Saturday, May 14, 2011

ஜெ - ஹோ..!
இந்த தேர்தலை பொறுத்தவரையில் எந்த ஆதரவு அலையோ எதிர்ப்பு அலையோ வீசவில்லை என்றாலும் மக்களிடையே திமுகவின் மீதான அதிருப்தி பரவலாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது, கடைசி வரை நலத்திட்டங்கள் பரவலாக செய்துள்ளதால் கரை சேர்ந்து விடலாம் என நம்பி இருந்தவர்களுக்கு அதைவிட விலைவாசி, மின்வெட்டு, குடும்ப அரசியல், சினிமா தொழில் ஆதிக்கம், ஸ்பெக்ட்ரம், ஊழல் போன்ற பிரச்சனைகளும் மக்களிடையே பரவலாக சென்றடைந்து விட்டது உளவு துறையை கையில் வைத்திருந்தும் தெரியாமல் இருந்தது ஆச்சரியம்தான்

இதோ பெரும்பாலானவர்களின் ஆசைப்படியே அதிமுக வெற்றி பெற்று விட்டது, கொடநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டு ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒருமுறை பெயரளவில் போராட்டம் நடத்திய அதிமுக வெற்றி பெற்றது ஜெவின் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல, கலைஞரின் குடும்ப ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியாலே, இதை தன்னுடைய சொந்தபலம் மட்டும்தான் என தவறாக எண்ணி முந்தைய கால கட்டங்களில் செய்த அதே தவறுகளை ஜெ செய்வாரா இல்லை தமிழக மக்களுக்கு மாறுபட்ட ஆட்சியினை கொடுப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வயது வித்தியாசம் இல்லாமல் காலில் விழுவதும், அம்மாவை கண்டவுடன் கன்னத்தில் போட்டு கொள்வதும், ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே ஜெவின் காரை கண்டால் இங்கேயே விழுந்து கிடப்பதும், போன்ற முந்தைய அமைச்சர்களை போல அல்லாமல் இந்த முறையாவது தூங்கி எழும்போது  அமைச்சராக இருப்போமா என சந்தேகத்துடன் விழிக்காத திறமையான அமைச்சர்களை தேர்வு செய்து ஆட்சி செய்தால் நலமாக இருக்கும் என எண்ணுகிறேன்

இலவச டிவி, இலவச கேஸ் அடுப்பு, காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், வீடு வழங்கும் திட்டம், சாலை வசதிகள், மேம்பாலங்கள், பூங்காக்கள், மெட்டோ ரயில், தொழில் வளர்ச்சி திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி இருந்தாலும் தோல்வி அடைந்து இருப்பது திமுக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் சோர்வை தந்தாலும், குடும்ப ஆதிக்கம், ஊழல் போன்றவற்றிலிருந்து மீண்டு வந்தால் அடுத்த முறை ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் மக்களுக்கு என்னதான் நல்லது செய்தாலும் திட்டங்கள் தீட்டினாலும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நிலை ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு அலட்சிய போக்கினையே தோற்றுவிக்கும், நல்லமுறையாக ஆட்சி செய்தால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை தோன்றினால் மட்டுமே யாரிடமும் நல்ல ஆட்சியினை எதிர்பார்க்க முடியும்

இப்பொழுதுள்ள நிலையில் திமுக அதிமுகவிற்கு மாற்றாக வேறு ஏதும் கட்சி இல்லாத்தால், வேறு வழி இல்லாமல் இவர்களில் ஒருவறையே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை மக்களுக்கு, சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமரும் நிலைக்கு வந்துள்ளதை பார்த்து என்ன வாழ்க்கைடா இது என்று விசனப்படும் நிலைக்கு கலைஞர் தள்ளபட்டுள்ளார், வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டிய தருணத்தில் பெரும் மன உளைச்சல், ம்ம்ம் இப்பொழுது வருந்தி என்ன பயன்

