Saturday, April 7, 2012

ராம்சரணின் ரகளை - தெலுங்குல ரச்சாமாவீரன் படத்த தமிழ்ல பார்த்ததுல இருந்து ராம்சரண் ஃபேனாகி ரகளைக்கு முதநாளே போனேன், ஆனா இப்படி அநியாயத்துக்கு ரகளையா இருக்கும்னு தெரியாம போச்சே சாமி.

ஆந்திரகாரங்களுக்கு மசாலா பிடிக்கும்னு கேள்விபட்டுருக்கேன், அதுக்காக இப்படி கூடவா கொலயா கொன்னு படமா எடுப்பாய்ங்க, நம்மூருல நம்மாளுங்க ஏற்கனவே வாந்தி எடுத்த குருவி, காக்கா, கொக்குன்னு எல்லாத்தையும் கலந்து கட்டி மினி முனியாண்டி விலாஸ் மத்தியான சாப்பாட்டையே ரகளையா படமாக்கி வச்சிருக்காங்க

இந்த ரகளை படத்தோட கதை என்னன்னா? நம்ம இந்திய சினிமா ஏன் உலக சினிமா வரலாற்றுலயே பார்க்க முடியாத கதைங்க இது, ஒரு ஊருல இரண்டு உயிர் நண்பர்கள் இருக்கறதும், அவங்க ஊருக்கே நல்லது பண்ண நினைக்கறதும், அத கெடுக்கறதுக்காகவே சொந்தத்துல வில்லனுக இருக்கறதும், அவங்களுக்கு இரண்டு சில்வண்டு பசங்க இருக்கறதும், அதுல பிஞ்சுலயே டைட்டானிக் டைரக்டருக்கே ரொமான்ஸ் சொல்லிதர அளவுக்கு வெவெரமா இருக்கறதும்,

வில்லனுக சதி செஞ்சு நண்பர்கள கொலை பண்ணுறதும், சில்வண்டுல பெரிய வண்டாகி லவ் பண்ணுறதும், அதுகளுக்கு ஒரு பிளாஸ்பேக்கு வைக்கிறதும், உண்மை தெரிஞ்சு கிளைமேக்ஸ்ல ஒரு அம்பது அறுபது பைட் மாஸ்டர்சுகள கேப்டன் பாஸ்கர மகாராஜன் ஆக்குனது மாதிரி ஆக்கி கண்டமாக்குறதும் ம்ம்ம்ம்ம்ம், போதுங்க, இதுலயே நம்ம விஜய் படம் முதக்கொண்டு கேப்டன் படம் வரைக்கும் எல்லா படத்தோட கதையும் இருக்கு

என்னடா படம் ஆரம்பிச்சதுல இருந்து ஹீரோ பேரு கூட போடலியே பயங்கர புரட்சிகரமான படமா இருக்கும் போலன்னு நினைக்கயிலயே ஒரு ஓஓஒடடறற டிரையினுல இருந்து அடுத்த டிரெயின் மேல தாவி ஸ்லோமேசன்ல திரும்பி குடுத்தாரு பாருங்க ஒரு எண்ட்ர்ரி ராம்சரண், பேக்கிரவுண்டுல இடி மின்னல் பிளாஸ் எல்லாம் அடிச்சு மெகா பவர்ஸ்டார்னு போட்டாங்க பாருங்க டைட்டிலு, அப்படியே கண்ண கட்டிடுச்சு,

ஏற்கனவே நம்ம ஊருல ஒரு பவர்ஸ்டார் பண்ணுற அலும்பு போதாதா? இவரு வேற மெகா பவர் ஸ்டாராமே? அப்பவாச்சும் நாம சுதாரிச்சிருக்க வேணாமா? படம் முழுக்க அடிக்கடி அடிக்கறாரு பாருங்க பஞ்சு, படம் பார்க்குறவங்களுக்கு உடம்பு புல்லா பஞ்சருதான், உதாரணத்துக்கு ஒரு டயலாக் - டேய் நீ பேசுனா கூச்சலு, நான் பேசுனா மின்னலு, இது எதுக்குன்னு நினைக்கிறீங்க, போன்ல வில்லன் சவுண்டா பேசுனதுக்கு நம்ம ராம்சரண் அடிக்கற பஞ்சுதான் இது, பின்னாடி கிராபிக்ஸ்ல மின்னல் வேற, இது மாதிரி ஏகப்பட்ட பஞ்சரு

