Monday, May 14, 2012

மே 17 இயக்கத்தின் தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்




எவ்வளவு வேதனையில் துடித்திருப்பான் இவன் ..
இவன் செய்த வினை என்ன ..?
இந்த உயிருக்கு விலை என்ன ..?
இரத்தமும் வலியினால் மூத்திரமும் சிந்திய சிறார் ..
கிடைத்த புகைப்படங்கள் ஆயிரம் இருக்கையில் 
கிடைக்க செய்யாமல் சிங்களவன் மறைத்த புகைப்படங்கள் எத்தனையோ ...!!!! ஐயோ கண்கள் கூட மூடவில்லை ..இவன் உயிர் திறக்கும் பொது இவனது இளம் உடல் எத்தகைய வலியை பெற்றிருப்பன் என்று அவதானித்தால் ...
நெஞ்சம் பதைக்கிறது....
நன்றி : பேஸ்புக்





தமிழ் ஈழப்படுகொலை நடந்து முடிந்து மூன்றாண்டுகள் முடியப்போகிறது, இதுவரை செய்த போர் குற்றங்களுக்காக இராஜபக்சே அரசும் தண்டிக்கப்படவில்லை, தமிழர்களுக்கும் மறுவாழ்வும் உரிமைகளும் கிடைக்கவில்லை, ஒப்புக்கு சப்பாக உலக நாடுகளும் ஒரு தீர்மானத்தை வலியுறுத்திவிட்டு ஒதுங்கிவிட்டன.

இந்நிலையில் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய உறவுகளுக்கு  ஆதரவளிக்கவும், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ஆதரவளிக்கவும், தோள் கொடுக்கவும், பத்தோடு பதினொன்றாக நடந்து முடிந்த படுகொலைகளும் மறக்கடிக்கப்படாமல் இருக்கவும் மே 20 ஆம்தேதி மெரினாவில் உணர்வோடு ஒன்றுகூடுவோம்.


இந்த செயலில் பங்கு பெற, ஆதரிக்க ஈழ ஆதரவாளராகவோ, ஈழ எதிர்பாளராகவோதான் இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்தால் போதும், மெழுகுவர்த்தி ஏந்துவதால் என்ன பயன் என சாவையும் அரசியலாக்கும் சிலரின் மத்தியில்தான் நாமும் இருக்கிறோம்,

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கொதித்துக் கொண்டிருந்தவர்கள் எண்ணற்ற பேர்கள் தமிழகத்தில் உண்டு, குறைந்தபட்சம் நம்மால் முடிந்த எதிர்வினையாக இதையாவது செய்ய வேண்டாமா?

எனவே உங்களால் முடிந்தமட்டும் இந்த நிகழ்வினை, இச்செய்தியினை பரவலாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

முழு விவரங்களுக்கு இது சம்பந்தமான தேவியர் இல்லம் ஜோதிஜி  அவர்களின் பதிவினை பார்க்கவும். 

மேலும் விவரங்களுக்கு


    

2 comments:

  1. உங்கள் ஆதருகவுக்கு (மக்களின்) நன்றிகள்!!! 20 ஆம் திகதி நீங்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கும் முன்னர் இலங்கை அரசின் 10 நாள் வெற்றி களியாட்டம் முடிவடைந்திருக்கும்!!! மே 10 முதல் 19 வரை இலங்கையின் தலை நகர் கொழும்பில் வெற்றிக் களியாட்டம்!!

    எத்தனை உயிர் போனாலென்ன என்கின்ற செருக்கில், மமதையில் இருப்பவனுக்கு கண்டனங்கள் தூசுக்கு சமன்!! ஆனாலும் உங்களது போராட்டங்கள் இந்திய மற்றும் சர்வதேச அளவில் எமக்கு சாதகமான நிலையை தோற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி!! இல்லாவிட்டால்கூட எங்களுக்காக போராட்டத்தில் கலந்து கொள்ளும் அத்தனை மனிதாபிமானம் மிக்க மக்களுக்கும் (அரசியல் வாதிகளுக்கல்ல) மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  2. பகிர்வுக்கும்,ஈழ மக்களின் கண்ணீர் துடைக்க நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு கை கோர்த்து நிற்பதற்கும் ஈழ மக்கள் சார்பில் நன்றிகள்!

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!