கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், எஞ்ஜினியரிங் கம்பெனிகள் போன்றவற்றை நடத்தி வரும் பல பெரும் பணக்காரர்கள் உள்ளனர், கோவையின் பாதி பகுதி இவர்களுடையதே, குறைந்த பட்சம் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம்வரை இவர்களின் மேற்படி நிறுவனங்கள் அமைந்திருக்கும், உதாரணமாக சின்னியம்பாளையம், பீளமேடு முதல் காந்திபுரம் பேருந்து நிலையம் வரை P.S.G நிறுவனத்திற்கு சொந்தமானது, பீளமேட்டின் ரோட்டின் இரு புறங்களிலும் அவர்களின் கல்வி நிறுவனம் உள்ளது, இந்த பக்கம உள்ள மாணவர்கள் மறுபுரம் உள்ள கல்வி நிறுவனத்திற்கு செல்ல அவினாசி ரோட்டின் ந்டுவே பாலமே கட்டி உள்ளனர், இதற்கு அரசு எவ்வாறு அனுமதி அளித்தது என்பது அவர்களூக்கு மட்டுமே தெரியும், இது மெயின் ரோட்டில் நமக்கு காணக் கிடைப்பது மட்டுமே, மேலும் கோவையின் புற நகர் பகுதிகளில் எவ்வளவு சொத்து கிடக்குமோ, அது ஆண்டவனுக்கே வெளிச்சம், இவ்வாறு மாபெரும் பணக்காரர்களாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் தன்மை கொண்ட, மனம் கொண்ட நல்ல உள்ளங்களை கொண்டுள்ளவர்கள் மிகவும் குறைவான பேர்களே உள்ளனர், இத்தனை சொத்துக்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களிடம் உள்ள அதிகப்படியான பணத்தை கொண்டு சிறிது மற்றவர்களுக்கும் உதவலாமே? என்பதுதான் என் கேள்வி? சரி அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்கள் இஷ்டப்படி செலவழிப்பார்கள், அதை குறை கூற உனக்கு என்ன உரிமை உள்ளது? எனக் கேட்கிறீர்களா? அது சரிதான் அதை பற்றி குறை கூற எனக்கு ஒரு உரிமையும் இல்லை, ஆனால் இவர்களுக்கு மத்தியில் சில மாறுபட்ட மனிதர்கள் உள்ளனர், அவர்களை பற்றி எழுதுவது மட்டுமே என் நோக்கம். வேறு யாரையேனும் இப்பதிவு பாதித்தால் மன்னிக்கவும், இந்த சாந்தி - சோஷியல் சர்வீஸ் அமைப்பினை பற்றி முன்பே பலர் அறிந்திருக்கலாம். அறிந்திருக்காதவர்களுக்காகவே இந்த பதிவு.
கோவையில் சாந்தி என்ஜினியரிங் கம்பெனி 1969 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, பின்னர் கியர் தயாரிப்பில் இறங்கி தற்பொழுது ஆறு யூனிட்களை கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இவர்களின் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பு 1996 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சோஷியல் சர்வீஸ் அமைப்பின் மூலம் வறுமையில் உள்ள நன்றாக படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பது, மிகவும் பின் தங்கிய கிராமப்பகுதிகளில் ரோடு வசதியினை ஏற்படுத்துவது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
இதைவிட முக்கியமாக இவர்களின் பார்மசி பிரிவில் அனைத்து மருந்துகளுக்கும் 18% டிஸ்கவுண்ட் அளிக்கிறார்கள், வேறு எந்த மெடிக்கலிலும் இந்த அளவு டிஸ்கவுண்ட் கிடைக்காது, 1000 ரூபாய்க்கு மருந்து வாங்கினால் 180 ரூபாய் மீதம் ஆகும், மாதம் பத்தாயிரம், இருபதாயிரத்துக்கு மருந்து வாங்குபவர்கள் நம்மிள் சிலர் இருக்கலாம், அவர்கள் இந்த மெடிக்கலில் வாங்கினால் ஒரு குறிப்பிட்ட தொகை நிச்சயமாக மிச்சம் ஆகும், உங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மருத்துவ செலவு அதிகமாக இருந்தால் சிறிதளவாவது குடும்பச் சுமை கொஞ்சம் குறையும், நம்மிள் சிலரோ அல்லது நமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிளோ இதய நோய், கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது வயதானவர்களோ இருக்கலாம், அவர்களிடம் இதனை பற்றி எடுத்துக் கூறினால் நிச்சயம் பயன் அடைவார்கள். இவர்களிடம் எல்லா மருந்துகளும் உள்ளன, பெரிய பார்மசிதான், ஒருவேளை ஸ்டாக் இல்லை என்றால் கூட, உங்களின் போன் நம்பர், முகவரி எல்லாம் வாங்கி கொண்டு ஒரு டோக்கன் தந்துவிடுவார்கள், மருந்து வந்தவுடன் போன் செய்து தகவல் சொல்லுவார்கள், மேலும் இவர்கள் இரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே போன்றவற்றையும் மிக குறைந்த விலையில் செய்து தருகிறார்கள்.( இவர்களின் இந்த பணியின் காரணமாக உள்ளூர் பார்மசிகாரர்கள் பிரச்சனை செய்தது வேறு கதை )
சாந்தி சோஷியல் சர்வீஸ், கோவை சிங்கநல்லூர் திருச்சி சாலையில் உள்ளது, சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது. வெளியூர்காரர்களும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கநல்லூர் வந்து இறங்கினால் எளிதில் அடையாளம் காணலாம்.
