வருசா வருசம் மே மாசம் ஆனா போதும், என்ன அக்னி வெயில் கொளுத்துமான்னு கேட்குறீங்களா? அதை விடுங்க பாஸ் அதகூட சமாளிச்சிரலாம், ஆனா ஸ்கூல் லீவுன்னு ஒன்னு விடுவாங்களே, அத நினைச்சாதான் பயமா இருக்குது, என்னடா லீவுன்னா சந்தோசபடுறத விட்டுட்டு சோக சீன் போடறான்னேன்னு பார்க்கறீங்களா? அட நாமளும் சின்ன பையனா இருந்தவரைக்கும் ஸ்கூல் லீவுன்னா சந்தோசமாத்தான் இருந்துச்சு, ஆனா இப்ப அப்படி இல்லைங்க
அது ஏன்னா ஸ்கூல் லீவு விட்டா போதும், எப்படா லீவு விடுவாங்கன்னு காத்திருந்த மாதிரி அடங்காபிடாரி பசங்க, பொண்ண பெத்த குடும்பங்க எல்லாம் கிளம்புவாங்க சொந்தகாரங்க வீட்டுக்கு, உங்களுக்கு ஒரு சொந்தகாரங்கள பழிவாங்கனும்னு நினைச்சா, மந்திரம், பில்லி சூனியம்னு எதுவும் வைக்க வேண்டாம்,
சில்வண்டு பசங்கள கொண்டு போய் ஸ்கூல் லீவுல சொந்தகாரங்க வீட்டுல விட்டுட்டு வந்தா போதும், அப்புறம் ஜென்மத்துக்கும் நம்மகிட்ட வச்சுக்க மாட்டாங்க, அதுக்கும் மீறி ஒரு வார்த்தை பேசுனாங்கன்னா, மாமா காலாண்டு பரீச்சை லீவுக்கு வரட்டான்னு பையன விட்டு கேட்க சொல்லுங்க, பேயறைஞ்ச மாதிரி ஆகிருவாங்க
எல்லா வீட்டுல இருக்குற எல்லா பசங்களும் டார்ச்சர் பண்ண மாட்டானுங்க, ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி டார்ச்சர் பண்ணுவான், விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்குறா பையனா இருந்தா கிரிக்கெட் பேட், பால், கேரம், செஸ்னு வாங்கி கொடுக்கணும், இன்னொரு குரூப்பு, சினிமா பைத்தியம் பிடிச்சவனுங்களா இருப்பானுங்க, டெய்லியும் சினிமாவுக்கு கூட்டிட்டு போக சொல்லுவாங்க, புதுப்பட சிடி வேணும்பானுங்க, கேம் சிடி வேணும்பானுங்க, பிட்டு பட சிடி கூட வாங்க போகாத சொந்தகாரங்க எங்க போய் வாங்குவாங்க சொல்லுங்க
இன்னும் சிலது சரியான தீனி பண்டமா இருக்கும், காலையில காபி, கோன் ஐஸ்கீரிம், பிஸ்கெட், சிப்ஸ், ரொட்டி, அப்புறம் காலையில டிபன், மத்தியான கேப்புல ஜீஸ், மத்தியானம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, அப்புறம் 1 கிலோ ஐஸ்கிரீம், சாயங்காலம் கிரீம் பிஸ்கெட்டு, நைட்டு சப்பாத்தி, தொட்டுக்க சிக்கன்னு, கடைசியா பைனல் டச்சுக்கு குவாட்டர் மட்டும் கேட்க மாட்டாங்க, கூடவே அப்பன்காரன் வந்திருந்தான்னா அதுவும்
