Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Saturday, September 7, 2013

என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!


நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ் கிடைக்குமா? அப்ப நாங்க போடற பதிவு எல்லாம் மொக்கையா? என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்? ஏதோ பதிவர் சந்திப்பு திட்டி ஒரு போஸ்ட் போட்டா ஹிட்ஸ் கிடைக்குமேன்னு போட்டான், அப்படி போட்டா என்ன பண்ணனும்? அத படிச்சு பாத்து நாலு வார்த்தை திட்டுனமான்னு விட்டுட்டனும், அது தானய்யா உலக வழக்கம்? அதவிட்டுட்டு நேத்து பிளாக் ஆரம்பிச்ச சின்ன பசங்கள விட்டு இவன கெட்ட வார்த்தையில திட்டி போஸ்ட் போட்டு பழகுங்கடான்னு சொல்லியிருக்கீங்க? பழகுறதுக்கு இது என்ன பிளாக்கா? இல்லை பள்ளிக்கூடமா? ச்சே எவ்வளவு கெட்டவார்த்தை ?

அட இதே மாதிரி ஏற்கனவே நிறைய சம்பவம் நடந்திருக்கு, நிறைய தடவை ஹிட்ஸ்க்காக போஸ்ட் போட்டிருக்கான், அப்பல்லாம் இவ்வளவு கழுவி கழுவி நீங்க ஊத்தல, அட திட்டுனா கூட இவனுக்கு வலிக்ககூடாதுன்னு ரெண்டு மூணு கெட்டவார்த்தையோட நிப்பாடியிருக்கீங்க அந்த நாகரிகம் தெரியாது உங்களுக்கு?

ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன், பத்தாயிரம் ஹிட்ஸ் வர மாதிரி சொந்தமா எங்களுக்கும் பதிவெழுத தெரியும், ஆனா நாங்க எழுத மாட்டோம், எழுத தெரியாது, கடைசியா உங்களையெல்லாம் ஒன்னே ஒன்னு எச்சரிச்சிகிறேன், என் கட்சிக்காரன் போஸ்டுக்கு கமெண்டு, போஸ்டு போடறதெல்லாம் நிறுத்திக்கங்க, இல்லை எதிர்கட்சிக்காரங்க பிளாக்குல ஆயிரம் கவிதைகள் எழுதி கமெண்டில் போடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம் ..!

Thursday, July 12, 2012

தி அமேசிங் திருப்பூர் ஸ்பைடர்மேன் !!!


டிஸ்கி :- இதுவொரு மொக்கை பதிவு பிடிக்காதவர்கள் தயவுசெய்து இங்கேயே தவிர்க்கவும்.


தி அமேசிங் ஸ்பைடர்மேன்னு ஒரு படம், அசத்தும் ஸ்பைடர்மேன்ங்கற டைட்டில்ல மழைபெய்ற பிரிண்டுல பாடாவதி தமிழ் டப்பிங்ல சமீபத்துல ஒருநாள் பார்த்தேன், படம் பார்த்துட்டு ரெண்டு நாளா தீவிர யோசனையில இருந்தேன், அமெரிக்காவுக்கு ஒரு ஸ்பைடர்மேன் இருக்கான், இந்தியாவுக்கு யாரு இருக்கா? தமிழ்நாட்டுக்கு கூட ஆல்ரெடி யெல்லோ ஸ்கார்ப் மேன், க்ரீன் சாரி வுமன்னு ரெண்டு பேர் முகமூடி போடாம சுத்திகிட்டு இருக்காங்க, நம்ம திருப்பூருக்குன்னு யாரு இருக்கா?

அதிபயங்கர சிந்தனையின் முடிவுலதான் அந்த அருமையான(!) யோசனை உதித்தது, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், எண்ணித்துணிக கருமம்னு காளமேகபுலவரா? இல்ல இல்ல அந்த தத பததத உங்களுக்கு தெரியாத புலவர்கள் இல்லை அவங்களே சொல்லியிருக்காங்களே, சரி கருமம் எண்ணியாச்சு துணிஞ்சர வேண்டியதுதான்னு நானே ஸ்பைடர்மேனா மாற முடிவு பண்ணிட்டேன், அட இதுக்குள்ள டென்சனானா எப்படி? அமைதி அமைதி.

