Showing posts with label கமர்சியல் பக்கம். Show all posts
Showing posts with label கமர்சியல் பக்கம். Show all posts

Thursday, August 16, 2012

கமர்சியல் பக்கங்கள் - 16/08/2012



நாட்டின் 66 ஆவது சுதந்திரதினம் நாடுமுழுக்க நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, ஒவ்வொரு சுதந்திரதினத்தன்றும் நாட்டுப்பற்று பெருக ஒவ்வொருவரும் தேசியக்கொடியை சட்டை பையில் குத்திக் கொள்வதும், வண்டிகளில் ஒட்டி வைப்பதும், பள்ளிகளில் தோரணமாக தொங்கவிடுவதும் வழக்கமான செயல்தான், ஆனால் அடுத்த நாள், அடுத்தடுத்த நாட்களில் பார்த்தால் அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடிகள் வீதியெங்கும் இறைந்துகிடப்பதும், சாலைகளில் பறப்பதும், சாக்கடைகளில் விழுந்துகிடப்பதும் வருடம்தோறும் காணக்கிடைப்பது வருத்தப்பட வேண்டிய நிகழ்வாகும்.

நாட்டின் தேசியக்கொடி எவ்வளவு புனிதமானது, பயன்படுத்திவிட்டு வீசியெறிய இது என்ன தண்ணீர் பாக்கெட்டா? சுதந்திரதினம் முடிந்தவுடன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கமுடிந்தால் மட்டுமே தேசியக்கொடியை வாங்க வேண்டும், இல்லையென்றால் இந்தியன் என்ற உணர்வு மனதில் இருந்தாலே போதுமானது, அதைவிடுத்து தேசப்பற்றை காட்டுகிறேன் என தேசியக்கொடியை வாங்கிவிட்டு காற்றில் வீசியெறிவது அநாகரீகமான செயல்.

டிவி நிகழ்ச்சிகள் :-

வழக்கம்போலவே டிவிநிகழ்ச்சிகள் முழுவதும் திரைநட்சத்திரங்களே ஆக்கிரமித்து தேசப்பற்றினை காட்டிக் கொண்டிருந்தார்கள், சுதந்திரத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஒரு நிகழ்ச்சியில் டிவி நட்சத்திரங்களிடம் சுதந்திரம் பற்றிய கேள்வி கேட்டு கொண்டிருந்தார் இமான் அண்ணாச்சி, N.S.C போஸ் என்ற பெயரில் அந்த N.S.C எதை குறிக்கிறது என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் அவர் யார் என்றே தெரியாது என கூறிவிட ஒருவர் மட்டும் நேஷனல் சுபாஸ் சந்திர போஸ் என சொன்னது காலக்கொடுமை 

இதற்கிடையில் புதிய தலைமுறை டிவியை சென்னையில் தெரியவிடாமல் சன்குழுமம் எஸ்.சி.வி தடுப்பதாக புலம்பிக் கொண்டிருந்தார்கள், என்னதான் தடுத்தாலும் புதிய தலைமுறை நிகழ்ச்சிகளுக்கு தனியே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது, இருட்டடிப்பு செய்தாலும் மக்கள் மீண்டும் சன்நியூசுக்கு திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது போலருக்கே !!!

சி.எம் செல் :-

மக்களின் குறைகளை தீர்க்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது, கோரிக்கைகளை பதிய புதிய பயனாளர் பகுதியில் முழு முகவரியையும் பதிய வேண்டும், பிறகு உள்நுழைவு, கடவுசொல்லை பயன்படுத்தி மக்களின் குறைகளை பதியலாம்.




ஒரிஜினல் நடுநிலைவாதி


எதிர்பார்க்கும் மொக்கை படம்

திடீர்னு ஒருநாள் பார்த்தா திருப்பூர் முழுக்க அண்ணனோட போட்டோதான் சும்மா பிளக்சுல டுப்பாக்கியோட பளபளன்னு மின்னுராரு, ஒருஎடம் பாக்கியில்ல, ஏறகுறைய 15 கிலோமீட்டர் ரவுண்ட் அப் பண்ணி ஒட்டியிருந்தாங்க அண்ணனின் விழுதுகள், யாருய்யா நியி? இத்தன நா எங்கிருந்த? திடீர் திடீர்னு எங்கிருந்துய்யா வரீங்க?ன்னு நெம்ப குழப்பமா இருந்துச்சு, அப்புறம்தான் தெரிஞ்சது அண்ணன் சின்னம்மாவோட அக்கா பையன் பாஸ் என்கிற பாஸ்கரன்தானாம், நடிச்சு மொதபடம் வெளிவரல்ல, அதுக்குள்ள ரசிகர் மன்றம், பிளக்ஸ்ல விளம்பரம்னு, ம்ம்ம் கலக்குங்க பாசு, படத்து பேரே தலைவனாம்.


தாய் மண்ணே வணக்கம்



நான் இப்பொழுது சுதந்திர பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், சுதந்திரம் இல்லாத அடிமைபூமியில் வாழ்ந்து எதிர்கால நாட்டின் மக்களுக்காக சுதந்திரத்திற்காக போராடிய என் நாட்டின் அனைத்து முன்னோர்களையும், போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் இக்கணத்தில் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியநாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் 66 ஆவது சுதந்தர தின நல்வாழ்த்துக்கள், ஜெய்ஹிந்த்..!


Thursday, July 26, 2012

கமர்சியல் பக்கங்கள் - 26/07/2012



பேஸ்புக், டிவிட்டர், சமூகவலைதளங்கள் எல்லாத்துலயும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஸ்டேட்டஸ் போட்டு கிழிகிழின்னு கிழிக்கறாங்களே எதுக்கு? இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து திருந்திருவாங்கன்னா? அய்யய்யோ நம்மள இவ்வளவு பேரு திட்டி இருக்காங்களே நாம இனிமே இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு மாத்திக்குவாங்கன்னா? இல்லை நாம போடுற ஸ்டேட்டஸ் பார்த்து தப்பு பண்றவங்க திருந்திருவாங்கன்னுதான் எல்லாரும் நம்புறமா என்ன?

ஒன்னும் கிடையாது, நமக்கு தேவை டைம் பாஸ், அவங்களுக்கு அவங்க பண்றதுல பாஸ்(BOSS), நாளைக்கே எல்லாரும் திருந்தி நல்லவங்களா ஆகிட்டாங்கன்னு வச்சுக்கங்க, நீங்க எல்லாம் ஸ்டேட்டஸ் போட என்ன பண்ணுவீங்க?  அதனால அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஒவ்வொருத்தனையா தேடி தேடி திட்டி ஸ்டேட்டஸ் போடுறதுக்கு பதிலா உருப்படியான விசயங்களா, பேங்க் சலான் பில்லப் பண்றதுல இருந்து இந்திய ஜனாதிபதியா ஆகற மேட்டர்வரைக்கும் மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய, தெரியாத விசயங்களை ஸ்டேட்டசா போட்டு நாலு பேருக்கு தெரிஞ்சுக்க வச்சா கொஞ்சமாவது உருப்படியா இருக்கும், நானும் டிரை பண்றேன் J முடியல.

