அரசியல்
காத்தடிக்குது
காத்தாடி சுத்துது
கரண்டு வருது
அந்தம்மானாலயா
காத்து வருது? கேட்டா நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைங்கறாங்க
நேற்று கேப்டன்
டிவியில் திராணியார் பிரச்சாரம்.
சாலைவிதிகள்
திருப்பூர்ல எல்லா
சிக்னல்லயும் மைக்க கட்டி சாலைவிதிகள்னா என்ன? என்னென்ன விதிகள் இருக்குது? அதை எப்படி
கடைபிடிக்கனும்? அதில் பொதுமக்களோட பங்கு என்ன? அப்படிங்கறத
ரெக்கார்டு பண்ணி எல்லா சிக்னல்லயும் நாள் முழுக்க ஒளிபரப்பிட்டு இருக்காங்க
காலைல இருந்து
சாயங்காலம் வரைக்கும் வண்டி ஓட்டுற ஒவ்வொருத்தரும் ஒரு நிமிசமாவது இதை கேட்காம போக
முடியாது, ரொம்ப நல்ல விசயம், இதுனால கொஞ்சமாவது மக்களுக்கு சாலைவிதிகள் பற்றி விழிப்புணர்வு
வந்தா சந்தோசம், இந்த ஐடியாவ ஏன் மற்ற மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிங்களும்
அறிமுகபடுத்தக்கூடாது?
மாட்டுனா
ஜெயிலுதாண்டி
கோயமுத்தூர்ல குடிச்சிட்டு
வண்டி ஓட்டுனா ஸ்பாட் பைன் மட்டுமல்லாம 15 நாள் ஜெயில்ன்னு வேற ரூல்ஸ போட்டு இருக்காங்க,
கோவைல மட்டுமல்லாம இப்ப திருப்பூர்லயும் இந்த ரூல்ஸ் வந்திருச்சு, ஜனங்க சாப்பிடாம
கூட இருப்பாங்க சரக்கடிக்காம இருக்க சான்சே இல்லை, அதுவும் சனிக்கிழமை நைட்டுன்னா சம்பள நாள் வேற, ஜே
ஜேன்னு சும்மா கூட்டம் கட்டி அள்ளும் டாஸ்மாக்ல
திருப்பூர் மாநகர
குடிஜனங்களே பார்த்து சூதானமா இருந்துக்கங்க, வெள்ளிகிழமை எல்லாம் சிக்குனா சனி ஞாயிறு
மூணு நாள் ஜாமீன் கூட கிடைக்காது.
என்ன நடக்குது அங்க !!!
கேரளாவில் சொந்த
வீடு இல்லாத ஆட்களே இருக்க கூடாது, நிலம் இல்லாதவர்களுக்கு இலவச நிலம், வீடு கட்ட லோன்.
கலப்பு மணம் புரிந்தால்
ரூபாய்.50,000
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
மட்டுமே பான்பராக், குட்கா, புகையிலை, மது போன்ற போதை பொருட்கள் விற்க வேண்டும்
முதலமைச்சரின்
அலுவல்கள் நேரடி ஒளிபரப்பு
அரசு அலுவலர்கள்
வேலை நேரங்களில் மொபைலில் பேச தடை
என்னதான்யா நடக்குது
கேரளாவுல? நாம இந்தியாவுலதான் இருக்கமா?
கோவை பதிவர்
சந்திப்பு
ஸ்கூல்ல, காலேஜ்ல,
அக்கம் பக்கத்துல, வேலை செய்யுற இடங்கள்ள இப்படி எல்லா இடத்துலயும் நமக்கு பிரண்ட்ஸ்
கிடைப்பாங்க, ஆனா அப்படி கிடைக்குற எல்லா பிரண்டுமே நம்ம எண்ணஓட்டத்துக்கு தக்கபடியா,
நம்ம வேவ் லெந்த்துக்கு செட்டாகுற மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.
ஆனா இந்த இணையம்
மூலம் கிடைக்குற பிரண்ஸ்சுக இருக்காங்களே, நமக்கு பிடிச்சவங்களா? நம்ம கூட செட்டாகுற
பிரண்ட்ஸ்ஸா இருப்பாங்க, அப்படி பட்டவங்கள நாமளே ஈசியா தேர்ந்தெடுத்துக்கலாம், மேல
சொன்ன பிரண்ஸ்சுக கூட வேணா சண்டை சச்சரவுகள், ஈகோ, துரோகம்னு நடக்கலாம், ஆனா இணையம்
மூலம் கிடைக்குற பிரண்ஸ்சுக கூட அப்படி நடக்க சான்சே இல்லை, ஓரிரண்டு விதிவிலக்குகள்
எங்கேயும் இருக்கலாம்.
