு படுக்கல, அப்புறம் ஒரு வருசம் ஸ்கூலுக்கு போகல, அதுக்குள்ள எங்க ஊருல ஸ்கூல் கட்டி முடிச்சிருந்தாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும், அப்புறம் மாரியாத்தா கோவில்ல, பிள்ளையார் கோவில்ல, சவுக்கு தோப்புல நடந்துகிட்டு இருந்த கிளாஸ் எல்லாத்தையும் புது ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க, சரியா ஒரு வருசம் கழிச்சு என்னோட அஞ்சே முக்கால் வயசுல நான் ஒண்ணாம் கிளாஸ்ல சேர்ந்தேன்....

இப்ப எதுக்காக இந்த பிளாஸ்பேக்குன்னு கேட்குறீங்களா, காரணம் இருக்குது, என்னோட நானும் என் காதலும்கற தொடர் கதையில ஒரு வயசு வித்தியாசத்த காட்டி அந்த பொண்ணு என்ன தம்பின்னு சொல்லிட்டு போயிருச்சுன்னு சொல்லியிருந்தேன், ஆனா எனக்கும், அந்த பொண்ணுக்கும் ஓரே வயசுதான் அப்படிங்கறத சொல்லத்தான் இந்த பதிவு, ஸோ ஏஜ் வித்தியாசம் கிடையாது, அந்த கதைய படிக்காதவங்க கீழ இருக்குற லிங்க்ல போய் படிச்சு பார்த்துகோங்க, 


இதுலயே எல்லா பாகத்தோட லிங்கும் இருக்குது, பதிவுலகத்துக்கு கேப்பு விட்டாதலயும், ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கறதாலயும் பதிவு எழுதவோ, இல்லை மத்த நண்பர்களோட பதிவை படிக்கவோ நேரம் கிடைக்க மாட்டேங்குது, அதனால என்னோட பழைய கதையவே மறுபடியும் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன், குற்றம் நடந்தது என்னங்கற மாதிரி, காதல் தோல்வி - அடுத்தது என்ன நடந்தது அப்படின்னு சொல்ல போறேன், வேற வழி இல்லை கொஞ்சம் பொறுத்துகோங்க, வாரத்துக்கு ஒன்னுதான,
இந்த கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்கு, கண்டிப்பா எழுதுங்கன்னு சொல்லி ஊக்குவிச்ச அண்ணன் எஸ்.கே மற்றும் பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள், ஹி ஹி திட்டனும்னா தாராளமா எஸ்.கே அண்ணன திட்டிக்கோங்க, :-)))))) 

அன்புடன்
இரவுவானம்


Monday, February 14, 2011

வர வர காதல் கசக்குதய்யா ... (A)

இது ஒரு பயங்கர மொக்கையான பதிவு, இந்த பதிவை காதலிப்பவர்கள், காதலிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள், மற்றும் பெண்கள் யாரும் படிக்க வேண்டாம், சில விசயங்கள் 18+ போல இருக்கும், அதனால் பக்கத்தில் எதாவது நல்ல பிளாக்கா போய் நல்ல விசயங்களை படிங்க, மீறி படிச்சிட்டு திட்டாதீங்க !!!


இன்னைக்கு காதலர் தினம்னு சொல்றாங்க..,
காதல்னா என்ன? ஆணும் பொண்ணும் மட்டும் காதலிக்கிறதா இல்லைன்னா எல்லாரும் சொல்ற மாதிரி அப்பா அம்மா, நாய், பூனைக்குட்டி, இப்படி எது மேல எல்லாம் அன்பு பீறிட்டு வருதோ அது எல்லாமே காதல்தானா? இல்ல அட்ராக்சனா? இப்படி அட்ராக்சன் எது காதல் எதுன்னு பிரிச்சி தெரிஞ்சுக்கற அளவுக்கு பக்குவம் வந்திருக்கா? இப்ப காதல்னா என்னன்னு எல்லாருக்கும் முழுசா தெரியுமா? உணர்ந்திருக்காங்களா? இல்லை எது எது எல்லாம் காதல்னு நினைச்சுட்டு இருக்காங்க? இதுதான் என்னுடைய கேள்வி, அதற்கான பதிலை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன், எதுக்குன்னு கேட்குறீங்களா? சும்மா தெரிஞ்சுக்கறதுக்காகத்தான், இப்ப நான் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கிற காதல்கள பத்தி சும்மா கொஞ்சம் ....

