Saturday, December 31, 2011

புது வருடம் - சில நினைவுகள்..!



ஒரு வருடம் ஓடி போய்விட்டது, வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது, பிறகு அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?

வழக்கம் போலவே இதோ இன்னொரு புதுவருடம், ஒவ்வொரு வருடத்திலும் என்ன சாதிக்க போகிறேனோ? முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ? தெரியாது, ஆனால் புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு புது விதமான மகிழ்ச்சி மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான் முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் தானே புயல் கரை கடந்ததை போல ஓரிரு மாதங்களிலேயே வலுவிலந்தும் விடுகிறது.

ஒவ்வொரு வருடங்களும், புத்தாண்டு சங்கல்பங்களும் காற்றிலும், நீரிலும் மட்டுமே எழுதி வைக்கும்படி எனக்கு வாய்த்திருக்கிறது, சலித்து போய் இப்பொழுது அது போல எதுவும் நினைக்கக்கூடாது என்பதே புத்தாண்டு நினைவாக மாறிவிட்டது.

முந்தைய கடந்து போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவோ பரவாயில்லை, பழைய வருடத்தின் தாங்கமுடியாத சோகங்களை இந்த வருடம் மறக்கடித்தது, இன்னும் சொல்லப்போனால் கடைசியில் வந்தமைந்த சொந்தம் என் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தியது என சொல்லலாம்.

ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.

துன்பத்திலும், கஷ்டத்திலும், ஏக்கத்திலும், தேவைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், மக்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு வரப்போகும் வருடமாவது ஒரு நல்ல வருடமாக அமையாதா என்பதே.

அந்த சராசரி மனிதர்களில் ஒருவனாக எனது எதிர்பாப்பும் அதுவே, எதிர்பார்ப்பும், ஏமாற்றங்களும் தொடர்கதையாகி போய் நடப்பது நடக்கட்டும் என்ற எனது சராசரி மனநிலையை மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடம், புது வருடத்தில் எனக்கான தேவைகளும், செல்ல வேண்டிய தூரங்களும் நிறையவே இருக்கிறது.


அதற்காக அதிகமாக உழைக்க சொல்கிறது காலம்.

பார்ப்போம், காலம் சொல்லும் பதிலை..!

நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவருடத்தை தொடங்க இருக்கிறேன்… நான்..!



New Year Comments
New year comments greetings, happy new year animated scraps

Best Orkut Picture Scraps at Goodlightscraps

வரப்போகும் 2012 ஆம் வருடத்தில், அனைவரது வாழ்விலும் உள்ள சங்கடங்கள் விலகி, சந்தோசம் பெருகி, நினைத்தது நடந்து, எல்லோருக்கும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வருடமாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.



இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், சக வலையுலக நண்பர்கள், மற்றுமுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

---------------------------------------------------------------------------------------------------------
புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில நண்பர்கள் நேசம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர், இணையத்தின் வாயிலாக  அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய நீங்களும் இணைந்து ஊக்குவியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு 

நன்றி..!

11 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //துன்பத்திலும், கஷ்டத்திலும், ஏக்கத்திலும், தேவைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், மக்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு வரப்போகும் வருடமாவது ஒரு நல்ல வருடமாக அமையாதா என்பதே.//

    விபரம் தெரிந்த காலம் முதல் இந்த ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது, இந்த ஆண்டு அதிகமாகவே.......

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் உளம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்கள். (தங்களது மெயிலை நான் கவனிக்கவில்லை, அதனால்த்தான் reply பண்ணவில்லை, தப்பாக நினைக்கவேண்டாம்)

    ReplyDelete
  4. அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.//

    மிகச்சரியாக சொன்னீர்கள் ம்ம்ம் புது ஆண்டை இன்முகத்துடன் வரவேற்போம் நல்லதே நடக்கும்...!!!

    ReplyDelete
  5. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அதற்காக அதிகமாக உழைக்க சொல்கிறது காலம்.அருமை

    ReplyDelete
  7. நல்லாண்டாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நம்பிக்கை தானே வாழ்க்கை தோழர்
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  9. ///நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன்...///

    நிச்சயமாக... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  10. ///நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன்...///நம்பிக்கை தானே வாழ்க்கை

    ReplyDelete
  11. வாழ்வில் லட்சியங்கள் முக்கியம். ஆனால் அதையே முக்கிய குறிக்கோளாக வைத்துக் கொள்ளாதீர்கள். காரணம் வாழ்க்கை என்பது காட்டாறு வெள்ளம் போன்றது. அதுவும் சமகாலத்தில் நம்மை சுற்றிலும் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் சுழலுக்குச் சமமானவர்கள்.

    உரையாடும் போது, பழகும் போதும், ஏமாறும் போது, எதிர்பார்த்து ஏங்கிய போது இந்த சுழல்களை நீங்கள் கடந்து வந்த பாதையில் பார்த்து இருக்கக்கூடும்.

    ஆனால் இந்த சுழல்களை நீங்கள் கடந்து வந்தேதான் ஆக வேண்டும். நமக்காக யாராவது நீந்துவார்கள் என்று நினைத்தால் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவீர்கள்.

    தக்கையாக மிதக்க கற்றுக் கொள்ள வேண்டும். காற்றை எதிர் நிற்கும் வானளாவிய மரங்களை விட சாதாரண புற்கள் நமக்கு பல வித அனுபவங்களை கற்றுத் தருகின்றது.

    லட்சியங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்வி வரலாம்?

    அன்றாட கடமைகளை முழுமனதோடு ஈடுபாட்டுடன் உழைத்துக் கொண்டே வரலாம். எண்ணங்கள் சரியாக இருந்தால் இலக்கு இயல்பாகவே நம்மை தேடி வந்து தானே ஆகும்.

    தேவைகள் விருப்பங்கள் இரண்டுக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு.

    நமக்கான அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் என்பது வேறு. நாம் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு விருப்பங்களை நோக்கி அலைவது என்பது வேறு.

    துன்பம் எங்கிருந்து தொடங்குகிறது எனறால் நம்மிடம் இருந்து தானே.

    மனம் விட்டு எழுதிவிட்டேன். அதிக நேரம் உரையாட முடியல. அதனால் தான்.

    நிச்சயம் ஜெயிப்பீர்கள். நினைத்தவற்றை அடைவீர்கள்.
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!