மறுபடியும் கேப்டனான்னு யாரும் நினைக்க வேண்டாம், எழுதாமலும் இருக்க முடியல, எல்லா மேயர் பதவிகள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கு அம்மா வேட்பாளர் பட்டியலை அறிவிச்சிட்டாங்க, ஆனா இன்னும் நம்ம கேப்டனு வாய தொறக்காமலேயே இருக்காரு.
சட்டமன்ற எலக்சன்ல ஜெயிச்சு எதிர்கட்சி தலைவரா ஆனதுல தலைவரு வாயடைச்சு போனது வாஸ்தவம்தான், ஆனாலும் அதுக்காக அதிமுக எல்லா தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர அறிவிச்ச பின்னாடி கூட சைலண்டா இருந்தா எப்படிங்க?
மூணு வாரத்துக்கு முன்னாடியே உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேச ஒரு குழு அமைச்சாங்க அம்மா, கம்யூனிஸ்ட்காரங்க எல்லாம் போய் பேசிட்டு இருக்கலை, கேப்டன மட்டும் ஸ்பெசலா என்ன வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்களா என்ன? சும்மாவே சலங்கை கட்டி ஆடும் அந்தம்மா.
முன்னாடிதான் அவங்களுக்கு ஜெயிப்பமா தோப்பமான்னு ஒரு டவுட் இருந்தது, அதனால வாலண்டியரா கேப்டன கூப்பிட்டு கூட்டணி வச்சிக்கிட்டாங்க, ஆனா நிலைமை இப்ப அப்படியா இருக்கு, புல் மெஜாரிட்டில ஜெயிச்சதோட இல்லாம தேர்தல்ல அறிவிச்ச வாக்குறுதிகள் எல்லாத்தையும் நிறைவேத்தவும் ஆரம்பிச்சாச்சு, போதாக்குறைக்கு இலங்கை பிரச்சனைக்கும், தூக்கு தண்டனை பிரச்சனைக்கும் சட்ட மன்றத்துல தீர்மானம் நிறைவேத்து நல்ல பேரும் வாங்கியாச்சு, அப்புறம் அந்தம்மாவுக்கு என்ன பிரச்சனை.
உள்ளாட்சி தேர்தல் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்னு கேப்டன் நினைக்க, அதுக்கு முன்னாடியே அவங்க பார்த்துட்டாங்க, சும்மாவா சொன்னாங்க ஆப்பு கண்ணுக்கு தெரியாதுன்னு.
எப்ப ஆட்சிய பத்தி கருத்து கேட்டாலும் ஆறு மாசம் கழிச்சு சொல்றேன், ஒரு வருசம் கழிச்சு சொல்றேன், குழந்தையே இப்பத்தான் பொறந்திருக்குன்னு டயலாக் விட்டுகிட்டு இருந்தாரு, இப்ப என்ன ஆச்சு? அந்த குழந்தை வளர்ந்து பெரியாளாகி ரொம்ப நாள் ஆகுது. இப்ப அந்த குழந்தையே நீங்கதான் கேப்டன்னு யாராச்சும் சொன்னாலாவாது பரவாயில்லை, நம்ம பண்ணுரொட்டி கூட வாய தொறக்கறதே இல்லை.
இருக்குற எல்லா தலைவர் பதவிகளும் போச்சு, மிச்சம் இருக்குறது கவுன்சிலர் பதவிக மட்டும்தான், கடைசியில அதுவாவது கிடைச்சா தலைவர்கள தேர்ந்தெடுக்கும் போது கரச்சலை கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுதான் அந்தம்மா வெவரமா தலைவர் பதவிகள கூட மக்களே நேரடியா தேர்ந்தெடுக்கற மாதிரி கொண்டு வந்துட்டாங்க, இனி அதுக்கும் சான்ஸ் இல்லை.
தனியா நின்னா என்னன்னு சொல்லி ஓட்டு கேட்கறது, திமுக ஆட்சியில இருந்தா கூட மானாவாரியா திட்டலாம், அவங்களும் கண்டுக்க மாட்டாங்க, ஆனா அம்மா கிட்ட அப்படி பண்ண முடியுமா? வாயத்தொறந்தாலே நில அபகரிப்பு கேச போட்டு உள்ள உட்கார வெச்சிருவாங்க.
காங்கிரஸ் காரங்களோட கூட்டணி வச்சுக்கறதுக்கு பதிலா பேசாம கேரளாவுக்கு லாரில அடிமாடா போயிரலாம், வேற வழியே இல்ல கம்யூனிஸ்ட் காரங்க கூட சேந்து அம்மா கால்ல விழுந்து ஒன்னு ரெண்டு கவுன்சிலர் பதிவிகளயாவது வாங்க்கிக்கரதுதான் உசிதம்.
எதிர்கட்சி தலைவராத்தான் உருப்படியா ஒன்னும் செயல்படல, அட்லீஸ்ட் சட்டமன்றத்துக்காவது தினமும் போய் எல்லா நடவடிக்கைகளையும் கத்துக்கிட்டாலாவது பரவாயில்லை, அதுக்கும் போறதில்லை, போதாக்குறைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் வேற மேட்டூர்ல டேம் இருக்கு, திருச்செந்தூர்ல கடல் இருக்குன்னு காமெடி பண்ணி அந்தம்மாவ வேற டென்சன் ஏத்திட்டு இருக்காங்க, அந்தம்மாவும் புதுசா காலேஜ்ல சேர்ந்த பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ச ராக்கிங் பண்ற மாதிரி ராக்கிங் பண்ணிட்டு இருக்காங்க.