என்னோட வீட்டுக்கு பக்கம் ஒரு மளிகை கடை இருக்கு, பசங்க எல்லாரும் எப்பவும் மளிகை கடை பக்கத்துல இருக்கற கம்பி கேட்டுளதான் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம், மளிகை கடை அண்ணாச்சி பலம்பெரும் குடிகாரர், அவருக்கு வாங்கி தந்தா கொஞ்சம் நமக்கும் கிடைக்குமேன்னு பசங்க எல்லாரும் அங்கயேதான் இருப்போம், எங்க வீட்டுக்கு பக்கம் ஒரு பொண்ணு இருந்துச்சு, அந்த பொண்ண கோயம்புத்தூர் காந்திபுரத்துல பார்த்தோம், ஈரோட்டுல பி.எஸ் பார்க்குல பையனோட பார்த்தோம்னு அடிக்கடி பசங்க சொல்லுவாங்க, சரி அது ஏதோ ஒரு பையன லவ் பண்ணுதுன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு.
அப்ப எங்க அண்ணாச்சி முத ல் முறையா ஒரு STD  பூத் ஒன்னு ஓப்பன் பண்ணுனாரு, அப்ப செல்போன் ரொம்ப புழக்கம் இல்லாத டைம்மு, காயின் பாக்சு, எஸ்டிடி பூத்துன்னு ஓடிட்டு இருந்துச்சு, நம்ம பொண்ணு இருக்கே, அதுவும் அங்க போன் பண்ண ஆரம்பிச்சது, டெய்லியும் 3 மணி நேரம் என்ன பேசும்னே தெரியாது, ஒருநாள் ரெண்டு நாள் இல்லை மாசக்கணக்கா மணிக்கணக்கா பேசும், அது பேசுன வேகத்துக்கு மூணே மாசத்துல நம்ம அண்ணாச்சி அட்டன் டைம்ல நாலு காயின் பாக்ஸ் வாங்கி போடற அளவுக்கு வசதி ஆகிட்டாரு, அதுவும் எப்படி நிமிசத்துக்கு 60 செகண்ட்ஸ் நம்ம அண்ணாச்சி காயின் பாக்ஸ் மட்டும்தான்,

எங்கிருந்து வந்தாங்களோ தெரியாது புதுசா நாலு பொண்ணுக வந்தாங்க சாயங்காலம் ஆனா போதும் நம்ம பழைய பொண்ணு எஸ்டிடிக்குள்ள போய் குடியேறிடும், மீதி நாலு பொண்ணுகளும் ஆளுக்கொரு காயின் பாக்ஸ்ஸ புடிச்சுக்குவாங்க, உண்டியல்ல காசு போடற மாதிரி ஒவ்வொன்னா லொட்டு லொட்டு போட்டு பேச ஆரம்பிப்பாளுக, நாங்களும் ஒட்டு கேட்க எவ்வளவோ டிரை பன்ணுவோம், ஹூஹூம் ஒன்னும் கேட்காது, அவளுக பேசுறது ரிசீவர்க்கே கேட்காது, எதுத்தாப்ல இருக்கறவனுக்கு கூட கேட்குமோ என்னவோ, அவங்க ச்சீம்பாங்க இல்லைன்னா சிரிப்பாங்க, நாங்க அதை பார்த்து விவேக் மாதிரி மிமிக்ரி பண்ணி சிரிச்சுக்குவோம், நம்மால வேறென்ன பண்ண முடியும்.
இப்படியே நாலு மாசம் போச்சு, காயின் பாக்ஸ்ல இருந்த மூணு பொண்ணு ஓடிப்போயிருச்சு, நாலாவது பொண்ணு மளிகைகடை பின்னாடி இருந்த பொதருல ஒருத்தனோட கையும் களவுமா பிடிச்சிட்டாங்க, புடிச்சது நம்ம அண்ணாச்சியேதான், அவரு புடிக்க போனது வேற விசயம், புடிக்கறேன்னு சொல்லி அவரும் சில அஜால் குஜால் எல்லாம் பண்ணிட்டாரு, ஏங்க இப்படி பண்ணுனீங்க போதைல அண்ணாச்சி இருக்கறப்ப கேட்டப்பதான் தெரிஞ்சது, அந்த பொண்ணு பேசும் போது நம்ம அண்ணாச்சி ஒட்டு கேட்டு இருக்காருன்னு, அது நாலஞ்சு பசங்கள டீல் பண்ணிட்டு இருந்துருக்கு, அதனால தலைவரும் களத்துல இறங்கி இருக்காருன்னு.

இப்படியே நாலு பொண்ணுங்களும் போக எஸ்டிடி பொண்ணு மட்டும் களத்துலயே இருந்துட்டு இருந்துச்சு, கொஞ்ச நாள் ஆச்சு, முன்ன சிரிப்பும் வெட்கமுமா பேசிட்டு இருந்த பொண்ணு இப்ப ஓரே அழுகைதான் பேசுற மூணு மணி நேரத்தில இரண்டரை மணி நேரமும் ஒரே அழுகைதான், இப்ப டெய்லியும் மணிக்கணக்கா அழ ஆரம்பிச்சிருச்சு, எங்களுக்கு ஒன்னும் புரியல, ஏதோ மேட்டர் ஆகி போச்சுன்னு மட்டும் புரிஞ்சது, அண்ணாச்சியும் ஒட்டு கேட்டுட்டு வந்து அதேதான்னு சொன்னாரு, ஆகா பய கை கழுவ பார்க்கறான்னு தெரிஞ்சு போச்சு, அதுவும் ஒரு மாசம் அழுது பார்த்துச்சு, அப்புறம் கொஞ்ச நாளா ஆளையே காணோம்.