வெளம்பர தொல்லை

டிவில புதுசா ஒரு பேர் அண்ட் லவ்லி விளம்பரம் பார்த்தேன், மூஞ்சில டேமேஜ் வந்த பொண்ணு ஸ்கின் டாக்டர்கிட்ட போய் என்ன பிரச்சனைன்னு கேட்குது, அந்த டாக்டரம்மாவும் இததெல்லாம் இருக்குதுன்னு சொல்லிட்டே வர அந்த பொண்ணும் பேர் அண்ட் லவ்லி பின்னாடி எழுதி இருக்கறதயும் சரிபார்க்குது, கடைசியா டாக்டர் டிரீட்மெண்டுக்காக பிரிஸ்கிரிப்சன் எழுதட்டுமான்னு கேட்க, அந்த பொண்ணு அதெல்லாம் வேணாம் அதுக்கெல்லாம் தீர்வு இந்த பேர் அண்ட் லவ்லியிலயே இருக்குது, நான் சும்மா செக் பண்ண வந்தேன்னு சொல்லிட்டு போகுது, கட் பண்ணா வலதுபக்கம் ஒரு ஷாட், இடது பக்கம் ஒரு ஷாட், நேரா நிக்க வச்சு ஒரு ஷாட், அடடே ஆச்சரியக்குறி அந்த பொண்ணு மூஞ்சில இருக்கற கரும்புள்ளி செம்புள்ளியெல்லாம் காணாம போயிருது, எதிர வர அந்த டாக்டர பாத்து உங்களுக்கும் வேணும்னான்னு கேட்குது.


அடேய் நாதாரிகளா அதென்னடா செவத்த புள்ளைய மாடலா போட்டு பேர்னஸ் கிரீம் விளம்பரம் எடுக்கறீங்க? உண்மையிலயே உங்க பேர்னஸ் கிரீம் போட்டு செவப்பா மாறுமுன்னா எங்க ஊரு அருக்காணி யாராவது வெச்சு செவப்பா மாத்தி காட்டுங்க பாப்போம்? சும்மா ஆறு வாரத்துல சிவப்பழகுன்னு பிலிம் காட்டுரது, எங்க பக்கத்து ஊட்டு அக்கா பதினாரு வருசமா பேர் அண்ட் லவ்லியதான் யூஸ் பண்ணுது, இன்னும் செவக்கலையே, வீட்டுக்கு டிஸ்டம்பர் ரெண்டு கோட்டிங் எக்ஸ்ட்ராவா அடிக்கிறமாதிரி முதல்ல ஒருதடவை பூசி அதுக்கு மேல பவுடர பூசி மறுபடியும் ஒருக்கா பேர் அண்ட் லவ்லி போட்டு அதுக்குமேல இன்னொருக்கா பவுடர பூசி ஈவில் டெட் படத்துல வர பேய்கணக்காதானடா நெறய பொண்ணுங்க சுத்திகிட்டு இருக்காங்க, மூஞ்சிக்கு கீழ முழங்கைய பாத்தாதான் தெரியும் நெய்வேலில வெட்டி எடுத்த நிலக்கரி கணக்கா ஒரிஜினல் கலர் இருக்கறது.

பொருள் தரமானதா, உண்மையானதா இருக்க வேண்டிய அவசியமே இல்லை போல, கோடிக்கணக்குல கொட்டிகொடுத்து விளம்பரம் பண்ணி பிராண்ட் நேம் மக்கள் மனசுல பதிய வச்சிடராங்க, சோப்புன்னா லக்ஸ், பேஸ்டுனா கோல்கேட், கிரீம்னா பேர் அண்ட் லவ்லின்னு, உண்மையா நல்ல பொருள உற்பத்தி பண்ணக்கூடியவன் இவனுங்க அக்கபோருக்கு நடுவுல நிக்க கூட முடியாம போயிடரது வருத்தப்படகூடிய விசயம்.

படித்ததில் பிடித்தது

உலகத்தில் எத்தனையோ மொழிகள் தோன்றி இருக்கிறது, காலப்போக்கில் காணமலும் போய் இருக்கின்றது, ஆனால் பல்வேறு விதமான தாக்குதலுக்கு உட்பட்டாலும் தக்கிமுக்கி இன்றைக்கு வரை தமிழ்மொழி தாக்குபிடித்து கொண்டு இருக்கிறது, கொஞ்சமாவது தமிழைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் அதுக்கு காரணம் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சேகரித்து வைத்த ஓலைச்சுவடிகளால்தான், இன்னும் பலநூற்றாண்டுகள் கடந்தும் தமிழை காக்க வேண்டும், உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு நூலகங்கள் தேவை, இணையத்திலும் பதிய வேண்டியது மிக அவசியம், அதுவே தலைமுறை கடந்து தமிழை கொண்டு செல்லும்.

இந்த வேலையை புதுக்கோட்டையில் இருக்கும் ஞானாலயா ஆய்வுநூலகம் என்னும் குழு செய்துகொண்டு இருக்கிறார்கள், தாய்மொழி என்பது தலைமுறையை தாண்டி செல்லும் பந்தம், அதற்கு நீங்கள் எதாவது, எவ்வழியாவது உதவ வேண்டும் என நினைத்தால் மேலதிக விபரங்களுக்கு திரு. ஜோதிஜி அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பதிவினை படியுங்கள், உதவுங்கள்..!



நட்பு

நான் பதிவெழுத வந்த புதுதில் சாய்கோகுலகிருஷ்ணா என்கிற நண்பர் அறிமுகமானார், அவருடைய வலைப்பூவில் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை மட்டுமே பெரும்பாலும் எழுதுவார், அவ்வப்பொழுது விழுப்புணர்வு சம்பந்தமான பதிவுகளையும் எழுதுவார், நாட்டின்மேல் பற்றுகொண்ட உருப்படியாக மட்டுமே எழுதனும்னு நினைக்கற பிளாக்கரில் அவரும் ஒருவர், ஒருநாள் அவருடைய பிளாக்கயும் யாரோ ஹேக் பண்ணிவிடார்கள், அப்புறம் வேறொரு தளம் ஆரம்பித்து வந்துகொண்டு இருந்தார், அப்புறம் அதையும் காணோம், நண்பர் பெங்களூர்காரர், அப்பொழுது அவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், சமீபகாலமாக அவரை கூகிளில் தேடி வருகிறேன், கண்டுபிடிக்க முடியவில்லை, உங்களுக்கு தெரிந்திருந்தாலோ அல்லது அவரின் வலைப்பூ முகவரி தெரிந்தாலோ தெரிவிக்கவும், இப்பதிவினை படிக்க நேர்ந்தால் என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் கோகுலகிருஷ்ணா.


எதிர்பார்க்கும் மொக்கைபடம்


மொக்கை படம் என்றாலே சம்திங் ஸ்பெசல்தான், டிரைலரை பார்த்தாலே தெரிகிறது படம் செம மொக்கை என்று, வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம், வினய் போலீசாம், சந்தானத்தை நம்பி இறங்கி இருக்கிறார்கள், வினய் வேறு டேம்999 படத்தில் நடித்து எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார், ஆகஸ்ட் 2 ரிலீஸ், ஆவலோடு எதிர்பார்க்கிறேன் மிரட்டலை.

