சாய் பாபா இறந்துட்டாருங்கறத பத்தி எத்தனை விதவிதமான நியூஸ், 96 வயசு வரைக்கும் இருப்பேன்னு சொன்னாரு, அல்பாயிசுலயே செத்து போயிட்டாரு, தன்னையே கடவுள்னு சொன்னாரு, இப்ப கடவுளே செத்து போயிருச்சா, வாயில இருந்து லிங்கம் எடுத்தாரு, கைய சுத்தி செயின் எடுத்தாரு, விபூதி எடுத்தாரு, மேஜிக் பண்ணி ஊர ஏமாத்துனாருன்னு எத்தனையோ நியூஸ்
இருந்தாலும் அவரோட சமூகபணிகளால எத்தனை பேர் பயனடைஞ்சு இருக்காங்க, உணவி, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம்னு தனி ஒரு அரசாங்கமே நடத்தி இருக்காரு, அவரால எத்தனையோ மக்கள் பயன் பெற்று இருக்காங்கங்கறதும் உண்மைதான், ஏன் சென்னைக்கு கூட 200 கோடி ரூபா செலவுல தண்ணீர் வர வாய்க்கால சீரமைச்சு கொடுத்து இருக்காரு, இதுக்கு முன்னாடி வர அவருமேல பெரிசா எந்த அனுமானமும் எனக்கு இல்லை,
ஆனா அன்பே சிவம் படத்துல கமல் மாதவன்கிட்ட ஒரு டயலாக் சொல்லுவாரு, எப்போ இன்னொருத்தனுக்காக நீ கண்ணீர் விட்டயோ அப்பவே நீ கடவுளாகிட்டன்னு, நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆரம்பத்துல அவர் போலியாவே இருந்திருந்தாலும் அவர் செஞ்ச நற்பணிகள் மூலமா அவர் கடவுள் ஸ்தானத்தை அடஞ்சதா நாமும் நினைச்சுக்கலாம்
எத்தனை ஆயிரம் பேருக்கு அவர் கடவுளாகவே இருந்திருக்கார், குறைந்தபட்சம் ஒரு மனிதனா சாய்பாபாவோட ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், அவரோட டிரஸ்டுக்கு மட்டும் 45000 கோடிக்கு மேல சொத்து இருக்காம், அவரோட வாரிசுன்னு யாரும் இல்லாத்தால ஒரு நல்ல மனுசன் அந்த டிரஸ்டுக்கு தலைமை பொறுப்பேற்று அந்த சமூக பணிகள தொடர்ந்து செய்யனும், இல்லாம லூஸ்ல விட்டுட்டு அறநிலையதுறை கைக்கு போயிருச்சுன்னா ஒரு வருசத்துலயே அத்தனை சொத்தையும் ஏப்பம் விட்டு சாய்பாபா டிரஸ்டுக்கு கதம் கதம் போட்டுட்டுவாங்க அரசியல்வாதிகள்
காமன்வெல்த் போட்டியில ஊழல் பண்ணுன அரசியல்வியாதி சுரேஷ் கல்மாடிய இன்னைக்குதான் கைது பண்ணி இருக்காங்களாம் சிபிஐ, போன வருசம் பண்ண ஊழலுக்கு இந்த வருசம் கைது பண்றானுங்க, இதுதாங்களா சார் உங்க டொக்கு, இதே ரேஞ்சுல விசாரணை, ரெய்டு எல்லாம் பண்ணுங்க விளங்கிரும், எனக்கு என்னமோ இவனுங்க அடிச்ச பணத்தை ஒளிச்சு வைக்கறதுக்காகத்தான் சிபிஐகாரங்க டைம் கொடுத்து கைது பண்றானுங்க போல, ஒருவேளை அண்ணா ஹசாரேவுக்கு பயப்படுறாங்களா?
