Showing posts with label பார்வைகள். Show all posts
Showing posts with label பார்வைகள். Show all posts

Thursday, July 12, 2012

தி அமேசிங் திருப்பூர் ஸ்பைடர்மேன் !!!


டிஸ்கி :- இதுவொரு மொக்கை பதிவு பிடிக்காதவர்கள் தயவுசெய்து இங்கேயே தவிர்க்கவும்.


தி அமேசிங் ஸ்பைடர்மேன்னு ஒரு படம், அசத்தும் ஸ்பைடர்மேன்ங்கற டைட்டில்ல மழைபெய்ற பிரிண்டுல பாடாவதி தமிழ் டப்பிங்ல சமீபத்துல ஒருநாள் பார்த்தேன், படம் பார்த்துட்டு ரெண்டு நாளா தீவிர யோசனையில இருந்தேன், அமெரிக்காவுக்கு ஒரு ஸ்பைடர்மேன் இருக்கான், இந்தியாவுக்கு யாரு இருக்கா? தமிழ்நாட்டுக்கு கூட ஆல்ரெடி யெல்லோ ஸ்கார்ப் மேன், க்ரீன் சாரி வுமன்னு ரெண்டு பேர் முகமூடி போடாம சுத்திகிட்டு இருக்காங்க, நம்ம திருப்பூருக்குன்னு யாரு இருக்கா?

அதிபயங்கர சிந்தனையின் முடிவுலதான் அந்த அருமையான(!) யோசனை உதித்தது, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், எண்ணித்துணிக கருமம்னு காளமேகபுலவரா? இல்ல இல்ல அந்த தத பததத உங்களுக்கு தெரியாத புலவர்கள் இல்லை அவங்களே சொல்லியிருக்காங்களே, சரி கருமம் எண்ணியாச்சு துணிஞ்சர வேண்டியதுதான்னு நானே ஸ்பைடர்மேனா மாற முடிவு பண்ணிட்டேன், அட இதுக்குள்ள டென்சனானா எப்படி? அமைதி அமைதி.

சரி ஸ்பைடர்மேனோட முக்கிய அடையாளமே டிரஸ்தான், அதுக்கெங்க போறது? சூப்பர்மேன் டிரஸ்னா ஈசியா பண்ணிடலாம், சரி நம்மூர்ல இல்லாத பனியன்சா, எதாவது ஒரு ரவுண்ட் நெக் டீ சர்ட்டும், ஒரு பனியன் பேண்டும் இப்போதைக்கு வாங்கி போட்டுக்கலாம், பின்னாடி பாப்புலர் ஆனா ஒரிஜினல் டிரஸ் ரெண்டா வாங்கி அழுக்கானா துவைச்சு போட்டுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு, முகமூடியெல்லாம் தியேட்டர்லயே ப்ரீயா கொடுக்கறாங்க.



பழைய ஸ்பைடர்மேன் படம் மாதிரி இல்லீங்க மேட்டஸ்ட் ஸ்பைடர்மேன் படம், சிலந்தி வலையெல்லாம் அவனே சொந்தமா பண்ணி யூஸ் பண்ணுறாரு படத்துல, நம்ம எங்கிட்டு போய் அந்த மாதிரி வலையெல்லாம் பின்னுறது, எங்க வீட்டுல இருக்கறதே கொசுவலை மட்டும்தான், இப்போதைக்கு அதையே நாலா எட்டா கட் பண்ணி டெம்ரவரியா யூஸ் பண்ணிக்கலாம், பின்னாடி கொஞ்சம் அமவுண்ட் சேர்ந்தா நாஞ்சில் மனோகிட்டயோ, விஜயன் சார்கிட்டயோ சொல்லி அவங்க ஏரியாலவுல எதாவது மீன்வலை செக்கண்ட்ஸ்ல கிடைச்சா வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.

ஓகே டிரஸ், முகமூடி, வலையெல்லாம் ரெடி, அடுத்து தலைகீழா பறக்கறதுக்கு பிராக்டிஸ் பண்ணனுமே? சின்னவயசுல ஜிம்பார்ல தலைகீழா தொங்கி கீழ விழுந்து அடிபட்டதுமில்லாம, வீட்டுலயும் தனியா அடிவாங்குனது ஞாபகத்துக்கு வந்தது, சரி இப்போதைக்கு ரிஸ்க் எடுக்க வேணாம் ஸ்கிப்பிங் கயித்தயே வச்சு சமாளிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எல்லாம் ஓகே இப்பத்தான் முக்கியமான ஆப்பரேசன், சிலந்தி ஒன்னு நம்மள கடிக்கனுமே, அப்பத்தான பார்லேஜீ சக்திமான் கணக்கா ரஃப்பாக முடியும்? இன்னைக்குன்னு பார்த்து சிலந்தி ஒன்னும் கண்ணுல சிக்க மாட்டேங்குது, அப்படி இப்படின்னு தேடிப்புடிச்சு பக்கத்து வீட்டு கிச்சன்ல இருந்து ஒன்ன புடிச்சிட்டு வந்தாச்சு.

கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கனுமே, ஒருகையில சிலந்தி பூச்சி, மறுகை சிலந்தி வாய்கிட்ட வச்சாச்சு, ஓகே ரெடி யுவர் டைம் ஸ்டார்ட் நவ், ஹோம் ஸ்வீட் ஹோம் கேம் ஷோ கணக்கா டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ்னு  டைமர் மனசுக்குள்ள ஓடுது, சிலந்தி கடிச்சதும் மினிமம் அண்டர்டேக்கர் மேக்சிமம் அர்னால்டாவது ஆகிருவோம்னு மனச திடப்படுத்திட்டு சிலந்தி முன்னாடி கைய நீட்டிட்டு இருந்தேன்.

போர், த்ரீ, டூ, ஒன்னு நெருங்கியதும் கடைசி கனநேரத்தில் ஒரு சிந்தனை ஏற்பட்டுவிட்டது, மனச மாத்திகிட்டேன், சிலந்தியவும் உங்க வூட்டுக்கு போடான்னு தொறத்தி விட்டுட்டேன், அது என்னன்னா?

அமெரிக்காவுல ஸ்பைடர்மேன் இருக்கான்னா அதுக்கு ஒரு காரணம் இருக்குது, அங்கயெல்லாம் உயர உயரமான கட்டிடங்களா இருக்குது, சோ ஸ்பைடர்மேனால ஈசியா கட்டிடத்துக்கு கட்டிடம் ஈசியா நூல் விட்டு பறக்க முடியும், எங்க ஊருல அதிகபட்சமாவே கரண்டு கம்பம் மட்டும்தான் ஹைட்டா இருக்குது, அதுல நூல் விட்டு பறந்தா அரபாடி லாரில அடிபட்டு சாகரது நிச்சயம், இல்லைன்னாலும் கீழ இருக்கற படம் மாதிரியாவது சிக்கி சாக வேண்டியதுதான்.


சோ இப்போதைக்கு ஸ்பைடர்மேன் கனவுத்திட்டத்தை டிராப் பண்ணிட்டேன், ஆனா எப்போ எங்க ஊருலயும் பாரீன் மாதிரி கட்டிடங்கள் வருதோ அப்போ மறுபடியும் டிரை பண்ணுவேன்.


ஓகே பாஸ் படிச்சிட்டீங்களா? நம்ம அடுத்த ஆப்பரேசன்?


Tuesday, June 19, 2012

வீடா? ஹாஸ்டலா? எது சரி ???



சமீபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது

ஹாஸ்டலில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக ஈரோடு சென்றுவிட்டு அப்பொழுதுதான் திரும்பி இருந்தார், அப்பொழுது அவருடன் நடந்த உரையாடல் இது.

என்னங்க சார் திடீர்னு பையன் ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்துட்டீங்க,

ஆமாங்க, பையன் ஒன்பதாம் வகுப்பு போறான், அடுத்த வருசம் பப்ளிக் எக்சாம் வேற

ஏங்க இங்கயே நல்ல ஸ்கூல்லதான படிச்சிட்டு இருந்தான், இத்தனைக்கும் திருப்பூர்ல பேரு வாங்குன ஸ்கூல் வேற

ஆமா படிச்சு கிளிச்சான், ஊரப்பட்ட குறும்புங்க, ஆவூன்னா ஸ்கூல்ல இருந்து கம்ளைண்டு வந்திருது, இந்த தடவை கொஞ்சம் ஓவராவே போயிட்டான்

ஓவராவா என்ன ஆச்சு?

