ஒரு சந்தோசம்
கடந்த சனிக்கிழமை இணைய உலகிலே என்றும் இல்லாத அதிசயமான புரட்சி ஒன்று நம் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக நடந்தது பாராட்டத்தக்கது, எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த ஒரு விசயத்தில் அணி திரண்ட நண்பர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை, நல்லதொரு முடிவு கிடைத்தால் நன்றாக இருக்கும், இந்த இணைய புரட்சி தொடர வேண்டும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு, நானும் பதிவொன்றை போடலாம் என்று இருந்தேன், பல பிளாக்குகளில் சென்று பார்த்த போது அனைவரும் பெட்டிசன் அனுப்புவது, டிவீட் செய்வது என்று அதனையே பதிவாக எழுதி இருந்தனர், சரி நாமும் ஒரு முறை அதையே எழுத வேண்டாம் என்று நினைத்து விட்டு விட்டேன், பிறகு சொந்தமாக ஒரு கட்டுரையினை எழுதலாம் என்று நினைத்து எழுதினேன், எழுதி முடித்தவுடன் படித்து பார்த்த போது கோபத்தில கண்டபடி எழுதி இருந்தேன், சென்சார் போர்டுக்கு அனுப்பினால் கண்டிப்பாக நான்கு வரிகள்தான் மிஞ்சும் என்ற அளவில் இருந்தது, அதனால் பிரசுரம் பண்ணாமல் விட்டு விட்டேன், கொஞ்சம் டிங்கரிங், பெயிண்டிங் வேலை எல்லாம் செய்து பின்னால் வெளியிடுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கண்டனம்
சென்ற வாரம் ஆனந்தவிகடன் புத்தகம் ஒன்றினை எதேச்சையாக நண்பர் ஒருவரின் கடையில் படிக்க நேர்ந்தது, அதில் சென்னை புத்தக கண்காட்சி விழா பற்றிய கட்டுரையில் சரஸ்வதி விஜயம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன், பதிவர்களை பற்றி கண்டபடி எழுதி இருந்தனர், பதிவர்கள் இணையத்தில் தமிழ் குப்பைகளை கொட்டுகிறோமாம், ஓசியில் கூகிள் காரன் கொடுத்த பிளாக்கினை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு எழுதுகிறோம் என்று வாரு வாரு என்று வாரி இருந்தார்கள், என்ன இருந்தாலும் நாமும் பதிவர் அல்லவா அதனால் ஆனந்த விகடனுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்னமோ இவர்கள்தான் பத்து வருடம் படித்து விட்டு வந்து பத்திரிக்கைகளில் எழுதுவதை போலவும் நாம் எல்லாம் எழுதவே தெரியாமல் எழுதுவது போலவும் நினைப்பு அவர்களுக்கு, ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சந்தேகம்
பிறப்புக்கு முன்னால் என்ன என்பது உனக்கும் தெரியாது
இறப்புக்கு பின்னால் என்ன என்பது எனக்கும் தெரியாது - கண்ணதாசன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு தத்துவம்
அடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை இல்லை
கோபமே படாவிட்டால், நமக்கே மரியாதை இல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு காதல் கவிதை
மரத்துல இருக்குது காயி,
மரத்துல இருக்குது காயி
தூங்க தேவை பாயி,
தூங்க தேவை பாயி
நீ ’’ம்’’ னு சொன்னா இந்த சிவா
உன் காலடி நாயி செல்வி நாயி
கவிதையை எழுதி இயற்றியவர் - சிவா
படம் -சென்னை-28
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு லைன்
WINNERS DON'T DO DIFFERENT THINGS.