ஒரு இன்சிடெண்ட்
போன வாரம் ஒரு நியூஸ் படிச்சேன், ஒருத்தனுக்கு போன்ல ராங்கால் வந்திருக்கு, வந்த கால பேசிட்டு விடாம, கால் பண்ண பொண்ணயே சின்சியரா லவ் பண்ணியிருக்கான், அதுவும் எப்படி இதயம் முரளி மாதிரி பாக்காமலேயே, அந்த பொண்ணும் நான் உலக அழகி ரேஞ்சுல இருப்பேன்னு பீலா விட்டுச்சோ, இல்லை குரலை கேட்டு குயில் மாதிரி இருக்கும்னு இவன் நினைச்சானோ தெரியல, சரி எத்தனை நாள்தான் பாக்காமலேயே லவ் பண்றதுன்னு நேர்ல பாக்கலாம்னு பேசி முடிவு பண்ணிட்டு போய் பார்த்தவன் அப்படியே ஷாக்காகி இருக்கான், பொண்ணு அட்டுபிகர் போல
இவனுக்கு இப்படின்னா பொண்ணுக்கு இவன் அஜிக்குமாரா தெரிஞ்சு இருக்கான், மனசு வெறுத்து போனவன டெய்லியும் போன போட்டு கொஞ்சி பேசிருக்கு பொண்ணு, பயபுள்ள வெறுத்து போய், டிரைன்ல குதிச்சு செத்து போயிட்டான், அடப்பாவிகளா ராங்கால் வந்தா பேசிட்டு கட் பண்ணுங்க, அதவிட்டுட்டு தமிழ் சினிமா பார்த்துட்டு பார்க்காமவே காதல், பேசாமலே காதல், நாக்க வெட்டுற காதல், மூக்க வெட்டுற காதல்னு என்னடா கருமாந்தரம் புடிச்ச மாதிரி லவ் பண்ணுறீங்க
சரி அப்படியே லவ் பண்ணாலும், அழகான பொண்ணுதான் வேணுமா? கருப்பான பொண்ண கட்டுனவன் எல்லாம் இளிச்சவாயனா? சரி அப்படியே அழகான பொண்ண கட்டுனாலும் வேற எவனும் பார்க்க்கூடாதுன்னு வீட்டுல செக்யூரிட்டியா போடமுடியும்? அப்படியே செக்யூரிட்டி போட்டாலும் செக்யூரிட்டியா வந்தவன் உசார் பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம் இருக்கு, இங்க அவனவனுக்கு பொண்ணு கிடைக்கறதே பெரிய விசயமா இருக்கு, இதுல அழகான பொண்ணு தான் வேணுமாம், காலங்காத்தால கடுப்புகள கிளப்பிகிட்டு
படிச்சதில் பிடிச்சது
எதேச்சையா பழைய வாரமலர் புக்கு படிக்க நேர்ந்தது, ஏற்கனவே ஒருதடவை படிச்சு சிரிச்சிருக்கேன், நேத்து மறுபடியும் படிக்கும் போது இன்னமும் புடிச்சு போனது, இந்த காலத்து அரசியல்வியாதி குழந்தைகள கூட எப்படி பாதிச்சு இருக்குன்னு கீழே இருக்குற லிங்க கிளிக் பண்ணி படிச்சு பாருங்க, எழுதியவர் ஆடல்வல்லார், சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாக போறதுக்கு நான் கியாரண்டி, அதுக்காக மருந்துக்கு காசு என்கிட்ட கேட்டுடாதீங்க
ஒரு கதை
ஒரு மெடிசன் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் வேலை ஒரே ஒரு போஸ்டுக்கு இண்டர்வியூ நடந்துச்சு, அந்த வேலைக்கு நிறைய பேரு கலந்துகிட்டாங்க, எல்லாரும் ஆரம்பகட்ட இண்டர்வியூ, அந்த இண்டர்வியூ, இந்த இண்டர்வியூன்னு எல்லாத்துலயும் பாசாகி, கடைசில எம்பிஏ படிச்சவரு, அட்மினிஸ்ட்ரேசன் படிச்சவரு, பார்மசி படிச்சவரு, அப்புறம் சம்பந்தமே இல்லாம பிசிக்ஸ் படிச்சவருன்னு நாலு பேரு மட்டும் பைனல் இண்டர்வியூக்கு செலக்ட் ஆனாங்க,