ஸ்கூல்ல எல்லா பொண்ணுங்க கூடவும் போன் போட்டு பேசினானாம், அந்த பொண்ணுங்க அப்பனெல்லாம் கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்கன்னு பேரண்ட்ஸ் மீட்டிங்ல கூப்பிட்டு சத்தம் போட்டாங்க

அய்யய்யோ

ஓவர் விளையாட்டு வேற, எக்சாம்ல நல்ல மார்க்கே வாங்கல, பப்ளிக் எக்சாம்ல செண்டம் வாங்கனுமாம், அதனால பையன் பெயில் ஆக்கிருவோம், அப்படின்னு சொன்னாங்க,

அப்புறம்

வீட்டுல அப்பாம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? பையன சொல்லி குடுத்து வளர்க்கறதில்லையா? அப்படியா இப்படியான்னு ஒரே கம்ளைண்டு

ஓஹோ நீங்க என்ன சொன்னீங்க?

நானா? டிசி கொடுங்கன்னு சொல்லிட்டேன்

டிசியா?

ஆமா டிசி கொடுங்க, இப்பவே கொடுத்தாலும் சரி, இந்த வருசம் முடிச்சிட்டு கொடுத்தாலும் சரி, நல்ல பையன்னு எழுதுனாலும் சரி, இல்லை டிசியவே கிழிச்சு கொடுத்தாலும் சரின்னு சொல்லிட்டேன்

ஏன் சார்?

இதையேதான் அவங்களும் கேட்டாங்க, பின்ன என்ன சார்? பையன் படிக்கலைன்னாலும் பேரண்ட்ஸ் மீட்டிங்கு, குறும்பு பண்ணாலும் பேரண்ட்ஸ் மீட்டிங்கு, எதுக்கெடுத்தாலும் பேரண்ட்ஸ் மீட்டிங் வச்சு, பேரண்ட்ஸ்தான் பார்த்துக்கனும், பேர்ண்ட்ஸ்தான் சொல்லி கொடுக்கனும்னு சொன்னா வாத்தியாருங்க அவங்க எதுக்கு இருக்காங்க?
……………………………

திருப்பூர் இருக்கற நிலையில, விக்கிற விலைவாசியில, கண்ணுமுழி பிதுங்கி, ராப்பகலா வேல செஞ்சு நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு பணம் கட்டி ரெண்டு பசங்கள படிக்க வக்கிறதே கஷ்டம், இதுல ஆவூன்னா பேரண்ட்ஸ்தான் பார்த்துக்கனும்னா அவங்க எதுக்கு இருக்காங்க

அவங்க கேட்குற பணம் கொடுக்கறமுல்ல, பணம் கட்டாட்டி எக்சாம் கூட எழுத விடுறது இல்ல, இத்தன கஷ்டப்பட்டு பசங்கள படிக்க வைக்குறது எதுக்கு? நாம படிக்கலைன்னாலும் பசங்களாவது படிச்சு பெரியாளாகட்டும்னுதான், அதையும் நாமதான் சொல்லி கொடுக்கனும்னா? எல்லாத்துக்கும் டியூசன் வைக்கனும்னா இவங்க என்னத்துக்கு பணம் வாங்குறானுக?

ஓ அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?

அவங்க என்ன சொல்றது, ஏன்சார் இப்படி பேசறீங்க? பையன கண்டிச்சு வைங்கன்னு சொன்னாங்க?

கண்டிச்சீங்களா?

நான் ஏன் சார் கண்டிக்கனும்? என் பையன் கேட்கறான் சார், நான் என்னப்பா தப்பு பண்ணேன், என் கிளாஸ் பொண்ணுகிட்ட போன் பண்ணி பேசுனேன் இது தப்பான்னு?

நீங்க என்ன சொன்னீங்க?

நான் எங்கடா தப்புன்னு சொன்னேன்? உன் டீச்சருதான் சொல்றாங்க, அவங்ககிட்டயே கேளுன்னு சொன்னேன்.

ஹாஹாஹா, பேரண்ட்ஸ் மீட்டிங்கயே ரணகளம் ஆக்கிட்டீங்க போல


இல்லையா பின்ன

ஓ இதனாலதான் ஹாஸ்டல்ல சேர்த்தீங்களா?

இதனால இல்லீங்க சார், ஆறாவதுலேயே சேர்த்திருக்கனும், லேட்டா சேர்த்துட்டனேன்னு பீல் பண்றேன் சார்.

ஆறாவதுலேயேவா ஏன் சார்?

பின்ன பசங்க நம்மகிட்ட இருந்து என்ன பண்ண போறான்?

என்னசார் இப்படி சொல்லிட்டீங்க, பசங்க நம்மகிட்டயே இருந்து வளர்ந்தாதான அன்பு பாசம் இருக்கும்? சின்ன வயசுலயே ஹாஸ்டல்ல விட்டுட்டா மனதளவில வெறுத்து போயிடுவாங்களே சார்

கிளிச்சானுங்க, நம்மகிட்ட இருந்தா உருப்படவே மாட்டானுங்க, என் பையன் ஏழு மணிக்கு எந்திரிக்கிறான், ஒரு மணி நேரத்துக்குள்ள அவசர அவசரா பல்லுவிளக்கி, பாத்ரூம் போயி, அரைகுறையா குளிச்சு, சாப்பிட்டும் சாப்பிடாம, ஷூ, டையெல்லாம் கட்டியும் கட்டாம, ஒழுங்கா கட்டமுடியலைன்னா கோவத்துல என்ன வேற ஒரு உதை உதைச்சிட்டு போறான் சார், இதுவே ஹாஸ்டல்னா இப்படி இருக்க முடியுமா சார்?

ரெண்டு நாள் முன்னாடி அவனுக்கு பொறந்தநாளு, காலையிலேயே திருப்பூர்ல இருந்து கிளம்பி ஈரோடு போய் பையன் பாக்குறேன், அஞ்சு மணிக்கே எழுந்து பொறப்பட்டு, பிரேயர் முடிஞ்சு, படிச்சிட்டு இருக்கான் சார், என்ன பார்த்ததும் குட்மார்னிங் டாடின்னு சொல்றான், நீட்டா டிரஸ் பண்ணி தலைவாரி, என் பையனான்னு எனக்கே ஒரு நிமிசம் டவுட்டா போச்சு

ஏங்க இதெல்லாம் பெரிய மேட்டரா?

வேற என்னதாங்க பெரிய மேட்டரு, வீட்டுலயும் நாங்க அதைத்தான் சொல்றோம், ஓவர் செல்லம் கேட்க மாட்டேங்குறான், ஆனா அங்க அப்படியா? நம்மகிட்ட இருந்தா என்ன கத்துக்குவான் சொல்லுங்க? உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன், நான் காலையில வண்டி தொடப்பேன், இவனும் என்கூடவே நின்னுகிட்டு வேடிக்கை பார்ப்பான், என்ன பார்ப்பான்னு நினைக்கறீங்க? அக்கம் பக்கம் வீட்டுல இருக்கற ஆண்டிக காலையில பாத்திரம் வெளக்கறதயும், தண்ணிபுடிக்கறதும் துணி விலகி இருக்கறதையும் வேடிக்கை பார்க்கிறான், அவனயும் தப்பு சொல்லமுடியாது அவன் வயசு அப்படி, இதையா கத்துக்கறது?

இதுமட்டும் இல்லீங்க, ஸ்கூல்ல கம்ப்யூட்டர் சம்பந்தமா புராஜெக்ட் ஒன்னு கொடுத்துருக்காங்க, எல்லாரும் வீட்டு பக்கத்துல இருக்கற பிரவுசிங் செண்டருக்கு போய் பிராஜெக்ட் பண்ணுங்கடான்னு, கம்ப்யூட்டர் லேப்புக்குனு காசு மட்டும் வாங்குறானுக, ஆனா புராஜெக்ட் பண்ண மட்டும் பிரவுசிங் செண்டருக்கு போகனுமாம், பிரவுசிங் செண்டரெல்லாம் ஒழுங்காவா இருக்கு? எல்லா கம்ப்யூட்டருலயும் அசிங்க அசிங்கமா படம் ஓடுது, அதையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் இவனுங்க அடங்குவானுங்களா? அப்புறம் என்ன ம@#$%த்துக்கு கம்ப்யூட்டர் லேபுக்கு காசு வாங்குறானுக?


காலையில ஒன்பதரை மணிக்கு ஸ்கூலுக்கு எட்டு மணிக்கே வீட்டுல வந்து பிக்கப் பண்ணிட்டு போயிடரான் சார் ஸ்கூல் பஸ்காரன், ஒன்னரை மணி நேரம் தெருத்தெருவா சந்து சந்தா வீதி வீதியா சுத்தி ஒன்பதரை மணிக்கு ஸ்கூலுக்கு கொண்டு போய்விட்டா பசங்க என்னாவாங்க? நீங்களே சொல்லுங்க சார், ஒருமணி நேரம் டிராவல் பண்ணி ஆபீஸ் போனா நீங்க டயர்டாவீங்களா? இல்ல சுறுசுறுப்பா வேலை செய்வீங்களா? பெரியவங்க நமக்கே இப்படின்னா சின்ன பசங்களுக்கு எவ்வளவு டயர்டா இருக்கும்? அப்புறம் அவங்களால எப்படிங்க சுறுசுறுப்பா படிக்க முடியும்? என்ன பொறுத்தவரைக்கும் ஸ்கூலுக்கு வீட்டுக்கும் அதிகபட்சம் 10 நிமிசம்தான் டிராவல் இருக்கனும், அப்பத்தான் பசங்க நிம்மதியா படிக்க முடியும், இது ஹால்டல்ல மட்டும்தான் நடக்கும்.

