கொஞ்ச நாளா சன் பிக்சர்ஸ் எந்த படத்தையும் ரீலீஸ் பண்ணாம இருந்த தைரியமோ என்னவோ தமிழ் சினிமால நல்ல நல்ல படங்களா வந்துட்டு இருந்தது, விடுவமா நாங்க? இதோ வந்துட்டம்ல வந்துட்டம்லன்னு இறங்கி வெடி வச்சு இருக்காங்க சன் பிக்சர்ஸ்காரங்க.
ஒருவகையில விஷால் பாராட்டுக்குரியவர்தான், எல்லாரும் அடுத்தவங்க காசுல சூனியம் வச்சா இவரு மட்டும் சொந்த அண்ணன் காசுலயே சூனியம் வச்சுக்கறாரு, பாவம் பாஸ் அண்ணனும், அண்ணியும் விட்டுடுங்க.
படத்தோட கதையெல்லாம் ஒன்னும் இல்ல, ஏற்கனவே விஷால் நடிச்ச திமிரு, மலைக்கோட்டை வகையறா கதைதான், இதுக்கு போய் ஏன் ஒரு தெலுங்கு படத்தோட ரைட்ஸ் எல்லாம் வாங்கி ரீமேக் பண்ணனும்னு ஒன்னும் புரியல.
தூத்துக்குடில பெரிய தாதா சாயாஜி சிண்டே, பயங்கர அராஜகம் பண்ணிகிட்டு இருக்காரு, அங்க போலீஸா வர நம்ம விஷாலு சாயாஜி சிண்டேவ உப்புக்கண்டம் போட்டுடறாரு, சின்ன வயசுல இருந்து தேடிகிட்டு இருக்கற தங்ச்சி கொல்கத்தால இருக்கறத கேள்விபட்டு போலீஸ் வேலைக்கு ஆறுமாசம் (?) லீவு போட்டுட்டு தங்கச்சிய தேடிகிட்டு கொல்கத்தா போறாரு.
இதே டீடெயில கேள்விபட்ட தாதாவோட மொட்டபசங்களும் பையனும் விஷாலோட தங்கச்சிய கொலபண்ணறதுக்காக அவங்களும் கொல்கத்தா வராங்க, கடைசியா யாரு யார கொல பண்ணுனாங்கங்கறத நம்மளை கொலயா கொன்னு சொல்லி முடிக்கறாங்க.
இதுக்கு இடையில சமீரா ரெட்டியோட சைடுல லவ் வேற, வழக்கமா தமிழ் மசாலா சினிமால ஹீரோயின் என்ன பண்ணனுமோ அதை தவறாம சமீரா ரெட்டியும் பண்ணுறாங்க, அதாங்க நாலு பாட்டுக்கு கவர்ச்சியா டான்சும், கிக்கிலி பிக்கிலின்னு சிரிச்சுகிட்டு ரெண்டும் மொக்கை ஜோக்சும், மொத்தத்துல சமீரா ரெட்டிய வேஸ்ட் ரொட்டியாக்கிட்டாங்க.
விவேக் காமெடி படத்துல வர அவரோட கேரக்டர் மாதிரியே காத்து போயி ரொம்ப நாள் ஆச்சு, அது புரியாம இன்னும் காமெடி பண்ணிட்டு இருக்காரு, வடிவேலு இல்லாத குறை நல்லாவே தெரியுது, கொஞ்ச நேரமே வந்தாலும் ஊர்வசியும், ஸ்ரீமனும் கொஞ்சம் சிரிக்க வைக்குறாங்க.
மியூசிக் தேவி ஸ்ரீ பிரசாத், வழக்கமா ஸ்டேஜூல ஒரு ரவுண்டு தொப்பி போட்டு டான்ஸ் ஆடி கொல்லுவாறே, அதையே இங்க ஓப்பனிங் பாட்டுக்கும் ஆடி டார்ச்சர் பண்ணுறாரு, இரண்டு பாட்டு தேவலாம் போல, அப்புறம் பிரபுதேவா இன்னுமா இவர டைரக்டர்னு நம்பிகிட்டு இருக்க்காங்க? டான்ஸ் மாஸ்டர் இயக்குனரா இருக்கற படம்னா குறைஞ்சபட்சம் பாட்டு சீனாவது நல்லா இருக்கனும், ஆனா இங்க!!??
