Monday, September 5, 2011

நாய் V/S மனிதன் - கொஞ்சம் (ஏ)டாகூட பதிவு


அறிவு கெட்ட நாயே..!
நீ நாய விட கேவலமாவண்டா..!
நீ நாயி உங்க அப்பன் நாயி, உன் குடும்பமே நாய் பரம்பரை.!
பரதேசி நாய்..!

இப்படி நாய்க்கும் மனுதனுக்குமான தொடர்பு எல்லையில்லாதது, மனிதனை திட்ட வேண்டும் என்றால் கூட நாயைத்தான் துணைக்கு கூப்பிட வேண்டியிருக்கு,

உண்மையில் நாயை பார்த்து மனிதன் கற்றுக் கொண்டதை விட மனிதனை பார்த்து நாய்கள் கற்றுக் கொண்டதே அதிகம் என எண்ணுகிறேன்

ஒரு தெருவினை எடுத்துக் கொண்டால், அந்த தெருவில் வசிக்கும் நாய்கள் மட்டுமே அங்கு ராஜாக்கள், வேறு தெருவினையோ சந்தினையோ சேர்ந்த நாய் அவர்களின் எல்லைகளுக்குள் நுழைந்தால் அனுமதிப்பதில்லை, கூட்டமாக சேர்ந்து கடித்து துரத்தி விட்டுவிடும், மனிதர்களும் அப்படித்தானே, தங்களது இடத்தை பாதுகாக்க சண்டை போடுகிறார்கள், இப்படி மனிதனை பார்த்துதான் நாய்களும் தெருச்சண்டை போட கற்றுக் கொண்டனவோ என்னவோ

யார் கண்டது மனிதர்களின் மதச்சண்டை இனச்சண்டை போலவே நாய்களுக்குள்ளும் இனச்சண்டை இருக்கலாம், நான் பொமரேனியன், டாபர்மேன், நீ நாட்டுநாய் என அவைகளுக்குள்ளும் பிரிவினை இருக்கலாம், நீ உயர்ந்த ஜாதி நாய், நீ தாழ்ந்த ஜாதி நாய் என ஜாதிச்சண்டையும் இருக்கலாம்

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளை சொல்ல பயன்படுத்தும் சொல் நாய்க்காதல், ஏன் நாய்க்காதல் என சொல்ல வேண்டும், அவைகளுக்குத்தான் இடம் இல்லை, பொருள் இல்லை, ஏவல் இல்லை, ஏன் மனிதர்களுக்குமா இல்லை? கேட்டால் நாய்க்காதலாம், அவையாவது ஐந்தரிவு உடையன, ஆனால் மனிதன்?

நாய்கள் இயல்பாக நன்றி உணர்வு கொண்டவை, வீட்டை பாதுகாக்கவும், அயல் மனிதர்கள் யாராவது வந்தால் குரைத்து தெரியப்படுத்தவும்தான் முதலில் பயன்படுத்தி வந்தார்கள், ஆனால் அப்படி கடமை உணர்வு மிக்க படை வீரர்களை போல பயன்பட்டு வந்த நாய்களை செல்லம் கொடுத்து கெடுப்பவர்கள் யார்? குழந்தைகளுக்குதான் செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்றால், நாய்களையும் செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறார்கள்.

அதற்கும் சிக்கன், மட்டன், பிரைடு ரைஸ் என மனிதர்கள் தின்னும் அனைத்தையும் ஊட்டிவிட்டு பன்னி போல வளர்த்து விடுகிறார்கள், அதன் உடம்பையே அதனால் தூக்கி சுமக்க முடியாமல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திருடனை பார்த்தால் எகிறி கடிக்கவா செய்யும்? வரும் திருடர்களும் உசார்தான், கொள்ளையடிக்க வரும் போதே சிக்கன் பிரியாணியை பார்சல் வாங்கி வந்து விடுகிறார்கள், இப்பொழுது நாய்களும் மனிதனை போலவே மாறிவிட்டன நன்றி உணர்ச்சி இல்லாமல்.

மனிதனை பொறுத்த வரையில் நாய்களும் ஒன்றுதான், பெண் குட்டி போட்டால் துரத்தி விட்டுவிடுவார்கள், ஆண் குட்டி மட்டுமே வீட்டில் வளர்க்க செல்லுபடியாகிறது, இதிலும் கலப்பின உயர்ரக ஜாதி நாய்கள் மட்டும் விதிவிலக்கு, குட்டியை விற்றால் காசு கிடைக்குமே என்று.