கடைசியா என்னதான் சொல்ல வரீங்க?

என்ன பொறுத்தவரைக்கும் பசங்க நம்மகூட பத்து வயசு வரைக்கும் இருந்தாலே போதும் சார், அதுவரைக்கும்தான் அன்பு பாசம் எல்லாம் தேவைப்படும், அப்புறம் அவங்கள எதாவது நல்ல ஹாஸ்டலா பார்த்து தங்க வச்சி அவங்க தேவை என்னவோ அதை வாங்கி தரதோட விட்டுரனும், அப்பத்தான் வாழ்க்கைக்கு தேவையான நாலு விசயங்களை கத்துக்க முடியும், வருங்காலம் போட்டி நிறைஞ்ச உலகம் சார், சின்ன விசயத்துல கோட்ட விட்டுட்டா பெரிய விசயங்கள் கைநழுவி போய்விடும், அப்புறம் காலாகாலத்துக்கும் நீங்க என்னதான் சமாதானம் பண்ணாலும், எதை வாங்கி கொடுத்தாலும், பையன் நீ எனக்கு என்ன பண்ணுனன்னுதான் கேட்பான், பெரிய பெரிய பணக்கார பசங்கள இருந்தா பரவாயில்ல சார், நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்து பசங்க எல்லாம் ஒழுங்கா இருக்கவும், நாலு விசயம் கத்துக்கவும் கண்டிப்பா ஹாஸ்டல்தான் சரிதான் சார்.

நண்பர்களே இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?  

Tuesday, April 24, 2012

டிக்கிலோனா பேஷன்ஸ்



ஒரு காலத்தில் பெல்பாட்டம், பெரிய காலர் வைத்த சட்டை, பேகி பேண்ட் போன்றவை பேஷனாக இருந்தன,பாக்கியராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் பழைய திரைப்படங்களில் இது போன்ற உடையணிந்து ஆறுக்கு மூன்று சைசில் ஒரு பெரிய கூலர் அணிந்து கொண்டு பாடும் போதும், ஆடும் போதும் பார்த்தாலே சிரிப்பு வரும்

காலப்போக்கில் பழைய ஆடைகள் மறைந்து புது புது பேஷன்கள் உருவாகிவிட்டன, விவேக்கின் ஆஸ்தான அல்லக்கை செல்முருகன் ஒரு படத்தில் சொல்லுவார் ஜட்டி பட்டி தெரியற மாதிரி போடுறதுதான் இப்போ பேஷன் சார்ன்னு

நேற்றைக்கு கோயம்புத்தூரில் ஒருவரை பார்க்க நேர்ந்தது, தன் கேர்ள் பிரண்டுடன் சென்று கொண்டிருந்தார், அவரின் ஜீன்ஸ் இப்பவோ, அப்பவோ எப்போ கழண்டு விழப்போகுதோ எனும் அளவில் ஒரு அபாயகரமான கட்டத்தில் வேண்டா வெறுப்பாக பின்னால் தொங்கி கொண்டிருந்தது, அதை பின்னால் பார்த்த எனக்கு பகீர் என இருந்தது, அவர் அதையெல்லாம் லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை, கடமையே கண்ணாக கடலை போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

பாவம் ஒருவேளை கழண்டு விட்டால் மானம் போய்விடுமே என மெதுவாக அவரிடம் சென்று கூறினேன், அதற்கு அவர் பாஸ் இதுதான் இப்போ பேஷன் பாஸ் என்று கூறி விட்டு சென்றுவிட்டார், எதுடா பேஷன்? ஜட்டி தெரியற மாதிரி, ஜட்டி பட்டி தெரியற மாதிரி பேண்ட் போடுற காலம் போயி இப்போ டிக்கி தெரியற மாதிரி பேண்ட் போடுறதா பேஷன்?

அது எப்படி அந்த ஜீன்ஸ் பேண்ட் தொடைக்கும் முழங்காலுக்கும் நடுவே பேலன்ஸ் பண்ணி நிக்குதுன்னு சத்தியமா எனக்கு புரியலை, இதை கண்டுபுடிச்சவனுக்கு நோபல் பரிசே கொடுத்தாலும் தகும் என்றே தோன்றுகிறது, பின்னே புவி ஈர்ப்பு விசைக்கே பல்ப்பு கொடுக்கறதுன்னா சும்மாவா? இவனுக கூட எல்லாம் எப்படித்தான் வெட்கம் இல்லாம பொண்ணுகளும் சுத்துதோ?


பொண்ணுகளுக்கு வேணும்னா விதவிதமா டிரஸ்ஸஸ் இருக்கலாம், ஆனா ஆம்பிளைகளுக்கு நாலே நாலு வெரைட்டிதான், நார்மல், பேகி, டைட்ஸ், பூட்கட்டுன்னு, இதுக்கு மேல என்னதான் டிசைன் பண்ணுனாலும், அதுவும் இந்த நாலுக்குள்ளதான் அடங்கும், ஆனா அதுக்கும் மேல இஅவனுங்க கண்டுபுடிச்சிருக்கானுங்க பாரு டேஞ்சரஸ் ஜீன்ஸ்சுன்னு, போடற அவனுகளுக்கு டேஞ்சரஸ்சோ என்னவோ, பாக்குறவங்களுக்கு கண்டிப்பா டேஞ்சரஸ்தான், பின்னே காலங்காத்தால ஆபிஸ் போறவங்க, நல்ல காரியத்துக்கு போறவங்க இவனுங்க டிக்கியயெல்லாம் பார்த்துட்டு போனா விளங்குமா?

பொண்ணுங்க கிளிவேஜ் காட்டுனா செக்ஸி, அதுவே ஆம்பிளைக கிளிவேஜ் காட்டுனா டர்ட்டின்னு ஏண்டா புரிய மாட்டேங்குது? ராமராஜன் ஒரு தெய்வபிறவி சார், தீர்க்கதரிசி, அவரு ஒரு காலத்துல டவுசர் போட்டாலோ, இல்லை பச்சை மஞ்சள் கலர்ல பேண்ட் சர்ட் போட்டாலோ கிண்டல் பண்ணிகிட்டு இருந்தாங்க, ஆனா இப்போ பேஷன்னு அதைதான் நம்ம பசங்களும் போட்டுகிட்டு திரியறாங்க,

அதுலயும் ஒருத்தன் பச்சை கலர்ல பனியன், மஞ்சள் கலர்ல பேண்ட், கருப்பு கலர்ல பனியனுக்கு மேல சட்டை, வெள்ளை கலர்ல கேன்வாஸ், ஊதா கலர்ல ரோட்டு ஓரத்துல விக்குற கூலிங்கிளாஸ் போட்டு தலையில கிருதாக்கு மேல நாலு கோடு போட்டுட்டு போறான் சார், சொல்ற எனக்கே காண்டாகுன்னா கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் எவ்ளோ கேவலமா இருக்குதுன்னு? தோள்ல பெரிய பேகு ஒன்னு, அதுக்குள்ள என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க, மத்தியானம் குடிக்கற கஞ்சித்தண்ணியாதான் இருக்கும்.

சோத்துக்கு வழி இருக்கோ இல்லையோ இங்க பேஷனுக்கு மட்டும் கொஞ்சமும் குறைவில்லை, அப்பல்லாம், கொஞ்சம் முடிய ஒண்ட வெட்டுனாலே சட்டித்தலையான்னு கிண்டல் பண்ணுவாங்க, கொஞ்சம் போலீஸ் கட்டிங் மாதிரி வெட்டுனாலே எலி கரண்டி வச்சிருச்சான்னு கேட்பாங்க, அதுவே காலப்போக்குல அட்டாக் கட்டிங் ஆகி, இப்போ கோடு, ரோடு, சமயத்துல கூகிள் மேப்பு வரைக்கும் வரைஞ்சு வெச்சு விளையாடுறானுங்க

டிவில இந்த எலிபிறாண்டுன மாதிரி ஹேர்ஸ்டைல் வச்சிருந்த ஒரு பையன் சொன்னான், இந்த மாதிரி டிபரண்டா எதுனா பண்ணுனாதான் நாலு பேரு திரும்பி பார்ப்பாங்க சார்னு, இந்த மண்டைய பார்த்துட்டு திரும்பி பார்க்குறவங்க எல்லாம் ரோட்டுல ஏதோ ஜந்து நிக்குதுன்னுதான் பார்த்துட்டு போவாங்க, எதாச்சும் சாதிச்சு நாலு பேரு திரும்பி பார்க்குற மாதிரி பண்ணுவான்னா அத விட்டுட்டு மண்டைய பிறாண்டுறானுங்க, பேசாம எல்.ஐ.சில இருந்து குதிச்சு செத்து போயிருடா நாலு பேரு என்ன நானூறு பேராச்சும் பார்ப்பாங்க

இந்த பேஷன் மண்ணாங்கட்டியெல்லாம் நம்மூரை விடவும், கேரளாக்காரங்ககிட்ட கொஞ்சம் அதிகம், அவங்கள பார்த்துதான் நம்மாளுகளும் ஓவரா போறாங்கன்னு நினைக்கிறேன், நல்லவேளை திருப்பூர் வரைக்கும் இந்த பேஷன் இன்னும் வரலை, ஆனா கூடிய சீக்கிரமே இங்கயும் பல டிக்கிவாலாக்களை பார்க்க நேரிடலாம்னு நிறைய அறிகுறி தெரியுது.

