Thursday, July 26, 2012

கமர்சியல் பக்கங்கள் - 26/07/2012



பேஸ்புக், டிவிட்டர், சமூகவலைதளங்கள் எல்லாத்துலயும் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஸ்டேட்டஸ் போட்டு கிழிகிழின்னு கிழிக்கறாங்களே எதுக்கு? இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து திருந்திருவாங்கன்னா? அய்யய்யோ நம்மள இவ்வளவு பேரு திட்டி இருக்காங்களே நாம இனிமே இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு மாத்திக்குவாங்கன்னா? இல்லை நாம போடுற ஸ்டேட்டஸ் பார்த்து தப்பு பண்றவங்க திருந்திருவாங்கன்னுதான் எல்லாரும் நம்புறமா என்ன?

ஒன்னும் கிடையாது, நமக்கு தேவை டைம் பாஸ், அவங்களுக்கு அவங்க பண்றதுல பாஸ்(BOSS), நாளைக்கே எல்லாரும் திருந்தி நல்லவங்களா ஆகிட்டாங்கன்னு வச்சுக்கங்க, நீங்க எல்லாம் ஸ்டேட்டஸ் போட என்ன பண்ணுவீங்க?  அதனால அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்னு ஒவ்வொருத்தனையா தேடி தேடி திட்டி ஸ்டேட்டஸ் போடுறதுக்கு பதிலா உருப்படியான விசயங்களா, பேங்க் சலான் பில்லப் பண்றதுல இருந்து இந்திய ஜனாதிபதியா ஆகற மேட்டர்வரைக்கும் மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய, தெரியாத விசயங்களை ஸ்டேட்டசா போட்டு நாலு பேருக்கு தெரிஞ்சுக்க வச்சா கொஞ்சமாவது உருப்படியா இருக்கும், நானும் டிரை பண்றேன் J முடியல.

வெளம்பர தொல்லை

டிவில புதுசா ஒரு பேர் அண்ட் லவ்லி விளம்பரம் பார்த்தேன், மூஞ்சில டேமேஜ் வந்த பொண்ணு ஸ்கின் டாக்டர்கிட்ட போய் என்ன பிரச்சனைன்னு கேட்குது, அந்த டாக்டரம்மாவும் இததெல்லாம் இருக்குதுன்னு சொல்லிட்டே வர அந்த பொண்ணும் பேர் அண்ட் லவ்லி பின்னாடி எழுதி இருக்கறதயும் சரிபார்க்குது, கடைசியா டாக்டர் டிரீட்மெண்டுக்காக பிரிஸ்கிரிப்சன் எழுதட்டுமான்னு கேட்க, அந்த பொண்ணு அதெல்லாம் வேணாம் அதுக்கெல்லாம் தீர்வு இந்த பேர் அண்ட் லவ்லியிலயே இருக்குது, நான் சும்மா செக் பண்ண வந்தேன்னு சொல்லிட்டு போகுது, கட் பண்ணா வலதுபக்கம் ஒரு ஷாட், இடது பக்கம் ஒரு ஷாட், நேரா நிக்க வச்சு ஒரு ஷாட், அடடே ஆச்சரியக்குறி அந்த பொண்ணு மூஞ்சில இருக்கற கரும்புள்ளி செம்புள்ளியெல்லாம் காணாம போயிருது, எதிர வர அந்த டாக்டர பாத்து உங்களுக்கும் வேணும்னான்னு கேட்குது.


அடேய் நாதாரிகளா அதென்னடா செவத்த புள்ளைய மாடலா போட்டு பேர்னஸ் கிரீம் விளம்பரம் எடுக்கறீங்க? உண்மையிலயே உங்க பேர்னஸ் கிரீம் போட்டு செவப்பா மாறுமுன்னா எங்க ஊரு அருக்காணி யாராவது வெச்சு செவப்பா மாத்தி காட்டுங்க பாப்போம்? சும்மா ஆறு வாரத்துல சிவப்பழகுன்னு பிலிம் காட்டுரது, எங்க பக்கத்து ஊட்டு அக்கா பதினாரு வருசமா பேர் அண்ட் லவ்லியதான் யூஸ் பண்ணுது, இன்னும் செவக்கலையே, வீட்டுக்கு டிஸ்டம்பர் ரெண்டு கோட்டிங் எக்ஸ்ட்ராவா அடிக்கிறமாதிரி முதல்ல ஒருதடவை பூசி அதுக்கு மேல பவுடர பூசி மறுபடியும் ஒருக்கா பேர் அண்ட் லவ்லி போட்டு அதுக்குமேல இன்னொருக்கா பவுடர பூசி ஈவில் டெட் படத்துல வர பேய்கணக்காதானடா நெறய பொண்ணுங்க சுத்திகிட்டு இருக்காங்க, மூஞ்சிக்கு கீழ முழங்கைய பாத்தாதான் தெரியும் நெய்வேலில வெட்டி எடுத்த நிலக்கரி கணக்கா ஒரிஜினல் கலர் இருக்கறது.