இப்படி அனாதையாக துரத்தியடிக்கப்பட்ட பெண் நாய்கள், ஊரை சுற்றி, தெருவை சுற்றி, கல்லடி வாங்கி குப்பையை பொறுக்கி தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், அவைகளும் ஒருநாள் வயதுக்கு வரும், பிறகு அரங்கேறும் பாருங்கள் ஆண் நாய்களின் சாகசம், ஒரு பெண் நாயின் பின்னே பத்து இருபது ஆண் நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும், இங்கு மனிதர்களும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

ஒருவழியாக எதாவது ஒரு நாய் கரக்ட் பண்ணி மேட்டர் பண்ணும் வேளையில் வருவான் பாருங்கள் வில்லன் போல நம்மாள் ஒருவன், நானே காஞ்சு போய் இருக்கேன் நாய்களுக்கு ஜல்சா கேட்குதா என குச்சியாலே அடித்து பிரித்து விடுவான், அவைகளும் காள்ள் காள்ள் என கத்திக் கொண்டு ஓடும், நம்மாள் எதோ வீரசாகசம் பண்ணியது போல சிரித்து எக்காளமிடுமான்.

ஏற்கனவே ஊரில் அனைத்து பெண்கள் பின்னாலும் திரிந்து அக்கா தங்கச்சி கூட பொறக்கலே எனும் திட்டுக்களை அசால்ட்டாக வாங்கி ஆயிரக்கணக்கான பெண் சாபங்களை பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவன், கூடவே நாய்சாபமும் பெற்று 40 வயது கடந்தும் விதவனாக ச்சீ கன்னிப்பையனாகவா? இல்லை இருக்காது, வேறு எப்படி சொல்லலாம்? மொட்டை பையனாகவா? சரி நாய் மாதிரியே திரிஞ்சுகிட்டு இருப்பான்னு வெச்சுக்கோங்க.

நண்பன் ஒருவனின் அக்கா பாரினில் இருக்கிறார், அவர் ஆசை ஆசையாக ஒரு நாய்க்குட்டியை வாங்கி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார், அதுதான் பாரீன் நாய் ஆச்சே, தினமும் வாக்கிங் கூட்டி போக வேண்டும் என சொல்லி அனுப்பினார்.

நமது ஆட்கள் பாத்ரூம் போகவே நடக்க சங்கடப்பட்டுதானே வீட்டுக்கு உள்ளேயே அட்டாச் பாத்ரூம் வைத்து போய் கொண்டிருக்கிறார்கள், பிறகு எங்கே வாக்கிங் கூட்டி போவது, ரூம் போட்டு யோசித்த நண்பனின் அப்பா தினமும் டாஸ்மாக் போகும் போது அழைத்துச் செல்ல முடிவு செய்தார், போகும் போது இந்த நாயை இவர் இழுத்துக் கொண்டு போவார், வரும் போது அந்த நாய் இவரை இழுத்துக் கொண்டு வரும் (இதில் எதுவும் உள்குத்து இல்லைங்கோ)

ஒருநாள் வழக்கம் போல கடைக்கு சென்று புல் டைட்டாகி விட்டார் நண்பனின் அப்பா, கடை மூடும் நேரமும் நெருங்கி விட்டது, வீட்டுக்கு போகும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்த நாய் வள் வள் என குலைத்து இவரை கூப்பிட்டு இருக்கிறது, சரக்கடிக்கும் போது டிஸ்டர்ப் பண்ணுரியா என கொந்தளித்தவர், ஒரு ஆஃப் பாட்டில் சரக்கை நாய் வாயில் ஊற்றி விட்டார்

தண்ணீர் மிக்ஸ் பண்ணி கொடுத்திருந்தாலும் பரவாயில்லை, ராவாக ஒரே கல்ஃபில் அடித்ததால் தள்ளாடிய நாய் வீடு வந்ததும் செத்து போனது, அப்பவும் இவரை கட்டி இழுத்து வீடு கொண்டு வந்து சேர்த்த பின்புதான் செத்தது என்பது ஆச்சரியம்தான்

அந்த நாயை வீட்டுக்கு பின்புறமே அடக்கம் செய்தார்கள், இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன், என்ன மலர்வளையம் வாங்கத்தான் காசில்லை, நண்பனின் அம்மாதான் காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் துக்கம் தாங்காமல் நெடுநேரம் அழுது கொண்டிருந்தார்,

சரிங்க விடுங்கம்மா போனது போச்சு, இனி அழுது என்ன பண்ணுறது?

