Saturday, July 7, 2012

கமர்சியல் பக்கங்கள் - 07/07/2012


சிறை நிரப்பும் போராட்டம்

இந்த வாரம் முழுக்க தி.மு.கவின் சிறை நிரப்பும் போராட்டம்தான் ஹைலைட், நாளிதழ்கள், சமூக வலைதளங்கள்னு எங்கு பார்த்தாலும் கேலியும், கிண்டலும், சாதனை அறிக்கையுமாக ஒரே களோபரமாக இருந்தது, வாராவாரம் ஒவ்வொரு கட்சிக்காரங்களும் இப்படி எதாவது பண்ணிட்டு இருந்தா ஜனங்களுக்கும் ஜாலியா பொழுதுபோகும்

நான் பார்த்தவரைக்கும் ஐயாவ கிழிச்சு தொங்கபோடுற அளவுக்கு யாரும் அம்மாவ பத்தி எழுத மாட்டேங்குறாங்க, ஆட்டோ கூட வராது ஸ்டெயிட்டா புல்டவுசரு விட்டு ஏத்திருவாங்களோன்னு பயமான்னு தெரியல!



முதல்வரா வரவங்க மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை சாதனைன்னு பிரகடனப்படுத்தறத முதல்ல தடுத்து நிறுத்தனும், அய்யாவுக்கு ”அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவதுன்னா” அம்மாவுக்கு ”நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளாம்”, முதல்ல இப்படி கேட்சிங்க் லைன் எழுதி கொடுக்கற அந்த பதினோரு பேரு கொண்ட குழு யாருன்னு கண்டுபுடிச்சு ஸ்ருதிஹாசன் ஸ்டைல்ல வாயிலயே போடனும், ஐ.ஏ.எஸ் அதிகாரிங்க யாரும் வேலை செய்யறதில்லை போல

கனவு கண்ட கதை

சின்ன வயசுல எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும், நல்லா தூங்கிட்டு இருப்பேன், திடீர்னு நடுராத்திரி ஒரு மணிக்கு முழிச்சு பார்த்தா நடு சுடுகாட்டுல நான் கட்டிலோட படுத்து கிடப்பேன், பயத்தோட சுத்தி பார்த்தா செத்து கிடக்கற பொணங்க எல்லாம் குழியில இருந்து மேல எந்திரிச்சு வந்து என்னோட கட்டில சுத்தி நின்னுக்கும், பயந்து போய் அலறி எந்திரிச்சு ஓடுவேன், பின்னாடியே பொணங்க தொறத்திட்டு வரும், 


விடாம ஓடுவேன் சுடுகாட்டோட வாசலுக்கு பக்கத்துல நெருங்கும்போது அந்த பேய்ங்க என்ன புடிச்சிடும், அந்த உச்சகட்ட மரண அவஸ்தைல வீல்னு கத்தி எந்திரிச்சுருவேன், கத்துன கத்துல வீட்டுல இருக்கரவங்க எல்லாம் எந்திரிச்சிருவாங்க, இந்த கனவு விடாம வந்துட்டு இருந்தது, அப்புறம் வாலிபவயசுல வேற கனவெல்லாம் வந்துட்டு போச்சு, கடந்த பத்து வருச காலமா ஒரு கனவு கூட வரது இல்ல, படுத்ததும் தூங்கிடுவேன், ஆனா இப்ப ஒரு மூணுவாரமா மறுபடியும் கனவு வருது, அது என்ன கனவுன்னு சொல்லமாட்டேன், ஆனா ஏன் வருதுன்னுதான் தெரியல?