- YOU CAN WIN SHIV KHERA
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவை பாருங்க, செம காமெடியா இருக்கும், சினிமாலதான் இந்த மாதிரி சண்டை காட்சிகளை பார்க்க முடியும், இது டிவி நிகழ்ச்சியில எடுத்தது
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குட்டி கதை
அது ஒரு ஆளில்லாத நெடுஞ்சாலை, நேரம் இரவு பதினோரு மணி ஆகி விட்டிருந்தது, அந்த நெடுஞ்சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இல்லை, அடர்ந்த கும்மிருட்டு, அந்த இருட்டில் ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள், அந்த வாலிபன் ஒரு பெரிய அடர்ந்த மரத்தினடியில் கொண்டு போய் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான், இருவரும் கீழிறங்கினார்கள், அந்த வாலிபன் சுற்றும் முற்றும் இருபுறமும் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் ஆள் நடமாட்டமே இல்லை, பிறகு சிரித்துக் கொண்டே அவன் அந்த பெண்ணை நெருங்கினான், இருவரும் ஒருவருக்கு அருகில் ஒருவர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர், அவன் மேலும் அவளுக்கு அருகாமையில் நெருக்கத்தை அதிகப்படுத்தினான், பிறகு தன்னுடைய இரண்டு கைகளால் அவள் முகத்தை பற்றினான், அவளுடைய ஆரஞ்சு வண்ண முகம் வெட்கத்தால் மேலும் சிவந்தது, அப்படியே அவன் அவளுடைய முகத்தை பற்றிக் கொண்டு தன்னுடைய உதடுகளை அவள் காதருகில் கொண்டு போனான், கொண்டு போய் என்ன சொன்னான் என்றால், வண்டில பெட்ரோல் தீர்ந்து போச்சு, வா ரெண்டு பேரும் தள்ளலாம்...!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வருத்தம்
போன வாரம் நம்ம முறைமாமன் கார்த்திக் சாட்டிங்குல வந்து ஞாயித்து கிழமை மீட்டிங் ஒன்னு இருக்கு கோமாளி செல்வா, சுற்றுலா விரும்பி அருண், அப்புறம் நானும் வரேன், நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாரு, நானும் பதிவுலகத்துல வந்ததுல இருந்து தேவியர் இல்லம் ஜோதிஜி சார மட்டும்தான் மீட் பண்ணி பேசி இருக்கேன் , வேற யாரையும் சந்திச்சது இல்ல, அதனால கண்டிப்பா போகலாம்னு நினைச்சேன், ஆனா பாருங்க விதி யார விட்டது வழக்கம் போலவே ஊருக்கு போக வேண்டியதாகிருச்சு, அங்க போய் உடம்பும் சரி இல்லாம போயிருச்சு, டாக்டர் வேற சிடி ஸ்கேன் அது இதுன்னு என்ன என்னவோ எடுக்க சொல்லி இருக்காரு, பார்ப்போம் என்ன ஆகுதுன்னு, ஆகவே முறைமாமன் சார் இந்த மீட்டிங் வரமுடியல, அடுத்த மீட்டிங் போடறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னமே சொல்லிருங்க, கண்டிப்பா வரேன்....
அன்புடன்
இரவுவானம்
அன்புடன்
இரவுவானம்
விகடனில் அப்படி ஒரு மேட்டர் வந்தா விஷயத்தை நான் அறியவில்லை! பதிவர்களைப் பற்றி விகடன் அப்படிச்சொன்னது கண்டிக்கப்பட வேண்டியது! நானும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்!
ReplyDelete" கோபம் " தத்துவம் அருமை! ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்!
sUper kalakkal
ReplyDeleteநானும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்!
ReplyDeleteநானும் ஆனந்த விகடனுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...
ReplyDeleteஇன்றைய கமர்சியல் பக்கங்கள் அருமை..
எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்!!!
ReplyDelete//எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த ஒரு விசயத்தில் அணி திரண்ட நண்பர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை//
ReplyDeleteஎல்லாரும் அவரவர் கடமையைத் தான் செய்திருக்கிறார்கள் நண்பரே! :-)
//என்ன இருந்தாலும் நாமும் பதிவர் அல்லவா அதனால் ஆனந்த விகடனுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,//
ReplyDeleteஇதையெல்லாம் உதாசீனப்படுத்துங்க நண்பரே! :-)
பதிவு அருமை...........
ReplyDeleteநானும் என் கண்டனத்த பதிவு செய்யுறேன்............
அதே நேரத்துல துட்டுக்கு எழுதும் மக்களுக்கு நம்ம மாதிரி துட்ட போட்டு எழுதும் மக்களின் அருமை புரியாது நண்பரே லூசுல விடுங்க
அருமையான கலக்கலான தொகுப்பு. வந்தேன் படித்தேன் வாக்களித்தேன் சென்றேன். நானும் இதை போல ஒரு பதிவிட்டிருக்கிறேன். வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReplyDeletehttp://ragariz.blogspot.com/2011/02/political-pages-from-rahim-gazali.html
அருமையா இருக்குங்க....
ReplyDeleteஒரு தத்துவம்
ReplyDeleteஅடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை இல்லை
கோபமே படாவிட்டால், நமக்கே மரியாதை இல்லை
.... Good one.
How is your health now? Get well soon.
ஆனந்த விகடனுக்கு அதிராக ஒருவர் பதிவு எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன், இன்ட்லியில் பார்த்தேன்.
