Friday, February 24, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - உயிர் வலிக்குது சாரு !!!டிரெய்லர பார்த்து படத்துக்கு போய் பல்ப் வாங்குனவங்கள்ல நானும் ஒருத்தன், டிரெய்லர் நல்லா இருந்தா படம் நல்லா இருக்காது, படம் நல்லா இருந்தா டிரெய்லர் நல்லா பண்ண மாட்டாங்க போல

காதல் படம்னாலே படம் பார்க்குறவங்களுக்கும் கொஞ்சமாவது லவ் பீலீங் வரணும், அப்படி கொஞ்சமே கொஞ்சம் வந்துட்டாலே படம் ஆவரேஜ் கேட்டகிரில பாஸ் ஆகிடும், கூடவே கொஞ்சம் பாட்டும் கேட்கர மாதிரி இருந்ததுன்னா அது போதும், உதாரணத்துக்கு காதலில் விழுந்தேன் மாதிரி

இந்த படத்துல கதையும் இல்ல, காதலும் இல்ல, லவ் படம், சைக்கோ திரில்லர் அப்படி இப்படின்னு வெறுமனே பில்ட் அப் விட்டா மட்டும் போதுமா பாஸ்? கொஞ்சமாவது படம் பார்க்குற மாதிரி எடுக்க வேணாமா? இப்ப வர சீரியல்கள்ளயே வருச கணக்கா இழுக்கற அளவுக்கு திறமைசாலியா டைரக்டர்கள் இருக்கற போது, இரண்டறை மணி நேர படத்த சுவாரஸ்சமா சொல்ல வேண்டாமா?


படத்தோட கதைய என்னன்னு சொல்ல? ஏதோ சாப்ட்டுவேர் கம்பனீங்கறாங்க, அங்க அதர்வா அப்பாடாக்கராம், அமலா பால் அவர விட பெரிய அப்பாடாக்கராம், இரண்டு பேரும் ஒருகாலத்துல லவ் பண்ண மாதிரி இருந்துச்சாம், அப்புறம் அமலா பால் மட்டும் எஸ்கேப்பாம், ஆனாலும் அதர்வா லவ் கண்டினீயூவாம், அதுக்கு என்ன காரணம், கருமம்னு ஒரு இரண்டறை மணி நேரம் அவங்கனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அடிச்சு காய போட்டுட்டாங்கப்பா

படத்துல ஆறுதலான ஒரே விஷயம், பிளாஸ்பேக் அம்மா செண்டிமெண்ட் காட்சிகள்தான், ஆனாலும் பிளாஸ்பேக் பாட்டே பதினைஞ்சு நிமிசம் தாண்டி ஓடுறது கொஞ்சம் ஓவர் பாஸ்.

இதுக்கு இடையில அதர்வா மூஞ்சில பெயிண்ட வேற அடிச்சு சும்மா அந்தபக்கம் இந்த பக்கம் பறக்க விடறாங்க, கேட்டா ஃபைட்டாம், ம்ஹூம், என்னத்த சொல்ல? அமலா பால கொன்னுருவேன்னு சொல்லிட்டு போற வில்லனுங்க அதர்வாவ பார்க்குறதே இல்ல, அப்புறம் என்னாத்துக்கு இந்த பெயிண்டிங், கியிண்டிங் எல்லாம்னு புரியல

அப்புறம் டிவில பேட்டிக்கு வந்த அதர்வா சொன்னாரு, படத்துல வர டயலாக்குக எல்லாம் மீனிங் புல் டயலாக்குகளாம், அத என்னான்னு நீங்களே கேளுங்க, மொட்ட காட்டுக்கு நடுவுல நின்னுகிட்டு கட்டிபிடிச்சிட்டு ”மரணமே இல்லாத இடத்துக்கு வந்துட்ட மாதிரி இருக்கு சாரு”ன்னு சொல்றதும், கல்யாணத்துக்கு எங்கப்பன கூட்டிட்டு வந்துடறேன், அதுவரைக்கும் இங்கயே வெயிட் பண்ணுன்னு அமலா பால் சொன்னதும், அதர்வா சொல்லுவாரு பாருங்க ஒரு டயலாக் “ உயிர் வலிக்குது சாரு” அடேய் இங்க எனக்கு உயிரே போற மாதிரி இருக்குடா கொய்யாலே, சாவடிக்கிறானேன்னு முன்னாடி இருந்தவங்க எல்லாம் கத்துறாங்கப்பா


