Thursday, July 12, 2012

தி அமேசிங் திருப்பூர் ஸ்பைடர்மேன் !!!


டிஸ்கி :- இதுவொரு மொக்கை பதிவு பிடிக்காதவர்கள் தயவுசெய்து இங்கேயே தவிர்க்கவும்.


தி அமேசிங் ஸ்பைடர்மேன்னு ஒரு படம், அசத்தும் ஸ்பைடர்மேன்ங்கற டைட்டில்ல மழைபெய்ற பிரிண்டுல பாடாவதி தமிழ் டப்பிங்ல சமீபத்துல ஒருநாள் பார்த்தேன், படம் பார்த்துட்டு ரெண்டு நாளா தீவிர யோசனையில இருந்தேன், அமெரிக்காவுக்கு ஒரு ஸ்பைடர்மேன் இருக்கான், இந்தியாவுக்கு யாரு இருக்கா? தமிழ்நாட்டுக்கு கூட ஆல்ரெடி யெல்லோ ஸ்கார்ப் மேன், க்ரீன் சாரி வுமன்னு ரெண்டு பேர் முகமூடி போடாம சுத்திகிட்டு இருக்காங்க, நம்ம திருப்பூருக்குன்னு யாரு இருக்கா?

அதிபயங்கர சிந்தனையின் முடிவுலதான் அந்த அருமையான(!) யோசனை உதித்தது, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், எண்ணித்துணிக கருமம்னு காளமேகபுலவரா? இல்ல இல்ல அந்த தத பததத உங்களுக்கு தெரியாத புலவர்கள் இல்லை அவங்களே சொல்லியிருக்காங்களே, சரி கருமம் எண்ணியாச்சு துணிஞ்சர வேண்டியதுதான்னு நானே ஸ்பைடர்மேனா மாற முடிவு பண்ணிட்டேன், அட இதுக்குள்ள டென்சனானா எப்படி? அமைதி அமைதி.

சரி ஸ்பைடர்மேனோட முக்கிய அடையாளமே டிரஸ்தான், அதுக்கெங்க போறது? சூப்பர்மேன் டிரஸ்னா ஈசியா பண்ணிடலாம், சரி நம்மூர்ல இல்லாத பனியன்சா, எதாவது ஒரு ரவுண்ட் நெக் டீ சர்ட்டும், ஒரு பனியன் பேண்டும் இப்போதைக்கு வாங்கி போட்டுக்கலாம், பின்னாடி பாப்புலர் ஆனா ஒரிஜினல் டிரஸ் ரெண்டா வாங்கி அழுக்கானா துவைச்சு போட்டுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு, முகமூடியெல்லாம் தியேட்டர்லயே ப்ரீயா கொடுக்கறாங்க.பழைய ஸ்பைடர்மேன் படம் மாதிரி இல்லீங்க மேட்டஸ்ட் ஸ்பைடர்மேன் படம், சிலந்தி வலையெல்லாம் அவனே சொந்தமா பண்ணி யூஸ் பண்ணுறாரு படத்துல, நம்ம எங்கிட்டு போய் அந்த மாதிரி வலையெல்லாம் பின்னுறது, எங்க வீட்டுல இருக்கறதே கொசுவலை மட்டும்தான், இப்போதைக்கு அதையே நாலா எட்டா கட் பண்ணி டெம்ரவரியா யூஸ் பண்ணிக்கலாம், பின்னாடி கொஞ்சம் அமவுண்ட் சேர்ந்தா நாஞ்சில் மனோகிட்டயோ, விஜயன் சார்கிட்டயோ சொல்லி அவங்க ஏரியாலவுல எதாவது மீன்வலை செக்கண்ட்ஸ்ல கிடைச்சா வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.

