கம்பெனியில்
இருந்து போன், கேஷியர் நண்பன்தான் பேசுனான், டேய் அக்கவுண்ட்ல சேலரி கிரடிட் ஆயிருச்சுடான்னு, சேலரி கிரடிட் ஆயிருச்சா? நமக்கு ஏது சேலரி? அதான் எல்லாம் பிடித்தமும் செஞ்சிருப்பானே? இன்னமும் என்ன பாக்கி இருக்கப் போவுது? சர்தான் பாப்பமே.
பக்கத்துல
கொஞ்ச தூரம் தள்ளி ஒரு ஏடிஎம் இருந்தது, சரின்னு பக்கத்துல போனேன், வாட்ச்மேன் என்கூட படிச்ச தோஸ்த் மாதிரி சிரிச்சான், நானும் சிரிச்சுட்டு உள்ள போய் கார்டை சொருகினேன், பாலன்ஸ் 93 ரூபான்னு வந்துச்சு, 93 ரூபாயா? இதான் சேலரியா? பாலன்ஸ் செக் பண்ணி பாத்தா 63 ரூபாதான் சேலரின்னு போட்டு இருக்கு, பழைய பாக்கியும் சேர்ந்து 93 ரூபா, கருமம் புடிச்சவன் ஒரு ஏழு ரூபா ஜாஸ்தியா போட்டு இருந்தா ஒரு குவாட்டருக்காவது ஆகிருக்கும், சே வட போச்சேன்னு வெளில வந்தேன்.
ஏடிஎம்
வாட்ச்மேன் முன்னவிட அதிகமா சிரிச்சான், சரின்னு நானும் சிரிச்சிட்டே நடந்தேன்,
சார்,
சார்
சாரா?
யாரு நம்மளயா? அந்த வாட்ச்மேந்தான்
சொல்லுங்க
ஒன்னுமில்ல,
டீ செலவுக்கு எதாச்சும் குடுத்தீங்கன்னா? டிப்சு சார்னு தலய சொறிஞ்சான்
டிப்ஸா?
ஏடிஎம்ல பணம் எடுக்க வந்ததுக்கா? என்னமோ நீயே ஏடிஎம் மிஷினா மாறி வாய் வழியா பணம் கொடுத்த மாதிரி சர்வீஸ் பண்ண டிப்ஸ் கேட்குறியா?
வேண்ணா
ஒன்னு பண்ணலாம், என்கிட்ட நாலு ரூபா இருக்கு, உன்கிட்ட நாலு ரூபா இருந்தா சொல்லு எதிர் டீக்கடைல ஒரு டீ வாங்கி ஒன்பைடூ சாப்பிடாலாம்னேன்.
அவன்
என்ன பார்த்த பார்வையில ஓராயிரம் மில்லி எச்சில் துப்பும் பாவனை இருந்ததால் மேற்கொண்டு நிற்காமல் ஓடி வந்துவிட்டேன், நல்லவேளை வொயிட் சர்ட் தப்பிச்சது.
ஒரு
அகால வேளையில் பிரண்டு ஒருத்தருக்கு போன் பண்ண பேலன்ஸ் இல்லாம ரொம்ப அர்ஜெண்டா ஏடிஎம்ல பணம் எடுக்க போனா வாட்ச்மேன் கதவை சாத்திட்டு புல் ஏசி போட்டுட்டு கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காரு, யோவ் எந்திரியா? அர்ஜெண்ட்யா? எந்திரியான்னு கத்தவிட்டான், கடைசில ப்ளீஸ் அஞ்சலி, எந்திரிமா அஞ்சலின்னு மணிரத்னம் படம் மாதிரி கெஞ்சாம விட்டதுதான் பாக்கி.