நன்றி நவிழ்தல்


இந்தவார கோவை பதிப்பு விகடன் வலையோசையில் என்னுடைய இரவுவானம் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்னுடைய தளத்தினையும் தேர்ந்தெடுத்த விகடன் நிருபர் திரு. சக்திக்கும், விகடன் நிறுவனத்திற்கும், தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த வீடு சுரேஸ்குமார் மாம்சுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஈ

ஹீரோக்கள்கிட்ட கால்கடுக்க நின்னு கால்சீட் வாங்கி கோடிகோடியா பணத்த சம்பளமா கொட்டி கொடுத்து படம் எடுத்து ரீலிஸ் பண்ணி தாவு தீர்ந்து பணமும் தீர்ந்து போறதுக்கு இந்தமாதிரி நாலு அனிமேசன் படம் பண்ணி காசு பாத்திரலாம்னு கண்டிப்பா நாலு புரொடியூசர்களாவது நினைப்பாங்க படம் பார்த்தாங்கன்னா

ஒரு ஈ தன்னுடைய காதலிய அடையறதுக்காக தன்னை கொலை பண்ணினவனை ஈயா உருவம் எடுத்து வந்து எப்படி பழிவாங்குதுங்கரதுதான் கதை, கிராபிக்சே தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கொஞ்சமே கொஞ்சம் போரடிச்சாலும் விறுவிறுப்பா இருக்கு, குழந்தைக பசங்களோடு குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம், சம்மர்ல மட்டும் வந்திருந்தா சும்மா பிச்சிருக்கும்

ஒரு உதவி

பேஸ்புக்கில் பார்த்தது, உதவி கிடைத்துவிட்டதான்னு தெரியல, எதுக்கும் இங்க பகிர்ந்துக்கறேன்


நண்பர்களே !

மேலே நீங்கள் காண்பவை கற்பகவள்ளி என்ற மாணவி மேல்நிலைப்பள்ளியில் எடுத்த மதிப்பெண். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ( 2012 ஆண்டு ) படித்த இந்த மாணவிக்கு அம்மா மட்டுமே உள்ளார். மாணவியின் அம்மா கூலி தொழிலாளி ஆகையால் மாணவியை மேல்படிப்பு படிக்கவைக்க முடியவில்லை, மாணவிக்கோ இன்ஜினியரிங் படிக்க ஆசை, படிக்கும் இந்த மாணவிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவன் 
உங்களில் ஒருவன் 
9944134437


எதிர்பாக்கும் மொக்கை படம்


படத்தோட பேரு சேலத்து பொண்ணாம், சார்தான் ஹீரோ, இருக்கறதுலேயே டீசண்டான ஸ்டில்லு கீழ இருக்கறது மட்டும்தான், மீதி ஸ்டில்ல பார்க்கனும்னா கூகிளுங்க..!



டிரைலர்

படத்தோட பேரு 18 வயசு, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியோட மகன் ஹீரோவா நடிக்கறாரு, அதே ரேணிகுண்டா டீம், வழக்கமான காதல் கதைதான் போல, ஆனா ஹீரோ குரங்கு, நரி, பறவை மாதிரி தினுசு தினுசா நகாசு வெல பண்ணுவாரு போல படத்துல, பொதுவா டிரைலர் நல்லா இருந்தா படம் நல்லா இருக்காது பார்ப்போம்




39 comments:

  1. அது என்ன கனவு மச்சி மீண்டும் பேய் கனவா இல்லை எதாவது கில்மா கனவா ??
    ஈ படம் நல்ல இருக்கா மச்சி
    நன்றி நவிழ்தல் விகடனுக்கு மட்டும்தானா உங்களை பிரபலபடுத்திய (பேஸ் புக் முழுக்க உங்களை பேஷா விளம்பரபடுத்தி போஸ்டர் ஒட்டினாஇந்த நண்பனுக்கும் இல்லையா)
    சேலம் பொண்ணு படத்தோட ஹீரோ உன் நண்பரா மச்சி ஆள் வில்லன் போல இருக்கார் ####

