Friday, October 14, 2011

வலையுலகிற்கு ஒரு வேண்டுகோள் - அன்பினை வெளிப்படுத்துவோம் !!!


அன்புள்ளம் கொண்ட நல்ல உள்ளங்களே -

நாம் அனைவரும் இறைவனின் அன்புக் குழந்தைகள், நமக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என நம்முடைய நலனை கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உண்டு, ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளாலும், சந்தர்ப்பங்களாலும் எந்தவித உதவியும், ஆதரவும் கிடைக்காமல் அனாதைகளாக, உடல் ஊனமுற்றவர்களாக, முதியோர்களாக, நோயாளிகளாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பலர் நம்நாடு முழுவதும் பரவிக் காணப்படுகிறார்கள்.

ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும், உடுத்த உடை கிடைக்காமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும் அவதிப்படுவோர் ஏராளம் பேர்கள் இங்கு உண்டு, அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் சந்தோசமாக இருக்கும் ஒருநாள், வயிறார உண்ணும் ஒரு நாள் உண்டெனில், அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாக இருக்கும்.

நாம் அனைவரும் வரும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இருக்கும் இத்தருணத்தில், த்தகையவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையிலோ சம்பளத் தொகையிலோ நம்மால் இயன்றதைக் கொடுப்பதன் மூலம், உதவி செய்வதன் மூலம் அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே?

உங்களின் ஒவ்வொருவரின் சிறு உதவியாலும், ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும்.

இது போன்றவர்களுக்கான ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை அனைத்து ஊர்களிலும் உள்ளன.

நம்மில் பலர் கிடைக்கப்போகும் போனஸ் தொகையில் தங்களது நெடுநாளைய கனவுகள், லட்சியங்களை அடைய திட்டங்களை தீட்டி இருக்கலாம், அவ்வாறானவர்கள், உங்களது நண்பர்களுடனோ அல்லது உங்களுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக தோழர்களுடனோ இணைந்து செயல்படலாம், இதனால் கிடைக்கும் உதவித் தொகையும் அதிகமாக இருக்கும்.

கடவுள் கருணையே வடிவானவர் என்கிறார்கள், உங்களின் கருணையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்களும் கடவுளாகலாம்.

சிந்தியுங்கள் செயல்படுங்கள், நன்றி !!!


அனைவருக்கும் என்னுடைய இனிய அட்வான்ஸ் தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

- இது ஒரு மீள் பதிவு


18 comments:

 1. மாப்ள தீபாவளி வாழ்த்துக்கள்....அது சரி போன வருஷ பதிவா இது ஆத்தாடி!

  ReplyDelete
 2. அவசியமான பகிர்வு.பட்டாசு வாங்கி வெடித்து காசை கரியாக்குவதில் கால்வாசி யாருக்காவது உதவலாம்.அல்லது ஆதரவற்ற குழந்தைகளுக்கு கூட எளிய பட்டாசு வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தலாம்.உணவு,உடைக்கு முதலிடம் கொடுப்பதும் நல்லது.


  உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இருப்பவன் இருபது சதவிகிதம் இல்லாதவன் என்பது சதவிகிதம்... யோசியுங்கள்... இப்படி யாரோ சிலருக்கு உதவி விட்டு ஆடம்பரமாய் கொண்டாடாமல் அளவாய் கொண்டாடினாளே அனைவருக்கும் ஆனந்தமே

  ReplyDelete
 4. உண்மைதான் சகோ . நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 5. கடவுள் கருணையே வடிவானவர் என்கிறார்கள், உங்களின் கருணையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்களும் கடவுளாகலாம்.

  சிந்தியுங்கள் செயல்படுங்கள், நன்றி !!!

  நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 6. சூப்பர் நைட்டு...கலக்கிட்டீங்க..கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

  ReplyDelete
 7. அட ஆமாய்யா இது நல்ல ஆலோசனையா இருக்கே....??

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 8. பயன் உள்ள தகவல் நண்பரே!

  ReplyDelete
 9. பயன் உள்ள தகவல் நண்பரே!

  ReplyDelete
 10. நல்ல சிந்தனை! வாழ்த்துகள்!
  நான் சென்ற ஞாயிறன்று எனது வருமானத்துக்கு என்னால் இயன்ற ஒரு துளியை சில நல்லவர்களின் தூண்டுதலால் செய்துவிட்டேன்.

  ReplyDelete
 11. உங்களின் கருத்தில் எனக்கும் முழுமையாக உடன்பாடு உண்டு. என்னால் இயன்றதை நிச்சயம் செய்வேன்...

  ReplyDelete
 12. கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?

  ReplyDelete
 13. உண்மைதான் நண்பா! நாம் நேரத்துக்கு சாப்பிடுகிறோம்,பசிஎடுத்தபின் அல்ல!வள்ளுவர் அப்போதே சொல்லிவிட்டார்.நன்றி.

  ReplyDelete
 14. இந்த நேரத்தில் அவசியமான பதிவு.

  ReplyDelete
 15. உண்மைதான். நம்மிடம் இருப்பதை வைத்தே இப்படிப்பட்டவர்களுக்கு உதவலாம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே...! இப்பதிவை ஒத்த பதிவொன்று எம் வலைப்பூவில் கடந்த வருடம் இட்டிருந்தேன்..எழுத்தென்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? என்று தெரியாதபோதே கத்துக்குட்டி நிலையில் இருந்த நான் மனதில் நினைத்ததை கொண்ட வந்த பதிவு..! நீங்களும் படித்து கருத்தைத் தெரிவிக்கலாம்.தொடுப்பு:டப், டமார், டும், புஷ்...டுமீர்..!

  ReplyDelete
 16. நல்ல சிந்தனையை விதைத்த பதிவு.கண்டிப்பாக யாருக்கேனும் ஆதறவற்றவர்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்.நன்றி,உங்களது தூண்டுதலுக்கு/

  ReplyDelete
 17. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 18. மாப்ள நல்ல ெசயதி .நன்றி

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!