ஒரு மாசம் கழுச்சு பார்த்தா கையில செல்போனோட அது பாட்டுக்கு ரோட்டுல சிரிச்சு பேசிட்டு போகுது, அண்ணாச்சிகிட்ட போய் என்னன்னு கேட்டோம், அவ கழட்டி விட்ட பையன் கூட பீல் பண்ணி இருக்க மாட்டான், இவருஆள் நொந்துட்டாரு, அந்த பொண்ணு ஆள மாத்திடுச்சாம், புது ஆளு பரவாயில்லை,  பழைய ஆள் மாதிரி கிடையாது, உடனே செல்போன வாங்கி கொடுத்திட்டான், பாவம் அண்ணாச்சிக்குதான் வருமானம் போச்சு, அண்ணாச்சி டென்சன் ஆகிட்டாரு, படுபாவி இவள நம்பிதான கடைய வச்சிருந்தேன், இப்படி ஆள மாத்திட்டாளே, இவ அழுது அழுது என்னோட போன் ரிப்பேர் ஆனதுதான் மிச்சம்னு புலம்பிட்டாரு, விடுங்க அண்ணாச்சி இந்த பொண்ணுகளே இப்படித்தான் ஒரு கட்டிங் போட்டா சரியாகிடும்னு சொல்லிட்டு வந்தேன், பாவம் அண்ணாச்சி ஓவரா கட்டிங் வுட்டு இப்ப குடல் வெந்து ஹாஸ்பிட்டல்ல இருக்காரு,

நம்ம பிரண்டு ஒருத்தர் இருக்காரு, அவரோட டெக்னிக்கே தனி, முதல்ல கூட வேலை பார்க்குற பொண்ணுங்க, தெரிஞ்ச பொண்ணுங்க இப்படி கடலை போட ஆரம்பிப்பாரு, அப்புறம் அந்த பொண்ணுங்க கிட்ட கேட்டு அவங்க ரிலேசன் பொன்ணுக இல்லைன்னா பிரண்டுக இப்படி அவங்க நம்பர் வாங்கி கடலை போட ஆரம்பிப்பாரு, கேட்டா பிரண்சிப்ப வளர்க்கறாங்களாம், அடுத்து அந்த பொண்ணுகளோட பிரண்ஸ்சு, ரிலேசனு இப்படி ஒரு அஞ்சாரு ரவுண்டு தாண்டி போய் ஏதாவது ஒரு பொண்ண புடிக்க வேண்டியது, பேசி கரக்ட் பண்ணி எங்கயாவது கூட்டிட்டு போனா மேட்டர் முடிஞ்சது, அப்புறம் ஆள் எஸ்கேப்பாகிடுவாரு, பாதிக்கப்பட்ட பொண்னுககிட்ட அந்த பையன் கூட எப்படி பழக்கம்னு கேட்டா அவங்களே குழம்பிடுவாங்க, யாரு மூலமா காண்டாக்ட் கிடைச்சதுன்னு, இப்படி நிறைய பேரு இருக்காங்க,

இன்னொரு நண்பன், என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன், அவனும் இதே கேட்டகிரிதான் ஆனா வேற மாதிரி மூணு பொண்ணுகள வச்சிருக்கான், இதுல ஒரு பொண்ணு பத்தாவது படிக்குது இவன சின்சியரா லவ் பண்ணுது, மீதி ரெண்டு பொண்ணுக்கும் இவன் மத்த பொண்ணுகளயும் லவ் பண்றது தெரியும், ஆனா அவங்களும் இத கண்டுக்கரதில்லை, ஏன்னா அவங்களும் இவனை கழட்டிவிடத்தான போறாங்க, இல்லைன்னா இவன் அவங்கள கழட்டிவிட போறான் அவ்வளவுதான், இப்ப அவனுக்கு வீட்டுல தீவிரமா பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க, கூடிய சீக்கிரம் மூணு பேர்க்கும் அல்வா புஜ்ஜி அல்வா,
சினிமா பார்த்து கெட்டு போறாங்க, சினிமா பார்த்து கெட்டு போறாங்கன்னு சும்மாவா சொல்றாங்க, இங்க ஒரு லிங்க் தரேன் போய் பார்த்துட்டு வாங்க, லிங்க் 18+ அல்ல, ஆனா லிங்க் அடுத்து வரது எல்லாம் 18+ ஆ இருக்கும், அதனால லிங்க்க மட்டும் கேட்டுட்டு வந்துடுங்க, மத்தத கேட்டீங்கன்னா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்,

http://www.youtube.com/watch?v=mqwI-HAmUg4

முன்ன எல்லாம் லவ் பண்ணா காண்டாக்ட் பண்ண வழி இருக்காது, இப்ப செல்போனு, இண்டர்நெட்டுன்னு வந்ததுக்கு அப்புறம் சும்மா கொடி கட்டி பறக்குது சார் பலபேரோட மானம் நெட்டுல பார்க்குறோமுல்ல, அதுல எத்தனை பேருக்கு தெரியுமோ தன்னோட மானம் நெட்டுல போயிருச்சுன்னு, தெரிஞ்சு எத்தனை பேரு செத்தாங்கலோ யாருக்கு தெரியும்? இனி 3ஜி வேற வந்திருச்சு, சொல்லவே வேணோம், சாதரண கேமரா மொபைல வச்சே ஸ்காண்டலு, எம் எம் எஸ்னு ஓடிட்டு இருக்கு இப்ப வீடியோ கால் வேற, என்னன்ன கொடுமை எல்லாம் நடக்க போகுதோ,

