முன்கதை சுருக்கம்
கதையே இல்லை, இதுல எங்கிருந்து முன்கதை சுருக்கம் வேற சொல்றது, சரி இருந்தாலும் சொல்றேன், அதாவது நடந்தது என்னன்னா நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒரு பத்து பதினஞ்சு பிகருகள சைட்டடிச்சிட்டு ஜாலியா திரிஞ்சுகிட்டு இருந்தேன், அப்ப என்னோட நண்பன் ஒருத்தன் ஒரு ஐயரு பொண்ணு என்ன லுக்கு விடுதுன்னு ஏத்தி விட்டுட்டான், நானும் அத நம்பி இருக்குற பொண்ணுங்க எல்லாத்தையும் டீல்ல உட்டுட்டு அந்த ஒரு பொண்ணு பின்னாடி மட்டும் லவ் பண்ணலாம்னு சுத்திகிட்டு இருந்தேன், சும்மா சுத்திகிட்டே இருந்தா எப்படி சரி ஐ லவ் யூ சொல்லி அடுத்த கட்டத்துக்கு போலாம்னு நினைச்சு பேச போனா தம்பின்னு சொல்லிட்டா, இதுதான் முன்கதை சுருக்கம், இந்த பாழா போன கதைய டீடெய்லா படிக்கனும்னா கீழ இருக்குற அஞ்சு லிங்கயும் படிச்சிட்டு வந்துடுங்க
அவ என்னை பயங்கரமா திட்டிட்டு போயிட்டா
எனக்கு பயங்கர கோவம் வந்தது, இருக்குற கோபமெல்லாம் தலைக்கேறி தலை பயங்கர சூடாகிருச்சு, சரி நம்ம பசங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்னு திரும்பி பார்த்தா இரண்டு பேரையும் காணோம், அவ திட்டுன திட்டுல இரண்டு பேரும் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிட்டானுக,
என்னோட குளோஸ் பிரண்டு ஒருத்தன் மட்டும் ஒரு அரை கிலோ மீட்டருக்கு அந்தப்புறம் நின்னுகிட்டு சிரிச்சுகிட்டு இருந்தான்,
மொட்டையன கண்ணுக்கு எட்டின தூரம் மட்டும் காணல, எனக்கு பயங்கர கோவமா வந்திருச்சி, சும்மா விளையாண்டுகிட்டு இருந்தவன கூப்பிட்டுட்டு வந்து திட்டு வாங்கி வச்சிட்டானுங்க, நான் பாட்டுக்கு பேசாம போய்ட்டு இருந்தேன்,
என் பிரண்டு ஓடி வந்தான், நில்லுடா நில்லு நானும் வரேன்,
நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம், நாந்தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னனல்லடா, தேவையில்லாம கூட்டிட்டு வந்து திட்டு வாங்கி வச்சிட்டீங்களேடா, அதுவுமிலலாம அவ திட்டுனதும் ஓடி வேற போயிட்டீங்க
அது இல்லடா எனக்கு என்ன தெரியும் அவ திட்டுவான்னு, அவ திட்ட ஆரம்பிச்சதும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு, அதான் ஓடிட்டேன்னு சொல்லி மறுபடியும் சிரிச்சான்
மரியாதையா போயிடு, அவன் எங்க போனாண்டா மொட்டையன்?
அவன் நீ திட்டு வாங்க ஆரம்பிச்சதுமே சைக்கிள எடுத்துட்டு ஓடியே போயிட்டாண்டா
அவன் மட்டும் என் கண்ணுல சிக்குனான் செத்தாண்டா நாயி
அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் மொட்டையன நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் பிரண்டு மட்டும் ஒரு தடவை அவன பார்த்தா சொன்னான்
சே இப்படி ஆயிருச்சே, அவ இப்படி சொல்லுவான்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல, மனசு பூராவும் ஒரு ஆற்றாமை புயலா ஓடிட்டு இருந்தது, தனியா புலம்பிட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்
என் பிரண்டு என்னை பார்த்து சிரிச்சுகிட்டே இருந்தான்
டேய் மூடிட்டு வாடா, இன்னொரு தடவை சிரிச்சே, காதோட அப்பிருவேன்
கிழிப்ப, பேச தெரியாம பேசி திட்டு வாங்கிட்டு என்னை சொல்றியா?