இன்னும் சிலது இருக்கு, அம்மாவ கேட்டா துறுதுறுன்னு இருப்பான் என் பையன்னு சொல்லுவாங்க, உண்மையிலேயே குட்டிசாத்தான் வேலைன்னா அத அந்த சில்வண்டுதான் செய்யும், வீட்டுல இருக்குற ஒரு பொருளை விடாது, சமையல் கட்டுல இருந்து பாத்ரூம் வரைக்கும் இருக்குற அத்தனை பொருளையும் உடச்சிட்டுதான் மறுவேலை பார்க்கும், கடைசியா இங்க எதுவும் மிச்சம் இல்லைன்னா பக்கத்து வீட்டுலயும் போய் வேலய காட்டி வச்சிடுவான் பையன், நாமதாம் பக்கத்து வீட்டுக்காரங்க்கிட்ட நாலாவது உலகப்போர் நடத்தி பையன மீட்டுட்டு வரணும்
எலக்ட்ரானிக் பொருள் கையில கிடைச்சா அதோ கதிதான், டிவி டேப் ரெக்கார்டர், சிடின்னு எல்லாத்தையும் நோண்டி நொங்கெடுத்துடுவான் பையன், டிவிய நோண்டக்கூடாதுன்னு சைல்டு லாக் பண்ணி வச்சா, பட்டனையே உடச்சி எறிஞ்சிடுவான், நாம எந்த சேனலையும் பார்க்க முடியாது, பையன் போடற சேனல்தான், அது கார்ட்டூனா இருந்தாலும் கடைசி வரை பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான், அவன் பண்ர அத்தனை அழிச்சாட்டியத்தையும் பார்த்து அவங்க அம்மா பெருமைபடறத பார்த்தா வர கோபத்துக்கு ரெண்டு பேரையும் தலைகீழா கட்டி வச்சு அடிக்கணும்னு தோணும், ஆனாலும் என்ன பண்றது
ஸ்கூல் லீவெல்லாம் முடிஞ்சு கிளம்பி போகும் போது, பையன் ஸ்கூலுக்கு போறதுக்காக, ஸ்கூல் பேக், யூனிபார்ம், ஷூ, சாக்ஸ், புஸ்தகம், வாட்டர் பாட்டில், ஜாமிண்ட்ரி பாக்ஸ், முடிஞ்சா ஸ்கூல் பீஸ், அவங்க அப்பா அம்மாவுக்கு புடவை, வேஷ்டி, பேண்ட், சர்ட் எல்லாத்தையும் கொடுத்து அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரும், இத்தனைக்கும் அவங்கா வீட்டுக்கு நாம போனப்ப பச்சத்தண்ணியத்தான் கொடுத்துருப்பாங்க, ஆனா என்னமோ பாயாசமே கொடுத்த மாதிரி பேசுவாங்க பாருங்க
மாசா மாசாம் விக்கிற வெலைவாசியில பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தறவங்க திடீர்னு சொந்தகாரங்க வருகையால மூணு வட்டிக்கு கடன் வாங்கி செலவு பண்ண வேண்டிய நிலைமைக்கு ஆளாகிடுறாங்க, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவுக்கு வாங்கவே எட்டணா பத்தாத குடும்பம், திடீர்னு வர சொந்தகாரங்களுக்கு டூத் பிரஸ்சுல இருந்து சிக்கன் பிரியானி, யூனிபார்ம் வரைக்கும் வாங்கிதர என்ன பண்ணுவாங்க சொல்லுங்க? அதனால ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போறவங்க முடிஞ்ச வரைக்கும் அவங்க நிலைமைய தெரிஞ்சுகிட்டு போறது நல்லதுன்னு நினைக்கிறேன்
இத்தனையும் கடனோ உடனோ வாங்கி செலவு பண்ணி இருப்போம், அந்த சொந்தகாரங்களும் அடுத்த சொந்தகாரங்க வீட்டுக்கு போயிருப்பாங்க, அங்கபோய் அந்த பையன் என்ன சொல்லுவான் தெரியுமா? அந்த வீடு ரொம்ப மோசம், அந்த மாமா எனக்கு ஒன்னுமே வாங்கி தரலை, நீ வாங்கி கொடு மாமான்னு.
இதயெல்லாம் கேள்விபட்டுட்டு நொந்து வெந்து நூடுல்ஸ்ஸாகி வீட்டுக்கு வந்தா, உடஞ்சு போன பேனு, அலை அலையா ஒடுற டிவி, உடஞ்சு போன கண்ணாடி சாமான், கிழிஞ்சு போன துணி மணி, நார்நாரா கிழிஞ்சு போன புஸ்தகம், வழிஞ்சு கொட்டி கிடக்கிற டூத் பேஸ்டு இதெல்லாம் பார்க்கும் போது என்ன தோணும்?
இதெல்லாம் சரி பண்ண யாருகிட்ட கடன் வாங்கலாம் வட்டிக்குன்னா? இல்லை....???
ஆஹா என்ன இது வெயிலுக்கு பயந்த காலம் போயி இப்ப குழந்தைகளுக்கு பயப்படும் காலம் வந்துவிட்டதேன்பதை உணர்த்துகிறது தங்களின் பதிவு .
ReplyDeleteசெமத்தியா அனுபவிச்சியிருக்கிங்க போல...
ReplyDeleteஇருந்தாலும் இது சுகமான அனுபவம்தாங்க...
நாம சின்ன பிள்ளையா இருந்த போது இப்படிதானே...
//அந்த வீடு ரொம்ப மோசம், அந்த மாமா எனக்கு ஒன்னுமே வாங்கி தரலை, நீ வாங்கி கொடு மாமான்னு.///
ReplyDeleteஅனுபவம் ரொம்ப பேசுது ஒய் ஹா ஹா ஹா.....
என்னய்யா ரொம்ப நாளா ஆளையே காணோம்....?
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டு போட்டாச்சுய்யா...
ReplyDeleteவாண்டுகளின் குறும்புத் தனங்களால் ரொம்பவும் தான் நொந்திட்டீங்க போல இருக்கே..
ReplyDeleteஇவ்ளோ அட்டகாசம் பண்ணினாலும், இந்த வாண்டுகளின் குறும்புகள் ஓரளவு ரசிக்கத் தக்கவை, எல்லை மீறும் போது தான் எரிச்சலே வரும்...
ReplyDelete@ ! ♥ பனித்துளி சங்கர் ♥ !
ReplyDeleteசில குழந்தைகள் மட்டுமே அப்படிங்க சார், ஹி ஹி ஆனாலும் பயப்பட வேண்டிதான் இருக்குங்க சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteநாம சின்ன பிள்ளைகளா இருந்தபோது இப்ப இருக்குற மாதிரியான எலக்ட்ராணிக் பொருட்களெல்லாம் அதிகமா கிடையாதுங்க நண்பா :-) அதுவுமில்லாம இது ஒரு சீரியஸ் பதிவெல்லாம் இல்லை, சும்மா போடனும்னு தோணுச்சு அதான்
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஹி ஹி ஆமாங்க
//என்னய்யா ரொம்ப நாளா ஆளையே காணோம்....?//
ஆபிஸ்ல ஆடிட்டிங், அதனால ஆணி கொஞ்சம் ஜாஸ்தி மனோ சார்
@ நிரூபன்
ReplyDelete//வாண்டுகளின் குறும்புத் தனங்களால் ரொம்பவும் தான் நொந்திட்டீங்க போல இருக்கே//
லைட்டா :-)))
//இவ்ளோ அட்டகாசம் பண்ணினாலும், இந்த வாண்டுகளின் குறும்புகள் ஓரளவு ரசிக்கத் தக்கவை, எல்லை மீறும் போது தான் எரிச்சலே வரும்..//
உண்மைதான் சார், அளவுக்கு மீறி போகும் போது கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்யுது, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்
கஷ்டம்தான் .ஆனால் சுகமான சுமை.
ReplyDeleteஹா..ஹா..அண்ணன் எங்கயோ சிக்கி சின்னாபின்னம் ஆயிருப்பார் போலிருக்கே!
ReplyDeleteஉங்க ப்ளாக் ஓப்பன் ஆகுமுன்ன, நான் ஒரு பதிவே போட்டுடலாம் போலிருக்கே..அந்த சுத்து சுத்துது..டெம்ப்ளேட்டை சிம்பிளாக்கப் பாருங்க நைட்டு!
