Monday, February 21, 2011

கமர்சியல் பக்கங்கள் - 21/02/2011



தமிழீல தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மாள் அவர்களின் மறைவிற்கும், 1000 பாடல்களுக்கும் மேல் பாடியும், சிறந்த குணசித்திர நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தும் மக்கள் மனதில் இடம் பிடித்த பிண்ணனி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகள், அன்னார்களது ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டிக் கொள்வோம்



அரசியல்

திமுக அரசின் சாதனைகள் அனைத்திலும் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு - இளங்கோவன்

டவுட் : ஸ்பெக்ட்ரமிலுமா????





பெரிய டாக்டர் கருப்பு எம்ஜியார் விஜயகாந்த் (எம்ஜியார் எப்ப கருப்பா இருந்தாருன்னு கேட்காதீங்க)
சின்ன டாக்டர்

திருப்பூருல சில இடங்கள்ல பேனர் பார்த்தேன், டாக்டர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அலைகடலென திரண்டு வாருங்கள் அப்படின்னு, இது என்ன வழக்கமா எல்லா அரசியல்வியாதிகளும் அடிக்கற போஸ்டர்தானேன்னு சொல்றீங்களா? கரக்டுதான், ஆனா இப்ப போஸ்டர் அடிச்சிருக்கறது நம்ம இளையதளபதி விஜய், நாளைக்கு நாகப்பட்டிணத்துல மீனவர்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துறாராம்,
சும்மா சொல்லக்கூடாது ரெண்டு டாக்டர்களும் பண்ணுற கூத்து தாங்க முடியல, இவங்களுக்கு என்ன திடீர் மக்கள் அக்கறைன்னு பார்த்தா பெரிய  டாக்டரோட கல்யாணம் மண்டபத்த இடிச்சிட்டாங்களாம், சின்ன டாக்டருக்கு காவலன் படத்தை வெளியிட முடியாம கரச்சல் கொடுத்தாங்களாம், இதுதாங்க ரெண்டு டாக்டர்களும் அரசியல் பண்ணுறதுக்கு காரணம், என்ன கொடுமைடா இது, தங்களோட சொந்த விசயத்துக்காக மக்களை கொடுமைபடுத்துறது என்ன ஞாயம்னு தெரியல, உண்மையிலேயே மக்கள் மேல அக்கறை இருந்து அரசியலுக்கு வந்தா பரவாயில்லை, இப்படிப்பட்ட காரண காரியத்தோட அரசியல் பண்ணா என்ன நியாயம், இவங்க பின்னாடியும் போற மக்களை சொல்லனும்,
இதுக்கு எல்லா காரணம் என்னன்னு யோசிச்சு பார்த்தா இந்த ரெண்டு டாக்டர்களையும் உருவாக்கின எஸ் ஏ சந்திரசேகரதான் சொல்லனும், இப்படி சும்மா சுத்திகிட்டு இருந்தவங்கள நடிகன் ஆக்கி மக்களை கொலையா கொல்லுறவருக்கு சுறா படத்தயும், எங்கள் ஆசான் படத்துயும் நூறு தடவ போட்டு காட்டனும், அப்பத்தான் புத்தி வரும்.
இன்னும் எத்தனை பேரு மீனவர்கள வச்சி அரசியல் பண்ணுவாங்களோ தெரியல...


மீனவர்களுக்காக போராட்டம்?, கனிமொழி எம்பி திடீர் கைது

வடிவேல் : நல்லா பார்த்துக்கோங்க, நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடிதான்...

கவுண்டர் : யப்பா உலக நடிப்புடா சாமி !!!

மக்கள் : இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு ...........@#%^&*<>


படித்ததில் பிடித்தது

தலைவன் இருக்கின்றான் நிறுத்தம்.... செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்?