ReplyDelete//வண்டில பெட்ரோல் தீர்ந்து போச்சு, வா ரெண்டு பேரும் தள்ளலாம்...!//
என்னாத்த :-)
"அதே நேரத்துல துட்டுக்கு எழுதும் மக்களுக்கு நம்ம மாதிரி துட்ட போட்டு எழுதும் மக்களின் அருமை புரியாது நண்பரே லூசுல விடுங்க"
ReplyDeleteஎத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த ஒரு விசயத்தில் அணி திரண்ட நண்பர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை///
ReplyDeleteஇதற்க்கு பாராட்டு தேவையில்லை, தீர்வு வரட்டும் அதில் சந்தோசப்படுவோம்!
தத்துவம் மிக அருமை. சமீபத்தில் ஏதோ ஒரு சின்மாவில் வந்த வசனம். காந்திக்கு தன்னை கீழே தள்ளிய ரயில்வே அதிகாரி மீது கோபம் வந்திருந்தால் சண்டைதான் நடந்திருக்கும். ஆங்கிலேயன் மீது வந்ததாலேயே போராட்டம் ஆனது.
ReplyDeleteகுட்டிக்கதை குமுதத்தில் வரும் ஒரு பக்க கதை போல இருந்தது.
மற்றபடி எல்லாமே சூப்பர்.
>>போன வாரம் நம்ம முறைமாமன் கார்த்திக் சாட்டிங்குல வந்து ஞாயித்து கிழமை மீட்டிங் ஒன்னு இருக்கு கோமாளி செல்வா, சுற்றுலா விரும்பி அருண், அப்புறம் நானும் வரேன், நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாரு,
ReplyDeleteநல்லா மாட்டிக்கிட்டாரு கார்த்தி,.. என்னை ஏன் அழைக்கவில்லை என கேட்டதற்கு எதேச்சையான சந்திப்பு நோ பிளானிங்க் என்றார்.. இருங்க வெச்சுக்கறேன் கச்சேரிய
விகடன்ல வந்ததை டேக் இட் ஈஸி பாலிசியா எடுத்துக்க வேண்டியதுதான்.ஆனா 8 லட்சம் மக்கள் படிக்கற புக்ல அப்படி அவமானப்படுத்டுனது வருத்தம்தான்.
ReplyDelete>>பத்திரிக்கைகளில் எழுதுவதை போலவும் நாம் எல்லாம் எழுதவே தெரியாமல் எழுதுவது போலவும் நினைப்பு அவர்களுக்கு, ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை.
ReplyDeleteஏற்கனவே நம்ம ராதா கிருஷ்ணன் தனி பதிவாவே போட்டிருக்காரே
என்னங்க இப்படி அடிசுக்கறாங்க .. சிரிப்புதான் வருது ..
ReplyDeleteஒரு வருடம் கழித்து திரும்பவும் இப்பொழுதுதான் புதிய பதிவொன்றை போட்டிருக்கிறேன் .. இந்த சமயத்தில் நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்..
யாருங்க அந்த சிவா கவிதை ரொம்ப அமோகம் போங்க ...
சிடி ஸ்கேனா...என்னாச்சு பாஸ்...இப்போ பரவாயில்லையா..
ReplyDeleteகமர்ஷியலான கலவை பதிவு & TAKE CARE OF UR HEALTH.
ReplyDelete//அடிக்கடி கோபப்பட்டால் , நம் கோபத்திற்கு மரியாதை இல்லை
ReplyDeleteகோபமே படாவிட்டால், நமக்கே மரியாதை இல்லை//
super!
ஞாயிறு டுவிட்டர்கள் சந்திப்பிற்கு நீங்கள் வந்திருந்தீர்களா...
ReplyDelete// ஏன் இதை பற்றி நமது பதிவுலகில் யாரும் எழுதவில்லை என்று தெரியவில்லை //
ReplyDeleteஎனக்குத் தெரிந்து ஒருவர் எழுதியிருந்தார்.... ஆனால் அவரது பதிவில் கூட மற்ற பதிவர்கள் அதிலென்ன தப்பு உண்மைதானே என்ற ரீதியில் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்...
தத்துவம் அருமை...
ReplyDeleteகமர்ஷியலா பக்கங்கள் அருமை நண்பரே..
ReplyDeleteஉடம்பு இப்போது பரவாயில்லை தானே..
கம்மேர்சியல் பக்கம் நல்லா இருந்தது சுரேஷ்...எடிட் பண்ணாமல் போடுங்க நீங்க எழுதினதை...நாங்களும் படிக்கிறோம்...:))) அப்புறம் விகடன் கதை விஷயம்..நானும் படிச்சேன்..:)))) அந்த ஜோக் கதை நல்லா இருந்தது...சி டி ஸ்கேன் ஆ ?? ம்ம்..உடம்பை பார்த்துக்கோங்க சகோதரா...
ReplyDelete@ மாத்தி யோசி .. நன்றி ராஜீவன் சார் ...
ReplyDelete@ ஆர்.கே.சதீஷ்குமார் ... ரொம்ப நன்றிங்க சார்
@ sakthistudycentre-கருன்.. நன்றி கருன் சார் ..
@ Madurai pandi ... நன்றி மதுரை பாண்டி சார் ...
@ சேட்டைக்காரன்.. நன்றி சேட்டைக்காரன் சார், உதாசீனபடுத்தி விட்டேன், இருந்தாலும் பிளாக் என்பது நமது வீடு போன்றது அல்லவா, அதனை ஒருவர் இகழும்போது குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும் என எண்ணினேன் அவ்வளவுதான்...
@ விக்கி உலகம்... நன்றி விக்கி சார், சரியாக சொன்னீர்கள் ...
@ ரஹீம் கஸாலி.. நன்றி கஸாலி சார் ...
நல்லா மாட்டிக்கிட்டாரு கார்த்தி,.. என்னை ஏன் அழைக்கவில்லை என கேட்டதற்கு எதேச்சையான சந்திப்பு நோ பிளானிங்க் என்றார்.. இருங்க வெச்சுக்கறேன் கச்சேரிய// he he vidunga sithappa innoru naal erotla vechukkuvom meeting ok?? :)
ReplyDelete@ MANO நாஞ்சில் மனோ.. நன்றி சார் ...
ReplyDelete@ Chitra.. நன்றி சித்ராக்கா, ஓரளவு பரவாயில்லை...
@ எப்பூடி.. தல வண்டியதான் தள்ளலாம்னு சொல்றாங்க, நீங்க என்ன நினைச்சீங்க?
@ bala ... உண்மைதான் பாலா சார்
@ வைகை.. தீர்வு கிடைத்தாலும் சந்தோசப்படுவோம், இருந்தாலும் இந்த அளவு எழுச்சி உண்டானதற்கே பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் சார்...
@ பாலா.. நன்றி பாலா சார்...
@ சி.பி.செந்தில்குமார்.. விடுங்க தல நீங்க பிசியா இருப்பீங்க, தொந்தரவு பண்ண வேணாம்னு கார்த்தி நினைச்சிருப்பாரு, 8 லட்சம் மக்கள் படிக்கர பத்திரிகையில என்ன வேணா எழுதலாமா தல, நீங்க அத படுச்சு பார்த்தீங்களா, ரொம்பவே கிண்டல் பண்ணி இருந்தாங்க, ஒருத்தர் மட்டும் எழுதுனா பத்தாது தல, நிறைய பேரு எழுதனும், அப்பத்தான் நாளைக்கு வேற யாரும் எழுதாம இருப்பாங்க, நமக்குள்ள ஒற்றுமை வேணாமா...
@ ப்ரியா.. நன்றிங்க மேடம், உங்களுக்கு சிவா தெரியாதா? தமிழ்படம் ஹீரோங்க அவரு ...
@ செங்கோவி ... நன்றி நண்பா, இன்னும் ஸ்கேன் எடுக்கலை, சம்பள நாளுக்காக வெயிட்டிங், இப்போ ஓரளவு பரவாயில்லை, விசாரித்தற்கு நன்றி நண்பா ...
@ thirumathi bs sridhar.. வாங்க ஆச்சி மேடம், ரொம்ப நன்றிங்க...
@ ஜீ.. நன்றீ ஜீ சார்...
@ Philosophy Prabhakaran... டுவிட்டர்கள் சந்திப்பு எங்கு நடந்த்து என்று எனக்கு தெரியாது பிரபா, ஆனந்தவிகடன் என்ன எழுதி இருந்தது என்று படித்து பார்த்தால்தான் புரியும் பிரபா, இன்னும் நிறைய பேர் அதை பற்றி விரிவாக எழுதி இருக்கலாம் என நினைக்கிறேன் ...
@ வெறும்பய.. நன்றி சார், இப்பொழுது ஓரளவு பரவாயில்லை ...
