Saturday, May 28, 2011

மாவீரன் - விமர்சனம்


400 வருடங்களுக்கு முன்பு பிரிந்து போன காதலர்கள், 400 வருடங்களுக்கு பிறகு மறுபிறவி எடுக்கிறார்கள், இந்த பிறவியிலும் அவர்கள் சேர்வதுக்கு முன்பிறவி வில்லனே தடையாக இருக்கிறான், அந்த தடை நீங்கியதா? காதல் கைகூடியதா என்பதை நான்கைந்து சண்டைகள், மொக்கை பாடல்கள், மற்றும் அளவில்லாத கிராபிக்ஸ் காட்சியுடன் சொல்லி முடிக்கிறார்கள்


தெலுங்கு மகதீரா தமிழில் மாவீரன் ஆகி இருக்கிறான், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய படம், தமிழில் கண்டிப்பாக ஹிட்டாகாது, காரணம் ஏற்கனவே நிறைய பேர்கள் பார்த்திருப்பார்கள் என்பது மட்டுமில்லை, டப்பிங் பட உணர்வு ஏற்படுவதோடு, தமிழில் பாடல்கள் படுகேவலமாக இருக்கிறது, லாஜிக் இல்லா மேஜிக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது, கிராபிக்ஸ் காட்சிகள் படு செயற்கை, அடுத்த சீன் என்ன என நாமே மனதில் படம் ஓட்டி பார்த்து கொள்ளலாம், அது சரியாக இருக்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கிறது

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தை ஈர்க்க செய்வது ராம்சரணும், காஜல் அகர்வாலும்தான், ஒரு அறிமுக கதாநாயகனுக்கு கிடைக்க வேண்டிய நடிப்பு, பாடல், நடனம், சண்டைகாட்சிகள் என அனைத்தும் கிடைத்திருக்கிறது ராம்சரணுக்கு, அனைத்திலும் அசத்தி இருக்கிறார், அதிலும் குதிரை ஓட்டும் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார், கிளைமேக்ஸில் 100 பேர்களை அனாயசமாக வெட்டி சாய்க்கிறார்

டாக்டர் விஜய்க்கு கூட இந்தளவு பில்டப் யோசித்து இருப்பார்களா என சந்தேகப்படும் அளவுக்கு ராம்சரணுக்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள், நின்றால், நடந்தால், குதிரையில் வந்தால், டான்ஸ் ஆடினால் என ஏகப்பட்ட ஜெர்க்குகள், பில்டப்புகள், இதற்கே கிராபிக்ஸ் செலவு அதிகமாகி இருக்கும், சரி சிரஞ்சீவியின் மகனின் முதல் படம் என்பதால் இருக்கும்

இதுவரை காஜலில் மேல் பெரிதாக அபிப்ராயம் இருந்ததில்லை, ஆனால் இந்த படத்தில் அளவிட முடியாத அளவுக்கு நடிப்பையும் கவர்ச்சியையும் வாரி வழங்கி இருக்கிறார், அவரின் இளமை துள்ளளே படத்தின் மிகப்பெரிய பலம், ராம் சரணுக்காக இல்லையென்றாலும் காஜலின் கவர்ச்சிக்காகவே படம் ஓடி இருக்கும்

காதலுக்காக உருகுவதிலும், காதலனுக்காக ஏங்குவதிலும், காதல் நிறைவேறாமல் உயிரை விடும் காட்சிகளிலும், நம்மையும் காதலிக்க வைத்து உருக வைக்கிறார் காஜல் அகர்வால், அந்த காட்சிகளில் ராம்சரணின் நடிப்பும் அருமை

படத்தின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது 400 வருடங்களுக்கு முந்தைய காட்சிகளில் படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது, அரண்மணைகள், செட்டுகள் அனைத்தும் பிரம்மாதமாக படம் பிடித்து இருக்கிறார்கள், குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகள் அனைத்தும் அருமை

ஒரு சீனில் மட்டுமே வந்தாலும் பிரம்மானந்தத்தின் காமெடி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது, ஒன்றுமே நடக்காதது போல மூஞ்சியை வைத்து கொண்டு காமெடி செய்வது அவருக்கு மட்டுமே சாத்தியம், பாடல்கள் எல்லாம் தமிழில் கேட்கும்படி இல்லை, பிண்ணனி இசை நன்றாக உள்ளது

இன்னும் எத்தனை காலத்துக்கு வரலாறையும், புவியியலையும் ஒன்றாக சேர்த்து அவியலாக்கி படம் எடுப்பதை தெலுங்கு தேசத்தவர்கள் விடுவார்கள் என தெரியவில்லை, ஒரு மாதத்திற்கு முன்புதான் இது போல ஓம் சக்தி என்ற படம் பார்த்தேன்


மொத்தத்தில் மாவீரன் – ஆந்திரா மாவீரன் மட்டும்தான், தமிழ்நாட்டுக்கு அல்ல, கண்டிப்பாக படம் பார்க்கலாம், போரே அடிக்காமல் செல்கிறது என சொல்ல முடியாது, நல்லவேளை இங்கே யாரும் ரீமேக் பண்ணாமல் விட்டார்களே, அதுவரை சந்தோசம், நமது கதாநாயகர்கள் யாரையும் அந்த வேடத்தில் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை.