அப்புறம் கிளைமேக்ஸ் இரண்டு வெள்ளக்காரனுங்க வந்து எங்க பிரண்ட எங்ககிட்ட இருந்து பிரிக்க பாக்கிறியான்னு அமலா பால கொல்ல வரானுங்க, அப்புறம் என்ன #%$த்துக்கு நிச்சயதார்த்தம் பண்ணுனாண்டா உங்க பிரண்டுன்னு நம்மாளுங்க தியேட்டருல உக்கார்ந்து கத்துதுங்க

அப்புறம் அமலா பால பத்தி சொல்லியே ஆகணும், மிச்சம் மீதி இருந்த சிந்து சமவெளி நாகரீகத்தயும் இந்த படத்துல காட்டிட்டாங்க, அதுலயும் ரொமான்ஸ் சீன்ல எல்லாம் சன்னி லியோன் மாதிரி ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்கறாங்க பாருங்க, சான்சே இல்லை, கொடுமைடா சாமி (இதுக்காக யாரும் படம் பார்க்க முயற்சி பண்ணுனா அப்புறம் கம்பனி பொறுப்பேத்துக்காது)


படத்தோட டைரக்டர் இத்தன நாளா புரொடியூசரா இருந்தவராம், நாமளும் படம் எடுத்து பழகலாம்னு நினைச்சு படம் எடுத்திருக்காரு, ஆனா அதுக்கு பலியாடா நம்மள ஆக்குணதுதான் தாங்க முடியல, படத்தோட சீன்கள தனித்தனியா பார்த்தா கூட தாங்க முடியாதுங்கன்னா

முப்பொழுதும் பேசப்பட வேண்டிய படமா வந்திருக்க வேண்டியதுதான், திரைக்கதைன்னா என்னன்னே டைரக்டருக்கு தெரியாததால எல்லாமே கற்பனையா போனது துரதிஷ்டம்தான்.   

11 comments:

 1. சேம் ப்ளட். நான் பட்ட பாட்டை நீங்களும் பட்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. வணக்கமுங்க!"யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம்"னு,நல்ல மனசோட சொல்லியிருக்கீங்க!நான் கூட நேத்து இந்தப்படம்(ஓசில)பாத்தேன்!கொடும தான்!பாட்டுங்க கேக்கலாம்,ஒளிப்பதிவு,வர்ணம் சேர்க்கை நல்லாருக்கு!மத்தப்படி......................புஸ்..................!

  ReplyDelete
 3. //அதுலயும் ரொமான்ஸ் சீன்ல எல்லாம் சன்னி லியோன் மாதிரி ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்கறாங்க பாருங்க, சான்சே இல்லை//
  அடப்பாவீங்களா? என்னா ஒப்பீடு? :-)

  ReplyDelete
 4. ட்ரையலர் பார்த்து பாக்கலாம்போலருக்கேன்ல நினைச்சேன்!!!!!!

  ReplyDelete
 5. @ ! சிவகுமார் !

  அதே அதே :-)

  ReplyDelete
 6. @ விக்கியுலகம்

  வொய் மாம்ஸ் ???

  ReplyDelete
 7. @ Yoga.S.FR

  பரவால்ல சார் இந்தளவுக்கு ரசிச்சிருக்கீங்களே அதுக்கே உங்கள பாராட்டனும்

  ReplyDelete
 8. @ thirumathi bs sridhar

  அந்த நினைப்ப அடியோடு மறந்திடுங்க மேடம்

  ReplyDelete
 9. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!