Saturday, September 24, 2011

உழைப்பாளிகளும் பிச்சைகாரர்களும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் ...


சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் டீ சாப்பிட ஒரு பேக்கரிக்கு சென்றிருந்தோம், உள் நுழைவதற்கு முன்பே பிச்சைகாரர்கள் அய்யா அம்மா என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள், இந்தியா முழுக்கவே பிச்சைகாரர்கள் தொல்லை இருந்தாலும், திருப்பூரில் அது ரொம்பவே ஜாஸ்தி, ஒவ்வொரு கடைக்கு முன்பும் குறைந்தது இரண்டு பேராவது இருப்பார்கள், டீ சாப்பிட வருபவர்கள் இவர்களுக்கும் காசு கொடுத்து விட்டுதான் செல்ல வேண்டும், அந்தளவு தொந்தரவு ஜாஸ்தியாக இருக்கும்.

இவர்களில் புரபசனல் பிச்சைகாரர்களை விட இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்களின் தொல்லை ரொம்பவே அதிகம், விட்டால் காலில் விழுந்து விடுவார்கள், காசு கொடுக்கும் வரை காலை விடமாட்டார்கள், இன்ஸ்டண்ட் காபி போல அது என்ன இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்கள் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை, தேவைப்படும் போது மட்டும் பிச்சை எடுத்து தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பிச்சைகாரர்கள்தான் இன்ஸ்டண்ட் பிச்சைகாரர்கள்.

ரொம்ப நாள் முன்பு ஒரு நாற்பது வயது நெருங்கிய நடுத்தர வயது பெண்மணி, கண்ணு ஒரு இரண்டு ரூபாய் இருந்தா குடேன், ஊருக்கு போறதுக்கு இரண்டு ரூபாய் பத்தல என்று சொன்னதால், இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு சென்று விட்டேன், மதியம் ஒரு வேலை நிமித்தமாக வண்டியில் சென்றுகொண்டிருந்த போது பார்த்த போது ஒரு டாஸ்மாக் வாயிலில் குவாட்டரை பாட்டிலை ராவாக கவுத்து கொண்டிருந்தது அந்த நடுத்தரம், என்னை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு வேறு சிரித்தது, நான் அப்படியே ஷாக்காகிவிட்டேன்.

பிறகு அடிக்கடி அந்த பெண்மணியை பார்ப்பேன், என்னிடமே வேறு காரணம் சொல்லி காசு கேட்கும், யக்காவ் உங்கள எனக்கு நல்லாவே தெரியும் என்பேன், சிரித்துக் கொண்டு போய்விடும். 


பிறகு ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் வெயிட்டிங்கில் உள்ள பஸ்ஸில் உட்கார்ந்திருந்த போது, கடும் வெயிலில் இரண்டு காலும் இல்லாத ஒருவர், வெறும் வேஷ்டி மட்டும் உடுத்திக் கொண்டு சிறிய சக்கரம் பொருத்திய வண்டியை கையாலே கஷ்ட்டப்பட்டு இழுத்துக் கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார், பார்க்கவே பரிதாபமாக இருக்க, ஒரு பத்து ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன்.

பிறிதொரு நாளில் அதே ஆளை தமிழ்நாடு ஏசி தியேட்டரில் ஹாயாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கையில், தியேட்டர் ஸ்கீரினை கிழித்து அந்தாளை தொங்க விட வேண்டும் போல ஆத்திரம் வந்தது.

இப்படி வாய் பேசாத ஊமை என அச்சிடப்பட்ட காகிதம் கொடுத்து பிச்சை எடுத்தவர், பாம்பு படம் போட்ட தட்டை வைத்துக் கொண்டு கோயிலுக்கு போறேன்பா என்றவர், புள்ளைக்கு கண்ணாலம்பா காசு கொடு என்றவர், ரொம்ப பசிக்குதுங்க என்றவர், குழந்தையை கையில் வைத்துக் கொண்டு காசு கேட்டவர், வெளியூருங்க பர்ச பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்க என்று சொன்னவர் இப்படி பல பல பிச்சைகாரர்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாலோ என்னவோ பிறகு யார் பிச்சை கேட்டாலும் சந்தேகத்தோடு பாக்கவும், சில்லறை காசு இருந்தாலும் கொடுக்க மனம் இல்லாமலும் போயிற்று.

நான் பழைய நிறுவனத்தின் பணிபுரியும் வரை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட டவுன் பஸ் ஒன்றில் பயனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன், அப்படி பயணம் செய்து கொண்டிருக்கும் போது, தலை முழுக்க நரைத்த அறுபது வயதை கடந்த பாட்டி ஒருவர் ரெகுலராக பிச்சை எடுப்பார், அவரது கண்களில் நிரந்தரமாக ஒரு சோகம் குடி கொண்டிருக்கும், சில சமயம் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும், நானும் வாரத்தில் ஐந்து நாட்களாவது அவரை பார்ப்பேன், காசும் கொடுத்துக் கொண்டுருந்தேன்.


மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை அடிக்கடி பார்த்தால் என்னவோ, அவருக்கும் காசு கொடுக்க மனம் வரவில்லை, அவரும் நான் பழக்கப்பட்டவன் என்பதால் தினமும் என்னிடம் கேட்பதும், அவரது முகத்தை பார்த்தாலே இரக்கப்பட்டு விடுவேனோ என எண்ணி நானும் அவரை தவிர்ப்பதும் தொடர்கதையாகி போனது, இவ்வாறு ஒருநாள் அவர் பிச்சை கேட்கையில் காது கேட்காதவாறு திரும்பிக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்கு பின் அவர் எங்கு சென்றிருப்பார் என பார்க்க நினைத்து திரும்பினால், ஒரு முப்பது வயதுக்கு உட்பட்ட குடிகாரன் ஒருவன் அந்த மூதாட்டியை அடித்து உதைத்து அவர் பிச்சை எடுத்த காசை பிடுங்கிக் கொண்டு போய்விட்டான், அந்த குடிகாரன் அந்த மூதாட்டியின் மகனாம், இது தினமும் நடக்கும் ஒன்று என்றும், கேட்டால் என் அம்மாவ நான் அடிப்பேன் கேட்க நீங்க யாருடான்னு சண்டைக்கு போவானாம், குடிகாரன்கூட என்ன பிரச்சனைன்னு யாரும் கேட்காமலே ஒதுங்கிக்கிறாங்கன்னு ஒருவர் சொல்லி கொண்டிருந்தார்.

அவன் அடித்த அடியில் கீழே விழுந்த அந்த அம்மா எழ முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தார், பார்த்த எனக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது, சே இத்தனை நாள் காசு கொடுத்துக் கொண்டிருந்தமே, இந்த வயதில் இவர் ஏமாற்றவா போகிறார், போய் அவருக்கு உதவி செய்ய வேண்டும், கையில் இருக்கும் பணத்தை கொடுக்கலாம் என நினைத்த போது பேருந்து புறப்பட்டு விட்டது, வேலைக்கும் நேரமாகி விட்டதால், கீழே இறங்கவும் மனம் வரவில்லை, அன்று அவருக்கு பணம் கொடுக்காதது நாள் முழுவதும் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

சரி நாளைக்கு கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும், இனி மீண்டும் தினமும் காசு கொடுக்கலாம் என நினைத்திருந்தேன், ஆனால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என மீண்டும் அவரை சந்திக்கவே இல்லை, காலப்போக்கில் நானும் அவரை மறந்து விட்டேன், ஏறக்குறை ஆறுமாத கால இடைவெளி இருக்கும் அந்த குடிமகனை பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன், பிளாட் ஆகி வாந்தியெடுத்து நாறிக் கிடந்தான், அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் அவனை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார், அவனின் அம்மா அந்த வயதான மூதாட்டி இறந்து போய் விட்டார் என கூறிக் கொண்டிருந்ததை கேட்ட போது, மீண்டும் அந்த குற்ற உணர்ச்சி எனக்கு வந்து விட்டது, இதோ இப்பொழுது இதை எழுதும் தருணத்திலும் அதனை உணர்கிறேன்.

சரி விசயத்திற்கு வருகிறேன், நாங்கள் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கையில்  மனநலம் குன்றியவர் போல் ஒருவர் சரியாக நடக்கவும் முடியாமல், கை, கால்கள் ஒருபக்கம் லேசாக இழுத்தது போல நடந்து வந்தார், வந்தவர் மற்ற பிச்சைகாரர்கள் போல பிச்சை எடுக்க போகிறார் என நினைத்துக் கொண்டிருக்கையில், கையில் கொண்டு வந்திருந்த துணி மூட்டையை அவிழ்த்து அதிலிருந்து ஊது பத்திகளை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அப்பொழுதுதான் அவருக்கு பேச்சும் சரியாக வரவில்லை என்று தெரிந்தது, வெகு நேரம் கூப்பாடு போட்டும் யாரும் வாங்கவில்லை, அதை பார்த்த ஒருவர் ஒரு பத்து ரூபாய் தாளை வெச்சுக்கோ என நீட்டினார், அதனை அவர் வாங்க மறுத்து விட்டார், ஊதுபத்தி வாங்கிக்கொள்ளுமாறு கேட்டார், பிறகு அவரும் ஒன்று வாங்கிக் கொண்டார், அதனை பார்த்து இன்னும் இரண்டு பேர்கள் வாங்கினார்கள், நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன்.

காரில் வந்த பணக்காரர் ஒருவர், 100 ரூபாய் தாளை அவருக்கு பிச்சையாக கொடுத்தார், அவர் மீண்டும் வாங்க மறுத்து ஊது பத்தி வாங்க சொன்னார், அந்த பணக்காரர் எனக்கு ஊதுபத்தி வேண்டாம், சும்மா வைத்துக் கொள் என்று சொன்னார், அதனை கேட்டு கோபப்பட்ட அவர் நான் பிச்சை எடுக்க வரவில்லை, உழைத்து சம்பாதிக்கவே விரும்புகிறேன் என திக்கி திணறி சொன்னதை கேட்டு வாயடைத்து போனவர் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

போனவர் அவர் மட்டுமல்ல அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மற்ற பிச்சைகாரர்களும்தான், கை கால் சரிவர முடியாமல், பேச முடியாமல், நடக்க முடியாமல் இருப்பவரே உழைத்து சம்பாதிக்க நினைக்கும் போது எல்லாம் சரியாக இருந்தும் சோம்பேறித்தனமாக பிச்சை எடுக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே அவர்களை அங்கிருந்து அகல செய்தது.

விற்றது குறைவே ஆகிணும் தான் உழைத்து சம்பாதித்ததில் பெருமையோடு அடுத்த இடத்தை நோக்கி தட்டு தடுமாறி நகர தொடங்கினார் அந்த ஊதுபத்தி விற்பவர்.

வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்பதை போல, உழைப்பின் நிழல் ஊரெங்கும் பரவித்தான் காணப்படுகிறது, ஆனால் அந்த நிழலில் ஒதுங்க மனமில்லாமல் வெயிலிலேயே கிடக்கும் சோம்பேறிகளை என்ன சொல்வது?!!!