20 comments:

  1. thanking you for the informations about mahatheera's tamil version

    ReplyDelete
  2. ஏ யப்பா என்னய்யா ஆச்சு....?

    ReplyDelete
  3. அண்ணே தமிழ் படம்னு நெனைச்சேன்.

    ReplyDelete
  4. //ஒரு சீனில் மட்டுமே வந்தாலும் பிரம்மானந்தத்தின் காமெடி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது, ஒன்றுமே நடக்காதது போல மூஞ்சியை வைத்து கொண்டு காமெடி செய்வது அவருக்கு மட்டுமே சாத்தியம், பாடல்கள் எல்லாம் தமிழில் கேட்கும்படி இல்லை, பிண்ணனி இசை நன்றாக உள்ளது//thank you

    ReplyDelete
  5. முதல் பாடலில் தெலுங்கில் சிரஞ்சீவி வருவார். ஆனால் தமிழில் அது இல்லை. ஒரு வேளை ராம்சரண் சிரஞ்சீவி மகன் என்பது தெரியாது என்பதால் இருக்குமோ என்னவோ?

    ReplyDelete
  6. மாவீரன் மாம்ஸ் இது எந்த தியேட்டர்ல ஓடுது..:)

    ReplyDelete
  7. 400 வருடங்களுக்கு முன்பு பிரிந்து போன காதலர்கள், 400 வருடங்களுக்கு பிறகு மறுபிறவி எடுக்கிறார்கள், இந்த பிறவியிலும் அவர்கள் சேர்வதுக்கு முன்பிறவி வில்லனே தடையாக இருக்கிறான்///

    ஆக மூணு பேர் சொல்லிவெச்ச மாதிரியே மறுபிறவி எடுக்குரானுகளா..:)

    ReplyDelete
  8. டாக்டர் விஜய்க்கு கூட இந்தளவு பில்டப் யோசித்து இருப்பார்களா என சந்தேகப்படும் அளவுக்கு ராம்சரணுக்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள், ///

    இருக்காதா பின்ன எங்க அண்ணன் வாழும் தெய்வம் பாலக்ரிஷ்ணா வாழும் தேசமல்லவா எம் ஆந்திர தேசம்...:)) இந்த பில்டப் கூட கொடுக்கலைன்னா என்னாகுறது... (நல்லவேள பாலக்ரிஷ்ணா படத்த ரீமேக் பண்ணாம விட்டாங்க)

    ReplyDelete
  9. @ ஷர்புதீன்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  10. @ MANO நாஞ்சில் மனோ

    வடை போனா விடுங்க, இன்னும் கத்தி, கோடாலி எல்லாம் இருக்கே :_)

    ReplyDelete
  11. @ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    தமிழ்படம்தாங்க, தமிழ்லதான் பேசறாங்க :-)

    ReplyDelete
  12. @ மாலதி

    நன்றி மாலதி மேடம்

    ReplyDelete
  13. @ நா.மணிவண்ணன்

    ஆஹா என்ன ஒரு கருத்தாழம் மிக்க கமெண்ட், நன்றீ மணிவண்ணன் :-)

    ReplyDelete
  14. @ பாலா

    இங்க வந்தா மட்டும் என்ன ஆகப்போகுதாம், விடுங்க பாலா

    ReplyDelete
  15. @ karthikkumar

    இது தமிழ்நாட்டுல ஓடுது மச்சி, நாளைக்கு போக போறியா???

    ReplyDelete
  16. //மொத்தத்தில் மாவீரன் – ஆந்திரா மாவீரன் மட்டும்தான், தமிழ்நாட்டுக்கு அல்ல,// நச்!

    ReplyDelete
  17. மொக்கைப்படம்னு தெரிஞ்சே பாக்குறது. அப்பறம் இங்க வந்து பொலம்புறது.

    ReplyDelete
  18. /ஒரு மாதத்திற்கு முன்புதான் இது போல ஓம் சக்தி என்ற படம் பார்த்தேன்//

    உங்களைத்தான் முதல்ல திகார்ல தூக்கி போடணும்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!