ஒரு மெடிசன் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் வேலை ஒரே ஒரு போஸ்டுக்கு இண்டர்வியூ நடந்துச்சு, அந்த வேலைக்கு நிறைய பேரு கலந்துகிட்டாங்க, எல்லாரும் ஆரம்பகட்ட இண்டர்வியூ, அந்த இண்டர்வியூ, இந்த இண்டர்வியூன்னு எல்லாத்துலயும் பாசாகி, கடைசில எம்பிஏ படிச்சவரு, அட்மினிஸ்ட்ரேசன் படிச்சவரு, பார்மசி படிச்சவரு, அப்புறம் சம்பந்தமே இல்லாம பிசிக்ஸ் படிச்சவருன்னு நாலு பேரு மட்டும் பைனல் இண்டர்வியூக்கு செலக்ட் ஆனாங்க,
பைனல் இண்டர்வியூ குரூப் டிஸ்கசன்னு சொன்னாங்க, கம்பெனியோட எம்டி முன்னாடி குரூப் டிஸ்கசன் ஆரம்பமாச்சு, ஆளுக்கு ரெண்டு நிமிசம் டைம், எந்த டாபிக்க பத்தி வேணா பேசலாம, அவங்களுக்குள்ளயே ஒருத்தர் டைம்கீப்பரா செயல்படனும்னு சொல்லியாச்சு, யாரு பேசுனதுல எம்டி இம்ப்ரஸ் ஆகறாரோ அவங்களுக்குதான் வேலைன்னு சொன்னாங்க
குரூப் டிஸ்கசன் ஆரம்பமாச்சு, டைம் கீப்பரா நான் இருக்கேன்னு பிசிக்ஸ் படிச்சவரு சொல்ல அவரயே டைம் கீப்பரா ஆக்கிட்டாங்க, முதல்ல எம்பிஏ படிச்சவரு பேச ஆரம்பிச்சாரு, எக்கனாமிக்ஸ் அது இதுன்னு பயங்கரமா பேசுனாரு, இரண்டு நிமிசம் ஆச்சு, அப்புறம் அட்மினிஸ்ட்ரேசன் படிச்சவரு, அவரும் அவரு படிச்ச டிபார்ட்மெண்ட பத்தி பயங்கரமா பேசுனாரு, இரண்டு நிமிசம் ஆச்சு, அவருக்கு அப்புறம் பார்மசி படிச்சவரு, வேலையே பார்மசி சம்பந்தமானது, அதுனால அவரும், அவரோட துறைய பத்தி பயங்கரமா பேசி முடிச்சாரு, கண்டிப்பா வேலை அவருக்குதான் கிடைக்கும்னு எல்லாரு நினைச்சாங்க
கடைசியா பேச வந்தாரு பிசிக்ஸ் படிச்சவரு, அவரு பேசுன டாபிக் கராத்தே, எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், அவரு பாட்டுக்கு கராத்தேல இருக்குற டெக்னிக், அது இதுன்னு பேசிட்டே போனாரு, இரண்டு நிமிசம் ஆக போகும் போது ஒரு சஸ்பென்சோட நிறுத்துனாரு, அவரு பேச வேண்டிய டைம் முடிஞ்சு போச்சு, ஆனா அந்த சஸ்பென்ச தெரிஞ்சுக்கனும்னு எம்டியே மேலும் ஒரு நிமிசம் பேச சொல்லி டைம் கொடுத்தாரு
கடைசியா அவர மட்டும் தனியா கூப்பிட்டு கேட்டாரு எம்டி, நீங்க ஏன் கராத்தே பத்தி பேசுனீங்க, நீங்கதான் எந்த டாபிக்க பத்தி வேணாலும் பேச சொன்னீங்க, சரி நீங்க பேசுன டாபிக்க ஏன் உங்களால ரெண்டு நிமிசத்துல பேசி முடிக்க முடியல, சார் நீங்க சொன்ன மாதிரி நான் ரெண்டு நிமிசம்தான் பேசுனேன், நீங்கதான் மறுபடியும் ஒருநிமிசம் டைம் கொடுத்து பேச சொன்னீங்க, ஏன்னா நான் இரண்டு நிமிசம் முடியும் போது சஸ்பென்ஸ் வச்சு உங்கள இம்ப்ரெஸ் பண்ணினேன்னு சொன்னாரு, எம்டி உண்மையிலேயே இம்ப்ரெஸ் ஆகிட்டாரு
சரி எங்க கம்பெனில எந்த மருந்தெல்லாம் விக்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாரு எம்டி, அவரும் தெரியுமேன்னு இந்த பிராடக்ட், அந்த பிராடக்ட்னு இருபது இருபத்தைஞ்சு பேரு சொன்னாரு, எம்டியே ஆச்சரியமாகிட்டாரு, அவருக்கே நம்ம கம்பெனில இத்தனை பிராடக்ட் இருக்கான்னு தெரியாது, எப்படிங்க இவ்வளவும் தெரிஞ்சுகிட்டீங்கன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரும், வரும் போது கீழ மெடிக்கல் ஷாப்புல கேட்டேன்னு
