Thursday, December 15, 2011

வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி போலீஸ்கார்மாலை நான்கு மணி ஆகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரத்துல பேங்க மூடிடுவான், சீக்கிரம் போகனும், என சிந்தித்து கொண்டே அந்த வளைவினில் வண்டியை திரும்பியவன் பதறி அடித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினேன்

தொலைவில் டிராபிக் போலீஸ்கள் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருந்தார்கள்

ஆஹா ஆரம்பிச்சிட்டாங்களே நம்மகிட்ட லைசன்ஸ் வேற இல்லையே, என்ன பண்ண?

சாயங்காலம் ஆனா போதும் சூரியன் மேற்க மறையறதுக்குள்ள இவங்க கிழக்க உதிச்சிடறானுங்க, கொஞ்சம் நேரம் ஆகட்டும் அதுவரைக்கும் இந்த டீக்கடையிலேயே நிப்போம்

நினைத்ததை செயலாற்ற டீக்கடை பக்கம் ஒதுங்கினேன்

அண்ணே ஒரு டீ சூடா ஆத்தாம

டீ மாஸ்டர் தலையை உயர்த்தி பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்

பார்ரா புதுசா வயசுக்கு வந்த பொண்ணாட்டாம், என்னா ஒரு லுக்கு வேண்டிகிடக்கு டீய போடுறா சுண்ணாம்பு - மனசுக்குள் ஓடியது

இன்னைக்கு என்னத்துக்கு புடிக்கறானுங்க, நம்மாளுங்க ரொம்ப நல்லவங்களாச்சே ஒருநேரத்துக்கு ஒரு காரணத்துக்குதான் புடிப்பாங்க

ஏண்ணே மாம்ஸ்சுக ரொம்ப நேரமா நிக்குறாங்களா?

ஆமா வந்து அரைமணி நேரம் ஆச்சு

இன்னிக்கு எதுக்கு புடிக்கறாங்க, லைசன்ஸ் இருக்கான்னா?

அதுக்கெதுக்கு புடிக்க போறாங்க, இப்பல்லாம் லைசன்ஸ் இல்லாத பக்கிகள விட குடிச்சிட்டு வண்டி ஓட்டுற பக்கிகதான் அதிகம், அதுக்குதான் புடிப்பாங்க போல

சந்தடி சாக்குல நம்மளயும் பக்கிகன்னு சொல்லிபுட்டான்யா, நமக்கு இது தேவைதான், இன்னேரத்துக்கு எதுக்கு சரக்கு அடிக்க புடிக்க போறாங்க, நம்ம பசங்க குடிச்சா கூட சாயங்காலம் ஆறுமணிக்கு மேல பக்தி பரவசமாத்தான ஆரம்பிப்பாங்க

மாம்ஸ்சுகிட்ட சிக்கிகிட்ட ஆறேழு பேரு அங்க நிக்குறாங்கல்ல, பேசாம அவங்ககிட்டயே போய் கேட்டுடுவோம்

நினைப்பை செயலாக்க அவர்களை நோக்கி நடந்தேன்

ஒரு டிராபிக் போலீகார் வளைத்து வளைத்து டூ வீலர் வண்டிகளை பிடித்துக் கொண்டிருந்தார், சிக்காமல் போன நண்பர்களின் ஏழேழு தலைமுறைகளையும் வாழ்த்திக் கொண்டிருந்தார்

நானும் அவர்களை நெருங்கி கொண்டிருந்தேன்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்களை போல ஆறு பேர் மூஞ்சியை தொங்க போட்டுக் கொண்டு நின்றிருந்தனர்

அவர்களில் ஒருவரை நெருங்கி கேட்டேன்


ஏண்ணே இன்னிக்கு எதுக்கு பிடிக்கறாங்க, லைசன்ஸ் இருக்கான்னா? மனதுக்குள் எங்கிட்ட அதுதான்ன இல்ல, அதத்தான் முதல்ல கேட்க முடியும்

அட நீங்க வேற பாஸ், லைசன்சுக்கு புடிச்சா கூட பரவாயில்லயே, புதுசா கவருமெண்டு ஒரு ஆர்டர் போட்டிருக்காம், வண்டியோட நம்பர் பிளேட்டுல நம்பர் மட்டும்தான் எழுதணுமாம், அதுவும் குறிப்பிட்ட அளவுல எழுதனுமாம், அத மீறி சாமி பேரு, அந்த பேரு, இந்த பேரு எழுதுனா தப்பாம், அதுக்குதான் புடிக்கறானுங்க, சும்மாவே இவனுங்க புடிச்சு பொங்க வைச்சுருவாங்க, போதாக்குறைக்கு கவருமெண்டு வேற புதுசு புதுசா ரூல்ஸ போட்டு எடுத்து குடுக்குது விளங்குமா?