Wednesday, September 21, 2011

புர்ச்சி கலைஞரு !!!



மறுபடியும் கேப்டனான்னு யாரும் நினைக்க வேண்டாம், எழுதாமலும் இருக்க முடியல, எல்லா மேயர் பதவிகள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கு அம்மா வேட்பாளர் பட்டியலை அறிவிச்சிட்டாங்க, ஆனா இன்னும் நம்ம கேப்டனு வாய தொறக்காமலேயே இருக்காரு.

சட்டமன்ற எலக்சன்ல ஜெயிச்சு எதிர்கட்சி தலைவரா ஆனதுல தலைவரு வாயடைச்சு போனது வாஸ்தவம்தான், ஆனாலும் அதுக்காக அதிமுக எல்லா தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர அறிவிச்ச பின்னாடி கூட சைலண்டா இருந்தா எப்படிங்க?

மூணு வாரத்துக்கு முன்னாடியே உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேச ஒரு குழு அமைச்சாங்க அம்மா, கம்யூனிஸ்ட்காரங்க எல்லாம் போய் பேசிட்டு இருக்கலை, கேப்டன மட்டும் ஸ்பெசலா என்ன வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்களா என்ன? சும்மாவே சலங்கை கட்டி ஆடும் அந்தம்மா.

முன்னாடிதான் அவங்களுக்கு ஜெயிப்பமா தோப்பமான்னு ஒரு டவுட் இருந்தது, அதனால வாலண்டியரா கேப்டன கூப்பிட்டு கூட்டணி வச்சிக்கிட்டாங்க, ஆனா நிலைமை இப்ப அப்படியா இருக்கு, புல் மெஜாரிட்டில ஜெயிச்சதோட இல்லாம தேர்தல்ல அறிவிச்ச வாக்குறுதிகள் எல்லாத்தையும் நிறைவேத்தவும் ஆரம்பிச்சாச்சு, போதாக்குறைக்கு இலங்கை பிரச்சனைக்கும், தூக்கு தண்டனை பிரச்சனைக்கும் சட்ட மன்றத்துல தீர்மானம் நிறைவேத்து நல்ல பேரும் வாங்கியாச்சு, அப்புறம் அந்தம்மாவுக்கு என்ன பிரச்சனை.

உள்ளாட்சி தேர்தல் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்னு கேப்டன் நினைக்க, அதுக்கு முன்னாடியே அவங்க பார்த்துட்டாங்க, சும்மாவா சொன்னாங்க ஆப்பு கண்ணுக்கு தெரியாதுன்னு. 

எப்ப ஆட்சிய பத்தி கருத்து கேட்டாலும் ஆறு மாசம் கழிச்சு சொல்றேன், ஒரு வருசம் கழிச்சு சொல்றேன், குழந்தையே இப்பத்தான் பொறந்திருக்குன்னு டயலாக் விட்டுகிட்டு இருந்தாரு, இப்ப என்ன ஆச்சு? அந்த குழந்தை வளர்ந்து பெரியாளாகி ரொம்ப நாள் ஆகுது. இப்ப அந்த குழந்தையே நீங்கதான் கேப்டன்னு யாராச்சும் சொன்னாலாவாது பரவாயில்லை, நம்ம பண்ணுரொட்டி கூட வாய தொறக்கறதே இல்லை.

இருக்குற எல்லா தலைவர் பதவிகளும் போச்சு, மிச்சம் இருக்குறது கவுன்சிலர் பதவிக மட்டும்தான், கடைசியில அதுவாவது கிடைச்சா தலைவர்கள தேர்ந்தெடுக்கும் போது கரச்சலை கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுதான் அந்தம்மா வெவரமா தலைவர் பதவிகள கூட மக்களே நேரடியா தேர்ந்தெடுக்கற மாதிரி கொண்டு வந்துட்டாங்க, இனி அதுக்கும் சான்ஸ் இல்லை.

தனியா நின்னா என்னன்னு சொல்லி ஓட்டு கேட்கறது, திமுக ஆட்சியில இருந்தா கூட மானாவாரியா திட்டலாம், அவங்களும் கண்டுக்க மாட்டாங்க, ஆனா அம்மா கிட்ட அப்படி பண்ண முடியுமா? வாயத்தொறந்தாலே நில அபகரிப்பு கேச போட்டு உள்ள உட்கார வெச்சிருவாங்க.

காங்கிரஸ் காரங்களோட கூட்டணி வச்சுக்கறதுக்கு பதிலா பேசாம கேரளாவுக்கு லாரில அடிமாடா போயிரலாம், வேற வழியே இல்ல கம்யூனிஸ்ட் காரங்க கூட சேந்து அம்மா கால்ல விழுந்து ஒன்னு ரெண்டு கவுன்சிலர் பதிவிகளயாவது வாங்க்கிக்கரதுதான் உசிதம்.


எதிர்கட்சி தலைவராத்தான் உருப்படியா ஒன்னும் செயல்படல, அட்லீஸ்ட் சட்டமன்றத்துக்காவது தினமும் போய் எல்லா நடவடிக்கைகளையும் கத்துக்கிட்டாலாவது பரவாயில்லை, அதுக்கும் போறதில்லை, போதாக்குறைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் வேற மேட்டூர்ல டேம் இருக்கு, திருச்செந்தூர்ல கடல் இருக்குன்னு காமெடி பண்ணி அந்தம்மாவ வேற டென்சன் ஏத்திட்டு இருக்காங்க, அந்தம்மாவும் புதுசா காலேஜ்ல சேர்ந்த பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ச ராக்கிங் பண்ற மாதிரி ராக்கிங் பண்ணிட்டு இருக்காங்க.

