தமிழில் திரில்லர் படங்கள் வருவதே அரிது, அந்தவகையான படங்களை பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டதால் போஸ்டரில் திரில்லர் என்ற முத்திரை குத்தப்பட்டு இருந்ததை பார்த்ததும் பார்த்தே ஆகவேண்டும் என எடுத்த முடிவு தள்ளிபோய் தள்ளிப்போய் ஒருவழியாக பார்த்தாயிற்று, உண்மையில் இப்படம் ரிலீசாகும் வரை இப்படி ஒருபடம் வர இருப்பதே யாருக்கும் தெரியாத அளவுக்கு திரில் ஆக வைத்திருந்திருக்கிறார் இயக்குனர் காந்திமார்க்ஸ் (நல்லவேளை இல்லையென்றால் அப்பொழுதே கழுவி கழுவி ஊத்தியிருப்பார்கள்)
படத்தின் ஒன்லைன் டூலைன் த்ரீலைன் மொத்தமே அவ்வளவுதான் என்று நினைக்கிறேன், படம் ஆரம்பித்ததில் இருந்து காரில் போகும் ஒரு பெண்ணை நான்குபேர் ஜீப்பில் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள், ஏறக்குறைய இடைவேளை வரை துரத்தல்தான், ஏன் துரத்துகிறார்கள்? எதற்காக துரத்துகிறார்கள்? அப்பெண்ணோடு வயலுக்கு வந்தார்களா? நாற்று நட்டார்களா? களை பிடுங்கினார்களா? என்பதே பொல்லாங்கு திரைப்படத்தின் கதை.
படத்தின் ஹீரோ ராகுலாம், அந்த பெயர் வைத்ததால்தான் என்னவோ தலைவர் படுமொக்கையாக இருக்கிறார், விடியாமூஞ்சி என்று சொல்வார்களே அந்த மூஞ்சி, பலான படத்தில் மோப்பம் பிடிக்கும் கதாநாயகனுக்குரிய முகலட்சணம், ஊட்டி குதிரைபந்தயத்தில் பெட் கட்டியவர் போல படம் முழுக்க ஜான்சியோட (அதாங்க ஈரோயினி பேரு படத்துல) ஓடிக் கொண்டே இருக்கிறார், கமான் ஜான்சி, ஓடி வா ஜான்சி, அவங்க பக்கத்துல வந்துட்டாங்க ஜான்சி, என் கைய புடி ஜான்சி, எனக்கு தெரியும் ஜான்சி நீ என் கையபுடிக்க மாட்டேன்னு, வா ஜான்சி, ஓடு ஜான்சி (திரும்ப திரும்ப பேசர நீ) சாருக்கு இரண்டு லிப் டூ லிப் காட்சிகள் வேறு, ஜென்ம சாபல்யமடைந்திருப்பார்.
(படத்தோட ஹீரோ ராகுல் தம்பி)
ஹீரோயின் ஜான்சி ஒரிஜினல் பேரு நிஷா லால்வாணியாம், பெருமாளின் வராக அவதாரம் போன்ற முக அமைப்பு, குஷ்புவை போன்ற தாராள உடலைப்பு என ஒருமாதிரியாக குஜால்டியாக இருக்கிறார், படம் முழுக்க ஓடு ஓடு என ஓடிக்கொண்டே இருக்கிறார், மலைகளிலும், காடுகளிலும், பாறைகளிலும், தண்ணீரிலும் விழுந்து புரண்டு அடிபட்டு கஷ்டப்பட்டு இருக்கிறார், ஜோதிகா போல நடித்திருக்கிறார், அதாங்க வாங்கிய சம்பளத்திற்கு மேல் நடித்திருக்கிறார்.
