Saturday, September 7, 2013

என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!


நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ் கிடைக்குமா? அப்ப நாங்க போடற பதிவு எல்லாம் மொக்கையா? என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்? ஏதோ பதிவர் சந்திப்பு திட்டி ஒரு போஸ்ட் போட்டா ஹிட்ஸ் கிடைக்குமேன்னு போட்டான், அப்படி போட்டா என்ன பண்ணனும்? அத படிச்சு பாத்து நாலு வார்த்தை திட்டுனமான்னு விட்டுட்டனும், அது தானய்யா உலக வழக்கம்? அதவிட்டுட்டு நேத்து பிளாக் ஆரம்பிச்ச சின்ன பசங்கள விட்டு இவன கெட்ட வார்த்தையில திட்டி போஸ்ட் போட்டு பழகுங்கடான்னு சொல்லியிருக்கீங்க? பழகுறதுக்கு இது என்ன பிளாக்கா? இல்லை பள்ளிக்கூடமா? ச்சே எவ்வளவு கெட்டவார்த்தை ?

அட இதே மாதிரி ஏற்கனவே நிறைய சம்பவம் நடந்திருக்கு, நிறைய தடவை ஹிட்ஸ்க்காக போஸ்ட் போட்டிருக்கான், அப்பல்லாம் இவ்வளவு கழுவி கழுவி நீங்க ஊத்தல, அட திட்டுனா கூட இவனுக்கு வலிக்ககூடாதுன்னு ரெண்டு மூணு கெட்டவார்த்தையோட நிப்பாடியிருக்கீங்க அந்த நாகரிகம் தெரியாது உங்களுக்கு?

ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன், பத்தாயிரம் ஹிட்ஸ் வர மாதிரி சொந்தமா எங்களுக்கும் பதிவெழுத தெரியும், ஆனா நாங்க எழுத மாட்டோம், எழுத தெரியாது, கடைசியா உங்களையெல்லாம் ஒன்னே ஒன்னு எச்சரிச்சிகிறேன், என் கட்சிக்காரன் போஸ்டுக்கு கமெண்டு, போஸ்டு போடறதெல்லாம் நிறுத்திக்கங்க, இல்லை எதிர்கட்சிக்காரங்க பிளாக்குல ஆயிரம் கவிதைகள் எழுதி கமெண்டில் போடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம் ..!

31 comments:

 1. தம்பி....கேட்டுகுள்ள வா....கேட்டுக்குள்ள வா....முதல்ல....

  ReplyDelete
 2. வந்தாச்சு வந்தாச்சு

  ReplyDelete
 3. சின்ன பசங்கள விட்டு இவன கெட்ட வார்த்தையில திட்டி போஸ்ட் போட்டு பழகுங்கடான்னு சொல்லியிருக்கீங்க? பழகுறதுக்கு இது என்ன பிளாக்கா? இல்லை பள்ளிக்கூடமா? ச்சே எவ்வளவு கெட்டவார்த்தை ?
  /////////////////////////////////
  சசி உன்னைத்தான் திட்றான் அடுத்து எதிர் பதிவு போடு.....

  ReplyDelete
 4. //சசி உன்னைத்தான் திட்றான் அடுத்து எதிர் பதிவு போடு.....//

  அப்படியே போட்டுட்டாலும் :-)

  ReplyDelete
 5. அதான் இன்னைக்கு வாபஸ் வாங்கி போஸ்ட் போட்டுடாரே .ஆகையால் தோழர்களே இருக்கும் இடத்தில இருந்தே இன்னொரு கட்சிக்கு தாவும் தன்னம்பிக்கையும் தைரியமும் இவர் ஒருவருக்கு தான் உண்டு என்று ஒத்து கொள்வோம் .......

  ReplyDelete
  Replies
  1. யோவ் நீ இன்னும் பச்சப்புள்ளையாவே இருக்கியே :-)

   Delete
 6. யோவ் உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்குயா.. மீன் ஏன் தண்ணி மாதிரி இல்லன்னு கேட்டேன் இது ஒரு குத்தமா... இல்ல தண்ணி ஏன் மீன் மாதிரி இருக்குன்னு கேட்டேன் இது ஒரு குத்தமா?

  தண்ணி தண்ணி மாதிரி இல்லாம மீன் மாதிரி இருக்குன்னோ இல்ல மீன் மீன் மாதிரி இல்லாம தண்ணி மாதிரி இருக்குன்னோ பதில் சொல்லி இருந்தா அவன் புத்திசாலி அறிவாளி திறமைசாலி தகிரியசாலி..