பொருள் தரமானதா, உண்மையானதா இருக்க வேண்டிய அவசியமே இல்லை போல, கோடிக்கணக்குல கொட்டிகொடுத்து விளம்பரம் பண்ணி பிராண்ட் நேம் மக்கள் மனசுல பதிய வச்சிடராங்க, சோப்புன்னா லக்ஸ், பேஸ்டுனா கோல்கேட், கிரீம்னா பேர் அண்ட் லவ்லின்னு, உண்மையா நல்ல பொருள உற்பத்தி பண்ணக்கூடியவன் இவனுங்க அக்கபோருக்கு நடுவுல நிக்க கூட முடியாம போயிடரது வருத்தப்படகூடிய விசயம்.

படித்ததில் பிடித்தது

உலகத்தில் எத்தனையோ மொழிகள் தோன்றி இருக்கிறது, காலப்போக்கில் காணமலும் போய் இருக்கின்றது, ஆனால் பல்வேறு விதமான தாக்குதலுக்கு உட்பட்டாலும் தக்கிமுக்கி இன்றைக்கு வரை தமிழ்மொழி தாக்குபிடித்து கொண்டு இருக்கிறது, கொஞ்சமாவது தமிழைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் அதுக்கு காரணம் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சேகரித்து வைத்த ஓலைச்சுவடிகளால்தான், இன்னும் பலநூற்றாண்டுகள் கடந்தும் தமிழை காக்க வேண்டும், உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு நூலகங்கள் தேவை, இணையத்திலும் பதிய வேண்டியது மிக அவசியம், அதுவே தலைமுறை கடந்து தமிழை கொண்டு செல்லும்.

இந்த வேலையை புதுக்கோட்டையில் இருக்கும் ஞானாலயா ஆய்வுநூலகம் என்னும் குழு செய்துகொண்டு இருக்கிறார்கள், தாய்மொழி என்பது தலைமுறையை தாண்டி செல்லும் பந்தம், அதற்கு நீங்கள் எதாவது, எவ்வழியாவது உதவ வேண்டும் என நினைத்தால் மேலதிக விபரங்களுக்கு திரு. ஜோதிஜி அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பதிவினை படியுங்கள், உதவுங்கள்..!



நட்பு

நான் பதிவெழுத வந்த புதுதில் சாய்கோகுலகிருஷ்ணா என்கிற நண்பர் அறிமுகமானார், அவருடைய வலைப்பூவில் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை மட்டுமே பெரும்பாலும் எழுதுவார், அவ்வப்பொழுது விழுப்புணர்வு சம்பந்தமான பதிவுகளையும் எழுதுவார், நாட்டின்மேல் பற்றுகொண்ட உருப்படியாக மட்டுமே எழுதனும்னு நினைக்கற பிளாக்கரில் அவரும் ஒருவர், ஒருநாள் அவருடைய பிளாக்கயும் யாரோ ஹேக் பண்ணிவிடார்கள், அப்புறம் வேறொரு தளம் ஆரம்பித்து வந்துகொண்டு இருந்தார், அப்புறம் அதையும் காணோம், நண்பர் பெங்களூர்காரர், அப்பொழுது அவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், சமீபகாலமாக அவரை கூகிளில் தேடி வருகிறேன், கண்டுபிடிக்க முடியவில்லை, உங்களுக்கு தெரிந்திருந்தாலோ அல்லது அவரின் வலைப்பூ முகவரி தெரிந்தாலோ தெரிவிக்கவும், இப்பதிவினை படிக்க நேர்ந்தால் என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் கோகுலகிருஷ்ணா.


