Monday, February 14, 2011

வர வர காதல் கசக்குதய்யா ... (A)

இது ஒரு பயங்கர மொக்கையான பதிவு, இந்த பதிவை காதலிப்பவர்கள், காதலிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள், மற்றும் பெண்கள் யாரும் படிக்க வேண்டாம், சில விசயங்கள் 18+ போல இருக்கும், அதனால் பக்கத்தில் எதாவது நல்ல பிளாக்கா போய் நல்ல விசயங்களை படிங்க, மீறி படிச்சிட்டு திட்டாதீங்க !!!


இன்னைக்கு காதலர் தினம்னு சொல்றாங்க..,
காதல்னா என்ன? ஆணும் பொண்ணும் மட்டும் காதலிக்கிறதா இல்லைன்னா எல்லாரும் சொல்ற மாதிரி அப்பா அம்மா, நாய், பூனைக்குட்டி, இப்படி எது மேல எல்லாம் அன்பு பீறிட்டு வருதோ அது எல்லாமே காதல்தானா? இல்ல அட்ராக்சனா? இப்படி அட்ராக்சன் எது காதல் எதுன்னு பிரிச்சி தெரிஞ்சுக்கற அளவுக்கு பக்குவம் வந்திருக்கா? இப்ப காதல்னா என்னன்னு எல்லாருக்கும் முழுசா தெரியுமா? உணர்ந்திருக்காங்களா? இல்லை எது எது எல்லாம் காதல்னு நினைச்சுட்டு இருக்காங்க? இதுதான் என்னுடைய கேள்வி, அதற்கான பதிலை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன், எதுக்குன்னு கேட்குறீங்களா? சும்மா தெரிஞ்சுக்கறதுக்காகத்தான், இப்ப நான் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கிற காதல்கள பத்தி சும்மா கொஞ்சம் ....

என்னோட வீட்டுக்கு பக்கம் ஒரு மளிகை கடை இருக்கு, பசங்க எல்லாரும் எப்பவும் மளிகை கடை பக்கத்துல இருக்கற கம்பி கேட்டுளதான் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம், மளிகை கடை அண்ணாச்சி பலம்பெரும் குடிகாரர், அவருக்கு வாங்கி தந்தா கொஞ்சம் நமக்கும் கிடைக்குமேன்னு பசங்க எல்லாரும் அங்கயேதான் இருப்போம், எங்க வீட்டுக்கு பக்கம் ஒரு பொண்ணு இருந்துச்சு, அந்த பொண்ண கோயம்புத்தூர் காந்திபுரத்துல பார்த்தோம், ஈரோட்டுல பி.எஸ் பார்க்குல பையனோட பார்த்தோம்னு அடிக்கடி பசங்க சொல்லுவாங்க, சரி அது ஏதோ ஒரு பையன லவ் பண்ணுதுன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு.
அப்ப எங்க அண்ணாச்சி முத ல் முறையா ஒரு STD  பூத் ஒன்னு ஓப்பன் பண்ணுனாரு, அப்ப செல்போன் ரொம்ப புழக்கம் இல்லாத டைம்மு, காயின் பாக்சு, எஸ்டிடி பூத்துன்னு ஓடிட்டு இருந்துச்சு, நம்ம பொண்ணு இருக்கே, அதுவும் அங்க போன் பண்ண ஆரம்பிச்சது, டெய்லியும் 3 மணி நேரம் என்ன பேசும்னே தெரியாது, ஒருநாள் ரெண்டு நாள் இல்லை மாசக்கணக்கா மணிக்கணக்கா பேசும், அது பேசுன வேகத்துக்கு மூணே மாசத்துல நம்ம அண்ணாச்சி அட்டன் டைம்ல நாலு காயின் பாக்ஸ் வாங்கி போடற அளவுக்கு வசதி ஆகிட்டாரு, அதுவும் எப்படி நிமிசத்துக்கு 60 செகண்ட்ஸ் நம்ம அண்ணாச்சி காயின் பாக்ஸ் மட்டும்தான்,