இப்படித்தான்
பல வாட்ச்மேன்க ஏடிஎம்ம சொந்த வீடு மாதிரியே பொலங்கிட்டு இருக்காங்க, ஒருத்தரு புல் மீல்ஸ்ச மிஷின சுத்தி பரப்பி விட்டு உள்ள ஆளு நிக்க கூட இடம் இல்லாம சாப்பிட்டுகிட்டு இருந்தாரு, அன்னைக்கு நான் பணம் எடுக்க ஆடுன ஆட்டத்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவால ஆடிருந்தா நயந்தாரா எனக்கே கிடைச்சிருப்பாங்க, அப்படி டான்ஸ் ஆடியும் கடைசில டம்ளர தட்டிவிட்டுட்டேன், டென்சனாகி அந்தாளு யோவ் அறிவில்லையான்னு கத்தறான், யாரு எனக்கா? போடாங்க @#$%^& எதாவது சொல்லிட போறேன்னுட்டு
வந்துட்டேன்.
நைட்
வாட்ச்மேன்க பாதிபேரு பாதி என்ன பாதி முழுசாவே வயசான ஆளுங்களாத்தான் இருக்காங்க, அவங்கள பொறுத்தவரை அந்த சின்ன ரூம் அவங்க சொந்த வீடுமாதிரிதான், திருப்பூர் குமரன் ரோடு ஏடிஎம்ல ஒருத்தரு இருப்பாரு, ஏடிஎம் முன்னாடி வண்டிய நேரா நிறுத்துனா மட்டும்தான் உள்ளயே விடுவாரு, கோணலா நிறுத்துனா அவ்வளவுதான், சண்டை கட்டி போதும் போதும்னு ஆகிரும், கொய்யால அவனவன் பணத்த எடுக்க எவ்வளவு அழிச்சாட்டியத்த தாங்க வேண்டியதா இருக்குன்னு பல தடவை நினைச்சதுண்டு.
வயசான காலத்துல
வீட்டுல ரெஸ்ட் எடுக்காம இங்க வந்து உட்கார்ந்து உயிரை எடுக்கறாங்களே, பத்து பேர மொத்தமா
பாத்தா செத்திருவாங்க போல இருக்காங்க, இவங்க எல்லாம் ஏடிஎம் மிஷினயும், பணத்தயும் எப்படி
பத்திரமா பாத்துக்குவாங்கன்னு பேங்கு நம்புதுன்னு ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு கேள்வி
இருந்தது.
வயசான
காலத்துல ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசுல, நைட்டு நடுங்கற குளிர்ல அப்படி உட்கார்ந்து இருக்கனும்னு அவங்களுக்கு என்ன அவசியம்? உற்று கவனிக்க்கும் பொழுதுதான் தெரிஞ்சது
ஒவ்வொருத்தரு முகத்துலயும் ஒவ்வொரு விதமான பீலிங், நேத்து ஒருத்தரு யாருக்கும் தெரியாத
மாதிரி கண்ணீர் விட்டுட்டு இருந்தாரு.
எந்த மகன் பாக்க
மாட்டேன்னு சொன்னானோ? எந்த மகள் கல்யாணத்துகு வாங்குன கடனை அடைக்க முடியலையோ? மாப்பிள்ளைக்கு
அடுத்த சீருக்கு என்ன பண்ணப்போறமோங்கற கவலையோ? வாங்குன சீட்டுக்கு பணம் கட்ட முடியாத
அவஸ்தையோ? வட்டிக்கு வாங்கிட்டு கண்டவன் வாய்ல வாங்கற நிலைமையோ? வீட்டு வாடகை கூட குடுக்க
முடியாத நிலைமையோ? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படற நிலைமையோ? இப்படி எதாவது ஒன்னு
கண்டிப்பா இருக்கத்தான் போகுது,
மிஷின் நிறைய பணமும்,
அதை எடுக்க வர ஜனங்களையும், பணம் இல்லாம வெளில உட்கார்ந்து பார்க்ககூடிய வயசான வாட்ச்மேன்களோட
மனசுல என்ன நினைப்பு ஓடும்?
ஏழையா பொறந்து
ஏழையாவே முதுமை எய்துனா இறுதிகாலம் கூட நிம்மதியா அமையாதான்னு ஏங்கித்தான் சாவனும்னு
தலையெழுத்து போல, இனிமே தப்பா நினைக்க மாட்டேங்க, எந்த வாட்ச்மேனாவது தொல்லையே கொடுத்தாலும்..!