மேலும் விபரங்களுக்கு. http://shanthisocialservices.org/ பார்க்கவும்.
இவர்கள் தற்பொழுது, குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக உணவகம் அமைக்கும் பணியினை செய்து வருகிறார்கள், இவர்களின் அலுவலகத்தில், மனிதர்களுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்வதற்கு சமமாகும் என்று எழுதி வைத்து உள்ளார்கள். உண்மைதான்.
ரொம்ப நன்றி ராபின் சார்.
ReplyDeleteநல்ல தகவல்.. நன்றி... நான் ஷேர் செய்கிறேன்...
ReplyDeleteசாந்தி நிர்வாகத்தினரின் பாராட்டுக்குறிய சமூக சேவைகளில், இன்னபிற - தகுதியான பள்ளிகளில் வகுப்பறைகள், இலவச சாலை வசதி....
ReplyDeleteசாந்தி நிர்வாகத்தைப் பாராட்டும் போது, மற்றவரைப் பற்றியும், அவர்களின் சேவைகளைப் பற்றியும் தெரியாமல், அவதூறு செய்துள்ளீர்! கோவையில் சாந்திக்கு முன்னோடிகள் நிறைய! மற்றவர்களின் சேவைகளைப் பற்றி தீர விசாரித்து எழுதவும்!
சாந்தி சேவைகளின் பால் தாங்கள் கொண்டுள்ள அபிமானம், மற்றவரின் மேல் உள்ள காழ்ப்பு - தாங்கள் சா(ந்)தி அபிமானம் மிக்கவர் என்பதை பறை சாற்றுகிறது!
கோவையின் வரலாறு தெரியாமல், விஷம செய்கையில் ஈடுபடாதீர்!
பாருங்கள், உள்ளூரிலேயே இருக்கும் எனக்கே இந்த தகவல்கள் புதிதாக இருக்கிறது. விளம்பரம் இல்லாமல் நடக்கும் இந்தப்பணி வாழ்க. இந்த்த் தகவலைக்கொடுத்த நீரும் வாழ்க.
ReplyDeleteமிக நல்ல பதிவு...
ReplyDeleteவளர்க சாந்தி தொண்டு நிறுவனங்கள்..
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்லது செய்பவர்களை கண்டிப்பாக பாராட்டனும்
மிகவும் நன்றி தமிழ்பறவை
ReplyDeleteரம்மி அவர்களே நான் பிறரை எதுவும் குறை சொல்லவில்லை எனக்கு தெரிந்த்தை மட்டுமே பகிர்ந்து உள்ளேன்,உங்களுக்கு தெரிந்தவர்களை பற்றி நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம், எனது இதற்கு முந்தைய பதிவிலும் இந்த கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளேன், நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் என் நன்றிகள், மற்றபடி எதற்காக நீங்கள் சாதி சாயம் பூசுகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை, உங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteமிகவும் நன்றி கந்தசாமி சார்.
ReplyDeleteமிகவும் நன்றி பயணங்களும், எண்ணங்களும்.
ReplyDeleteகண்டிப்பாக பாராட்ட வேண்டும் பிரியமுடன் பிரபு சார். மிகவும் நன்றி.
ReplyDeleteநான் பலமுறை சென்றிருக்கிறேன். இது கோவையில் இருந்து பல்லடம் சாலையில் செல்பவர்களுக்கு மட்டுமே பயன் படுகிறது மற்ற முக்கிய சாலைகளில் இது உள்ளதா என்று தெரியவில்லை.இருந்தால் நலம்.
ReplyDeleteரம்மி அவர்களே சாதி அபிமானம் குறித்து நாம் பேசுவோமானால் அதன் "ஆதி" குறித்தும் பேச வேண்டும்.
தங்களது நிறுவனங்களில் "தங்கள்" சாதியினரை மட்டுமே வேலைக்கு அமர்த்துவது. மூன்றாமவர் முன்பு "தங்களது" மொழியில் மட்டுமே பேசிக்கொள்வது என்று இதைத் தொடங்கியவர்கள் யார்? அதை சொன்னீர்கள் என்றால் இது குறித்து விவாதிக்க முடியும்.இந்த துவக்க கால சாதி அபிமானம் தான் மற்றவர்களையும் சாதி அபிமானத்துக்குள் தள்ளியது. இப்பொழுது போட்டி கடினமாகிவிட்டது எனவே பழைய ஆட்கள் திணறுகிறார்கள் தங்களது அபிமானத்தை தக்கவைக்க முடியாமல். பி எஸ் ஜி நிறுவனத்துக்கு மட்டும் எப்படி அனுமதி வாங்கினார்கள் என்பது அந்த நாள் ஆண்டவர்களுக்கே வெளிச்சம்
@செந்திலான்
ReplyDeleteநன்றி செந்திலான் சார், அந்த மெடிக்கல் பிரிவுக்கு வேறு கிளைகள் இல்லை, அவர்கள் அதை சமுதாய தொண்டாக செய்து வருகிறார்கள், இப்பொழுது புதிதாக உணவகம் ஒன்றினை ஆரம்பித்து மிகவும் குறைந்த விலையில் உணவினை வழங்கி வருகிறார்கள், ரம்மி அவர்கள் கூறியதை பெரிதாக நினைக்க வேண்டாம்...