    ReplyDelete
  2. சேலம் பொண்ணு படத்தோட ஹீரோ உன் நண்பரா மச்சி ஆள் வில்லன் போல இருக்கார் ####//

    no ivarethaan

    ReplyDelete
  3. அன்பு நண்பர்(கவனிக்க),
    தங்கள் மேலான பதிவு கண்டு பொங்கி எழுந்தேன். அவ்வாறு என்னைப் பாதிப்படைய வைத்தது, தங்களின் முதல் பத்தியான "சிறை நிரப்பும் போராட்டம்". அதில் தாங்கள் குறிப்பிட்டு இருப்பது போல,"ஆட்டோ கூட வராது ஸ்டெயிட்டா புல்டவுசரு விட்டு ஏத்திருவாங்களோன்னு பயமான்னு தெரியல! " என்றெல்லாம் கொச்சைப்படுத்துகிறீர்கள்! எனினும், தங்கள் அறியாமையைக் கண்டு சிரிக்காமலிருக்க இயலவில்லை!

    ReplyDelete
  4. எனினும், தங்களுக்கு ஒரு மேன்மை தாங்கிய கருத்தை முன்வைக்க விழைகிறேன்!

    --
    --
    --
    --
    --
    --
    --
    --
    --

    "அம்மாவப்பத்தி எழுதுனா, ஆட்டோவும் வராது புல்டோசரும் வராது"

    --
    --
    --
    --
    --
    --
    --
    --
    --
    --
    "குனிய வச்சு ஜூஸ் புழுஞ்சிருவாங்க மை லார்ட்"

    ReplyDelete
  5. புரிதலுக்கு நன்னி!

    ReplyDelete
  6. //சிறை நிரப்பும் போராட்டம்//

    என்னமோ மாப்ளே, சும்மா நச்சுன்னு சொல்லீடீகளே

    ReplyDelete
  7. //சொல்லிக்கற அளவுக்கு நான் வொர்த் இல்லீங்க..!//

    தன்னடக்கம் உங்க கிட்ட தான் கத்துக்கணுமோ

    ReplyDelete
  8. @ sasemkumar

    கில்மா கனவெல்லாம் இல்ல, வேற கனவு, உனக்கும் நன்றி மச்சி, அந்த படத்தோட ஹீரோ வேற யாருமில்ல நம்ம சிரிப்பு போலீஸ்தான்

    ReplyDelete
  9. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    antha hero neengkathaana boss?//

    நானும் இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன் பாஸ், கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் குண்டாகிட்டீங்க போல :-)

    ReplyDelete
  10. @ வெளங்காதவன்™ said...
    அன்பு நண்பர்(கவனிக்க),
    தங்கள் மேலான பதிவு கண்டு பொங்கி எழுந்தேன். அவ்வாறு என்னைப் பாதிப்படைய வைத்தது, தங்களின் முதல் பத்தியான "சிறை நிரப்பும் போராட்டம்". அதில் தாங்கள் குறிப்பிட்டு இருப்பது போல,"ஆட்டோ கூட வராது ஸ்டெயிட்டா புல்டவுசரு விட்டு ஏத்திருவாங்களோன்னு பயமான்னு தெரியல! " என்றெல்லாம் கொச்சைப்படுத்துகிறீர்கள்! எனினும், தங்கள் அறியாமையைக் கண்டு சிரிக்காமலிருக்க இயலவில்லை!//

    சிரிக்க முடியலைன்னா போய் ரூம் போட்டு அழுய்யா

    ReplyDelete
  11. @ வெளங்காதவன்™ said...--
    "குனிய வச்சு ஜூஸ் புழுஞ்சிருவாங்க மை லார்ட்"//

    மச்சி ஏற்கனவே உனக்கு நிறைய புழிஞ்சிட்டாங்க போல அனுபவம் பேசுதோ?