அதுக்கில்லடா அந்த நாய் செத்ததுக்கு பதிலா இந்த நாய் செத்திருந்தா பரவாயில்லடா என கூறியவாறு ஓவென அழ ஆரம்பித்தார்

யார் மனதில் என்ன இருக்கிறது? என்ன சொல்வதென்றே தெரியாமல் கிளம்பி வந்தேன், நல்லவேளை செத்து போன அந்த நாய்க்கு பீடி, சிகரெட், குட்கா, மட்கா என எந்த பழக்கமும் இல்லை.

நண்பன் ஒருவனின் தங்கை அண்ணனின் நண்பன் ஒருவருடனே ஓடிப்போன போது, கூட இருந்த இன்னொரு நண்பன் சொன்னான், நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சாக்கடைக்குத்தான் போகும் என்று, நாயையே கட்டிபிடித்து பெட்ரூமில் படுத்து தூங்கும் போது அது நடுவீட்டுக்கு போகாமல் காம்பவுண்டு செவுரு வரைக்குமா போகும்? மனதுக்கு பிடித்த ஒருவருடன் வாழ போனவள் நாயாக இருந்தால் என்ன? நரியாக இருந்தால் என்ன? யோசித்தவாறே கிளம்பி வந்து விட்டேன்.

நண்பர்களுக்கிடையேயான ஒரு விவாதத்தின் உச்சத்தில் நாய் வாலை நிமிர்த்த முடியாதுடா என்றவாறு ஒரு நண்பன் கிளம்பி போனான், நாய்வாலை எதுக்குடா நிமிர்த்தனும்? அதன் இனப்பெருக்க உறுப்பை மறைக்க அது வாலை மூடி வைத்துள்ளது, அப்படி இல்லாமல் எல்லா நாய்களுக்கும் வால் நேராக இருப்பது போல கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.
இன்னும் நிறைய நாய்கள் மனிதர்களை போலவே போக்குவரத்து விதிகளை மீறி வண்டியில் அடிபட்டு அனாமத்தாக செத்து விழுகின்றன, எங்கள் ஊரில் தெரிந்தவர் ஒருவர் ஒரு நாயை வளர்த்து வந்தார், சோறு அதிகமாக போட்டதாலோ என்னவோ மனிதர்களை போலவே திமிர்பிடித்து போகிற வருபவர்களையெல்லாம் பார்த்தால் குலைப்பது, கடிக்க வருவது போன்ற செயல்களை செய்து வந்தது, அப்படிபட்ட ஒருநாளில் எங்கள் ஊர்க்காரர் ஒருவரை கடித்து வைத்துவிட்டது.


அதுவரை நாயை பார்த்து பயந்து கொண்டிருந்தவர் நாய் கடித்ததும் பயங்கர காண்டாகி அந்த நாயின் மேல் பாய்ந்து திருப்பி கடித்து வைத்து விட்டார், அவர் நாயை கடித்தது ஊர் முழுக்க பரவி கிண்டலாக பேசப்பட்டது, அப்பொழுது இன்னொருவர் சொன்னார், வெறிநாய் கடித்து வைத்திருக்கிறது, தொப்புளை சுற்றி ஊசி போடாவிட்டால், நாய் போலவே மாறி செத்து போவாய் என்று கடித்தவரிடம் சொன்னார், ஆனால் நடந்தது என்னவென்றால் அந்த நாய்க்கு குளிர் ஜூரம் வந்து நான்கே நாளில் செத்து போனது, இப்பொழுது வெறிநாய் கடியை பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும்.

ஒருகாலத்தில் மனித இனமே இல்லாமல் இருந்திருக்கும் போது, நாய்கள் சிங்கம், புலியை விட கொடூரமான ஒரு விலங்காக கூட இருந்திருக்கலாம், எப்பொழுது மனித சகவாசத்திற்கு உட்பட்டதோ, அன்றே அதன் தனித்தன்மையை இழந்து போயிருக்கலாம், பசி என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி போகும் போது நாய்கள் எம்மாத்திரம்?

நன்றாக யோசித்து பாருங்கள் நாய்கள் என்பது யார் என்று உங்களுக்கும் புலனாகலாம்.

24 comments:

 1. வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா? இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

  ReplyDelete
 2. அறிவு கெட்ட நாயே..!
  நீ நாய விட கேவலமாவண்டா..!
  நீ நாயி உங்க அப்பன் நாயி, உன் குடும்பமே நாய் பரம்பரை.!
  பரதேசி நாய்..!///

  அண்ணே! ஆரம்பமே அட்டகாசமா இருக்கு!நான் மொதலாவதா கமெண்டு போட வந்ததால, இது எனக்குத்தான் பொருந்துமா?

