Thursday, August 25, 2011

கேப்டனின் பிறந்தநாள் சிறப்பிதழ்


இன்று நமது எதிர்கட்சி தலைவர், வருங்கால முதல்வர், தேமுதிக நிறுவன தலைவர் கேப்டனின் பிறந்தநாள், கேப்டனின் தொண்டர்கள், அடிப்பொடிகள் போஸ்டர் அடித்தும், காசு கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும், பிளக்ஸ் பேனர்கள் கட்டியும் வாழ்த்துக்கள் சொல்வார்கள், நமக்கு அந்த அளவு வசதி பத்தாது, எனவே இந்த பதிவு கேப்டனின் பிறந்தநாள் சிறப்பிதழாக வெளியிடப்படுகிறது.

கேப்டனின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது உங்களுக்கு தெரிந்ததே, ஐந்து வருடங்களாக பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி தமிழகத்தின் வறுமையை ஒழித்த தேமுதிகவினர், மிச்ச மீதி இருக்கும் வறுமையையும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஒழிக்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கின்றேன், எனவே எட்டு மாதம் கழித்து குழந்தை பிறக்க இருப்பவர்கள் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாமல் இன்றே குழந்தை பெற்று உங்களின் வறுமையினை ஒழித்துக் கொள்ளுங்கள்

கடந்த ஆட்சிகாலம் தொட்டே இலவசம் என்றால் சரக்கடிக்காமலே காண்டாகி எகிறிக்குதித்த கேப்டன் அம்மையாரின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை முழுமனதோடு வரவேற்றதோடு, இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை என்பவர்கள் கண் இருந்தும் தெரியாத கருத்துக்குருடர்கள் என்ற மாபெரும் அறிக்கையினை வெளியிட்ட கையோடு மாயமாகிவிட்டார், மேற்கொண்டு எதை பேசுவதாக இருந்தாலும் ஒருவருடங்கள் கழித்து வாருங்கள் எனவேறு கூறிவிட்டதால், எதிர்கட்சி தலைவரை காண வழியில்லாமல் போய் விட்டது

எனவே கேப்டனின் பழைய திரைப்படங்களையும், புகைப்படங்களையும் பார்த்து கேப்டனின் புகழ் பாடி வறுமை ஒழிப்பு தினத்தை கொண்டாடுவோமாக, நன்றி

பிறந்தநாள் வாழ்த்து


கேப்டன் உண்மையிலேயே கேப்டன்தான் என்பதற்கு ஆதாரம்


அம்மா ஆட்சியில இப்படித்தான் கைகட்டி கமுக்கமா இருக்கனும்


இந்த நாய பார்த்தா பாகிஸ்தான் தீவிரவாதியோட நாய் மாதிரி தெரியுதுகேப்டன் வேணாம் ப்ளிஸ் பொண்ணு பயப்படுது பாருங்க

கேப்டன் என்ன பண்ணுறீங்க?மேற்கண்ட எந்த படத்துக்கும் வசனம் தேவையில்லை


அம்மா பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்கம்மா
ப்ளீஸ் விஜயகாந்த் கைஎடுத்து கும்பிடுறேன் என்னை விட்டுடுங்க


அம்மா நான் பேசாம கமுக்கமா இருக்கலாம், ஆனா அதுக்காக என்னை உட்காரவெச்சுட்டு நீங்க மட்டும் தனியா சாப்பிடுறது நல்லா இல்லை


என்னங்க அந்தம்மா சோறு போடாம அனுப்பிச்சிட்டாங்களா?
யோவ் இந்த நக்கல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்கமுதலில் என்னுடைய அம்புக்கு பதில் சொல்

நீ முதல்ல என்னோட அவதாரத்த பாரு


ஏ புள்ள நாம பொறந்தநாள் கொண்டாடுனா தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான் ஆங்க்..!


என்னால முடியல


கேப்டனின் ஆகச்சிறந்த நடன காட்சிகளை கண்டுகழித்து வறுமை ஒழிப்பு தினத்தை கொண்டாடுங்கள்

ஹேப்பி வறுமை ஒழிப்பு DAY..!