கூடவே உட்காந்து காப்பாத்த வேண்டிய நம்மாளு எங்க உட்கார்ந்து சரக்கடிச்சிட்டு இருக்காரே தெரியல, இப்படியே போனா காந்தி ஜெயந்தி அன்னைக்குத்தான் தலைவரு எலக்சன பத்தியே யோசிக்கவே முடியும், என்ன பண்றது, எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்..! 

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும் - A Film Must be Watched

எங்கேயும் எப்போதும் நடக்கும் விசயங்கள் இரண்டு, ஒன்று காதல், மற்றொன்று விபத்து.

இரண்டு விசயத்தையும் அழகாக கோர்வையாக்கி ஒரு நல்லதொரு சினிமா படைப்பினை ரசிக்கும்படி கொடுத்து விபத்து பற்றிய நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி கமர்சியலாகவும் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன்.

படத்தின் தொடக்கமே இரண்டு பேருந்துகள் பயங்கரமாக மோதி பலபேரை பலி கொள்ளும் விபத்துதான்.

அந்த விபத்துக்கு முந்தைய நான்கு மணி நேரமே படம்.

ஒரு விபத்தை பற்றிய தெளிவான பார்வையையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், அந்த விபத்தினை எதிர்கொள்ளுவோரின் மனநிலையையும், விபத்தினால் உயிர் இழப்பவர்களின் குடும்பங்களும் படும்பாட்டினையும் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.


காதலை பற்றி ஜெய், அஞ்சலி, சரவ்,அனன்யா ஜோடி மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்கள், இரண்டு ஜோடிகளில் அதிகம் கவர்வது ஜெய், அஞ்சலி ஜோடிதான், இவர்களின் காதல் காட்சிகள் அனைத்தும் செம கியூட், அஞ்சலிக்கு இந்தபடம் மற்றுமோர் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் இயக்குனர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர், கிராமத்து பெண்ணின் பார்வையில் நகரம், ஐடியில் வேலை செய்யும் இளைஞன், சென்னையை பற்றி தவறான கண்ணோட்டம் பற்றிய பார்வை, ஒரே நேரத்தில் இரண்டு பேரிடம் கடலை போடும் நாகரீக பெண், புது மனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே பயணம் செய்யும் இளைஞர், பேருந்தில் பார்க்கும் கல்லூரி மாணவியை கரக்ட் செய்ய நினைக்கும் கல்லூரி இளைஞர், ஜெய்யின் சொந்த ஊர்க்காரர், அனன்யாவின் சொந்தக்கார பெண், ஐடி பஸ்ஸில் வரும் நண்பர்கள், விளையாட்டில் ஜெயித்து ஊர்திரும்பும் பெண்கள், பஸ்ஸில் பயணம் செய்யும் சமையல்காரர், வெகுளித்தனமாக பேசும் சுட்டிப்பெண், பஸ்ஸில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள், இன்னும் இன்னும்………… எத்தனையோ கேரக்டர்கள்

எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஒவ்வொரு கேரக்டரின் மூலமும் ஒரு எதார்த்த வாழ்க்கையினையே பிரதிபலித்து இருக்கிறார் இயக்குனர் கூடவே வசனகர்த்தாவும், படம் முழுக்க ஏகப்பட்ட குறியீடுகளால் நிரம்பி வழிகிறது.


படத்தின் இசை அறிமுகம் சத்யா, பாடல்களும், பிண்ணனி இசையும் அருமை, பேருந்து அதிவேகத்தில் செல்லும் போதெல்லாம், நம் இதயமும் பதறுகிறது, ஒளிப்பதிவு இயக்குனர் வேல்ராஜ் பெரும் பாராட்டுக்குரியவர், அவரின் கேமரா கோணத்தில் அனைத்து காட்சிகளுமே அருமை அதிலும் விபத்துக்குரிய காட்சிகள் அனைத்தும் பதறவைக்கிறது.

ஏ,ஆர், முருகதாசின் முதல் படைப்பே மிகச்சிறந்ததாக அமைந்ததில் சந்தோசம், இயக்குனருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது,

எங்கேயும் எப்போதும் – கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

டிஸ்கி : படத்தில் இயக்குனர் சொல்ல வருவதே விபத்து பற்றிய எச்சரிக்கைதான், ஆனால் அதை எத்தனை பேர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என தெரியவில்லை, ஏனெனில் அதையும் மீறி ரசிகர்களை கவர்வது அஞ்சலிதான் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும், படம் முடிந்தபிறகு விபத்தை பற்றிய பரிதாப உணர்வுக்கு பதில் அஞ்சலியின் இளமையை பற்றிய விவாதமே வந்திருந்த இளைஞர்களின் பேச்சில் தெரிந்தது,
படத்திற்கு அதிகமாக வந்திருந்தவர்கள் கல்லூரி மாணவர்கள்தான் ஒருவேளை காரணம் அதுவாக கூட இருந்திருக்கலாம், மற்றபடி புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொண்டு நல்ல விசயங்கள் நாலு பேரை சென்றடைந்தால் நல்லதுதான்.

