நானும் பஸ்ல போகும்போது எல்லாம் பார்க்குறேங்க, அது டவுன் பஸ் ஆகட்டும் இல்ல மப்சல் வண்டியாகட்டும், கடைசி படிக்கட்டுக்கு முன்னாடி இருக்கற சீட்டு முதியோர் அல்லது உடல் ஊனமுற்றோருக்காகன்னு எழுதி இருக்கும், ஆனா அந்த சீட்டை பார்த்தீங்கன்னா பஸ்ஸோட பின் சக்கரத்துக்கு மேலே இருக்கும், அதனால பஸ்சுக்கு உள்ளே சின்ன படி மாதிரி இருக்கும், அந்த சீட்டு மேல ஏறி உட்காரணும்னா அந்த படி மாதிரி இருக்கரதுக்கு மேல ஏறி போகனும், அதிலயும் சில பஸ்ஸில அதுக்கு முன்னாடி இருக்கர சீட் ரொம்ப நெருக்கமா வேற இருக்கும், இதுல என் டவுட் என்னன்னா ஒரு முதியவரே அல்லது உடல் ஊனமுற்றவரோ இந்த சீட்டுல எப்படி உட்காருவாங்க, அவங்க சரியா நடக்க முடியாதவங்களா கூட இருக்கலாமில்ல, அல்லது கால் சரியா வராதவங்களா கூட இருக்கலாம், பொதுவா இந்த சீட்டுல வயசானவங்க யாரும் உட்காருவதில்லை மத்தவங்கதான் உட்காரராங்க, இதுக்கு பதிலா கடைசில இருக்கர கண்டக்டர் சீட்டையே கொடுக்கலாம், மப்சல் வண்டில கண்டக்டர் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல உட்கார்ரதைத்தான் விரும்பராரு,
இதுக்கு அரசாங்கம்தான் ஏதாவது பண்ணனும், முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள்னு இருந்ததை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைனு மாத்திட்டாங்க, அப்படியே அவங்க அந்த சீட்டுல எப்படி உட்காருவாங்கன்னும் எழுதி வைச்சுட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.
You have made a good observation. Last seat is also not good, it will make you jump up from the seat and fall abruptly for every hump on the road, not suitable for old/invalid people. Other good alternative seat should be provided.
ReplyDeleteammmappa nalla solllungo
ReplyDeleteநன்றி ஜெயதேவ், நன்றி ரிஷிகேசவ்
ReplyDelete