முதல்ல கல்யாணம் பண்ணிட்டு இன்பமடைஞ்சாங்க, அப்புறம் போன் வந்ததுக்கு அப்புறம் போன்ல செக்ஸ் மேட்டர் பேசி கிளுகிளுப்படைய ஆரம்பிச்சாங்க, அப்புறம் இண்டநெட்டு, சாட்டிங்கு அப்படின்னு கிளுகிளுப்படைய ஆரம்பிச்சாங்க, இப்ப பொழுதன்னைக்கும் எஸ் எம் எஸ் கார்டு போட்டு எஸ் எம் எஸ் மூலம் மேசேஜ் அனுப்ப ஆரம்பிச்சிருக்காங்க, இது என்ன மனவியாதியா என்னன்னு எஸ்.கே சார்தான் விளக்கனும்

முன்னயெல்லாம் லவ் பண்றதுனா சாமி குத்தம் மாதிரி இருந்தது ஒருகாலம், அப்ப எனக்கு தெரிஞ்சு அம்மா அப்பா இல்லாத பொண்ணுக, யாரோட ஆதரவும் இல்லாதவங்க, இப்படிப்பட்டவங்கதான் காதல்ல விழுவாங்க, காதலிப்பாங்க ஆனா இப்ப பாய் பிரண்டு, கேர்ள் பிரண்டு வச்சிருக்கறது பேசனாகி போச்சு,
புருசன் பொண்டாட்டி மாதிரி பிகேவ் பண்ராங்க, போன்ல மணிக்கணக்கா செக்ஸ் மேட்டர் பேசறாங்க, பைக்ல ஊர் ஊரா சுத்துறாங்க, எல்லாமே பண்ணறாங்க ஆனா லவ் பண்றோம்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க கேட்டா ஐஸ்ட் பிரண்டுகிறாங்க, இது எல்லாத்தையுமே பிரண்ட்சிப்புகுள்ள அடக்கிடுறாங்க, ரொம்ப உசாரா இருக்காங்கப்பா, லவ் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாதான் தப்பாம், பிரண்ட்சிப்புன்னு சொல்லிட்டு பண்ணினா தப்பில்லையாம், என்ன கொடுமை சார் இது? அப்ப ந்ட்புன்னா என்ன? அப்படின்னு யாராவது சொன்னா தேவலை.

ஒரு பொண்ணுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க்றது, கிப்ட் கொடுக்க்றது, அவங்களுக்கு தேவையானது எல்லாம் செய்றது, டிரஸ் வாங்கி கொடுக்கறது, போன் வாங்கி கொடுக்கறது, ரீசார்ஜ் பண்ணி கொடுக்க்றது, காத்திருந்து பைக்ல டிராப் பண்றது இப்படி எல்லாம் ஒரு பையன் வந்து பண்ணி கொடுக்கறானே அது எதுக்காக அவனோட எதிர்பார்ப்பு என்னன்னுஅந்த பொண்ணுக்கு தெரியாமலா இருக்கும்?,  அதே மாதிரிதான் பொண்ணுகளும் பிரண்ட்ஸ்சிப் பிரண்ட்ஸ்சிப்புன்னு நிறைய பசங்களோட பழகறது, மிஸ்பிகேவ் பண்றது, முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்.

தாங்க சைட் அடிக்கறதுக்கு, கூட்டிட்டு சுத்தறதுக்கு அழகழகான பொண்ணுங்க வேணும், மாடர்ன் பொண்ணுக வேணும்னு நினைக்கறவங்க எல்லாரோட எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்னு பார்த்தா அவங்க கல்யாணம் பன்னிக்க போற பையனோ பொண்ணோ மட்டும் ஒழுக்கமா இருக்கனுமாம், ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு நல்லவங்களா இருக்கனுமாம், ஒன்னு தெரிஞ்சுக்கனும், இங்க ஒழுக்கம் கெட்டு சுத்தறவங்க யாரா இருந்தாலும் சரி ஆணோ பொண்னோ அவங்களுக்கு வரவங்க மட்டும் ஒழுக்கமா இருப்பாங்கன்னு நினைக்காதீங்க, கண்டிப்பா ஒழுக்கம் கெட்டதாதான் இருக்கும்,

 வெள்ளைக்காரன் அப்படி பண்ணான் வெள்ளைக்காரன் இப்படி பண்ணான்னு மேற்கத்திய கலாச்சாரத்த தப்பு சொல்றமே, அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான், இங்கதான் பொண்டாட்டி இருக்கறப்பவே மனைவி, வப்பாட்டி, துணைவின்னுட்டு கெடக்கறாங்க,

எப்படி வேணாலும் வாழலாம்னு நினைச்சு வாழ்ந்தா சரியா இருக்குமா இல்லை இப்படித்தான் வாழனும்னு நினைச்சு வாழ்ந்தா சரியா இருக்குமா, ஏனெனில் தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம், பல சமுதாயங்கள் சேர்ந்ததுதான் ஊர் நாடு இத்யாதி போன்றவை, எனவே தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் பிரதிபலிக்கும், தனி மனித ஒழுக்கம்கறது தானா வராது, பிறப்பு வளர்ப்புலதான் வரும், குறைந்தபட்சம் நல்லது கெட்டது உணர்ந்து நமக்கு என்ன தேவை அப்படின்னாவது உணர்ந்து இருக்கனும், ஆணோ பொண்ணோ நமக்கு தேவை ஒரு துணை, அது யார் என்பதை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் மட்டும் போதுமானது, மற்றபடி தெரிந்தே தவறு செய்வது நல்லதல்ல, இறைவனின் சன்னிதானத்தில் எல்லாவற்றுக்கும் மன்னிப்பு கிடைக்கும் அது தெரியாமல் செய்த தவறுக்கு மட்டுமே, தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது, தண்டனை மட்டுமே.

