Monday, July 11, 2011

கமர்சியல் பக்கங்கள் - 11/07/2011

ராசாவையும் ஜெயில்ல போட்டாச்சு, கனிமொழியையும் ஜெயில்ல போட்டாச்சு, போதாக்குறைக்கு எலக்சன்லயும் தோத்தாச்சு, அடுத்தது தயாநிதியும் சிக்க போறாரு போல, ஆனாலும் என்ன நடந்தாலும் தலைவரு கூட்டணியை விட்டு விலகற மாதிரியே தெரியல, இதோ இப்ப பிரணாப்பும் சொல்லிட்டு போயிட்டாரு


எப்ப கேட்டாலும் காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாகவே இருக்கிறது, சங்கர் சிமெண்டு போட்டு கட்டியிருக்குன்னே சொல்றாரே ஒரு வேளை தலைவரு நம்ம உடம்பு எவ்வளவுதான் தாங்கும்னு பார்க்கலாம்னு நினைக்கறாரோ?


மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்னு சொன்னத ஜெ. தப்பா புரிஞ்சிட்டாங்க போல, சும்மா அமைச்சர்களை மாத்திட்டே இருக்காங்க, ஒரு ஆட்சியை விமர்சனம் பண்ணுறதுக்கே குறைந்தபட்சம் 100 நாள் ஆகணும்னு சொல்றாங்களே மந்திரிகளுக்கும் அவங்க துறையை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்ச காலம் ஆகாதா என்ன? இப்படியே மீயூசிக் சேர் நடத்திகிட்டு இருந்தா ஒருத்தனும் வேலை பார்க்க மாட்டான், எப்படா நம்ம சேரை புடுங்க போறாங்கன்னு நினைச்சுகிட்டே வேலை பார்த்தா எந்த நம்பிக்கையில் ஒரு துறைய டெவலப் பண்ண பார்ப்பாங்க அதிகாரிகளும் மந்திரிகளும்? என்னமோ போங்க நம்மளக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு, விடு ஜூட்ட்ட்


சமச்சீர் கல்வி தீர்ப்பு வரதுக்குள்ள காலாண்டு பரீச்சையே வந்திரும் போல, அனேகமா பசங்க இந்த வருசம் காலாண்டு பரீச்சை எழுத வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன், அறுதிப் பெரும்பான்மை வேற பெற்றிருக்காங்க, ஸ்ட்ரெயிட்டா அரையாண்டு பரீச்சையே எழுதிக்கோங்கன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன், பசங்களா கொடுத்து வச்சவங்கடா நீங்க, ஹீம்ம்ம்ம் (பொறாமை லைட்ட்டா)
சமச்சீர் கல்வி பற்றி வினவில் வெளியான கட்டுரை..!
சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

அனேகமா ஜெயா டிவில காலாண்டு பரீட்சை தேவையான்னு ரபி பெர்னாட்ட வச்சு பேட்டி எடுத்து போடுவாங்கன்னு நினைக்கிறேன், ரபி பெர்னாட்டோட பேட்டி உங்களுக்கு தெரியுமுல்ல, தெரியலைன்னா சாம்பிளுக்கு இந்த பேட்டிய படிச்சு பாருங்களேன், கொஞ்சம் யாருமில்லாத இடமா பார்த்து படிங்க, இல்லைன்னா நீங்க தனியா சிரிச்சுகிட்டு இருக்கறத பார்த்து யாராவது தப்பா நினைச்சிருவாங்க


படித்ததில் பிடித்தது
மறுபடியும் பிரபுதேவாதான், பிரபுதேவா நயன்தாரா மேட்டர எல்லாரும் கிழிச்சு துவைச்சு கிளிப் போட்டு காயவச்சு அயர்னும் பண்ணி வீசிட்டு போயாச்சு, ஆனாலும் என்வழி வினோ சார் ஒரு புதுக்கோணத்துல ஒரு கட்டுரை எழுதி இருக்காரு, படிச்சு பாருங்க, இந்த பதிவில நடந்த பின்னூட்ட வாக்குவாதமும் மஸ்ட் ரீடபுள்
நயன்தாராவோட கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ



நயன்தாரா சீதையா நடிச்ச படத்தோட கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ இது, கண்கலங்க, கைகூப்பி எல்லாருக்கும் நன்றி சொல்றாங்க, சுத்தி நிக்கிறவங்கள்ளாம் பூப்போட்டு ஆசிர்வாதம் பண்ணுறாங்க, ஆனது ஆச்சு, இனி என்ன ஆனாலும் பிரபுதேவா கூட கல்யாணம் நடக்க போறது உறுதி, அதனால கல்யாண பொண்ணாக போறவங்களுக்கு நாமளும் வாழ்த்துக்கள தெரிவிச்சுக்கலாம், ஆறு மாசத்துல திரும்பி வராம இருந்தா சரிதான்
ஆனாலும் பாருங்க எல்லாம் முடிஞ்சு போச்சு, எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சிம்பு சொன்னாலும் கடைசியா ஒருவாட்டி ஒரு குத்து பாட்டு ஒஸ்தி படத்துல ஆடலாம் வரயான்னு சிம்பு கூப்புட்டு இருக்காப்புல, நம்ம அம்மணி நான் சீதையா நடிச்சதே கடைசி படமா இருக்கட்டும், இனிமேல் உன்னோட சகவாசமே வேணாம்னு சொல்லிட்டாங்களாம், சிம்பு வம்பு பண்ணாம விட மாட்டாரு போலருக்கே



இந்த வார கமர்சியல் வீடியோ தமிழ் பன்னி நியூஸ், FUNNY ய தமிழ்படுத்த முடியலைங்க, மன்னிச்சூ

அன்புடன்
இரவுவானம்

26 comments:

  1. நயன்தாரா..இவர் இழப்பை தென்னிந்திய சினிமா எப்படி தாங்கப்போகுதோ...