Friday, September 16, 2011

கமர்சியல் பக்கங்கள் - 16/09/2011


வழக்கம் போலவே பெட்ரோல் விலையை ஏத்திட்டாங்கப்பா, முன்னையெல்லாம் வருசத்து ஒரு தரம் ஏத்துனாலும் 50 பைசா, ஒரு ரூபாய்னு ஏத்துவாங்க, எதிர்கட்சிக போராட்டம் நடத்துறேன்னு சொன்னதும் ஒரு நாலணா, எட்டணா குறைச்சுருவாங்க, இப்பெல்லாம் அடிக்கடி ஏத்துறானுங்க, அதுவும் ஒரேயடியா ஏத்துறானுங்க, பேசாம லிட்டருக்கு 100 ரூபாய்னு சொல்லிடுங்கப்பா, அப்படியாவது ஒரு மூணு மாசத்துக்கு மறுபடியும் விலையேத்தாம இருக்கலாம்.

பெட்ரோல் விலைதான் இப்படின்னா சிலிண்டர் விலையையும் ஏத்தலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம், அதுவும் வருசத்துக்கு ரெண்டு மூணு சிலிண்டர் மட்டும் மானிய விலையிலும், மத்தபடி வாங்கற சிலிண்டர் எல்லாம் டபுள் ரேட்டுல விக்கவும் அதாவது 400 ரூபாய் சிலிண்டர் 800 ரூபாய்யாம், கூட்டணி கட்சிக எதிர்ப்பு தெரிவிச்சதால இப்போதைக்கு ஆலோசனை கூட்டத்தை ரத்து பண்ணி இருக்காங்க.

அஞ்சு வருசம் ஆட்சி முடியறதுக்குள்ள இலை தலைய திங்க வைக்காம போக மாட்டாங்க போல இந்த காங்கிரஸ்காரங்க.

தமிழகத்தில் எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்கற உள்ளாட்சி தேர்தல் தேதிய இன்னைக்கு அறிவிக்க போறாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் மறுபடியும் ஒரு திருவிழாவுக்கு தயாராகிட்டு இருக்கறாங்க, மத்த எலக்சன விட உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு சம்திங் ஸ்பெசல்தான்.

சட்டசபை எலக்சன், பார்லிமெண்ட் எலக்சன்ல எல்லாம் முகத்தையே பார்த்திருக்காத யாரோ ஒருவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க, அவங்களும் ஐஞ்சு வருசத்துக்கு திரும்பியே வர மாட்டாங்க, ஆனா உள்ளாட்சி தேர்தல் அப்படி இல்ல, நம்ம தெருவையோ பக்கத்து தெருவையோ சேர்ந்தவங்க தான் தேர்தல்ல நிக்க போறாங்க, இப்பவாச்சும் கட்சி வித்தியாசம் பார்க்காம நம்ம வார்டுல உருப்படியா வேலை செய்யுற ஆட்களை தேர்ந்தெடுங்க, எலக்சன் கமிசன் இந்த தேர்தலையும் சரியா நடத்துமான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.


திமுக கட்சியா, திரு.மு.கருணாநிதி கட்சியா, சரி ஏதோ ஒன்னு தலைவர் உள்ளாட்சி தேர்தல்ல கூட்டணி இல்ல நாங்க தனியாத்தான் நிப்போம்னு சொல்லிட்டாரு, காலங்கெட்ட காலத்துல சொன்னாலும் இப்போதைக்கு திமுக தொண்டர்களுக்கு இதவிட பெரிசா சந்தோசத்த கொடுக்க ஒன்னும் இருக்காது.

ஆனா இதுல பெரிய காமெடி என்னன்னா வழக்கம் போலவே நம்ம ஈரோட்டுக்காரரு இவிகேஎஸ். இளங்கோவன், கலைஞர் சொன்னதை வரவேற்கிறாராம், இப்பத்தான் காங்கிரஸ்சோட சுமை குறைஞ்சு போச்சாம், என்னமோ திமுகவ தூக்கி சுமந்துகிட்டு இருந்தமாதிரி, தனிச்சு நின்னு காங்கிரஸ் ஜெயிக்க போகுதாம், வேணும்னா சிறு சிறு கட்சிகளோட கூட்டணி வச்சுக்குவோம்னு வேற சொல்லி இருக்காரு.

இளங்கோவன் சார் நீங்களே சிறு கட்சிதானே, இதுல மறுபடியும் எங்க போய் சிறு கட்சிகள பிடிச்சு கூட்டணி வைக்க போறீங்க, வரவர காமெடில சந்தானத்துக்கு டஃப் காம்படீசன் கொடுக்குறீங்க சார்.

அம்மா மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, எல்லாத்தையும் இலவசமா கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க கூடவே லேப்டாப்பும் கொடுக்கறாங்க, வீட்டுல நெட் கனெக்சனும் ஃப்ரீயா கொடுத்துட்டா இன்னும் பசங்க சந்தோசப்படுவாங்க.

பதிவர்களே நோட் பண்ணிக்கோங்க, இனிமேல் மாணவர்களுக்கும் பிடிக்கற மாதிரி பதிவெழுதுங்கோ, இன்னும் நிறைய ஹிட்ஸ், ஓட்டு எல்லாம் கிடைக்கும்.


அசாரூதீன் அவரோட சன் அயாஹூத்தீன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போய் விட்டார், எதிர்காலத்துல ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரா வர வேண்டியவர் இப்படி அநியாயமா இறந்து போனது வருத்தப்பட வேண்டிய விசயம்தான், ஆனாலும் வண்டில அதிக வேகத்துல போனா மேலயும் வேகமா போயிட வேண்டியதுதான்கறது மறுபடியும் நிரூபணமாகி இருக்குது,

வேகம் எப்பவுமே விவேகமா இருக்காது, பாதுகாப்பான வேகம்னு எதுவுமே கிடையாது, அதனால மெதுவா போங்க, பார்த்து போங்க, அயாஹூத்தீன் ஆத்மா சாந்தியடையட்டும்.