    ReplyDelete
  12. @ வெளங்காதவன்™ said...
    புரிதலுக்கு நன்னி!//

    தங்களின் அனுபவ மொழியினை கண்டு இலையறித்து போனேன், நன்னியோ நன்னி

    ReplyDelete
  13. @ மனசாட்சி™ said...
    //சிறை நிரப்பும் போராட்டம்//

    என்னமோ மாப்ளே, சும்மா நச்சுன்னு சொல்லீடீகளே//

    எல்லாம் நீங்க ஊட்டுன அறிவுப்பால் மாம்ஸ் :-)

    ReplyDelete
  14. @
    மனசாட்சி™ said...
    //சொல்லிக்கற அளவுக்கு நான் வொர்த் இல்லீங்க..!//

    தன்னடக்கம் உங்க கிட்ட தான் கத்துக்கணுமோ//

    தன்னடக்கமா எதாவது சொன்னா அதவெச்சே நாலு நாள் ஓட்டுறானுங்க நம்ம பசங்க வேறென்ன பண்ணுறது மாம்ஸ்?

    ReplyDelete
  15. அய்யாவை கிண்டலடிக்கும்போது மட்டும் பொளேர்'ன்னு கன்னத்துல அறையுற மாதிரி விமர்சிப்பவர்கள், அம்மாவை விமர்சிக்கும்போது செல்லமாக கன்னத்தில் தட்டிக்கொடுக்கிறார்கள்... (அவங்க நடுநிலையாளர்களாமாம்...) ஆனாலும் அவர்களின் எழுத்தை படிப்பது கூட பொழுதுபோக்கு தானே...

    பொண்ணுங்க துரத்துற மாதிரி கனவு வரவேண்டிய வயசுல பொணங்க துரத்துற மாதிரி கனவு வந்திருக்கு...

    வலையோசையில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்...

    சேலத்து பொண்ணு மட்டுமில்லை... 18 வயசு படமும் நிச்சயம் சூரமொக்கை தான்... (நானும் ட்ரைலர் பார்த்தேன்... சைக்கோ படமாம்...) ஆனா அதுக்காகவே நீங்களும் நானும் பார்த்துவிடுவோம் தானே...

    ReplyDelete
  16. தம்பி...!அய்யாவ பத்தி எழுதினாத்தான் புரையேர்ற மாதிரி சிப்பு வருது.......

    அம்மாவ பத்தி எழுதினா சிப்பு வரமாட்டிங்குது!
    அவங்க அறிக்கையே செம காமடியா இருக்கும்....!

    ReplyDelete
  17. ஆனா இப்ப ஒரு மூணுவாரமா மறுபடியும் கனவு வருது, அது என்ன கனவுன்னு சொல்லமாட்டேன், ஆனா ஏன் வருதுன்னுதான் தெரியல?
    //////////////////////
    என் போஸ்ட்ட படிச்சிருப்பிங்க அதான்.......கருமம் அதெல்லாம் படிக்காதிங்க.....!

    ReplyDelete
  18. //வலையோசையில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்...///

    அட... ஆமாம்யா!!!!

    வாத்துக்கள்!

    ReplyDelete
  19. வீடு சுரேஸ்குமார் மாம்சுக்கும்,
    ///////////////////
    எப்பவோ வரவேண்டியது....நீங்க சம்மதிக்கல...இது உங்க எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்! நான் சிறு துறும்பு மாப்ள...!

    ReplyDelete
  20. ஈ...படம் விமர்சனம் எதிர்பார்த்தேன் ஏமாற்றம்!

    ReplyDelete
  21. வணக்கமுங்க!நல்ல கமர்ஷியல் விமர்சனம்.

    ReplyDelete
  22. சேலத்து பொண்ணு மட்டுமில்லை... 18 வயசு படமும் நிச்சயம் சூரமொக்கை தான்... (நானும் ட்ரைலர் பார்த்தேன்... சைக்கோ படமாம்...) ஆனா அதுக்காகவே நீங்களும் நானும் பார்த்துவிடுவோம் தானே...
    ///////////////////////////////////////
    ஆமா...!ஆமா....!செத்தான்டா சேகரு!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  24. முதலில் வாழ்த்துக்கள் சகோ

    சிறை நிரப்பு பற்றி நான் கண்டு கொள்ளவே இல்லை....