Friday, March 30, 2012

மின்சாரமும், மத்திய மாநில மக்கள் அரசாங்கங்களும்?!!



தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டம் இல்லை – மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் திட்டவட்டம்


பஞ்சாப் மாநிலம் வழியா பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க பரிசீலிக்கப்படும்னு பிரதமர் சொல்றாரு, ஆனா தமிழ்நாட்டுக்கு அந்த பரிசீலனை கூட கிடையாதாம், நல்லா இருக்குய்யா உங்க நியாயம், அப்ப தமிழ்நாடு இந்தியால இல்லையா???

ஒரு காவிரி பிரச்சனைனா கர்நாடகாவே ஒன்னு கூடுது, பாலாறு பிரச்சனைனா ஆந்திராவே அல்லோலப்படுது, முல்லை பெரியாருன்னா கேராளாவுக்கே பிரச்சனைன்னு ஒன்னு கூடறாங்க, ஆனா இங்க மட்டும்தான் முல்லை பெரியாறா? அது தேனிமாவட்டத்து பிரச்சனை, காவிரி பிரச்சனையா? அது தஞ்சை மாவட்டத்து பிரச்சனை, கூடங்குளமா? அது நாகர்கோவில் பிரச்சனை, எங்களுக்கு என்ன வந்தது? கரண்டு கிடைச்சா போதும் அவ்வளவுதான்னு விட்டுடறது, அப்ப ஒட்டுமொத்த தமிழ்நாட்டும் பிரச்சனையே இல்லையா? இல்ல அத எப்பத்தான் உணரப்போறோம்?


அட ஈழப்பிரச்சனைனா ஒன்னு கூடறீங்க, அதே காங்கிரஸ்காரங்க கூடங்குளம் பிரச்சனைனா பாதிப்பேரு அந்த பக்கம், பாதிப்பேரு இந்த பக்கம்னு நிக்கறீங்க, தமிழனுக்குள்ளயே எந்த ஒற்றுமையும் இல்லாம போராட்டம் பண்ணுறேன்னு சொன்னா ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழனுகனா காமெடி பீஸ் மாதிரிதான தெரியும், அட ஒரு சிங்க தூக்குதண்டனைல இருந்து காப்பாத்தனும்னா ஒட்டுமொத்த மாநிலமும் போராடுது, தூக்குதண்டனைய நிறுத்தி வைக்குது, ஆனா இங்க???

எங்க அய்யா சொல்லிட்டாரா நானும் சப்போர்ட் பண்ணுறேன், எங்க ஆத்தா சொல்லிட்டாங்க அப்ப சரியாத்தான் இருக்கும்னு முடிவு எடுக்கறது, எப்பத்தான் சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கப்போறோம்? அப்படியே ஒரு ஆளு வந்து அணு உலையோட பாதிப்ப பத்தி சொல்லி மக்கள திரட்டி ஒரு போராட்டம் பண்ணுனா? அந்தாளையே கேள்விக்குறியாக்குறதுதான் நம்ம ஆளுங்களோட வேலை, இத்தனை நாள் எங்கிருந்த நீயி? வெளிநாட்டு பணம் வருதா? நீ தேசத்துரோகி, நீ நக்சலைட்டு, பெட்ரோமாக்ஸ் லைட்டுன்னு ஆரம்பிக்க வேண்டியது,

சரி அவருதான் சோமாலியா பட்டினி சாவு குழந்தைக போட்டாவ வச்சி மக்களளுக்கு சாவு பயத்தகாட்டி கூட்டம் கூட்டிட்டாரு, நீங்கதான் மக்களுக்காகவே வாழுறவங்களாச்சே, கொஞ்ச பேரு சேர்ந்தே அணு உலைக்கு எதிரா இத்தனை பேர கூட்ட முடியும் போது, இவ்வளவு பெரிய அரசாங்கம் மீடியா பலமும் வச்சிருக்குற நீங்க ஏன் அணு உலை பக்கம் குடியிருக்கறவங்க எல்லாம் பில்கேட்சாவும், அம்பானியாவும் ஆகறமாதிரி ஒரு படம் எடுத்து காட்டக்கூடாது?

வாங்குற காசுக்கு மேலயே கூவுற தினமலரும், நம்ம அய்யாவும், திடீர்னு அல்வா குடுத்த அம்மாவும், அய்யா அப்துல் கலாம், சீனிவாசன், மன்மோகன் சிங்கு, நாராயணசாமி மாதிரி பெரிய பெரிய விஞ்சானிக எல்லாரும் அணு உலை பாதுகாப்பா இருக்குன்னு சொல்றத, அந்த ஜனங்க நம்புற மாதிரி ஒரு டாக்குமெண்டரி படமாவாவது எடுத்து போடலாமே?

அவ்வளவு ஏங்க, அம்மா டிவியில அரைமணி நேரம் நியூசு வாசிப்பாங்க, 5 நிமிசம் செய்தியும், 5 நிமிசம் விளம்பரமும் போக, மீதி 20 நிமிசம் அம்மா வாழ்கன்னு பாடிட்டி இருப்பாங்க, அதுல ஒரு அஞ்சு நிமிசம் ஒதுக்கி அணு உலையோட அருமை பெருமைகளை விளக்கலாமே?


அது ஏன் நீங்க அமைக்கிற வல்லுநர் குழுவெல்லாம் ஜனங்க பக்கமே போக மாட்டேங்குறாங்க? அணு உலையால தேசமே வளர்ச்சி பெற போகுதுன்னா ஆப்டர் ஆல் கூடங்குளம் வளராதா? எதுக்கு 500 கோடிக்கெல்லாம் அனாவசியா வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் அறிவிக்கனும்?

சுனாமி வந்தா நாலடிதான் வரும், நிலநடுக்கமா அது பூமிக்குள்ளதான் வரும், மேல வராது, கதிர் வீச்சா அது செல்போன் சிக்னல விட கம்மியானதுதான், அணுக் கழிவா அது உங்க வீட்டு பீரோவுக்குள்ள பத்திரமா வச்சுக்கலாம் – என்னங்கய்யா கலர் கலரா ரீலு விடறீங்க, கேட்கிறவன் கேனையனா இருந்தா ஹிரோசிமால குண்டு போடும்போது நாலுநாள் நான் அங்கதான் இருந்தேன்னு சொல்லுவாங்க போல

மரம் வளர்க்க சொன்னாலே ம@%$ர் மட்டுமே வளர்க்கற பயபுள்ளக, இப்ப அணு உலை பக்கம் குடியேற தயார்னு கெத்தா சொல்லுறாங்க, காலங்காலமா சொந்த வீடு, சொந்த நிலம்னு வாழுற ஜனங்க எங்க, விவாதத்துக்காக குரல் கொடுக்கற நாம எங்க? தனக்கு நடக்கும் வரை எல்லாமே வேடிக்கதைதான்கற பொன்மொழி சரியாத்தான் இருக்கு.