திரைப்படங்களுக்கு 100% கேளிக்கை வரியை அரசாங்கம் அறிவிச்சு இருக்கு, இதனால அதிர்ச்சியடைஞ்சு போயிருக்காங்க சினிமாக்காரங்க, என்ன ஆட்டம் போட்டீங்க சாமிகளா, இவங்க தமிழ்ல பேரு வைப்பாங்களாம் அரசாங்கம் வரியவே ரத்து பண்ணிருமாம், ஆனாலும் தியேட்டர்ல டிக்கெட்டு விலைய நூறு இருநூறுன்னு அதிகமா விப்பாங்களாம், யாரும் கேட்க்க மாட்டாங்களாம், என்ன அநியாயம்பா இது. 

அதுக்குதான் இப்ப சரியான ஆப்ப வச்சிருக்காங்க, வரி விதிச்சதோட மட்டுமில்லாம டிக்கெட் விலைய கண்டிப்பா கூட்டக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க, மாசத்துக்கு ஒரு பாராட்டு விழா நடத்துனா போதும் என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு நடந்தா இப்படித்தான், ஆட்சி மாறின உடனே பழைய படத்த தூக்கிட்டு புது படத்த போட்டு ஓட்டுறாங்கப்பா, இப்ப ரீலு அந்து போச்சுல்ல.

கூட்டமா வந்து கோரிக்கை வைக்கறோம்னு கால்ல விழுந்தாலும் இதுல மட்டும் தமிழக அரசு விட்டுக் கொடுக்க கூடாது ஏன்னா நம்மளுக்கு சரக்கும், சினிமாவும் ரொம்ப முக்கியம்.


நானும் மங்காத்தா படம் பார்த்துட்டேன், இடைவேளை வரைக்கும் கொஞ்சம் போரடிச்சிருச்சு, ஆனாலும் இடைவேளைக்கு அப்புறம் படம் செம விறு விறு சுறு சுறுதான், என்ன அஜீத் இப்படி கெட்டவார்த்தை பேசுறாரு, குடிக்கறாருன்னு பக்கத்துல இருந்தவங்க சொல்லிட்டு இருந்தாங்க, அட போங்கப்பா அதான் ஸ்டிரிக்ட்லி நோ ரூல்ஸ்னு முதல்லயே சொல்லிட்டாங்களே அப்புறம் என்னத்துக்கு லாஜிக் பார்த்துகிட்டு?



அப்புறம் படத்துல அஜீத்தோட ஹேர் ஸ்டைலுக்கு பேரு சால்ட் அண்ட் பெப்பராம், எனக்கென்னவோ அப்படித் தெரியல, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு உதாரணமா கீழ ஒரு ஸ்டில்லு போட்டு இருக்கேன் பாருங்க, என்ன பெப்பர்தான் கொஞ்சம் அதிகமா இருக்கும்.


இந்த வார கமர்சியல் ஹிட்டு வீடியோ நம்ம சக்சேனா அண்ணன் அழுகற இந்த வீடியோதான், என்னதான் பணம் இருக்கும் போது ஆடுனாலும், ஒரு சான்சுல சறுக்கிட்டா அதோ கதிதான், அதுவும் போலீஸ்காரங்ககிட்ட சிக்குனா நோண்டி நொங்கெடுத்துடுவாங்க, ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா பாட்டுக்கு இப்போதைக்கு சரியான உதாரணம் சக்சேனா அண்ணந்தான், பார்ப்போம் அண்ணன் சக்சஸ்ஸா வெளிய வருவாரான்னு.



Monday, September 5, 2011

நாய் V/S மனிதன் - கொஞ்சம் (ஏ)டாகூட பதிவு


அறிவு கெட்ட நாயே..!
நீ நாய விட கேவலமாவண்டா..!
நீ நாயி உங்க அப்பன் நாயி, உன் குடும்பமே நாய் பரம்பரை.!
பரதேசி நாய்..!

இப்படி நாய்க்கும் மனுதனுக்குமான தொடர்பு எல்லையில்லாதது, மனிதனை திட்ட வேண்டும் என்றால் கூட நாயைத்தான் துணைக்கு கூப்பிட வேண்டியிருக்கு,

உண்மையில் நாயை பார்த்து மனிதன் கற்றுக் கொண்டதை விட மனிதனை பார்த்து நாய்கள் கற்றுக் கொண்டதே அதிகம் என எண்ணுகிறேன்

ஒரு தெருவினை எடுத்துக் கொண்டால், அந்த தெருவில் வசிக்கும் நாய்கள் மட்டுமே அங்கு ராஜாக்கள், வேறு தெருவினையோ சந்தினையோ சேர்ந்த நாய் அவர்களின் எல்லைகளுக்குள் நுழைந்தால் அனுமதிப்பதில்லை, கூட்டமாக சேர்ந்து கடித்து துரத்தி விட்டுவிடும், மனிதர்களும் அப்படித்தானே, தங்களது இடத்தை பாதுகாக்க சண்டை போடுகிறார்கள், இப்படி மனிதனை பார்த்துதான் நாய்களும் தெருச்சண்டை போட கற்றுக் கொண்டனவோ என்னவோ

யார் கண்டது மனிதர்களின் மதச்சண்டை இனச்சண்டை போலவே நாய்களுக்குள்ளும் இனச்சண்டை இருக்கலாம், நான் பொமரேனியன், டாபர்மேன், நீ நாட்டுநாய் என அவைகளுக்குள்ளும் பிரிவினை இருக்கலாம், நீ உயர்ந்த ஜாதி நாய், நீ தாழ்ந்த ஜாதி நாய் என ஜாதிச்சண்டையும் இருக்கலாம்

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளை சொல்ல பயன்படுத்தும் சொல் நாய்க்காதல், ஏன் நாய்க்காதல் என சொல்ல வேண்டும், அவைகளுக்குத்தான் இடம் இல்லை, பொருள் இல்லை, ஏவல் இல்லை, ஏன் மனிதர்களுக்குமா இல்லை? கேட்டால் நாய்க்காதலாம், அவையாவது ஐந்தரிவு உடையன, ஆனால் மனிதன்?