போன தேர்தலில் இலவசங்களை கொடுப்பதை கிண்டலடித்த அதிமுக இந்த முறை அவர்களுக்கும் மேலாக இலவசங்களை கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது, இலவசங்கள் ஓட்டாக மாறாது என்ற நிலை இப்பொழுது அதிமுகவிற்கு புரிந்திருக்கும், எனவே இலவசங்களை குறைத்துவிட்டு வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினால் நலமாக இருக்கும்

ஜெ ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும், பணப்புழக்கம் அதிகரிக்கும், விலைவாசி குறையும் சட்டம் ஒழுங்கு சீர்படும் என பல ஹோஸ்யங்கள் நிலவுகிறது, கடந்த பத்தாண்டுகளாக எங்கள் தொகுதியில் அதிமுக எம் எல் ஏ இருந்தும் ஒருமுறை கூட அவரை கண்ணில் பார்க்கும் அதிசயம் நிகழ்ந்தது இல்லை, இம்முறையாவது ஏதாவாது செய்வார்களா பார்ப்போம், கொங்கு மண்டலத்தில் பெரிதாக சொல்லி கொள்ளும்படி எதையும் செய்யாவிட்டாலும் அதிமுக மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவது ஆச்சரியத்தையே கொடுக்கிறது


இன்னொரு விசயம் நேர்மையாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் தெரிவிக்கும் அதே வேளையில், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடக்கிறது, இடைப்பட்ட காலங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், அடையாள அட்டைகள் கொடுத்தல், பெயர் மாறிபோன, புகைப்படம் மாறிப்போன அடையாள அட்டைகளை சரி செய்து இருக்கலாம் அல்லவா, வழக்கம் போலவே இம்முறையும் குழப்படிகள்தான் நடந்துள்ளது, இன்னும் நிறைய பேர் அடையாள அட்டைகள் வைத்திருந்தும் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்த லட்சணத்தில் தேர்தல் நடத்தினால் முழுமையான மக்கள் தீர்ப்பாக எப்படி எடுத்து கொள்வது

அடுத்த தேர்தல் வருவதற்கு முன்னராவது இந்த குளறுபடிகளை சரிசெய்தால் நலம், இன்னும் நிறைய பேர் வாக்காளர் அட்டை கிடைக்காததற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காததற்கும் திமுகதான் காரணம் என புலம்பி கொண்டிருந்த்தை கேட்டேன், இதற்கெல்லாம் முழு பொறுப்பு தேர்தல் ஆணையம்தான் என எப்பொழுது உணர போகிறார்களோ,

தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளுக்கும் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுத்த்து நிரம்பமே ஆச்சரியம்தான், ஒருவேளை தோல்வி நிச்சயம் என முன்னரே தெரிந்திருந்தால் இன்னமும் திருமங்கலம் பார்முலாவில் முழு வீச்சில் இறங்கி இருப்பார்கள், திமுகவிற்கு சளைத்தவர்கள் இல்லை என அதிமுகவும் எங்கள் தொகுதியில் காட்டினார்கள், வெறும் 8 பேர் மட்டுமே கொண்ட என்னுடைய நண்பர்களுக்கு 46 புல் பாட்டில்களும், பணமும் ஞாயிரு அன்றே கொடுத்தார்கள், ஹி ஹி நண்பர்களும் விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள்

அதுசரி முந்தைய தேர்தலில் அதிமுக தோற்றதற்கு மிண்ணனு வாக்குபதிவு முறை சரியில்லை எனவும், வாக்கு சீட்டு முறையே வேண்டும் எனவும் கூறியவர்கள், இப்போதைய தீர்ப்பினை மட்டும் முழுமனதுடன் ஏற்று கொள்கிறார்களா என தெரியவில்லை