இந்த லட்சணத்துல ஸ்பாட் பைன் இரநூறு ரூபாயாம், கட்டிங் அடிக்கவே காசு பத்தலைன்னுதான் எவன் சிக்குவான்னு கிளம்பி வந்தேன், இவனுங்களக்கு இரநூறூ ஓவாயாம், ஆசைய பாரு, ஆனது ஆகட்டும்னுதான் பாஸ் நின்னுட்டு இருக்கேன் புலம்பி தள்ளினார் அவர்

அட ஆமாம்ல நமக்கும் மறந்து போச்சே, நம்ம வண்டிலயும்தான எழுதி வச்சிருக்கோம், முதல்ல நம்பர் பிளேட்ட மாத்தி புதுசா எழுதணும்

அங்கே டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார்

டேய் இங்க வா, உன் வண்டில என்ன எழுதிருக்க?

ச்சீ போடா

என்னது போடாவா? போலீஸ்காரன பார்த்தா டா போட்டு பேசுறியா? உன்ன அடிக்கற அடில செத்தடா இன்னிக்கு

சார் சார் உங்கள சொல்லல சார், ச்சீ போடான்னுதான் சார் நம்பர் பிளேட்டுல எழுதி வச்சிருக்கேன்

இப்படியெல்லாமாடா எழுதறீங்க, சரி அடுத்த ஆளு வா, உன் வண்டில என்ன எழுதிருக்க?

சார் டோண்ட் டேஸ்ட் மீ

டோண்ட் டேஸ்ட் மீயா? டேஸ்ட் பண்ண உன் வண்டி என்ன சர்பத் விக்குற வண்டியா?

ஏண்டா முன்னாடி டயர்ல இருந்து பின்னாடி டயர் வரைக்கும் வண்டில எத்தனை எடம் இருக்கு? அங்க எழுதி தொலைய வேண்டியதுதான? ஏண்டா நம்பர் பிளேட்டுலயே எழுதி தொலையறீங்க, இரநூறு எடு

நெக்ஸ்ட், உன்னோடது என்ன?

வொய் திஸ் கொலவெறி சார்

கொலவெறியா யாருக்குடா கொலவெறி? இன்னும் கொஞ்சநேரம் உங்ககிட்ட பேசிட்டு இருந்தா கண்டிப்பா கொலவெறி ஆயிடுவேண்டா, 

ஏண்டா இப்படி பண்ணுறீங்க? ஒரு வண்டிக்கு நம்பர் பிளேட் எவ்வளவு முக்கியம், அதுல போய் உங்க வீட்டு ரேசரன் கார்டுல இருக்கற பேரு முதற்கொண்டு பத்து பதினைஞ்சு சாமி பேரு வரைக்கும் எழுதி வைக்கிறீங்களேடா? ஒரு ஆத்திர அவசரத்துக்கு வண்டி நம்பர் எப்படி நோட் பண்றது?

அடுத்து உன் வண்டி, என்ன எழுதிருக்க?

காதல் மட்டும்தான் பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

போலீஸ்காரர் முறைத்து பார்க்க எல்லோரும் சிரிக்கிறார்கள்

இத எழுதுனதுக்கு அப்புறம் நம்பர் எழுத இடம் இருக்காடா நம்பர் பிளேட்டுல, ஏண்டா இப்படி பண்ணுறீங்க, கவருமெண்டே பேப்பர்ல விளம்பரம் குடுத்தாங்களேடா நம்பர் பிளேட்டுல எதையும் எழுதாதீங்கன்னு, ஒருமாசம் டைம் குடுத்தும் இப்படியே சுத்திகிட்டு இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?


நாங்க எங்க சார் பேப்பர் விளம்பரம் எல்லாம் பார்த்தோம், எலைட் பார் தொறக்கற செய்தியெல்லாம் பெருசா கொடுக்குறீங்க, இந்த மாதிரி நீயூசெல்லாம் சின்னதா ஒரு மூலைலதான போடுறாங்க, அப்புறம் எங்களுக்கு எப்படி சார் தெரியும்? இந்த ஒருவாட்டி மன்னிச்சுக்குங்க சார், நாங்க நம்பர் பிளேட்ட மாத்திடுறோம், இனிமே இப்படி நடக்காது சார்

சரி போனா போகுது இந்த ஒருவாட்டி விடுறேன், மறுபடியும் இதே மாதிரி நம்பர் பிளேடோட பார்த்தேன், அப்புறம் நடக்கறதே வேற, எல்லோரும் போங்க போங்க

கதையின் நீதி
அரசாங்கம் நம்பர் பிளேட்டுகளில் நம்பரை தவிர வேறு எதையும் எழுதக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறது, குறிப்பிட்ட அளவுகளில் சரியான முறையில் நம்பர் எழுதபட்டு இருக்க வேண்டும், இன்னும் நம்பர் பிளேட்டுகளை மாற்றாதவர்கள் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- இரவுவானம் 
  

25 comments:

 1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

  ReplyDelete
 2. மாப்ள நீதி புரிந்தது ஹிஹி!