கடைசியா வெள்ளைக்காரன எதுர்த்து காந்தி அஹிம்சை வழியா போரடினாரு, வெள்ளைக்காரனுக்கு மனசாட்சி இருந்தது சுதந்திரம் கொடுத்தான், ஆனா நம்ம அரசியல்வியாதிகளுக்கு மனசே கிடையாது, அப்புறம் மனசாட்சிக்கு எங்க போறது? என்ன போராட்டம் பண்ணுனாலும் அத அடக்கி ஒடுக்கிட்டு வேலைய முடிச்சிட்டு கமிசன வாங்கிட்டு போய்கிட்டே இருப்பாங்க


எந்த மாநிலத்துக்காரனுக்கு பிரச்சனையினாலும், கேரளா, ஆந்திரா, குஜராத், ஒரிசான்னு எந்த மாநில மீனவனுக்கு பிரச்சனைனாலும், இந்திய மீனவன் பிரச்சனைன்னுதான் சொல்லுறாங்க, ஆனா நம்ம மீனவர்கள் பிரச்சனைனா மட்டும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்கள்னு எழுதறாங்க, அட வடநாட்டு பத்திரிக்கைகாரங்கதான் அப்படின்னா நம்ம ஊர் பத்திரிக்கையும் அப்படித்தான் எழுதறாங்க

நம்ம தமிழ்நாடையும் இந்தியாவுல ஒரு மாநிலம்தான் மத்தவங்கள நினைக்க விடாம எது தடுக்குது? ஒரு மாநிலத்துல ஒரு பிரச்சனையின்னா அது தீருகிற வரைக்கும் நாடாளுமன்றம், சட்டசபைன்னு எதிர்கட்சி, ஆளுங்கட்சி வித்தியாசம் இல்லாம எல்லாரும் ஒத்துமையா போராடுறாங்க, பிரதமர், ஹோம் மினிஸ்ட்ர்னு மாத்தி மாத்தி போய் மீட் பண்ணுறாங்க, பிஜெபியா இருந்தாலும், காங்கிரஸ்காரங்கள சந்திக்க தயங்குவதே இல்லை, அவங்களுக்கு தேவை என்னவோ அதை நிறைவேத்திக்கற வரை தயங்காம போராடுறாங்க

ஆனா இங்க நிலைமை என்ன? அய்யாவும், அம்மாவும் பார்த்துக்கவே மாட்டாங்க, அவங்க மேற்க போனா, இவங்க கிழக்க போவாங்க, இவங்கள மட்டும்தான் நாம மறுபடியும் மறுபடியும் தேர்ந்தெடுக்க போறோம், அரசியல் நாகரீகம் துளிகூட கிடையாது, தமிழ், தமிழர்னு ஒரு கூட்டம் உசுப்பேத்தியே குளிர்காய்ஞ்சுகிட்டு இருக்கு, நம்ம மக்கள் யார் சொன்னாலும் தலையாட்டறாங்க, யார்கிட்டயும் ஒத்துமையே இல்லை, 

ஒவ்வொரு நாட்டுலயும் டிவிட்டர், பேஸ் புக்குல விழுற சின்ன தீப்பொறியே பெரிய அளவுல மக்கள் போராட்டமா முன்னெடுத்து வெற்றி பெறுகிற சூழலை பார்த்துகிட்டு இருக்கோம், ஆனா இங்க கண்ணெதிர்லயே ஒரு அநியாயம்னாலும் எனக்கென்னனு தேமேனு இருக்கோம், இந்த நிலை என்னைக்கு மாறும்? எல்லோரையும் ஒருக்கிணைக்குற ஒரு தலைவரோ, ஆட்சியோ எப்ப கிடைக்கும்?

அதுவரைக்கும் எது நடந்தாலும், நம்ம மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும்தான், நம்ம மாநிலத்தையும், மக்களையும் காப்பாத்த போறாங்கன்னு நம்பிக்க வேண்டியதுதான்.


Thursday, February 16, 2012

நண்பன், மெரினா, தோனி - சத்தியமா விமர்சனம் இல்லீங்க



சமீப காலமா கல்விமுறை, பாடத்திட்டங்கள் மையமா வச்சு நண்பன், மெரினா, தோனின்னு வரிசையா படங்கள் வந்துகிட்டு இருக்குறது நல்லதொரு மாற்றமா தெரியுது, அரசாங்கத்தோட மாற்றமா இல்லாட்டியும் ஒஸ்தி, வெடி, வில்லுல இருந்து இறங்கி நண்பன், மெரினா தோனின்னு தமிழ்சினிமா கொஞ்சம் மாறி இருக்குறதுல சந்தோசம்.

சரி நாமளும்தான் டிகிரி வரைக்கும் படிச்சமே, நமக்கு என்ன ஞாபகம் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்தா ஒன்னுமே ஞாபகத்துல இல்லை, அட்லீஸ்ட் பிரகாஷ்ராஜ் 17*8 எவ்வளவுன்னு கேட்டாரேன்னு அதுவாவது தெரியுதான்னு அதையும் யோசிச்சு பார்த்தேன் அதுவும் தெரியல, அட்லீஸ்ட் நாலாவது வாய்ப்பாடாவது தப்பில்லாம சொல்லலாமான்னு டிரை பண்ணா ப்ச்ச்

என்னத்த சொல்ல???

நாம ஏன் இந்தளவுக்கு வீக்கா இருக்கோம், படிக்கும் போது நல்லாத்தானே படிச்சோம், கிளாஸ் பர்ஸ்ட் எல்லாம் எடுத்தோம் இப்ப எல்லாம் எங்க போச்சுன்னு யோசிச்சு பார்த்தா, படிக்கற காலத்துல என்னைக்கு எதையாவது புரிஞ்சு படிச்சிருக்கோம்? எல்லாமே மனப்பாடம்தான், தமிழ்ல செய்யுள்னாலே மனப்பாட செய்யுள்னுதான் பேரு

டிகிரி படிச்சவங்க, எஞ்சினியரிங் படிச்சவங்க, இன்னும் என்னென்னவெல்லாமோ படிச்சவங்க யாரா இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சு பாருங்க படிச்சது உங்களுக்கு எவ்வளவு ஞாபகம் இருக்குதுன்னு.

ஒன்னாங்கிளாஸ்ல இருந்து அஞ்சாங்கிளாஸ் படிக்கற வரைக்குமாவது அஞ்சு அஞ்சு எவ்வளடா? இந்த விரல்ல அஞ்சு விரல கூட்டிக்கோ அந்த விரல்ல அஞ்சு விரல கூட்டிக்கோ இப்ப எண்ணி சொல்லு எவ்வளவு வருதுன்னு வாத்தியார் சொன்னா, இரண்டு கையயும் கூட்டி பத்துன்னு சொல்ல தெரிஞ்சது.

அந்தளவுக்காவது புரிஞ்சு படிச்சிட்டு இருந்தோம், ஆறாம் கிளாஸ் வந்ததுக்கு அப்புறம் எல்லாமே மனப்பாடம்னு ஆகிப்போச்சு, புக்க எடுத்தியா கடகடன்னு மனப்பாடம் பண்ணுனியா, பரிட்சையில வாந்தி எடுத்தியா, மார்க்கு வாங்கினியா, பர்ஸ்ட் கிளாஸ்ல பாசானியா? இதுதான் படிப்பு, அவ்வளவுதான் படிப்பு.

நீ படிச்ச படிப்பு உனக்கு யூஸ் ஆகுதா? படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சுதா? நீ பில்கேட்ஸ் ஆகிட்டியா? தெருப்பொறுக்கிட்டு இருக்கியா? அதெல்லாம் யாருக்கு வேணும்? படிச்ச காலம் முதலா எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்கா வாங்கிட்டு சுமாரான சம்பளத்துல வேலை பார்க்குறவனும் இருக்கான், சரியா படிப்பு வரலைன்னாலும் பேச்சு திறமை மத்த திறமைன்னு வளர்த்துகிட்டு பெரியாளா ஆனவனும் இருக்கான்.

இங்க யார தப்பு சொல்ல முடியும்? ஆசிரியர்கள் கிடைக்குற பத்து மாசத்துல எல்லா பாடபுக்குகள்ல இருக்குற எல்லா பாடத்தயும் நடத்தணும், டெஸ்டு வைக்கனும், பரீட்சை வைக்கனும், பேப்பர் திருத்தனும், மாணவர்களுக்கும் அதே நிலைமைதான், ஒருத்தருக்கு ஒருத்தர் நீயா? நானா?ன்னு ரன்னிங் ரேஸ் ஓடாத குறைதான்.


நான் காலேஜ்ல படிக்கும் போது, என்னோட புரபசர் சங்கரன் மாஸ்டர் சொல்லுவாறு, டேய் நீங்க பஸ்சுல போகும் போது கூட உட்கார்ந்துகிட்டு வர ஆளுகிட்ட பேச்சு கொடுத்துகிட்டே போகனும்டா, இல்லைன்னா அவன் தூங்கி உன் தோளுல சாஞ்சு உன் சட்டையில சலவா தண்ணி ஊத்திருவான்னு.

அதே மாதிரிதான் படிக்கும்போதும், படிப்பும் முக்கியம்தான் அதேசமயம் உங்கள சுத்தி இருக்குற டிரண்டும் எப்படிபட்டதுன்னு பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி தகுதிய வளர்த்துகிட்டு நடந்துக்க தெரிஞ்சுக்கனும், பஸ்சுல போறதுதான் முக்கியம், பக்கத்துல உட்கார்ந்து இருக்குறவன பத்தி எனக்கென்ன கவலைன்னு நினைச்சா, அதுவே நாளைக்கு உங்களுக்கு ஆப்பா வந்து தண்ணி ஊத்தி விட்டுரும்,

சோ நல்லா படிங்க, மார்க்கு மட்டுமே முக்கியமில்ல, அட மார்க்கு கம்மியா இருந்தாத்தான் இப்ப என்ன? இதர திறமைகளையும் வளர்த்துக்குங்க, வாழ்க்கையில முன்னேறுங்க..!
  

