Saturday, May 12, 2012

கலகலப்பு @ மசாலே கபே


மசாலா கபே சுந்தர்.சிக்கு 25 ஆவது படமாம், நாளைய இயக்குனர் சீசனில் ஜட்ஜாக உட்கார்ந்து நாலு பேருக்கு நாற்பது ஐடியா கொடுப்பவர் சொந்த படத்துக்கும் உருப்படியா நல்ல கான்செப்ட் யோசிச்சிருக்கலாம், எத்தன், கண்டேன் காதலைன்னு எற்கனவே வந்த இரண்டு மசாலா படங்களை ஒன்னா அரைச்சு ஹோட்டல் நடத்திருக்காரு இயக்குனர்.

தாத்தா பூட்டன் காலத்துல இருந்து கும்பகோணத்துல மசாலா கபே ஹோட்டலை நடத்திட்டு இருக்கறது விமல் குடும்பம், இந்தகாலத்துலயும் அந்த ஹோட்டல ஓகோன்னு நடத்தனும்கறது விமலோட எண்ணம், ஆனா டன்ஞன் ஹோட்டல பார்த்தாலே யாரும் சாப்பிட வரமாட்டேங்குறாங்க,

கடன உடன வாங்கி டெவலப் பண்ண பார்த்தா மொக்கை காரணத்துல எல்லா ஐடியாவுமே வெளங்காம போகுது, கடன் கொடுத்தவங்க சும்மா இருப்பாங்களா? ஓட ஓட தொறத்துறாங்க இடைவேளை வரைக்கும், இத எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நீங்க யோசிச்சீங்கன்னா நீங்க எத்தன் படம் பார்த்துட்டீங்கன்னு அர்த்தம், இடைவேளை வரைக்கும் இந்த படம் பார்க்குறதுக்கு செல்லமே சீரியல பத்து எபிசோட் தயங்காம பார்த்துடலாம்.

இடைவேளை பக்கமா மிர்ச்சி சிவா வராரு, விமலோட தம்பியாம், திருட்டு கேசுல பெயில்ல வர்ரவரு கும்பகோணம் ஸ்டேசன்ல தினமும் கையெழுத்து போடறதுக்காக ஹோட்டல்லயே தங்கறாரு, அங்க வேலை செய்யுற ஓவியாவ மொக்கை போட்டே கரக்ட் பண்ணுராரு, சும்மா சொல்லக்கூடாது சிவாவ, தான் ஒரு மொக்கை மோகன்கறத அடிக்கடி நிரூபிக்கிறாரு.


இடைவேளைக்கு அப்புறம்தான் சந்தானம் வராரு, அவருதான் படத்தையே தூக்கி நிருத்துறாரு கூடவே அஞ்சலியும் ஓவியாவும் சேர்ந்துதான், அஞ்சலிக்கும் முறைப்பையன் சந்தானத்துக்கும் கல்யாணம், இடையில விமல் வந்து சந்தானத்துக்கு பல்ப்பு கொடுத்து  லவட்டிட்டி போறது எல்லாமே ஏற்கனவே கண்டேன் காதலை படத்துலயே பார்த்திருப்பீங்க, ஹீரோவும் லொக்கேசனும்தான் வேற வேற.

நியாப்படி பார்த்தா விமலும் சிவாவும் வாங்குன சம்பளத்துல பாதிய அஞ்சலிக்கும் ஓவியாவுக்கும்தான் தரணும், அவங்க மட்டும் இல்லைன்னா மசாலாவே இல்லை வெறும் கபேதான், இந்த படத்துக்கு அப்புறம் அஞ்சலிக்கு கணிசமான ரசிகர்கள் கூடி இருப்பாங்கன்றது நிச்சயம் கூடவே ஓவியாவுக்கும்தான், ஏன்னா தமிழ் ரசிகர்களோட நெஞ்சமும் ரொம்ப பெரிசு ;-)

படத்துல மியூசிக், ஒளிப்பதிவு இதெல்லாம் இருக்கான்னே தெரியல, ரெண்டு மூணு பாட்டுக்கு முடிஞ்ச மட்டும் அஞ்சலியும் ஓவியாவும் காட்டு காட்டுன்னு காட்டுறாங்க, அதுலயும் ஓவியா ஆவூன்னா குனிஞ்சு கிளிவேஜ் காட்டுறாங்க, சிபி அண்ணன் பாஷைல சொன்னா மொத்தம் 24 இடத்துல கிளிவேஜ் காட்டுராங்க, ரொம்ப நாள் கழிச்சு இராகவன் சார் நடிச்சிருக்காரு, கடைசியா இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்துல பார்த்த ஞாபகம்.