49 comments:

 1. படங்கள் ரொம்ப ஓவருங்க அவருக்கு....

  ReplyDelete
 2. எலேய் முடியலய்யா.....இங்க ஒரு மானஸ்தன் லஞ்சம், பஞ்சம் பத்தி பேசிட்டு இருந்தாரே எங்கயா காணோம் அவர.....

  ReplyDelete
 3. அந்த போலீசு போட்டோல எனக்கு மனோப்பயதான்யா தெரியிறான் ஹிஹி!

  ReplyDelete
 4. ஹய்யா சாமி ஒன்னும் முடியலப்பா ... உஷ்ஷ்ஷ்,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா! சூப்பர்!! :-)

  ReplyDelete
 6. எனக்கு தலையே சுத்துதுங்க

  ReplyDelete
 7. அண்ணே என்னனே முன்னாடிலாம் நம்ம பக்கத்து வீட்டுகாறரு மாதிரி பேசுவிங்க (எழுதுவீங்க ) .இப்ப என்னாச்சு .?

  ReplyDelete
 8. எங்கள் அண்ணாவை ,அடுத்த தன்னலமில்ல தலைவரை ,தமிழகத்தின் எதிர்கால முதல்வரை டாக்டர் புரட்சி கலைஞரை விமர்சித்த உங்களுக்கு நரசிம்ம அவதாரமாய் பதில் உரைப்பார் என நம்புகிறேன்

  இவன்
  கேப்டனின் உண்மை தொண்டன்

  ReplyDelete
 9. ///இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஒழிக்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கின்றேன், எனவே எட்டு மாதம் கழித்து குழந்தை பிறக்க இருப்பவர்கள் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாமல் இன்றே குழந்தை பெற்று உங்களின் வறுமையினை ஒழித்துக் கொள்ளுங்கள்///  அண்ணே அந்த தாவணி அக்கா கூட எங்க கேப்டன் என்ன பண்றாரு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ,

  ReplyDelete
 10. நான் போட்ட கமெண்ட் எதுவும் காணவில்லை ,இரவுவானம் சதி செய்துவிட்டார்

  ReplyDelete
 11. N.Manivannan has left a new comment on your post "கேப்டனின் பிறந்தநாள் சிறப்பிதழ்":

  எங்கள் அண்ணாவை ,அடுத்த தன்னலமில்ல தலைவரை ,தமிழகத்தின் எதிர்கால முதல்வரை டாக்டர் புரட்சி கலைஞரை விமர்சித்த உங்களுக்கு நரசிம்ம அவதாரமாய் பதில் உரைப்பார் என நம்புகிறேன்

  இவன்
  கேப்டனின் உண்மை தொண்டன்

  ReplyDelete
 12. N.Manivannan has left a new comment on your post "கேப்டனின் பிறந்தநாள் சிறப்பிதழ்":

  ///இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஒழிக்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கின்றேன், எனவே எட்டு மாதம் கழித்து குழந்தை பிறக்க இருப்பவர்கள் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாமல் இன்றே குழந்தை பெற்று உங்களின் வறுமையினை ஒழித்துக் கொள்ளுங்கள்///  அண்ணே அந்த தாவணி அக்கா கூட எங்க கேப்டன் என்ன பண்றாரு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ,

  ReplyDelete
 13. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை மணிவண்ணன், நீங்கள் போட்ட இரண்டு கமெண்டுகள் பிரசுரம் ஆகவில்லை, இப்பொழுது போட்டுவிட்டேன்

  ReplyDelete
 14. செம செம.
  தீவிரவாதி மேட்டர காமெடியா மாத்திய புண்ணியவான்.:-))))

  ReplyDelete
 15. இரண்டாவது படம் கொடுமையிலும் கொடுமை நண்பா

  ReplyDelete
 16. படம் ஒவ்வொன்னும் கதிகலங்க வைக்குதே..

  ReplyDelete
 17. கேப்டனா? யாரு அவரு? எங்க இருக்காரு?

