Monday, December 10, 2012

தமிழ்ச்செடியின் பதிவர் பாராட்டு விழா நிகழ்வு ..!


மிழ்ச்செடியானது
தமிழ் இணைய உலகில் செடியாக வேரூன்றி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள், மற்றும் பதிவாளர்களை நம்மால் முடிந்தளவு ஊக்குவித்து அவர்களை மரமாக தழைக்க செய்வதே தமிழ்ச்செடியின் தலையாய நோக்கம்.

இணையத்தில் பரவலாக காணப்படும் தமிழ், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தமிழ்மொழி சம்பந்தமான தமிழாசிரியர்கள், பழைய தமிழ்மொழி கல்விமுறை, சேர்க்கை, இன்னபிற விசயங்களையும் பதியச்செய்வதும், அவற்றை பதியச்செய்யும் பதிவாளர்களையும் இனம் காணவும், அவை தலைமுறையை தாண்டி செல்லவும் நம்மால் முடிந்த ஒரு செயலாகவே தமிழ்ச்செடியை உருவாக்கினோம்.

இந்த தமிழ்ச்செடியானது யாருக்கானதும் அல்ல, குறிப்பிட்ட சிலர் மட்டுமே நடத்தும் இணையதளமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம், இந்த தமிழ்ச்செடி தமிழை நேசிக்கும் எல்லோருக்குமானது, இதில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம், எழுத ஆசை இருந்தும் சிலபல காரணங்களால் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் வாசகர்கள் உட்பட அனைத்து பதிவாளர்களும் எழுதலாம், ஒரே ஒரு விசயம் அது தமிழ் சம்பந்தமான பதிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

தமிழ் சம்பந்தமான எதாவது விசயம், அது சின்னதோ பெரியதோஅடஎன்று ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நம் வாழ்வில் ஏராளம் நடந்திருக்கும், அது என்னவாக இருந்தாலும் எழுதுங்கள், பதியச்செய்யுங்கள்.

மனிதனுக்கு இறப்புண்டு, இணையத்திற்கு இல்லை, காகிதத்தில் எழுதுவது கசக்கி எறிந்துவிடலாம் இணையம் அப்படியல்லஇன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இங்கு பதியப்படுவது இணையம் உள்ளவரை நிலைக்கும், தலைமுறைதள் தாண்டி செல்லும், எனவே தமிழ்ச்செடிக்கு உங்கள் பங்களிப்பையும் அளியுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://www.tamilchetee.com/

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


தமிழ்ச்செடியின் முதல்விழா ஞாயிறு அன்று செண்பகம் மக்கள் சந்தையில் நடைபெற்றது, விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர், திரு. சுப்ரபாரதிமணியம் அவர்கள் கலந்து கொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் பேசினார்.


விழாவிற்கு தொழிற்களம், மக்கள் சந்தை நிறுவனர் திரு. சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார், தொழில் சார்ந்த மொழி சார்ந்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார், திரு.வீடு சுரேஷ்குமார் அவர்கள் வரவேற்புறை ஆற்றினார், நவம்பர் மாத சிறந்த சிறுகதை எழுத்தாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நா. மணிவண்ணன் அவர்களுக்கு, திரு. ஜோதிஜி அவர்கள் பரிசு வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார், தனது பேச்சின் பொழுது பலவிசயங்களையும் அழகாக பட்டியலிட்டு தனது உரையை பதிவு செய்தார், திரு. மணிவண்ணன் மதுரையிலிருந்து வந்திருந்து பரிசினை பெற்றுக் கொண்டு ஏற்புறை நிகழ்த்தினார்.


மெட்ராஸ்பவன் சிவக்குமார் மற்றும் கோவை மு.சரளா ஆகியோரின் உரைக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது, கோவை நேரம் ஜீவா, உலகசினிமா ரசிகன் பாஸ்கரன் சார், ஆரூர் மூனா செந்தில், சசிமோகன் குமார், நிகழ்காலத்தில் சிவா சார் போன்றோர் வலையுலகில் தமது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள் மற்றும் ஆசிரியை விஜயலட்சுமி, திரு. யோகானந்தன் சார் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள், இறுதியாக தொழிற்களத்தின் திரு. அருணேஸ் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தி விழாவினை நிறைவாக முடித்து வைத்தார்.


மொத்தத்தில் இது ஒரு பதிவர் பாராட்டு விழாவாக இல்லாமல் பங்கேற்ற அனைவரும் கலந்துபேசிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகவே நிகழ்ச்சி அமைந்திருந்தது சிறப்பாக இருந்தது.


விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எழுத்தாளர் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும், தமிழ்ச்செடிக்கு எல்லா வகையிலும் ஆக்கமும், ஊக்கமும், இடமும் தந்த தொழிற்களம் மற்றும் மக்கள் சந்தை நிறுவனர் திரு. சீனிவாசன் ஐயா அவர்களுக்கும், மற்றும் திரு. அருனேஸ் அவர்களுக்கும், மற்றும் தொழிற்களத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், தமிழ்ச்செடியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்ச்செடியின் வளர்ச்சிக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி, வணக்கம் ..!
   

19 comments:

 1. விழா சிறப்புற நடைபெற்றதை அறிய
  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அட கலக்கிட்டீங்க போல -

  மணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  தொடரட்டும்

  ReplyDelete
 3. தமிழ்ச்செடி வளர்ந்து ஆலமரமாய்க் கிளை(விழுது)பரப்ப வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தமிழ் மொழி செருக்குடன் நீடூழி வாழ, கட்டாயமாக அனைவரது பங்களிப்பையும் தரலாம் நண்பா... தமிழ்ச்செடி குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. விழா சிறப்பாக நடை பெற்றதிற்கு, என்வாழ்த்துக்கள்! ஆனால் ?
  தமிழ், செடி !!!யா? அது, ஆல் போல் ஓங்கி வளர்ந்து, பல விழுதுகளைக் கொண்டு விழாது இன்றும்,என்றும் யாராலும் எதனானலும் இயலாத மூத்து நிற்கும் மரமல்லவா!!!

  என் நெஞ்சில் தோன்றிய முரண்! எழுதினேன் தவறெனில் மன்னிக்க!

  ReplyDelete
 6. @புலவர் சா இராமாநுசம்

  நாங்கள் தமிழுக்கு நாங்கள் தவழும் குழந்தைகள், ஆதலால் தமிழ்ச்செடி எனப் பெயரிட்டோம்...!இது ஆல் போல் தழைக்க உங்கள் போன்றோரின் ஆசிகளே எங்களை இட்டுச்செல்லும்.

  ReplyDelete
 7. தமிழ்ச் செடியின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஆல் மக்காஸ் வாழ்த்துக்கள் :-)))

  ReplyDelete
 9. @ Ramani says:

  விழா சிறப்புற நடைபெற்றதை அறிய
  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
  வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 10. @ முத்தரசு says:

  மிக்க நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 11. @ வெளங்காதவன்™ says:

  வணக்கம் மச்சி

  ReplyDelete
 12. @ Yoga.S. says:

  உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 13. @ Robert says:

  தமிழ் மொழி செருக்குடன் நீடூழி வாழ, கட்டாயமாக அனைவரது பங்களிப்பையும் தரலாம் நண்பா... தமிழ்ச்செடி குழுமத்திற்கு வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி நண்பா, உங்களுடைய பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 14. @ புலவர் சா இராமாநுசம் says:

  விழா சிறப்பாக நடை பெற்றதிற்கு, என்வாழ்த்துக்கள்! ஆனால் ?
  தமிழ், செடி !!!யா? அது, ஆல் போல் ஓங்கி வளர்ந்து, பல விழுதுகளைக் கொண்டு விழாது இன்றும்,என்றும் யாராலும் எதனானலும் இயலாத மூத்து நிற்கும் மரமல்லவா!!!

  என் நெஞ்சில் தோன்றிய முரண்! எழுதினேன் தவறெனில் மன்னிக்க!//

  நீங்கள் எழுதியதில் தவறொன்றுமில்லை, தமிழ் ஆலமரம்தான், உங்கள் கேள்விக்கு பதில் முதல் பாராவிலேயே இருக்கிறது,
  தமிழ்ச்செடியானது
  //தமிழ் இணைய உலகில் செடியாக வேரூன்றி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள், மற்றும் பதிவாளர்களை நம்மால் முடிந்தளவு ஊக்குவித்து அவர்களை மரமாக தழைக்க செய்வதே தமிழ்ச்செடியின் தலையாய நோக்கம்.//

  மீண்டும் ஒருமுறை பார்க்கவும், உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 15. @ ezhil says:

  மிக்க நன்றி மேடம்

  ReplyDelete
 16. @ பட்டிகாட்டான் Jey says:

  நன்றி ஜெய்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!