ஒப்பனிங் சீனுல பீர் குடிச்சுகிட்டு இருக்கற வில்லன் வாயில ஒரே அடில பீர் பாட்டில தொண்டை குழி வரைக்கும் விஷால் இறக்குனத பார்த்து படம் பயங்கரமா இருக்கும்னு நினைச்சேன், கடைசில படம் பார்த்த என் நிலைமைதான் பயங்கரமா ஆகிப்போச்சு, எனக்கு மட்டுமில்ல படம் பார்த்த எல்லோருக்கும்தான், கலா மாஸ்டர் டயலாக்குல சொன்னா கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கப்பா.
மொத்தத்துல இந்த வெடி வெடிக்காம இருக்கறதுதான் தமிழ் சினிமாவுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நல்லது.
டிஸ்கி : நல்ல படத்துலயெல்லாம் கமெண்ட் அடிச்சு படம் பார்க்கிறவங்கள டிஸ்டர்ப் பண்ணுற ரசிக பெருமக்கள், இந்த மாதிரியான மொக்கை படத்த மட்டும் ஏன் அமைதியா உட்கார்ந்து ரசிச்சு பார்க்குறாங்கன்னு புரியல.
டிஸ்கி : வெடிங்கற பேருலயே பக்கத்து ஸ்டேட்டுலயும் ரீலீஸ் பண்ணி இருக்காங்களான்னு தெரியல, ஏன்னா வெடிங்கறது கேரளாவுல ஒரு பயங்கரமான கெட்ட வார்த்தை.
// கடைசியா யாரு யார கொல பண்ணுனாங்கங்கறத நம்மளை கொலயா கொன்னு சொல்லி முடிக்கறாங்க //
ReplyDeleteசெத்தான்டா சேகர்...
// கலா மாஸ்டர் டயலாக்குல சொன்னா கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கப்பா //
ReplyDeleteஹி... ஹி...
சுரேஷ்... நீங்க இதுமாதிரி நிறைய மொக்கைப் படம் பார்த்திருப்பீங்க... அப்புறமும் எந்த நம்பிக்கைல இந்தப்படத்தை பார்க்கணும்ன்னு முடிவு பண்ணீங்க...
ReplyDeleteமியூசிக் தேவி ஸ்ரீ பிரசாத்,//
ReplyDeleteSorry Music Vijay antony
படம் பார்த்த என் நிலைமைதான் பயங்கரமா ஆகிப்போச்சு,//
ReplyDeleteகொலைவெறியா தியேட்டரை விட்டு வெளியே வந்ததா கேள்விப்பட்டேன்....?
படம் பிளாட்டா )))
ReplyDeleteஇப்ப வர்ர படம் எல்லாம் எது பார்க்கும் மாதிரி இருக்கு, டைரக்டர்களுக்கு மூலை வரண்டு விட்டது
ReplyDeleteவில்லு படத்துக்கப்புறம் பிரபுதேவா டைரக்சன்னாலே (?) அவனவன் பொறி கலங்கி ஓடுறான்..... இதுல விஷால் வேற, இந்தப் படத்தையெல்லாம் போய் பாத்திருக்கீங்களே... உங்களையெல்லாம்....
ReplyDelete/////படத்தோட கதையெல்லாம் ஒன்னும் இல்ல, ஏற்கனவே விஷால் நடிச்ச திமிரு, மலைக்கோட்டை வகையறா கதைதான், இதுக்கு போய் ஏன் ஒரு தெலுங்கு படத்தோட ரைட்ஸ் எல்லாம் வாங்கி ரீமேக் பண்ணனும்னு ஒன்னும் புரியல.//////
ReplyDeleteஇதுல என்னமோ ஊழல் நடந்திருக்கும் போல இருக்கே? அந்த தெலுங்கு தயாரிப்பாளருக்கும் பிரபுதேவாவுக்கும் ஏதாவது டீலிங் இருந்திருக்கும்...
/////கேள்விபட்டு போலீஸ் வேலைக்கு ஆறுமாசம் (?) லீவு போட்டுட்டு தங்கச்சிய தேடிகிட்டு கொல்கத்தா போறாரு.//////
ReplyDeleteஎன்னது வேலைக்கு லீவு போட்டுட்டா? ஹீரோ வேல பாக்குறாரா? அப்போ நல்ல படமா இருக்கும் போல.. நீங்கதான் சரியா பார்க்கலையோ?
////// மொத்தத்துல சமீரா ரெட்டிய வேஸ்ட் ரொட்டியாக்கிட்டாங்க.//////
ReplyDeleteபடத்துல இருந்த ஒரே ஆறுதல், அதுவும் போச்சா? (ஆமா ஹீரோயினை வெச்சி வேற என்னதான் பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க?)
/////விவேக் காமெடி படத்துல வர அவரோட கேரக்டர் மாதிரியே காத்து போயி ரொம்ப நாள் ஆச்சு,//////
ReplyDeleteஏல டொண்ட்டு வொர்ரீ..... பீ ஹேப்பீ......
////அப்புறம் பிரபுதேவா இன்னுமா இவர டைரக்டர்னு நம்பிகிட்டு இருக்க்காங்க? //////
ReplyDeleteஇது ரொம்பத் தாமதம்......
//////மொத்தத்துல இந்த வெடி வெடிக்காம இருக்கறதுதான் தமிழ் சினிமாவுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நல்லது.
ReplyDelete////////
கிழிகிழின்னு கிழிச்சிட்டீங்க......
//////Philosophy Prabhakaran said...
ReplyDeleteசுரேஷ்... நீங்க இதுமாதிரி நிறைய மொக்கைப் படம் பார்த்திருப்பீங்க... அப்புறமும் எந்த நம்பிக்கைல இந்தப்படத்தை பார்க்கணும்ன்னு முடிவு பண்ணீங்க...///////
இந்த மாதிரி ஒரு பதிவ தேத்தலாம்னுதான்.....
நிறைய எதிர் பார்த்த படம் என்னங்க இப்படி ஆயிடிச்சி...
ReplyDeleteபிரபுதேவா தமிழுக்கு சரிபட்டு வரமாட்டார்ன்னு நினைக்கிறேன்...
சன் பிக்ஸர் க்கு மீண்டும் ஒரு சருக்கள்...
நான் நிறைய சொல்ல வந்ததை பிரபாகரனும் பன்னிக்குட்டியும் சொல்லிட்டாங்க...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said
ReplyDelete/////Philosophy Prabhakaran said...
சுரேஷ்... நீங்க இதுமாதிரி நிறைய மொக்கைப் படம் பார்த்திருப்பீங்க... அப்புறமும் எந்த நம்பிக்கைல இந்தப்படத்தை பார்க்கணும்ன்னு முடிவு பண்ணீங்க...///////
இந்த மாதிரி ஒரு பதிவ தேத்தலாம்னுதான்....//
ஏம்பா. பதிவு எழுதறதுக்கு போயி மொக்கை படம் பாத்து டைம வேஸ்ட் பண்றீங்க. திருந்தவே மாட்டீங்களா???????
/கவிதை வீதி சௌந்தர் said/
ReplyDelete//நான் நிறைய சொல்ல வந்ததை பிரபாகரனும் பன்னிக்குட்டியும் சொல்லிட்டாங்க...
நீங்க என்ன சொல்ல வந்தீங்க தல? கொஞ்சமாவது சொல்லிட்டு போங்க. பதிவின் ஆசிரியர் மன உளைச்சலுக்கு ஆளாயிட போறாரு.
வெடி நமத்துவிட்டது என்று ஒரே கத்தலாக கத்திச் சொல்லிருக்கலாமே..? எதற்கு இத்தனைச் சிரமம் எடுத்து விமர்சனம் வேறு.... எழுதினீங்க சார்...
ReplyDeleteநாத்திப்போன வெடி போல...
ReplyDeleteவெள்ளிக்கிழமையே இந்த "வெடி" வெறும் வேட்டுன்னு நெறையபேரு விமர்சனம் போட்டுட்டாங்க!
ReplyDeleteவெடி - கடி
ReplyDelete@ Philosophy Prabhakaran said...
ReplyDelete//சுரேஷ்... நீங்க இதுமாதிரி நிறைய மொக்கைப் படம் பார்த்திருப்பீங்க... அப்புறமும் எந்த நம்பிக்கைல இந்தப்படத்தை பார்க்கணும்ன்னு முடிவு பண்ணீங்க..//
எல்லாம் சமீரா ரெட்டியால வந்தது பாஸ்:-)
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteமியூசிக் தேவி ஸ்ரீ பிரசாத்,//
//Sorry Music Vijay antony//
இது வேறைங்களா? அவருதாங்க தொப்பிய போட்டு ஆடிட்டு இருந்தாரு, அதான் அவருன்னு நினைச்சிட்டேன்
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஅட நீங்க வேற நம்மளையே கொன்னுதான அனுப்புறாங்க
@ கந்தசாமி. said...
ReplyDelete//படம் பிளாட்டா )))//
இன்னுமா சந்தேகம்???
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// மொத்தத்துல சமீரா ரெட்டிய வேஸ்ட் ரொட்டியாக்கிட்டாங்க.//////
//படத்துல இருந்த ஒரே ஆறுதல், அதுவும் போச்சா? (ஆமா ஹீரோயினை வெச்சி வேற என்னதான் பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க?)//
கமலா காமேஷ் மாதிரி எதிர்பார்த்தேன் பாஸ் :_))
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////Philosophy Prabhakaran said...
சுரேஷ்... நீங்க இதுமாதிரி நிறைய மொக்கைப் படம் பார்த்திருப்பீங்க... அப்புறமும் எந்த நம்பிக்கைல இந்தப்படத்தை பார்க்கணும்ன்னு முடிவு பண்ணீங்க...///////
//இந்த மாதிரி ஒரு பதிவ தேத்தலாம்னுதான்.....//
பன்னிக்குட்டி சார் பப்ளிக் பப்ளிக்
@ கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete//நான் நிறைய சொல்ல வந்ததை பிரபாகரனும் பன்னிக்குட்டியும் சொல்லிட்டாங்க...//
நீங்களும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க பாஸ்
@ ! சிவகுமார் ! said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said
/////Philosophy Prabhakaran said...
சுரேஷ்... நீங்க இதுமாதிரி நிறைய மொக்கைப் படம் பார்த்திருப்பீங்க... அப்புறமும் எந்த நம்பிக்கைல இந்தப்படத்தை பார்க்கணும்ன்னு முடிவு பண்ணீங்க...///////
இந்த மாதிரி ஒரு பதிவ தேத்தலாம்னுதான்....//
//ஏம்பா. பதிவு எழுதறதுக்கு போயி மொக்கை படம் பாத்து டைம வேஸ்ட் பண்றீங்க. திருந்தவே மாட்டீங்களா???????
நல்லா சொல்லுங்க சிவா, யாரும் திருந்தவே மாட்டேன்றாங்க
@ ரெவெரி said...
ReplyDelete//நாத்திப்போன வெடி போல...//
இது என்ன பாஸ் புதுசா இருக்கு விஷால் படத்த விடவா?
@ Yoga.s.FR said...
ReplyDelete//வெள்ளிக்கிழமையே இந்த "வெடி" வெறும் வேட்டுன்னு நெறையபேரு விமர்சனம் போட்டுட்டாங்க!//
விதி வலியது பாஸ்
@ சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete//வெடி - கடி//
அண்ணனோட பஞ்ச் டயலாக்கே தனிதான்
@ kiliyooraan said...
ReplyDelete//இப்ப வர்ர படம் எல்லாம் எது பார்க்கும் மாதிரி இருக்கு, டைரக்டர்களுக்கு மூலை வரண்டு விட்டது//
அப்படித்தான் போல பாஸ்
@ BALA said...
ReplyDelete//வெடி நமத்துவிட்டது என்று ஒரே கத்தலாக கத்திச் சொல்லிருக்கலாமே..? எதற்கு இத்தனைச் சிரமம் எடுத்து விமர்சனம் வேறு.... எழுதினீங்க சார்...//
எல்லாம் ஒரு பதிவு தேத்தலாம்னுதான் சார்