அக்மார்க் தெலுங்கு படம்கறதுக்கு இன்னொரு உதாரணம், ஏகப்பட்ட டபுள் மீனீங்ஸ், ஆந்திராவுல சென்சார்காரங்க நல்லவைங்க, நம்மாளுக அப்படியில்ல அதனாலயோ என்னவோ நம்மூருல ரசிகர்கள்கிட்ட செம ரெஸ்பான்ஸ், அதுலயும் ராம்சரண் தமன்னாகிட்ட லவ்வ புரோபோஸ் பண்ணுவாரு பாருங்க, ரைட்ல திரும்பு, லெப்ட்ல திரும்பு, ஓகேம்மா வண்டில, ரைட்டு லெப்ப்டு, ஹெட்டு, இண்டிகேட்டரு, ஹாரனு, பம்பரு, டிக்கி வரைக்கும் ஓகே, நான் உன்ன லவ் பண்ணுறேன்னு, முடியல

தமன்னாவ பத்தி என்ன சொல்ல, பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி இருக்கறாங்க, நம்மாளுங்க ஏற்கனவே நனைய வெச்சு பார்த்துட்டாங்க, ஆந்திராங்காரங்கள்ள கூடவே கொஞ்சம் தெளிய வச்சும் பார்க்கறாங்க போல, தமன்னாவுக்கு நல்ல டிஸ்டெம்பர் பெயிண்ட் விளம்பரம் நல்ல சாய்ஸ்,

படத்துலயே உருப்படியான ஓரே விஷயம் பிரம்மானந்தம் காமெடிதான், நம்மாளுங்க் கஷ்டப்பட்டு வசனம் பேசி, கஷ்டப்பட்டு நெளிஞ்சு வளைஞ்சு காமெடி பண்ண கஷ்டப்படும் போது, ஜஸ்ட் லைக் தட்டா போற போக்குல காமெடி பண்ணிட்டு போயிடறாரு. அமெரிக்கன் ரங்கீலாவா வர பிரம்மானம்தான் படத்தோட ஹைலைட்டே, அதுலயும் ஏர்போட்டுல இருந்து வெளிய வந்ததும் நம்மாளுங்க பார்த்துட்டு சொல்லுவாரு பாருங்க “ ஆல் ஒன் ரூபீஸ் காயின்பாக்ஸ் - சில்லற பசங்க”

நீங்கல்லாம் யாருடா இந்தியன் ருபீஸ், நான் அமெரிக்கன் டாலர், ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

நாற்பத்து ஏழுங்க,  

அட்லீஸ்ட் நாற்பத்தி ஏழு செண்டிமீட்டராவது டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுங்கடான்னு

நம்ம ஊரு பார்த்திபனும், நாசரும், ஆந்திராவுல குணசித்திர ரசத்த புளிஞ்சு ஊத்திட்டு இருக்கறத பார்த்தா ஒருபக்கம் பெருமையாவும் இருக்கு, ஆனாலும் இந்த மொக்க மசாலா படத்தையும் நம்ம ஆளுங்க ரசிச்சு ருசிச்சு பார்க்குறத கண்ணுல தண்ணியே வருது,


அதுலயும் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்தவரு, தியேட்டரோட பால்கனிக்கும் புளோருக்கும் எகிறி, உருண்டு புரண்டு, பீலிங்க கொட்டி படம் பார்த்துகிட்டு இருந்தாரு, சந்தேகமா பார்த்த என்கிட்ட படம் சூப்பரா இருக்கல்லன்னான்னு கேட்டாரு, உங்களயெல்லாம் பார்த்தா புளகாங்கிதம் ச்சே புளகந்தரகோலம் அடைறேண்டா சாமின்னு மனசுல நினைச்சுகிட்டேன்.

இந்த படம் பாக்குற காசுல குவாட்டர் அடிச்சு குப்புற படுத்து தமன்னாவ கனவுல “கண்டுகிட்டீங்கன்னா” சேஃப், இல்லையின்னா கர்த்தருக்குள் நித்திரை அடைய நேரிடலாம், மத்தபடி ஆல் குருவீஸ் படத்த என்சாய் பண்ணலாம்.

3 comments:

 1. மொக்கை படத்துக்கு மட்டும் தவறாம விமர்சனம் போடுராருய்யா இவரு. .இங்கயும் சேம் ப்ளட். பாத்துட்டேன் ரச்சா :(((

  ReplyDelete
 2. எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!

  ReplyDelete
 3. நல்லவேளை சொல்லிடிங்க ..
  இனி அந்த போஸ்டர கூட பாக்கமாட்டேன்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!