எதிர்பார்க்கும் மொக்கைபடம்


மொக்கை படம் என்றாலே சம்திங் ஸ்பெசல்தான், டிரைலரை பார்த்தாலே தெரிகிறது படம் செம மொக்கை என்று, வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம், வினய் போலீசாம், சந்தானத்தை நம்பி இறங்கி இருக்கிறார்கள், வினய் வேறு டேம்999 படத்தில் நடித்து எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார், ஆகஸ்ட் 2 ரிலீஸ், ஆவலோடு எதிர்பார்க்கிறேன் மிரட்டலை.

கிச்சு கிச்சு



கல்யாணம் ஆன நிறைய பேரு பொண்டாட்டிக மேல காண்டாத்தான் இருப்பாங்க போல, நம்மனால முடியல, அடுத்தவன் ஆவது அடிக்கட்டுமேன்னு, வெடிச்சிரிப்புக்கு நான் கியாரண்டி. :)

?இரவுவானம்



43 comments:

  1. //வெளம்பர தொல்லை//

    வெளம்பரம் பத்தி தனியா பதிவே போடலாமுன்னு இருக்கேன் - கொய்யாலா இவனுங்க இம்சை முடியலப்பு

    ReplyDelete
  2. //கிச்சு கிச்சு//
    செம செம வுடு ஜூட்

    ReplyDelete
  3. என்னப்பா உருப்படியா ரோசிச்சாப்ல இருக்கு...? நல்லா இருய்யா...

    ReplyDelete
  4. ஞானாலயா குறித்த ஜோதிஜியின் கட்டுரையையும் ஞானாலயா வலைப்பதிவையும் சுட்டி கொடுத்து அறிமுகம்செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி. ஞானாலயா ஆய்வு நூலகத்தைக்குரித்து, அவ்வப்போது சில செய்திகளைப்பகிர்ந்து கொள்ள முடியுமானால், ஒரு அறிய புத்தக சேகரத்தைப் பாதுகாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    ReplyDelete
  5. விளம்பரம் பெருந்தொல்லை...

    ReplyDelete
  6. அசின் அப்புறம் சூர்யா இவங்கதான் இந்த கிரீம் போட்டு ரொம்ப அழகானவங்க...

    ReplyDelete
  7. பேஸ்புக்கே டைம்பாஸ்தான்...அதுல பேங்க் சலானை பில்லப் பண்றத போடுறதா....! போய்யா.....போ....புள்ள குட்டிய படிக்கவை!

    ReplyDelete
  8. மாப்ள! கால் உவாய்க்கு மஞ்சளை வாங்கி தேச்சாவே நம்ம அருக்காணி பளபளப்பாயிரும்...நம்ம அம்மணிக யாரு கேட்குறாங்க....கண்ட கருமத்தைப் போட்டு அப்புறம் சீக்கிரம் உள்ளூர் கிழவியாயிருறாங்க....

    ReplyDelete
  9. வீடியோ சூப்பரு....அவ்வ்வ்!

    ReplyDelete
  10. நன்றி சுரேஷ்,

    எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்தில் இருந்தபடியே கூகுள் ப்ளஸ் ல் இருந்த உங்கள் புதிய இந்த கட்டுரையை படிக்க வந்த போது மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

    ஞானலயா குறித்து உங்கள் மூலம் உங்கள் பங்காளிகளுக்கு தெரியப்படுத்துங்க என்று. ஆனால் அதற்குள் நீங்களே போட்டு விட்டீங்க.

    உங்கள் மக்கள் வெறுமனே விமர்சனம் கலாய்த்தல் என்கிற ரீதியில் இல்லாமல் கொஞ்சம் நிதி உதவி செய்தால் மகிழ்ச்சியாய் இருக்கும். 4 தமிழ்மீடியா தளம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் தொடர்பு கொள்ள முடியும். என் அளவுக்கு இதற்காக வேறு சில முயற்சிகளையும் உதவிகளையும் செய்து கொண்டு இருக்கேன்.

    உங்கள் அக்கறைக்கு அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  11. விளம்பரம் என்றாலே தொல்லை தானே..

    ஞானாலயா ஆய்வு நூலகம் - ஒரு நிர்வாகி சமீபத்தில் தான் பேசினார். என்னால் முடிந்த அளவு உதவுதாக சொல்லி உள்ளேன்.
    ஞானாலயா ஆய்வு நூலகத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்.

