Saturday, May 26, 2012

இஷ்டம் - கஷ்டமல்ல



காலம் காலமாக தமிழ்சினிமாவின் ஆபரேசன் தியேட்டர்களில் வெட்டி கூறு போடப்படும் அதே கதைதான், ஆனால் திரைக்கதை என்னும் டிரீட்மெண்டில் உயிர்பிழைக்கிறது இந்த இஷ்டம்.

காதலித்து திருமணம் செய்யும் ஜோடிகள் திருமணத்திற்கு பின் ஏற்படும் சிறு சண்டையால் பிரிந்து சென்று கிளைமேக்சில் ஒன்று கூடுவதே இஷ்டம் பட கதை.

இக்கால இளைஞர்கள் காதலிப்பது, கல்யாணம் செய்வது, விவாகரத்து செய்வது, காதலிக்கும் போதே படுக்கைக்கு போக நினைப்பது என எல்லாவற்றிலுமே அவசரம் காட்டுகிரார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை கருத்தாக சொல்லாமல் போகிற போக்கில் கலகலப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இரண்டு கையெழுத்து ரிஜிஸ்தர் ஆபீசில் போட்டால் திருமணம், அதே இரண்டு கையெழுத்தை விவாகரத்து பத்திரத்தில் போட்டால் டைவர்ஸ், என காதலையும் கல்யாணத்தையும் சீரியசாக எடுத்து கொள்வதில்லை இந்தகால தலைமுறை,

இந்தகால தலைமுறை பிரிவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அந்தகால தலைமுறைகள் பிரியாமல் இருப்பதற்கு திருமணத்தை சீரியசாக எடுத்துக் கொள்வதே காரணம் என சொல்லுகிறார் இயக்குனர்.


ஆரம்பத்தில் விமலின் வட்டமுகமும், மீசை இல்லாத மேனரிசமும் ஐடி இளைஞனாக ஒட்டாமல் தனித்து நின்றாலும், காதல், திருமண வாழ்க்கை என போக போக கதையோடு ஒன்றவைத்து விடுகிறார், நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் தங்கை ஹீரோயினாக அறிமுகம்.

அக்கா அளவிற்கு பாந்தமான முகமும், ஈர்ப்பான நடிப்பும் இல்லாவிட்டாலும், காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவர்சியால் கிறங்கடித்து அக்கவிற்கு தானும் சளைத்தவரில்லை என நிரூபிக்கிறார், எனினும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தனது முதல்படமாக தேர்வு செய்து நடித்ததில் வெற்றி வெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

படத்திற்கு முக்கிய பலமே சந்தானம்தான், கதையோடு ஒட்டிய காமெடியால் கலகலக்க வைக்கிறார் சந்தானம், இடைவேளைக்கு பிறகான பிளாஸ்பேக் காட்சியமைப்பு சந்தானம் இல்லாமல் சல்லியடிப்பதில் இருந்தே சந்தானத்தின் முக்கியத்துவம் தெரிகிறது, எவ்வளவு சீரியசான காட்சிகளையும் நகைச்சுவையாக மாற்றும் சந்தானத்தின் காமெடியால் படம் போவதே தெரியவில்லை.

பாடல்கள் ஆஹா என்று இல்லாவிட்டாலும் ஓகே ரகம், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, இத்யாதி சமாச்சாரங்கள் இப்படத்திற்கு படத்தோடு ஒன்றவைக்கும் அளவிற்கு போதுமான அளவில் உள்ளது, விமலின் அம்மா மற்றும் அப்பாவாக நடித்தவர்கள் பொருத்தமான தேர்வு.


இக்காலத்தில் ஹாஸ்டலில் வசிக்கும் பெண்களின் நடவடிக்கைக்கு, ஹீரோயினிடம் ஹாஸ்டல் நண்பி கூறும் “சென்னைக்கு வந்துட்ட சீக்கிரம் பாய்பிரண்ட் வச்சிக்க இல்லாட்டி போரடிக்கும்” என்று கூறுவதில் இருந்து இறுதியில் “ லவ் பண்ணும் போது பசங்க பொண்ணுக கூட பார்க்கு, பீச், ஹோட்டல்னு எல்லா இடத்துக்கும் வருவாங்க, ஆனா அபார்ஷன் பண்ண நாம தனியாத்தான் போகனும்” என்று சொல்வதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஊடலும், கூடலும், வார்த்தை போர்களும் காதல் மற்றும் கல்யாண வாழ்வின் ஒரு அங்கம்தான், அதையே காரணம் காட்டி விவாகரத்து வரை போகக்கூடாது என்று எல்லோருக்கும் புரியும்படியும், உணரும்படியும், எளிதாக சொல்லி இருப்பதால் இஷ்டப்பட வைக்கிறது இந்த இஷ்டம்.

தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.
------------------------------------------------@@@@@@------------------------------------------
கடைசியா கிறுக்குனது

   

14 comments:

  1. ////இரண்டு கையெழுத்து ரிஜிஸ்தர் ஆபீசில் போட்டால் திருமணம், அதே இரண்டு கையெழுத்தை விவாகரத்து பத்திரத்தில் போட்டால் டைவர்ஸ்///

    அட அட என்ன ஒரு கண்டுபிடிப்பு ,கலக்கல் தல அப்படிதான் அடிச்சி ஆடுங்க

    ReplyDelete
  2. தல அவரு அங்க என்ன பண்றாரு ?

    ReplyDelete
  3. @N.Mani vannan
    தல அவரு அங்க என்ன பண்றாரு ?
    /////////////////
    கொசு கடிச்சிருச்சாம் இடுப்புல வாயால கொசுவ கவ்வி சாவடிக்கிறாரு.....!

    ReplyDelete
  4. இஸ்டம் குஸ்டமா இல்லை பார்க்கலாம்ன்னு நம்ம ஆளு சொல்றாரு...! போவோம்!

    ReplyDelete
  5. அக்காவ வுட தங்கச்சி சுமாரா இருக்கே

    ReplyDelete
  6. படம் பாத்துடலாம் சார் டவுன்லோட் பண்ணி

    ReplyDelete
  7. என்னாது இஷ்டம் குஷ்டம் இல்லையா...? யாருலேய் அங்கே அந்த அருவாளை இங்கிட்டு தூக்கிப்போடு.

    ReplyDelete
  8. கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !!!

    ReplyDelete
  9. விமர்சனம் அருமை!பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள்,பாத்துடுவோம்!

    ReplyDelete
  10. விமர்சனம் அருமை

    ReplyDelete
  11. கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
    இணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
    இவண்
    உலகசினிமா ரசிகன்,
    கோவை

    ReplyDelete
  12. இஷ்டம் பார்ப்பது நஷ்டம் என சில பதிவர்கள் பதிய வைத்து விட்டார்கள்.
    உங்கள் பதிவு பார்க்க தூண்டுகிறது.
    சைடு எபெக்ட் வராதே?

    நேற்று போல் அடிக்கடி சந்திப்பதே இஷ்டம்.

    ReplyDelete
  13. @ உலக சினிமா ரசிகன்

    சார் என்னைய இன்னும் ஞாபகம் வெச்சதுக்கே ஸ்பெசல் தாங்க்ஸ் ஹி ஹி. எனக்கும் அடிக்கடி இப்படி சந்திக்க ஆசைதான், இஷ்டம் பார்ப்பது உங்கள் இஷ்டம்தான் என்றாலும் கஷ்டம் வராது என நான் இஷ்டப்பட்டு சொல்கிறேன்

    ReplyDelete
  14. கஷ்டம் - இஷ்டமல்ல

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!