நானா போய் பேசறேன்னு சொன்னேன், நீங்க ரெண்டு பேருதாண்டா என்னை கூட்டிட்டு போய் சிக்க வச்சிட்டீங்க
ஆமா எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு, நீதாண்டா அவ கூட பேசினேன், சிரிச்சேன்னு பீலா உட்டுகிட்டு இருந்தே
நான் எதுக்குடா பொய் சொல்லனும் உண்மையிலேயே அவகூட இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை பேசி இருக்கேன், நல்லாத்தான் பேசினா
அப்ப எதுக்கு இப்ப திட்டிட்டு போனா?
தெரியலியேடா, சே எப்படி எல்லாம் லவ் பண்ணேன் அவள, இப்படி சொல்லிட்டாளே
சரி விடுடா, இந்த பொண்ணுங்களே இப்படித்தான், சரக்கு அடிச்சா சரியாகிரும், வா போய் சரக்கு அடிக்கலாம்னான்
எனக்கு வேணாம்டா, நாந்தான் சரக்கு அடிக்க மாட்டேனுல்ல
சரி விடு அப்ப புண்பட்ட மனதை புகைய விட்டு ஆத்தலாம், தம்மடிக்கலாமா
அப்ப எனக்கும் நிறைய சினிமா பார்த்து தம்மடிக்கனும்னு ஒரு ஆசை இருந்தது, ஆனாலும் வீட்டுக்கு தெரிஞ்சுருமோன்னு பயந்துட்டு வேணாம்னு இருந்தேன், ஆனா அப்ப ஏதாவது பண்ணனும் போல இருந்தது, அதனால சரின்னு சொன்னேன்
அவனும் நம்ம அண்ணாச்சி கடைக்கு போனான், அண்ணாச்சி கடை கல்லா பெட்டி மேல சிகரட் பாக்கெட்டெல்லாம் அடுக்கி வச்சிருப்பாரு, கையில காசு இல்லாததால, ஒரு ரூபாய்க்கு ஏதோ வாங்கிட்டு, ஒரு பாக்கெட் வில்ஸ்ஸ சுட்டுட்டு வந்துட்டான்
அந்த சிகரட்ட அடிக்கறதுக்காக, எங்க ஊரு இரங்காட்டுக்குள்ள போய் யாருமே இல்லாத இடமா பார்த்து உட்கார்ந்தோம்
அந்த பாக்கட்டுல ஒன்பது சிகரெட் இருந்தது, ஒன்ன அண்ணாச்சி வித்துட்டாரு, முத முதலா சிகரெட் பத்த வச்சு கொடுத்தான் என் நண்பன், அத வாங்கி குடிக்க தெரியாம குடிச்சு ஒரே இருமலா வந்தது
எனக்கு வேணாம்டா, என்னால முடியல, தொண்டை எல்லாம் எரியுது
டேய் முதல்ல அப்படித்தான் இருக்கும், உன்னை திட்டுனாலுல்ல அவள பழி வாங்கனும், அவள நினைச்சுட்டு இழுடா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்னு சொன்னான்
நானும் அவள நினைச்சுகிட்டே ஆட்டோகிராப் சேரன் மாதிரி நினைவுகள் நெஞ்சினில் ரேஞ்சுக்கு பாட்டு பாடாம தம்மடிக்க ஆரம்பிச்சேன், அப்படியே லைனா நான் நாலு, அவன் அஞ்சுன்னு மொத்த சிகரெட்டயும் குடிச்சு முடிச்சோம்
சரி கிளம்பலாம்னு நினைச்சு கிளம்பும் போதுதான் ஞாபகம் வந்தது, ஆகா இவன் சாயங்காலம் நம்ம ஊர் பசங்களோட சேர்ந்து தண்ணியடிப்பானே, அவங்ககிட்ட சொன்னா போச்சே, நம்மள கிண்டல் பண்ணி ஒருவழி பண்ணிடுவானுங்களேன்னு
டேய் நடந்த விசயம் யாருக்கும் தெரிய கூடாது, முக்கியமா நம்ம பசங்க யார்கிட்டயும் சொல்லிடாத, மானத்தை கெடுத்துடுவானுங்க, அதுவுமில்லாம பிரச்சனை பண்ணிடுவானுங்க
டேய் நான் எதுக்குடா சொல்ல போறேன், சத்தியமா யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னான்
நானும் நம்பிட்டேன்
ஆனா அவன் எப்ப நான் சொன்னத கேட்டுருக்கான்? அப்ப எனக்கு தெரியாது அடுத்து என்ன நடக்க போகுதுங்கறது,
அப்படி என்ன நடந்ததுன்னா? ....