சரி ஸ்பைடர்மேனோட முக்கிய அடையாளமே டிரஸ்தான், அதுக்கெங்க போறது? சூப்பர்மேன் டிரஸ்னா ஈசியா பண்ணிடலாம், சரி நம்மூர்ல இல்லாத பனியன்சா, எதாவது ஒரு ரவுண்ட் நெக் டீ சர்ட்டும், ஒரு பனியன் பேண்டும் இப்போதைக்கு வாங்கி போட்டுக்கலாம், பின்னாடி பாப்புலர் ஆனா ஒரிஜினல் டிரஸ் ரெண்டா வாங்கி அழுக்கானா துவைச்சு போட்டுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு, முகமூடியெல்லாம் தியேட்டர்லயே ப்ரீயா கொடுக்கறாங்க.



பழைய ஸ்பைடர்மேன் படம் மாதிரி இல்லீங்க மேட்டஸ்ட் ஸ்பைடர்மேன் படம், சிலந்தி வலையெல்லாம் அவனே சொந்தமா பண்ணி யூஸ் பண்ணுறாரு படத்துல, நம்ம எங்கிட்டு போய் அந்த மாதிரி வலையெல்லாம் பின்னுறது, எங்க வீட்டுல இருக்கறதே கொசுவலை மட்டும்தான், இப்போதைக்கு அதையே நாலா எட்டா கட் பண்ணி டெம்ரவரியா யூஸ் பண்ணிக்கலாம், பின்னாடி கொஞ்சம் அமவுண்ட் சேர்ந்தா நாஞ்சில் மனோகிட்டயோ, விஜயன் சார்கிட்டயோ சொல்லி அவங்க ஏரியாலவுல எதாவது மீன்வலை செக்கண்ட்ஸ்ல கிடைச்சா வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.

ஓகே டிரஸ், முகமூடி, வலையெல்லாம் ரெடி, அடுத்து தலைகீழா பறக்கறதுக்கு பிராக்டிஸ் பண்ணனுமே? சின்னவயசுல ஜிம்பார்ல தலைகீழா தொங்கி கீழ விழுந்து அடிபட்டதுமில்லாம, வீட்டுலயும் தனியா அடிவாங்குனது ஞாபகத்துக்கு வந்தது, சரி இப்போதைக்கு ரிஸ்க் எடுக்க வேணாம் ஸ்கிப்பிங் கயித்தயே வச்சு சமாளிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எல்லாம் ஓகே இப்பத்தான் முக்கியமான ஆப்பரேசன், சிலந்தி ஒன்னு நம்மள கடிக்கனுமே, அப்பத்தான பார்லேஜீ சக்திமான் கணக்கா ரஃப்பாக முடியும்? இன்னைக்குன்னு பார்த்து சிலந்தி ஒன்னும் கண்ணுல சிக்க மாட்டேங்குது, அப்படி இப்படின்னு தேடிப்புடிச்சு பக்கத்து வீட்டு கிச்சன்ல இருந்து ஒன்ன புடிச்சிட்டு வந்தாச்சு.

கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கனுமே, ஒருகையில சிலந்தி பூச்சி, மறுகை சிலந்தி வாய்கிட்ட வச்சாச்சு, ஓகே ரெடி யுவர் டைம் ஸ்டார்ட் நவ், ஹோம் ஸ்வீட் ஹோம் கேம் ஷோ கணக்கா டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ்னு  டைமர் மனசுக்குள்ள ஓடுது, சிலந்தி கடிச்சதும் மினிமம் அண்டர்டேக்கர் மேக்சிமம் அர்னால்டாவது ஆகிருவோம்னு மனச திடப்படுத்திட்டு சிலந்தி முன்னாடி கைய நீட்டிட்டு இருந்தேன்.