இது காதலிப்பவர்கள் யாரையும் குறிப்பிட்டு எழுதியது அல்ல, இப்படித்தான் எல்லா காதலர்களும் செய்கிறார்கள் என்று கூறுவதும் அல்ல, சில காதல்களை கண்டதால் எழுதியது, ரொம்ப நாளாக எழுத நினைத்தது, மற்றபடி உண்மைகாதலுக்கு நான் என்றும் ஷாஜகான் விஜய்தான், ஆனால் என்ன செய்வது அதை காண்பது அரிதாகவே உள்ளது, இங்கு நல்ல காதலை விட கள்ளக்காதலுக்குதான் வலிமை அதிகமாக உள்ளது!

ஓகே ரொம்ப அறுத்துட்டேன்னு நினைக்கிறேன், அதனாலை கீழ்வரும் பாடலை உண்மைக்காதலர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், மத்தபடி என்னை திட்டனும்னு நினைக்கறவங்க தாராளமா திட்டிட்டு போலாம், நன்றி ....Thursday, February 10, 2011

ஐயம் கம் பேக் ...


இரண்டு வாரங்களாக பிளாக்கிற்கு வரமுடியவில்லை, உடல் நல பிரச்சனை, என்ன ஏதென்று தெரியாமல் ஒரு டாக்டரை பார்த்து எதேச்சையாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செஞ்சு பார்த்தா சிறுநீரககல் பிரச்சனைன்னு தெரிய வந்தது, ஏற்கனெவே இருந்த பல பிரச்சனைகளுக்கு நடுவில் புதுசா இன்னொன்னு, அந்த டாக்டரே திருப்பூரில் ஒரு பிரபல(?) டாக்டரை சிபாரிசு செஞ்சாரு, மறக்காம நாளைக்கு டாக்டரை போய் பாருங்க, நான் ஒரு லெட்டர் தரேன், டாக்டரை பார்த்துட்டு அடுத்த நாள் என்கிட்ட வந்து சொல்லனும்னு சொன்னாரு, நானும் சரின்னு லெட்டர வாங்கிட்டு கிளம்பி வந்துட்டேன், அடுத்த நாள் திருப்பூருல பந்து நடந்தது, எங்க கம்பெனியும் லீவு விட்டுட்டாங்க, சரி காலையிலேயே போய் டாக்டர பார்த்துரலாம்னு கிளம்பினேன், அந்த ஹாஸ்பிட்டல் போய் சேர்ந்தேன், நல்ல பெரிய ஹாஸ்பிட்டல், ரொம்ப விஸ்தாரமா கட்டி இருந்தாங்க, இதுக்கு முன்னாடி அந்த ஹாஸ்பிட்டல நான் அங்க பார்த்ததே இல்லை, சரி புதுசு போல இருக்குன்னு மனசுல நினைச்சுகிட்டு உள்ளே போனேன், 

நிறைய பெட்டுக இருந்தது, ரெண்டு மூணு கேபினு, ஸ்கேன் பண்ர மிசினு எல்லாம் இருந்தது, ஆனா காலியா இருந்தது, யாரையுமே காணோம், எல்லாரும் எங்க போயிட்டாங்கன்னு யோசிச்சுட்டு இருந்த போதோ எங்கயோ இருந்து ஒரு வயசான லேடி வந்தாங்க, அவங்ககிட்ட நான் டாக்டர பார்க்கனும்னு சொன்னேன், அதுக்கு அவங்க நீங்களா வந்தீங்களா இல்லை வேற டாக்டரு யாராச்சும் ரெபர் பண்ணினாங்களான்னு கேட்டாங்க, இல்லைங்க இந்த டாக்டருதான் ரெபர் பண்ணாருன்னு லெட்டர காமிச்சேன், 

சரிங்க டாக்டரு மத்தியானம் ரெண்டு மணிக்கு மேலதான் வருவாரு, நீங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போயிருங்க, கரக்டா ரெண்டு மணிக்கு வந்திருங்கன்னு சொன்னாங்க, அடேங்கப்பா யாருமே இல்லைன்னு நினைச்சோம், அப்பாயிண்ட்மெண்ட்டெல்லாம் வாங்கனும்னு சொல்றாங்க ஒரு வேளை மதியம் பயங்கர கூட்டமா இருக்கும்போலன்னு நினைச்சுகிட்டேன், சரி எனக்கு ஒரு அப்பாயிண்ட்மென்ட் கொடுங்கன்னு கேட்டேன், அதுக்கு அவங்களும் சரி நான் உங்க பேர நோட் பண்ணிக்கிறேன், நீங்க வந்ததும் டாக்டர நேரா போய் பார்த்துகலாம்னு சொன்னாங்க, சரின்னு நானும் கிளம்பி வந்துட்டேன்,

