இன்று நமது எதிர்கட்சி தலைவர், வருங்கால முதல்வர், தேமுதிக நிறுவன தலைவர் கேப்டனின் பிறந்தநாள், கேப்டனின் தொண்டர்கள், அடிப்பொடிகள் போஸ்டர் அடித்தும், காசு கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும், பிளக்ஸ் பேனர்கள் கட்டியும் வாழ்த்துக்கள் சொல்வார்கள், நமக்கு அந்த அளவு வசதி பத்தாது, எனவே இந்த பதிவு கேப்டனின் பிறந்தநாள் சிறப்பிதழாக வெளியிடப்படுகிறது.
கேப்டனின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது உங்களுக்கு தெரிந்ததே, ஐந்து வருடங்களாக பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி தமிழகத்தின் வறுமையை ஒழித்த தேமுதிகவினர், மிச்ச மீதி இருக்கும் வறுமையையும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஒழிக்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கின்றேன், எனவே எட்டு மாதம் கழித்து குழந்தை பிறக்க இருப்பவர்கள் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாமல் இன்றே குழந்தை பெற்று உங்களின் வறுமையினை ஒழித்துக் கொள்ளுங்கள்
கடந்த ஆட்சிகாலம் தொட்டே இலவசம் என்றால் சரக்கடிக்காமலே காண்டாகி எகிறிக்குதித்த கேப்டன் அம்மையாரின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை முழுமனதோடு வரவேற்றதோடு, இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை என்பவர்கள் கண் இருந்தும் தெரியாத கருத்துக்குருடர்கள் என்ற மாபெரும் அறிக்கையினை வெளியிட்ட கையோடு மாயமாகிவிட்டார், மேற்கொண்டு எதை பேசுவதாக இருந்தாலும் ஒருவருடங்கள் கழித்து வாருங்கள் எனவேறு கூறிவிட்டதால், எதிர்கட்சி தலைவரை காண வழியில்லாமல் போய் விட்டது
எனவே கேப்டனின் பழைய திரைப்படங்களையும், புகைப்படங்களையும் பார்த்து கேப்டனின் புகழ் பாடி வறுமை ஒழிப்பு தினத்தை கொண்டாடுவோமாக, நன்றி
பிறந்தநாள் வாழ்த்து
கேப்டன் உண்மையிலேயே கேப்டன்தான் என்பதற்கு ஆதாரம்
அம்மா ஆட்சியில இப்படித்தான் கைகட்டி கமுக்கமா இருக்கனும்
இந்த நாய பார்த்தா பாகிஸ்தான் தீவிரவாதியோட நாய் மாதிரி தெரியுது
கேப்டன் வேணாம் ப்ளிஸ் பொண்ணு பயப்படுது பாருங்க
கேப்டன் என்ன பண்ணுறீங்க?
மேற்கண்ட எந்த படத்துக்கும் வசனம் தேவையில்லை
அம்மா பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்கம்மா
ப்ளீஸ் விஜயகாந்த் கைஎடுத்து கும்பிடுறேன் என்னை விட்டுடுங்க
அம்மா நான் பேசாம கமுக்கமா இருக்கலாம், ஆனா அதுக்காக என்னை உட்காரவெச்சுட்டு நீங்க மட்டும் தனியா சாப்பிடுறது நல்லா இல்லை
என்னங்க அந்தம்மா சோறு போடாம அனுப்பிச்சிட்டாங்களா?
யோவ் இந்த நக்கல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க
முதலில் என்னுடைய அம்புக்கு பதில் சொல்
நீ முதல்ல என்னோட அவதாரத்த பாரு
ஏ புள்ள நாம பொறந்தநாள் கொண்டாடுனா தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான் ஆங்க்..!
என்னால முடியல
கேப்டனின் ஆகச்சிறந்த நடன காட்சிகளை கண்டுகழித்து வறுமை ஒழிப்பு தினத்தை கொண்டாடுங்கள்
ஹேப்பி வறுமை ஒழிப்பு DAY..!















