போர், த்ரீ, டூ, ஒன்னு நெருங்கியதும் கடைசி கனநேரத்தில் ஒரு சிந்தனை ஏற்பட்டுவிட்டது, மனச மாத்திகிட்டேன், சிலந்தியவும் உங்க வூட்டுக்கு போடான்னு தொறத்தி விட்டுட்டேன், அது என்னன்னா?

அமெரிக்காவுல ஸ்பைடர்மேன் இருக்கான்னா அதுக்கு ஒரு காரணம் இருக்குது, அங்கயெல்லாம் உயர உயரமான கட்டிடங்களா இருக்குது, சோ ஸ்பைடர்மேனால ஈசியா கட்டிடத்துக்கு கட்டிடம் ஈசியா நூல் விட்டு பறக்க முடியும், எங்க ஊருல அதிகபட்சமாவே கரண்டு கம்பம் மட்டும்தான் ஹைட்டா இருக்குது, அதுல நூல் விட்டு பறந்தா அரபாடி லாரில அடிபட்டு சாகரது நிச்சயம், இல்லைன்னாலும் கீழ இருக்கற படம் மாதிரியாவது சிக்கி சாக வேண்டியதுதான்.


சோ இப்போதைக்கு ஸ்பைடர்மேன் கனவுத்திட்டத்தை டிராப் பண்ணிட்டேன், ஆனா எப்போ எங்க ஊருலயும் பாரீன் மாதிரி கட்டிடங்கள் வருதோ அப்போ மறுபடியும் டிரை பண்ணுவேன்.


ஓகே பாஸ் படிச்சிட்டீங்களா? நம்ம அடுத்த ஆப்பரேசன்?


Thursday, December 29, 2011

பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை - முன்னோட்டம்



பவர்ஸ்டாரை பற்றி அறிமுகம் தேவையில்லை, தற்பெருமை பேசுவதே தன்னம்பிக்கை என்றிருக்கும் தமிழ்நாட்டு ஒஸ்தி நடிகர்களுக்கு மத்தியில், தமிழ்நாடே தன்னை பற்றி பேசும் போதும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர் நமது பவர்ஸ்டார் டாக்டர் சீனீவாசன் அவர்கள், தமிழ்நாட்டில் பவர்ஸ்டாரை பற்றி தெரியாதவர்கள் பவுடர் பால் குடிக்க கூட லாயக்கில்லாதவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பவர் நமது பவர் ஸ்டார்.

கூச்சம் போனால்தான் நடிகனாக முடியும், நமது சத்துணவு மக்கள் கட்சி ச்சீ ச்சீ சாரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.நாட்டாமை சரத்குமார் அவர்களுக்கு கூச்சம் போவதற்காக நமது தலைவர் கவுண்டமணி அவர்கள் கட்டபொம்மன் படத்தில் எத்தனை பாடுபட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள், அப்படியாப்பட்ட கூச்சமே கூச்சப்படும் அளவிற்கு நடித்துக் காட்டிய திறமைசாலி நமது பவர்ஸ்டார்

நடிக்க வந்த சிறிது காலத்திலேயே திரு. சாம் ஆண்டர்சன் அவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தவர் பவர்ஸ்டார், பவர் ஸ்டாரின் புகழ் தென்னிந்திய சினிமா உலகத்தையும் தாண்டி அகில உலகில் பரவி இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த உலக திரைப்பட விழாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பே சாட்சியாகும்

பவர்ஸ்டாரின் புகழை பொறுக்க முடியாமல், அவர் எதாவது விழாவிற்கு வந்தாலோ நடிகர்கள் சிதறி ஓடுகிறார்கள், கூட நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்காமலும் எஸ்ஸாகிறார்கள், அதற்கு ஒருபடி மேலே போய் விக்ரம் போன்றவர்கள் தங்கள் படத்தில் லத்தீஸ்வரன் என்ற பெயரில் கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம், அவர்கள் இதனை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், மீண்டும் அப்படி எதாவது நடந்தால் விக்ரமின் வீட்டு முன்பு பவர்ஸ்டாரின் படம் காட்டும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.  

