Thursday, February 16, 2012

நண்பன், மெரினா, தோனி - சத்தியமா விமர்சனம் இல்லீங்க



சமீப காலமா கல்விமுறை, பாடத்திட்டங்கள் மையமா வச்சு நண்பன், மெரினா, தோனின்னு வரிசையா படங்கள் வந்துகிட்டு இருக்குறது நல்லதொரு மாற்றமா தெரியுது, அரசாங்கத்தோட மாற்றமா இல்லாட்டியும் ஒஸ்தி, வெடி, வில்லுல இருந்து இறங்கி நண்பன், மெரினா தோனின்னு தமிழ்சினிமா கொஞ்சம் மாறி இருக்குறதுல சந்தோசம்.

சரி நாமளும்தான் டிகிரி வரைக்கும் படிச்சமே, நமக்கு என்ன ஞாபகம் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்தா ஒன்னுமே ஞாபகத்துல இல்லை, அட்லீஸ்ட் பிரகாஷ்ராஜ் 17*8 எவ்வளவுன்னு கேட்டாரேன்னு அதுவாவது தெரியுதான்னு அதையும் யோசிச்சு பார்த்தேன் அதுவும் தெரியல, அட்லீஸ்ட் நாலாவது வாய்ப்பாடாவது தப்பில்லாம சொல்லலாமான்னு டிரை பண்ணா ப்ச்ச்

என்னத்த சொல்ல???

நாம ஏன் இந்தளவுக்கு வீக்கா இருக்கோம், படிக்கும் போது நல்லாத்தானே படிச்சோம், கிளாஸ் பர்ஸ்ட் எல்லாம் எடுத்தோம் இப்ப எல்லாம் எங்க போச்சுன்னு யோசிச்சு பார்த்தா, படிக்கற காலத்துல என்னைக்கு எதையாவது புரிஞ்சு படிச்சிருக்கோம்? எல்லாமே மனப்பாடம்தான், தமிழ்ல செய்யுள்னாலே மனப்பாட செய்யுள்னுதான் பேரு

டிகிரி படிச்சவங்க, எஞ்சினியரிங் படிச்சவங்க, இன்னும் என்னென்னவெல்லாமோ படிச்சவங்க யாரா இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சு பாருங்க படிச்சது உங்களுக்கு எவ்வளவு ஞாபகம் இருக்குதுன்னு.

ஒன்னாங்கிளாஸ்ல இருந்து அஞ்சாங்கிளாஸ் படிக்கற வரைக்குமாவது அஞ்சு அஞ்சு எவ்வளடா? இந்த விரல்ல அஞ்சு விரல கூட்டிக்கோ அந்த விரல்ல அஞ்சு விரல கூட்டிக்கோ இப்ப எண்ணி சொல்லு எவ்வளவு வருதுன்னு வாத்தியார் சொன்னா, இரண்டு கையயும் கூட்டி பத்துன்னு சொல்ல தெரிஞ்சது.

அந்தளவுக்காவது புரிஞ்சு படிச்சிட்டு இருந்தோம், ஆறாம் கிளாஸ் வந்ததுக்கு அப்புறம் எல்லாமே மனப்பாடம்னு ஆகிப்போச்சு, புக்க எடுத்தியா கடகடன்னு மனப்பாடம் பண்ணுனியா, பரிட்சையில வாந்தி எடுத்தியா, மார்க்கு வாங்கினியா, பர்ஸ்ட் கிளாஸ்ல பாசானியா? இதுதான் படிப்பு, அவ்வளவுதான் படிப்பு.

நீ படிச்ச படிப்பு உனக்கு யூஸ் ஆகுதா? படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சுதா? நீ பில்கேட்ஸ் ஆகிட்டியா? தெருப்பொறுக்கிட்டு இருக்கியா? அதெல்லாம் யாருக்கு வேணும்? படிச்ச காலம் முதலா எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்கா வாங்கிட்டு சுமாரான சம்பளத்துல வேலை பார்க்குறவனும் இருக்கான், சரியா படிப்பு வரலைன்னாலும் பேச்சு திறமை மத்த திறமைன்னு வளர்த்துகிட்டு பெரியாளா ஆனவனும் இருக்கான்.

இங்க யார தப்பு சொல்ல முடியும்? ஆசிரியர்கள் கிடைக்குற பத்து மாசத்துல எல்லா பாடபுக்குகள்ல இருக்குற எல்லா பாடத்தயும் நடத்தணும், டெஸ்டு வைக்கனும், பரீட்சை வைக்கனும், பேப்பர் திருத்தனும், மாணவர்களுக்கும் அதே நிலைமைதான், ஒருத்தருக்கு ஒருத்தர் நீயா? நானா?ன்னு ரன்னிங் ரேஸ் ஓடாத குறைதான்.


நான் காலேஜ்ல படிக்கும் போது, என்னோட புரபசர் சங்கரன் மாஸ்டர் சொல்லுவாறு, டேய் நீங்க பஸ்சுல போகும் போது கூட உட்கார்ந்துகிட்டு வர ஆளுகிட்ட பேச்சு கொடுத்துகிட்டே போகனும்டா, இல்லைன்னா அவன் தூங்கி உன் தோளுல சாஞ்சு உன் சட்டையில சலவா தண்ணி ஊத்திருவான்னு.

அதே மாதிரிதான் படிக்கும்போதும், படிப்பும் முக்கியம்தான் அதேசமயம் உங்கள சுத்தி இருக்குற டிரண்டும் எப்படிபட்டதுன்னு பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி தகுதிய வளர்த்துகிட்டு நடந்துக்க தெரிஞ்சுக்கனும், பஸ்சுல போறதுதான் முக்கியம், பக்கத்துல உட்கார்ந்து இருக்குறவன பத்தி எனக்கென்ன கவலைன்னு நினைச்சா, அதுவே நாளைக்கு உங்களுக்கு ஆப்பா வந்து தண்ணி ஊத்தி விட்டுரும்,

சோ நல்லா படிங்க, மார்க்கு மட்டுமே முக்கியமில்ல, அட மார்க்கு கம்மியா இருந்தாத்தான் இப்ப என்ன? இதர திறமைகளையும் வளர்த்துக்குங்க, வாழ்க்கையில முன்னேறுங்க..!
  

6 comments:

  1. ஆஹா,பஸ் கதையும் வந்திருக்கே!படிக்கிற பிள்ளைகளுக்கு போய் சேரட்டும் இந்த பதிவு.பெற்றோரும் கவனத்தில் எடுத்துக்கனும்

    ReplyDelete
  2. ஆமாய்யா பிள்ளைகளை படி படின்னு டார்ச்சரும் பண்ண கூடாது.

    ReplyDelete
  3. இந்திய கல்வி முறை குழந்தைகளுக்கு முரணானது...இது கேக்க நல்லா இருக்கும் மாப்ள..நடைமுறைக்கு வரனும்னா அரசாங்கம் இதை பிராக்டிக்கலா பாக்கனும்..அது நடந்தா தான் உண்டு!

    ReplyDelete
  4. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமில்லை மற்ற திறமையும் வேண்டும். நல்ல ஆரோக்கிய சிந்தனை.

    ReplyDelete
  5. Anna super, ethu students mattum ellama parentskum ethu poi serumnu nambaren

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!