கிச்சு கிச்சு



கல்யாணம் ஆன நிறைய பேரு பொண்டாட்டிக மேல காண்டாத்தான் இருப்பாங்க போல, நம்மனால முடியல, அடுத்தவன் ஆவது அடிக்கட்டுமேன்னு, வெடிச்சிரிப்புக்கு நான் கியாரண்டி. :)

?இரவுவானம்



Saturday, July 7, 2012

கமர்சியல் பக்கங்கள் - 07/07/2012


சிறை நிரப்பும் போராட்டம்

இந்த வாரம் முழுக்க தி.மு.கவின் சிறை நிரப்பும் போராட்டம்தான் ஹைலைட், நாளிதழ்கள், சமூக வலைதளங்கள்னு எங்கு பார்த்தாலும் கேலியும், கிண்டலும், சாதனை அறிக்கையுமாக ஒரே களோபரமாக இருந்தது, வாராவாரம் ஒவ்வொரு கட்சிக்காரங்களும் இப்படி எதாவது பண்ணிட்டு இருந்தா ஜனங்களுக்கும் ஜாலியா பொழுதுபோகும்

நான் பார்த்தவரைக்கும் ஐயாவ கிழிச்சு தொங்கபோடுற அளவுக்கு யாரும் அம்மாவ பத்தி எழுத மாட்டேங்குறாங்க, ஆட்டோ கூட வராது ஸ்டெயிட்டா புல்டவுசரு விட்டு ஏத்திருவாங்களோன்னு பயமான்னு தெரியல!



முதல்வரா வரவங்க மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை சாதனைன்னு பிரகடனப்படுத்தறத முதல்ல தடுத்து நிறுத்தனும், அய்யாவுக்கு ”அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னா” அம்மாவுக்கு ”நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளாம்”, முதல்ல இப்படி கேட்சிங்க் லைன் எழுதி கொடுக்கற அந்த பதினோரு பேரு கொண்ட குழு யாருன்னு கண்டுபுடிச்சு ஸ்ருதிஹாசன் ஸ்டைல்ல வாயிலயே போடனும், ஐ.ஏ.எஸ் அதிகாரிங்க யாரும் வேலை செய்யறதில்லை போல

கனவு கண்ட கதை

சின்ன வயசுல எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும், நல்லா தூங்கிட்டு இருப்பேன், திடீர்னு நடுராத்திரி ஒரு மணிக்கு முழிச்சு பார்த்தா நடு சுடுகாட்டுல நான் கட்டிலோட படுத்து கிடப்பேன், பயத்தோட சுத்தி பார்த்தா செத்து கிடக்கற பொணங்க எல்லாம் குழியில இருந்து மேல எந்திரிச்சு வந்து என்னோட கட்டில சுத்தி நின்னுக்கும், பயந்து போய் அலறி எந்திரிச்சு ஓடுவேன், பின்னாடியே பொணங்க தொறத்திட்டு வரும், 


விடாம ஓடுவேன் சுடுகாட்டோட வாசலுக்கு பக்கத்துல நெருங்கும்போது அந்த பேய்ங்க என்ன புடிச்சிடும், அந்த உச்சகட்ட மரண அவஸ்தைல வீல்னு கத்தி எந்திரிச்சுருவேன், கத்துன கத்துல வீட்டுல இருக்கரவங்க எல்லாம் எந்திரிச்சிருவாங்க, இந்த கனவு விடாம வந்துட்டு இருந்தது, அப்புறம் வாலிபவயசுல வேற கனவெல்லாம் வந்துட்டு போச்சு, கடந்த பத்து வருச காலமா ஒரு கனவு கூட வரது இல்ல, படுத்ததும் தூங்கிடுவேன், ஆனா இப்ப ஒரு மூணுவாரமா மறுபடியும் கனவு வருது, அது என்ன கனவுன்னு சொல்லமாட்டேன், ஆனா ஏன் வருதுன்னுதான் தெரியல?

நன்றி நவிழ்தல்


இந்தவார கோவை பதிப்பு விகடன் வலையோசையில் என்னுடைய இரவுவானம் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்னுடைய தளத்தினையும் தேர்ந்தெடுத்த விகடன் நிருபர் திரு. சக்திக்கும், விகடன் நிறுவனத்திற்கும், தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த வீடு சுரேஸ்குமார் மாம்சுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஈ

ஹீரோக்கள்கிட்ட கால்கடுக்க நின்னு கால்சீட் வாங்கி கோடிகோடியா பணத்த சம்பளமா கொட்டி கொடுத்து படம் எடுத்து ரீலிஸ் பண்ணி தாவு தீர்ந்து பணமும் தீர்ந்து போறதுக்கு இந்தமாதிரி நாலு அனிமேசன் படம் பண்ணி காசு பாத்திரலாம்னு கண்டிப்பா நாலு புரொடியூசர்களாவது நினைப்பாங்க படம் பார்த்தாங்கன்னா

ஒரு ஈ தன்னுடைய காதலிய அடையறதுக்காக தன்னை கொலை பண்ணினவனை ஈயா உருவம் எடுத்து வந்து எப்படி பழிவாங்குதுங்கரதுதான் கதை, கிராபிக்சே தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கொஞ்சமே கொஞ்சம் போரடிச்சாலும் விறுவிறுப்பா இருக்கு, குழந்தைக பசங்களோடு குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம், சம்மர்ல மட்டும் வந்திருந்தா சும்மா பிச்சிருக்கும்

ஒரு உதவி

பேஸ்புக்கில் பார்த்தது, உதவி கிடைத்துவிட்டதான்னு தெரியல, எதுக்கும் இங்க பகிர்ந்துக்கறேன்


நண்பர்களே !

மேலே நீங்கள் காண்பவை கற்பகவள்ளி என்ற மாணவி மேல்நிலைப்பள்ளியில் எடுத்த மதிப்பெண். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ( 2012 ஆண்டு ) படித்த இந்த மாணவிக்கு அம்மா மட்டுமே உள்ளார். மாணவியின் அம்மா கூலி தொழிலாளி ஆகையால் மாணவியை மேல்படிப்பு படிக்கவைக்க முடியவில்லை, மாணவிக்கோ இன்ஜினியரிங் படிக்க ஆசை, படிக்கும் இந்த மாணவிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவன் 
உங்களில் ஒருவன் 
9944134437


எதிர்பாக்கும் மொக்கை படம்


படத்தோட பேரு சேலத்து பொண்ணாம், சார்தான் ஹீரோ, இருக்கறதுலேயே டீசண்டான ஸ்டில்லு கீழ இருக்கறது மட்டும்தான், மீதி ஸ்டில்ல பார்க்கனும்னா கூகிளுங்க..!



டிரைலர்

படத்தோட பேரு 18 வயசு, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியோட மகன் ஹீரோவா நடிக்கறாரு, அதே ரேணிகுண்டா டீம், வழக்கமான காதல் கதைதான் போல, ஆனா ஹீரோ குரங்கு, நரி, பறவை மாதிரி தினுசு தினுசா நகாசு வெல பண்ணுவாரு போல படத்துல, பொதுவா டிரைலர் நல்லா இருந்தா படம் நல்லா இருக்காது பார்ப்போம்




Monday, June 11, 2012

கமர்சியல் பக்கங்கள் - 11/06/2012



அரசியல்
காத்தடிக்குது
காத்தாடி சுத்துது
கரண்டு வருது
அந்தம்மானாலயா காத்து வருது? கேட்டா நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைங்கறாங்க
நேற்று கேப்டன் டிவியில் திராணியார் பிரச்சாரம்.