அப்படியாப்பட்ட நமது பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை படம் ரீலீசாக போகிறது என்பது அவரது ரசிகர்களாகிய நமக்கு பெருமைதரக்கூடிய விசயம், அனேகமாக அண்ணன் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்து ஷங்குவுக்கும், லிங்குவுக்கும் டஃப் காம்படீசனை தருவார் என எதிர்பார்க்கிறோம், இப்பொழுது முன்னோட்டமாக டிரைலர் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது, கண்டுகளியுங்கள் மக்களே.



நல்லவங்க படம் ஓடும், ஆனா கொஞ்ச நாள் ஆகும், அதுவரைக்கும் நாமதான் ஓட்டனும் என்ற சந்தானம் அவர்களின் புகழ்பெற்ற பொன்மொழிக்கு ஏற்ப லத்திகா படம் இருநூற்றி ஐம்பது நாளை கடந்து வெற்றிகரமாக ஓட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் ஆனந்த தொல்லை அப்படியல்ல, இந்த படம் உங்களுக்கு ஒரு அதிரடி தொல்லையாக இருக்கும் எனபதை மட்டும் இங்கு பணிவோடு தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறோம்.

பவர்ஸ்டாரின் பெயர் சூப்பர் ஸ்டாரின் பெயரை போலவே ஒவ்வொரு எழுத்தாக மாறி மாறி வருவதை பாருங்கள் மக்களே, இதிலிருந்தே தெரியவில்லையா தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் யாரென்பதை? ஐம்பது படத்திற்கு மேல் நடித்தும் கெட்டப் மாற்ற யோசிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தான் ஹீரோவாக இருந்தும் தனது இரண்டாவது படத்திலேயே கொடூர வில்லனாக நடிக்கும் தைரியம் யாருக்கு வரும்?

இந்த படத்தில் இருக்கும் பவர்ஸ்டாரின் ஹேர்ஸ்டைல் வேறு எந்த நடிகர்களாலும் செய்ய முடியாத ஒன்று, அதற்கான உடல்மொழியும், தலைமொழியும் பவர்ஸ்டாருக்கு மட்டுமே உண்டு, கமல்,விக்ரம், சூர்யா போன்ற மாறுவேட போட்டி நடிகர்களாலேயே செய்யமுடியாத சாதனை இது, அவ்வளவு ஏன்? பிளாக் அண்ட் வொயிட் பியூட்டி சலூன்காரர்களால் கூட செய்ய முடியாது, (ஏனென்றால் அது விக்)

இறுதியாக ஆனந்த தொல்லை படத்தின் முதல்நாள், முதல் ஷோ டிக்கெட் கிடைக்காதவர்கள் யாரும் தீக்குளிக்கவோ தற்கொலை செய்யவோ முடிவு செய்யாதீர்கள், அதையெல்லாம் படம் பார்த்த பிறகு செய்து கொள்ளுங்கள், மேலும் படம் பார்த்தவர்கள் ஆத்திரத்தில் தியேட்டரின் மீதும் பேருந்துகளின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி பவர்ஸ்டாரின் பெயரை கெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், இன்று பவர்ஸ்டாரை பார்த்து சிரிப்பவர்கள் நாளை சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், அப்படிபட்ட நிலையை ஏற்படுத்தி கேப்டனை மிரள செய்வோம் என உறுதிமொழி ஏற்போம், இது ஏதோ ஒரு பதிவு தேத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அதையும் தாண்டியது, ஏனென்றால் டிரைலரை பார்த்தீர்களானால் பறந்து உதைப்பதில் கேப்டனுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை எங்கள் பவர்ஸ்டார் என்பது உங்களுக்கு நிரூபனமாகும், எதையோ எழுத நினைத்து இன்னும் எதை எதையோ எழுதிக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்து கொல்கிறேன்.
இவன்
பவர்ஸ்டார் ரசிகர் படை
வட தமிழ்நாடு கிளை
தமிழ்நாடு  


Wednesday, August 3, 2011

பவர் ஸ்டாருக்கு போட்டியா அருவா ஸ்டார்?


