Tuesday, July 17, 2012

பில்லா - 2 இருக்குது நல்லா !



மார்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களிடம் அந்த நடிகர்களின் ரசிகர்களை தவிர்த்த வெகுஜனமக்கள் எதிர்பார்ப்பது மசாலா நிறைந்த கமர்சியல் படங்களையே, சந்தானம், வடிவேலு நடிக்கும் படங்களுக்கு நகைச்சுவை காட்சியையே பிரதானமாக எதிர்பார்த்து போவார்கள், அது போல ஒரு டான் எப்படி உருவானான் என்பதை பற்றிய படம் என்ற அடிப்படை புரிதலில் பார்த்தாலே இப்படத்தை எளிதில் ரசிக்க முடியும்.

ஒரு சாதாரணன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை படிப்படியாக பயன்படுத்தி எவ்வாறு இண்டர்நேஷனல் டானாக மாறுகிறான் என்பதே கதை, அதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் வழி, போகும் பாதை, நடத்தும் கொலைகள் என எவ்வித கமர்சியல் சமரசங்களுக்கும் உட்படுத்தாமல் ”ஏ” சர்டிபிகேட் என்றாலும் பரவாயில்லை என்று துணிந்து படம் எடுத்து வெளியிட்ட இயக்குனரும், தயாரிப்பாளரும் பாராட்டபட வேண்டியவர்கள்.

பில்லா இவன்தான், இவன் இப்படிப்பட்டவன்தான் என்று ஆரம்பம் முதல் இறுதியில் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறுவது வரை சிறிதளவு கூட பாதை மாறாமல் கடைசிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சக்ரி.


மற்றபடி கதை ஆங்கில பட காப்பி, வெளிநாட்டு படங்களில் இருந்து சீனை சுட்டுவிட்டார், வீடியோகேமில் இருந்து சுட்டுவிட்டார் என்று கூறுவதாக இருந்தால் தமிழ்சினிமாவின் ஆதிகாலம் முதல் அலச வேண்டி இருக்கும், ரீமேக், டப்பிங் என்பது போல காப்பியடிப்பது தமிழ்சினிமாவின் காப்பிரைட் வாங்காத சட்டமாக மாறி வெகுகாலம் ஆகிறது, அதையும் மீறி கேள்விகேட்டால் இன்ஸ்பிரேசன் என்ற ஒற்றைவார்த்தையில் பூசிமெழுகி பூசணிப்பூவை சொருகிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி படம் முழுக்க வியாபித்து இருப்பது பில்லா பில்லா பில்லா மட்டும்தான், அஜீத் என்ற நடிகராக ஒரு பிரேமில் கூட வெளிப்படாமல் முழுக்க முழுக்க டேவிட் பில்லாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார் அஜீத், இப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்ல கதாநாயகி கூட தேவையில்லை, இயக்குனர் துணிந்து பார்வதி கேரக்டரை தவிர்த்திருக்கலாம், படத்தின் ஒளிப்பதிவு, இசை, இயக்கம், வசனம் என எதையும் தனிப்பட்ட முறையில்  கூறத்தேவையில்லை, எல்லாம் அளந்து வைத்தது போல நச்சென்று இருக்கிறது.

எல்லாம் இருந்தும் வெகுஜன ரசிக மனப்பான்மையான, குத்து பாட்டு, காமெடி, செண்டிமெண்ட், ஆலமரத்தடி பஞ்சாயத்து போன்ற எதுவுமே இல்லாமல் படம் எடுக்கும் போது லாஜிக் என்னும் மேஜிக் வஸ்துவை குறைந்தபட்சம் சைட்டிஷ் அளவுக்காக உபயோகித்திருந்தால் கூட இன்னும் அதிகம் பேரை கவர்ந்திருக்கலாம்.


ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என ரசிகர்களை செண்டர் பிரித்து ரசனையுள்ளவன், ரசனை குறைந்தவன் என பிரிப்பதை விட்டுவிட்டு படத்தினை அதன் தன்மைக்கேற்ற வகையில் ரசிக்க கூடிய மனப்பான்மையை உருவாக்க வேண்டிய அவசியம் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் உண்டு, குறைந்த பட்சம் பட புரோமோசன் வேலைகளிலோ அல்லது பேட்டிகளிலோ இதனை உருவாக்கி இருந்தாலே இப்படத்தினை பற்றிய பெரும்பான்மையான எதிர் விமர்சனங்களை தவிர்த்திருக்க முடியும்.