  அத வுட்டுபுட்டு மீன் மீன்மாதிரி தான் இருக்கும், தண்ணி தண்ணி மாதிரி தான் இருக்கும்னு விளக்கபதிவு போடுறான்.. நான் எது எது எப்படி எப்படி இருக்கணும்னு நினைகிறேனோ அது அது அப்படி தான் இருக்கணும்..

  அப்படி இல்லாட்டா "அது ஏன் அந்த இடத்தில அப்படி இல்லன்னு" பதிவு போடுவேன்.. உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பிளாக்கில் ஆயிரம் கவிதைகள் தோரணம் கட்டி தொங்கவிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் அவ்வ்வ்வ் ..........

   Delete
 7. அய்யய்யோ இந்தக் கமெண்ட் பப்ளிஷ் ஆயிருச்சா.. இந்த கமெண்டிற்கு கொலை மிரட்டல் வர வாய்ப்புள்ளதால் இந்த கமெண்ட்டை நான் திரும்பப் பெறுகிறேன்.. திருமதி தமிழ் டான் உலக சினிமா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை

  ReplyDelete
  Replies
  1. எக்ஸ்கியூஸ்மி சார் கடய எப்ப சார் தொறப்பீங்க :-)

   Delete
 8. அந்த கழிசடைய விடு சுரேஷூ. எனக்கு இத்தனை நாள் கழிச்சி நீ பதிவு போட்டு இருக்க பாத்தியா அதுதான் சந்தோஷம். வாரம் ஒரு பதிவாவது போடுய்யா. என்னைப் போன்ற ரசிகர்கள் எல்லாம் நீ எழுதனும்னு தான் காத்து கிடக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே என்னைய ஏன் கலாய்க்கறிங்க :-)

   Delete
 9. என்னையா திரும்பின பக்கமெல்லாம் சுத்தி சுத்தி அடிக்கிறீங்க,? இது நல்லால்ல நம்ம கட்சிக்காரன் சாபம் உன்னைய சும்மா விடாதையா..!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் கேட்டுக்குள்ள வாங்க மாம்ஸ் :-)

   Delete
 10. இதென்ன கலாட்டா! நடத்துங்க!

  ReplyDelete
 11. பத்தாயிரம் ஹிட்ஸ் வர மாதிரி சொந்தமா எங்களுக்கும் பதிவெழுத தெரியும், ஆனா நாங்க எழுத மாட்டோம்,///பிளீஸ்,எழுதுங்க சார் எழுதுங்க.படிச்சு தெளிஞ்சுக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் தெளியலியா நீங்க :-)

   Delete
 12. ஆரம்பமே அதகளம் பண்றீங்களே!!!!!!!! நீங்க நடத்துங்க.... :-)

  ReplyDelete
  Replies
  1. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ரணகளமாக்கிட்டாங்க பாஸ் :-)

   Delete
 13. ஆஹா...தூங்கிக்கிட்டிருந்த சிங்கத்தையே எழுப்பிட்டாங்களே!...யோவ், சண்டை நடந்தாத்தான் வெளில வருவீரா? நல்ல ஆளுய்யா!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் உங்க ஆசிர்வாதம்னே :-)

   Delete
 14. எது எப்படியே அண்ணன் என்னை கலாய்சுட்டாரு ...இப்பவாது ஒத்துகோங்க நானும் ரவுடிதான் !!

  ReplyDelete
 15. அடடே...பய புள்ளக எல்லாம் எப்போர்ந்து இந்த ஆட்டம் ஆடறீக...
  எனக்குத் தெரியாம போச்சேய்யா...
  ஏப்பா என்னையுந் இதுல சேர்துக்கப் பிடாதா...?

  அவ்வவ்வ்....!!

  ReplyDelete
 16. பிளாக்கர் தளத்தில் பலரும் வலைப்பதிவுகளை எழதி வருகின்றனர். ஆனால் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழில் மறுமொழி இட வசதிகள் இல்லை. தமிழ்மறுமொழிப்பெட்டி அமைப்பதன் எளிமையாக தமிழில் கருத்திட முடியும். "தமிழ் மறுமொழிப் பெட்டி" அமைப்பது எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது இப்பதிவு. பிளாக்கர் தள வலைப்பதிவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

  மேலதிக தகவல்களுக்கு சுட்டியைச் சொடுக்கி வாசிக்கவும்.

  பிளாக்கர் தளத்தில் தமிழ் மறுமொழிப் பெட்டி அமைப்பது எப்படி?

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!