  ReplyDelete
 3. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளை சொல்ல பயன்படுத்தும் சொல் நாய்க்காதல், ஏன் நாய்க்காதல் என சொல்ல வேண்டும், அவைகளுக்குத்தான் இடம் இல்லை, பொருள் இல்லை, ஏவல் இல்லை, ஏன் மனிதர்களுக்குமா இல்லை?///

  நச்சுன்னு கேட்டீங்க ஸார்?

  ReplyDelete
 4. நன்றாக யோசித்து பாருங்கள் நாய்கள் என்பது யார் என்று உங்களுக்கும் புலனாகலாம்./////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்.... இதுமட்டும் புரியவே மாட்டேங்குது ஸார்! உள்குத்து உள்குத்து அப்டீன்னு பதிவுலகத்துல சொல்லுவாங்களே! அது சார் இது?

  ReplyDelete
 5. @ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

  வாங்க மணி, நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?

  //அண்ணே! ஆரம்பமே அட்டகாசமா இருக்கு!நான் மொதலாவதா கமெண்டு போட வந்ததால, இது எனக்குத்தான் பொருந்துமா?//

  முதலாவதா கமெண்டு போட வந்தங்காட்டி உங்க பீதி எனக்கு புரியுது, ஆனா உங்கள இல்லைங்க :-)

  //உள்குத்து உள்குத்து அப்டீன்னு பதிவுலகத்துல சொல்லுவாங்களே! அது சார் இது?//

  இது பதிவுலக உள்குத்து இல்லைங்கோ, நேத்து ஒருத்தர்கிட்ட மாட்டுனேன், அதனால வந்த விளைவுதான் இந்த பதிவு :_))

  ReplyDelete
 6. நல்ல கம்பரிசன் ....சூப்பர்!

  ReplyDelete
 7. கடைசி போட்டோல இருக்கறது யாருங்க..?! :)

  ReplyDelete
 8. நாயை பற்றி நயம்பட சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
 9. என்னய்யா ஆச்சு..நாய் ஏதாவது கடிச்சிருச்சா?

  வெறித்தனமா யோசிச்சிருக்கீங்க!..சூப்பர்.

  ReplyDelete
 10. பதிவு நகைச்சுவைக்கும் சீரியசுக்கும் மாறி மாறி பயணிக்கிறதே...

  ReplyDelete
 11. யார் நாயென்று தெரியலை...ஆனா...பதிவு தூள்...

  ReplyDelete
 12. வித்தியாசமான பதிவு தான்..

  ReplyDelete
 13. ஹிஹி ரைட்டு...யப்பா உங்க கிட்ட சாக்கிரதையா இருக்கணும் போல!

  ReplyDelete
 14. //எப்பொழுது மனித சகவாசத்திற்கு உட்பட்டதோ, அன்றே அதன் தனித்தன்மையை இழந்து போயிருக்கலாம், பசி என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி போகும் போது நாய்கள் எம்மாத்திரம்?//
  நச்! சூப்பர் பாஸ்!

  ஆமா..ரொம்ப வெறித்தனமா யோசிச்சிருக்கீங்கன்னு புரியுது! நீங்களுமா பாஸ்....? இல்ல நான்கூட ஒருபதிவு போட்டேன். ஆனா இது இன்னும் டீப்பா இருக்கு! :-)

  ReplyDelete
 15. அசத்தல் பதிவு சுரேஷ். dog ஐ பற்றி எழுதி dogtar பட்டம் பெரும் அளவிற்கு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.

  ReplyDelete
 16. நன்றாக யோசித்து பாருங்கள் நாய்கள் என்பது யார் என்று உங்களுக்கும் புலனாகலாம்./

  நன்றி.

  ReplyDelete
 17. போகும் போது இந்த நாயை இவர் இழுத்துக் கொண்டு போவார், வரும் போது அந்த நாய் இவரை இழுத்துக் கொண்டு வரும் (இதில் எதுவும் உள்குத்து இல்லைங்கோ)//

  உள்குத்தோ வெளிக்குத்தோ ஆனால் செமையா சிரிச்சேன் போங்க....

  ReplyDelete
 18. NANRI NANBAREY !!!
  NAAN PODA VENDIYA POST !!
  NEENGA MUNTHIK KEETINGA .....ANY WAY SUPER
  AGAIN THANKS !!!!

  ReplyDelete
 19. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/8102011.html

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!