எங்கிருந்து வந்தாங்களோ தெரியாது புதுசா நாலு பொண்ணுக வந்தாங்க சாயங்காலம் ஆனா போதும் நம்ம பழைய பொண்ணு எஸ்டிடிக்குள்ள போய் குடியேறிடும், மீதி நாலு பொண்ணுகளும் ஆளுக்கொரு காயின் பாக்ஸ்ஸ புடிச்சுக்குவாங்க, உண்டியல்ல காசு போடற மாதிரி ஒவ்வொன்னா லொட்டு லொட்டு போட்டு பேச ஆரம்பிப்பாளுக, நாங்களும் ஒட்டு கேட்க எவ்வளவோ டிரை பன்ணுவோம், ஹூஹூம் ஒன்னும் கேட்காது, அவளுக பேசுறது ரிசீவர்க்கே கேட்காது, எதுத்தாப்ல இருக்கறவனுக்கு கூட கேட்குமோ என்னவோ, அவங்க ச்சீம்பாங்க இல்லைன்னா சிரிப்பாங்க, நாங்க அதை பார்த்து விவேக் மாதிரி மிமிக்ரி பண்ணி சிரிச்சுக்குவோம், நம்மால வேறென்ன பண்ண முடியும்.
இப்படியே நாலு மாசம் போச்சு, காயின் பாக்ஸ்ல இருந்த மூணு பொண்ணு ஓடிப்போயிருச்சு, நாலாவது பொண்ணு மளிகைகடை பின்னாடி இருந்த பொதருல ஒருத்தனோட கையும் களவுமா பிடிச்சிட்டாங்க, புடிச்சது நம்ம அண்ணாச்சியேதான், அவரு புடிக்க போனது வேற விசயம், புடிக்கறேன்னு சொல்லி அவரும் சில அஜால் குஜால் எல்லாம் பண்ணிட்டாரு, ஏங்க இப்படி பண்ணுனீங்க போதைல அண்ணாச்சி இருக்கறப்ப கேட்டப்பதான் தெரிஞ்சது, அந்த பொண்ணு பேசும் போது நம்ம அண்ணாச்சி ஒட்டு கேட்டு இருக்காருன்னு, அது நாலஞ்சு பசங்கள டீல் பண்ணிட்டு இருந்துருக்கு, அதனால தலைவரும் களத்துல இறங்கி இருக்காருன்னு.

இப்படியே நாலு பொண்ணுங்களும் போக எஸ்டிடி பொண்ணு மட்டும் களத்துலயே இருந்துட்டு இருந்துச்சு, கொஞ்ச நாள் ஆச்சு, முன்ன சிரிப்பும் வெட்கமுமா பேசிட்டு இருந்த பொண்ணு இப்ப ஓரே அழுகைதான் பேசுற மூணு மணி நேரத்தில இரண்டரை மணி நேரமும் ஒரே அழுகைதான், இப்ப டெய்லியும் மணிக்கணக்கா அழ ஆரம்பிச்சிருச்சு, எங்களுக்கு ஒன்னும் புரியல, ஏதோ மேட்டர் ஆகி போச்சுன்னு மட்டும் புரிஞ்சது, அண்ணாச்சியும் ஒட்டு கேட்டுட்டு வந்து அதேதான்னு சொன்னாரு, ஆகா பய கை கழுவ பார்க்கறான்னு தெரிஞ்சு போச்சு, அதுவும் ஒரு மாசம் அழுது பார்த்துச்சு, அப்புறம் கொஞ்ச நாளா ஆளையே காணோம்.

ஒரு மாசம் கழுச்சு பார்த்தா கையில செல்போனோட அது பாட்டுக்கு ரோட்டுல சிரிச்சு பேசிட்டு போகுது, அண்ணாச்சிகிட்ட போய் என்னன்னு கேட்டோம், அவ கழட்டி விட்ட பையன் கூட பீல் பண்ணி இருக்க மாட்டான், இவருஆள் நொந்துட்டாரு, அந்த பொண்ணு ஆள மாத்திடுச்சாம், புது ஆளு பரவாயில்லை,  பழைய ஆள் மாதிரி கிடையாது, உடனே செல்போன வாங்கி கொடுத்திட்டான், பாவம் அண்ணாச்சிக்குதான் வருமானம் போச்சு, அண்ணாச்சி டென்சன் ஆகிட்டாரு, படுபாவி இவள நம்பிதான கடைய வச்சிருந்தேன், இப்படி ஆள மாத்திட்டாளே, இவ அழுது அழுது என்னோட போன் ரிப்பேர் ஆனதுதான் மிச்சம்னு புலம்பிட்டாரு, விடுங்க அண்ணாச்சி இந்த பொண்ணுகளே இப்படித்தான் ஒரு கட்டிங் போட்டா சரியாகிடும்னு சொல்லிட்டு வந்தேன், பாவம் அண்ணாச்சி ஓவரா கட்டிங் வுட்டு இப்ப குடல் வெந்து ஹாஸ்பிட்டல்ல இருக்காரு,