சாலைவிதிகள்

திருப்பூர்ல எல்லா சிக்னல்லயும் மைக்க கட்டி சாலைவிதிகள்னா என்ன? என்னென்ன விதிகள் இருக்குது? அதை எப்படி கடைபிடிக்கனும்? அதில் பொதுமக்களோட பங்கு என்ன?  அப்படிங்கறத ரெக்கார்டு பண்ணி எல்லா சிக்னல்லயும் நாள் முழுக்க ஒளிபரப்பிட்டு இருக்காங்க

காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் வண்டி ஓட்டுற ஒவ்வொருத்தரும் ஒரு நிமிசமாவது இதை கேட்காம போக முடியாது, ரொம்ப நல்ல விசயம், இதுனால கொஞ்சமாவது மக்களுக்கு சாலைவிதிகள் பற்றி விழிப்புணர்வு வந்தா சந்தோசம், இந்த ஐடியாவ ஏன் மற்ற மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிங்களும் அறிமுகபடுத்தக்கூடாது?

மாட்டுனா ஜெயிலுதாண்டி


கோயமுத்தூர்ல குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா ஸ்பாட் பைன் மட்டுமல்லாம 15 நாள் ஜெயில்ன்னு வேற ரூல்ஸ போட்டு இருக்காங்க, கோவைல மட்டுமல்லாம இப்ப திருப்பூர்லயும் இந்த ரூல்ஸ் வந்திருச்சு, ஜனங்க சாப்பிடாம கூட இருப்பாங்க சரக்கடிக்காம இருக்க சான்சே இல்லை, அதுவும் சனிக்கிழமை நைட்டுன்னா சம்பள நாள் வேற, ஜே ஜேன்னு சும்மா கூட்டம் கட்டி அள்ளும் டாஸ்மாக்ல

திருப்பூர் மாநகர குடிஜனங்களே பார்த்து சூதானமா இருந்துக்கங்க, வெள்ளிகிழமை எல்லாம் சிக்குனா சனி ஞாயிறு மூணு நாள் ஜாமீன் கூட கிடைக்காது.

என்ன நடக்குது அங்க !!!


கேரளாவில் சொந்த வீடு இல்லாத ஆட்களே இருக்க கூடாது, நிலம் இல்லாதவர்களுக்கு இலவச நிலம், வீடு கட்ட லோன்.
கலப்பு மணம் புரிந்தால் ரூபாய்.50,000
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பான்பராக், குட்கா, புகையிலை, மது போன்ற போதை பொருட்கள் விற்க வேண்டும்
முதலமைச்சரின் அலுவல்கள் நேரடி ஒளிபரப்பு
அரசு அலுவலர்கள் வேலை நேரங்களில் மொபைலில் பேச தடை
என்னதான்யா நடக்குது கேரளாவுல? நாம இந்தியாவுலதான் இருக்கமா?

கோவை பதிவர் சந்திப்பு

ஸ்கூல்ல, காலேஜ்ல, அக்கம் பக்கத்துல, வேலை செய்யுற இடங்கள்ள இப்படி எல்லா இடத்துலயும் நமக்கு பிரண்ட்ஸ் கிடைப்பாங்க, ஆனா அப்படி கிடைக்குற எல்லா பிரண்டுமே நம்ம எண்ணஓட்டத்துக்கு தக்கபடியா, நம்ம வேவ் லெந்த்துக்கு செட்டாகுற மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.

ஆனா இந்த இணையம் மூலம் கிடைக்குற பிரண்ஸ்சுக இருக்காங்களே, நமக்கு பிடிச்சவங்களா? நம்ம கூட செட்டாகுற பிரண்ட்ஸ்ஸா இருப்பாங்க, அப்படி பட்டவங்கள நாமளே ஈசியா தேர்ந்தெடுத்துக்கலாம், மேல சொன்ன பிரண்ஸ்சுக கூட வேணா சண்டை சச்சரவுகள், ஈகோ, துரோகம்னு நடக்கலாம், ஆனா இணையம் மூலம் கிடைக்குற பிரண்ஸ்சுக கூட அப்படி நடக்க சான்சே இல்லை, ஓரிரண்டு விதிவிலக்குகள் எங்கேயும் இருக்கலாம்.

அப்படி வலைத்தளம், பேஸ்புக், டிவிட்டர், பிளஸ்சுன்னு எழுத்தின் மூலம் மட்டுமே அறிமுகம் ஆன நண்பர்களை நேரில் சந்திக்கனும், பேசனும், பழகனும்னு எல்லோருக்கும் ஆசை இருக்கும், அப்படி தமிழகம் முழுக்க சென்னை, ஈரோடு, நெல்லை, மதுரைன்னு அடிக்கடி சந்திச்சு நட்பை வளர்த்தி இருக்காங்காங்க, எல்லா சந்திப்பிலயும் போக முடிந்த நண்பர்கள் சென்று கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே மாதிரி கோவையிலும் பதிவர்கள் சந்திப்பு நடத்தனும், எல்லாரையும் அழைக்கனும்னு எங்களுக்கும் ஆசை இருந்தது, அதற்கு முதல் அடித்தளமா நேற்று கோவை பதிவர்களோட முதல் சந்திப்பு வெற்றிகரமா நடந்து முடிஞ்சது, கூடிய விரைவிலேயே எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு பிரம்மாண்டமான சந்திப்பினில் கலந்து கொள்வோம்.

சாம்பு மவனே என்னை மாதிரியே இருக்கியேடா


படித்ததில் பிடித்தது.
சாலைகளில் பேய்தனமாக வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள், அவர்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பன போன்றவற்றை சொந்த அனுபவத்தின் மூலம் தெளிவாக உரைக்குபடி எழுதி இருக்கிறார், திரு, ஜோதிஜி அவர்கள்.

நேரம் இருப்பின் படித்து பார்க்கவும்.

வீடியோ

இந்தியாவுல பாதி ரியாலிட்டி ஷோல இதான் நடக்குது போலருக்கு, ஆனாலும் பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா நம்மாளுங்க பாயுற பாய்ச்சல் இருக்கே அப்பப்பா !!!




Wednesday, May 16, 2012

கமர்சியல் பக்கங்கள் - 16/05/2012


அம்பலவாணர் சுவாமிகள் என்ன பண்ணார்?
என்ன பண்ணலைன்னு கேளுங்க?


சங்கத்தமிழ் வளர்த்த ஆதீனங்களில் மதுரை ஆதீனமும் ஒன்னாம், இப்பல்லாம் ஒல்டு ஆதீனமும், லேட்டஸ்ட் ஆதீனமும் டிவி பேட்டிகள்ள கூட இங்கிலீஸ்லதான் பேட்டி குடுக்கறாங்க, (ஓவர்)

நம்ம நித்தியானந்தர் ஆதீனமா ஆனது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனா இந்தகாலத்துல ஆன்மீகத்த வளர்த்தறதுக்காக லேட்டஸ்டா அப்டேட் பண்ணப்பட்ட டைனமிக் சாப்ட்வேர்தான் நித்யானந்தான்னு இப்ப இருக்கற ஆதீனம் சொன்னாரு பாருங்க அதத்தான் பொறுத்துக்க முடியல, (ஓவரோ ஓவர்)

போகப்போக பார்க்கத்தானே போறோம் நித்யானந்தா அப்டேட் பண்ணப்பட்ட டைனமிக் சாப்ட்வேரா இல்லை அட்டாக் பண்ணுற வைரஸான்னு.