இந்த கதைய நேத்து டிவில பார்த்தேன், ஒருவிசயம் தெரியலைன்னாலும் நம்மோட பாசிட்டிவ் மைண்டால எப்படி சிச்சுவேசன ஹேண்டில் பண்ணறதுன்னும், குரூப் டிஸ்கசன் மாதிரியான இண்டர்வியூல எப்படி இம்ப்ரஸ் பண்ணுறதுன்னும் தெரிஞ்சுக்கலாம்னுதான் இதை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன்
ஏரோபிளேன்
நிறைய பேரு பிளைட்டுல போயிருப்பீங்க, நானெல்லாம் பிளைட்ட நேருக்கு நேரா பார்த்தது கூட கிடையாது, ஆனா பிளைட்டுல போயிருக்கறவங்க கூட பைலட்டோட காக்பிட் ரூமுக்குள்ள போயிருக்க சான்ஸ் இல்லை, ஒருவேளை தீவிரவாதியா இருந்திருந்தா சான்ஸ் கிடைச்சிருக்கலாம், சரி உங்களுக்கு பைலட் ரூம் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா? கவலையேபட வேண்டாம், 360 டிகிரி கோணத்துல 3டி எபக்ட்ல நேருக்கு நேரா பார்க்குற உணர்வை தருது கீழே இருக்குற லிங்க், போய் பாருங்க
//ஆரம்பத்துல அவர் போலியாவே இருந்திருந்தாலும் அவர் செஞ்ச நற்பணிகள் மூலமா அவர் கடவுள் ஸ்தானத்தை அடஞ்சதா நாமும் நினைச்சுக்கலாம்//
ReplyDeleteLet A.Raja & Co. take this as an example, spend some 1000 Crore towards welfare activities and attain God status tomorrow.
காக்பிட் அசந்துட்டோம்.
ReplyDelete///இங்க அவனவனுக்கு பொண்ணு கிடைக்கறதே பெரிய விசயமா இருக்கு, இதுல அழகான பொண்ணு தான் வேணுமாம்///
ReplyDeleteஆமாமா
அதுவும் எப்படி இதயம் முரளி மாதிரி பாக்காமலேயே///
ReplyDeleteஇதயம் முரளி பார்த்துதான் லவ் பண்ணிருப்பார் ... நீங்க பொய் சொல்றீங்க ...:))
@ Gopi
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி நண்பா, நான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை, கொள்ளையடிப்பவன் எல்லாம் பணம் செலவழித்து நல்லது செய்தால் கடவுள் என்றாகிவிடுவான் என நான் கூறவில்லை, பாபா ஆன்மீகத்தில் இருந்து கொண்டு பல்வேறு நலபணிகள் செய்து பெயர் பெற்று பல்வேறு மக்களுக்கு நல்லது செய்ததால், அவரை வணாங்கும் மக்களுக்கு தெய்வமாகவிட்டார் என பொருள்படிம்படியே எழுதியுள்ளேன், அது தாங்கள் கமெண்டை பார்த்த போதுதான் இவ்வாறும் அர்த்தம் கொள்ளமுடியும் என தோன்றியது, தவறுக்கு மன்னிக்கவும்
@ ஜோதிஜி
ReplyDeleteநன்றி சார்
@ நா.மணிவண்ணன்
ReplyDeleteஆகா மணி ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல :-)
@ karthikkumar
ReplyDeleteயோவ் மச்சி, இதயம் முரளின்னா எல்லாருக்கும் ஈசியா அடையாளம் தெரிஞ்சுக்கலாம்னுதான்யா சொன்னேன், அதுக்காக இதயம் படத்துல முரளின்னா சொன்னேன், இன்னைக்கு ஏன் எல்லாமே தடுமாறுதுன்னு தெரியல :-)
//இவனுக்கு இப்படின்னா பொண்ணுக்கு இவன் அஜிக்குமாரா தெரிஞ்சு இருக்கான், மனசு வெறுத்து போனவன டெய்லியும் போன போட்டு கொஞ்சி பேசிருக்கு பொண்ணு, பயபுள்ள வெறுத்து போய், டிரைன்ல குதிச்சு செத்து போயிட்டான், அடப்பாவிகளா ராங்கால் வந்தா பேசிட்டு கட் பண்ணுங்க, அதவிட்டுட்டு தமிழ் சினிமா பார்த்துட்டு பார்க்காமவே காதல், பேசாமலே காதல், நாக்க வெட்டுற காதல், மூக்க வெட்டுற காதல்னு என்னடா கருமாந்தரம் புடிச்ச மாதிரி லவ் பண்ணுறீங்க///
ReplyDeleteபோட்டு பிச்சி உதறியாச்சு....