நாய்கள் இயல்பாக நன்றி உணர்வு கொண்டவை, வீட்டை பாதுகாக்கவும், அயல் மனிதர்கள் யாராவது வந்தால் குரைத்து தெரியப்படுத்தவும்தான் முதலில் பயன்படுத்தி வந்தார்கள், ஆனால் அப்படி கடமை உணர்வு மிக்க படை வீரர்களை போல பயன்பட்டு வந்த நாய்களை செல்லம் கொடுத்து கெடுப்பவர்கள் யார்? குழந்தைகளுக்குதான் செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்றால், நாய்களையும் செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறார்கள்.

அதற்கும் சிக்கன், மட்டன், பிரைடு ரைஸ் என மனிதர்கள் தின்னும் அனைத்தையும் ஊட்டிவிட்டு பன்னி போல வளர்த்து விடுகிறார்கள், அதன் உடம்பையே அதனால் தூக்கி சுமக்க முடியாமல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திருடனை பார்த்தால் எகிறி கடிக்கவா செய்யும்? வரும் திருடர்களும் உசார்தான், கொள்ளையடிக்க வரும் போதே சிக்கன் பிரியாணியை பார்சல் வாங்கி வந்து விடுகிறார்கள், இப்பொழுது நாய்களும் மனிதனை போலவே மாறிவிட்டன நன்றி உணர்ச்சி இல்லாமல்.

மனிதனை பொறுத்த வரையில் நாய்களும் ஒன்றுதான், பெண் குட்டி போட்டால் துரத்தி விட்டுவிடுவார்கள், ஆண் குட்டி மட்டுமே வீட்டில் வளர்க்க செல்லுபடியாகிறது, இதிலும் கலப்பின உயர்ரக ஜாதி நாய்கள் மட்டும் விதிவிலக்கு, குட்டியை விற்றால் காசு கிடைக்குமே என்று.

இப்படி அனாதையாக துரத்தியடிக்கப்பட்ட பெண் நாய்கள், ஊரை சுற்றி, தெருவை சுற்றி, கல்லடி வாங்கி குப்பையை பொறுக்கி தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், அவைகளும் ஒருநாள் வயதுக்கு வரும், பிறகு அரங்கேறும் பாருங்கள் ஆண் நாய்களின் சாகசம், ஒரு பெண் நாயின் பின்னே பத்து இருபது ஆண் நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும், இங்கு மனிதர்களும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

ஒருவழியாக எதாவது ஒரு நாய் கரக்ட் பண்ணி மேட்டர் பண்ணும் வேளையில் வருவான் பாருங்கள் வில்லன் போல நம்மாள் ஒருவன், நானே காஞ்சு போய் இருக்கேன் நாய்களுக்கு ஜல்சா கேட்குதா என குச்சியாலே அடித்து பிரித்து விடுவான், அவைகளும் காள்ள் காள்ள் என கத்திக் கொண்டு ஓடும், நம்மாள் எதோ வீரசாகசம் பண்ணியது போல சிரித்து எக்காளமிடுமான்.

ஏற்கனவே ஊரில் அனைத்து பெண்கள் பின்னாலும் திரிந்து அக்கா தங்கச்சி கூட பொறக்கலே எனும் திட்டுக்களை அசால்ட்டாக வாங்கி ஆயிரக்கணக்கான பெண் சாபங்களை பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவன், கூடவே நாய்சாபமும் பெற்று 40 வயது கடந்தும் விதவனாக ச்சீ கன்னிப்பையனாகவா? இல்லை இருக்காது, வேறு எப்படி சொல்லலாம்? மொட்டை பையனாகவா? சரி நாய் மாதிரியே திரிஞ்சுகிட்டு இருப்பான்னு வெச்சுக்கோங்க.

நண்பன் ஒருவனின் அக்கா பாரினில் இருக்கிறார், அவர் ஆசை ஆசையாக ஒரு நாய்க்குட்டியை வாங்கி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார், அதுதான் பாரீன் நாய் ஆச்சே, தினமும் வாக்கிங் கூட்டி போக வேண்டும் என சொல்லி அனுப்பினார்.

