Thursday, August 16, 2012

கமர்சியல் பக்கங்கள் - 16/08/2012



நாட்டின் 66 ஆவது சுதந்திரதினம் நாடுமுழுக்க நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது, ஒவ்வொரு சுதந்திரதினத்தன்றும் நாட்டுப்பற்று பெருக ஒவ்வொருவரும் தேசியக்கொடியை சட்டை பையில் குத்திக் கொள்வதும், வண்டிகளில் ஒட்டி வைப்பதும், பள்ளிகளில் தோரணமாக தொங்கவிடுவதும் வழக்கமான செயல்தான், ஆனால் அடுத்த நாள், அடுத்தடுத்த நாட்களில் பார்த்தால் அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடிகள் வீதியெங்கும் இறைந்துகிடப்பதும், சாலைகளில் பறப்பதும், சாக்கடைகளில் விழுந்துகிடப்பதும் வருடம்தோறும் காணக்கிடைப்பது வருத்தப்பட வேண்டிய நிகழ்வாகும்.

நாட்டின் தேசியக்கொடி எவ்வளவு புனிதமானது, பயன்படுத்திவிட்டு வீசியெறிய இது என்ன தண்ணீர் பாக்கெட்டா? சுதந்திரதினம் முடிந்தவுடன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கமுடிந்தால் மட்டுமே தேசியக்கொடியை வாங்க வேண்டும், இல்லையென்றால் இந்தியன் என்ற உணர்வு மனதில் இருந்தாலே போதுமானது, அதைவிடுத்து தேசப்பற்றை காட்டுகிறேன் என தேசியக்கொடியை வாங்கிவிட்டு காற்றில் வீசியெறிவது அநாகரீகமான செயல்.

டிவி நிகழ்ச்சிகள் :-

வழக்கம்போலவே டிவிநிகழ்ச்சிகள் முழுவதும் திரைநட்சத்திரங்களே ஆக்கிரமித்து தேசப்பற்றினை காட்டிக் கொண்டிருந்தார்கள், சுதந்திரத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஒரு நிகழ்ச்சியில் டிவி நட்சத்திரங்களிடம் சுதந்திரம் பற்றிய கேள்வி கேட்டு கொண்டிருந்தார் இமான் அண்ணாச்சி, N.S.C போஸ் என்ற பெயரில் அந்த N.S.C எதை குறிக்கிறது என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் அவர் யார் என்றே தெரியாது என கூறிவிட ஒருவர் மட்டும் நேஷனல் சுபாஸ் சந்திர போஸ் என சொன்னது காலக்கொடுமை 

இதற்கிடையில் புதிய தலைமுறை டிவியை சென்னையில் தெரியவிடாமல் சன்குழுமம் எஸ்.சி.வி தடுப்பதாக புலம்பிக் கொண்டிருந்தார்கள், என்னதான் தடுத்தாலும் புதிய தலைமுறை நிகழ்ச்சிகளுக்கு தனியே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது, இருட்டடிப்பு செய்தாலும் மக்கள் மீண்டும் சன்நியூசுக்கு திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது போலருக்கே !!!

சி.எம் செல் :-

மக்களின் குறைகளை தீர்க்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது, கோரிக்கைகளை பதிய புதிய பயனாளர் பகுதியில் முழு முகவரியையும் பதிய வேண்டும், பிறகு உள்நுழைவு, கடவுசொல்லை பயன்படுத்தி மக்களின் குறைகளை பதியலாம்.




ஒரிஜினல் நடுநிலைவாதி


எதிர்பார்க்கும் மொக்கை படம்

திடீர்னு ஒருநாள் பார்த்தா திருப்பூர் முழுக்க அண்ணனோட போட்டோதான் சும்மா பிளக்சுல டுப்பாக்கியோட பளபளன்னு மின்னுராரு, ஒருஎடம் பாக்கியில்ல, ஏறகுறைய 15 கிலோமீட்டர் ரவுண்ட் அப் பண்ணி ஒட்டியிருந்தாங்க அண்ணனின் விழுதுகள், யாருய்யா நியி? இத்தன நா எங்கிருந்த? திடீர் திடீர்னு எங்கிருந்துய்யா வரீங்க?ன்னு நெம்ப குழப்பமா இருந்துச்சு, அப்புறம்தான் தெரிஞ்சது அண்ணன் சின்னம்மாவோட அக்கா பையன் பாஸ் என்கிற பாஸ்கரன்தானாம், நடிச்சு மொதபடம் வெளிவரல்ல, அதுக்குள்ள ரசிகர் மன்றம், பிளக்ஸ்ல விளம்பரம்னு, ம்ம்ம் கலக்குங்க பாசு, படத்து பேரே தலைவனாம்.


தாய் மண்ணே வணக்கம்



நான் இப்பொழுது சுதந்திர பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், சுதந்திரம் இல்லாத அடிமைபூமியில் வாழ்ந்து எதிர்கால நாட்டின் மக்களுக்காக சுதந்திரத்திற்காக போராடிய என் நாட்டின் அனைத்து முன்னோர்களையும், போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் இக்கணத்தில் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியநாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் 66 ஆவது சுதந்தர தின நல்வாழ்த்துக்கள், ஜெய்ஹிந்த்..!


11 comments:

  1. கதம்பம்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. நடுநிலைவாதி போட்டோ அருமை.... ஃபேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்கிறேன்...

    இந்த ஸ்டைல் பின்னூட்டப்பெட்டி எல்லா முறையும் சரியாக Load ஆவதில்லை... முடிந்தால் வேறு ஸ்டைலுக்கு மாற்றவும்...

    ReplyDelete
  3. ஹஹஹா சூப்பர் ஆமா இவங்க நடிக்கிற படத்த முதல்ல இவனுங்க பார்பார்கள என்னமோ போங்கோ

    ReplyDelete
  4. அந்த துப்பாக்கி பையன் திருப்பூர் மொதலாளி பையன் என்று சொன்னார்களே?

    ReplyDelete
  5. நடுநிலைவாதிகள் என்பது இப்படித்தான் என்பதை ”நடுசென்டர்கள்” என விளிக்கும் ”மா”க்கள் புரிந்து கொண்டால் சரி!

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு! நன்றி! நடுநிலைவாதி ரொம்பவே ரசித்தேன்!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
  7. அருமையான விழிப்பூட்டும் பகிர்வு.(தேசியக் கொடி பற்றி சொன்னது.)கதம்பம் மணத்தது!

    ReplyDelete
  8. சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது.

    ReplyDelete
  9. நட்ட நடு செண்டரின் ஒரு மகன் திமுக ஒரு மகன் ஆதிமுக என நினைக்கிறேன்

    ReplyDelete
  10. மச்சி என்னப்பா நீயு கமர்ஸியல் பக்கம்னா ஹாட்டா ஏதாவது வேணாமா பூட்டகேஸுங்களே கில்மா தேடுதுக நாமெலாம் யூத் இல்லையா?

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!