ரைட்டு நல்லா இருக்குய்யா மாப்ள இன்னைக்கு விஷயங்கள் ஹிஹி!
ReplyDelete@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றி மனோ சார்
@ விக்கி உலகம்
ReplyDeleteநன்றி விக்கி
சாய் பாபா இறந்துட்டாருங்கறத பத்தி எத்தனை விதவிதமான நியூஸ், 96 வயசு வரைக்கும் இருப்பேன்னு சொன்னாரு, அல்பாயிசுலயே செத்து போயிட்டாரு, தன்னையே கடவுள்னு சொன்னாரு, இப்ப கடவுளே செத்து போயிருச்சா, வாயில இருந்து லிங்கம் எடுத்தாரு, கைய சுத்தி செயின் எடுத்தாரு, விபூதி எடுத்தாரு, மேஜிக் பண்ணி ஊர ஏமாத்துனாருன்னு எத்தனையோ நியூஸ்....
ReplyDeleteஅப்போ இது எல்லாம் இல்லைன்னு சொல்றிங்கள இல்ல இது உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றிங்களா?????
ஏங்க துண்ணூறு கொடுத்து ஒருத்தன காப்பாத்த முடியுமான எதுக்குங்க அறிவியல் மருத்துவம் எல்லாம்......
அவரு நல்லது பண்ணது எல்லாமே மக்களுக்கு அவர் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு தான்....
இதுனால அது நடந்துச்சா..இல்லே அதுனால இது நடந்துச்சா.....பாபாவே அறிவார்!
ReplyDeleteகாணவில்லை..தமிழ்மணத்தை!
ReplyDelete//நானெல்லாம் பிளைட்ட நேருக்கு நேரா பார்த்தது கூட கிடையாது//
ReplyDeleteநேருக்கு நேரா இல்லன்னாலும் காந்திக்கு காந்தியா பாத்து இருக்கலாம்.
கலர்புல் வானம். தொடரட்டும் இரவுஜாலங்கள்..
சாய்பாபா - நிறைய பேர் அவர் அற்புதங்கள் செய்ததா சொல்லி இருக்காங்க. நான் பார்த்ததில்லை. ஆனால் சில நல்லவை செய்திருக்கிறார். அதற்காக வணங்கலாம். கடவுளாக அல்ல. நல்ல மனிதராக.
ReplyDeleteகல்மாடி - கைது பண்றதுக்கே ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அப்போ தண்டனை கிடைப்பதற்கு எத்தனை வருடம் என்று யோசித்தீர்களா?
அந்த டெலிபோன் செய்தியை நானும் படித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன். வேறென்ன செய்ய.
@ Carfire
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி நண்பா, அவர் செய்த தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை, நான் மேலே கோபி அவர்களுக்கு கூறிய பதிலே இதற்கும் பொருந்தும் நன்றி
வாவ். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான தொகுப்பு. இலகுவான வரிகள். வாழ்த்துக்கள்
ReplyDelete@ செங்கோவி
ReplyDeleteஆமா ஆமா எல்லாம் பாபாவே அறிவார் :-) நன்றி செங்கோவி
@ செங்கோவி said...
ReplyDeleteகாணவில்லை..தமிழ்மணத்தை!
அட பரவாயில்ல விடுங்க :-)
@ ! சிவகுமார் !
ReplyDeleteஅடுத்த தடவை காந்திக்கு காந்தியா டிரை பண்ணுறேன் சிவா :-)
@ பாலா
ReplyDeleteஉங்களின் கருத்தோடு முழுதாக ஒத்து போகிறேன் பாலா, நன்றி
@ அனாமிகா துவாரகன்
ReplyDeleteநன்றி மேடம்
பின்ன... Physics படிச்சவங்கன்னா சும்மாவா? (அப்பாடா காலேஜ் முடிச்சப்புறம் இதை சொல்லி எவ்வளவு நாளாச்சு. சந்தர்ப்பம் தந்ததுக்கு Thanks!)
ReplyDeleteஎனக்கு அவரது சிந்தனைகளும்... சமூகப் பணியும் ரொம்பப் பிடிக்குமுங்க...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
@ Denzil
ReplyDeleteநன்றி நண்பா
@ ♔ம.தி.சுதா♔
ReplyDeleteநன்றி நண்பா