    சாய்கோகுலகிருஷ்ணா - இந்த (http://vaarthaichithirangal.blogspot.in/2010/10/blog-post_06.html) பதிவில் கருத்து சொல்லிருக்கார். சொடுக்கினால் வேறு இரு தளங்கள் மாறி மாறி வருகிறது.

    நன்றி... (த.ம. 3)

    ReplyDelete
  12. சிறப்பான முறையில் கமர்சியல் பக்கங்களை வடிவமைத்து இருக்கிறீர்கள்! அருமை!

    ReplyDelete
  13. அட நல்லாயிருக்கப்பா..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அந்த வெளம்பரம் தரும் கொடைச்சல் தாங்க முடியல .. சார் ..
    அப்புறம் அந்த கடைசி வீடியோ செம கலக்கல் ..

    ReplyDelete
  15. விளம்பரம் பற்றி ஒரு பதிவு போட யோசித்துக்கொண்டே இருக்கிறேன் , நேரம் தான் சரியாக அமையவில்லை. உங்களது பதிவு அபாரம். மிரட்டலைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன், சந்தானத்துக்காக ஒரு கூட்டம் போகும் என எதிர் பார்க்கலாம், படம் ரிலீசானால்!

    ReplyDelete
  16. கமர்ஷியல் பக்கத்திலும் நல்ல பயனுள்ள தகவல்கள்.


    //பேஸ்புக்
    இது என்னோடு புது செல்ல நாயி. இது என்னோட புது தொடப்பக்கட்டை என்று ஸ்டேட்டஸ் போடுபவர்களை என்ன செய்யலாம்?

    //மிரட்டல்
    நான் நினச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

    ReplyDelete
  17. @ மனசாட்சி™ said...
    //வெளம்பர தொல்லை//

    வெளம்பரம் பத்தி தனியா பதிவே போடலாமுன்னு இருக்கேன் - கொய்யாலா இவனுங்க இம்சை முடியலப்பு//

    சேம் பிளட் மாம்ஸ்

    ReplyDelete
  18. @ MANO நாஞ்சில் மனோ said...
    என்னப்பா உருப்படியா ரோசிச்சாப்ல இருக்கு...? நல்லா இருய்யா...//

    உங்க தொல்லை தாங்க முடியாமத்தான் பதிவே போட்டேன் :-)

    ReplyDelete
  19. @ Krishna Moorthy S said...
    ஞானாலயா குறித்த ஜோதிஜியின் கட்டுரையையும் ஞானாலயா வலைப்பதிவையும் சுட்டி கொடுத்து அறிமுகம்செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி. ஞானாலயா ஆய்வு நூலகத்தைக்குரித்து, அவ்வப்போது சில செய்திகளைப்பகிர்ந்து கொள்ள முடியுமானால், ஒரு அறிய புத்தக சேகரத்தைப் பாதுகாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும்.//

    நிச்சயமாக பகிர்ந்து கொள்கிறேன் சார், உங்களது முயற்சி வெற்றிபெறட்டும், என்னுடைய நண்பர்களிடமும் உதவுமாறு கேட்டு கொண்டிருக்கின்றேன், உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  20. @ கவி அழகன் said...
    Supper//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  21. @ சங்கவி said...
    விளம்பரம் பெருந்தொல்லை...//

    ஆமாம் சார், நிறைய பேரு பாதிக்கப்பட்டு இருக்காங்க போல

    ReplyDelete
  22. @ சமுத்ரா said...
    good one//

    மிக்க நன்றி மதுசூதனன்

    ReplyDelete
  23. @ கோவை நேரம் said...
    அசின் அப்புறம் சூர்யா இவங்கதான் இந்த கிரீம் போட்டு ரொம்ப அழகானவங்க...//

    பரவால்லயே மச்சி ஈசியா கண்டுபுடிச்சிட்டியே

    ReplyDelete
  24. @ வீடு சுரேஸ்குமார் said...
    பேஸ்புக்கே டைம்பாஸ்தான்...அதுல பேங்க் சலானை பில்லப் பண்றத போடுறதா....! போய்யா.....போ....புள்ள குட்டிய படிக்கவை!//

    யாரு புள்ள குட்டிய மாம்ஸ்?

