Tuesday, April 24, 2012

டிக்கிலோனா பேஷன்ஸ்



ஒரு காலத்தில் பெல்பாட்டம், பெரிய காலர் வைத்த சட்டை, பேகி பேண்ட் போன்றவை பேஷனாக இருந்தன,பாக்கியராஜ், ஸ்ரீதர் போன்றவர்கள் பழைய திரைப்படங்களில் இது போன்ற உடையணிந்து ஆறுக்கு மூன்று சைசில் ஒரு பெரிய கூலர் அணிந்து கொண்டு பாடும் போதும், ஆடும் போதும் பார்த்தாலே சிரிப்பு வரும்

காலப்போக்கில் பழைய ஆடைகள் மறைந்து புது புது பேஷன்கள் உருவாகிவிட்டன, விவேக்கின் ஆஸ்தான அல்லக்கை செல்முருகன் ஒரு படத்தில் சொல்லுவார் ஜட்டி பட்டி தெரியற மாதிரி போடுறதுதான் இப்போ பேஷன் சார்ன்னு

நேற்றைக்கு கோயம்புத்தூரில் ஒருவரை பார்க்க நேர்ந்தது, தன் கேர்ள் பிரண்டுடன் சென்று கொண்டிருந்தார், அவரின் ஜீன்ஸ் இப்பவோ, அப்பவோ எப்போ கழண்டு விழப்போகுதோ எனும் அளவில் ஒரு அபாயகரமான கட்டத்தில் வேண்டா வெறுப்பாக பின்னால் தொங்கி கொண்டிருந்தது, அதை பின்னால் பார்த்த எனக்கு பகீர் என இருந்தது, அவர் அதையெல்லாம் லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை, கடமையே கண்ணாக கடலை போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

பாவம் ஒருவேளை கழண்டு விட்டால் மானம் போய்விடுமே என மெதுவாக அவரிடம் சென்று கூறினேன், அதற்கு அவர் பாஸ் இதுதான் இப்போ பேஷன் பாஸ் என்று கூறி விட்டு சென்றுவிட்டார், எதுடா பேஷன்? ஜட்டி தெரியற மாதிரி, ஜட்டி பட்டி தெரியற மாதிரி பேண்ட் போடுற காலம் போயி இப்போ டிக்கி தெரியற மாதிரி பேண்ட் போடுறதா பேஷன்?

அது எப்படி அந்த ஜீன்ஸ் பேண்ட் தொடைக்கும் முழங்காலுக்கும் நடுவே பேலன்ஸ் பண்ணி நிக்குதுன்னு சத்தியமா எனக்கு புரியலை, இதை கண்டுபுடிச்சவனுக்கு நோபல் பரிசே கொடுத்தாலும் தகும் என்றே தோன்றுகிறது, பின்னே புவி ஈர்ப்பு விசைக்கே பல்ப்பு கொடுக்கறதுன்னா சும்மாவா? இவனுக கூட எல்லாம் எப்படித்தான் வெட்கம் இல்லாம பொண்ணுகளும் சுத்துதோ?


பொண்ணுகளுக்கு வேணும்னா விதவிதமா டிரஸ்ஸஸ் இருக்கலாம், ஆனா ஆம்பிளைகளுக்கு நாலே நாலு வெரைட்டிதான், நார்மல், பேகி, டைட்ஸ், பூட்கட்டுன்னு, இதுக்கு மேல என்னதான் டிசைன் பண்ணுனாலும், அதுவும் இந்த நாலுக்குள்ளதான் அடங்கும், ஆனா அதுக்கும் மேல இஅவனுங்க கண்டுபுடிச்சிருக்கானுங்க பாரு டேஞ்சரஸ் ஜீன்ஸ்சுன்னு, போடற அவனுகளுக்கு டேஞ்சரஸ்சோ என்னவோ, பாக்குறவங்களுக்கு கண்டிப்பா டேஞ்சரஸ்தான், பின்னே காலங்காத்தால ஆபிஸ் போறவங்க, நல்ல காரியத்துக்கு போறவங்க இவனுங்க டிக்கியயெல்லாம் பார்த்துட்டு போனா விளங்குமா?