  ReplyDelete
 3. கலக்கல் பாஸ்! என்னமா நீதி சொல்றீங்க?
  //காதல் மட்டும்தான் பொது உடமை
  கஷ்டம் மட்டும்தானே தனி உடமை//

  இதெல்லாம் சும்மா வராது பாஸ்! :-)

  ReplyDelete
 4. வணக்கமுங்க!நல்ல ஒரு விஷயத்த பொறுப்போட சொல்லியிருக்கீங்க!மகா ஜனங்களே பாத்து நடந்துக்குங்க.இரு நூறு ரூபாய்க்கு புது நம்பர் பிளேட்டே மாத்திக்கலாம்!

  ReplyDelete
 5. @ Cpede News

  இது எப்ப நடந்ததுங்க எனக்கே தெரியாம, ஹா ஹா ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 6. @ விக்கியுலகம்

  நன்றி மாம்ஸ், நீங்க இங்க இல்லாததால தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 7. @ ஜீ...

  ஹி ஹி நன்றி ஜீ

  //இதெல்லாம் சும்மா வராது பாஸ்! :-)//

  சரிதான ரொம்ப யோசிக்கனும்ல

  ReplyDelete
 8. @ Yoga.S.FR

  ரொம்ப நன்றிங்க யோகா சார்

  ReplyDelete
 9. நண்பரே, நல்ல பதிவை தந்திருக்கிறீர்கள் நன்றி.

  ReplyDelete
 10. நான் பெயின்ட்டுகு மாறி நாலு வருசமாச்சு... ஏன்னா அப்பவே ஆர்டர் வந்திருச்சு

  ReplyDelete
 11. தேவையான தகவல்.ஆனால் பதிவில் வந்த உரையாடல் உங்கள் கற்பனையா?நிஜமாகவே நடந்ததா?

  ReplyDelete
 12. amam nama mattum namma number plate la name elutha kudathu ana intha vennai mamanga mattum avanga kudumpathar vandi ellathulayum munnadiyum pinnadiyum (FRONT & BACK) MAMA MAMA (POLICE POLICE) nu ottalama? .......... neengale sollunga my lord

  ReplyDelete
 13. நல்ல விஷயத்தை காமடியா சொல்லிருக்கீங்க. நன்றி

  ReplyDelete
 14. வெகுஜன எழுத்து நடை கைகூடி வந்துள்ளது.

  ReplyDelete
 15. @ PCKaruppaiah

  நன்றிங்க கருப்பையா, உங்க பிளாக்கும் நல்லா யூஸ் புல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க

  ReplyDelete
 16. @ தமிழ்வாசி பிரகாஷ்

  ரொம்ப சந்தோசங்க, ஆனா நம்பர தவிர வேறு எதையும் எழுத கூடாதுன்னு இப்போ புதுசா ஆர்டர் போட்டு இருக்காங்க

  ReplyDelete
 17. @ thirumathi bs sridhar

  பதிவு முழுக்க முழுக்க கற்பனையே, எளிதாக புரிந்து கொள்வதற்காக தன்னிலையில் எழுதினேன்

  ReplyDelete
 18. @ Siva

  பாஸ் அவங்க புடிக்கற எடத்துல இருக்காங்க, நாம கொடுக்கற இடத்துல இருக்கோம், நம்மாள என்ன பண்ண முடியும்?

  ReplyDelete
 19. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  நன்றிங்க ரமேஷ் சார்

  ReplyDelete
 20. @ ஜோதிஜி திருப்பூர்

  ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்

  ReplyDelete
 21. :-).. Nalla kalagalappa eluthi irukkinga..

  Ipdillam rules pottu irukkangala.. namma oorla.. thgavalukku nanri nanba..

  ReplyDelete
 22. சிறப்பான பதிவுகள்நன்றி

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. பலரைச் சென்றடைய வேண்டிய செய்தி. சொல்லியிருக்கும் விதம் அருமை.நன்றி.

  ReplyDelete
 25. பலரைச் சென்றடைய வேண்டிய செய்தி. சொல்லியிருக்கும் விதம் அருமை.நன்றி.

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!