வில்லனாக வரும் நால்வரும் படுமொக்கையான ஆக்சன் காட்சிகளால் வெறுப்பேற்றுகிறார்கள், பழைய ஜெய்சங்கர் படம் போல அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்கிறார்கள், ஒரு மெலடி பாடல் தேறும் போல் இருக்கிறது, பழைய பிட்டு படங்களில் வருவதை போல இரண்டு அயிட்டம் சாங்குகள் பாடாவதி பிகர்களை கொண்டு சகிக்கவில்லை.
விரல்களில் நகங்களை பிடுங்குவது, பல்லை கட்டிங்பிளேயரால் பிடுங்குவது, முகத்தில் சிறுநீர் கழிப்பது, ஒரு பெண்ணை அடித்து சாகும்நிலையில் கற்பழிப்பது, பிறகு நெற்றியில் இருந்து தோலினை அப்படியே உரித்து எடுத்து வீடியோ படமாக்குவது என படத்தில் கண்றாவி காட்சிகள் தாரளம், இப்படத்தினை மட்டும் பார்த்தால் புதுமண தம்பதிகள் தேனிலவு என்று எந்தகாட்டுப்பக்கமும் ஒதுங்க மாட்டார்கள், ஆனாலும் இதுபோன்ற அனைத்து வன்முறைகளும் உலகத்தில் எங்காவது ஒருமூலையில் நடந்து கொண்டிருக்கிற வாய்ப்பிருக்கிறது என்பது சுடும் நிஜம்.
மொத்தத்தில் சிலபல குறைகள் இருந்தாலும் ஓரளவு திரில்லர் படத்தினை இயக்குனர் வழங்கியிருக்கிறார், இயக்குனருக்கு திறமை இருக்கிறது, நல்ல படம் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது, இயக்குனர் திருப்பூர்பக்கமோ என்னவோ இயக்குனரை வாழ்த்தி நாலைந்து பிளக்சுகள் தியேட்டரை சுற்றி வைத்திருந்தாகள், இயக்குனருக்கு வேண்டாத யாரோ படத்திற்கு வந்திருப்பார் போல ராகுல், ஜான்சியோடு காதல்புரியும் வேளைகளில் ஒருவர் கெட்டவார்த்தைகளில் விடாத பிடி என்று பின்னாலிருந்து டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார், நகைச்சுவை இல்லாத குறை தீர்ந்தது.
மொத்தத்தில் பொல்லாங்கு – போடாங்க என்று சொல்லவைத்தாலும் ஏனோ எனக்கு பிடித்திருக்கிறது.
கலகிட்டீங்க சூப்பர் விமர்சனம்
ReplyDeleteமிக்க நன்றி ஹாரி பாட்டர் சார்
Deleteசரி பார்த்துடுவோம் நண்பரே .. விமர்சனத்துக்கு என் நன்றிகள்
ReplyDeleteஉங்களின் கருத்துரைக்கு என்னுடைய நன்றிகள் சார்
Deleteபடம் பாக்கணுமா வேண்டாமா சொல்லுய்யா...?
ReplyDeleteபார்த்தா பாருங்க பார்க்கமுடியாட்டி போங்க சித்தப்பு
Deleteவீடு சுரேஷ் மாதிரி ஒரு போட்டோ போட்டிருக்கீங்களே ...அது தான் கதாநாயகனா .........? வெளங்கிரும் .......
ReplyDeleteநான் அவ்வளவு மோசமாவா இருக்கே.....!
Deleteஅஞ்சாசிங்கம் நீங்க ஒருத்தர்தான் கரக்டா கண்டுபுடிச்சிருக்கீங்க, இல்லையா வீடு மாம்ஸ்?
Deleteயோவ் அது அவரோட பினாமி.....
Deleteபினாமியா? பாக்க சுனாமி மாதிரி இருக்காரு?
Deleteஎங்க ஊரு கவுன்சிலரு தயாரிப்பாளராம்! இது ஒரு படம்னுட்டு பார்த்து விமர்சனம் பண்றீங்களே!