மதியம் ரெண்டு மணிக்கு கூட்டம் வந்திருச்சுன்னா என்ன பண்றது அதனால முன்னாடியே போயிரலாம்னு நினைச்சு ஒன்னரை மணிக்கே போய் சேர்ந்துட்டேன், அப்பவும் போய் பார்த்தா வழக்கம் போலவே யாரையும் காணோம், அலோ யாராவது இருக்கீங்களான்னு சத்தம் போடலாம்னு நினைச்சப்ப திடீர்னு ஒரு கதவு தொறந்து புதுசா ஒரு பொம்பளை வந்தாங்க, யாரு நீங்க என்ன வேணும்னு கேட்டாங்க, நான் வந்துன்னு ஆரம்பிச்சு நடந்தத சொல்லி முடிச்சேன், சரி வெயிட் பண்ணுங்க டாக்டர் உள்ள பிசியா இருக்காரு, கூப்பிடுறேன்னு சொன்னாங்க, சரின்னு நானும் வெயிட் பண்ணினேன், ஒரு பத்து நிமிசம் ஆச்சு, வாங்க டாக்டர் கூப்பிடுராருன்னு சொன்னாங்க, 

உள்ளே போனேன், டாக்டர் உட்காந்து டிவி பார்த்துட்டு இருந்தாரு, உட்கார சொன்னாரு, காலையில பார்த்த பொம்பளையும், இப்ப பார்த்த பொம்பளையும் எனக்கு ரெண்டு பக்கத்துலயும் பாடிகார்ட் மாதிரி நின்னுகிட்டு இருந்தாங்க, டாக்டர் ஒரு அஞ்சு நிமிசம் டிவி பார்த்தாரு, அப்புறம் திரும்பி என்ன பிரச்சனைன்னு கேட்டாரு, நானும் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் எல்லாத்தையும் ஒப்பிச்சேன், பழைய டாக்டரு எழுதி கொடுத்த ரிப்போர்ட்டையும் கொடுத்தேன், அத வாங்கி பார்த்த டாக்டரு ஒன்னும் சொல்லாம மறுபடியும் திரும்பி டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, இது என்னடா கொடுமைன்னு நினைச்சாலும் ஒன்னும் சொல்லாம நானும் அமைதியா உட்கார்ந்துகிட்டு இருந்தேன், மறுபடியும் ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சி திரும்பினாரு,

ஒரு வெள்ளை பேப்பரு எடுத்து ரெண்டு அவரைக்காய் படம் வரைஞ்சு குழாய் எல்லாம் போட்டு இதுக்கு பேருதான் சிறுநீரகம்ன்னு சொன்னாரு, நானும் சரிங்க டாக்டர்ன்னேன், இந்த குழாய்ல ஒரு கல்லு வந்து அடச்சுகிட்டு இருக்கு, அதனால யூரின் எல்லாம் சிறுநிர்பைக்கு போக முடியாம தேங்கி நிக்குது, அதனால இந்த ஒரு சைட்ல கிட்னி பெரிசாகிரிச்சு, அதனாலதான் உங்களுக்கு வலிக்குது அப்படின்னு சொன்னாரு, சொல்லிட்டு மறுபடியும் டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாரு,

மறுபடியும் ஒரு அஞ்சு நிமிசம், திரும்பி எங்க விட்டேன்னு கேட்டாரு, கிட்னி பெரிசானதுல விட்டீங்க டாக்டர்னேன், ஆங் கரக்ட், இப்ப என்ன பண்ணனும்னாஅந்த கல்லு வெளிய வரவைக்கனும் கல்லு சின்ன கல்லுதான் ஒன்னும் பிரச்சனையில்ல, மாத்திரையிலேயே சரி பன்ணிரலாம்னாரு, நானும் நன்றி டாக்டர் மாத்திரை எழுதி கொடுங்கன்னு கேட்டேன், இருப்பா அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி, அந்த மாத்திரை பதினஞ்சு நாளைக்கு எழுதி தரேன், அது என்ன பண்ணும்னா சிறுநீர்குழாய பெரிசு பண்ணும் அப்ப அந்த கல்லு கீழ வந்திரும், ஆனா பயங்கரமா வலிக்கும், நீ பெயின தாங்கிதான் ஆகனும்னு சொன்னாரு, 

ஆகா இதுவேறயா மனசில நினைச்சுகிட்டே டாக்டர பார்த்தேன், அவரு டிவிய பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, சரி இனி அஞ்சு நிமிசம் கழிச்சுதான அவரு திரும்புவாரு ஏற்கனெவே வாழ்க்கையில பலபிரச்சனை இனி இத வேற எப்படி சமாளிக்க போரேன்னு தெரியலயே, கைல காசு வேற இல்லன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதே டாக்டரு திரும்புனாரு, நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது, ஒன்னும் கவலைபடாதீங்க, எண்டோஸ்கோப்பிக் அப்படினு ஒரு டிரீட்மெண்ட் இருக்குது, யூரின் டியூப் வழியா அத விட்டு ஈசியா கல்லை எடுத்திரலாம், வலியே இருக்காது, ரெண்டு நாள்ல சரியாகிரும், ஒரு பதினைஞ்சாயிரம் செலவாகும் என்ன சொல்றீங்க அப்படின்னாரு,