அப்படி வலைத்தளம்,
பேஸ்புக், டிவிட்டர், பிளஸ்சுன்னு எழுத்தின் மூலம் மட்டுமே அறிமுகம் ஆன நண்பர்களை நேரில்
சந்திக்கனும், பேசனும், பழகனும்னு எல்லோருக்கும் ஆசை இருக்கும், அப்படி தமிழகம் முழுக்க
சென்னை, ஈரோடு, நெல்லை, மதுரைன்னு அடிக்கடி சந்திச்சு நட்பை வளர்த்தி இருக்காங்காங்க,
எல்லா சந்திப்பிலயும் போக முடிந்த நண்பர்கள் சென்று கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே மாதிரி கோவையிலும்
பதிவர்கள் சந்திப்பு நடத்தனும், எல்லாரையும் அழைக்கனும்னு எங்களுக்கும் ஆசை இருந்தது,
அதற்கு முதல் அடித்தளமா நேற்று கோவை பதிவர்களோட முதல் சந்திப்பு வெற்றிகரமா நடந்து
முடிஞ்சது, கூடிய விரைவிலேயே எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு பிரம்மாண்டமான
சந்திப்பினில் கலந்து கொள்வோம்.
சாம்பு மவனே
என்னை மாதிரியே இருக்கியேடா
படித்ததில் பிடித்தது.
சாலைகளில் பேய்தனமாக
வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள், அவர்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பன போன்றவற்றை சொந்த
அனுபவத்தின் மூலம் தெளிவாக உரைக்குபடி எழுதி இருக்கிறார், திரு, ஜோதிஜி அவர்கள்.
நேரம் இருப்பின்
படித்து பார்க்கவும்.
வீடியோ
இந்தியாவுல பாதி ரியாலிட்டி ஷோல இதான் நடக்குது போலருக்கு, ஆனாலும் பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா நம்மாளுங்க பாயுற பாய்ச்சல் இருக்கே அப்பப்பா !!!
வணக்கம் மப்லே ச்சே மாப்ளே
ReplyDelete//இந்த ஐடியாவ ஏன் மற்ற மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிங்களும் அறிமுகபடுத்தக்கூடாது?//
ஒ இது தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பாங்கலோ
பாவம் நம்ம கேப்டன் படத்திலேயே நொந்து போய் நிக்காரு
ReplyDelete//மாட்டுனா ஜெயிலுதாண்டி//
ReplyDeleteஆமா மாப்ளே பி கேர் புல்
//என்ன நடக்குது அங்க !!!//
ReplyDeleteமெய்யாலுமா வெளங்கிடும்
//கோவை பதிவர் சந்திப்பு//
ReplyDeleteமாப்ளே வாய்யா கட்டிங் போட்டு பொலம்புவோம்....முடியலேன்னு
15நாளா....அட சொக்கா...இது என்ன சோதனை..!ஓ...இதுதான் ஓராண்டு சாதனையா...?வௌங்கிரும்! தேனை எடுக்கனுமாம் புறங்கைய நக்கக்கூடாதாம்...கேட்டுக்கங்க....!
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteஉங்களை எதிர்பார்த்தேன்.
அடுத்த மீட்டிங்கிற்க்கு கட்டாயம் வந்து விடுங்கள்.
// மனசாட்சி™ said...
ReplyDeleteவணக்கம் மப்லே ச்சே மாப்ளே //
வணக்கம் மாம்ஸ், எப்படி இருக்கீங்க?
//பாவம் நம்ம கேப்டன் படத்திலேயே நொந்து போய் நிக்காரு//
துப்பாக்கிய எங்க வச்சிருக்காருன்னு பார்த்தீங்கள்ள பீ கேர்புல் நான் உங்கள சொன்னேன் :-)
//மெய்யாலுமா வெளங்கிடும்//
மாம்ஸ் என்ன கண்டிசன்ல இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே வெளங்கிருச்சு :-0
//மாப்ளே வாய்யா கட்டிங் போட்டு பொலம்புவோம்....முடியலேன்னு//
நல்ல பாரின் சரக்கா வாங்கிட்டு வாங்க மாம்ஸ்
//வீடு சுரேஸ்குமார் said...
ReplyDelete15நாளா....அட சொக்கா...இது என்ன சோதனை..!ஓ...இதுதான் ஓராண்டு சாதனையா...?வௌங்கிரும்! தேனை எடுக்கனுமாம் புறங்கைய நக்கக்கூடாதாம்...கேட்டுக்கங்க....!//
தல உங்க பீலீங்ல நானும் பங்கெடுத்துக்கறேன்
@ உலக சினிமா ரசிகன் said...
ReplyDeleteநண்பரே!
உங்களை எதிர்பார்த்தேன்.
அடுத்த மீட்டிங்கிற்க்கு கட்டாயம் வந்து விடுங்கள்.//
எதிர்பாராத வேலையினால் வரமுடியவில்லை சார், அடுத்த மீட்டிங் கண்டிப்பா கலந்துக்கிறேன், நன்றி சார்
அரசாங்கம் வாழவும் விடமாட்டேன்குது சாகவும் விடமாட்டேன்குது.. அதாங்க.. கடையையும் ஓபன் பண்ணி வச்சிட்டு குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடதுனா, பேசாம அரசாங்கம் சரக்க வீட்லயே டெலிவரி பன்னிருலாமல.. vision 2025 ல இத சேத்துக்க சொல்லணும்.
ReplyDelete@ கோவி said...
ReplyDeleteவாங்க புரொபசர் சார், உங்களுக்கு புரியுது, அவங்களுக்கு புரிய மாட்டெங்குதே
வெளங்கிரும் போங்க....
ReplyDelete