நல்ல இருக்கு தல
ReplyDeleteமாப்ள...!ATM வாட்ச்மேன் அறியாத தகவல்கள் அருமை!...!
ReplyDelete
ReplyDeleteமாப்ளே, செமையான விளக்கம் வித்தியாசமான கோணத்தில் - கடைசி பாரா நின்னுட்டீங்க மனசுல
என்னதான் ஏடாகூடமாக பேசினாலும், அவர்களின் வயதும், அந்த வயதிலும் வேலை செய்யக்கூடிய கட்டாயமும் எல்லா கோபத்தையும் நீர்த்துப்போகச் செய்துவிடும். கடைசி பத்தி மிக அருமை. இது போல அவர்கள் சந்ததியினர் நினைத்தால் வயதான காலத்தில் வேலை பார்க்க வேண்டிய அவசியம் வந்திராதோ என்னவோ!!!
ReplyDeleteதலைப்பை பார்த்ததும் என்ன இப்படி ? என்று முதலில் நினைத்தேன் இறுதியில் முத்தாய்ப்பாக கூறிய விசயங்கள் மிகச்சரியே. வாழ்வின் எதார்தங்கள் !
ReplyDeletei had faced the same people who asked me for few changes.. i never saw the other side of them, thanks for your post.. kanne thiruntinge.. :)
ReplyDeleteகாமெடியா ஆரம்பிச்சி செண்டிமெண்டா முடிச்சிட்டீங்க! நல்ல பகிர்வு! நன்றி!
ReplyDeleteமிக அழகாக முடித்திருக்கிறீர்கள்!
ReplyDeleteஆமாங்க .... ஒருவகையிலிந்த வாட்ச்மென்களெல்லாம் பாவம்தாங்க:(
ReplyDeleteபடிக்கும்பொழுது வயதானவர்களைப் போய் இப்படி எழுதறாரேன்னு நினைச்சுக்கிட்டே படிக்க... கடைசி பத்தியில் அவர்களுக்கான வரிகள்... நன்றி. கொடிது கொடிது இளமையில் வறுமை.... முதிமையிலும் தாங்க. தனக்கும் இந்த கதிதான்னு பிள்ளைகள் எப்போ உணரப்போறாங்களோ தெரியவில்லை
ReplyDeleteஅருமையான எழுத்து!கடேசி பாரா...............................ஹூம்!
ReplyDeleteஇதை படித்தவுடன் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் பசியில் துடிக்கும் ஒருவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டு வடை பாய்சத்துடன் விருந்து சாப்பிடுவதுபோல் இருக்கும் என்ன கொடுமை இது.
ReplyDeleteகடைசி பத்தி , மனசை உருக வைத்துவிட்டது நண்பா.
ReplyDeleteமிஷின் நிறைய பணமும், அதை எடுக்க வர ஜனங்களையும், பணம் இல்லாம வெளில உட்கார்ந்து பார்க்ககூடிய வயசான வாட்ச்மேன்களோட மனசுல என்ன நினைப்பு ஓடும்?
ReplyDeleteஇனி ATM செல்லும்போதெல்லாம் தாங்கள் எழுதிய இந்தப் பதிவு தான் நினைவுக்கு வரும்.
நல்லபதிவு.
ரொம்ப நொந்துட்டிங்க போல சுரேஷ் !
ReplyDeleteஉண்மைதான். பல நேரங்களில் அவர்களது செயல்கள் மிகுந்த எரிச்சலை தந்தாலும், பணத்தை எடுத்து வெளியே வந்த பிறகு, அவர்கள் நிலை நம்மை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. சிலரது முகங்களை பார்க்கும் போதே ஏதோ ஒரு குற்றவுணர்வு ஆட்கொள்கிறது. இளமையில் மட்டும் அல்ல முதுமையிலும் வறுமை கொடியதுதான்.
ReplyDeleteபின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete