Wednesday, December 14, 2011

ஒஸ்திலே ஒஸ்தி !!!ஏல நம்ம அண்ணாச்சி தரணியோட குருவி படம் பார்த்தே குத்து வாங்குன அனுபவம் இருக்க ஒஸ்தி படம் பார்த்து ஒத வாங்க ஆசபடலாமால்லே, படம் பாக்க போவயில்ல நம்ம மளிக கடை அண்ணாச்சி சொன்னாவ, வேணாம்லே போவாதான்னு, அட நல்லது சொன்னா யாரு கேக்கா? நாம மட்டும் கேட்கறதுக்கு படத்துக்கும் போயாச்சு

சின்னபிள்ளக்கு இஸ்கூலு யூனிபார்மு மாட்டிவிட்ட கணக்கா நம்ம சிம்பு அண்ணாச்சிக்கும் போலீசு யூனிபார்மு மாட்டி விட்டுருக்கா, அண்ணாச்சியும் சும்மா இல்லன்னே, படம் முழுக்கா ஓடுதா, தாவுதா, பறக்கா, ஆடுதா, கடைசி வரைக்கும் மனுச பயபுள்ளங்களாட்டும் ஒழுங்கா நடக்கவே இல்லல்லா, அதுவும் சிம்பு அண்ணாச்சி யங் சூப்பர் ஸ்டாராமுல்லா? இது எப்பா? சொல்லவே இல்லா

நம்ம தரணி அண்ணாச்சிக்கு அதெலெட்டுனா ரொம்ப பிடிக்கா என்னன்னு தெரியல, குருவில நம்ம விஜய் அண்ணாச்சிய பறக்க விட்டா, இப்ப நம்ம சிம்பு அண்ணாச்சியும் அப்படிக்கா ஏருல பறந்து இரண்டு கையாலயும் டுப்பாக்கி வச்சு டுமீல் டுமீல்னு சுட்டுட்டு அப்படிக்கா ஒரு சம்மர் சாட் அடிச்சு தரையில வந்து நிக்கா, படம் பார்த்த ஒரு அண்ணாச்சி பயந்து பாத்ரூமுக்கு ஓடுதான்னா பார்த்துக்கவே

இங்கனயெல்லாம் படம் எடுத்தா விளங்குமான்னே, நாளாமின்னைக்கு பயபுள்ளைக பேதில தியேட்டருலயே போயிட்டா ஒரு சோடா தண்ணி விக்குமான்னே? என்னமோ போங்கன்னே கொஞ்சம் யோசிக்காம்லா


பொறவு இந்த ஹீரோயினி புள்ளய எங்கிருந்து அண்ணாச்சி புடிச்சீக, பிரமாதம்யா பிரமாதம், புள்ள செக்க செவேல்னு திருநெல்வேலி அல்வாத்துண்டாட்டம் இருக்குல்லா, வாயில போட்டா கரைஞ்சிருமான்னு ஒரு பயபுள்ள கோக்குமாக்கா கேட்குது, அது சரி புள்ளய பாத்ரூமு போகும்போது பாதில கூட்டிட்டு வந்தியளா? படம் முழுக்க அஷ்டகோணலா மூஞ்சிய சுழிச்சிட்டு நடக்க விட்டுருக்கீக, ஆனா ஒன்னுன்னே புள்ளைக்கு பிண்ணனி குரலு கொடுத்தவக வாய்சு சூப்பருன்னே, புள்ளயும் நல்லா இருக்குமான்னு தெரிஞ்சவக யாராவது கேட்டு சொல்லுங்கப்பு

நம்ம சிம்பு அண்ணாச்சி படத்துல பாட்ட பத்தி சொல்லவே வேணாம், வெளங்கிரும், ஒரே ஒரு பாட்டுன்னே நம்ம எல்.ஆர். ஈசுவரி அக்கா பாட்ட பாடி இருக்காக, சும்மா வெங்கல குரலு, பாட்டு சும்மா கணீர்னு கேக்கு, ஆனா ஊடால சிம்பு அண்ணாச்சியோட அப்பாரு வந்து கத்தி கெடுக்காரு, ஏம்லே இந்த கொலவெறி?

நம்ம தரணி அண்ணாச்சி படம் முழுக்கா சிம்பு அண்ணாச்சிய பஞ்ச் அடிக்க விட்டுருக்கா, ஒன்னும் சொல்லிக்காப்புல இல்லல்லா, ஒரு பஞ்சு டயலாக்குன்னா முறுக்க நறுக்கா கடிச்ச மாட்டா இருக்க வேணா? பார் எக்சாம்புளு - ஏலே பாக்சர் டானியலு செத்தமூதி நீ ஏற்கனாவே சேட்டு கடயில திருட்டு கணக்கு எழுதி உத வாங்குனாப்புலதான் இருக்காப்டி, பின்ன என்னாத்துக்குவே உனக்கு எமெலே சீட்டு, திருட்டு மூதி அப்படிக்கா இருக்க வேணாமா?

அதவிட்டுட்டு நம்ம சிம்பு அண்ணாச்சி, நான் கண்ணாடி, பீங்கானு, காஞ்சு போன கருவாடுன்னு என்னாலே பஞ்ச் அடிக்கான்? ஆனா ஒன்னுல்லே படம் முழுக்க தக்காளி சுட்டே புடிவோன், சுட்டே புடுவேன்னு சொல்லுதாம், 
பயபுள்ள நியாயஸ்தன்லா சொன்னத செஞ்சு புட்டாம்லே…


7 comments:

 1. வணக்கமுங்க!இருந்தாலும் புள்ள கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டி ருக்கணும்கிறதுங்காட்டியும் பானையைப் பயபுள்ள போட்டு ஒடைப்பாருங்க பாருங்க,அந்த சீனுல தானுங்க "தரணி" நிக்கிறாரு!!!!!!!

  ReplyDelete
 2. பயபுள்ள நியாயஸ்தன்லா சொன்னத செஞ்சு புட்டாம்லே…///ha!ha!haa!!!!!

  ReplyDelete
 3. நல்ல வேளை நான் எஸ்கேப்புலேய்!

  ReplyDelete
 4. படத்தை பார்தவனேல்லாம் வந்து ஒப்பாரி வைக்கிரானுங்களே ஆண்டவா நான் தப்பிச்சிட்டேன்...!!!

  ReplyDelete
 5. எலே! சூப்பர்லே! வரிக்குவரி சிக்சர்லே! :-)

  ReplyDelete
 6. //அது சரி புள்ளய பாத்ரூமு போகும்போது பாதில கூட்டிட்டு வந்தியளா? படம் முழுக்க அஷ்டகோணலா மூஞ்சிய சுழிச்சிட்டு நடக்க விட்டுருக்கீக//

  ரிச்சாவை மிஸ் பண்ணிட்டேன்! :-)

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!