கூடவே உட்காந்து காப்பாத்த வேண்டிய நம்மாளு எங்க உட்கார்ந்து சரக்கடிச்சிட்டு இருக்காரே தெரியல, இப்படியே போனா காந்தி ஜெயந்தி அன்னைக்குத்தான் தலைவரு எலக்சன பத்தியே யோசிக்கவே முடியும், என்ன பண்றது, எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்..!
கேப்டன் சரக்கு நல்லா இருக்கு...
ReplyDeleteமுதல் நெப்போலியன் நானே...
ReplyDelete"காங்கிரஸ் காரங்களோட கூட்டணி வச்சுக்கறதுக்கு பதிலா பேசாம கேரளாவுக்கு லாரில அடிமாடா போயிரலாம்"
ReplyDelete>>>>
மாப்ள என்றா உன்குசும்பு கொய்யால ஹிஹி!
எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்..! //
ReplyDeleteஓவர் குசும்புய்யா
தேர்தல்ல அடிச்ச மப்பு இன்னும் தெளியலையாம்.
ReplyDeleteஃபைனல் டச் இஸ் ஸுப்பர்ர்
ReplyDeleteபுலி பதுங்குவது பாய்வதற்கே...!
ReplyDelete//விக்கியுலகம் said...
ReplyDelete"காங்கிரஸ் காரங்களோட கூட்டணி வச்சுக்கறதுக்கு பதிலா பேசாம கேரளாவுக்கு லாரில அடிமாடா போயிரலாம்"//
மாப்ளே...எப்படியெல்லாம் யோசிக்குது.
//எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்..! //
சூப்பர் பஞ்ச்.
இப்படி தி.மு.க காரர்கள் புலம்புவதை பார்க்க சந்தோசமாக இர்ருகிறது.
ReplyDelete@ MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//கேப்டன் சரக்கு நல்லா இருக்கு..//
வாங்க மனோ சார், நல்லா இருந்தா ஆசை தீர குடிங்க :-)
@ விக்கியுலகம்
ReplyDeleteஹி ஹி உண்மைய சொன்னேன் மாம்ஸ்
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ReplyDeleteரொம்ப நன்றிங்க போலீஸ் சார்
@ R.Elan. said...
ReplyDelete//தேர்தல்ல அடிச்ச மப்பு இன்னும் தெளியலையாம்.//
பரவால்ல விடுங்க காந்தி ஜெயந்தி அன்னிக்கு கடை லீசு விடுவாங்க அப்பா பார்த்துக்கலாம்னு இருப்பார் போல
@ அன்பு
ReplyDeleteநன்றிங்க அன்பு
@ Philosophy Prabhakaran said...
ReplyDelete//புலி பதுங்குவது பாய்வதற்கே...!//
புலியா எங்க எங்க ????
@ அந்நியன் 2
ReplyDeleteநன்றிங்க அந்நியன் 2
@ mohan said...
ReplyDelete//இப்படி தி.மு.க காரர்கள் புலம்புவதை பார்க்க சந்தோசமாக இர்ருகிறது.//
ஹா ஹா குட் ஜோக், கீப் இட் அப்
சும்மா ரவுண்டு கட்டி அடிசிருகிங்க போலும் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteசார் அவங்க தொடர்ந்து தேமுதிகவுக்கு எதுக்கு ஆதரவு கொடுக்கணும்? முடிஞ்சா தனியா நின்னு பலத்தை நிரூபிக்கட்டுமே?
ReplyDelete"கேப்டன். இரவு வானம் ஓனரோட மொபைல் நம்பரை அனுப்பி இருக்கேன். திருப்பூர்ல இருக்குற உங்க கட்சி ஆளுங்ககிட்ட சொல்லி......"
ReplyDeleteஇப்படியே போனா காந்தி ஜெயந்தி அன்னைக்குத்தான் தலைவரு எலக்சன பத்தியே யோசிக்கவே முடியும், என்ன பண்றது, எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்..! //வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://karumpalakai.blogspot.com/2011/08/blog-post_29.html
ReplyDeleteதேர்தல் முடிவுக்கு அப்புறம் தான் கேப்டன் வாயை திறப்பார், அவர் பேசுர எல்லாம் மூடிட்டு தான் கேட்கணும், காந்தி ஜெயந்திக்கும் சரக்கு கிடைக்கும் தோழா உங்களுக்கு தெரியாதா? நீங்களும் இந்தியால தான இருக்கீங்க .......... நம்ம நாட்டுல காசு இருக்குறவனுக்கு காந்தி ஜெயந்தியும் வாந்தி ஜெயந்தி தான் ...
ReplyDelete//எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்..! //
ReplyDeleteசூப்பர்யா.
எதிர்கட்சி தலைவரா நாம கேட்டது குதிரைய, ஆனா கிடைச்சது கழுதைதான்....
ReplyDelete2மச்..நண்பரே...