    ReplyDelete
  2. ஒரு பதிவில் இத்தனை தகவல்களா?

    ReplyDelete
  3. பல தகவல்களை தந்துள்ளீர்கள். நயன்தாரா இன்னும் இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைப்பார் என்று ஆரூடம் கூறுகிறது .. ....... அப்போ பிரபுதேவா நிலை என்ன எண்டு தானே கேக்கிறிங்க..?

    இன்னொரு நயன்தாரா கிடைக்காமலா போயிடுவா ..)))

    ReplyDelete
  4. //!* வேடந்தாங்கல் - கருன் *!said...
    ஒரு பதிவில் இத்தனை தகவல்களா?//

    ஏன் சரியா தெரியலையா?

    ReplyDelete
  5. அட்டகாசமான பதிவு சார்....

    ReplyDelete
  6. இதுவும் நல்லாத்தான் இருக்கு பாஸ்
    பல்சுவை விருந்து வைச்சுட்டிங்க பாஸ்

    ReplyDelete
  7. நயன்தாராவை இன்னும் ஓராண்டுக்குள் டிவி தொடர்களில் காணலாம்.

    அவங்களுக்கு பயமாகிடுச்சுன்னு நினைக்கிறேன். அதனாலதான் சொல்லிக்கிறாங்க காங்கிரசோடு உறவு பலமா இருக்குனு..

    நண்பரே வினவோட ஆய்வு கட்டுரை எல்லாம் போட்டு காமெடி பண்ணாதீங்க. அவங்களுக்கு இந்துக்களே ஆகாது.அப்புறம் அம்மாவை ஆகுமா?

    பக்கா கமர்ஷியல்///

    ReplyDelete
  8. கலக்கல்..அப்புறம் டேஷ்போர்டுல உங்க பதிவு வந்துடுச்சு..வந்துடுச்சு.

    ReplyDelete
  9. பதிவு நல்லா வந்திருக்குங்கோ.....

    ReplyDelete
  10. ஒரு பதிவு நிறைய விஷயங்கள்....சூப்பர்.

    ReplyDelete
  11. @ ! சிவகுமார் !

    நம்ம மணி எப்படி தாங்க போறாரோன்னு நான் நினைச்சிகிட்டு இருக்கேன், நீங்க வேற...

    ReplyDelete
  12. @ !* வேடந்தாங்கல் - கருன் *!

    தகவல்களா அது எங்கங்க இருக்கு? வருகைக்கு நன்றிங்க கருன்

    ReplyDelete
  13. @ கந்தசாமி.

    இனி அவரு இன்னொரு நயந்தாராவ பிடிக்க மாட்டாருங்க, அனேகமா ஹன்சிதான் அடுத்த டார்கெட்டுன்னு நினைக்கிறேன், வருகைக்கு நன்றிங்க கந்தசாமி சார்

    ReplyDelete
  14. @ விக்கியுலகம்

    தேங்க்ஸ் மாம்ஸ்

    ReplyDelete
  15. @ அரசன்

    நன்றிங்க அரசன் சார்

    ReplyDelete
  16. @ ரியாஸ் அஹமது

    தேங்க்ஸ் பாஸ்

    ReplyDelete
  17. @ "கற்றது தமிழ்" துஷ்யந்தன்

    ரொம்ப நன்றிங்க துஷ்யந்தன் சார்

    ReplyDelete
  18. @ பாலா

    வருகைக்கு நன்றிங்க பாலா, இந்துக்களோ முஸ்லீம்களோ பசங்களுக்கு புஸ்தகத்த கொடுத்தாங்கன்னா சரி, அதவிட்டுட்டு இப்படி இழுத்தடிக்கறது நியாமில்லீங்க

    ReplyDelete
  19. @ செங்கோவி

    வந்திருச்சுங்களா? ரொம்ப ரொம்ப நன்றிங்க செங்கோவி

    ReplyDelete
  20. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    தேங்க்ஸ்சுங்க பன்னிகுட்டி சார்

    ReplyDelete
  21. @ தமிழ்வாசி - Prakash

    ரொம்ப நன்றிங்க தமிழ்வாசி

    ReplyDelete
  22. வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டை இணைக்க:
    http://www.valaiyakam.com/page.php?page=about

    ReplyDelete
  23. நல்ல பதிவு..
    நிறைய விடயங்களை உள்ளடக்கியிருக்கிறீங்க..
    பதிவிற்கு வாழ்த்துக்கள்..



    can you come to my said?

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!