பொண்ணுங்க கிளிவேஜ் காட்டுனா செக்ஸி, அதுவே ஆம்பிளைக கிளிவேஜ் காட்டுனா டர்ட்டின்னு ஏண்டா புரிய மாட்டேங்குது? ராமராஜன் ஒரு தெய்வபிறவி சார், தீர்க்கதரிசி, அவரு ஒரு காலத்துல டவுசர் போட்டாலோ, இல்லை பச்சை மஞ்சள் கலர்ல பேண்ட் சர்ட் போட்டாலோ கிண்டல் பண்ணிகிட்டு இருந்தாங்க, ஆனா இப்போ பேஷன்னு அதைதான் நம்ம பசங்களும் போட்டுகிட்டு திரியறாங்க,

அதுலயும் ஒருத்தன் பச்சை கலர்ல பனியன், மஞ்சள் கலர்ல பேண்ட், கருப்பு கலர்ல பனியனுக்கு மேல சட்டை, வெள்ளை கலர்ல கேன்வாஸ், ஊதா கலர்ல ரோட்டு ஓரத்துல விக்குற கூலிங்கிளாஸ் போட்டு தலையில கிருதாக்கு மேல நாலு கோடு போட்டுட்டு போறான் சார், சொல்ற எனக்கே காண்டாகுன்னா கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் எவ்ளோ கேவலமா இருக்குதுன்னு? தோள்ல பெரிய பேகு ஒன்னு, அதுக்குள்ள என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க, மத்தியானம் குடிக்கற கஞ்சித்தண்ணியாதான் இருக்கும்.

சோத்துக்கு வழி இருக்கோ இல்லையோ இங்க பேஷனுக்கு மட்டும் கொஞ்சமும் குறைவில்லை, அப்பல்லாம், கொஞ்சம் முடிய ஒண்ட வெட்டுனாலே சட்டித்தலையான்னு கிண்டல் பண்ணுவாங்க, கொஞ்சம் போலீஸ் கட்டிங் மாதிரி வெட்டுனாலே எலி கரண்டி வச்சிருச்சான்னு கேட்பாங்க, அதுவே காலப்போக்குல அட்டாக் கட்டிங் ஆகி, இப்போ கோடு, ரோடு, சமயத்துல கூகிள் மேப்பு வரைக்கும் வரைஞ்சு வெச்சு விளையாடுறானுங்க

டிவில இந்த எலிபிறாண்டுன மாதிரி ஹேர்ஸ்டைல் வச்சிருந்த ஒரு பையன் சொன்னான், இந்த மாதிரி டிபரண்டா எதுனா பண்ணுனாதான் நாலு பேரு திரும்பி பார்ப்பாங்க சார்னு, இந்த மண்டைய பார்த்துட்டு திரும்பி பார்க்குறவங்க எல்லாம் ரோட்டுல ஏதோ ஜந்து நிக்குதுன்னுதான் பார்த்துட்டு போவாங்க, எதாச்சும் சாதிச்சு நாலு பேரு திரும்பி பார்க்குற மாதிரி பண்ணுவான்னா அத விட்டுட்டு மண்டைய பிறாண்டுறானுங்க, பேசாம எல்.ஐ.சில இருந்து குதிச்சு செத்து போயிருடா நாலு பேரு என்ன நானூறு பேராச்சும் பார்ப்பாங்க

இந்த பேஷன் மண்ணாங்கட்டியெல்லாம் நம்மூரை விடவும், கேரளாக்காரங்ககிட்ட கொஞ்சம் அதிகம், அவங்கள பார்த்துதான் நம்மாளுகளும் ஓவரா போறாங்கன்னு நினைக்கிறேன், நல்லவேளை திருப்பூர் வரைக்கும் இந்த பேஷன் இன்னும் வரலை, ஆனா கூடிய சீக்கிரமே இங்கயும் பல டிக்கிவாலாக்களை பார்க்க நேரிடலாம்னு நிறைய அறிகுறி தெரியுது.

12 comments:

  1. அண்ணே இரவு அண்ணே நீங்க எங்கையோ போயிட்டீங்க

    ReplyDelete
  2. யோவ் மாப்ள...இப்படி பேசுனா “பொறாம”ன்னு சொல்லுவாங்கய்யா...பாத்துக்க!