இறுதியாக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி பலபேருடைய உழைப்பினை கொட்டி உருவாக்கும் படத்தினை மொக்கை என்ற ஒருவார்த்தையில் ஒதுக்குவது தவறுதான், அதே சமயத்தில் காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனின் பணத்திலும் அதே அளவு உழைப்பு இருக்கிறது, இருவரின் உழைப்பும் ஒருசேர திருப்திபடுத்தப்படுவதே ஒரு நல்ல சினிமாவாக இருக்க முடியும்.

பில்லா – 2 வினை பொருத்தவரையில் எனக்கு அந்த திருப்தி இருக்கிறது.

பில்லா – அச(ஜீ)த்தல்

டிஸ்கி :- ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், எதிர் தரப்பு ரசிகர்களின் விமர்சன தெளிப்புகளை பார்க்கையில் ”துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு” என்ற திருக்குறள் நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க இயலவில்லை J இதற்கு முடிவே இல்லையா

?இரவுவானம்



37 comments:

  1. ஆரம்பத்தில் வந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் பாசிடிவ் விமர்சனம் நிறைய வருது ............

    ReplyDelete
  2. /// வெளிநாட்டு படங்களில் இருந்து சீனை சுட்டுவிட்டார், வீடியோகேமில் இருந்து சுட்டுவிட்டார் என்று கூறுவதாக இருந்தால் தமிழ்சினிமாவின் ஆதிகாலம் முதல் அலச வேண்டி இருக்கும்,///

    வீடு மாம்ஸ்......... எங்கண்ணே ஐஸ் க்ரீம் கேட்டாருல ஏன் வாங்கி குடுக்கல ?

    ReplyDelete
  3. இருக்கட்டும் இருக்கட்டும்....

    #மச்சி... டெசோவப் பத்தி எங்க தலீவர் கொடுத்த பேட்டியைப் பாத்தியா? டீசல் வெலைய ஏத்தப் போறாங்களாம். கேட்டியா?

    இல்ல.... பொதுவாக் கேட்டேன்...

    ReplyDelete
  4. //லாஜிக் என்னும் மேஜிக் வஸ்துவை குறைந்தபட்சம் சைட்டிஷ்//

    சைடிஸ் இல்லாமதான் படம் பாத்திகளா??

    அதான் சும்மா குப்புன்னு ஆயிடுச்சி

    ReplyDelete
  5. //ரசிகர்களை செண்டர் பிரித்து //

    கொய்யால....பிரிச்சவனை பிடிச்சி பிரிக்கணும்

    ReplyDelete
  6. //”துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு என்ற திருக்குறல் நினைவுக்கு வருவதை//

    வரட்டும் வரட்டும்

    ReplyDelete
  7. அட எப்பப்பா முடியும் இந்த விமர்சன மழை?;-))

    ReplyDelete
  8. தெளிவான விமர்சனத்திற்கு என் நன்றி

    ReplyDelete
  9. அனேகமா சகரிய பாராட்டுன ஒரே ஆள் நீங்கதான்...ஹி ஹி

    ReplyDelete
  10. N.Mani vannan said...
    /// வெளிநாட்டு படங்களில் இருந்து சீனை சுட்டுவிட்டார், வீடியோகேமில் இருந்து சுட்டுவிட்டார் என்று கூறுவதாக இருந்தால் தமிழ்சினிமாவின் ஆதிகாலம் முதல் அலச வேண்டி இருக்கும்,///

    வீடு மாம்ஸ்......... எங்கண்ணே ஐஸ் க்ரீம் கேட்டாருல ஏன் வாங்கி குடுக்கல ?
    //////////////////////////////
    மணி! மாப்ளதான் பில்லாவுக்கு ஸ்பான்சர்...!இடைவேளையின் போது கோக் வாங்கிக் கொடுத்தாரு....!

    ReplyDelete
  11. ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என ரசிகர்களை செண்டர் பிரித்து ரசனையுள்ளவன், ரசனை குறைந்தவன் என பிரிப்பதை விட்டுவிட்டு படத்தினை அதன் தன்மைக்கேற்ற வகையில் ரசிக்க கூடிய மனப்பான்மையை உருவாக்க வேண்டிய அவசியம்
    ////////////////////////
    சி...சென்டர் ரசிகன் என்னா சொன்னான் பக்கத்து சீட்ல கேட்டியா..?கேட்டியா...?
    ஓமனேகுட்டிய ஆன்னு பார்த்திட்டு இருந்தா எப்படி கேட்கும்....மாப்ள!