ஓகே டிரஸ், முகமூடி, வலையெல்லாம் ரெடி, அடுத்து தலைகீழா பறக்கறதுக்கு பிராக்டிஸ் பண்ணனுமே? சின்னவயசுல ஜிம்பார்ல தலைகீழா தொங்கி கீழ விழுந்து அடிபட்டதுமில்லாம, வீட்டுலயும் தனியா அடிவாங்குனது ஞாபகத்துக்கு வந்தது, சரி இப்போதைக்கு ரிஸ்க் எடுக்க வேணாம் ஸ்கிப்பிங் கயித்தயே வச்சு சமாளிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எல்லாம் ஓகே இப்பத்தான் முக்கியமான ஆப்பரேசன், சிலந்தி ஒன்னு நம்மள கடிக்கனுமே, அப்பத்தான பார்லேஜீ சக்திமான் கணக்கா ரஃப்பாக முடியும்? இன்னைக்குன்னு பார்த்து சிலந்தி ஒன்னும் கண்ணுல சிக்க மாட்டேங்குது, அப்படி இப்படின்னு தேடிப்புடிச்சு பக்கத்து வீட்டு கிச்சன்ல இருந்து ஒன்ன புடிச்சிட்டு வந்தாச்சு.

கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கனுமே, ஒருகையில சிலந்தி பூச்சி, மறுகை சிலந்தி வாய்கிட்ட வச்சாச்சு, ஓகே ரெடி யுவர் டைம் ஸ்டார்ட் நவ், ஹோம் ஸ்வீட் ஹோம் கேம் ஷோ கணக்கா டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ்னு  டைமர் மனசுக்குள்ள ஓடுது, சிலந்தி கடிச்சதும் மினிமம் அண்டர்டேக்கர் மேக்சிமம் அர்னால்டாவது ஆகிருவோம்னு மனச திடப்படுத்திட்டு சிலந்தி முன்னாடி கைய நீட்டிட்டு இருந்தேன்.

போர், த்ரீ, டூ, ஒன்னு நெருங்கியதும் கடைசி கனநேரத்தில் ஒரு சிந்தனை ஏற்பட்டுவிட்டது, மனச மாத்திகிட்டேன், சிலந்தியவும் உங்க வூட்டுக்கு போடான்னு தொறத்தி விட்டுட்டேன், அது என்னன்னா?

அமெரிக்காவுல ஸ்பைடர்மேன் இருக்கான்னா அதுக்கு ஒரு காரணம் இருக்குது, அங்கயெல்லாம் உயர உயரமான கட்டிடங்களா இருக்குது, சோ ஸ்பைடர்மேனால ஈசியா கட்டிடத்துக்கு கட்டிடம் ஈசியா நூல் விட்டு பறக்க முடியும், எங்க ஊருல அதிகபட்சமாவே கரண்டு கம்பம் மட்டும்தான் ஹைட்டா இருக்குது, அதுல நூல் விட்டு பறந்தா அரபாடி லாரில அடிபட்டு சாகரது நிச்சயம், இல்லைன்னாலும் கீழ இருக்கற படம் மாதிரியாவது சிக்கி சாக வேண்டியதுதான்.


சோ இப்போதைக்கு ஸ்பைடர்மேன் கனவுத்திட்டத்தை டிராப் பண்ணிட்டேன், ஆனா எப்போ எங்க ஊருலயும் பாரீன் மாதிரி கட்டிடங்கள் வருதோ அப்போ மறுபடியும் டிரை பண்ணுவேன்.


ஓகே பாஸ் படிச்சிட்டீங்களா? நம்ம அடுத்த ஆப்பரேசன்?


19 comments:

 1. //ஆல்ரெடி யெல்லோ ஸ்கார்ப் மேன், க்ரீன் சாரி வுமன்னு ரெண்டு பேர் முகமூடி போடாம சுத்திகிட்டு இருக்காங்க, நம்ம திருப்பூருக்குன்னு யாரு இருக்கா?//

  ஆரம்பமே அதிரடியா இருக்கே

  ReplyDelete
 2. ஒரு சிலந்திய புடிச்சதுக்கு எலியப் புடிச்சு இருந்தா சைட் டிஸ்க்காவது ஆகியிருக்கும்.....

  ReplyDelete
 3. ஓகே பாஸ் படிச்சிட்டீங்களா? நம்ம அடுத்த ஆப்பரேசன்?
  /////////////////
  ஸ்பைடர்மேனுக்கு கு.க பண்ணனும் கொழுப்பு அதிகமாயிருச்சு....!

  ReplyDelete
 4. அணிலு திருப்பூர் ஸ்பைடர்மென் காதுல என்னவோ பண்ணுதே

  ReplyDelete
 5. மனசாட்சி™ said...
  July 12, 2012 2:28 PM
  அணிலு திருப்பூர் ஸ்பைடர்மென் காதுல என்னவோ பண்ணுதே
  /////////////////////
  பார்ரா...!