  ReplyDelete
 18. எதிர்கட்சி என்றால்...அரசு கொண்டு வரும் திட்டங்க்லை எதிர்கத்தான் வெனுமோ..உங்கள் வாதம் தவறு

  ReplyDelete
 19. கேப்டன் அவர்களை வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன்......... :))

  ReplyDelete
 20. படங்களும், கமெண்டும் கலக்கல் நண்பா சூப்பர்!

  ReplyDelete
 21. C எந்த நம்பரிலும் வராதா!! அட, ஆச்சரியமா இருக்கே! நீங்க கடைசியா கொடுத்த லிங்கில் இருந்து சிவா கார்த்திகேயனின் காமடிகள் நிறைய பார்த்தேன், நன்றி.

  ReplyDelete
 22. வணக்கங்களும், வாக்குகளும்..

  ReplyDelete
 23. எங்கள் அண்ணாவை ,அடுத்த தன்னலமில்ல தலைவரை ,தமிழகத்தின் எதிர்கால முதல்வரை டாக்டர் புரட்சி கலைஞரை விமர்சித்த உங்களுக்கு நரசிம்ம அவதாரமாய் பதில் உரைப்பார் என நம்புகிறேன்

  இவன்
  கேப்டனின் உண்மை தொண்டன் //

  repeattuuuuuuuu

  ReplyDelete
 24. @ தமிழ்வாசி - Prakash said...
  படங்கள் ரொம்ப ஓவருங்க அவருக்கு....


  ஹா ஹா இது வேறயா

  ReplyDelete
 25. @ விக்கியுலகம் said...
  அந்த போலீசு போட்டோல எனக்கு மனோப்பயதான்யா தெரியிறான் ஹிஹி!


  ஹி ஹி அருவா ஜாக்கிரதை மாம்ஸ்

  ReplyDelete
 26. @ தினேஷ்குமார் said...
  ஹய்யா சாமி ஒன்னும் முடியலப்பா ... உஷ்ஷ்ஷ்,,,,,,,,,,,,,,

  ஹி ஹி மகரசான் ஆகறீங்களா???

  ReplyDelete
 27. @ ஜீ... said...
  ஹா ஹா ஹா! சூப்பர்!! :-)


  நன்றி ஜீ

  ReplyDelete
 28. @ அரசன் said...
  எனக்கு தலையே சுத்துதுங்க


  ஹி ஹி பிறாந்தநாள் பார்ட்டிக்கு போனீங்களா அண்ணே?

  ReplyDelete
 29. @ N.Manivannan said...
  அண்ணே என்னனே முன்னாடிலாம் நம்ம பக்கத்து வீட்டுகாறரு மாதிரி பேசுவிங்க (எழுதுவீங்க ) .இப்ப என்னாச்சு .?


  ஒன்னும் ஆகலை மணி, சும்மாதான்

  ReplyDelete
 30. @ N.Manivannan said...
  எங்கள் அண்ணாவை ,அடுத்த தன்னலமில்ல தலைவரை ,தமிழகத்தின் எதிர்கால முதல்வரை டாக்டர் புரட்சி கலைஞரை விமர்சித்த உங்களுக்கு நரசிம்ம அவதாரமாய் பதில் உரைப்பார் என நம்புகிறேன்

  இவன்
  கேப்டனின் உண்மை தொண்டன்


  ஏப்பா இப்படியெல்லாம் பயமுறுத்துறீங்க, ஏற்கனவே ஒரு தொண்டர் மைனஸ் ஓட்டு வேற போட்டு இருக்காரு, பயமா இருக்குல்ல

  ReplyDelete
 31. @ N.Manivannan
  //அண்ணே அந்த தாவணி அக்கா கூட எங்க கேப்டன் என்ன பண்றாரு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்//

  யோவ் இதெல்லாம் போய் பப்ளிக்ல கேட்டுகிட்டு

  ReplyDelete
 32. @ malgudi said...

  ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 33. @ கந்தசாமி. said...
  இரண்டாவது படம் கொடுமையிலும் கொடுமை நண்பா


  என்னங்க இப்படி சொல்லிட்டீங்க

  ReplyDelete
 34. @ செங்கோவி said...
  படம் ஒவ்வொன்னும் கதிகலங்க வைக்குதே.

  ஆஹா செங்கோவிக்கே இந்த கதின்னா மத்தவங்களுக்கு என்ன ஆகப்போகுதோ :-)

  ReplyDelete
 35. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  கேப்டனா? யாரு அவரு? எங்க இருக்காரு?

  இத்தனை போட்டோ போட்டும் என்ன பிரயோஜனம் ஹூம்ம்

  ReplyDelete
 36. @ Shiva sky said...
  //எதிர்கட்சி என்றால்...அரசு கொண்டு வரும் திட்டங்க்லை எதிர்கத்தான் வெனுமோ..உங்கள் வாதம் தவறு//

  நானும் ஒன்றும் எதிர்க்கச் சொல்லவில்லை நண்பரே, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 37. @ மாணவன் said...
  கேப்டன் அவர்களை வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன்......... :))

  நானும் வணங்குகிறேன் :-)

  ReplyDelete
 38. @ Jayadev Das

  நன்றி ஜெயதேவ்

  ReplyDelete
 39. @ பாரத்... பாரதி..

  நன்றி பாரதி

  ReplyDelete
 40. @ thalir said...
  //கலக்கல்//

  நன்றிங்க

  ReplyDelete
 41. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  ஏன்னே இந்த கொலவெறி.....:-)

  ReplyDelete
 42. தல நீங்க தேடிக்கிட்டிருக்குற அந்த குற்றவாளி நான்தான்... எஸ் நான்தான் மைனஸ் ஓட்டு குத்தினேன்... கேப்டனை வறுத்தெடுத்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம்... அவ்வளவே... மற்றபடி பர்சனல் பகை எதுவுமில்லை... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

  ReplyDelete
 43. @ Philosophy Prabhakaran

  வாங்க பிரபா, ஹா ஹா நான் தேடிட்டு இருக்கற ஆளா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க, ஒரு பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறதும் எதிர்ப்பு தெரிவிக்கிறதும் அவங்கவங்க உரிமைதானே, நீங்க மைனஸ் ஓட்டு போட்டதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்லை, கேப்டனின் ரசிகர் ஒருவர் இருக்கிறாரா என்ற ஆச்சரியத்தில்தான் கமெண்டில் கேட்டேன் அவ்வளவே, மற்றபடி பர்சனல் பகை நமக்கு ஏது நண்பா?

  ReplyDelete
 44. @ இரவு வானம்
  ரசிகன் இல்லை... தொண்டன் என்றும் சொல்ல முடியாது... தமிழக அரசியல் மாற்றத்தை விரும்பும் ஒரு நடுத்தர வாக்காளன்... அவ்வளவே...

  ReplyDelete
 45. @ Philosophy Prabhakaran

  ரொம்ப சந்தோசம்

  ReplyDelete
 46. அம்மாவுக்கு இவ்வளவு பக்கத்துல போயி பேசுனா சரக்கு வாடை தூக்காதா??? ஒ.. ஒ.. அதான் சோறு போடலியா?????

  அந்த டான்ஸ் ம்கூம்.....என்னாலயும் முடியல... கடைசியா வடிவேலு பண்றததான் பண்ணணும் போல!!!!!!!!

  ReplyDelete
 47. டேய்...மச்சி...என் தானை தலைவர வறுத்து எடுத்து இருக்க..அடுத்த அரசியல் மாற்றத்திற்கு அவரைத்தான் நம்பி இருக்கேன்...இரண்டு கட்சிகளையே பார்த்து பார்த்து சலித்து போன தால் இவரை எதிர்பார்க்கிறோம்...
  நம்ம கோவையில் போனவாரம் செம ரெஸ்பான்ஸ் தெரியுமா..சிவானந்தா காலனி மீட்டிங் ல...இவர் வரணும்டா....

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!