    ReplyDelete
  3. பொதுவா ஜீன்ஸ் போடுறதுக்கு டிக்கி முக்கியம்னு நெனச்சிருந்தேன் முன்னாடி...இப்போ என்னடான்னா இங்கன இருக்குற ஒன்னுத்துக்கும் டிக்கி இல்ல...ஆனா அதுங்க பன்ற அலும்பு இருக்கு பாரு...ஸ்ஸ் அபா முடியல!

    ReplyDelete
  4. ஆமாண்ணே நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனச்சேன் .அது என்னனே இரவு வானம் -DON'T JUDGE , என்னனே அப்படினா ? DON'T னா வேண்டாம்னு அர்த்தம் JUDGE னா நீதிபதி அர்த்தம் .ரெண்டையும் சேத்தா வேண்டாம் நீதிபதின்னு சொல்றீங்களா ? அண்ணே எதாவுது கேசா ? சும்மா சொல்லுனே ,நா வர்றேனே திருப்பூருக்கு நின்னு பாப்போம்னே .விடுனே எவனா இருந்தாலும் பாப்போம்னே

    ReplyDelete
  5. அண்ணே அப்பறம் ஒரு சின்ன சந்தேகம்னே அந்த யான எதுக்குனே பேன்ட்ட கலட்டுது ஒன்ஸ் ஆர் டூஸ் ? (எல்லாம் ஒரு பொது அறிவ வளத்துக்கலாம்னுதான் )

    ReplyDelete
  6. ////நான் ஒன்றும் 100 % சரியானவன் அல்ல//////

    அப்படியா ?100 %= 100 *1/100 =1

    அப்படினா நீங்க ஒரு percent நல்லவரா ?

    ReplyDelete
  7. அமெரிக்காவில் ஒரு இன மக்கள் பெருவாரி மக்களுக்கு வெறுப்பேத்த ஏதாவது செய்து கொண்டே இருப்பார்களாம்...அந்த வரிசையில் அறிமுகமானது தான் இந்த டிக்கிலோனா...

    அது ஈயடிச்சான் காப்பியாகி (தமிழ் ரத்தத்துல உள்ளதுல) இப்பம் இங்க...

    என்ன ஒரே வித்தியாசம் அவங்க பிராண்ட் நேம் உள்ளாடையை வெளிய காமிப்பானுங்க...நாம?

    ReplyDelete
  8. @அமாவாசை அமிர்தலிங்கம் said...
    //ஜீன்ஸ்னா என்ன?//

    அதுவா வெயிலுக்கு போர்த்திக்கிற துணிங்க...

    ReplyDelete
  9. @ விக்கியுலகம் said...
    //பொதுவா ஜீன்ஸ் போடுறதுக்கு டிக்கி முக்கியம்னு நெனச்சிருந்தேன் முன்னாடி...இப்போ என்னடான்னா இங்கன இருக்குற ஒன்னுத்துக்கும் டிக்கி இல்ல...ஆனா அதுங்க பன்ற அலும்பு இருக்கு பாரு...ஸ்ஸ் அபா முடியல!//

    மாம்ஸ் பல சைசுகள்ல பாத்திருப்பீங்க போல :-)))

    ReplyDelete
  10. @ N.Mani vannan said...
    ////நான் ஒன்றும் 100 % சரியானவன் அல்ல//////

    அப்படியா ?100 %= 100 *1/100 =1

    அப்படினா நீங்க ஒரு percent நல்லவரா ?//

    யோவ் போயா ஓவர் லந்து பண்ணுர, உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது...

    ReplyDelete
  11. @ ரெவெரி said...
    அமெரிக்காவில் ஒரு இன மக்கள் பெருவாரி மக்களுக்கு வெறுப்பேத்த ஏதாவது செய்து கொண்டே இருப்பார்களாம்...அந்த வரிசையில் அறிமுகமானது தான் இந்த டிக்கிலோனா...

    அது ஈயடிச்சான் காப்பியாகி (தமிழ் ரத்தத்துல உள்ளதுல) இப்பம் இங்க...

    என்ன ஒரே வித்தியாசம் அவங்க பிராண்ட் நேம் உள்ளாடையை வெளிய காமிப்பானுங்க...நாம?//

    பாஸ் இது எனக்கு புதிய தகவல், நன்றி

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!