தொடரும்...
என்னோட குளோஸ் பிரண்டு ஒருத்தன் மட்டும் ஒரு அரை கிலோ மீட்டருக்கு அந்தப்புறம் நின்னுகிட்டு சிரிச்சுகிட்டு இருந்தான்,/// close friend..??
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html
//இந்த பாலா போன கதைய// நைட்டு, அது பாலாவும் போகல..தயிராவும் போகலை..பாழாப் போச்சு!
ReplyDeleteபோலாம்...ரைட்..ரைட்..
ReplyDeleteகதை நல்லா இருக்குற அளவுக்கு ஸ்டில் நல்லா இல்லையே..
ReplyDelete//ஒன்ன அண்ணாச்சி வித்துட்டாரு,//
ReplyDeleteஅப்ப இன்னொன்னு?
கதை நல்லா இருக்கு
ReplyDeleteகிழிப்ப, பேச தெரியாம பேசி திட்டு வாங்கிட்டு என்னை சொல்றியா////
ReplyDeleteஅதானே உமக்கு பேச தெரியல மாம்ஸ்.. அந்த பிரெண்ட் என்ன பண்ணுவார் பாவம்....:))
கதை நல்லப் போகுது! ஸ்டில்தான் நல்லா இல்லை!
ReplyDeleteநல்லாப்போகுதுங்க
ReplyDeleteதொடரட்டும்..
ReplyDeleteok...ok.....////
ReplyDeleteநம்ம கடையில் இன்று
தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...
நாங்களும் தொடர்ந்து வருவோம்ல....
ReplyDeleteநேச்சுரலா சொல்லியிருக்கீங்க
ReplyDeleteடேய் நடந்த விசயம் யாருக்கும் தெரிய கூடாது, முக்கியமா நம்ம பசங்க யார்கிட்டயும் சொல்லிடாத, மானத்தை கெடுத்துடுவானுங்க, அதுவுமில்லாம பிரச்சனை பண்ணிடுவானுங்க
ReplyDelete....அவங்க அவங்க பிரச்சனை - கவலை அவங்க அவங்களுக்கு.... :-)
முதலில் இருக்கும் அந்த நடிகை யார்... பேரென்ன...?
ReplyDelete@ வேடந்தாங்கல் - கருன்
ReplyDeleteநன்றி கருன்
@ செங்கோவி
நன்றி நண்பா, திருத்திவிட்டேன், நெக்ஸ்ட் டைம் நல்ல ஸ்டில்லா போடறேன்
@ பாரத்... பாரதி..
ந்ன்றி பாரதி சார், அந்த இன்னொன்னுதான் இது:-)
@ விக்கி உலகம்
நன்றி சார்
@ karthikkumar
என்ன மச்சி சேம் சைடு கோல் போடுற:-)
@ ஜீ...
நன்றி நண்பா, செக்ஸ்ட் டைம் நல்ல ஸ்டில்லா போடுறேன்:-)
@ VELU.G
நன்றி சார்
@ பாட்டு ரசிகன்
நன்றி சார்
@ ரஹீம் கஸாலி
நன்றி நண்பா
@ MANO நாஞ்சில் மனோ
நன்றி சார், மறுபடியும் வாங்க :-)
@ thirumathi bs sridhar
நன்றீ மேடம், தொடர்ந்த உங்களின் ஆதரவிற்கு
@ Chitra
நன்றி மேடம் :-)
@ Philosophy Prabhakaran
அந்த நடிகை பேர் ஆர்த்தி சபாரியா
@ இரவு வானம்
ReplyDelete// அந்த நடிகை பேர் ஆர்த்தி சபாரியா //
ஆங்கிலம் ப்ளீஸ்...
முன்கதை சுருக்கம் சுர்...
ReplyDeleteகதை விர்...
படங்கள் சூப்பர்
ReplyDeleteவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
நல்லா கதை சொல்றீங்க சுரேஷ். சூப்பர்!
ReplyDelete@ Philosophy Prabhakaran
ReplyDeleteநண்பா அது ஒரு பஞ்சாபி நடிகை, பேர் படிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கு, இங்கீஸ்ல என்னன்னு தெரியல
@ வைகறை
நன்றி வைகறை சார்
@ தமிழ்வாசி - Prakash
நன்றி சார்
@ ! சிவகுமார் !
நன்றி சிவா
very nice story....
ReplyDelete@ Mirchy Guy
ReplyDeletethanks friend...