நம்ம பிரண்டு ஒருத்தர் இருக்காரு, அவரோட டெக்னிக்கே தனி, முதல்ல கூட வேலை பார்க்குற பொண்ணுங்க, தெரிஞ்ச பொண்ணுங்க இப்படி கடலை போட ஆரம்பிப்பாரு, அப்புறம் அந்த பொண்ணுங்க கிட்ட கேட்டு அவங்க ரிலேசன் பொன்ணுக இல்லைன்னா பிரண்டுக இப்படி அவங்க நம்பர் வாங்கி கடலை போட ஆரம்பிப்பாரு, கேட்டா பிரண்சிப்ப வளர்க்கறாங்களாம், அடுத்து அந்த பொண்ணுகளோட பிரண்ஸ்சு, ரிலேசனு இப்படி ஒரு அஞ்சாரு ரவுண்டு தாண்டி போய் ஏதாவது ஒரு பொண்ண புடிக்க வேண்டியது, பேசி கரக்ட் பண்ணி எங்கயாவது கூட்டிட்டு போனா மேட்டர் முடிஞ்சது, அப்புறம் ஆள் எஸ்கேப்பாகிடுவாரு, பாதிக்கப்பட்ட பொண்னுககிட்ட அந்த பையன் கூட எப்படி பழக்கம்னு கேட்டா அவங்களே குழம்பிடுவாங்க, யாரு மூலமா காண்டாக்ட் கிடைச்சதுன்னு, இப்படி நிறைய பேரு இருக்காங்க,

இன்னொரு நண்பன், என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன், அவனும் இதே கேட்டகிரிதான் ஆனா வேற மாதிரி மூணு பொண்ணுகள வச்சிருக்கான், இதுல ஒரு பொண்ணு பத்தாவது படிக்குது இவன சின்சியரா லவ் பண்ணுது, மீதி ரெண்டு பொண்ணுக்கும் இவன் மத்த பொண்ணுகளயும் லவ் பண்றது தெரியும், ஆனா அவங்களும் இத கண்டுக்கரதில்லை, ஏன்னா அவங்களும் இவனை கழட்டிவிடத்தான போறாங்க, இல்லைன்னா இவன் அவங்கள கழட்டிவிட போறான் அவ்வளவுதான், இப்ப அவனுக்கு வீட்டுல தீவிரமா பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க, கூடிய சீக்கிரம் மூணு பேர்க்கும் அல்வா புஜ்ஜி அல்வா,
சினிமா பார்த்து கெட்டு போறாங்க, சினிமா பார்த்து கெட்டு போறாங்கன்னு சும்மாவா சொல்றாங்க, இங்க ஒரு லிங்க் தரேன் போய் பார்த்துட்டு வாங்க, லிங்க் 18+ அல்ல, ஆனா லிங்க் அடுத்து வரது எல்லாம் 18+ ஆ இருக்கும், அதனால லிங்க்க மட்டும் கேட்டுட்டு வந்துடுங்க, மத்தத கேட்டீங்கன்னா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்,

http://www.youtube.com/watch?v=mqwI-HAmUg4

முன்ன எல்லாம் லவ் பண்ணா காண்டாக்ட் பண்ண வழி இருக்காது, இப்ப செல்போனு, இண்டர்நெட்டுன்னு வந்ததுக்கு அப்புறம் சும்மா கொடி கட்டி பறக்குது சார் பலபேரோட மானம் நெட்டுல பார்க்குறோமுல்ல, அதுல எத்தனை பேருக்கு தெரியுமோ தன்னோட மானம் நெட்டுல போயிருச்சுன்னு, தெரிஞ்சு எத்தனை பேரு செத்தாங்கலோ யாருக்கு தெரியும்? இனி 3ஜி வேற வந்திருச்சு, சொல்லவே வேணோம், சாதரண கேமரா மொபைல வச்சே ஸ்காண்டலு, எம் எம் எஸ்னு ஓடிட்டு இருக்கு இப்ப வீடியோ கால் வேற, என்னன்ன கொடுமை எல்லாம் நடக்க போகுதோ,