ReplyDeleteவாண்டுகளால் ரொம்ப கஷ்டபட்ட மாதிரி தெரியுதே!விருந்தாளியாகப் போகும் வீட்டீன் நிலைமை தெரிந்து போவதும்,தங்குவதும் சிறந்தது.ஆனாலும் பிள்ளைங்கள இப்படி அடுத்த குடும்பத்தில சில நாள் விட்டாதான் அதுங்களுக்கு நம்ம அருமை தெரியும்.
ReplyDeleteஆமாங்க உங்க பிளாக்கு ஓப்பனாக நிறைய நேரமாகுது,கொஞ்ச நேரம் க்ரே கலரில் படித்துவிட்டு,அப்றம் ஒயிட் கலரில் பதிவை படிக்கிறேன்.
ReplyDeleteசின்ன வயசுல நீங்க என்னென்ன சேட்டை செஞ்சீங்களோ...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டு போட்டாச்சுய்யா...//
வெரி குட். அண்ணனுக்கு ஒரு சாக்லேட் பார்சல்!
சூப்பர் பாஸ்! :-)
ReplyDeleteஎங்கோ நான் படித்த கவிதையொன்று ஞாபகம் வருகிறது... ''கிறுக்கல்கள் இல்லாத சுவர்கள், வைத்தது வைத்த படியே கலையாத பொம்மைகள், அழகாய் அடுக்கி வைக்கப்பட்ட அட்டை கிழியா புத்தகங்கள்... அலங்கோலமாய் இருக்கிறது குழந்தையில்லாத வீடு!'' ம்ம்ம்ம்... இக்கரைக்கு அக்கரை பச்சை. நல்லதொரு அனுபவ அலசல் உங்கள் படைப்பு.
ReplyDeleteகடைசில உங்க மெசேஜ் சூப்பர். இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.
ReplyDelete@ shanmugavel
ReplyDeleteஹி ஹி ஆமாங்க சார்
@ செங்கோவி
ReplyDeleteஹி ஹி லைட்டா, டெம்ப்லேட் மாத்த டிரை பண்றேன் நண்பா, நன்றி
@ thirumathi bs sridhar
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் மேடம், பிளாக்கின் டெம்ப்ளேட்டை மாற்றுகிறேன், நன்றி
@ ! சிவகுமார் !
ReplyDelete//சின்ன வயசுல நீங்க என்னென்ன சேட்டை செஞ்சீங்களோ...//
யாருக்கு தெரியும், எனக்கு தெரிஞ்சு எங்கயும் போனதா நினைவே இல்லை, இது முழுக்க முழுக்க என்னுடைய அனுபவம் மட்டும் இல்லை, என்னுடைய நண்பனுடைய அனுபவமும் கூட
@ ஜீ...
ReplyDeleteநன்றி ஜீ
@ சாய்ரோஸ்
ReplyDeleteநன்றி நண்பா உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும், குழந்தை இல்லா வீடு கொடுமையானதுதான், எல்லா குழந்தைகளும் குறும்புக்கார குழந்தைகளாக இருக்காது, ஆனால் சில பெற்றோர்கள் குழந்தைகளை வளார்க்கும் லட்சணம் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது, உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், நன்றி
@ பாலா
ReplyDeleteஹி ஹி நன்றி பாலா
மாப்ள எனக்கு புரிஞ்சி போச்சி....நீ சின்ன வயசுல சொந்தக்காரங்க வீட்டுல பண்ணத எல்லாம் சொல்லிருக்க....விடு அடுத்த Generation ஆவது எப்படி இருக்குன்னு பாப்போம் ஹிஹி!
ReplyDelete@ விக்கி உலகம்
ReplyDeleteஹி ஹி லூஸ்ல விடுங்க மாம்ஸ்...
சரிதான் கல்யாணம் பண்ணினா இவ்வளவு பிரச்சனையை இருக்கா ? சரி சரி குழந்தைகளை திட்டாதீங்க பாஸ் ,அவுங்களும் கடவுளும் ஒன்னு
ReplyDelete