Saturday, December 31, 2011

புது வருடம் - சில நினைவுகள்..!



ஒரு வருடம் ஓடி போய்விட்டது, வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது, பிறகு அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?

வழக்கம் போலவே இதோ இன்னொரு புதுவருடம், ஒவ்வொரு வருடத்திலும் என்ன சாதிக்க போகிறேனோ? முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ? தெரியாது, ஆனால் புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு புது விதமான மகிழ்ச்சி மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான் முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் தானே புயல் கரை கடந்ததை போல ஓரிரு மாதங்களிலேயே வலுவிலந்தும் விடுகிறது.

ஒவ்வொரு வருடங்களும், புத்தாண்டு சங்கல்பங்களும் காற்றிலும், நீரிலும் மட்டுமே எழுதி வைக்கும்படி எனக்கு வாய்த்திருக்கிறது, சலித்து போய் இப்பொழுது அது போல எதுவும் நினைக்கக்கூடாது என்பதே புத்தாண்டு நினைவாக மாறிவிட்டது.

முந்தைய கடந்து போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவோ பரவாயில்லை, பழைய வருடத்தின் தாங்கமுடியாத சோகங்களை இந்த வருடம் மறக்கடித்தது, இன்னும் சொல்லப்போனால் கடைசியில் வந்தமைந்த சொந்தம் என் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தியது என சொல்லலாம்.

ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.

துன்பத்திலும், கஷ்டத்திலும், ஏக்கத்திலும், தேவைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், மக்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு வரப்போகும் வருடமாவது ஒரு நல்ல வருடமாக அமையாதா என்பதே.

அந்த சராசரி மனிதர்களில் ஒருவனாக எனது எதிர்பாப்பும் அதுவே, எதிர்பார்ப்பும், ஏமாற்றங்களும் தொடர்கதையாகி போய் நடப்பது நடக்கட்டும் என்ற எனது சராசரி மனநிலையை மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடம், புது வருடத்தில் எனக்கான தேவைகளும், செல்ல வேண்டிய தூரங்களும் நிறையவே இருக்கிறது.


அதற்காக அதிகமாக உழைக்க சொல்கிறது காலம்.

பார்ப்போம், காலம் சொல்லும் பதிலை..!

நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவருடத்தை தொடங்க இருக்கிறேன்… நான்..!



New Year Comments
New year comments greetings, happy new year animated scraps

Best Orkut Picture Scraps at Goodlightscraps

வரப்போகும் 2012 ஆம் வருடத்தில், அனைவரது வாழ்விலும் உள்ள சங்கடங்கள் விலகி, சந்தோசம் பெருகி, நினைத்தது நடந்து, எல்லோருக்கும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வருடமாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.



இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், சக வலையுலக நண்பர்கள், மற்றுமுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

---------------------------------------------------------------------------------------------------------
புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில நண்பர்கள் நேசம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர், இணையத்தின் வாயிலாக  அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய நீங்களும் இணைந்து ஊக்குவியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு 

நன்றி..!

Saturday, November 26, 2011

வாழ்வின் நிதர்சனங்கள்..!



நண்பர்களோ, உறவினர்களோ சிறு வயதில் அறிமுகமாகும் போதும், கிடைக்கும் போதும் ரொம்பவே மனதிற்கு நெருக்கமாகி போகிறார்கள், கூடி விளையாட, பகிர்ந்து உண்ண, சண்டை போட, போட்ட சண்டையை மறந்து விட்டு மீண்டும் பேசி மகிழ என்று சிறு வயது நட்புகளும், உறவுகளும்தான் எவ்வளவு நெருக்கமான உறவுகளாக ஒவ்வொருவருக்கும் அமைகிறது.

குழந்தை பருவத்தில் இருந்து வளர வளர கிடைக்கும் நட்புகளும், உறவுகளும் மாறிக் கொண்டே வருகின்றன, ஆனால் குழந்தை பருவத்து சண்டை மட்டும் மாறாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது, முன்னர் பல்லால் கடித்தவர்கள், இப்பொழுது கையால் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால் குழந்தைகளின் சண்டை குழந்தைதனமானது என்பது தெரியாமல் இப்பொழுது எத்தனை பெற்றோர்கள் சண்டை போடுகிறார்கள்?

சமீபத்தில் எங்கள் காம்பவுண்டில் இருந்த ஒரு குடும்பம் காலி பண்ணிக் கொண்டு போனார்கள், அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவர்களது குழந்தை அடுத்த குழந்தையோடு சண்டை போடும் போது மற்றவர்கள் தடுக்கிறார்கள் என்பதுதான் காரணமாம்.

எப்பொழுதுமே அந்த அம்மா ஒரு உக்கிர பார்வையோடுதான் திரிந்து கொண்டு இருப்பார், அவர்களது வீடும் 13ம் நம்பர் வீடு போலவே தெரியும், குழந்தைகளின் சண்டையில் அந்தம்மாவின் பையன் அடிவாங்கி வந்துவிட்டால் போச்சு, பையனை வெள்ளாவி வைக்காமலே வெளுத்து விடுவார், இப்படித்தான் இருக்கிறது சில மனிதர்களின் மனம், நெருக்கமான உறவுகளோ, நண்பர்களோ இல்லாமல் ஊர் விட்டு ஊர் வந்து வாழும் பல குடும்பங்களில் இந்த நிலைதான் நீடிக்கிறது.

தன்னுடைய கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள இயலாமல் அனைத்தையுமே மனதில் எத்தனை காலம்தான் பூட்டி வைத்து கொண்டு ஒருவர் வாழ முடியும், நீருக்குள் அமிழ்த்தி வைக்கும் பந்தினை போல வெளியே வந்துவிடாதா?

குழந்தை பருவம், மாணவ பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் காலங்கள் என ஒவ்வொரு கால கட்டங்களிலும், நட்புகளும், உறவுகளும் மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கிறார்கள், அவற்றில் சிலர் மனதிற்கு நெருக்கமானவர்களாகவும் அமைகிறார்கள், ஆனால் அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாதவாறு, படிப்பு, வேலை, குடும்பம், குட்டிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் பிரிவுகளாக அமைந்து விடுகின்றன.

கடைசியாக நிகழ்காலத்தில் இருக்கும் நட்புகளோ, உறவுகளோதான் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்களுடன்தான் நம்முடைய சுக, துக்கங்கள், சந்தோசங்கள், ஏமாற்றங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது, எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவும், அப்படியே வாழ்ந்து பழகவும் வேண்டியுள்ளது.

வாழும் காலத்தில் எதனையுமே சேர்த்து வைக்க முடியாமல், கஷ்ட ஜீவனம் நடத்தும் மனிதர்களுக்கு, மனதிற்கு நெருக்கமான ஒரு நட்பினையோ, உறவினையோ கூட சம்பாதிக்க முடியாமல், அல்லது அப்படி அமையாமல் போவது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்?

சமீபத்தில் நண்பர் ஒருவரின் மச்சானின் அப்பா இறந்து விட்டார், கொஞ்சம் தொலைவில் உள்ள நகரம் அது, வண்டி பிடித்து சென்ற நண்பர்கள், இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், சரக்கு எதுவும் இல்லையா என மனசாட்சி இல்லாமல் கேட்டு வாங்கி குடித்தபின் தான் வந்தார்கள், தந்தை இறந்த துக்கத்தை மற(றைத்)ந்து விட்டு சரக்குபசாரம் செய்து அனுப்பினார் அவர், துக்க வீட்டிலேயே இப்படியென்றால் கல்யாண வீட்டில் கேட்கவா வேண்டும்?

கல்யாணமா? காது? குத்தா? சீரா? – நான் உம்புள்ளைக்கு இவ்வளவு செஞ்சிருக்கேன், நீயும் இவ்வளவு செய்யு, அந்தக்கா வூட்டுக்கு நான் அய்நூறு ரூபா மொய் வச்சேன், அவ என்னடான்னா எனக்கு அம்பதுதான் வச்சிருக்கா? விடு வெச்சுக்கிறேன், இனிமே அவ வீட்டு படிகூட மிதிக்க மாட்டேன்

இங்கு எல்லாமே தன்னலமாக போய் விட்டது, ஒரு நல்லதுக்கும், கெட்டதுக்கும் கூட நமக்கு என்ன லாபம் என சிந்தித்து பார்த்து பங்கெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள கூடிய நிலைமையில்தான் உள்ளோம்

ஒவ்வொருவரும், ஒவ்வொரு கால கட்டங்களிலும் நட்புகளையும், உறவுகளையும் பற்றிய சுய ஆய்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் மட்டுமே இன்று வரை மாறாமல் உள்ளது.