முதல்ல கல்யாணம் பண்ணிட்டு இன்பமடைஞ்சாங்க, அப்புறம் போன் வந்ததுக்கு அப்புறம் போன்ல செக்ஸ் மேட்டர் பேசி கிளுகிளுப்படைய ஆரம்பிச்சாங்க, அப்புறம் இண்டநெட்டு, சாட்டிங்கு அப்படின்னு கிளுகிளுப்படைய ஆரம்பிச்சாங்க, இப்ப பொழுதன்னைக்கும் எஸ் எம் எஸ் கார்டு போட்டு எஸ் எம் எஸ் மூலம் மேசேஜ் அனுப்ப ஆரம்பிச்சிருக்காங்க, இது என்ன மனவியாதியா என்னன்னு எஸ்.கே சார்தான் விளக்கனும்

முன்னயெல்லாம் லவ் பண்றதுனா சாமி குத்தம் மாதிரி இருந்தது ஒருகாலம், அப்ப எனக்கு தெரிஞ்சு அம்மா அப்பா இல்லாத பொண்ணுக, யாரோட ஆதரவும் இல்லாதவங்க, இப்படிப்பட்டவங்கதான் காதல்ல விழுவாங்க, காதலிப்பாங்க ஆனா இப்ப பாய் பிரண்டு, கேர்ள் பிரண்டு வச்சிருக்கறது பேசனாகி போச்சு,
புருசன் பொண்டாட்டி மாதிரி பிகேவ் பண்ராங்க, போன்ல மணிக்கணக்கா செக்ஸ் மேட்டர் பேசறாங்க, பைக்ல ஊர் ஊரா சுத்துறாங்க, எல்லாமே பண்ணறாங்க ஆனா லவ் பண்றோம்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க கேட்டா ஐஸ்ட் பிரண்டுகிறாங்க, இது எல்லாத்தையுமே பிரண்ட்சிப்புகுள்ள அடக்கிடுறாங்க, ரொம்ப உசாரா இருக்காங்கப்பா, லவ் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாதான் தப்பாம், பிரண்ட்சிப்புன்னு சொல்லிட்டு பண்ணினா தப்பில்லையாம், என்ன கொடுமை சார் இது? அப்ப ந்ட்புன்னா என்ன? அப்படின்னு யாராவது சொன்னா தேவலை.

ஒரு பொண்ணுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க்றது, கிப்ட் கொடுக்க்றது, அவங்களுக்கு தேவையானது எல்லாம் செய்றது, டிரஸ் வாங்கி கொடுக்கறது, போன் வாங்கி கொடுக்கறது, ரீசார்ஜ் பண்ணி கொடுக்க்றது, காத்திருந்து பைக்ல டிராப் பண்றது இப்படி எல்லாம் ஒரு பையன் வந்து பண்ணி கொடுக்கறானே அது எதுக்காக அவனோட எதிர்பார்ப்பு என்னன்னுஅந்த பொண்ணுக்கு தெரியாமலா இருக்கும்?,  அதே மாதிரிதான் பொண்ணுகளும் பிரண்ட்ஸ்சிப் பிரண்ட்ஸ்சிப்புன்னு நிறைய பசங்களோட பழகறது, மிஸ்பிகேவ் பண்றது, முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்.

தாங்க சைட் அடிக்கறதுக்கு, கூட்டிட்டு சுத்தறதுக்கு அழகழகான பொண்ணுங்க வேணும், மாடர்ன் பொண்ணுக வேணும்னு நினைக்கறவங்க எல்லாரோட எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்னு பார்த்தா அவங்க கல்யாணம் பன்னிக்க போற பையனோ பொண்ணோ மட்டும் ஒழுக்கமா இருக்கனுமாம், ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு நல்லவங்களா இருக்கனுமாம், ஒன்னு தெரிஞ்சுக்கனும், இங்க ஒழுக்கம் கெட்டு சுத்தறவங்க யாரா இருந்தாலும் சரி ஆணோ பொண்னோ அவங்களுக்கு வரவங்க மட்டும் ஒழுக்கமா இருப்பாங்கன்னு நினைக்காதீங்க, கண்டிப்பா ஒழுக்கம் கெட்டதாதான் இருக்கும்,