மக்களே தமிழ் சினிமாவுல சில சமயம் மட்டுமே பிரம்மாண்டமான படங்கள் வெளிவரும், அதுவும் பெரிய அளவுல பேசப்படும், அதுக்கு அப்புறம் எப்ப இப்படி ஒரு படம் வரும்னு எல்லாரும் ஏங்கிட்டு இருப்போம், எந்திரனுக்கு அடுத்ததா இனி எந்த படம் வரப்போகுதுன்னு எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருந்த நிலையில இதோ இப்ப அடுத்து வரப்போகுது ஒரு மிக பிரம்மாண்டமான படம்

இந்த படம் எந்திரன் படத்தோட வசூல் சாதனைய கண்டிப்பா முறியடிக்கும்னு நம்பலாம், இதுவும் பாக்ஸ் ஆபிஸ், போஸ்ட் ஆபீஸ்னு எல்லா வரலாற்றையும் முறியடிக்க போகுதுன்னு கண்டிப்பாக எதிர்பார்க்கலாம், இந்த படம் உருவாகிட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே தேசிய விருது, கிராமிய விருது, ஆஸ்கார் விருதுன்னு இன்னும் என்னென்ன விருது இருக்கோ அது எல்லாத்தையும் ஒரு பத்து டசன் எக்ஸ்ட்ராவா உருவாக்க சொல்லி ஆர்டர் பண்ணி இருக்காங்களாம்

ஏன்னா இந்த படத்துல அந்த அளவுக்கு பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள், மிகப் பிரம்ம்ம்மாண்டமான சண்டை காட்சிகள் எல்லாத்தையும் அமைச்சிருக்காங்களாம், அது எந்த படம்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆர்வமா இருப்பீங்க அத நான் தடுக்க விரும்பலை, இப்போதைக்கு ஸ்டில்ஸ் மட்டும்தான் ரிலீஸ் பண்ணி இருக்காங்க, பார்த்துக்கோங்க மக்கள்ஸ்ஸ்..


                                      இதுதாங்க அந்த படம் பதினெட்டாம் குடி



பயப்படாதீங்க, இவருதான் படத்தோட ஹீரோ, மேக்கப் போட்டுகிட்டு இருக்காரு


இவருதாங்க அந்த அருவா ஸ்டார்


ஹீரோ மூஞ்சிய நீங்க இன்னும் தெளிவாவே பாக்கலையே


நான் சொன்னேன் இல்லைங்க அந்த பிரம்மாண்டமான சண்டைகாட்சி அது இதுதான்


மிகச்சிறந்த காதல் காட்சி


பயபுள்ளைங்களா லவ் பண்றது எப்படின்னு கத்துக்கோங்க


கையில குடல வச்சிகிட்டு ஆவேசமா பஞ்ச் அடிக்கறார், அப்படியே ஷாக்காகி நிக்குறது சிங்கம் புலி


அட யாரு இது? நம்ம பாண்டியராஜன் மவனா நீயி? பிரம்மாண்டமான படத்துலதான் அறிமுகமாகி இருக்கீங்க, நல்லா வருவீங்க தம்பி..!!!!


என்னா ஸ்டைலு, என்னா போசு, சான்ஸே இல்லீங்க


மிகச்சிறந்த காட்சியமைப்பு


 படம் பார்க்க வரவங்களுக்கு குச்சி ஐஸ்தான்


டேய் தியேட்டர் பக்கம் வந்துட்டு படம் பார்க்காம எஸ்கேப் ஆகப் பாக்குறியா?


அண்ணே யாருன்னே இவங்க? நம்மளயே குறுகுறுன்னு பாக்குறாங்க


நாங்கெல்லாம் நடிச்சா பவர் ஸ்டாருக்கே பவர் போகிடும் தெரியுமுல்ல

-

-

சரி அப்ப போகலாங்களா பதினெட்டாம் குடி???