காலம் எனும் வகுப்பு ஆசிரியர், அனுபவம் எனும் பாடத்தினை எல்லோருக்கும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான், அப்பாடத்தில் எளிதாக பாசாகிவிடுகிறவர்கள் ஈசியாக வாழ்வை புரிந்து கொண்டு முன்னேறிவிடுகிறார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு பாசாகிறவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் சிரமபடுகிறார்கள்.

ஆனால் தொடர்ந்து யாராலும் பாசாகமல் பெயிலாக முடியாது, அப்படி பெயிலானால் மொத்தத்திற்கும் பெயிலாக வேண்டியதுதான்.

சரி அத விடுங்க, இப்ப நீங்க சொல்லுங்க, நீங்க பாசா? பெயிலா?

   

Wednesday, November 16, 2011

அடிமாடா போலாமா?

என்ன என்ன மனுசன்னு நினைச்சீங்களா? இல்லை மாடுன்னு நினைச்சீங்களா?

மாடு மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யுறேன்…..

இதுமாதிரியான உதாரணங்களே போதும் மாடுகள் மனிதர்களை விட எவ்வளவு உடல் உழைப்பினை கொடுக்கின்றன என்பதற்கு, பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களுக்கு எதேனும் ஒரு வகையில் அது பாலாகவோ, மோராகவோ, தயிராகவோ, சாண எரிவாகவோ, விவசாய வேலைக்கோ, மாட்டு வண்டி ஓட்டுவதற்கோ, இல்லை உழுவதற்கோ என்று எத்தனையோ வேலைகளை பசுமாடுகளும் எருதுகளும்தான் செய்து வருகின்றன

இந்த ஜீவன்கள் மனிதர்களை நம்பி இருக்கின்றனவா இல்லை மனிதர்கள் இந்த ஜீவன்களை நம்பி இருக்கிறார்களா?

என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே உணர்ந்து கொள்ள முடியும், சாதாரணமாக எட்டு மணி நேரம் வேலை செய்யும் மனிதனுக்கு உணவு உண்ணும் நேரம், தேநீர் இடைவேளை நேரங்கள் அனைத்தும் போக சரியான அளவு ஊதியம் கொடுக்காவிட்டால் என்ன பிரச்சனை செய்வார்கள்?

ஆனால் நேரம் காலம் பார்க்காமல் ஆண்டு முழுவதும் தான் வாழும் காலம் முடிய வெறும் புல்லுக்கட்டும் புண்ணாக்கும் மட்டுமே உணவாக கொண்டு தன்னையே கொடுத்து உழைத்து கொண்டிருக்கும் மாடுகளை அதன் வயதான காலத்தில் கூட வைத்து பராமரிக்காமல் அடிமாடாக அனுப்புவதில் என்ன நியாயம் இருக்க போகிறது?

தலைவலி, காய்ச்சல், உடல்வலி, அந்த நோய், இந்த நோய் என்று எந்த பசுமாடோ இல்லை எருதுகளோ வேலை செய்யாமல் படுத்துக் கிடப்பதுண்டா? தன் வாழ்நாள் முழுக்க அதன் கன்று குடிக்க வேண்டிய பாலை கூட முழுதாக குடிக்க விடாமல் தடுத்து எடுத்து விற்பனை செய்து வருவாயை பெருக்கி கொள்ளும் மனிதன் அதன் கடைசி காலத்திலாவது அதனை நிம்மதியாக இறக்க விட வேண்டுமா இல்லையா?

அவ்வாறில்லாமல் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனுடைய கழுத்தில் பிரைஸ் டேகினை (PRICE TAG) தொங்க விட்டு பார்ப்பது சரியாக இருக்குமா?

பெற்ற தாய் தந்தையாகட்டும், இல்லை பசுமாடுகளாகட்டும், எந்த உயிரினமாக இருந்தாலும் தான் வாழும் காலம் முடிந்து, உழைக்கும் காலம் முடிந்து கடைசி காலத்தில் அவர்களை நிம்மதியாக உயிர் பிரிய விடுவதே சரியானதாக இருக்கும், பராமரிக்க முடியாவிட்டால் அவைகள் விட்டால் போதும், எங்காவது போய் மேய்ந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பார்க்கும் கருணை பார்வைக்கு ஒப்பானது ஒரு பசுமாட்டின் பார்வை, தாய் கூட சில சமயம் குழந்தையை கோபப்படுவாள், ஆனால் எந்த பசுமாடாவது கோபபார்வை பார்த்து கண்டதுண்டா?


கன்றுகுட்டியாய் பிறந்ததில் இருந்து வளரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களுக்கு பயனளித்து, உடல் தளர்ந்து, பலம் குன்றி, வயிறு ஒட்டிப்போய், எழும்பு தெரிய, கண்களில் வழியும் கண்ணீரோடு சாவதற்காக அடிமாடாக லாரியில் போகும் போது அவைகள் மனதில் என்ன நினைக்கும் என்று என்றாவது எண்ணி இருக்கிறோமா?

சிந்திக்க தெரிய இருக்க வேண்டிய ஆறாவது அறிவு இல்லாததால் அவை விலங்கினங்களாக உள்ளன, அவற்றுக்கும் சிந்திக்க தெரிந்து, என்ன தப்பு செய்தோம்? பிறந்ததில் இருந்து இவர்களுக்காக உழைத்ததை தவிர? கேவலம் காசுக்காகவா நம்மை கொல்வதற்காக அனுப்புகிறார்கள் என்று நினைத்தால் எந்த ஜென்மத்துக்கும் நம்முடைய சந்ததிகள் விருத்தியாகுமா?

காட்டில் வாழும் கொடிய விலங்குகளாக இல்லாமல், வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்கினங்களாக இருப்பதாலே ஆடு, மாடு, கோழி போன்றவை வீட்டு விலங்குகளாக சொல்லப்படுகின்றன, இந்த வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கு ஜீவ காருண்யம் என்று வேறு சொல்கிறார்கள், இப்படி இந்த ஜீவன்களை கொல்ல சொல்லி எந்த காருண்யம் சொல்கிறது?

அதுவாவது பரவாயில்லை, சரியோ தப்போ இறைச்சி வெட்டுபவர்களும், கசாப்பு கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இது தங்களுடைய தொழில் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் ஒரு குடியானவன் வீட்டில் இருந்து அடிமாடாக அனுப்புவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதுவே இதனை எழுதவும் காரணமாக அமைந்துவிட்டது.

கடைசியாக, பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதும், உழைத்து களைத்த பசுமாடுகளை பணத்துக்காக அடிமாடாக அனுப்புவதும் ஒன்றே, இனிமேல் வீட்டு விலங்குகள் என்று பசுமாடுகளை சொல்லாதீர்கள், உண்மையில் வீட்டு விலங்குகள் அவையல்ல..! ……………………………….???????

Saturday, September 24, 2011

உழைப்பாளிகளும் பிச்சைகாரர்களும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் ...


சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் டீ சாப்பிட ஒரு பேக்கரிக்கு சென்றிருந்தோம், உள் நுழைவதற்கு முன்பே பிச்சைகாரர்கள் அய்யா அம்மா என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள், இந்தியா முழுக்கவே பிச்சைகாரர்கள் தொல்லை இருந்தாலும், திருப்பூரில் அது ரொம்பவே ஜாஸ்தி, ஒவ்வொரு கடைக்கு முன்பும் குறைந்தது இரண்டு பேராவது இருப்பார்கள், டீ சாப்பிட வருபவர்கள் இவர்களுக்கும் காசு கொடுத்து விட்டுதான் செல்ல வேண்டும், அந்தளவு தொந்தரவு ஜாஸ்தியாக இருக்கும்.

இவர்களில் புரபசனல் பிச்சைகாரர்களை விட இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்களின் தொல்லை ரொம்பவே அதிகம், விட்டால் காலில் விழுந்து விடுவார்கள், காசு கொடுக்கும் வரை காலை விடமாட்டார்கள், இன்ஸ்டண்ட் காபி போல அது என்ன இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்கள் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை, தேவைப்படும் போது மட்டும் பிச்சை எடுத்து தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பிச்சைகாரர்கள்தான் இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்கள்.

ரொம்ப நாள் முன்பு ஒரு நாற்பது வயது நெருங்கிய நடுத்தர வயது பெண்மணி, கண்ணு ஒரு இரண்டு ரூபாய் இருந்தா குடேன், ஊருக்கு போறதுக்கு இரண்டு ரூபாய் பத்தல என்று சொன்னதால், இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு சென்று விட்டேன், மதியம் ஒரு வேலை நிமித்தமாக வண்டியில் சென்றுகொண்டிருந்த போது பார்த்த போது ஒரு டாஸ்மாக் வாயிலில் குவாட்டரை பாட்டிலை ராவாக கவுத்து கொண்டிருந்தது அந்த நடுத்தரம், என்னை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு வேறு சிரித்தது, நான் அப்படியே ஷாக்காகிவிட்டேன்.