    ReplyDelete
  12. ”துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு” என்ற திருக்குறல் நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க இயலவில்லை
    ///////////////////////
    திருக்குறள்தானே மாப்ள...!நல்லாவே வருது!

    ReplyDelete
  13. நீங்க சொன்ன மாதிரி அனைத்து தரப்பிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு சொதப்பியிருக்கிறார்கள். டான் ஆவது எப்படி என் டாக்குமெண்டரி தயாரித்தது போல் இருந்தது. பில்லா 1 -ல் மற்றவை பிடிக்காவிட்டாலும் கதையும் ,கேமிராவும் ஆடை வடிவமைப்பு, பேசும்படி இருந்தது.

    ReplyDelete
  14. இது ஒரு படம் .............இந்த அளவுக்கு தமிழர்கள் ரசனை தாழ்ந்து விட்டதே !!!!!!!!!!!!!

    ReplyDelete
  15. பரவாயில்லை மச்சி..பாஸிடிவா சொல்லி இருக்க...அப்புறம்...திருக்குறள் சொல்ல டிரை பண்ணி இருக்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அணில்களின் பிரச்சாரம் ஓய்ந்த பிறகே படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வருகின்றன. எனக்கு அந்த குறள்தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  17. @ அஞ்சா சிங்கம் said...
    ஆரம்பத்தில் வந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் பாசிடிவ் விமர்சனம் நிறைய வருது ............//

    ஆமாம் செல்வின் இப்பொழுது நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகிறது

    ReplyDelete
  18. @ N.Mani vannan said...

    அவரு கோன் ஐஸ் மட்டும்தான் சாப்பிடுவாராம்

    ReplyDelete
  19. @ வெளங்காதவன்™ said...
    இருக்கட்டும் இருக்கட்டும்....

    #மச்சி... டெசோவப் பத்தி எங்க தலீவர் கொடுத்த பேட்டியைப் பாத்தியா? டீசல் வெலைய ஏத்தப் போறாங்களாம். கேட்டியா?

    இல்ல.... பொதுவாக் கேட்டேன்...//

    ரெண்டுமே பொழுதுபோக்குதான மச்சி

    ReplyDelete
  20. @ மனசாட்சி™ said...
    //ரசிகர்களை செண்டர் பிரித்து //

    கொய்யால....பிரிச்சவனை பிடிச்சி பிரிக்கணும்//

    பிரிச்சது வீடு மாம்ஸ்தான்

    ReplyDelete
  21. @ மௌனகுரு said...
    Decent review//

    நன்றி வருண்

    ReplyDelete
  22. @ காட்டான் said...
    அட எப்பப்பா முடியும் இந்த விமர்சன மழை?;-))//

    ஏன் மாம்ஸ் ஜல்ப்பு புடிச்சிருச்சா

    ReplyDelete
  23. @ அரசன் சே said...
    தெளிவான விமர்சனத்திற்கு என் நன்றி//

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்கநன்றி சார்

    ReplyDelete
  24. @ மயிலன் said...
    அனேகமா சகரிய பாராட்டுன ஒரே ஆள் நீங்கதான்...ஹி ஹி//

    அப்படியா மயிலன் தெரியலியே :-) உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  25. @ வீடு சுரேஸ்குமார் said...
    ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என ரசிகர்களை செண்டர் பிரித்து ரசனையுள்ளவன், ரசனை குறைந்தவன் என பிரிப்பதை விட்டுவிட்டு படத்தினை அதன் தன்மைக்கேற்ற வகையில் ரசிக்க கூடிய மனப்பான்மையை உருவாக்க வேண்டிய அவசியம்
    ////////////////////////
    சி...சென்டர் ரசிகன் என்னா சொன்னான் பக்கத்து சீட்ல கேட்டியா..?கேட்டியா...?
    ஓமனேகுட்டிய ஆன்னு பார்த்திட்டு இருந்தா எப்படி கேட்கும்....மாப்ள!//

    மாம்ஸ் கேட்டு சொன்னதே நாந்தான், புருனாவுக்கே நீங்க ஆஃபாகிட்டீங்க :-)

    ReplyDelete
  26. @ ezhil said...
    நீங்க சொன்ன மாதிரி அனைத்து தரப்பிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு சொதப்பியிருக்கிறார்கள். டான் ஆவது எப்படி என் டாக்குமெண்டரி தயாரித்தது போல் இருந்தது. பில்லா 1 -ல் மற்றவை பிடிக்காவிட்டாலும் கதையும் ,கேமிராவும் ஆடை வடிவமைப்பு, பேசும்படி இருந்தது.//

    ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பீலிங் மேடம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. @ nmaiyalan said...
    July 17, 2012 11:45 PM
    இது ஒரு படம் .............இந்த அளவுக்கு தமிழர்கள் ரசனை தாழ்ந்து விட்டதே !!!!!!!!!!!!!//

    ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பீலிங் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. @ கோவை நேரம் said...
    பரவாயில்லை மச்சி..பாஸிடிவா சொல்லி இருக்க...அப்புறம்...திருக்குறள் சொல்ல டிரை பண்ணி இருக்க...வாழ்த்துக்கள்...//

    ஆமாம் மச்சி ரெண்டாவது வரி மறந்து போச்சு நீ சொல்லேன்.

    ReplyDelete
  29. @ பாலா said...
    அணில்களின் பிரச்சாரம் ஓய்ந்த பிறகே படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வருகின்றன. எனக்கு அந்த குறள்தான் நினைவுக்கு வருகிறது.//

    வாங்க பாலா, முன்னைவிட பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்பொழுது நிறையவே வருகிறது, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  30. படம் எடுக்கும் போது லாஜிக் என்னும் மேஜிக் வஸ்துவை குறைந்தபட்சம் சைட்டிஷ் அளவுக்காக உபயோகித்திருந்தால் கூட இன்னும் அதிகம் பேரை கவர்ந்திருக்கலாம்.//
    மன்னிக்கவும். குறைந்தபட்சம் கொஞ்சப் பேரையாவது கவர்ந்திருக்கலாம்.. எந்தவித சார்புமின்றி படம் பார்த்த பெரும்பான்மையானவர்களுக்கு இது ரொம்ப மொக்கை பாஸ்..

    ReplyDelete
  31. @ Robert said...
    படம் எடுக்கும் போது லாஜிக் என்னும் மேஜிக் வஸ்துவை குறைந்தபட்சம் சைட்டிஷ் அளவுக்காக உபயோகித்திருந்தால் கூட இன்னும் அதிகம் பேரை கவர்ந்திருக்கலாம்.//
    மன்னிக்கவும். குறைந்தபட்சம் கொஞ்சப் பேரையாவது கவர்ந்திருக்கலாம்.. எந்தவித சார்புமின்றி படம் பார்த்த பெரும்பான்மையானவர்களுக்கு இது ரொம்ப மொக்கை பாஸ்..//

    வாங்க ராபர்ட் நலமாக இருக்கிறீர்களா? நான் ஏற்கனவே மேலே சொன்னதுதான், ஓவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பீலீங், ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபட்டது, எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்காமலும் இருக்கலாம், அதில் ஒன்றும் தவறில்லை, இதற்கு எதற்கு மன்னிப்பு? நான் சார்புநிலையில் எழுதவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? பின்னால் புரட்டி பாருங்கள் காவலன் படத்தை நன்றாக உள்ளது என்று புகழ்ந்து எழுதியிருப்பேன், என்னை பொறுத்தவரையில் பிடித்திருந்தால் பிடித்தது பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை என்று தெளிவாக எழுதுவேன், புரிதலுக்கு நன்றி ராபர்ட்.

    ReplyDelete
  32. மேக்கிங் எனக்கு பிடிச்சிருக்கு..அடுத்தவருக்கு பிடிப்பது என்பது அவரவர் ரசனை சார்ந்தது...அட்டகாசமா புட்டு புட்டு வச்சிருக்க மாப்ளே!

    ReplyDelete
  33. அஜித் - இந்த ஒருத்தருக்காக படம் பாக்கலாம்.

    ReplyDelete
  34. இந்த படம் நல்லா இருக்குன்னு சொன்ன முதல் விமர்சனத்தை இப்பத்தான் படிக்கிறேன்.

    ReplyDelete
  35. இறுதியாக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி பலபேருடைய உழைப்பினை கொட்டி உருவாக்கும் படத்தினை மொக்கை என்ற ஒருவார்த்தையில் ஒதுக்குவது தவறுதான், அதே சமயத்தில் காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனின் பணத்திலும் அதே அளவு உழைப்பு இருக்கிறது, இருவரின் உழைப்பும் ஒருசேர திருப்திபடுத்தப்படுவதே ஒரு நல்ல சினிமாவாக இருக்க முடியும்.
    முற்றிலும் உண்மை!......அழகிய விமர்சனதிற்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!