ReplyDeleteவிதி வலியது சுரேஷ் சார் :-)
Deleteவயலுக்கு வந்தாயா....நாற்று நட்டாயா....!ஓவர் குசும்புய்யா உமக்கு
ReplyDeleteஎல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டதுதான் மாம்ஸ்
Deleteவிமர்சனம் படிக்க நல்லாயிருக்கு படம் பார்க்க ஒர்த் இல்ல போல...!
ReplyDeleteஒருதடவை பார்க்கலாம் மாம்ஸ் பொறுமை இருந்தா..!
Deleteகலக்கல் விமர்ச்சனம்....
ReplyDeleteமிக்க நன்றி சங்கவி சார்
Deleteஇப்படி ஒரு விமர்சனம் இதற்க்கு முன் படித்ததில்லை
ReplyDeleteவஞ்ச புகழ்ச்சி அணி இப்படியும் இருக்கும் என்று இப்போது தான் தெரியுது .........
ஆனாலும் கதாநாயகியை பெருமாளின் அவதாரத்தோடு ஒப்பிட்ட உங்களின் இறை உணர்வை பாராட்டியே ஆக வேண்டும் ......
ஹி ஹி நன்றி அக்கா
Deleteஇது வஞ்சபுகழ்ச்சி அணி இல்லை, எடுத்துக்காட்டு உவமையணி :-)
///மொத்தத்தில் பொல்லாங்கு – போடாங்க என்று சொல்லவைத்தாலும் ஏனோ எனக்கு பிடித்திருக்கிறது.////
ReplyDeleteவில்லங்கம்...!
நீங்க வந்தது எனக்குதான் வில்லங்கம்
Delete///// பழைய பிட்டு படங்களில் வருவதை போல இரண்டு அயிட்டம் சாங்குகள் பாடாவதி பிகர்களை கொண்டு சகிக்கவில்லை.//////
ReplyDeleteஇதையே முழுப்படமா எடுத்து பறங்கிமலை ஜோதில போட்டா தலைல முக்காடு போட்டுக்கிட்டு போய் பாப்பீங்க......!
பிரிச்சு பேசாதீங்க பன்னிக்குட்டி பாப்போம்னு சொல்லுங்க..!
Delete////ஹீரோயின் ஜான்சி ஒரிஜினல் பேரு நிஷா லால்வாணியாம், பெருமாளின் வராக அவதாரம் போன்ற முக அமைப்பு, குஷ்புவை போன்ற தாராள உடலைப்பு என ஒருமாதிரியாக குஜால்டியாக இருக்கிறார்,/////
ReplyDeleteஅண்ணே நீ நல்லா வருவேண்ணே.... நல்லா வருவே...!
//அண்ணே நீ நல்லா வருவேண்ணே.... நல்லா வருவே...!//
Deleteஏண்ணே ???
கடைசியில் ஏன் அப்படி ஒரு பல்ட்டி?
ReplyDeleteஉண்மையிலேயே எனக்கு பிடிச்சிருந்தது பாஸ்
Deleteபடம் பார்க்கவில்லை நண்பரே.... இனிமேல் தான்..
ReplyDeleteநன்றி...
(த.ம. 4)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
உங்கள் கருத்துரைக்கு நன்றிங்க சார்
Deleteபொல்லாங்கு படத்தை பொருத்தவரைக்கும் நம்மிருவர் கருத்திலும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்காது...
ReplyDeleteவாஸ்தவம்தான் பிரபா
Deleteகடைசில கவுத்துட்டீங்களே நண்பா!!!!.....
ReplyDeleteஹி ஹி ஹி உண்மைய சொன்னேன்
Deleteமாப்ள....என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல...சும்மா சொல்ல கூடாது குவாட்டர் போட்டுட்டுதான் சொல்லணும்.....
ReplyDeleteப்ரோபைல் படம் இப்பதான் மேச்சிங்....
உங்களை போய் பொல்லாங்கு சொல்ல முடியுமா??
என்ன மாம்ஸ் சொல்றீங்க? சரி விடுங்க :-)
Delete