Statutory Warning : இந்த பதிவு முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.
நானும் பிளாக் ஆரம்பிச்சு ஒருவாரம் ஆகுது, நாமழும் பிரபல பதிவரா ஆகனும்ன்னு முடிவு பண்ணி என்ன எழுதலாம்னு 3 வேளை நல்லா சாப்பிட்டுட்டு படுத்துகிட்டே யோசனை பண்ணி பார்த்தேன். ஒன்னும் வேலைக்கு ஆகலை, இப்பத்தாங்க தெரியுது பிரபல பதிவர்களோட நிலமை, சரி நம்ப பிரண்டுகிட்ட போய் கேட்போம்னு கேட்டேன், என்னடா பண்ணறதுன்னு?, அவன் கேட்டான், சரி உன்னோட பிளாக் பேர் என்னன்னு? நானும் இரவுவானம்னு சொன்னேன், அவன் பேசாம உன் பிளாக் பேரையே பிரபல பதிவர்னு மாத்திருனு சொன்னான்! இதுக்கு நாம சரிப்பட்டு வரமாட்டம், நாமளே சொந்தமா யோசனை பண்ணிக்குவேம்னு வந்துட்டேன்.
(பையா கார்த்தி மாதிரி...)
நான் எப்படி எல்லாம் வெட்டியா இருந்தேன், இதுக்கு முன்னாடி நான் யோசனை பண்ணி பார்த்திருக்கயாடா? இப்ப எல்லாமே வேற மாதிரி இருக்கு, சும்மா தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு.
சரி பிரபல பதிவர்கள் எல்லாம் எப்படி பிரபலமானாங்கண்ணு பார்த்து நாமலும் அதே மாதிரி பிரபலம் ஆயிரலாம்னு முடிவு பண்ணி இண்ட்லி, தமிழ்மணம்னு ஒன்னுவிடாம படிச்சு பார்த்தேங்க, அப்பத்தான் தெரிஞ்சது, நம்ம டாக்டர் ஐயாவ பத்தி பதிவு எழுதுனா சும்மா ஹிட்ஸ் அள்ளும்னு.
சரி அதான் நம்ம டாக்டரோட காவலன் படம் தீபாவளிக்கு வருதே, காவலன் ரொம்ப கேவலன்னு ஒரு பதிவு எழுதி நாமழும் தீபாவளியோட பிரபல பதிவர் ஆகிறலாம்னு ரொம்ப சந்தோசமா தூங்க போனேங்க.
(செக்யூரிட்டி வேலைக்கு இப்படி எல்லாமா யூனிபார்ம் கொடுக்கிறாங்க?)
சரின்னு இன்னைக்கு வந்து நீயூச பார்த்தா, ஒரே அதிர்ச்சியா போயிருச்சுங்க, ஆமாங்க காவலன் படத்த டிசம்பர் மாசம் தள்ளி வச்சுட்டாங்களாம், இந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லைங்க.
சரி என்ன பண்ணரதுங்க, நான் பிரபல பதிவர் ஆகணும்னா இன்னும் 4 மாசம் காத்திருக்கணும்.
பொதுவா ஒரு நடிகரோட படம் வருதுண்ணா, அந்த நடிகரோட ரசிகர்கள்தான் காத்திட்டு இருப்பாங்க, ஆனா இப்படி உலகம் முழுக்க இருக்கற பதிவர்கள் எல்லாம் காத்திட்டு இருக்கற படம்னா அது நம்ம இளைய தளபதி படம்தான்னு உறுதியா சொல்லிக்கலாம்,
இப்படி ஒரு இணைய புரட்சியையே ஏற்படுத்தி இருக்கற நம்ம டாக்டர் ஐயாவ இன்னும் எதுக்கு இளைய தளபதின்னு கூப்பிடனும், புரட்சி தளபதின்னே கூப்பிடலாமே, வெறும் படத்தில மட்டுமே நடிச்சதே பெரிய புரட்சின்னு நினைச்சு புரட்சி தளபதின்னு விஷால் டைட்டில் போடும்போது, எங்கள் அண்ண்ன், பதிவர்களை உயிர் வாழவைக்கும் டாக்டர், இளைய தளபதி அவர்களை இனி புரட்சி தளபதி என்றே அழைக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அவரின் தந்தை புரட்சி இயக்குனர் என்பதையும், அவரின் மகனான விஜய் அவர்களுக்கே அந்த் பெயர் சரியாக இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
பாஸ் நீங்க எனுமோ சொன்னிங்க ,விளங்குது
ReplyDeleteஆனா விளங்கல.வாழ்த்துக்கள் .
நன்றி பாஸ், இன்னும் ஒரு முறை படிச்சு பாருங்க விளங்கும்.
ReplyDeleteSorry Ennakkum Onnum Puriyala...
ReplyDeletePlease once more
Sorry Ennakkum Onnum Puriyala...
ReplyDeletePlease once more....