இன்னும் எத்தனை காலத்திற்குதான் இவருக்கு மாற்று அவர், அவருக்கு மாற்று இவர் என ஓட்டு போட போகிறோமோ தெரியவில்லை, சினிமா துறையை தவிர்த்து ஒரு நல்ல ஆள் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டாரா? எம்ஜியார், கருணாநிதி, ஜெயல்லிதா, இப்பொழுது விஜயகாந்த எதிர்கட்சி தலைவர் ஆகிவிட்டார், இனி அடுத்தது யார் விஜயா என தெரியவில்லை, இதையெல்லாம் பார்க்கும் போது டிவிட்டரில் படித்த டிவிட் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, விக்கலுக்கு ஏண்டா விசத்தை குடிச்சீங்கன்னு

இப்படியே சென்று கொண்டிருந்தால் 2016, 2021 என்று போகும் போது அவைக்குறிப்பு முழுவதும் பஞ்ச் டயலாக்குகளால் நிரம்ப போகும் அபாயமும் இருக்கிறது..!
     

30 comments:

 1. //விக்கலுக்கு ஏண்டா விசத்தை குடிச்சீங்கன்னு//

  சும்மா நச்'சின்னு இருக்கு...

  ReplyDelete
 2. ஹே ஹே ஹே ஹே வடையும் எனக்கே....

  ReplyDelete
 3. கொங்கு மண்டலத்தில் பெரிதாக சொல்லி கொள்ளும்படி எதையும் செய்யாவிட்டாலும் அதிமுக மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவது ஆச்சரியத்தையே கொடுக்கிறது///

  அதான் பாருங்க பல்லடத்துல செமையா குத்தி இருக்காங்க இல்ல...:))

  ReplyDelete
 4. இன்னும் நிறைய பேர் வாக்காளர் அட்டை கிடைக்காததற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காததற்கும் திமுகதான் காரணம் என புலம்பி கொண்டிருந்த்தை கேட்டேன்,///

  விடுங்க மாம்ஸ் ஒன்னுந்தெரியாத மக்கு பீசுங்க அவுங்கெல்லாம் ....:))

  ReplyDelete
 5. பஞ்ச் டையலாக் எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல தெரிகிறது.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. //இப்படியே சென்று கொண்டிருந்தால் 2016, 2021 என்று போகும் போது அவைக்குறிப்பு முழுவதும் பஞ்ச் டயலாக்குகளால் நிரம்ப போகும் அபாயமும் இருக்கிறது..!//

  அரசியல் பக்கம் வந்தால் சினிமா காரர்களை
  தவிர்த்துவிடவேண்டும். ஆனால் அவ்வாறு நடபதில்லையே.

  ReplyDelete
 7. #ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே ஜெவின் காரை கண்டால் இங்கேயே விழுந்து கிடப்பதும்,#


  செம காமெடி போங்க....ஒரே சிரிப்பு....

  ReplyDelete
 8. ஒரு மனிதன் (ஜெயலலிதா) தொடர்ந்து தப்பு செஞ்சுக்குனே இருக்கமாட்டான். அதனால மாற்றம் இருக்கும்னு நம்புவோம். (இப்படியெல்லாம் சொல்லி மனசை தேத்திக்க வேண்டியதுதான்)

  ReplyDelete
 9. அதிமுக வெற்றி பெற்றது ஜெவின் மீது உள்ள நம்பிக்கையால் அல்ல, கலைஞரின் குடும்ப ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியாலே,

  ReplyDelete
 10. சரியாகச் சொன்னீர்கள் சுரேஷ். ஜெ. வெற்றிக்குப் பாடுபட்டது கலைஞர் குடும்பம் தான்.

  ReplyDelete
 11. மக்களின் மனங்களை வெல்ல ஜெ எவ்வாறு பாடு பட வேண்டும் என்பதையும், தமிழகத்தின் ஆட்சி மாற்றம் பற்றிய நடு நிலையான பார்வையினையும் உங்களின் இந்த ஆய்வு தருகிறது நண்பரே.

