Wednesday, August 3, 2011

பவர் ஸ்டாருக்கு போட்டியா அருவா ஸ்டார்?


மக்களே தமிழ் சினிமாவுல சில சமயம் மட்டுமே பிரம்மாண்டமான படங்கள் வெளிவரும், அதுவும் பெரிய அளவுல பேசப்படும், அதுக்கு அப்புறம் எப்ப இப்படி ஒரு படம் வரும்னு எல்லாரும் ஏங்கிட்டு இருப்போம், எந்திரனுக்கு அடுத்ததா இனி எந்த படம் வரப்போகுதுன்னு எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருந்த நிலையில இதோ இப்ப அடுத்து வரப்போகுது ஒரு மிக பிரம்மாண்டமான படம்

இந்த படம் எந்திரன் படத்தோட வசூல் சாதனைய கண்டிப்பா முறியடிக்கும்னு நம்பலாம், இதுவும் பாக்ஸ் ஆபிஸ், போஸ்ட் ஆபீஸ்னு எல்லா வரலாற்றையும் முறியடிக்க போகுதுன்னு கண்டிப்பாக எதிர்பார்க்கலாம், இந்த படம் உருவாகிட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே தேசிய விருது, கிராமிய விருது, ஆஸ்கார் விருதுன்னு இன்னும் என்னென்ன விருது இருக்கோ அது எல்லாத்தையும் ஒரு பத்து டசன் எக்ஸ்ட்ராவா உருவாக்க சொல்லி ஆர்டர் பண்ணி இருக்காங்களாம்

ஏன்னா இந்த படத்துல அந்த அளவுக்கு பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள், மிகப் பிரம்ம்ம்மாண்டமான சண்டை காட்சிகள் எல்லாத்தையும் அமைச்சிருக்காங்களாம், அது எந்த படம்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆர்வமா இருப்பீங்க அத நான் தடுக்க விரும்பலை, இப்போதைக்கு ஸ்டில்ஸ் மட்டும்தான் ரிலீஸ் பண்ணி இருக்காங்க, பார்த்துக்கோங்க மக்கள்ஸ்ஸ்..


                                      இதுதாங்க அந்த படம் பதினெட்டாம் குடிபயப்படாதீங்க, இவருதான் படத்தோட ஹீரோ, மேக்கப் போட்டுகிட்டு இருக்காரு


இவருதாங்க அந்த அருவா ஸ்டார்


ஹீரோ மூஞ்சிய நீங்க இன்னும் தெளிவாவே பாக்கலையே


நான் சொன்னேன் இல்லைங்க அந்த பிரம்மாண்டமான சண்டைகாட்சி அது இதுதான்


மிகச்சிறந்த காதல் காட்சி


பயபுள்ளைங்களா லவ் பண்றது எப்படின்னு கத்துக்கோங்க


கையில குடல வச்சிகிட்டு ஆவேசமா பஞ்ச் அடிக்கறார், அப்படியே ஷாக்காகி நிக்குறது சிங்கம் புலி


அட யாரு இது? நம்ம பாண்டியராஜன் மவனா நீயி? பிரம்மாண்டமான படத்துலதான் அறிமுகமாகி இருக்கீங்க, நல்லா வருவீங்க தம்பி..!!!!


என்னா ஸ்டைலு, என்னா போசு, சான்ஸே இல்லீங்க


மிகச்சிறந்த காட்சியமைப்பு


 படம் பார்க்க வரவங்களுக்கு குச்சி ஐஸ்தான்


டேய் தியேட்டர் பக்கம் வந்துட்டு படம் பார்க்காம எஸ்கேப் ஆகப் பாக்குறியா?


அண்ணே யாருன்னே இவங்க? நம்மளயே குறுகுறுன்னு பாக்குறாங்க


நாங்கெல்லாம் நடிச்சா பவர் ஸ்டாருக்கே பவர் போகிடும் தெரியுமுல்ல

-

-

சரி அப்ப போகலாங்களா பதினெட்டாம் குடி???18 comments:

 1. நண்பர்களே அதிக பணி இருப்பதால் பிளாக் பக்கமே வரமுடியவில்லை, இன்னும் இரண்டு வாரத்திற்கும் இதே நிலைதான், நண்பர்களின் வலைபதிவுகளுக்கு வர முடியாததற்கு மன்னிக்கவும்

  ReplyDelete
 2. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் இப்டி தொடர்ச்சியான சோதனை..?! :)

  ReplyDelete
 3. //நண்பர்களே அதிக பணி இருப்பதால் பிளாக் பக்கமே வரமுடியவில்லை, இன்னும் இரண்டு வாரத்திற்கும் இதே நிலைதான், நண்பர்களின் வலைபதிவுகளுக்கு வர முடியாததற்கு மன்னிக்கவும்//

  ரெண்டு வாரமா? அடுத்த ரெண்டு வருசத்துக்கு தாங்கும். மேல போட்ட பதிவு. மேடம் கிட்ட சொல்லி உங்க மேல ஒரு பொய் வழக்கு போட்டாதான் நாங்க நிம்மதியா தூங்க முடியும். "ஹலோ மேடம்..திருப்பூர்ல இரவுவானம்னு..."

  ReplyDelete
 4. ராம ராஜன் மவன் இதுலே நடிக்கிறதுனாலே படம் நூரு நாளை தாண்டி ஓடும்...ஆனால் பார்க்கத்தான் ஆள் இருக்காது.

  புலிக்கு பொறந்தது எலியாகுமா?

  ஆட்டை வச்சுலாம் முட்ட உட முடியாது.. கோழியை வச்சுதான் முட்டை உட முடியு...ம்.

  அனேகமாக இந்தப் படம்தான் தமிழகத்தின் மானத்தை காப்பாற்ற போகிறது ஆஸ்கார் விருதும் கிடைக்கப் போகிறது.

  ஹீரோ அப்படியே கேப்டன் தம்பி விஜயகாந்தை உறிச்சி வச்சதைப் போல இருக்கு.

  கலியுகத்தில் இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறதோ?

  ReplyDelete
 5. அய்யய்யோ! தாங்க முடியலடா சாமி! :-)

  ReplyDelete
 6. ஐயய்யோ நாசமாபோறவனுங்க எந்தெந்த ரூபத்துல எல்லாம் வந்து நடிச்சி நாரடிக்கிராணுக அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 7. அடுத்த அடிமைசிக்கிட்டாரா...

  இவரை புடிச்சி பதிவா போடுங்கப்பா...

  ReplyDelete
 8. தமிழ்மணம் செவன்த் நானே... செம நக்கல் கமெண்ட்ஸ் பாஸ்

  ReplyDelete
 9. பயங்கரமா இருக்கே..

  ReplyDelete
 10. தமிழ் சினிமாவுக்கு திறமை பஞ்சம் எந்த காலத்துலயும் வராது :) ஹீரோ பேரு சொல்லலயே ?
  பாத்தா லொள்ளு சபா ஷூட்டிங் மாதிரி இருக்கு

  ReplyDelete
 11. என்ன கொடும சரவணன் ))

  ReplyDelete
 12. குடி கெட்டது போங்க

  ReplyDelete
 13. அட பாவிங்களா!
  நமக்கு விமோச்சனமே கிடையாதா?

  ReplyDelete
 14. எத்தனை ஸ்டார் வந்தாலும், பவர் ஸ்டாரை அசைச்சுக்க முடியாது........

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!