ஒரு சைகோவும் ஒரு கிறுக்கனும் சேர்ந்தா என்ன ஆகும்? குணா ரெண்டாம் பார்ட் வரும். இப்பவே தல சுத்துதே - தட்ஸ்தமிழ்

இது ஒரு வித்தியாசமான மேட்டர், இந்தக் காலத்துல காதல் எப்படி பண்ணுராங்க அப்படின்னு பாருங்க, சின்ன டாக்டரோட பிரியமானவளே படம் பார்த்திருக்கீங்களா, அக்ரிமெண்ட் அக்ரிமெண்டுன்னு சொல்லிட்டு திரிவாரு, அதே மாதிரிதான் இந்த பொன்ணும் அக்ரிமெண்ட் போடுது அது என்ன அக்ரிமெண்டுன்னு படிச்சி பாருங்க, இப்படி எல்லாம் நடக்குதான்னு ஆச்சரியப்படாம, இதுக்கு உங்களோட தீர்வு என்னன்னு கொஞ்சம் கருத்து சொல்லுங்க


படிச்சிட்டீங்களா, பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சதுன்னு சொல்லாம உண்மையான உங்க மனசுல என்ன தோணுதுங்கறத கொஞ்சம் சொல்லிட்டு போங்க..,

தத்துவம்

சிரிப்பவர்கள் எல்லாரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க கற்றவர்கள்

உனக்கு நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க யாருமே இல்லை

கவிதைகள்

உலகம் ஒரு சுற்றுலா தளம்
நாம் வந்துள்ளது சுற்றுலா பயணம்
திரும்பி செல்வது நிச்சயம்
தேதி மட்டும் ரகசியம்
- தமிழ்

தொட்டியில் மீன்
ரசிக்கத்தான் வருகிறார்கள்
எல்லோரும்
விடுவிக்கும் மனம் யாருக்குமில்லை
நான் நீரில் நீந்துகிறேன்
நீங்கள் அறியாமையில் நீந்துகிறீர்கள்
- சதீஷ் குமார்

நான் வில்பர் சற்குணராஜுக்கு தீவிர ரசிகன் ஆகிட்டேங்க, அவரோட பாட்டெல்லாம் சும்மா பட்டைய கிளப்புது, அருமையான பாடலாசிரியர் இவரை எப்படி கோடம்பாக்கத்துக்காரங்க மிஸ் பண்ணராங்கன்னே தெரியல, கீழ வர பாட்ட கேளுங்களே, அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குது,  அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குது,  சே என்ன ஒரு அருமையான வார்த்தை, அதுவும் அடியே கோரிப்பாளையத்துள ஒரு கடையில சிக்கன் 65 சூப்பரா இருக்குது அப்படிங்கும் போது அவரோட முக பாவனை, உடல் மொழி எல்லாமே சூப்பரா இருக்குது, மிஸ் பண்னிடாதீங்க கண்டிப்பா கேளுங்க, அப்புறம் பாருங்க நீங்களும் பாட ஆரம்பிச்சிடுவீங்க, அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குது,  அம்மா பசிக்குது பசிக்குது பசிக்குதுன்னு...



நான் பதிவுலகில் வந்த போது ஒரு பத்து பாலோயராவது கிடைப்பாங்களான்னு சந்தேகமா இருந்தது, ஆனா நான் எழுதறதயும் படிச்சு என்னோட பதிவையும் மதிச்சு, எனக்கும் 100 பாலோயர்ஸ் கிடைச்சு இருக்காங்க, உங்க எல்லாருக்கும் குறிப்பா என்னோட 102 பாலோயர்ஸ்க்கும் என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள தெரிவிச்சுக்கிறேன்,
நன்றி, நன்றி, நன்றி 
அன்புடன்
இரவுவானம்

31 comments:

  1. கமர்சியல் பக்கங்கள்... கலக்கல் பக்கங்கள். நடத்துங்க நடத்துங்க.. சூப்பர். கவிதைகளும் சூப்பர். தேர்தலுக்காக எப்படியெல்லாம் ஆக்ட் கொடுக்குறாங்க!!! இந்த நடிப்புக்காக இவங்களுக்கு இவங்களே ஒரு பாராட்டு விழா நடத்தி சிறந்த நடிப்பிற்கான விருதையும் கொடுத்துக்குவாங்க போலிருக்கே!!! எவ்வளவோ பார்த்துட்டோம்.. இனிமேல் நடக்கறதையும் பார்ப்போம்...

    ReplyDelete
  2. கலக்கல் கமர்சியல் பக்கங்கள் நண்பா

    ReplyDelete
  3. Wilbur Sargunaraj is hilarious!!!

    I have seen many of his songs in Youtube!

    ReplyDelete
  4. Congratulations..... 102 followers!!!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!
    இறைவனடி சேர்ந்தவர்களுக்கு அஞ்சலிகள்!