 வெள்ளைக்காரன் அப்படி பண்ணான் வெள்ளைக்காரன் இப்படி பண்ணான்னு மேற்கத்திய கலாச்சாரத்த தப்பு சொல்றமே, அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான், இங்கதான் பொண்டாட்டி இருக்கறப்பவே மனைவி, வப்பாட்டி, துணைவின்னுட்டு கெடக்கறாங்க,

எப்படி வேணாலும் வாழலாம்னு நினைச்சு வாழ்ந்தா சரியா இருக்குமா இல்லை இப்படித்தான் வாழனும்னு நினைச்சு வாழ்ந்தா சரியா இருக்குமா, ஏனெனில் தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம், பல சமுதாயங்கள் சேர்ந்ததுதான் ஊர் நாடு இத்யாதி போன்றவை, எனவே தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் பிரதிபலிக்கும், தனி மனித ஒழுக்கம்கறது தானா வராது, பிறப்பு வளர்ப்புலதான் வரும், குறைந்தபட்சம் நல்லது கெட்டது உணர்ந்து நமக்கு என்ன தேவை அப்படின்னாவது உணர்ந்து இருக்கனும், ஆணோ பொண்ணோ நமக்கு தேவை ஒரு துணை, அது யார் என்பதை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் மட்டும் போதுமானது, மற்றபடி தெரிந்தே தவறு செய்வது நல்லதல்ல, இறைவனின் சன்னிதானத்தில் எல்லாவற்றுக்கும் மன்னிப்பு கிடைக்கும் அது தெரியாமல் செய்த தவறுக்கு மட்டுமே, தெரிந்தே செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது, தண்டனை மட்டுமே.

இது காதலிப்பவர்கள் யாரையும் குறிப்பிட்டு எழுதியது அல்ல, இப்படித்தான் எல்லா காதலர்களும் செய்கிறார்கள் என்று கூறுவதும் அல்ல, சில காதல்களை கண்டதால் எழுதியது, ரொம்ப நாளாக எழுத நினைத்தது, மற்றபடி உண்மைகாதலுக்கு நான் என்றும் ஷாஜகான் விஜய்தான், ஆனால் என்ன செய்வது அதை காண்பது அரிதாகவே உள்ளது, இங்கு நல்ல காதலை விட கள்ளக்காதலுக்குதான் வலிமை அதிகமாக உள்ளது!

ஓகே ரொம்ப அறுத்துட்டேன்னு நினைக்கிறேன், அதனாலை கீழ்வரும் பாடலை உண்மைக்காதலர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், மத்தபடி என்னை திட்டனும்னு நினைக்கறவங்க தாராளமா திட்டிட்டு போலாம், நன்றி ....33 comments:

 1. வடை வாங்க வந்துட்டோம்ல ...

  ReplyDelete
 2. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
  வாழ்த்துக்கள்....

  கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

  ReplyDelete
 3. //வெள்ளைக்காரன் அப்படி பண்ணான் வெள்ளைக்காரன் இப்படி பண்ணான்னு மேற்கத்திய கலாச்சாரத்த தப்பு சொல்றமே, அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான், இங்கதான் பொண்டாட்டி இருக்கறப்பவே மனைவி, வப்பாட்டி, துணைவின்னுட்டு கெடக்கறாங்க,//

  இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது சுரேஷ்...அப்புறம் இடையில் அந்த குட்டி குட்டி பட வார்த்தைகள்...நம்ம சற்குணம் வீடியோ னு...சூப்பர் கலக்கல்..கொஞ்சம் சீரியஸ் ஆ போயி காமடியா முடிஞ்சது...

  ReplyDelete
 4. பஸ்ல சிவப்பு கலர் சுடிதார் ஜோக் நான் எழுதி ஆனந்த விகடனில் வந்தது.

  ReplyDelete
 5. >>இது காதலிப்பவர்கள் யாரையும் குறிப்பிட்டு எழுதியது அல்ல, இப்படித்தான் எல்லா காதலர்களும் செய்கிறார்கள் என்று கூறுவதும் அல்ல, சில காதல்களை கண்டதால் எழுதியது, ரொம்ப நாளாக எழுத நினைத்தது,

  இப்படி எல்லாம் சமாளிச்சா உங்களை விட்டுடுவமா?

  ReplyDelete
 6. இப்படி தைரியமா லிங்க் குடுக்கறீங்களே.. பிரச்சனை வராது..?( வருதோ இல்லையோ ஒரு பிட்டை போட்டு வைப்போம்.

  ReplyDelete
 7. எல்லாம் சூப்பர்..
  கட்டிங்ஸ் சூப்பர்
  லவ் மேரேஜ் படம் அதைவிட சூப்பர்..
  அதை எங்க பாஸ் புடிச்சிங்க..

  ReplyDelete
 8. முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்///

  கோட்டர் மேல கல்லு விழுந்தாலும், கல்லு மேல கோட்டர் விழுந்தாலும் ஓடையறது என்னவோ கோட்டர்தான்......:((

  ReplyDelete
 9. நீங்கள் இல்லாததை எதுவும் சொல்லவில்லை,ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம்.அதை பெண்களின் பின்புத்தி அந்த சூழ்நிலையில் உணர தயாரா இல்லையே.

  ReplyDelete
 10. //ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான், இங்கதான் பொண்டாட்டி இருக்கறப்பவே மனைவி, வப்பாட்டி, துணைவின்னுட்டு கெடக்கறாங்க//
  True!

  ReplyDelete
 11. உள்ளே வந்தாச்சி ..
  படிச்சாச்சி..
  தமிழ்மணத்தில் 7- வது ஓட்டையும் போட்டாச்சி

  ReplyDelete
 12. இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

  ReplyDelete
 13. காலமெல்லாம் காதல்,
  வாழ்க வளமுடன் !
  http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

  ReplyDelete
 14. Latest Google Adsense Approval Tricks 2011

  Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

  More info Call - 9994251082

  Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

  New google adsense , google adsense tricks , approval adsense accounts,

  latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

  Quick adsense accounts ...

  More info Call - 9994251082

  Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

  ReplyDelete
 15. நிறையவே எழுதியிருக்கிங்க..நல்லாருக்கு

  கவிதைகளும் அருமை.

  ReplyDelete
 16. //அந்த வெள்ளைக்காரன் கூட ஒருசமயம் ஒரு பொண்ணோடதான் வாழறான், அந்த பொண்ணுகூட கருத்து வேறுபாடு வந்து டைவர்ஸ் பண்ணின பிறகுதான் அடுத்த பொண்ண தேடிப்போறான்// இதை நானும் கவனித்திருக்கிறேன்..அவர்களிடம் உள்ள நேர்மை நம்மிடம் இல்லை..இது பற்றி ஒரு நாள் எழுதுவதாக இருந்தேன்....பார்ப்போம்.

  ReplyDelete
 17. சுரேஷ், பட்டைய கிளப்புறீங்க.

  ReplyDelete
 18. //ஏதாவது ஒரு பொண்ண புடிக்க வேண்டியது, பேசி கரக்ட் பண்ணி எங்கயாவது கூட்டிட்டு போனா மேட்டர் முடிஞ்சது, // போன் நம்பரை வாங்குவது எளிதல்ல, எதையோ சொல்லி நம்பவைத்து வாங்கிவிடுகிறார்கள். இதுக்கு ரொம்ப சாமர்த்தியம் வேணும்பா. அது சரி நம்ம கல்யாண மனனம் முகமது அலி [நான் அவனில்லை ஸ்டைலில்] பெரிய வேலையில் உள்ள பணக்கார பெண்களை, தீபாவளிக்கு கோழி திருடியவனைப் போல இருந்து கொண்டு முப்பதுக்கும் மேற்ப்பட்ட கல்யாணம் எப்படித்தான் பண்ணினானோ. இப்படியும் இளிச்ச வைப் பெண்கள் இருக்காங்க. ஆனா, உண்மையா திருமணம் செய்துகொள்ள விரும்பம் நேர்மையான பையன் சும்மாவே சுத்திகிட்டு இருப்பான். ஹா..ஹா..ஹா..

  ReplyDelete
 19. //முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குதான்.// இப்போ இருக்கும் சேலைகள் அதை டேமேஜா நினைப்பதே இல்லை, அதுதான் கொடுமை..!!