@ ஆனந்தி.. எடிட் பண்ணாமலா, வேணாம் மேடம், நாளமின்னைக்கு நீங்கள்ளளாம் வந்து போக வேணாமா ஹி ஹி விசாரித்ததற்கு மிகவும் நன்றி மேடம் ...
@karthikkumar...
ReplyDeleteவாய்யா மாம்சு உன்னை போட்டு கொடுக்கலாம்னுதான் நினைச்சேன், வேணாம்னு விட்டுட்டேன் ஹி ஹி
நண்பா நானும் அந்த விகடன் கதையை படித்தேன் ,கண்டனம் தெரிவிக்கிற அளவிற்கு அதில் ஒன்றும் இல்லையே .கொஞ்சம் நகைச்சுவை கதையே அவ்வளவுதான் , அது மட்டும் இல்லாமல் எப்போது ஒரு படைப்பு படைக்க பட்டதோ அது விமர்சனத்திற்கு உட்பட்டதுதான்
ReplyDelete@ நா.மணிவண்ணன் ...
ReplyDeleteமுதலில் வருகைக்கு நன்றி நண்பா, அவர்கள் எழுதியதில் வெறும் கிண்டல் மட்டுமே இருந்தால் நானும் நகைச்சுவையாக ரசித்து விட்டு போயிருப்பேன் நண்பா, ஆனால் அவர்கள் பிளாக்கர்கள் படைக்கும் புத்தகங்களை அல்லவா கிண்டல் செய்கிறார்கள், அதுவும் புத்தக கண்காட்சியில் பராக்கு பார்த்தபடி முழித்து கொண்டு செல்பவர்கள் பிளாக்கர்களாம், அடுத்த வருசம் அவர்களும் எழுத்தாளர்கள் ஆகி விடுவார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள், அதை கேட்டு சரஸ்வதி தேவிக்கே கண்னை கட்டுகிறது என்று கூறுகிறார்கள், சரி நான் ஒன்று கேட்கிறேன் இப்பொழுது எழுதும் எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்த உடனே எழுத்தாளர்கள் ஆகி விட்டார்களா, இல்லை அதற்கென்றே பத்து வருடம் உட்கார்ந்து படித்தார்களா, அவர்களுக்கு எந்த விதத்தில் இணையத்தில் எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள் நண்பா? படிப்பவர் ரசிக்கும்படி எழுதுபவர் யாராக இருந்தாலும் நல்ல எழுத்தாளரே அதுவன்றி முழுக்க முழுக்க இலக்கியதரமாக எழுதினாலும் படிப்பவரால் ரசிக்க முடியவில்லை என்றால் அது நல்ல படைப்பாக இருக்காது என்பதே என்னுடைய கருத்து, ஒரு படைப்பு படைக்கப்பட்டால் விமர்சனத்திற்கு உட்பட்டது என்ப்தை ஒத்துக் கொள்கிறேன், அந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் ஒன்று நன்றாக உள்ளது என சொல்லலாம், இல்லை நன்றாக இல்லை என்று சொல்லலாம், அதைவிட்டு விட்டு பிளாக்கர் எழுதியதால் மட்டுமே அது புத்தகமே இல்லை என எப்படி கூறமுடியும் நன்பா...
Im following u from now
ReplyDeleteசிவா கவிதை போட்டததுக்கு அவருகிட்ட பர்மிஷன் வாங்கினிர்களா...
ReplyDeleteதொகுப்பு அருமை
//கவிதையை எழுதி இயற்றியவர் - சிவா//
ReplyDelete>>> எனக்கு இந்த புகழ் எல்லாம் வேண்டாம் சுரேஷ்!
//சென்ற வாரம் ஆனந்தவிகடன் புத்தகம் ஒன்றினை...//
ReplyDelete>>> யார் நாம் குப்பை கொட்டுகிறோமா??? தைரியம் இருந்தால் சினிமா நடிகை படத்தை முன் அட்டையில் போடமால் இவர்களால் புத்தகம் வெளியிட முடியுமா?? கக்கன்,காமராஜ் போன்ற ஒப்பற்ற தலைவர்களின் நினைவு தினத்தில் அவர்களின் படத்தை அட்டையில் போட்டு இருப்பார்களா??? பதிவுலகம் தான் இப்போது நடு நிலையுடன் உள்ளது. செம காமடி பண்றாங்க..
//செம காமடி பண்றாங்க.// சொன்னது விகடனை..
ReplyDeleteநானும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேங்க.
ReplyDeleteஅப்பறம்.. நானும் திருப்பூர் காரங்க...
ReplyDelete