நமது ஆட்கள் பாத்ரூம் போகவே நடக்க சங்கடப்பட்டுதானே வீட்டுக்கு உள்ளேயே அட்டாச் பாத்ரூம் வைத்து போய் கொண்டிருக்கிறார்கள், பிறகு எங்கே வாக்கிங் கூட்டி போவது, ரூம் போட்டு யோசித்த நண்பனின் அப்பா தினமும் டாஸ்மாக் போகும் போது அழைத்துச் செல்ல முடிவு செய்தார், போகும் போது இந்த நாயை இவர் இழுத்துக் கொண்டு போவார், வரும் போது அந்த நாய் இவரை இழுத்துக் கொண்டு வரும் (இதில் எதுவும் உள்குத்து இல்லைங்கோ)

ஒருநாள் வழக்கம் போல கடைக்கு சென்று புல் டைட்டாகி விட்டார் நண்பனின் அப்பா, கடை மூடும் நேரமும் நெருங்கி விட்டது, வீட்டுக்கு போகும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்த நாய் வள் வள் என குலைத்து இவரை கூப்பிட்டு இருக்கிறது, சரக்கடிக்கும் போது டிஸ்டர்ப் பண்ணுரியா என கொந்தளித்தவர், ஒரு ஆஃப் பாட்டில் சரக்கை நாய் வாயில் ஊற்றி விட்டார்

தண்ணீர் மிக்ஸ் பண்ணி கொடுத்திருந்தாலும் பரவாயில்லை, ராவாக ஒரே கல்ஃபில் அடித்ததால் தள்ளாடிய நாய் வீடு வந்ததும் செத்து போனது, அப்பவும் இவரை கட்டி இழுத்து வீடு கொண்டு வந்து சேர்த்த பின்புதான் செத்தது என்பது ஆச்சரியம்தான்

அந்த நாயை வீட்டுக்கு பின்புறமே அடக்கம் செய்தார்கள், இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன், என்ன மலர்வளையம் வாங்கத்தான் காசில்லை, நண்பனின் அம்மாதான் காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் துக்கம் தாங்காமல் நெடுநேரம் அழுது கொண்டிருந்தார்,

சரிங்க விடுங்கம்மா போனது போச்சு, இனி அழுது என்ன பண்ணுறது?

அதுக்கில்லடா அந்த நாய் செத்ததுக்கு பதிலா இந்த நாய் செத்திருந்தா பரவாயில்லடா என கூறியவாறு ஓவென அழ ஆரம்பித்தார்

யார் மனதில் என்ன இருக்கிறது? என்ன சொல்வதென்றே தெரியாமல் கிளம்பி வந்தேன், நல்லவேளை செத்து போன அந்த நாய்க்கு பீடி, சிகரெட், குட்கா, மட்கா என எந்த பழக்கமும் இல்லை.

நண்பன் ஒருவனின் தங்கை அண்ணனின் நண்பன் ஒருவருடனே ஓடிப்போன போது, கூட இருந்த இன்னொரு நண்பன் சொன்னான், நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சாக்கடைக்குத்தான் போகும் என்று, நாயையே கட்டிபிடித்து பெட்ரூமில் படுத்து தூங்கும் போது அது நடுவீட்டுக்கு போகாமல் காம்பவுண்டு செவுரு வரைக்குமா போகும்? மனதுக்கு பிடித்த ஒருவருடன் வாழ போனவள் நாயாக இருந்தால் என்ன? நரியாக இருந்தால் என்ன? யோசித்தவாறே கிளம்பி வந்து விட்டேன்.

நண்பர்களுக்கிடையேயான ஒரு விவாதத்தின் உச்சத்தில் நாய் வாலை நிமிர்த்த முடியாதுடா என்றவாறு ஒரு நண்பன் கிளம்பி போனான், நாய்வாலை எதுக்குடா நிமிர்த்தனும்? அதன் இனப்பெருக்க உறுப்பை மறைக்க அது வாலை மூடி வைத்துள்ளது, அப்படி இல்லாமல் எல்லா நாய்களுக்கும் வால் நேராக இருப்பது போல கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.
இன்னும் நிறைய நாய்கள் மனிதர்களை போலவே போக்குவரத்து விதிகளை மீறி வண்டியில் அடிபட்டு அனாமத்தாக செத்து விழுகின்றன, எங்கள் ஊரில் தெரிந்தவர் ஒருவர் ஒரு நாயை வளர்த்து வந்தார், சோறு அதிகமாக போட்டதாலோ என்னவோ மனிதர்களை போலவே திமிர்பிடித்து போகிற வருபவர்களையெல்லாம் பார்த்தால் குலைப்பது, கடிக்க வருவது போன்ற செயல்களை செய்து வந்தது, அப்படிபட்ட ஒருநாளில் எங்கள் ஊர்க்காரர் ஒருவரை கடித்து வைத்துவிட்டது.


அதுவரை நாயை பார்த்து பயந்து கொண்டிருந்தவர் நாய் கடித்ததும் பயங்கர காண்டாகி அந்த நாயின் மேல் பாய்ந்து திருப்பி கடித்து வைத்து விட்டார், அவர் நாயை கடித்தது ஊர் முழுக்க பரவி கிண்டலாக பேசப்பட்டது, அப்பொழுது இன்னொருவர் சொன்னார், வெறிநாய் கடித்து வைத்திருக்கிறது, தொப்புளை சுற்றி ஊசி போடாவிட்டால், நாய் போலவே மாறி செத்து போவாய் என்று கடித்தவரிடம் சொன்னார், ஆனால் நடந்தது என்னவென்றால் அந்த நாய்க்கு குளிர் ஜூரம் வந்து நான்கே நாளில் செத்து போனது, இப்பொழுது வெறிநாய் கடியை பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும்.

ஒருகாலத்தில் மனித இனமே இல்லாமல் இருந்திருக்கும் போது, நாய்கள் சிங்கம், புலியை விட கொடூரமான ஒரு விலங்காக கூட இருந்திருக்கலாம், எப்பொழுது மனித சகவாசத்திற்கு உட்பட்டதோ, அன்றே அதன் தனித்தன்மையை இழந்து போயிருக்கலாம், பசி என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி போகும் போது நாய்கள் எம்மாத்திரம்?

நன்றாக யோசித்து பாருங்கள் நாய்கள் என்பது யார் என்று உங்களுக்கும் புலனாகலாம்.