  ReplyDelete
 20. //எனவே தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் பிரதிபலிக்கும், தனி மனித ஒழுக்கம்கறது தானா வராது, பிறப்பு வளர்ப்புலதான் வரும், குறைந்தபட்சம் நல்லது கெட்டது உணர்ந்து நமக்கு என்ன தேவை அப்படின்னாவது உணர்ந்து இருக்கனும், ஆணோ பொண்ணோ நமக்கு தேவை ஒரு துணை, அது யார் என்பதை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் மட்டும் போதுமானது, மற்றபடி தெரிந்தே தவறு செய்வது நல்லதல்ல.// திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் சம்மதித்து "சந்தோஷமாக" இருந்தால் அது சட்டப்படி தப்பேயில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது. இவர்களிடம் நல்லது, நல்லதல்ல என்று எதையாவது சொன்னால், "எண்கள் சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார், நல்லது கேட்டது எங்களுக்குத் தெரியும், அறிவுரை என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் வேறு உருப்படியாக வேலை இருந்தால் பாருங்கள்" என்பார்கள், அல்லது கலாச்சார காவலாளிகள் என்று கேலி செய்வார்கள். உண்மையில், இவர்கள் செய்வது சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் காலவாக்கில் பரவும், நாளைக்கு நம் குழந்தைகளே அது மாதிரி ஆகிப் போகலாம், அப்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

  ReplyDelete
 21. நண்பா ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்

  நானும் நீங்கள் கூறி இருக்கும் காதல்கள் நிறைய பார்த்திருக்கிறேன் ,இப்பொழுது நேரிலே பார்த்து கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 22. நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html

  ReplyDelete
 23. தாங் கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளீர்..
  உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. sakthistudycentre-கருன்

  நன்றி கருன், வேலை இருந்ததால வர முடியல, மன்னிக்கவும்

  ஆனந்தி..

  பெண்கள் வரவேண்டாம்னு சொன்னாலும் வந்து படிச்ச உங்க தைரியத்த பாராட்டுறேன் மேடம், நன்றி

  சி.பி.செந்தில்குமார்

  நன்றி தல, ஏன் இப்படி மாட்டி விடுறீங்க ?

  # கவிதை வீதி # சௌந்தர்

  நன்றி செளந்தர் சார், உங்க பக்கம் வரணும்னு நினைக்கிறேன், வர முடிய மாட்டேங்குது, கொஞ்சம் வேலை அதான், மன்னிக்கவும்.

  karthikkumar

  வா மச்சி என்ன பிலாசபியா

  மாத்தி யோசி

  நன்றி ராஜீவன்

  thirumathi bs sridhar

  நன்றி மேடம், என்னுடைய வருத்தமும் அதுதான்

  ஜீ...

  நன்றி ஜீ

  ரஹீம் கஸாலி

  நன்றி நண்பா என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி

  ReplyDelete
 25. @ பாட்டு ரசிகன்

  நன்றி சார்

  @ ஆகாயமனிதன்.

  நன்றி சார், எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்

  @ Riyas

  நன்றி சார்

  @ பன்னிக்குட்டி ராம்சாமி

  நன்றி சார்

  @ செங்கோவி

  நன்றி நண்பா, நீங்களும் கண்டிப்பாக எழுதுங்கள்

  @ ! சிவகுமார் !

  நன்றி சிவா

  @ Jayadev Das

  நன்றி ஜெயதேவ், உங்களின் ஆதங்கம் புரிகிறது, ஏதோ நம்மால் முடிந்ததை இணையத்தில் பதிய வைப்போம் :-)

  @ நா.மணிவண்ணன்

  உண்மைதான் நன்றி நண்பா

  @ # கவிதை வீதி # சௌந்தர்

  பார்த்தேன் நண்பா, நன்றி

  ReplyDelete
 26. நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே

  ReplyDelete
 27. @ விக்கி உலகம்

  நன்றி நண்பா

  ReplyDelete
 28. நல்லா எழுமியிருக்கிறிங்கள் சகோ... குறுகிய நாட்களாக உங்கள் பக்கம் வரல அதற்காக நீங்க நம்ம பக்கம் வாறத மறந்திட்டிங்களா???

  ReplyDelete
 29. @ தோழி பிரஷா

  மன்னிக்கவும் பிரஷா மேடம், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நானும் இரண்டு வாரங்களுக்கு மேலாக வலையுலகிற்கு வரமுடியவில்லை, என்னுடைய இதற்கு முந்தைய பதிவை படித்து பார்க்கவும், அதனால்தான் வரமுடியவில்லை, இனிமேல் தொடர்ந்து வருகிறேன், கருத்துக்கு நன்றி மேடம் ...

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!