SAVE A TREE

USE LESS PAPER – SAVE A TREE அப்படின்னு ஜெராக்ஸ் மிசின்ல கூட போட்டு இருக்காங்க, அந்தளவுக்கு பேப்பர் தேவைக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுகிட்டு இருக்கு, பெண்கள் யூஸ் பண்ணுற சானிடரி நாப்கின்ல மரங்களோட தண்டைத்தான் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி நாப்கின் தயாரிக்கறாங்க அதைத்தான் நீண்ட நேரம் உழைக்கும் நாப்கின்னு விளம்பரபடுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கறாங்க கார்பரேட் கம்பனிகள்ன்னு  நம்ம தமிழர் ஒருத்தர் கண்டுபுடிச்சு சொல்லி இருக்காரு

தேவைக்கு அதிகமா பேப்பர யூஸ் பண்ணுறது தப்புன்னுதான் ஏடிஎம்ல பணம் எடுக்க போனாக்கூட ரிசிப்ட் எடுக்க மாட்டேன், முதல்லயே ஆப்சன்ல ரிசிப்டுக்கு NO குடுத்துருவேன். ஆனா நேத்திக்கு ஒருத்தர் பணம் எடுத்தாரு பாருங்க 500 ரூபாயா ஒரு பத்து தடவை ரெண்டு மூணு கார்டு போட்டு எடுத்துகிட்டே இருந்தாரு, ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போது ரிசீப்ட் எடுத்து பேலன்ஸ் செக் பண்ணிட்டு இருந்தாரு, அவரு வெளிய வரும்போது ஏன் சார் இப்படி ஒவ்வொரு தடவையும் ரிசீப்ட் எடுக்கறீங்க? அதான் பணம் எடுக்கும் போதே ரிசீப்ட் வருதுல்ல, மறுபடியும் ஏன் எடுக்கனும்னு கேட்டா?

ம்ம்ம் மெஷின் சரியா வேலை செய்யுதான்னு செக் பண்ணுனேன்னு சொல்லிட்டு போறார், இவங்களையெல்லாம் வெச்சுகிட்டு TREE ஐய இல்ல HAIR அ கூட SAVE பண்ண முடியாது.

பிடித்ததால் படித்தது

கழுகு இணையதளத்தில் பேஸ்புக் மற்றும் பிளாக்கில் நடக்கும் அத்துமீறல்கள பத்தி அலசி ஆராய்ச்சி பண்ணி ஒரு விழிப்புணர்வு கட்டுரை போட்டு இருந்தாங்க, பேஸ்புக்ல பொண்ணுங்க பின்னாடி சுத்துறதுல இருந்து இப்ப அரசியல்கட்சிகாரங்க ஆக்கிரப்பு செஞ்ச வரைக்கும் சுருக்கமா பேஸ்புக் எப்படி இம்சை அரசன் புலிகேசி பாணில மைதானமா ஆச்சுன்னு விளக்கமா எழுதி இருக்காங்க, முடிஞ்சா படிச்சு பாருங்க


அவங்ககிட்ட அனுமதி கேட்காமதான் போட்டு இருக்கேன், தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க.

எதிர்பார்க்கும் மொக்கை படம்


இதப்பத்தி சொல்லவே வேணாம், போஸ்டர்லயே விளக்கி இருக்காங்க பாருங்க, அதுசரி எல்லாரோட லைஃப்லயும் ஒரு ஒன்சைடு லவ்வு வரட்டும் உங்க லைஃப்லதான் ஏற்கனவே ஏழெட்டு இருக்கே? எப்படி படம் பண்ண போறீங்க பாஸ்?

நினைவேந்தல் நிகழ்ச்சி


மே 17 இயக்கத்தின் தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வருகிற மே 20 ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரினா கண்ணகி சிலை அருகில் நடைபெறுகிறது, கலந்து கொள்ள முடிந்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும், பதிவுலக நண்பர்கள் உங்களது வலைப்பூக்களின் வாயிலாக விளம்பரப்படுத்தி பெருவாரியான மக்களை சென்றடைய உதவுங்கள்.

மேலும் விபரங்களுக்கு



வீடியோ

ரோபோ சங்கரின் மானாட மயிலாட, சிரிக்காதவங்க நரசிம்மராவா கூட இருக்கவே முடியாது




Thursday, April 26, 2012

கமர்சியல் பக்கங்கள் - 26/04/2012



ஏழைகள் தோழா வா வா !? எங்கள் தலைவா வா வா !? புரட்சிகலைஞரே வாவா !?
நாக்கை துருத்துனாறு, கண்ண உருட்டுனாரு, கையை மடக்குனாறு, கடிச்சு வைக்க வந்தாருன்னு ஏதோதோ காரணம் சொல்லி எங்க கருப்பு எம்ஜியார படக்குன்னு பத்து நாளு சஸ்பெண்ட் பண்ணிட்டீங்கள்ள?

அந்தம்மா சரியான சேலை கட்டுன வாஷிம்கானா இருந்திருந்தா நேருக்கு நேரா நீங்களும் நாக்கை துருத்திருக்கனும் அதவிட்டுட்டு அது என்னய்யா சஸ்பெண்டு பண்ணுறது? காரை புடுங்குறதுன்னு?

இதோ கிளம்பிட்டாரய்யா எங்க தவசி, நாங்க ஜெயிச்ச எல்லா தொகுதிக்குக்கும் கைக்காச போட்டு தண்ணி வாங்கி தராரய்யா

அப்பக்கூட தண்ணிதானா ஆ ஆ ஆ கேப்ப்டன்ன்ன்ன்ன்ன் யாருய்யா சைடுல சவுண்டு வுடுறது? இது ஒன்னும் ஆம்புளைக குடிக்கற சீமைத்தண்ணி இல்லை, பொம்பளைக புடிக்கற நல்ல தண்ணிதான்

நாங்க எப்பவுமே ஆரம்பிக்கறது தண்ணியிலதான் போகப்போக சைடுடிஷ்ஷெல்லாம் வரும், அதான்யா இந்த ரோட்டு பிரச்சனை, கக்கூசு பிரச்சனை, குப்ப வண்டி பிரச்சனை அதெல்லாம், போகப்போக பார்க்கதான போறீங்க

ஆதாரம்:-
எங்க எம்.எல்.ஏக என்ன காலேஜ் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ணா ஜாயின் பண்ண வந்தாங்களா? அது என்னய்யா ஆவூன்னா ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருக்கான்னு கேட்டு ராக்கிங் பண்ணுறீங்க?

இதோ இப்ப களத்துல இறங்கி ஆறு ஆதாரங்களை சேகரிச்சு வச்சிருக்காரய்யா எங்க கேப்டன், அது என்னய்யா அஞ்சு லிட்டர் மண்ணென்னய்க்கு காசு வாங்கிட்டு நாலு லிட்டர மட்டும் ஊத்துரது? கூட அஞ்சு ரூபாய் சேர்த்து குடுத்துட்டு வாங்கிட்டு போக அது என்ன டாஸ்மாக் சரக்கா?

இந்த ஆதாரத்துக்காண்டி நீங்க நடவடிக்கை எடுக்காம இருங்க? அப்புறம் என்ன நடக்க போகுதுங்கறது இப்போதைக்கு சஸ்பென்சுன்னு கேப்டன் சொல்லி இருக்காப்புல

அடே ரேசன் கடை அப்ரசிண்டுகளா, புயல் அடிச்சு பொழச்சவன் இருக்கான் பூபதி அடிச்சு பொழச்சவன் இருக்கானாடா? மவனே நீங்க செத்தீங்கடா, நாஸ்திதாண்டா, நீங்க பாஸ்கிதாண்டா

பொருளாதாரம்:-
அரசியல்னா அடுத்து பொருளாதாரம்தான? சரி பொருளாதாரத்த பத்தி என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, மாசக்கடைசியா கையில காசே இல்லை, அஞ்சு பத்துன்னு ஏதாச்சும் இருந்திருந்தா கூட ஒக, ஒக பார்த்துட்டு அட தப்பா நினைக்காதீங்க ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்த்துட்டு ஒரு விமர்சன பதிவாவது தேத்திருக்கலாம்

சரி கேள்விபட்ட வரைக்கும், ஒரே கதைய மட்டும் வேற வேற ஹீரோவ மாத்தி படம் எடுக்கலையாம் ராஜேசு, அந்த கூரியர் சர்வீஸ், கல்யாண மண்டபம், டாஸ்மாக்குன்னு ஒன்னக்கூட விடலயாம், எப்படியோ படம் நல்லாருக்குல்ல, அது போதும்.