    டாக்டர்கள் வாழ்க!:-)

    டீலிங் கொடுமையா இருக்கே! நவீன நாகரீகம் எங்கே கொண்டு போய்விட்டுள்ளது! உண்மையில் இது உடல்/மனரீதியாக பல பிரச்சினைகளை உண்டாக்கும்.

    தத்துவம், கவிதைகள் ரொம்ப பிடிச்சிருந்தது.!

    வீடியோ கலக்கல்!

    100 ஃபாலோயருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. கலக்கல் பக்கங்கள். . சூப்பர். கவிதைகளும் சூப்பர்...

    ReplyDelete
  7. 102!வாழ்த்துக்கள் பாஸ்!
    அந்தப் பெண்ணின் ஒப்பந்தம்....ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல!

    ReplyDelete
  8. இது....கமர்சியல் பக்கங்கள் அல்ல.......கலக்கல் பக்கங்கள். வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  9. wow!
    Bharathiyar would cry, if he is alive and read that article.
    Nalla velai avar illai.

    ReplyDelete
  10. முதலில் பார்வதியம்மாள், மலேசியா வாசுதேவன் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.

    நிறைய தகவல்களுடன் நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. //வடிவேல் : நல்லா பார்த்துக்கோங்க, நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடிதான்...


    கவுண்டர் : யப்பா உலக நடிப்புடா சாமி !!!


    மக்கள் : இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு ...........@#%^&*<>//

    ஹா ஹா ஹா ஹா சூப்பருங்கோ....

    ReplyDelete
  12. தலைவனின் தலைவிக்கும்... பாட்டு தலைவனுக்கும் அஞ்சலிகள்!

    ReplyDelete
  13. விடு மாப்பு நூறு பாலோயர்ஸ்-ம் தெரிஞ்சே பாழுங் கெணத்துல குதிச்சிட்டாங்க... விதி என்ன செய்ய :))

    ReplyDelete
  14. See.,
    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

    ReplyDelete
  15. அடடா. 3 பதிவா தேத்தி இருக்கலாமே...

    ReplyDelete
  16. @ Ding Dong

    நன்றி மணி

    @ நா.மணிவண்ணன்

    நன்றி நண்பா

    @ Chitra

    நன்றி சித்ரா மேடம்

    @ எஸ்.கே

    நன்றி எஸ்.கே சார், உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு

    @ வேடந்தாங்கல் - கருன்

    நன்றி கருன்

    @ ஜீ...

    நன்றி ஜீ

    ReplyDelete
  17. @ ரஹீம் கஸாலி

    நன்றி நண்பா

    @ Nagasubramanian

    ஹி ஹி நீங்க என்னோட பதிவை சொல்றீங்களா இல்லை அந்த பொண்ணப்பத்தி சொல்றீங்களான்னு தெரியல, நன்றி

    @ சேட்டைக்காரன்

    நன்றி சார்

    @ MANO நாஞ்சில் மனோ

    நன்றி மனோ சார்

    @ வைகை

    நன்றி வைகை சார்

    @ karthikkumar

    சரி சரி பப்ளிக்ல இதல்லாம் சொல்லாத மச்சி :-)

    @ சி.பி.செந்தில்குமார்

    தல உங்க அளவுக்கெல்லாம் நமக்கு பத்தாது தல :-)

    ReplyDelete
  18. //டவுட் : ஸ்பெக்ட்ரமிலுமா????
    நியாயமான டவுட்.

    சோனியா: இளங்கோ நம்ம சைடா? அவுங்க சைடா?

    //சின்ன டாக்டர் பெரிய டாக்டர்.
    யார் கண்டா ஒரு வேளை நாளைக்கே இவர்கள் கையில் ஆட்சி வந்தாலும் ஆச்சார்யா படுவதற்கில்லை. வெயிட் அண்டு சீ


    //கனிமொழி
    &$%@%&@?& செம் ஃபீலிங்

    //சிரிப்பவர்கள் எல்லாரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லைகவலையை மறக்க கற்றவர்கள்
    எனக்கு பிடித்த வரிகள்.

    ஒரு வழியா 100 பேரை பாலோயராக பெற்று பிரபல பதிவர் ஆகிட்டீங்க. நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள். நம்மை எல்லாம் மறந்துராதீங்க...

    ReplyDelete
  19. அம்மா பசிக்குது நானும் ரசிகனாகிட்டேன்..ங்கொய்யாலே என்னமா அனுபவிச்சு பாடுறான்

    ReplyDelete
  20. பாலா said...