    கனவு விடயம் சுவாரசியமாகவும் ஆனால் வயிற்றில் புளி கரைப்பதாககவும் இருக்கிறது...

    ReplyDelete
  25. அந்த மாணவி மதிப்பெண் சான்றிதழ் ஒரு கணம் அங்கே நிறுத்தியது.. உங்கள் அக்கறைக்கு தலை வணங்குறேன்...

    ReplyDelete
  26. பதிவு அருமை...

    குறிப்பா முதல் டாபிக்...

    அப்புறம், விகடன் சமாசாரத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... அடக்கமாய் பத்தோட பதின்னொன்னா சொல்லிட்டீங்க... நானெல்லாம் தனி பதிவு போட்டு அலப்பறை கொடுத்தேன்...நம்ம சுரேஸ் மாம்ஸ் பாணியில... :)

    நான் ஈ.. இன்னும் பாக்கல... நாலு வரி சொல்லியிருந்துதால கதை சுருக்கம் சொல்லியிருக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்... ஏமாந்துட்டேன்...:(

    கடைசியா, அந்த ட்ரைலர்... ஜானிதானே ஹீரோ.. அவன் சக்கரவர்த்தி பையனா? இன்னொரு ஆளவந்தான் inspiration போல...

    ReplyDelete
  27. வலையோசையில் படித்தேன். மகிழ்ந்தேன். "சிகரம் தொட வாழ்த்துக்கள்".

    ReplyDelete
  28. @ Philosophy Prabhakaran

    வாழ்த்துக்கு நன்றி பிரபா, எந்த மொக்கை படமா இருந்தாலும் கலங்காம பாப்போம் வாங்க

    ReplyDelete
  29. @ வீடு சுரேஸ்குமார் said...
    தம்பி...!அய்யாவ பத்தி எழுதினாத்தான் புரையேர்ற மாதிரி சிப்பு வருது.......

    அம்மாவ பத்தி எழுதினா சிப்பு வரமாட்டிங்குது!
    அவங்க அறிக்கையே செம காமடியா இருக்கும்....!//

    மொதல்ல உங்களத்தான் புல்டோசர்ல வுட்டு ஏத்தப்போறாங்களாம் மாம்ஸ்

    ReplyDelete
  30. @ வெளங்காதவன்™ said...
    //வலையோசையில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்...///

    அட... ஆமாம்யா!!!!

    வாத்துக்கள்!//

    என்னது வாத்துக்களா பிச்சிபுடுவேன் பிச்சு

    ReplyDelete
  31. @ oga.S. said...
    வணக்கமுங்க!நல்ல கமர்ஷியல் விமர்சனம்.//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  32. @ ஜோதிஜி திருப்பூர் said...
    THANKS TO VIKATAN.

    ரொம்ப நன்றிங்க சார்

    ReplyDelete
  33. @
    NAAI-NAKKS said...
    வாழ்த்துக்கள்....//

    ரொம்ப நன்றி நக்கீரன் சார்

    ReplyDelete
  34. @ ♔ம.தி.சுதா♔ said...

    மிக்க நன்றி சுதா சார், உங்களுக்கும் நிறைய கனவு அனுபவம் உள்ளது போல் இருக்கிறது

    ReplyDelete
  35. @ மயிலன் said...

    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மயிலன், நீங்கள் தரமான எழுத்தாளர் நீங்கள் கொண்டாடியது தவறில்லை, அப்புறம் ஈ படம் கதையே அவ்வளவுதான், கதை தெரிந்தாலும் சுவாரஸ்சம் குறையாது, டெக்னிக்கல் விசய்ம் மட்டுமே பிரமிப்பூட்டும், ஜானி சக்ரவர்த்தி மகன்தான்

    ReplyDelete
  36. @ Robert said...
    வலையோசையில் படித்தேன். மகிழ்ந்தேன். "சிகரம் தொட வாழ்த்துக்கள்".//

    மிகவும் நன்றி சார், நீங்களும் மிகவிரைவில் சிகரம் தொடுவீர்கள்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!