பகிர வேண்டிய தளம் :-
ஐ.ஏ.எஸ் படிக்கறவங்க முக்கியமா தமிழ்ல ஐ.ஏ.எஸ் எழுத நினைக்கறவங்க பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய தளம் கீழ இருக்கற தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ்


CSAT எக்சாம் நடந்திட்டு இருக்கற இந்த நேரத்துல, அடுத்து பிரிலிமினரி, மெயின் எக்சாம்னு படிக்கறதுக்கு இந்த பிளாக் யூஸ்புல்லா இருக்கும், நிறைய மாடல் கொஸ்டீன் பேப்பர், மின் புத்தகங்கள்னு எல்லாமே இருக்கு, புக்மார்க் பண்ண வேண்டிய, நிறைய பேருக்கு பகிர வேண்டிய தளம் இது, இந்த தளத்த ஹரிக்குமார்னு ஒருத்தர் நடத்துறார், அவரும் ஐ.ஏ.எஸ்ஸா இருப்பார்னு நினைக்கிறேன், இங்கிலீஸ்லயும் பிளாக் இருக்கு.

எனவே உங்களுக்கு தெரிஞ்சவங்க, ஐ.ஏ.எஸ் படிக்கறவங்ககிட்ட ஷேர் பண்ணுங்க, நல்லா படிச்சு மாவேஸ்ட்டுக இல்லாத ஊரா பார்த்து போஸ்டிங் வாங்கட்டும்.

கேட்டதில் பிடித்த பஞ்ச் டயலாக்:-

ஹிண்டு பேப்பர முஸ்லீம் படிக்கறதில்லையா?
மொகல் பிரியாணிய இந்து சாப்பிடுரதில்லையா?
உங்க ஜிகாத்த விட எங்க ஜெய்ஹிந்த்தாண்டா பெருசு

# பயணங்கள் திரைப்படத்தில் ஷைனிங் ஸ்டார் பப்லு

கேட்டதில் பிடித்த தத்துவம்:-

வயசு பொண்ணயும் வாழைத்தாரையும் ரொம்ப நாள் ஆத்துல வச்சிண்டு இருக்கக்கூடாது

# படம் அதே பயணங்கள்

எதிர்பார்க்கும் மொக்கைப்படம் :-
கதையே இல்லாம படம் எடுக்க வேண்டியது, அப்புறம் படம் பார்த்து கதை சொல்லுன்னு நம்மகிட்டயே கேட்க வேண்டியது





கண்டுபிடிப்பு :-
கண்டுபுடிச்சிட்டாங்கையா உலக மகா புதிருக்கான விடைய, கன்னித்தீவு கதைக்கும் இந்த கோழி முட்டை கதையும் ஒன்னுதான், இப்போ ஒன்னு முடிஞ்சு போச்சு, இன்னொன்னு எப்பத்தான் முடியுமோ?


அடுத்தது என்ன நாய்வாலை நிமிர்த்த முடியுமான்னுதான? நிமித்தியாச்சு!



வீடியோ :-


வானத்தில் பறக்க நினைக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே
தலைக்கனம் புடிச்சவங்களுக்காக தலைவர் பாடுன பாட்டு





சும்மா ஒரு வெளம்பரம் :-
கூடிய விரைவில் எதிர்பாருங்கள், வசீகரன் சினிமா ஹீரோவானது எப்படி?


கடைசியா எழுதி கிளிச்சது :-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~@@@@@@@~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Tuesday, October 4, 2011

கமர்சியல் பக்கங்கள் - 04/10/2011


இந்த வருசம் காந்தி ஜெயந்தி ஞாயிற்று கிழமை வந்தாலும் வந்தது, டாஸ்மாக் வேற லீவு விட்டுட்டாங்க, பாவம் குடிமகன்கள் எல்லாம் நொந்து போயிட்டாங்க, வேற வழி இல்லாம டிவி முன்னாடி உட்கார்ந்தா பத்து சேனலுக்கு மேல தெரிய மாட்டேங்குது, அதுல நாலு ஜெயா டிவி சேனல்களா மட்டுமே தெரியுது, நொந்து போச்சு போங்க

எல்லா சேனல்களும் வழக்கம் போலவே காந்தி ஜெயந்திக்கு சிறப்பு நிகழ்ச்சின்ற பேருல சினிமா நடிகர்களை கூட்டி வந்து லந்து பண்ணிட்டு இருந்தாங்க, இவங்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க போவுது? சரி விடுங்க அவங்களும் சினிமால நடிச்சு நிறைய காந்தி நோட்ட வாங்கிட்டு இருக்குறவங்க, இவங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளா போட்டு காந்தி நோட்ட கல்லா கட்டிட்டு இருந்தாங்க

கவருமெண்டே டாஸ்மாக் வருமானம் போனாலும் பரவால்லன்னு ஒருநாள் லீவு விடுது, ஆனா டிவிக்காரங்க மட்டும் அன்னைக்குன்னு எக்ஸ்ட்ரா நிகழ்சிகளா ஒளிபரப்பி துட்டு பாக்குறாங்க, அன்னைக்காவது ஒரு மணி நேரமாவது காந்திய பத்தி எதாச்சு ஒளிபரப்புனாங்களா? புதிய தலைமுறை சேனல் மட்டும் காந்தி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்ன ஒளிபரப்புனாங்க

சரி முதலமைச்சர் என்ன சொல்லி இருக்காங்கங்கறத பார்க்கறதுக்காக ஜெயா டிவிய திருப்புனா, நாங்க கதராடை உற்பத்திய பெருக்கிட்டு இருக்கோம், கதராடைக்கு 10% டிஸ்கவுண்டு கொடுக்குறோம், அதனால எல்லோரும் கதராடை உடுத்துங்க, கதராடை உடுத்துவோம், காந்திவழி நடப்போம்னு சொல்லிட்டு இருந்தாங்க, காந்தி கதராடை உடுத்த மட்டும்தான் சொல்லி தந்தாரா? அஹிம்சை அப்படி இப்படின்னு என்னன்னவோ படிச்சமே, சரி முதலமைச்சரே சொல்லிட்டாரு கதராடை வாங்கிட்டா போச்சு.