    //சின்ன டாக்டர் பெரிய டாக்டர்.
    யார் கண்டா ஒரு வேளை நாளைக்கே இவர்கள் கையில் ஆட்சி வந்தாலும் ஆச்சார்யா படுவதற்கில்லை. வெயிட் அண்டு சீ

    நண்பா இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்க ;-)

    ஒரு வழியா 100 பேரை பாலோயராக பெற்று பிரபல பதிவர் ஆகிட்டீங்க. நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள். நம்மை எல்லாம் மறந்துராதீங்க..

    கண்டிப்பா உங்க யாரையும் மறக்க மாட்டேன், இருந்தாலும் 1000 பாலோயர் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான், இப்ப கிடைச்சவங்களே பெரிசுன்னு நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  21. @ ஆர்.கே.சதீஷ்குமார்

    வாங்க சதீஷ் சார், நீங்களும் வில்பருக்கு ரசிகர் ஆகிட்டீங்களா, ஏதோ நம்மால முடிஞ்சது அவர் புகழ பரப்புறதுக்கு:-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  22. கலக்கிட்டீங்க நைட்..102 என்ன, 1002 பேரே வரும் பாருங்க.

    ReplyDelete
  23. என்ன கமலையும் செல்வாவையும் இப்படி கேவலப்படுத்திட்டீங்க... எனக்கு ரொம்ப வருத்தம்...

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/50.html

    ReplyDelete
  25. OMG Who is this guy Wilbur Sargunaraj. His Chicken 65 song very good. First time I have come across his song and I have become a fan of him.Mr.Iravuvaanam ,thank you for posting this song along with your kalakkal posting.

    ReplyDelete
  26. தற்சயலாக வந்தேனுங்க கப்பண்ணு பிடிச்சிட்டிங்களே... இனி வரகை தொடரும் முடிஞ்சா நம்ம ஓடைக்கும் களிக்க வாங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

    ReplyDelete
  27. பக்கம் சீக்கிரமே முடிஞ்ச மாதிரி இருக்கு....
    இன்னும் நெறைய மேட்டர் சேர்த்து எழுதுங்க முடிஞ்ச போது அறிவு விடயங்கள் மற்றும் உலக நடப்புகளையும் சேர்த்துக்குங்க.....

    ReplyDelete
  28. /படிச்சிட்டீங்களா, பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சதுன்னு சொல்லாம உண்மையான உங்க மனசுல என்ன தோணுதுங்கறத கொஞ்சம் சொல்லிட்டு போங்க..,//

    நானும் இதை வாரமலரில் படிச்சேன் சுரேஷ்...இதெல்லாம் உண்மையா இருக்கும்னு தோணலை ..இந்த அளவு தில்லு பொண்ணு ஆலோசனை எல்லாம் கேட்பாலா என்ன...???? சர்குலேசன் க்காக இவனுங்க பண்ற எக்ஸ்ட்ரா பில்ட் அப் ஆ னு எனக்கு ஒரு டவுட் இருக்கு ....:))

    ReplyDelete
  29. விரைவில் 200 பால்லோயர்ஸ் வர வாழ்த்துகள் சுரேஷ்!

    ReplyDelete
  30. @ செங்கோவி

    நன்றி நண்பா

    @ Philosophy Prabhakaran

    வருகைக்கு நன்றி பிரபாகரன், வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்றதுக்கு வாழ்த்துக்கள்

    @ Thulasi

    நன்றி துளசி மேடம், கொஞ்ச நாளாக உங்கள் வருகையை காண முடியவில்லை, ஏன் மேடம்?

    @ ம.தி.சுதா

    நன்றி சார், உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்

    @ Karthi S

    நன்றி கார்த்தி, உங்கள் ஆலோசனைக்கு நன்றி, இனிமேல் முயற்சிக்கிறேன்

    @ ஆனந்தி.

    நன்றி மேடம், நீங்கள் சொன்னது போலவும் இருக்கலாம், ஆனால் இது போண்ற விசயங்கள் நடக்காது என்று கூறமுடியாது, இது போன்றவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    @ ! சிவகுமார் !

    நன்றி சிவா

    ReplyDelete
  31. அனைத்துப் பகுதிகளும் விறுவிறுப்பாக இருக்கிறது.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!