படத்துல வர நாலு காமெடியவும் டீசர்லயே போட்டுட்டீங்கன்னா படம் பார்க்க வரவங்களுக்கு சிரிப்பு எங்க வரும்? வெறுப்புதான் வரும், கண்டெண்ட் கம்மியா இருக்கும் போது ஓவரான விளம்பரமே ஆப்பு வச்சிரும்கறதுதான் நிஜம், மசாலே கபேயும் விதிவிலக்கல்ல, கேபிள் அண்ணன் வசன உதவின்னு சொன்னாங்க, அவரயே முழுசா எழுத விட்டுருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

கிளைமேக்ஸ் மட்டுமே வெடிச்சிரிப்பு, மற்றபடி வாய்விட்டு சிரிக்க வைக்கவில்லையென்றாலும் புன்னகை பூக்க வைக்கிறது இந்த மசாலா கபே, ஒருதபா பாக்கலாம்.

டிரைலர் 



11 comments:

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    ReplyDelete
  2. அட நீங்க மொய் வைக்க வேணாம்ணே நாங்க வைப்போம்ல.., ஹி ஹி ஹி

    அண்ணே அந்த மூணாவது படம் சூப்பரு.., அதை இன்னம் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாம் ஹி ஹி ஹி ..!

    ReplyDelete
  3. மாப்ளே இது வி்மர்சனமா...எனக்கென்னமோ கேபிள் அய்யா இல்லைன்னா இன்னும் நெறைய கழுவி ஊத்தி இருப்ப போல ஹெஹெ!

    ReplyDelete
  4. மாப்ளே இது வி்மர்சனமா...எனக்கென்னமோ கேபிள் அய்யா இல்லைன்னா இன்னும் நெறைய கழுவி ஊத்தி இருப்ப போல ஹெஹெ!
    ///////////////
    இதையேதான் மாமா நான் எல்லாத்துகிட்டியும் கேட்குறேன் பதிலே சொல்லாத நம்ம ஆளு கூட சண்டைக்கு வர்றாரு.....நான் இன்னும் படம் பார்க்கல பார்த்தபின் எங்க மாம்ஸ் ஆசைய நிறைவேற்றுவேன் இது லட்சியம்.......ஹஹஹஹ!

    ReplyDelete
  5. @ கூகிள்சிறி .கொம்

    இணைத்துவிட்டேன், நன்றி கூகிள்சிறி. கொம்

    ReplyDelete
  6. @ வரலாற்று சுவடுகள்

    வாங்க நண்பா, ஒன்னும் பெரிசா இல்லையே பெருசா போடுறதுக்கு :-)

    ReplyDelete
  7. @ விக்கியுலகம் said...
    மாப்ளே இது வி்மர்சனமா...எனக்கென்னமோ கேபிள் அய்யா இல்லைன்னா இன்னும் நெறைய கழுவி ஊத்தி இருப்ப போல ஹெஹெ!//

    மாம்ஸ் விமர்சனம் எழுதற அளவுக்கு நாம என்ன பெரிய ஆளா? இது என்னோட கருத்துக்கள் மட்டுமே, படம் பயங்கர காமெடி இல்லை, ஆனா டிரைலர பார்த்து பயங்கர இன்ஸ்பிரேசன் ஆகி போய் பார்த்தனா ஆனா ???

    ReplyDelete
  8. @ வீடு சுரேஸ்குமார்

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், நீங்க கலக்குங்க சுரேஷ் :-)

    ReplyDelete
  9. விமர்சனத்துல புள்ளி விவரமெல்லாம் ஹி...ஹி....ஹி......

    திரும்ப ஒருதடவ எண்ணிப்பாருங்க?

    ReplyDelete
  10. விமர்சனம் எழுதுவது அவரவர் பாணி!இதில் குறை சொல்ல என்ன இருக்கிறது?சி.பி கூட சுமார் என்று தான் சொல்கிறார்,பாத்துட்டாப் போச்சு!

    ReplyDelete
  11. ஒரு சில காட்சிகளைத்தவிர பழைய சுந்தர்சி யை தேட வேண்டி இருக்கிறது.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!