சரி வேற சேனல மாத்துவோம்னு மாத்துனா கேப்டன் டிவில தலைவரோட பிரச்சாரத்த நேரடி ஒளிபரப்பு பண்ணிட்டு இருந்தாங்க, அடடா ஞாயிற்று கிழமை காந்தி ஜெயந்தி அன்னைக்கு எல்லா தலைவர்களும் காந்தி சிலைக்கு மரியாதை பண்ணிட்டு இருக்காங்க, எதிர்கட்சி தலைவர் அங்க கூட போகாம என்ன பொறுப்புணர்ச்சியா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காரு, புல்லரிச்சு போச்சுங்க, அப்ப என் பிரண்டுதான் சொன்னான், மச்சி இன்னைக்கு கடை லீவுடா அதான் கேப்டன் பிரச்சாரத்துக்கு கிளம்பிட்டாருன்னு

சரி என்னதான் கேப்டன் சொல்லுறாருன்னு கேட்டா இத்தனை நாளா பேசுன அதே டயலாக்கத்தான் பேசிட்டு இருந்தாரு, ஆனா ஒன்னுமே புரியல, ஆனா அடிக்கடி டென்சனாகிட்டு இருந்தாரு, இடையில யாரோ கூட்டத்துல இருந்து கேப்டன ஏதோ கேள்வி கேட்டு புட்டாங்க, வந்துச்சு பாருங்க தலைவருக்கு கோபம், டேய் யாருடா நீயி, எங்கிருந்து வரே…. அப்படின்னு கேட்டுகிட்டு இருந்தாரு, அதுக்குள்ள ஏழைகள் தோழா வா வா, எங்கள் கேப்டன் வா வா, புரட்சி தலைவரே வா வான்னு பாட்ட போட்டு கேமராவ கூட்டத்த பார்த்து திருப்பிட்டாங்க
நேரடி ஒளிபரப்பு பண்ணுனவங்கதான் பாவம் கேப்டன் எப்ப கோபபடுவார்னு பார்த்து பார்த்து பாட்டு போட்டு திசை திருப்ப வேண்டிய நிலைமையில இருந்தாங்க, அந்த அரைமணி நேர நேரடி ஒளிபரப்பு முடியறதுக்குள்ள கால்மணி நேரம் அந்த பாட்டயே போட்டுகிட்டு இருந்தாங்க, ஓகே எவனோ மவராசன் ஆக போறான்னுட்டு டிவிய ஆஃப் பண்ணிட்டேன்


தமிழ்நாட்டுல மதுவிற்பனை குறைஞ்சு போச்சாம், அது ஏன்னு ஆராய கமிட்டி போட்டு இருக்காங்க, நல்ல சரக்கே கொடுக்குறது இல்ல, பாட்டிலுக்கு பத்து ரூபா விலையேத்தி விக்கிறானுங்க, இஷ்டத்துக்கு கமிசன் அடிக்கிறானுங்க, நவீன பார்வசதின்னு போர்ட போட்டு மூத்திர சந்துக்குள்ள குடிக்க வைக்குறானுங்க, இந்த லட்சணத்துல சரியா வேலை வெட்டியும் இல்லை எவன் குடிப்பான்? இப்படியாச்சும் குடிக்கறது குறைஞ்சிருக்கே அதோடயாவது விட்டுடுங்க, நீங்க கமிசன் அடிக்கறதுக்கும், இலவசம் கொடுக்கறதுக்கும் நாட்டை குட்டி சுவராக்கிராதீங்க

ஆடு, மாடு, வீடு, மிக்சி, கிரைண்டரு, பேனு, டிவி, அடுப்பு, சைக்கிளு, செருப்பு, உடுப்புன்னு எல்லாமே இலவசமா கொடுக்குறீங்க, இலவசமா கொடுக்க வேண்டிய கல்விய மட்டும் கொடுக்க மாட்டேங்குறீங்க, எ.கொ.சா இது?


பாமக காரங்க மதுவ எதிர்த்து போராட்டம் பண்ணினா மட்டும் போதுமா? போராட்டம் பண்ண கூட்டிட்டு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணியாவது வாங்கித்தரணும், அதுவும் இல்லைன்னா அவங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கான்னாவது தெரிஞ்சுக்கணும், இல்லைன்னா இப்படித்தான் நடக்கும், முதல்ல மருத்துவர் அய்யா கட்சிக்காரங்ககிட்ட இருந்து மது ஒழிப்பு பிரச்சாரத்த ஆரம்பிச்சா நல்லது.


நம்ம தானைத்தலைவர் பவர் ஸ்டாரோட லத்திகா காவியம் காந்தி ஜெயந்தி அன்னையோட 200 ஆவது நாளை தாண்டி வெற்றிகரமா ஓடிட்டு இருக்குது, கூடிய சீக்கிரமே 500 ஆவது நாள் 1000 மாவது நாளை தாண்டி சரித்திரம் படைக்கும்னு நம்பலாம்.

மக்களோட எதிர்பார்ப்ப வீணாக்க கூடாதுன்னு சீக்கிரமே ஆனந்த தொல்லை படத்த வெளியிட போறாரு தலைவர், ரொம்ப பிரம்மாண்டமான படமாச்சே அதான் படத்தோட ஸ்டில்ல கூட சஸ்பென்சா வச்சிருக்காங்க, இப்பத்தான் ஸ்டில்லெல்லாம் ஒவ்வொன்னா வெளிவந்துட்டு இருக்கு, உங்களுக்காக கீழ ஒரு ஸ்பெஷல் ஸ்டில்லு


பவர்ஸ்டார் கத்தியில குத்துன வலிதாங்க முடியாம ஸ்ரீமன் கத்துறாரா இல்லை பவர்ஸ்டார பக்கத்துல பார்த்த அதிர்ச்சியில கத்துறாரான்னுதான் தெரியல


  
மனதில் தைரியம் உள்ளவர்கள் மட்டும் இந்த வீடியோவை கிளிக்கி பார்க்கவும், பிறந்த குழந்தைக்கு இதயம் வெளிப்புறமாக அமைந்து விட்டது, அந்த குழந்தையின் பெற்றோர்கள் படும் பாட்டினை எழுத்தில் சொல்லிவிட முடியாது, அக்குழந்தை விரைவிலேயே பூரண குணமடையட்டும்.

ஹி ஹி இது சும்மா, உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!!!


Friday, September 16, 2011

கமர்சியல் பக்கங்கள் - 16/09/2011


வழக்கம் போலவே பெட்ரோல் விலையை ஏத்திட்டாங்கப்பா, முன்னையெல்லாம் வருசத்து ஒரு தரம் ஏத்துனாலும் 50 பைசா, ஒரு ரூபாய்னு ஏத்துவாங்க, எதிர்கட்சிக போராட்டம் நடத்துறேன்னு சொன்னதும் ஒரு நாலணா, எட்டணா குறைச்சுருவாங்க, இப்பெல்லாம் அடிக்கடி ஏத்துறானுங்க, அதுவும் ஒரேயடியா ஏத்துறானுங்க, பேசாம லிட்டருக்கு 100 ரூபாய்னு சொல்லிடுங்கப்பா, அப்படியாவது ஒரு மூணு மாசத்துக்கு மறுபடியும் விலையேத்தாம இருக்கலாம்.

பெட்ரோல் விலைதான் இப்படின்னா சிலிண்டர் விலையையும் ஏத்தலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம், அதுவும் வருசத்துக்கு ரெண்டு மூணு சிலிண்டர் மட்டும் மானிய விலையிலும், மத்தபடி வாங்கற சிலிண்டர் எல்லாம் டபுள் ரேட்டுல விக்கவும் அதாவது 400 ரூபாய் சிலிண்டர் 800 ரூபாய்யாம், கூட்டணி கட்சிக எதிர்ப்பு தெரிவிச்சதால இப்போதைக்கு ஆலோசனை கூட்டத்தை ரத்து பண்ணி இருக்காங்க.

அஞ்சு வருசம் ஆட்சி முடியறதுக்குள்ள இலை தலைய திங்க வைக்காம போக மாட்டாங்க போல இந்த காங்கிரஸ்காரங்க.