ஆகா ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க, இல்ல டாக்டர் கையில பணம் இல்லை கொஞ்சம் டைட்டு, எனக்கு மாத்திரையே கொடுங்க நான் வலி தாங்கிக்கிறேன்னு சொன்னேன், அவரும் சரி நோ பிராப்ளம், 15 நாளுக்கு மாத்திரை தரேன், சாப்பிடுங்க சரியாகலன்ன எண்டோஸ்கோப்பிக் பண்ணிக்கலாம், நீங்க வெளில வெயிட் பண்னுங்க சிஸ்டர் மாத்திரை கொண்டு வந்து தருவாங்க, என்னோட பீஸ் 200 ரூபான்னாரு, அடப்பாவி நீ டிவி பார்த்ததுக்கு நான் 200 ரூபா தரணுமாடான்னு மனசுல நினச்சுகிட்டாலும் என்ன பண்ரது நானும் சரி டாக்டர்ன்னு வெளில வந்திட்டேன், 

ஒரு கால்மணி நேரம் கழிச்சு அந்த சிஸ்டர் வந்தாங்க, மாத்திரையை கொடுத்தாங்க, டாக்டர் பீஸ் 200 ரூபா, மாத்திரை 100 ரூபா, ரிஜிஸ்ரேசன் பீஸ் 50 ரூபா மொத்தம் 350 கொடுங்கன்னு கேட்டாங்க, எல்லாம் என் நேர கொடுமைன்னு பணம் கொடுத்தேன், அப்புறம் பில் போடும் போது அந்த பொம்பளை கேட்டுச்சு மெடிசின்னு பில்லுல எழுதனும், MEDECINE எழுதணுமா இல்லை MEDICENE எழுதணுமான்னு கேட்டுச்சு, எனக்கு வந்த ஆத்திரத்துக்கு செவுனியோட நாலு அப்பு அப்பனும்னு தோணுச்சு, இருந்தாலும் கோபத்த அடக்கிட்டு சாரிங்க எனக்கு எழுத படிக்க தெரியாதுங்கன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன்,  

வீட்டுக்கு வர வழியில எல்லாம் யோசிச்சிட்டே வந்தேன், இந்த மாத்திரைய சாப்பிடலாமா வேணாமா, குழாய் வேற பெரிசாகிரும்னு சொன்னாரே, அப்புறம் சிருசாகுறதுக்கு மறுபடியும் மாத்திரை கொடுப்பாங்களோ என்னவோ, இல்லை எண்டாஸ்கோபிக் பண்றதா ஒன்னுமே புரியலை, மண்டைய பிச்சிகிட்டு வந்தது, சரின்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன், ஒரு போன் வந்தது,

நம்ம தேவியர் இல்லை ஜோதிஜி சார் போன் பன்ணினாரு, அவரோட கட்டுரை புதிய தலைமுறைல வந்திருக்கு அவரு வெளில இருக்குறதால புக்கு வாங்க முடியல, வாங்கிட்டு கூப்பிடுனாரு, இல்ல சார், எனக்கு உடம்பு சரியில்ல, இந்த இந்தமாதிரி ஆகிப்போச்சு, இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்னேன், அப்படியா உடம்ப பார்த்துக்கப்பா, ஆமா எந்த ஆஸ்பத்திரி போன டாக்டர் எப்படின்னு கேட்டாரு, தெரியல சார், புதுசா ஒரு ஆஸ்பத்திரி பிஎன் ரோட்டுல தொறந்திருக்காங்க, நாந்தான் பர்ஸ்ட் பேசண்ட் போல இருக்கு, நான் உயிரோட இருந்தா கண்டிப்பா அது நல்ல ஆஸ்பத்திரிதான்னு சொன்னேன்.
அவரும் ஹா ஹா ஹான்னு சிரிச்சுகிட்டே உடம்ப பார்த்துக்கப்பான்னு போன வச்சிட்டாரு...

டிஸ்கி : இது நான் ரெண்டு வாரம் பிளாக்குக்கு வராம இருந்ததுக்கான சுயபுராணம், தெரியாம படிக்க வந்திருந்தீங்கன்னா மன்னிச்சு விட்டுருங்க, இன்னொரு பாகமும் இருக்குது ...

    

Tuesday, February 1, 2011

கமர்சியல் பக்கங்கள் - 01/02/2011ஒரு சந்தோசம்
கடந்த சனிக்கிழமை இணைய உலகிலே என்றும் இல்லாத அதிசயமான புரட்சி ஒன்று நம் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக நடந்தது பாராட்டத்தக்கது, எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த ஒரு விசயத்தில் அணி திரண்ட நண்பர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை, நல்லதொரு முடிவு கிடைத்தால் நன்றாக இருக்கும்,  இந்த இணைய புரட்சி தொடர வேண்டும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு, நானும் பதிவொன்றை போடலாம் என்று இருந்தேன், பல பிளாக்குகளில் சென்று பார்த்த போது அனைவரும் பெட்டிசன் அனுப்புவது, டிவீட் செய்வது என்று அதனையே பதிவாக எழுதி இருந்தனர், சரி நாமும் ஒரு முறை அதையே எழுத வேண்டாம் என்று நினைத்து விட்டு விட்டேன், பிறகு சொந்தமாக ஒரு கட்டுரையினை எழுதலாம் என்று நினைத்து எழுதினேன், எழுதி முடித்தவுடன் படித்து பார்த்த போது கோபத்தில கண்டபடி எழுதி இருந்தேன், சென்சார் போர்டுக்கு அனுப்பினால் கண்டிப்பாக நான்கு வரிகள்தான் மிஞ்சும் என்ற அளவில் இருந்தது, அதனால் பிரசுரம் பண்ணாமல் விட்டு விட்டேன், கொஞ்சம் டிங்கரிங், பெயிண்டிங் வேலை எல்லாம் செய்து பின்னால் வெளியிடுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கண்டனம்
சென்ற வாரம் ஆனந்தவிகடன் புத்தகம் ஒன்றினை எதேச்சையாக நண்பர் ஒருவரின் கடையில் படிக்க நேர்ந்தது, அதில் சென்னை புத்தக கண்காட்சி விழா பற்றிய கட்டுரையில் சரஸ்வதி விஜயம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன், பதிவர்களை பற்றி கண்டபடி எழுதி இருந்தனர், பதிவர்கள் இணையத்தில் தமிழ் குப்பைகளை கொட்டுகிறோமாம், ஓசியில் கூகிள் காரன் கொடுத்த பிளாக்கினை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு எழுதுகிறோம் என்று வாரு வாரு என்று வாரி இருந்தார்கள், என்ன இருந்தாலும் நாமும் பதிவர் அல்லவா அதனால் ஆனந்த விகடனுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்னமோ இவர்கள்தான் பத்து வருடம் படித்து விட்டு வந்து பத்திரிக்கைகளில் எழுதுவதை போலவும் நாம் எல்லாம் எழுதவே தெரியாமல் எழுதுவது போலவும் நினைப்பு அவர்களுக்கு, ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சந்தேகம்
பிறப்புக்கு முன்னால் என்ன என்பது உனக்கும் தெரியாது