    ReplyDelete
  25. @ வீடு சுரேஸ்குமார் said...
    மாப்ள! கால் உவாய்க்கு மஞ்சளை வாங்கி தேச்சாவே நம்ம அருக்காணி பளபளப்பாயிரும்...நம்ம அம்மணிக யாரு கேட்குறாங்க....கண்ட கருமத்தைப் போட்டு அப்புறம் சீக்கிரம் உள்ளூர் கிழவியாயிருறாங்க...//

    செவப்பாக வழி சொல்ல சொன்னா மஞ்சளாக வழி சொல்றீங்களே?

    ReplyDelete
  26. @ வெளங்காதவன்™ said...
    நன்னி!!!

    வணக்கம்!!!//

    வணக்கம்

    நன்னி !!!

    ReplyDelete
  27. @ ஜோதிஜி திருப்பூர் said...

    இதெல்லாம் நீங்க சொல்லவேண்டியதே இல்லைங்க சார், அதெல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும் :-) மிக்க நன்றி சார்

    ReplyDelete
  28. @ திண்டுக்கல் தனபாலன் said...

    சார் ரொம்ப ரொம்ப நன்றி, கோகுலகிருஷ்ணாவ கண்டுபுடிச்சு கொடுத்ததுக்கு, நானும் டிரை பண்ணேன் இரண்டு தளங்களுக்கு மாறி மாறி போகுது, கடைசிவரைக்கும் அவரோட மின்னஞ்சல கண்டுபுடிக்க முடியல, எனக்க்காக சிரத்தை எடுத்துக் கொண்டு தகவலை பகிர்ந்து கொண்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார், தேங்க்ஸ்

    ReplyDelete
  29. @ s suresh said...
    சிறப்பான முறையில் கமர்சியல் பக்கங்களை வடிவமைத்து இருக்கிறீர்கள்! அருமை!//

    மிக்க நன்றி சுரேஷ் சார்

    ReplyDelete
  30. @ Athisaya said...
    அட நல்லாயிருக்கப்பா..வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  31. @ அரசன் சே said...
    அந்த வெளம்பரம் தரும் கொடைச்சல் தாங்க முடியல .. சார் ..
    அப்புறம் அந்த கடைசி வீடியோ செம கலக்கல் ..//

    மிக்க நன்றி அரசன் சார், விளம்பரத்தால நிறைய பேரு பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல

    ReplyDelete
  32. @ கிஷோகர் said...
    விளம்பரம் பற்றி ஒரு பதிவு போட யோசித்துக்கொண்டே இருக்கிறேன் , நேரம் தான் சரியாக அமையவில்லை. உங்களது பதிவு அபாரம். மிரட்டலைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன், சந்தானத்துக்காக ஒரு கூட்டம் போகும் என எதிர் பார்க்கலாம், படம் ரிலீசானால்!//

    நீங்களும் மொக்கை பட ரசிகரா? ரொம்ப சந்தோசம், விளம்பரத்தால நிறைய பேரு பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  33. @ பாலா said...
    கமர்ஷியல் பக்கத்திலும் நல்ல பயனுள்ள தகவல்கள்.


    //பேஸ்புக்
    இது என்னோடு புது செல்ல நாயி. இது என்னோட புது தொடப்பக்கட்டை என்று ஸ்டேட்டஸ் போடுபவர்களை என்ன செய்யலாம்?

    //மிரட்டல்
    நான் நினச்சேன் நீங்க சொல்லிட்டீங்க//

    வாங்க பாலா பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுறவங்கள பத்தி உங்க ஸ்டைல்ல ஒரு பதிவு போடுங்க, மிரட்டல் டிரைலரே சுமாராத்தான் இருந்தது, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலா

    ReplyDelete
  34. கோகுல கிருஷ்ணன் கிடைச்சார

    ReplyDelete
  35. nalla pathivu , mirattal padam madhesh directer venkatesh illa..

    ReplyDelete
  36. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமை

    ReplyDelete
  37. நல்லா தா சொல்லிருக்கீங்க.சில கொசுக்களின் தொல்லைகள் முகநூலில் அதிகம்.கண்டிப்பா இத படிக்க வைக்கயும்.வாழ்த்துக்கள் சொந்தமே!


    மயங்காதிரு என் மனமே..!!!!

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!