தமிழகத்தில் எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்கற உள்ளாட்சி தேர்தல் தேதிய இன்னைக்கு அறிவிக்க போறாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் மறுபடியும் ஒரு திருவிழாவுக்கு தயாராகிட்டு இருக்கறாங்க, மத்த எலக்சன விட உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு சம்திங் ஸ்பெசல்தான்.

சட்டசபை எலக்சன், பார்லிமெண்ட் எலக்சன்ல எல்லாம் முகத்தையே பார்த்திருக்காத யாரோ ஒருவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க, அவங்களும் ஐஞ்சு வருசத்துக்கு திரும்பியே வர மாட்டாங்க, ஆனா உள்ளாட்சி தேர்தல் அப்படி இல்ல, நம்ம தெருவையோ பக்கத்து தெருவையோ சேர்ந்தவங்க தான் தேர்தல்ல நிக்க போறாங்க, இப்பவாச்சும் கட்சி வித்தியாசம் பார்க்காம நம்ம வார்டுல உருப்படியா வேலை செய்யுற ஆட்களை தேர்ந்தெடுங்க, எலக்சன் கமிசன் இந்த தேர்தலையும் சரியா நடத்துமான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.


திமுக கட்சியா, திரு.மு.கருணாநிதி கட்சியா, சரி ஏதோ ஒன்னு தலைவர் உள்ளாட்சி தேர்தல்ல கூட்டணி இல்ல நாங்க தனியாத்தான் நிப்போம்னு சொல்லிட்டாரு, காலங்கெட்ட காலத்துல சொன்னாலும் இப்போதைக்கு திமுக தொண்டர்களுக்கு இதவிட பெரிசா சந்தோசத்த கொடுக்க ஒன்னும் இருக்காது.

ஆனா இதுல பெரிய காமெடி என்னன்னா வழக்கம் போலவே நம்ம ஈரோட்டுக்காரரு இவிகேஎஸ். இளங்கோவன், கலைஞர் சொன்னதை வரவேற்கிறாராம், இப்பத்தான் காங்கிரஸ்சோட சுமை குறைஞ்சு போச்சாம், என்னமோ திமுகவ தூக்கி சுமந்துகிட்டு இருந்தமாதிரி, தனிச்சு நின்னு காங்கிரஸ் ஜெயிக்க போகுதாம், வேணும்னா சிறு சிறு கட்சிகளோட கூட்டணி வச்சுக்குவோம்னு வேற சொல்லி இருக்காரு.

இளங்கோவன் சார் நீங்களே சிறு கட்சிதானே, இதுல மறுபடியும் எங்க போய் சிறு கட்சிகள பிடிச்சு கூட்டணி வைக்க போறீங்க, வரவர காமெடில சந்தானத்துக்கு டஃப் காம்படீசன் கொடுக்குறீங்க சார்.

அம்மா மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, எல்லாத்தையும் இலவசமா கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க கூடவே லேப்டாப்பும் கொடுக்கறாங்க, வீட்டுல நெட் கனெக்சனும் ஃப்ரீயா கொடுத்துட்டா இன்னும் பசங்க சந்தோசப்படுவாங்க.

பதிவர்களே நோட் பண்ணிக்கோங்க, இனிமேல் மாணவர்களுக்கும் பிடிக்கற மாதிரி பதிவெழுதுங்கோ, இன்னும் நிறைய ஹிட்ஸ், ஓட்டு எல்லாம் கிடைக்கும்.


அசாரூதீன் அவரோட சன் அயாஹூத்தீன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போய் விட்டார், எதிர்காலத்துல ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரா வர வேண்டியவர் இப்படி அநியாயமா இறந்து போனது வருத்தப்பட வேண்டிய விசயம்தான், ஆனாலும் வண்டில அதிக வேகத்துல போனா மேலயும் வேகமா போயிட வேண்டியதுதான்கறது மறுபடியும் நிரூபணமாகி இருக்குது,

வேகம் எப்பவுமே விவேகமா இருக்காது, பாதுகாப்பான வேகம்னு எதுவுமே கிடையாது, அதனால மெதுவா போங்க, பார்த்து போங்க, அயாஹூத்தீன் ஆத்மா சாந்தியடையட்டும்.


திரைப்படங்களுக்கு 100% கேளிக்கை வரியை அரசாங்கம் அறிவிச்சு இருக்கு, இதனால அதிர்ச்சியடைஞ்சு போயிருக்காங்க சினிமாக்காரங்க, என்ன ஆட்டம் போட்டீங்க சாமிகளா, இவங்க தமிழ்ல பேரு வைப்பாங்களாம் அரசாங்கம் வரியவே ரத்து பண்ணிருமாம், ஆனாலும் தியேட்டர்ல டிக்கெட்டு விலைய நூறு இருநூறுன்னு அதிகமா விப்பாங்களாம், யாரும் கேட்க்க மாட்டாங்களாம், என்ன அநியாயம்பா இது. 

அதுக்குதான் இப்ப சரியான ஆப்ப வச்சிருக்காங்க, வரி விதிச்சதோட மட்டுமில்லாம டிக்கெட் விலைய கண்டிப்பா கூட்டக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க, மாசத்துக்கு ஒரு பாராட்டு விழா நடத்துனா போதும் என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு நடந்தா இப்படித்தான், ஆட்சி மாறின உடனே பழைய படத்த தூக்கிட்டு புது படத்த போட்டு ஓட்டுறாங்கப்பா, இப்ப ரீலு அந்து போச்சுல்ல.

கூட்டமா வந்து கோரிக்கை வைக்கறோம்னு கால்ல விழுந்தாலும் இதுல மட்டும் தமிழக அரசு விட்டுக் கொடுக்க கூடாது ஏன்னா நம்மளுக்கு சரக்கும், சினிமாவும் ரொம்ப முக்கியம்.


நானும் மங்காத்தா படம் பார்த்துட்டேன், இடைவேளை வரைக்கும் கொஞ்சம் போரடிச்சிருச்சு, ஆனாலும் இடைவேளைக்கு அப்புறம் படம் செம விறு விறு சுறு சுறுதான், என்ன அஜீத் இப்படி கெட்டவார்த்தை பேசுறாரு, குடிக்கறாருன்னு பக்கத்துல இருந்தவங்க சொல்லிட்டு இருந்தாங்க, அட போங்கப்பா அதான் ஸ்டிரிக்ட்லி நோ ரூல்ஸ்னு முதல்லயே சொல்லிட்டாங்களே அப்புறம் என்னத்துக்கு லாஜிக் பார்த்துகிட்டு?



அப்புறம் படத்துல அஜீத்தோட ஹேர் ஸ்டைலுக்கு பேரு சால்ட் அண்ட் பெப்பராம், எனக்கென்னவோ அப்படித் தெரியல, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு உதாரணமா கீழ ஒரு ஸ்டில்லு போட்டு இருக்கேன் பாருங்க, என்ன பெப்பர்தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்.


இந்த வார கமர்சியல் ஹிட்டு வீடியோ நம்ம சக்சேனா அண்ணன் அழுகற இந்த வீடியோதான், என்னதான் பணம் இருக்கும் போது ஆடுனாலும், ஒரு சான்சுல சறுக்கிட்டா அதோ கதிதான், அதுவும் போலீஸ்காரங்ககிட்ட சிக்குனா நோண்டி நொங்கெடுத்துடுவாங்க, ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா பாட்டுக்கு இப்போதைக்கு சரியான உதாரணம் சக்சேனா அண்ணந்தான், பார்ப்போம் அண்ணன் சக்சஸ்ஸா வெளிய வருவாரான்னு.