பிறகு அடிக்கடி அந்த பெண்மணியை பார்ப்பேன், என்னிடமே வேறு காரணம் சொல்லி காசு கேட்கும், யக்காவ் உங்கள எனக்கு நல்லாவே தெரியும் என்பேன், சிரித்துக் கொண்டு போய்விடும். 


பிறகு ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் வெயிட்டிங்கில் உள்ள பஸ்ஸில் உட்கார்ந்திருந்த போது, கடும் வெயிலில் இரண்டு காலும் இல்லாத ஒருவர், வெறும் வேஷ்டி மட்டும் உடுத்திக் கொண்டு சிறிய சக்கரம் பொருத்திய வண்டியை கையாலே கஷ்ட்டப்பட்டு இழுத்துக் கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார், பார்க்கவே பரிதாபமாக இருக்க, ஒரு பத்து ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன்.

பிறிதொரு நாளில் அதே ஆளை தமிழ்நாடு ஏசி தியேட்டரில் ஹாயாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கையில், தியேட்டர் ஸ்கீரினை கிழித்து அந்தாளை தொங்க விட வேண்டும் போல ஆத்திரம் வந்தது.

இப்படி வாய் பேசாத ஊமை என அச்சிடப்பட்ட காகிதம் கொடுத்து பிச்சை எடுத்தவர், பாம்பு படம் போட்ட தட்டை வைத்துக் கொண்டு கோயிலுக்கு போறேன்பா என்றவர், புள்ளைக்கு கண்ணாலம்பா காசு கொடு என்றவர், ரொம்ப பசிக்குதுங்க என்றவர், குழந்தையை கையில் வைத்துக் கொண்டு காசு கேட்டவர், வெளியூருங்க பர்ச பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்க என்று சொன்னவர் இப்படி பல பல பிச்சைகாரர்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாலோ என்னவோ பிறகு யார் பிச்சை கேட்டாலும் சந்தேகத்தோடு பாக்கவும், சில்லறை காசு இருந்தாலும் கொடுக்க மனம் இல்லாமலும் போயிற்று.

நான் பழைய நிறுவனத்தின் பணிபுரியும் வரை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட டவுன் பஸ் ஒன்றில் பயனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன், அப்படி பயணம் செய்து கொண்டிருக்கும் போது, தலை முழுக்க நரைத்த அறுபது வயதை கடந்த பாட்டி ஒருவர் ரெகுலராக பிச்சை எடுப்பார், அவரது கண்களில் நிரந்தரமாக ஒரு சோகம் குடி கொண்டிருக்கும், சில சமயம் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும், நானும் வாரத்தில் ஐந்து நாட்களாவது அவரை பார்ப்பேன், காசும் கொடுத்துக் கொண்டுருந்தேன்.


மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை அடிக்கடி பார்த்தால் என்னவோ, அவருக்கும் காசு கொடுக்க மனம் வரவில்லை, அவரும் நான் பழக்கப்பட்டவன் என்பதால் தினமும் என்னிடம் கேட்பதும், அவரது முகத்தை பார்த்தாலே இரக்கப்பட்டு விடுவேனோ என எண்ணி நானும் அவரை தவிர்ப்பதும் தொடர்கதையாகி போனது, இவ்வாறு ஒருநாள் அவர் பிச்சை கேட்கையில் காது கேட்காதவாறு திரும்பிக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்கு பின் அவர் எங்கு சென்றிருப்பார் என பார்க்க நினைத்து திரும்பினால், ஒரு முப்பது வயதுக்கு உட்பட்ட குடிகாரன் ஒருவன் அந்த மூதாட்டியை அடித்து உதைத்து அவர் பிச்சை எடுத்த காசை பிடுங்கிக் கொண்டு போய்விட்டான், அந்த குடிகாரன் அந்த மூதாட்டியின் மகனாம், இது தினமும் நடக்கும் ஒன்று என்றும், கேட்டால் என் அம்மாவ நான் அடிப்பேன் கேட்க நீங்க யாருடான்னு சண்டைக்கு போவானாம், குடிகாரன்கூட என்ன பிரச்சனைன்னு யாரும் கேட்காமலே ஒதுங்கிக்கிறாங்கன்னு ஒருவர் சொல்லி கொண்டிருந்தார்.

அவன் அடித்த அடியில் கீழே விழுந்த அந்த அம்மா எழ முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தார், பார்த்த எனக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது, சே இத்தனை நாள் காசு கொடுத்துக் கொண்டிருந்தமே, இந்த வயதில் இவர் ஏமாற்றவா போகிறார், போய் அவருக்கு உதவி செய்ய வேண்டும், கையில் இருக்கும் பணத்தை கொடுக்கலாம் என நினைத்த போது பேருந்து புறப்பட்டு விட்டது, வேலைக்கும் நேரமாகி விட்டதால், கீழே இறங்கவும் மனம் வரவில்லை, அன்று அவருக்கு பணம் கொடுக்காதது நாள் முழுவதும் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

சரி நாளைக்கு கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும், இனி மீண்டும் தினமும் காசு கொடுக்கலாம் என நினைத்திருந்தேன், ஆனால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என மீண்டும் அவரை சந்திக்கவே இல்லை, காலப்போக்கில் நானும் அவரை மறந்து விட்டேன், ஏறக்குறை ஆறுமாத கால இடைவெளி இருக்கும் அந்த குடிமகனை பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன், பிளாட் ஆகி வாந்தியெடுத்து நாறிக் கிடந்தான், அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் அவனை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார், அவனின் அம்மா அந்த வயதான மூதாட்டி இறந்து போய் விட்டார் என கூறிக் கொண்டிருந்ததை கேட்ட போது, மீண்டும் அந்த குற்ற உணர்ச்சி எனக்கு வந்து விட்டது, இதோ இப்பொழுது இதை எழுதும் தருணத்திலும் அதனை உணர்கிறேன்.

சரி விசயத்திற்கு வருகிறேன், நாங்கள் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கையில்  மனநலம் குன்றியவர் போல் ஒருவர் சரியாக நடக்கவும் முடியாமல், கை, கால்கள் ஒருபக்கம் லேசாக இழுத்தது போல நடந்து வந்தார், வந்தவர் மற்ற பிச்சைகாரர்கள் போல பிச்சை எடுக்க போகிறார் என நினைத்துக் கொண்டிருக்கையில், கையில் கொண்டு வந்திருந்த துணி மூட்டையை அவிழ்த்து அதிலிருந்து ஊது பத்திகளை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அப்பொழுதுதான் அவருக்கு பேச்சும் சரியாக வரவில்லை என்று தெரிந்தது, வெகு நேரம் கூப்பாடு போட்டும் யாரும் வாங்கவில்லை, அதை பார்த்த ஒருவர் ஒரு பத்து ரூபாய் தாளை வெச்சுக்கோ என நீட்டினார், அதனை அவர் வாங்க மறுத்து விட்டார், ஊதுபத்தி வாங்கிக்கொள்ளுமாறு கேட்டார், பிறகு அவரும் ஒன்று வாங்கிக் கொண்டார், அதனை பார்த்து இன்னும் இரண்டு பேர்கள் வாங்கினார்கள், நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன்.

காரில் வந்த பணக்காரர் ஒருவர், 100 ரூபாய் தாளை அவருக்கு பிச்சையாக கொடுத்தார், அவர் மீண்டும் வாங்க மறுத்து ஊது பத்தி வாங்க சொன்னார், அந்த பணக்காரர் எனக்கு ஊதுபத்தி வேண்டாம், சும்மா வைத்துக் கொள் என்று சொன்னார், அதனை கேட்டு கோபப்பட்ட அவர் நான் பிச்சை எடுக்க வரவில்லை, உழைத்து சம்பாதிக்கவே விரும்புகிறேன் என திக்கி திணறி சொன்னதை கேட்டு வாயடைத்து போனவர் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

போனவர் அவர் மட்டுமல்ல அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மற்ற பிச்சைகாரர்களும்தான், கை கால் சரிவர முடியாமல், பேச முடியாமல், நடக்க முடியாமல் இருப்பவரே உழைத்து சம்பாதிக்க நினைக்கும் போது எல்லாம் சரியாக இருந்தும் சோம்பேறித்தனமாக பிச்சை எடுக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே அவர்களை அங்கிருந்து அகல செய்தது.

விற்றது குறைவே ஆகிணும் தான் உழைத்து சம்பாதித்ததில் பெருமையோடு அடுத்த இடத்தை நோக்கி தட்டு தடுமாறி நகர தொடங்கினார் அந்த ஊதுபத்தி விற்பவர்.

வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்பதை போல, உழைப்பின் நிழல் ஊரெங்கும் பரவித்தான் காணப்படுகிறது, ஆனால் அந்த நிழலில் ஒதுங்க மனமில்லாமல் வெயிலிலேயே கிடக்கும் சோம்பேறிகளை என்ன சொல்வது?!!!