  ReplyDelete
 6. //நம்ம அடுத்த ஆப்பரேசன்//

  உடனடியா 108 அனுப்பவா 5 கிலோ அரிசியும் 500 ரூவாவும் தருவாங்களாம்

  ReplyDelete
 7. //வீடு சுரேஸ்குமார் said...
  ஒரு சிலந்திய புடிச்சதுக்கு எலியப் புடிச்சு இருந்தா சைட் டிஸ்க்காவது ஆகியிருக்கும்.....//

  ஆமா ஆமா அதன் நிறைய இருக்கே - மாப்ளே இன்னும் வளரனுமோ

  ReplyDelete
 8. அடுத்த ஆபரேசன் ஒன்லி ரெஸ்ட்!

  ReplyDelete
 9. பய புள்ளைக்கு வேலை வெட்டி ஏதும் இல்ல போல...அதுதான் மல்லாக்க படுத்து கிட்டு கனவு கண்டுகிட்டு இருக்கு...

  ReplyDelete
 10. @! சிவகுமார் ! said...
  adutha operation engalukku dhaan..:)//

  நோ நோ அப்படியெல்லாம் சொல்லப்படாது

  ReplyDelete
 11. @ மனசாட்சி™ said...
  //ஆல்ரெடி யெல்லோ ஸ்கார்ப் மேன், க்ரீன் சாரி வுமன்னு ரெண்டு பேர் முகமூடி போடாம சுத்திகிட்டு இருக்காங்க, நம்ம திருப்பூருக்குன்னு யாரு இருக்கா?//

  ஆரம்பமே அதிரடியா இருக்கே//

  உண்மைய சொன்னேன் மாம்ஸ்

  ReplyDelete
 12. @ வீடு சுரேஸ்குமார் said...
  ஒரு சிலந்திய புடிச்சதுக்கு எலியப் புடிச்சு இருந்தா சைட் டிஸ்க்காவது ஆகியிருக்கும்.....//

  நாம என்ன விவசாயியா மாம்ஸ், எலிக்கறி திங்க

  ReplyDelete
 13. @ வீடு சுரேஸ்குமார் said...
  ஓகே பாஸ் படிச்சிட்டீங்களா? நம்ம அடுத்த ஆப்பரேசன்?
  /////////////////
  ஸ்பைடர்மேனுக்கு கு.க பண்ணனும் கொழுப்பு அதிகமாயிருச்சு....!//

  அவசரப்பட்டு அப்படி எதுவும் பண்ணிடாதீங்க மாம்ஸ்

  ReplyDelete
 14. @ மனசாட்சி™ said...
  //நம்ம அடுத்த ஆப்பரேசன்//

  உடனடியா 108 அனுப்பவா 5 கிலோ அரிசியும் 500 ரூவாவும் தருவாங்களாம்//

  அதெல்லாம் வேண்டாம் வரும்போது மறக்காம சொன்னத மட்டும் வாங்கிட்டு வாங்க அது போதும்

  ReplyDelete
 15. @ விக்கியுலகம் said...
  அடுத்த ஆபரேசன் ஒன்லி ரெஸ்ட்!//

  என்ன மாம்ஸ் இப்பவே கண்ணக்கட்டுதா?

  ReplyDelete
 16. @ கோவை நேரம் said...
  பய புள்ளைக்கு வேலை வெட்டி ஏதும் இல்ல போல...அதுதான் மல்லாக்க படுத்து கிட்டு கனவு கண்டுகிட்டு இருக்கு...//

  இது கனவில்ல மச்சி, லட்சியவெறி !!!

  ReplyDelete
 17. நல்ல வேளை....கடைசில கபாலத்துல ஒரு சிந்தனை வந்திச்சே...!!!பதிவு சுவாரஸ்யம்!சந்திப்போம்.!

  ReplyDelete
 18. @ Athisaya said...
  நல்ல வேளை....கடைசில கபாலத்துல ஒரு சிந்தனை வந்திச்சே...!!!பதிவு சுவாரஸ்யம்!சந்திப்போம்.!//

  உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அதிசயா, கண்டிப்பாக சந்திப்போம்.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!