  ReplyDelete
 12. மாப்ள மக்கள் யோசிச்சது என்னனா....இப்போ தல முக்கியமா கால் முக்கியமான்னுதான்.....மஞ்சத்துண்டு வந்து இருந்தா நெனச்சி பாக்கவே முடியல......
  அதனால உயிரோட இருக்கறதுக்கு தலை வேணும் அதான் இப்படி நடந்து இருக்கு..... யாராவது ரட்சகன் வருவான்னு இன்னும் ஏங்கிகிட்டு இருக்கறது முட்டாள்தனம்....அதனால........

  ReplyDelete
 13. 5 வருஷத்துக்கு ஒரு தடவை மாத்தி குத்து.. இது தான் நம்ம தலை எழுத்து

  ReplyDelete
 14. சரி விடுங்க அடுத்த தடவ மாத்தி குத்திடுவோம்

  ReplyDelete
 15. //தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளுக்கும் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுத்த்து நிரம்பமே ஆச்சரியம்தான்,//

  ஒத்துழைப்பு????????????????????????????????

  ReplyDelete
 16. @ MANO நாஞ்சில் மனோ

  வாங்க மனோ சார், வடை சாப்பிடுங்க

  ReplyDelete
 17. @ karthikkumar

  ரொம்ப சந்தோசப்படாத மச்சி அஞ்சு வருசம்தான் :-)

  ReplyDelete
 18. @ மதுரை சரவணன்

  இனி போற போக்க பார்த்தா அப்படித்தான் நடக்கும் போல இருக்குங்க சரவணன் சார்

  ReplyDelete
 19. @ கக்கு - மாணிக்கம்

  நம்ம தமிழ்நாட்டுல சினிமாவயும் அரசியலையும் தவிர்க்க முடியாது போல இருக்குங்க சார்

  ReplyDelete
 20. @ NKS.ஹாஜா மைதீன்

  இதுக்கே சிரிச்சா எப்படிங்க, இன்னும் அஞ்சு வருசம் பாருங்க சிரிச்சு சிரிச்சு உங்களுக்கு வயித்து விலியே வந்துரும் :-)

  ReplyDelete
 21. @ சிவா

  ஹி ஹி தேத்திக்கலாம்னு சொல்றீங்களா, டிரை பண்ணலாம்

  ReplyDelete
 22. @ Rathnavel

  அதேதாங்க சார்

  ReplyDelete
 23. @ செங்கோவி

  உண்மைதான் நண்பா

  ReplyDelete
 24. @ நிரூபன்

  நன்றி நிரூபன் சார்

  ReplyDelete
 25. @ விக்கி உலகம்

  இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க மாம்ஸ் :-)))

  ReplyDelete
 26. @ சி.பி.செந்தில்குமார்

  ஆமாங்க தல, ஒருவேளை நீங்க நின்னா மாற வாய்ப்பு இருக்குங்க :-)))) ஹி ஹி சும்மா ஜோக்கு

  ReplyDelete
 27. @ நா.மணிவண்ணன்

  நீங்க அதத்தான் பண்ணுவீங்கன்னு எனக்கு முன்னமே தெரியுமே மணி, அப்படின்னா நீங்க அதிமுகவுக்கு வோட்டு போட்டீங்களா? சொல்லவே இல்லை :-)))

  ReplyDelete
 28. @ ! சிவகுமார் !

  கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுத்தாங்க சிவா, இல்லைன்னா இந்தளவு கெடுபிடி அமலுக்கு வந்திருக்க சான்ஸ் இருக்கான்னு யோசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், இன்னும் டவுட் இருந்தா அஞ்சு வருசம் கழிச்சு பாருங்க இப்ப ஆட்சியில இருக்குறவங்க என்ன பண்ணப்போறாங்கன்னு

  ReplyDelete
 29. மக்களின் மனங்களை வெல்ல ஜெ எவ்வாறு பாடு பட வேண்டும் என்பதையும், தமிழகத்தின் ஆட்சி மாற்றம் பற்றிய நடு நிலையான பார்வையினையும் உங்களின் இந்த ஆய்வு தருகிறது நண்பரே. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!