இறப்புக்கு பின்னால் என்ன என்பது எனக்கும் தெரியாது - கண்ணதாசன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு தத்துவம்
அடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை இல்லை
கோபமே படாவிட்டால், நமக்கே மரியாதை இல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு காதல் கவிதை
மரத்துல இருக்குது காயி,
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி,
தூங்க தேவை பாயி
நீ ’’ம்’’ னு சொன்னா இந்த சிவா
உன் காலடி நாயி செல்வி நாயி

கவிதையை எழுதி இயற்றியவர் - சிவா
படம் -சென்னை-28
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு லைன்

WINNERS DON'T DO DIFFERENT THINGS.
THEY DO THINGS DIFFERENTLY.
- YOU CAN WIN SHIV KHERA
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவை பாருங்க, செம காமெடியா இருக்கும், சினிமாலதான் இந்த மாதிரி சண்டை காட்சிகளை பார்க்க முடியும், இது டிவி நிகழ்ச்சியில எடுத்தது


-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குட்டி கதை
அது ஒரு ஆளில்லாத நெடுஞ்சாலை, நேரம் இரவு பதினோரு மணி ஆகி விட்டிருந்தது, அந்த நெடுஞ்சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இல்லை, அடர்ந்த கும்மிருட்டு, அந்த இருட்டில் ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள், அந்த வாலிபன் ஒரு பெரிய அடர்ந்த மரத்தினடியில் கொண்டு போய் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான், இருவரும் கீழிறங்கினார்கள், அந்த வாலிபன் சுற்றும் முற்றும் இருபுறமும் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் ஆள் நடமாட்டமே இல்லை, பிறகு சிரித்துக் கொண்டே அவன் அந்த பெண்ணை நெருங்கினான், இருவரும் ஒருவருக்கு அருகில் ஒருவர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர், அவன் மேலும் அவளுக்கு அருகாமையில் நெருக்கத்தை அதிகப்படுத்தினான், பிறகு தன்னுடைய இரண்டு கைகளால் அவள் முகத்தை பற்றினான், அவளுடைய ஆரஞ்சு வண்ண முகம் வெட்கத்தால் மேலும் சிவந்தது, அப்படியே அவன் அவளுடைய முகத்தை பற்றிக் கொண்டு தன்னுடைய உதடுகளை அவள் காதருகில் கொண்டு போனான், கொண்டு போய் என்ன சொன்னான் என்றால், வண்டில பெட்ரோல் தீர்ந்து போச்சு, வா ரெண்டு பேரும் தள்ளலாம்...!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வருத்தம்
போன வாரம் நம்ம முறைமாமன் கார்த்திக் சாட்டிங்குல வந்து ஞாயித்து கிழமை மீட்டிங் ஒன்னு இருக்கு கோமாளி செல்வா, சுற்றுலா விரும்பி அருண், அப்புறம் நானும் வரேன், நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாரு, நானும் பதிவுலகத்துல வந்ததுல இருந்து தேவியர் இல்லம் ஜோதிஜி சார மட்டும்தான் மீட் பண்ணி பேசி இருக்கேன் , வேற யாரையும் சந்திச்சது இல்ல, அதனால கண்டிப்பா போகலாம்னு நினைச்சேன், ஆனா பாருங்க விதி யார விட்டது வழக்கம் போலவே ஊருக்கு போக வேண்டியதாகிருச்சு, அங்க போய் உடம்பும் சரி இல்லாம போயிருச்சு, டாக்டர் வேற சிடி ஸ்கேன் அது இதுன்னு என்ன என்னவோ எடுக்க சொல்லி இருக்காரு, பார்ப்போம் என்ன ஆகுதுன்னு, ஆகவே முறைமாமன் சார் இந்த மீட்டிங் வரமுடியல, அடுத்த மீட்டிங் போடறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னமே சொல்லிருங்க, கண்டிப்பா வரேன்....

அன்புடன்
இரவுவானம்